Jump to content

ஓடும் காரை ஹேக் செய்து அதன் என்ஜின் செயல்பாட்டை முடக்கி பீதியைக் கிளப்பும் ஹேக்கர்கள்: வீடியோ இணைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான நெடுஞ்சாலையில் நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, திடீரென உங்கள் காரின் ரேடியோ சத்தமாக அலற ஆரம்பிக்கிறது. சரி, ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று நினைத்து சத்தத்தை குறைக்கிறீர்கள். உடனே, காரின் வைபர் காரணமே இல்லாமல் வேலை செய்ய தொடங்குகிறது. அதையும் போராடி நிறுத்துகிறீர்கள். ஐயோ.... ஏன்? இப்படி எல்லாம் நடக்கிறது என்று நீங்கள் உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும்போது, என்ஜின் செயலிழந்து கார், நடுரோட்டில் நின்றால் எப்படியிருக்கும்?

இதெல்லாம் சாத்தியமா? என்று வியக்க வேண்டாம். சைபர்-செக்யூரிட்டி ஜாம்பவான்களான சார்லி மில்லரும், கிறிஸ் வலாசெக்கும் இது சாத்தியம்தான் என்று சொல்வது மட்டுமில்லாமல் அதை செய்தும் காட்டுகிறார்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது ஃபியட் நிறுவனத்தின் ஜீப் செரோகி மாடல் கார். 

இது போன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் உலகின் பல்வேறு சாலைகளில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதை ஒருவர் ஹேக் செய்யும் அளவுக்கு வைத்திருப்பது நியாயமா? என்று கார் கம்பெனிகளிடம் கேள்வி கேட்கவே இந்த காரை அவர்கள் ஹேக் செய்து காட்டினர்.

ஆனால், இவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ள ஃபியட் நிறுவனம், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்டைப் போல் எங்கள் கார்களில் உள்ள சாப்ட்வேர், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் நினைத்தால் அதை பணம் கொடுத்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எங்களது சாப்ட்வேர் (software patch) எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது என்று கூறியுள்ளது.

<script async src="//player.cnevids.com/embedjs/5176e89e68f9daff42000013/video/55ad80d461646d4db7000005.js"></script>

http://www.maalaimalar.com/2015/07/22154455/Security-Experts-Hack-Into-Mov.html

Link to comment
Share on other sites

எலுமெண்டல் எனது லுமாலா சயிக்கிளை யாரும் ஹக் பண்ணட்டும் பாப்பம். அது அவ்வளவு பாதுகாப்பானது. :grin:

Link to comment
Share on other sites

CM_zps0ffckhvd.jpg

:love:

அண்ணை ஹக் இல்லை டச் எண்டு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டச் என்றால்   தொடுவது,

ஹக் என்றால்  அணைப்பது,

தொடுவது என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது,

அணைப்பது என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்.

அதனால் ஹக் கில்தான் கிக் உண்டு. :)

Link to comment
Share on other sites

டச் என்றால்   தொடுவது,

ஹக் என்றால்  அணைப்பது,

தொடுவது என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது,

அணைப்பது என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்.

அதனால் ஹக் கில்தான் கிக் உண்டு. :)

அண்ணை எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி முடியுது ....

Link to comment
Share on other sites

இதிலிருந்து தெரிவது யாதெனில்... புதிய தொழில்நுட்பத்தில் ஆக்கபூர்வமான விடயங்கள் மட்டும் இல்லாமல், அழிவுக்கான பாதைகளும் விரிந்தே செல்கின்றன என்பதுதான். 

இந்த hacking முறையைப் பயன்படுத்தி குண்டுகள்  வைக்காமலே  கார்கள் மட்டும் அல்ல ஒரு ஆகாயவிமானத்தையே நொருக்கலாம் என்ற தீய எண்ணம் IS போன்ற அழிவு தீவிரவாதிகளுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Car hack uses digital-radio broadcasts to seize control

By Chris VallanceBBC Radio 4
InfotainmentCar infotainment systems can allow drivers to see vehicle status updates, play music and videos, view maps and in some cases run third-party apps

Several car infotainment systems are vulnerable to a hack attack that could potentially put lives at risk, a leading security company has said.

NCC Group said the exploit could be used to seize control of a vehicle's brakes and other critical systems.

The Manchester-based company told the BBC it had found a way to carry out the attacks by sending data via digital audio broadcasting (DAB) radio signals.

It coincides with news of a similar flaw discovered by two US researchers.

Chris Valasek and Charlie Miller showed Wired magazine that they could take control of a Jeep Cherokee car by sending data to its internet-connected entertainment and navigation system via a mobile-phone network.

Chrysler has released a patch to address the problem.

However, NCC's work - which has been restricted to its labs - points to a wider problem.

NCC computerNCC Group was able to transmit the DAB signal using a laptop and a box made from easy-to-source parts

The UK's Society of Motor Manufacturers and Traders has responded by saying that car companies "invest billions of pounds to keep vehicles secure as possible".

Breached brakes

NCC demonstrated its technique to BBC Radio 4's PM programme at its offices in Cheltenham.

By using relatively cheap off-the-shelf components connected to a laptop, the company's research director, Andy Davis, created a DAB station.

Because infotainment systems processed DAB data to display text and pictures on car dashboard screens, he said, an attacker could send code that would let them take over the system.

Once an infotainment system had been compromised, he said, an attacker could use it as a way to control more critical systems, including steering and braking.

Depending on the power of the transmitter, he said, a DAB broadcast could allow attackers to affect many cars at once.

"As this is a broadcast medium, if you had a vulnerability within a certain infotainment system in a certain manufacturer's vehicle, by sending one stream of data, you could attack many cars simultaneously," he said.

"[An attacker] would probably choose a common radio station to broadcast over the top of to make sure they reached the maximum number of target vehicles."

Mr Davis declined to publicly identify which specific infotainment systems he had hacked, at this point.

Lab simulation

In many ways, modern cars are computer networks on wheels.

Mike Parris, of SBD, another company that specialises in vehicle security, said modern cars typically contained 50 interlinked computers running more than 50 million lines of code.

By contrast, he said, a modern airliner "has around 14 million lines of code".

Car read-outThe addition of automated car controls is creating new opportunities for hackers

Such technology allows the latest cars to carry out automatic manoeuvres. For example, a driver can make their vehicle parallel park at the touch of a button.

Mr Davis said he had simulated his DAB-based attack only on equipment in his company's buildings because it would be illegal and unsafe to do so in the outside world.

But he added that he had previously compromised a real vehicle's automatic-braking system - designed to prevent it crashing into the car in front - by modifying an infotainment system, and he believed this could be replicated via a DAB broadcast.

"If someone were able to compromise the infotainment system, because of the architecture of its vehicle network, they would in some cases be able to disable the automatic braking functionality," he said.

Jeep attack

On Tuesday, Wired magazine reported that two US security researchers had managed to remotely take control of a Jeep Cherokee's air-conditioning system, radio and windscreen wipers while its journalist was driving the vehicle.

Jeep CherokeeWired magazine reported that a Jeep Cherokee had been hacked

Mr Valasek - director of vehicle security research at IOActive - said that NCC's attack appeared to have similarities with his own.

"I mean that's essentially what we did over the cell [mobile] network - we took over the infotainment system and from there reprogrammed certain pieces of the vehicle so we could send control commands," he said.

"So, it sounds entirely plausible."

But he added that such exploits were beyond the reach of most criminals.

"It takes a lot of time skill and money," he said.

"That isn't to say that there aren't large organisations interested in it."

More details about both the NCC and the US team's research will be presented to the Black Hat security convention in Las Vegas next month.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரித்த சடைமுடி தொடுத்து முடிக்குமுன் எடுத்த  சபதம் முடித்தவளே    
    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.