Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரு சுமந்திரனிடம் சில கேள்விகள்


Recommended Posts

1977 இல் எதிர் கட்சியாக அமர்ந்து வட்ட மேசை, சதுரமேசை, இசை நாற்காலி(musical chair) விளையாடி அதிலும் தோற்று சென்னையில் அஞ்ஞாத வாசம் பூண்டு, சென்னைக்குப் பறந்ததில் இயற்கை கொல்லாமல் விட்டதில் மிச்ச சொச்சமான கூத்தணியும் காலப்போக்கில் அதனோடு இணைந்த வரலாற்று எச்சங்களும் தமிழனை பிரதி நிதிப்படுத்தவே தகுதியில்லாத கோமாளிகள் . 

Link to comment
Share on other sites

sumanthiran-sampanthan

டக்ளசிற்கும் கஜேந்திரகுமாரிற்கும் என்ன வித்தியாசமாம் கேட்கிறார் திருவாளர். சுமந்திரன். அதனை அவர்களது கட்சி பத்திரிகை இன்று வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. டக்ளஸ் இன்று எவருக்கும் ஒரு வேண்டாப் பொருளாகி விட்டார். அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் சுமந்திரன். எமது மக்கள் வெறுமனே டக்ளஸ் எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளாதவர் அவர். இதற்கெல்லாம் பதில் சொல்லவும் வேண்டுமா என்ற சலிப்பு எங்களுக்கிருந்தாலும் ஒரு பதிவிற்காக இதை சொல்லுகின்றோம்.


————————–———–

சனாதிபதித் தேர்தலில் மைத்ரியும் மகிந்தவும் ஒன்று என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார். ஒருவருக்கும் வாக்களிக்க மக்களை கோர மாட்டோம் என்று எடுக்கின்ற நிலைப்பாடானது மகிந்தவை வெற்றி கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நோக்காக கொண்ட சிங்கள தரப்பை, அதை ஆதரிக்கும் தமது நலன்களில் மட்டும் அக்கறை கொண்ட மேற்குலகத்தை, இந்தியாவை எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அசைய வைக்கும் என்ற காரணத்தினாலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக கஜேந்திரகுமார் அப்போதும் சொன்னார் இப்போதும் சொல்கிறார். இதில் என்ன தவறு?

மாற்றம் நடந்ததுமே ஜெனீவா அறிக்கை பிற்போடப்பட்டது. சர்வதேச விசாரணை என்று சொன்ன சர்வதேசமும் கூட்டமைப்பும் உள்ளக விசாரணை என்று பேசத் தொடங்கி விட்டன. மாற்றத்தால் வந்த நன்மைகள், என்ன தீமைகள் என்ன? கூட்டி கழித்துப் பார்த்தால் எது மேலோங்குகின்றது? சம்பூரில் காணி விடுவிக்கப்பட்டதை பற்றி சொல்கின்றனர். சம்பூர் காணி விட சர்வதேச அழுத்தம் காரணமா மைத்ரி-ரணிலின் நல்லெண்ணம் காரணமா? மகிந்தவும் சர்வதேச அழுத்தத்திற்கு பயந்து சில காணிகளை அவ்வப்போது விடுவித்தாரே? அதை எவ்வாறு விளங்கப்படுத்துவது? ஆனால் கேள்வி இது தான்: மாற்றத்தின் பின் ஒட்டு மொத்தமாக சர்வதேச அழுத்தம் குறைவா? கூடுதலா? சொல்லுங்கள்.

காணி விடுவிப்பை விடுங்கள். மூச்சு விட இடைவெளி கிடைத்தது என்று சொல்கின்றனர். வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன. சித்திரவதைகள் தொடர்கின்றன என்று நேற்று ஐ. நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு உறுப்பினர் யஸ்மின் சூகா அறிக்கை விட்டிருக்கிறார். (பார்க்க: www.itjpsl.com) இது தானா மூச்சு விட இடைவெளி?

ஊடகம், பேச்சு சுதந்திரம் கொஞ்சம் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். மைத்திரி ஆட்சியில் குறைந்தது நான்கு ஊடகவியலாளர்களுக்கு உயிர்அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் விடப்பட்டது. நால்வரும் தமிழ் ஊடகவியலாளர்கள் என்று சனநாயகத்திற்கான ஊடகவியலளார்கள் என்ற முற்போக்கு சிங்கள ஊடகவியலாளர்களால் நடத்தப்படும் அமைப்பு கூறுகிறது. (http://www.jdslanka.org/index.php/press-releases1/539-rsfjds-press-councils-revival-places-media-under-permanent-threat)

————————

கொஞ்சம் தானும் மாற்றமில்லை என்பது எமது வாதமல்ல. ஏதோவொரு விவரிக்க முடியாத ஒரு இடைவெளி ஒன்று மூச்சு விட கிடைத்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் இன்று நடப்பதென்ன?

இன்று கூட்டமைப்பு ஆதரித்த அதே மைத்ரி மேற்கு சொல்லியும் கேளாமல், இந்தியா சொல்லியும் கேளாமல் தனது கட்சியின் மேலேயே அதிக பாசம் உள்ளவர் என்பதை நிரூபித்து மகிந்த போட்டியிடுவதை அனுமதித்திருக்கின்றார். சிங்கள தேசியவாதம் என்பது இது தான். அதற்குள் அரசியல் செய்யும் எவருமே அந்த அரசியலுக்கு திருப்பி வருவார்கள். வராவிட்டால் தேர்தல் தோல்வி தான். அன்று சந்திரிக்கா பற்றி கனவுகளை வரைந்தனர். இன்று மைத்ரி பற்றி. இருவருமே 6 மாதத்திற்கு மேல் சிங்கள பௌத்த அரசியலின் தாக்கத்திலிருந்து சுதந்திரமாக இருக்க முடியவில்லை. சிங்களத் தீவிர தேசியவாதம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் தனது தன்மையை பறை சாற்றி நிற்கிறது.

இதைப் பற்றி சுமந்திரனிடம் கருத்து கேட்டால் அது உட் கட்சி விவகாரம் என்றார். தமது மாற்றத்தின் நாயகன் மீண்டும் மகிந்தவை கொண்டு வந்தால் அதற்கு பேர் உட் கட்சி விவகாரமா?

இதே கூட்டமைப்பின் செல்வம், சுரேஷ், மாவை, சிறீதரன், அரியம் மைத்ரி ஒன்றும் செய்யவில்லை – தேவையென்றால் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் போராடுவோம் என்கின்றனர். இதற்கு பெயர் என்ன?? சுத்துமாத்து தானே?

சனவரியில் வாக்கு கேட்கும் போது மாற்றத்திற்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்டனர். இன்று ஒரு எதிரியை வீழ்த்த இன்னொரு எதிரிக்கு வாக்களிக்க கேட்டோம் என்று சடைகின்றனர். யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்? நாளுக்கொரு கதை. பொழுதொரு மேனி. இதுவா நிதானமான, தெளிவான அரசியல்?

இன்று தெற்கில் உருவாகும் சூழலை தயவு செய்து பாருங்கள்; கூர்மையாக அவதானியுங்கள். சிங்கள அரசியலை பற்றிய யதார்த்தத்தை விளங்கி உங்களுக்கு அப்பட்டமாக சொன்னவர் யார் – எச்சரித்தவர் யார்? உண்மை சொல்லி அரசியல் செய்யுபவர்களா உங்கள் பிரதிநிதி அல்லது உசுபேற்றி சனரஞ்சக தேர்தல் அரசியல் செய்யும் கூட்டமைப்பினரா? 

http://tamilleader.com/?p=50296

Link to comment
Share on other sites

சில வருடங்களுக்கு முன்னர்.........

அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் , அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக அந்தச் சிறைகளின் முன்பாக மாபெரும் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றிற்கு மனோ கணேசனும் , விக்கிரமபாகு கருணாரட்ணவும் ஒழுங்கு செய்கிறார்கள், இந்தப் போராட்டம் ராஜபக்ச விற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது ஏற்கன்வே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிக்கித்தவிக்கும் மகிந்த தெற்கில் இப்படியொரு போராட்டம் நடைபெறுவதை விரும்பவில்லை,

சரியாக மனோ கணேசன் அவர்களின் போராட்டத்திற்கு முதல் நாள் நீங்கள் சிறைக்குச் சென்று அரசியல்  கைதிகளைச் சந்திக்கிறீர்கள், அவர்கள் உண்ணாவிரத்தினைக் கைவிடுகிறார்கள், இதனால் மனோகணேசனின் கவணயீர்ப்பு போராட்டமும் கைவிடப்படுகிறது, ராஜபக்ச நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார், மனோ கணேசன் மறுநாள் மிகுந்த சினத்துடன் பத்திரிகை அறிக்கை விடுகிறார் "அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒருவர் நடாத்தும் போராட்டத்தை இன்னொருவர் குழப்புவது சரியில்லை எனவும் தமிழர்களின் போராட்டங்களிற்கிடையில் ஒரு ஒருங்கிணவு வேண்டும் "என

நீங்கள் சிறை சென்று போராட்டம் கைவிடப்பட்ட பின்னர்   இரண்டு அரசியல் கைதிகள்   விடுவிக்கப்பட்டார்கள்  சடலங்களாக.....

எவருமே சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட அரசியல் கைதிகளை, நீங்கள் மட்டும் சந்தித்தது எப்படி?

மறுநாள் சிறைக்கு வெளியில் பெரிய கவணயீர்ப்பு போராட்டம் நடக்க இருப்பது தெரிந்தும் , கைதிகளின் போராட்டத்தினை ஏன் கைவிடச் செய்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு வாரமாகிவிட்டது. இந்த கேள்விகளை அனுப்பி. கூட்டமைப்பில் இளைஞர்களிற்கு இடம் கொடுப்பீர்களா? வீட்டுக்கு புள்ளடியிடும் போது வலமிருந்து இடுவதா? இடமிருந்து இடுவதா? மாதிரியான கேள்விகளிற்கு பதில் சொன்ன வேட்பாளர் ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம், கீழ் வரும் கேள்விகளிற்கு என்றேனும் ஒருநாள் பதில் சொல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

1. இலங்கையரசுடன் நீங்கள் மூன்று சுற்று இரகசிய பேச்சுக்கள் நடத்தியுள்ளீர்கள். இது உங்களிற்கும், சம்பந்தனிற்கும் மட்டுமே தெரிந்திருந்தது. கூட்டமைப்பின் எந்த தலைவர்களும் அதனை அறிந்திருக்கவில்லை. தமிழ் அரசியலில் இந்த தனிஆவர்த்தனங்கள் கற்றுத்தந்த பாடங்களை நீங்கள் படிக்காமல் இருக்கலாம். நாங்கள் படித்துவிட்டோம். அந்த பேச்சில் மங்கள சமரவீர பிராந்திய அலகு பற்றிய உறுதிமொழியை உங்களிற்கு தந்திருந்தார். ஆனால் அதனை நீங்கள் வெளிப்படுத்தவில்லை. இது பற்றி பின்னர் கூறிய சுரேஷ், அது கூட்டமைப்பின் முடிவல்ல, அதில் தவறு நேர்ந்தால் கூட்டமைப்பு பொறுப்பேற்காது என்றுவிட்டார். இப்பொழுது நீங்கள் தீர்வை பெற்றுத்தர வாக்களிக்க கோருகிறீர்கள். கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதா? உங்களிற்கு வாக்களிப்பதா?

2. வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், மற்றும் முதல்வரிற்கிடையிலான முரண்பாடொன்று நீதிமன்றம்வரை சென்றது. முதல்வர் சார்பில் நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள். அது மகிந்த ராஜபக்ச காலம். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் தமிழர்களிற்கு சார்பாகவே இருக்கும் என முதல்வர் கூறினார். முதல்வரின் அதிகாரங்களை நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், 13வது திருத்தத்தின் குறைபாடுகளை வெளிச்சமிடலாமென அவர் கூறினார். இருந்தாலும், முதல்வரிற்கே தெரியாமல் அந்த வழக்கை நீங்கள் இறுதிநேரத்தில் வாபஸ் வாங்கினீர்கள். இது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. 
இப்பொழுது கூறுகிறார்கள், உங்களிற்கு சட்டம் தெரியும், எல்லா இடங்களிலும் வாதாடி வென்று வருவீர்கள் என. எனக்குள்ள சந்தேகம், முதல்வர் வழக்கு 'டீலை' ஏன் செய்தீர்கள்? யாருடன் செய்தீர்கள்? எதிர்காலத்திலும் இப்படியான 'டீல்' செய்யமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

(இன்னும் வரும்)

நன்றி முகநூல் Yo Karnan 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.