Jump to content

Toronto’s Exhibition மைதானத்தில் துப்பாக்கிசூடு. இருவர் மரணம். மூவர் காயம்.


Recommended Posts

கனடா-ரொறொன்ரோ Toronto’s Exhibition மைதானத்தில் செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Dufferin Gates ற்கு அருகாமையில் அதிகாலை 3.30மணியளவில் துப்பாக்கி சூடுகள் கேட்டதை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
Toronto’s Exhibition மைதானத்தில் 2015 OVO கலைநிகழ்ச்சியின் பின்னர் விருந்து வைபம் நடைபெற்ற முற்சிக் இரவு விடுதியில் மனிதன் ஒருவர் சுடப்பட்டு கிடந்ததை பொலிசார் கண்டுள்ளனர். சுடப்பட்டவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் மேலும் நால்வர் துப்பாக்கி சூட்டினால் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரவு விடுதிக்கு வெளியே சுடப்பட்ட பெண் ஒருவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்து விட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்;லை. ஆனால் இறந்தவர்கள் 20 மற்றும் 30வயதிற்குட்பட்டவர்களாவர். பாதிக்கப்பட்ட மற்றய மூவரும் ஆண்கள்.
பார்ட்டியில் OVOகலைநிகழ்ச்சி தொகுப்பாளரான ரொறொன்ரோ ராப் கலைஞர் Drake சம்பவம் நடந்த போது விடுதியில் இருந்தாரா என்பது தெரியவரவில்லை.
சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை தெரியாதென பொலிசார் தெரிவித்துள்ளனர்.விசாரனை தொடர்கின்றது.
2014 ஆகஸ்ட் 5, இதே போன்று இரவு விடுதிக்கு வெளியே இருவர் சுடப்பட்டனர்.

gun6gun5gun4gun2gun1gungun3

- See more at: http://www.canadamirror.com/canada/47152.html#sthash.EpplzvwX.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.