Jump to content

மஹிந்தவை விடவும் ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகம் - கருத்துக் கணிப்பு


Recommended Posts

மஹிந்தவை விடவும் ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகம் - கருத்துக் கணிப்பு


 

மஹிந்தவை விடவும் ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகம் - கருத்துக் கணிப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிக மக்கள் அதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.நாடு முழுவதிலும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் குறித்த வாக்காளர்களின் நிலைப்பாடு, கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புக்களின் கீழ் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தல் நீதியானதும் சுயாதீனமானதுமாக நடைபெறும் என 67 வீதமானவர்கள் கருதுவதுடன், 4 வீதமானவர்கள் சுயாதீனமாக நடைபெறாது என கருதுகின்றனர்.


இலங்கைக்கு பொருத்தமான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என பெரும்பாலான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


62 வீதமான தமிழர்கள், 71 வீதமான இந்திய வம்சாவளித் தமிழர்கள், 62 வீதமான முஸ்லிம்கள் ரணில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என கருதுகின்றனர்.


இந்த இன சமூகங்களைச் சேர்ந்த இரண்டு வீதத்திற்கும் குறைவானவர்களே மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்கள் என கருத்து வெளியிட்டுள்ளனர்.எனினும் சிங்கள இன சமூகத்திற்கு இடையில் பிரதமர் பதவியை யார் வகிக்க வேண்டும் என்பதில் முரண்பாடு காணப்படுகின்றது.


மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை வகிக்க வேண்டுமென 36 வீதமானவர்களும். ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்க வேண்டுமென 32 வீதமானவர்களும் கருதுகின்றனர்.மாகாண அடிப்படையாக கருதுமிடத்து மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வடமேல் , ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ரணில் விக்ரமசிங்க பிரதமராவதனை விரும்புகின்றனர்.


தென் மற்றும் வட மத்திய மாகாண மக்கள் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவதனை விரும்புகின்றனர். மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடாது எனவும், சிங்கள சமூகத்தின் 50 வீதமானவர்கள் போட்டியிடுவது சரியே எனவும் தெரிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122588/language/ta-IN/-----.aspx

Link to comment
Share on other sites

பிரதமர் பதவிக்கான போட்டியில் ரணிலிடம் தோற்கிறார் மகிந்த – கருத்துக் கணிப்பில் தகவல்

AUG 04, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

GE-2015-infographic-2_finalசிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு  வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட, ஆய்வுகளின் அடிப்படையில், சிறிலங்காவின் அடுத்த பிரதமராவதற்கு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு 39.8 வீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்குச் சாதகமாக, 27.5 வீதமானோரே விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்காவின் பிரதமராவதற்கு மிகவும் பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழர்கள் 62.3 வீதமும், மலையக தமிழர்கள் 71.2 வீதமும், முஸ்லிம்கள் 62.3 வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்கு  தமிழர்கள் 1.8 வீதமும், மலையகத் தமிழர்கள் 1.2 வீதமும், முஸ்லிம்கள் 1.6 வீதமும் மாத்திரமே ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

GE-2015-infographic-2_final

இதேவேளை சிங்களவர்களில், 36 சதவீதமானோர் மகிந்த ராஜபக்சவே பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ள அதேவேளை, 31.9 வீதமான சிங்களவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும், எல்லா சமூகத்தினருடன் ஒப்பிடுகையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கே கூடுதலாக- 39.8 வீதமானோரின் ஆதரவு உள்ளது.

சிறிலங்காவின் ஒன்பது மாகாணங்களில், மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வட மேல், ஊவா மற்றும் சப்பரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களிலும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கே அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தென் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மாத்திரமே, மகிந்த ராஜபக்சவுக்கு, கூடுதலான ஆதரவு உள்ளது.

அதேவேளை, இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடக் கூடாது என்று 42 வீதமானோரும், போட்டியிடலாம் என்று 40 வீதமானோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், வாக்காளர்களில் 58.1 வீதமானோர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போவது என்பதை, ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/08/04/news/8449

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.