Jump to content

இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் "செக்ஸ்" ஹாமோன்கள்: எச்சரிக்கை


Recommended Posts

இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் "செக்ஸ்" ஹாமோன்கள்: எச்சரிக்கை
 
sex_hormones_001.jpgஇரவு நேரத்தில் பணிபுரிவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை சேர்ந்த Pompeu Fabra University இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ஏன் என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதற்காக 100 பேரை தெரிவுசெய்து 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சிறுநீரை ஆய்வு செய்தது.

அதில், செக்ஸ் ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டிரோன்’ மற்றும் ‘ஈஸ்ட்ரோஜன்’ ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கையில் காலை 6 மணி முதல் 10 வரை சுரக்கும் இந்த ஹார்மோன்கள், இரவு வேலை பார்ப்பவர்களுக்கு இரவு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்துள்ளது.

இதனால் இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்பக அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

sex_hormones_002.jpg

 

http://lankasritechnology.com/view.php?22SOld0bcN90Qd4e3yMM302cBnB3ddeZBn5302egAA2e4W09racb2lOU43

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார்: 'இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியல்லப்பா'

அதமாதிரி இந்த ஆராய்ச்சிக்காரர் காரர் தொல்லை தாங்க முடியல்ல. சும்மா வா 'தர்ம பணத்துக்கு', அத ஆராயிறோம், இத ஆராயிறோம் எண்டுறது, பிறகு ஒரு அறிக்கை கரடி விடுறது.

அதை திண்டா இது வரும், இதை திண்ட அது வரும், என்றுறது. இப்ப என்னடா எண்டால் இரவு வேலை செய்யிறவைக்கு...

அட போங்க்கப்பா.... மனிசன், இரவோ, பகலோ உழைச்சு சாப்பிட்டால் சரி தான்.

முடியல.

சேர்வை, என்ன, நான் சொல்லுறது. ( நீங்க எங்கயோ போய்டீங்க பாஸ்.. என்று போடப் போறீங்க... lol ) :grin:

Link to comment
Share on other sites

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார்: 'இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியல்லப்பா'

அதமாதிரி இந்த ஆராய்ச்சிக்காரர் காரர் தொல்லை தாங்க முடியல்ல. சும்மா வா 'தர்ம பணத்துக்கு', அத ஆராயிறோம், இத ஆராயிறோம் எண்டுறது, பிறகு ஒரு அறிக்கை கரடி விடுறது.

அதை திண்டா இது வரும், இதை திண்ட அது வரும், என்றுறது. இப்ப என்னடா எண்டால் இரவு வேலை செய்யிறவைக்கு...

அட போங்க்கப்பா.... மனிசன், இரவோ, பகலோ உழைச்சு சாப்பிட்டால் சரி தான்.

முடியல.

சேர்வை, என்ன, நான் சொல்லுறது. ( நீங்க எங்கயோ போய்டீங்க பாஸ்.. என்று போடப் போறீங்க... lol ) :grin:

 

பாஸ் நானும் வாசிச்சு முடியுறநேரம் பதில் தயாராகியது... ஆனால் அதுக்குள்ள வைச்சீங்க பாஸ் ஆப்பு....

 

உண்மையில் நான் இந்த இணைப்பை இணைத்ததன் காரணத்தை மிகவும் வருத்ததுடன் கூற விரும்புகின்றேன்

இன்று யாழில் தமிழுக்கு 20000 வயது என்று ஒரு திரி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது....(http://www.yarl.com/forum3/topic/160748-தமிழ்-மொழி-பிறந்து-சுமார்-20000-வருடம்-ஆகுது/) அதில் view ஆக 3பேர்....அப்போ இப்படி ஒரு கிளுகிளுப்பு செய்தியை கண்டவுடன் யோசித்தேன் இதை இணைத்தால் எத்தனை view எத்தனை reply வருகுதெண்டு ...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாஸ் நானும் வாசிச்சு முடியுறநேரம் பதில் தயாராகியது... ஆனால் அதுக்குள்ள வைச்சீங்க பாஸ் ஆப்பு....

 

உண்மையில் நான் இந்த இணைப்பை இணைத்ததன் காரணத்தை மிகவும் வருத்ததுடன் கூற விரும்புகின்றேன்

இன்று யாழில் தமிழுக்கு 20000 வயது என்று ஒரு திரி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது....(http://www.yarl.com/forum3/topic/160748-தமிழ்-மொழி-பிறந்து-சுமார்-20000-வருடம்-ஆகுது/) அதில் view ஆக 3பேர்....அப்போ இப்படி ஒரு கிளுகிளுப்பு செய்தியை கண்டவுடன் யோசித்தேன் இதை இணைத்தால் எத்தனை view எத்தனை reply வருகுதெண்டு ...

 

 

 

சேர்வை,

இப்படிக் கவுட்டுப் போட்டியளே. :(

தமிழ் மொழி பிறந்து 20,000 வருடம் என்று நானும் பார்த்தேன். உள்ள போகவில்லை. காரணம் அது ஒரு அனுமானம். ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை.

எனக்கு புரிந்து, மனித வரலாறு, கி.மு 5000 இருந்து தான், அதுவும் அனுமானம். ஆனால் கி மு  2000 ல் இருந்து ஆய்வு, சான்று உள்ளது. (எகித்திய, சுமேரிய ( சுமே அக்கா ஆமோதிப்பார் ), சிந்து வெளி, கிரேக்க என )

ராமாயணம் உண்மையாக, இட்டுகட்டோ, இருந்தாலும் 5000 ஆண்டுகள் முன்னர் என்றே சொல்கின்றனர்.

எனினும் உலகின் பழைய மொழி எது எனும் இங்கிலாந்து, கார்ன்வால் பகுதி வாசகர் கேள்விக்கு, லண்டன் டெய்லி மிரர் பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில், 10,000 வருடங்களுக்கு முன்னர் இருந்து காய்ந்து, மறைந்து போய்விட்ட, இருந்ததாக உறுதி செய்யப் பட்ட, ஒரு நதி குறித்த விபரங்கள் தமிழ் மொழியில் உள்ள பழம் இதிகாசம் ஒன்றில் காணப் படுவதால், அதுவே தொன்மையான மொழியாக இருக்கலாம் என்கின்றனர்.

Link to comment
Share on other sites

சேர்வை,

இப்படிக் கவுட்டுப் போட்டியளே. :(

தமிழ் மொழி பிறந்து 20,000 வருடம் என்று நானும் பார்த்தேன். உள்ள போகவில்லை. காரணம் அது ஒரு அனுமானம். ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை.

எனக்கு புரிந்து, மனித வரலாறு, கி.மு 5000 இருந்து தான், அதுவும் அனுமானம். ஆனால் கி மு  2000 ல் இருந்து ஆய்வு, சான்று உள்ளது. (எகித்திய, சுமேரிய ( சுமே அக்கா ஆமோதிப்பார் ), சிந்து வெளி, கிரேக்க என )

ராமாயணம் உண்மையாக, இட்டுகட்டோ, இருந்தாலும் 5000 ஆண்டுகள் முன்னர் என்றே சொல்கின்றனர்.

எனினும் உலகின் பழைய மொழி எது எனும் இங்கிலாந்து, கார்ன்வால் பகுதி வாசகர் கேள்விக்கு, லண்டன் டெய்லி மிரர் பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில், 10,000 வருடங்களுக்கு முன்னர் இருந்து காய்ந்து, மறைந்து போய்விட்ட, இருந்ததாக உறுதி செய்யப் பட்ட, ஒரு நதி குறித்த விபரங்கள் தமிழ் மொழியில் உள்ள பழம் இதிகாசம் ஒன்றில் காணப் படுவதால், அதுவே தொன்மையான மொழியாக இருக்கலாம் என்கின்றனர்.

பாஸ் கறனம் தப்பினா மரணம்

 

அண்ணையான எனக்கு தமிழ் மொழிக்கு எதனை வயது என்று தெரியாது, ஆனால் எம்மொழி சார்ந்த செய்திக்கு கிடைத்த வரவேற்பே கவலையளித்தது.....

உங்கள் பதிலில் நிறைய பொதிந்துள்ளது..இந்தப்பதில்கள் அங்கு வரவில்லையே என்பது எனது ஆதங்கம்

இது யார்மனதையும் புண்படுத்தும் நோக்கம்அல்ல... 

 

பாஸ் நீங்க எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வைப்பீங்க...அங்கதான் நீங்க நிக்கிரியல்

 

வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது. அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி. மியான்மருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வங்கக் கடலில் உள்ளது இந்த சின்னத் தீவு.

23-1437631273-the-people-who-live-on-thi

இந்தத் தீவில் வசிப்பவர்கள், கடைசிக் கற்காலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர். இவர்களை சென்டினலிஸ் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பேசும் பாஷை, இவர்களது வாழ்க்கை முறை என எதுவுமே யாருக்கும் தெரியாது.இந்தத் தீவில் மனிதர்கள் கடந்த 60,000 வருடங்களாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அடர்ந்த வனங்கள் நிறைந்த தீவாகும் இது. இங்கு வேட்டைதான் முக்கியத் தொழிலாக இருக்கும் என்று தெரிகிறது.பூமியில் நவீன நாகரீகத்தின் காலடி படாத ஒரே இடம் இதுதான் என்று கூறுகிறார்கள். வெளியுலகவாசிகளை இங்குள்ள மக்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதித்ததில்லை. யாரேனும் வந்தால் இவர்களின் ஈட்டி, வில் அம்புக்கு இரையாக வேண்டியதுதான்.கடந்த 1896ம் ஆண்டு வெள்ளையர் அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, அங்கிருந்து தப்பி இந்தத் தீவுக்குப் போயுள்ளார். ஆனால் அவரது கெட்ட நேரம் இந்தத் தீவு வாசிகளிடம் சிக்கி உயிரிழந்தார். அடுத்த நாள் இவரது உடல் அம்புகள் தாக்கியும், கழுத்து அறுபட்டும் பிணமாகக் கிடந்தது.1981ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிரிம்ரோஸ் என்ற கப்பல் இந்தத் தீவை ஒட்டியுள்ள பவளப் பாறையில் கரை தட்டி நின்று விட்டது. கப்பலில் நிறைய மாலுமிகள் ஊழியர்கள் இருந்தனர். கப்பலைப் பார்த்த தீவுவாசிகள் வில் அம்புடன் படை திரட்டி கப்பலைத் தாக்க கிளம்பி வந்தனர். கடற்கரையில் இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கேப்டன், உதவி கோரி ரேடியோ மூலம் தகவல் அனுப்பியும் கிடைக்கவில்லை. நல்லவேளையாக அப்போது வீசிய பெரும் அலையில் கப்பல் தானாகவே நகரத் தொடங்கியது. இதனால் அனைவரும் உயிர் பிழைத்தனர்.இந்தத் தீவு மக்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருப்பதாலும், வெளியுலக நாகரீகம் தங்களை அண்ட விடாமல் கவனமாக இருப்பதாலும் இவர்களை தொல்லை தராமல் அப்படியே அவர்கள் போக்கில் விட்டு விட இந்திய அரசு முடிவு செய்தது. அந்தமான் நிர்வாகமும் அதே முடிவுக்கு வந்தது. இதனால் இந்தத் தீவுக்கு செல்வது சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மீறிப் போனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.இதற்கிடையே, இந்தத் தீவில் வசிக்கும் மக்களையும், அவர்களது வாழ்வாதாரம், வாழ்க்கை முறைக்கு மதிப்பு கொடுக்கும் அதே வேளையில் அவர்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.இவர்களுக்கு தொற்று நோய் ஏதாவது பரவி விட்டால் அவ்வளவுதான் மொத்தமாக அழிந்து போய் விடும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில், வெளியுலக மக்களை விட இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக, நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலுக்குப் பின்னர் சென்டினல் தீவு மக்களின் கதியை அறிய இந்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பியது. அப்போது இந்தத் தீவு மட்டும் பத்திரமாக, பாதிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அருகில் உள்ள பல தீவுகள், அந்தமான் தீவு ஆகியவை பாதி்ப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தீவும், அதில் உள்ள மக்களும் தப்பினர்.இந்திய ஹெலிகாப்டர் தீவை வட்டமடித்து ஆய்வு மேற்கொண்டபோது கீழே இருந்து பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இந்திய ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டினர்.கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இப்பகுதிக்கு வந்த 2 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தீவு மக்களிடம் சிக்கி ஈட்டியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படை முயன்றது. ஆனால் வில் அம்புத் தாக்குதல் பலமாக இருந்ததால் இந்தியப் படையினரால் கரையைக் கூட நெருங்க முடியவில்லை.இந்தத் தீவு மக்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக வெளியுலக மக்களை எதிர்க்கிறார்கள் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தத் தீவு இதுவரை யாரிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று. இங்குள்ள மக்கள் வசம்தான் இந்தத் தீவு இதுவரை இருந்து வந்துள்ளது. எனவே வெளியுலக தாக்கங்கள் இந்த மக்களிடம் சுத்தமாக இல்லை.இதன் காரணமாக இந்தத் தீவுக்கு யாரேனும் வந்தால் அவர்களை எதிரியாக மட்டுமே இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். எனவேதான் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள், கொல்கிறார்கள். மேலும் வெளியுலக மக்களால் தங்களது கலாச்சாரம், இனம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும், அதைக் காக்கும் வகையிலுமே இவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள்.

23-1437631234-the-people-who-live-on-thi

இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை. 1930களில் 30 பேர் வரை இங்கு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 400 பேர் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.வெளியுலக நாகரீகம் இந்தத் தீவை தீண்டாமல் இருப்பதால்தான் இந்த மக்கள் இவ்வளவு காலமாக இங்கு தாக்குப் பிடித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இதுவே தொடரட்டும் என்று இந்திய அரசும் விட்டு விட்டது. இருப்பினும் இந்த பூர்வகுடி மக்கள் இனம் காப்பாற்றப்பட வேண்டும், கற்கால மனிதர்களின் கடைசி சந்ததியான இந்த மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறைக் குரலும் கேட்டபடியே உள்ளது.

http://www.yarl.com/forum3/topic/160764-யாராச்சும்-வந்தீங்க-கொண்டே-புடுவோம்-இந்தியாவுக்குப்-பக்கத்தில்-ஒரு-திரில்-தீவு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கதை... இது.

வெள்ளைக்காரன் பார்க்காத தீவுகளா, பிடியாத சண்டையலா? கொல்லாத ஆதிவாசிகளா?

இந்திய அரசு, இருந்திட்டுப் போகட்டும் எண்டு விட்டுடுதாம். யாருக்கு காது குத்துகினம்?

உந்த தீவில ஏதாவது இந்திய அணு ஆராய்சியல் நடக்குமோ? அதுக்கு உந்த கதை விட்டு, ஒருவரும் போகத் தடை எண்டு விளையாட்டோ? :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா

அப்புறம் இரவுக்கு என்னாச்சு....?:love:

அம்போ என்று திரியை விடலாமா?

ஓடி வாறவர்களுக்கு என்ன வைச்சிருக்கிறேள்..:grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நேரத்தில் தானே.... செக்ஸ் ஹாமோன்கள் அதிகமாக சுரக்க வேண்டும்.
பகலில் அதிகமாக  சுரந்தால். செய்யும்.... மற்றைய வேலைகள் பாதிக்கப் படாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நேரத்தில் தானே.... செக்ஸ் ஹாமோன்கள் அதிகமாக சுரக்க வேண்டும்.
பகலில் அதிகமாக  சுரந்தால். செய்யும்.... மற்றைய வேலைகள் பாதிக்கப் படாதா?

இயற்கை தன்ரை வேலையை செய்யுது உதுக்கு போய் ஆராய்ச்சி செய்யுறாங்கள் :innocent:  பகல்லையும் சுரக்க வெளிக்கிட்டால் கலியாணம் கட்டாதவன்ரை கதி அதோகதிதான்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையாகவே அதிகாலையில்.. அச்சுறுத்தலாகவே தானே இருக்கும். இதில புதிசா என்னத்தை..?! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையாகவே அதிகாலையில்.. அச்சுறுத்தலாகவே தானே இருக்கும். இதில புதிசா என்னத்தை..?! :grin:

அது, உச்சா...  போவதற்கு வரும் அச்சுறுத்தல்.
இதற்கும், ஹமோன் சுரப்பதற்கும்...  முடிச்சுப் போடக் கூடாது.:grin:

Link to comment
Share on other sites

அது, உச்சா...  போவதற்கு வரும் அச்சுறுத்தல்.
இதற்கும், ஹமோன் சுரப்பதற்கும்...  முடிச்சுப் போடக் கூடாது.:grin:

அண்ணை அங்கதான் தப்புக்கணக்கு போடுறியள்..... உச்சா எண்டு தப்பா நினைக்க கூடாது... அதுதான் விசயம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.