Jump to content

27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்!


Recommended Posts

27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்!

 

மெரிக்காவைச் சேர்ந்த கென்டால் ஜென்னர் என்ற மாடல் அழகியின் புகைப்படம்தான் கடந்த வாரங்களில் அதிக லைக் வாங்கிய புகைப்படமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் லைக்ஸை அள்ளு அள்ளு என்று அள்ளுகிறது.

jennar01.jpg

கடந்த, 5 வாரங்களுக்கு முன்பு ஜென்னர் பதிவேற்றிய புகைப்படம், 27 லட்சம் லைக்ஸ் வாங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஜென்னரின் இதயத்தில் ஒவ்வொரு முறை லப்-டப் கேட்கும் போதும் அந்த புகைப்படத்தை ஒருவர் ’லைக்’ செய்துள்ளார்கள்.

jennar02.jpg

இதற்கு முன்பு, 24 லட்சம் லைக் வாங்கியிருந்த தன் அக்கா கிம்மின் சாதனையை முறியடித்துள்ளார் ஜென்னர். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஜென்னரின் முகப் பொலிவா? மோன நிலையா? கூந்தலின் வடிவமைப்பா? எதுடா செல்லம், இந்த புகைப்படத்தை லைக் பண்ண வெச்சது? என்று நெட்டிசன்களிடையே பெரும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

jennar03.jpg

1995ல் பிறந்த கென்டால் ஜென்னர், அமெரிக்காவின் பிரபல மாடல். டி.வி. ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். வாகுயூ போன்ற பிரபல மாடல் பத்திரிகைகளில் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளுகிறது. அதில் இந்த புகைப்படம் உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த புகைப்படம் மட்டுமல்லை, இவர் பதிவேற்றும் பல புகைப்படங்கள், ஜென்னரின் ரசிகர்களாலும், பல தரப்பினரின் ரசிகர்களாலும் அதிகம் விரும்பப்படுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=48845#

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.