Jump to content

கலாமின் வங்கியில் எவ்வளவு தெரியுமா? நம்ப முடியுமா இதை?


Recommended Posts

Kalam 1

 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது:

கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.

கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வந்து கொண்டிருக்கிறது.

கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள்தான் அவருடைய ஒரே சொத்து. இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன. கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.

ஏனென்றால் டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற இடம் கிடையாது. இதற்கு கலாமின் டெல்லி இல்லம் பொறுத்தமானதாக இருக்கும் என்றார் பொன்ராஜ்.

- See more at: http://www.canadamirror.com/canada/47097.html#sthash.qWiYE6Wa.dpuf

Link to comment
Share on other sites

இதே மாதிரி சும் சும் கடந்த தேர்தலுக்கு முன் எவ்வளவு இப்ப எவ்வளவு என காட்டினால் நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் தலையங்கமே பிழை, ஹலாமது வங்கிக்கணக்கில் பண இருப்பு எவளவு தெரியுமா! என்பதே தலைப்பாக இருத்தல்வேண்டும். உனது இசை என்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடிவந்த என்னை ஏமாற்ரிவிடாதே என்பதுபோல் நாங்கள் இனிமேல் வெகுஜன ஊடகங்களைக் கேட்கவேண்டியுள்ளது. இப்படிச் செய்தித்தலைப்பிட்டு ஊடகம் நடாத்துவதிலும்பார்க்க தெருவில் பிச்சை எடுக்கலாம். தமிழர்களது பணத்தில் திண்டு கொளுத்துப்போன லங்கசிறி போன்றவையான ஊடகங்கள் இருந்தாலென்ன இல்லாதுவிட்டால் என்ன.

ஒரு செய்தியை முறையாக களவாணித்தனமில்லாது வெளியிடும் தில்லு ஊடகங்களுக்கு இருக்கவேண்டும். விளம்பரதாரர்களால் கிடைக்கக்கூடிய வருமானத்துக்காக பார்வையாளர்களது எண்ணிக்கையை கூட்டுவதற்காக அவுத்துப்போட்டு ஆடுவதுபோல் செய்திகளை இணைக்கக்கூடாது.

கேவலம்கெட்ட செய்தித்தளங்கள் எங்கேயாவது ஹலாமது பண இருப்பு எதுவெனக்கூறியதா? இதைவிட தெருவில் துண்டைவிரிச்சுப்போட்டு இருக்கலாம் பொறுக்கிகளா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு, சமகளம் போன்ற ஊடக விபசாரம் செய்யும் தளங்களும் விதிவிலக்கல்ல. 

Link to comment
Share on other sites

 
 
 
 
 
பிரமச்சாரிகள் இருவரின் சொத்து விபரங்கள்
காமராஜர்
1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5.கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

அப்துல் கலாம்
01.வீணை,
02.மடிகணனி
03.கடிகாரம்
04.2 Belt
05.Blue colour shirt
06.ராமேஸ்வரம் வீடு..
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் குடும்பம் பாசம் எதுவும் இல்லாமல் இருந்து....
அரச செலவில் வாழ்ந்திருந்தால்!!!!!!!
எக்கவுண்ட் 0 ஆகத்தான் இருந்திருக்கும். 
இது வரலாறா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.