Jump to content

ஏமாறும் தமிழர்கள்: இசை – கவின்கலைப் பல்கலைக் கழகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைகவின் கலைப் பல்கலைக் கழகம்

வெளியில் வரும் பூனைக்குட்டிகள்

 

யானும் ஓர் ஆடுகள மகளே !

என்கைக் கோடீரீலங்கு வளை நெகிழ்ந்த

பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே!    - குறுந்தொகை-31

               

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஆடுகள மகனும் ஆடுகள் மகளும் பார்ப்பனர் இல்லை. பரத நாட்டியம் எங்கிருந்து வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது?

 

                மரல் பழுத்தன்ன மருகு நீர் மொக்குள்

                நண்பகல் அந்தி நடை இடை விலங்கலின்

பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி

களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி

இலை இல்மரா அத்த எவ்வம் தாங்கி

----------------------------------------------------------------

முரசு முழங்கு தானை மூவரும் கூடி

அரசவை இருந்த தோற்றம் போல

பாடல் பற்றிய பயனுடைய எழா அல்

கோடியர் தலைவ கொண்டது அறிந

                                                                                                பொருநர் ஆற்றுப்படை 47-57

யா பல கொல்லோ பெரும!

வார்  உற்று விசிபிணிக் கொண்ட

மண்கனை முழவின் பாடினி பாடும்

வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய்! நினக்க

                                                                                                                புறம் – 15(22-25)

 

யானைகள் திரியும் காட்டு வழியே வெயிலின் கொடுமையைத் தாங்கி கால்களில் கொப்புளங்களுடன் நடந்து சென்று மண்பானைத் தாளம்போட்டு மன்னனுக்கு வரலாறு புரிய வைத்த பாடினி பார்ப்பன மகள் இல்லை.

 

கருணாடக சங்கீதம் எப்படி வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது?

 

காலக் கணிதமும் கலைகளின் துணிவும்

நாடக மகளிர்க்கு நன்கனம் வகுந்த

ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்

கற்றுத் துறை போகிய பொற்கொடி நங்கை

                                                                                -மணிமேகலை ஊர் அலர் உரைத்த காதை: 29-32

இந்த ஓவிய நூலைக் காணவில்லை. எட்டாம் நூற்றாண்டில் விட்டுணு தருமோத்தரம் என்ற புராணத்திற்குள் ‘மார்க்கண்டேய உவாச்ச....’ என்று கூறிக் கொண்டுசித்ர சூத்ரம்என்ற நூற்பகுதி எப்படிப் புகுந்தது?

 

வகை பெற எழுந்து வானம் முழ்கி

சில்காற்று இசைக்கும் பல்புழை நல் இல்

                                                                                                                மதுரைக்காஞ்சி (357-58)

 

இப்பாடல் குறிக்கும் தமிழர் கட்டடக் கலைத்திறன் கொண்ட கட்டுமானம் இன்று நம்மிடம் இல்லை. பெருந்தச்சர்கள் இல்லை. கல்வெட்டுப் பெயர்க் குறிப்புகள் உட்படப் புறக்கணிக்கப் படுகின்றன. இன்று உலகெங்கும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்குத் தனிக் கட்டடக் கலை அடையாளம் எங்கிருந்து வந்தது? இசுதபதிகள் என்போர் எங்கிருந்து வந்தனர்?

 

எதிர்பாராத அறிவிப்பு

 

                தமிழக அரசுஇசை-கவின் கலைப் பல்கலைக் கழகம்ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிப்புச் செய்திருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இசைக் கல்லூரிகள், சென்னையிலும் குடந்தையிலும் இயங்கி வரும் இரண்டு கவின் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றோடு மாமல்லபுரத்தில் இயங்கி வரும் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியையும் சேர்த்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி! வரவேற்கலாம்.

 

                இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சாகும் தறுவாயில் நின்று கொண்டிருக்கும் நலிவடைந்த நிறுவனங்களேயாகும். இவற்றுக்கு ஒரு மறுவாழ்வு இல்லமாக இந்தப் பல்கலைக்கழகம் அமையுமானால் வரவேற்கலாம். அந்தப் பயன்பாடும் இல்லையென்றால், மருத்துவ மனை கட்டுவதற்குத் திட்டமிட்டு விட்டு, மார்ச்சுவரி மட்டும் கட்டுவது போலாகும் இந்தச் செயல்.

 

வல்லுநர்கள் எங்கே?

 

                தமிழர் கலைகளைத் தனித்தனியே தூய்மைப்படுத்தி வளர்த்து எடுத்தால் மட்டுமே உரிய முறையில் ஒருங்கிணைப்புச் செய்ய முடியும். கலப்படமான கலைப்பிரிவுகளை ஒருங்கிணைத்துப் பெருந்தோற்றத்தை ஏற்படுத்த முடியாது.

 

                தமிழர் கலைகள் அனைத்துமே சரி நிகர்த் தகுதி கொண்ட கலைகள் தாம். இவற்றில் ஒன்றை மட்டும் முதன்மைப் படுத்திவிட்டுப் பிற கலைகள் அதற்கு வால்பிடிப்பது போலத் திட்டமிடுவது தமிழர் மரபுப்படி நேர்மையான செயல் இல்லை. முக்காடு போட்டு மாறாட்டம் செய்வது தமிழர்களின் வேலை இல்லை.

 

                தமிழர் கலைகளைக் காயப்படுத்தாமல் ஒருங்கிணைக்கும் ஆற்றல் தூய்மைப்படுத்தப்பட்ட தமிழ் மொழிக்கு மட்டுமே இருக்கிறது.

 

                அழுக்கிலா ஒன்று தூய்மையாவது போல்

                ஒழுக்கம் என்பதன் உருவமே கலைகள்

                சிதறிய தூசுகள் தூய்மையாகாப் போல்

                சிதறிய ஒழுக்கமும் கலைகள் ஆகா              - கனிச்சாறு

 

                ஆகவே தமிழ் பல்கலைக்கழகம் என்பதில் உள்ளபல்கலைஎன்ற சொல்லே பொருத்தமான பொருள் உடையது தான்.

 

                தமிழ் என்ற மொழியும் ஒரு கலைப் பிரிவு என்பது ஒரு வலுவான கருதுகோள் என்ற அளவுகோலின் படி, தமிழை முதன்மைப்படுத்திய பல கலைகளின் கழகம்தமிழ்ப் பல்கலைக் கழகம்தானே!

 

                தமிழ் மொழி, தமிழ் இசை, தமிழர் மரபு ஓவியம், தமிழர் மரபுப் படிமக்கலை, தமிழர் மரபு வழிப்பட்ட கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றோடு வரலாற்று ஆய்வுகளையும் இணைத்து தமிழரின் வாழ்வியல் விழுமியங்களைக் கட்டிக் காப்பது எதுவோ அதுவே காலத்தின் தேவை!.

 

                கடந்த 50 ஆண்டுகளில் தமிழர் மரபுக் கலைகள் பற்றிய கல்வியும் பயிற்சியும் பெருமளவில் ஊக்கப்படுத்தப்படவில்லை. அதனால் அவற்றுக்குரிய வல்லுநர்கள் உருவாகவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில வியப்பாளர்கள் இருக்கிறார்கள். மற்றபடி திறனாய்வாளர்கள் எனச் சிறப்பாக ஒருவரையும் குறிப்பிட இயலவில்லை.

 

                தமிழில் உயராய்வு மேற்கொண்டு வரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓவியத்துறை, சிற்பத்துறை, கட்டடக் கலைத்துறை ஆகிய மூன்றும் சொல்லும் படியான எந்த எதிர்காலத் திட்டத்தையும் இன்று வரை முன்வைக்கவில்லை.

 

                இன்று தமிழக அரசு அறிவித்திருக்கும் இசை-கவின் கலைப் பல்கலைக் கழகம் என்பது, அடிப்படையில் ஒரு தவறான பெயரிடுதல் ஆகும்.

 

                பசு-கால்நடைப் பல்கலைக் கழகம்என்றால் என்ன சிறப்பான பொருள் தோன்றுமோ அப்படி ஒரு சிறப்பான உள்நோக்கம் இருப்பதை அறிவு உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

                இன்றைய சூழலில், உண்மையான நல்லெண்ணத்தோடு, தமிழர் மரபு மதிப்புகளை அடியொற்றி ஒரு நுண்கலைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினாலும் அதற்குத் தக அமைத்துத் தர உரிய வல்லுநர்கள் இல்லை.

 

                ஆரிய வைதிக நலனை முன்னிறுத்தி அமைத்துத் தரவும் வல்லுநர்கள் இல்லை. கலப்படமாக ஒரு கட்டமைப்பைச் செய்து தர வல்லுநர்கள் தேவையில்லை. யார் முயற்சி செய்தாலும் பூனைக்குட்டு விரைவில் வெளியில் வந்து விடும் என்று எதிர் பார்க்கலாம்.

 

                இது போன்ற முயற்சிகளில் உண்மைத் தமிழர் தமது அறிவையும், உழைப்பையும் வீணாக்கிவிடக் கூடாது.

 

                தமிழ் இசையைக் கருணாடக இசையாக மாற்றியவர்கள், தமிழர் கூத்துக் கலையை பரத நாட்டியமாக மாற்றியவர்கள், தமிழர் ஓவியக் கலையை சித்திர சூத்திரமாக மாற்றியவர்கள், தமிழரின் படிமக் கலையைப் பிரதிமா சாத்திரமாக மாற்றியவர்கள், தூய தமிழை மணிப் பிரவாளமாக மாற்றியவர்கள், தமிழரின் தூய மந்திர மரபைக் கருமாதிச் சடங்காக மாற்றியவர்கள், இனத்தைச் சாதிகளாக மாற்றியவர்கள், பேசத்தெரிந்த தமிழர்களை வரலாற்று ஊமைகளாக மாற்றி விட்டார்கள்.

 

                பேய் பிடித்த பெண்ணே உடுக்கையும் அடிப்பது போல் தவறு மேல் தவறுகளைச் செய்து விட்டு அவற்றையெல்லாம் விதி செய்ய முயற்சிக்கக் கூடாது.

 

                உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமது இழப்பின் தன்மையை இனப்படுகொலையின் அளவு கோல் கொண்டு கணக்கிட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் தமிழர் கலைகளைத் தமிழர் அல்லாதார் கையாள்வதும், கையாளத் திட்டமிடுவதும் அவர்களுக்கு நல்லதல்ல.

 

                தமிழ் மொழியானது தமிழர் கலைகளோடு பின்னிக் கிடக்கிறது. அதனை மேலும் சிக்கல் படுத்தாமல் பிரித்தெடுக்கும் ஆற்றல் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழ்த் தேசிய உணர்வுள்ளவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அவர்களும் குடிசார் நெறியைப் பின்பற்றிக் கோட்பாட்டு வரைவுகள் செய்து தக்க முறையில் மக்கள் குழுக்களை அமைத்துக் கலைகளை மீட்டெடுக்க வேண்டும். தமிழ் மரபுக் கலைஞர்கள் அதற்கு வெளிப்படையாக உதவிட வேண்டும்.

 

                ஆரிய வைதிக நலனை முன்னிறுத்துவோர் உருண்டு திரண்டு தமிழ் இன நலம் விரும்பிகளாக வடிவம் எடுக்க இயன்றவரை தமிழர்கள் உதவிச் செய்யலாம். மற்றபடி அவர்களை உள்ளடக்கியோ முதன்மைப் படுத்தியோ உருப்பட முடியாது. அவர்களிடமிருந்து விலகி வாழக் கற்றுக் கொள்வது மட்டுமே இன்றைய சூழலில் தமிழர்களுக்கு ஆறுதலும், அரசியலும் அடிப்படைத் தேவையும். ஆகும்.

-    தென்னன் மெய்ம்மன்

 

___---ooo000OOO000ooo---___

http://www.yarl.com/forum3/topic/161156-இசை-–-கவின்-கலைப்-பல்கலைக்-கழகம்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.