Jump to content

தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி!


Recommended Posts

தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி!


old%20cinema%20logo.jpg

  பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்



prof%20balakrishnan%20250%282%29.jpgஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியிலும் பின்  தொழுதூரில் உள்ள தனியார் கலைக்கல்லுாரி ஒன்றில் முதல்வராகவும் பணியாற்றியவர். ஆரம்ப கால சினிமா மீதும், அது தொடர்பான விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

பள்ளிக்காலத்திலிருந்து சினிமா இதழ்கள் மற்றும் அது தொடர்பான ஆளுமைகள்  குறித்த தகவல்களை திரட்டிவரும் இவர், 67 வயதிலும் அதை விடாமல் தொடர்ந்துவரும் இளைஞர்.


சினிமா மற்றும் பொதுவான தலைப்புகளில் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளார்.
------------------------------


மிழ் சினிமா இன்று தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அசாத்திய திறமைமிக்க கலைஞர்கள்  கோலோச்சும் அற்புதமான ஒரு துறையாக மிளிர்ந்து நிற்கிறது.

தமிழ்சினிமாவின் இந்த வளர்ச்சி நேற்று புதிதாக முளைவிட்டதல்ல. ஒரு நூற்றாண்டு உழைப்பு அது. இதில் பங்கெடுத்துக்கொண்டவர்களின் பாதையில்தான் இன்றைய தமிழ் சினிமா நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்சினிமாவை இந்த உயர்ந்த இடத்திற்கு கொண்டுவந்து, அதன் வெற்றிக்கு வித்திட்ட மேதைகள் பல நூறு பேர். அவர்களை நினைவுகூர்வதும் அவர்களின் உழைப்பிற்கு மரியாதை செலுத்துவதுமே இந்த தொடரின் நோக்கம்.

இந்த வாரம் நாம் அறியப்போவது, தமிழ் சினிமாவின் முதல் பெண் டைரக்டர் டி.பி.ராஜலஷ்மியை பற்றி...

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் 1911 ஆம் ஆண்டில் பிறந்த ராஜலஷ்மி முதல் பெண் இயக்குநர் மட்டுமல்ல; முதல் கதாநாயகி, முதல் பெண் பாடலாசிரியர், நாவலாசிரியர் என்ற பன்முக திறமை கொண்ட ஆளுமையாகவும் திகழ்ந்தவர். 

திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலஷ்மி. இவரது தந்தை கணக்கப்பிள்ளையாக (கர்ணம்)பணியாற்றியவர். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ராஜலஷ்மி, தன் கேட்கும் பாடல்களை அப்படியே திரும்பப் பாடுவார். நாடகங்களைப் பார்த்து விட்டால், அதில் நடித்தவர்களைப் போலவே இவரும் நடித்தும் காட்டுவார். அத்தனை அபாரமான கேள்வி ஞானம் வாய்க்கப் பெற்றிருந்தார் ராஜலஷ்மி.

ஏழு வயதில் இவருக்கு பால்ய விவாகம் (குழந்தை வயதில் திருமணம்) நடைபெற்றது. கணவர் பெயர் முத்துமணி. புரிதல் இல்லாத வயதில் நடந்த அந்த திருமணம் வெற்றிகரமாக தொடரவில்லை. ஒரு வருடத்தில் அது முறிந்தும் போனது. இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தந்தை மரணமடைய, தாயார் மீனாட்சி அம்மாளுடன் திருச்சி மலைக்கோட்டைக்கு குடிபெயர்ந்தது ராஜலஷ்மியின் குடும்பம். ஒரு வெகுஜன பொழுதுபோக்கு சாதனமாக நாடகக் கலை மிளிர்ந்த அக்காலத்தில், நாடகக் குழுக்கள் ஒரு குருகுலம் போல செயல்பட்டன.

t,p%20rajalakshmi%20leftt%281%29.jpgஎல்லோரும் ஒரே இடத்தில் தங்கி,  ஊர் ஊராகப் போய் நாடகங்கள் நடத்துவார்கள். சிறுவர்களான நடிகர்களுக்கு தாய் தந்தை எல்லாம் அந்த கம்பெனி நாடக வாத்தியார்கள்தான். கலை மீதான இயல்பான  ஆர்வமும், குடும்ப வறுமையும் ராஜலஷ்மியை நாடகம் நோக்கிப் பயணப்பட வைத்தது. அப்பொழுது சி.எஸ்.சாமண்ணா என்பவர் சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்தார்.

அப்பொழுது பிரபலமாக விளங்கிய அவரது நாடகக் கம்பெனியில் சேர்ந்தார் ராஜலஷ்மி. அவர் அக்குழுவில் சேர்ந்த கதை சுவாரஸ்யமானது. பெண்கள் பொதுவெளியில் வரத்தயங்கிய அக்காலத்தில், நாடகத்தில் பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆளில்லாததால், நாடகங்களில் ஆண்களே பெண் வேஷம் போட்டு நடிப்பதுதான் வழக்கமாக இருந்தது.

தன் நாடகக் குழுவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்து, தன் முன்னே நின்று கொண்டிருந்த ராஜலஷ்மியை கம்பெனியில் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாத சாமண்ணா, அவரை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். அப்பொழுதுதான் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. நாடக ஒத்திகை முடிந்து மாடியில் இருந்து இறங்கிவந்துகொண்டிருந்த நாடகப் பேராசிரியர் ஶ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள், “ துணிச்சலாக நாடகங்களில் நடிக்கிறேன் என்று வந்திருக்கும் இந்தப் பெண்ணை நாம் ஆதரிக்கவேண்டும். இந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கம்பெனிக்கு இவளால் நல்ல பெயர் கிடைக்கும்" என்றார்.

அசரீரி போன்ற அந்த வார்த்தைக்கு மறுபேச்சின்றி சாமண்ணா தம் குழுவில் ஒருவராக ராஜலஷ்மியை சேர்த்துக்கொண்டார்.

"அன்று சுவாமிகள் ஆசி கூறி எனக்கு இடமளித்ததால்தான் புகழ்பெற்றதுடன்; உண்ண உணவுக்கும், உடுக்க உடைக்கும், இருக்க இடத்துக்கும் குறைவில்லாமலிருக்கிறேன்" என்று பின்னாளில் ஒரு சினிமா பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்தார் ராஜலஷ்மி.

நாடக கம்பெனியில் ராஜலஷ்மிக்கு கொடுக்கப்பட்ட முதல் வேடம், 'பவளக்கொடி' நாடகத்தில் புலந்திரன் வேடம். மாதச் சம்பளம் ரூ. 50/-. அந்தக் காலத்தில் இது பெரும்தொகை. சில வருடங்களில் அந்தக் குழுவை விட்டு விலகி, கே.எஸ்.செல்லப்பா கம்பெனியில் ரூ.75/- சம்பளத்தில் சேர்ந்து நடித்தார். தொடர்ந்து கே.பி.மொய்தீன் நாடகக் குழு, தசாவதாரம் கன்னையா நாடகக் குழு என்று ராஜலஷ்மியின் நாடகப் பயணம் தொடர்ந்தது.

கே.எஸ்.செல்லப்பா, கே.பி.மொய்தீன் சாகிப், தசாவதாரம் புகழ் கண்ணையா போன்ற நாடக ஜாம்பவான்களின் கம்பெனிகளில் ஏராளமான நாடகங்களில் கதாநாயகன், கதாநாயகி இரட்டை வேடம் என பல கதாபாத்திரங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார் ராஜலஷ்மி.

s_%20g%20kittappa.jpgகன்னையா நாயுடுவின் நாடக குழுவில் இருந்தவர்களில் ஒருவர் பிரபல நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா. ராமாயண நாடகத்தில் கிட்டப்பாதான் ராமர். ராஜலஷ்மி சீதை. அதாவது நாடகத்தின் கதாநாயகி. அதன்பின் 'ஸ்பெஷல்' நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய ராஜலஷ்மி, சென்னையில் நடத்தப்பட்ட 'பவளக்கொடி' நாடகத்தில் எம்.கே.தியாகராஜபாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

நாடகக் கலையின் அடுத்த பரிணாமமாக, 20- ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் ஊமைப்படங்கள் திரையிடப்பட்டன. ஊமைப்படத்தில் நடிக்க விருப்பம் கொண்ட ராஜலஷ்மிக்கு, அவரது நாடக பிரபல்யத்தால் அப்படி ஒரு வாய்ப்பும் எளிதாக கிடைத்தது. 1929 ஆம் ஆண்டு கோவலன் அல்லது The Fatal Anklet என்ற பெயரில் எ.நாராயணன் என்பவர் ஒரு ஊமைப் படம் தயாரித்தார். அதில் 18 வயதான ராஜலஷ்மியை கண்ணகியாக நடிக்க வைத்தார். ராஜலஷ்மியின் சினிமா சகாப்தம் துவங்கியது இந்த திரைப்படத்திலிருந்துதான்.

இதனையடுத்து புகழ்பெற்ற இயக்குநர் ராஜா சாண்டோவின் அசோசியேடெட் பிலிம் கம்பெனியில் சேர்ந்தார். சாண்டோ தயாரித்த உஷா சுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய மௌனப்படங்களில் டி.பி.ராஜலஷ்மி நடித்து புகழ்பெறத் துவங்கினார்.

t,p%20alam%20ara%20dir.jpgஊமைப்படங்களின் காலம் முடிந்து, பம்பாயில் பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' வை தயாரித்தவர் அர்தேசிர் இராணி. இவர் பிராந்திய மொழிகளிலும் படம் எடுக்க விரும்பினார். அந்த வரிசையில் இவர் தயாரிக்கவிருந்த தமிழ் படத்தில் பேசி நடிக்க, ஒரு தமிழ் நடிகை தேவைப்பட்டார். நடிகையைத் தேடிய ஆர்தேஷிர் இராணி,  டி.பி.ராஜலஷ்மியை தனது 'காளிதாஸ்' படத்தில் நடிக்க வைத்தார்.

1931ஆம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் பேசும் படமான 'காளிதாஸ்' ராஜலஷ்மி கதாநாயகியாக நடித்து வெளியானது. படத்தின் ஒரு பாடலைக் கொடுத்து பாடச் சொன்னார்கள். தியாகபிரம்மம் வாழ்ந்த திருவையாறு மண்ணில் பிறந்தவர் ஆயிற்றே. பாடி அசத்தினார். நன்றாக இருக்கவே இன்னொரு பாடலைக் கொடுத்து ஆடிக் கொண்டே பாட வேண்டுமென்றார்கள்.

'எனக்கு ஆட வராதே' என்றார் ராஜலஷ்மி. 'உன்னால் முடியும், திறமை இருக்கிறது. முயன்றால் முடியாததா..?' என்று ஊக்கம் அளித்தார் படத்தின் டைரக்டர். 'மன்மத பாணமடா, மாரினில் பாயுதடா' என்ற அந்த பாடல், மதுரை பாஸ்கரதாஸ் சுவாமி எழுதியது. தம் திறமை மீது நம்பிக்கை கொண்ட ராஜலஷ்மி, 'ஆடித்தான் பார்ப்போமே...' என்று தனக்குத் தெரிந்த அளவில் ஆடியிருக்கிறார். அதுவே சிறந்த நடனமாக அமைந்து விட்டது. ராஜலஷ்மியின் முதல் திரையுலக பிரவேசம் இத்தனை சாகஸங்களுடன் நிகழ்ந்தது.

'காளிதாஸ்' படத்தில் இன்னொரு சுவாரஸ்யம் உண்டு. அதில் கதாநாயகி டி.பி. ராஜலஷ்மி தமிழில் பேசுவார்; பாடுவார்; கதாநாயகன் தெலுங்கில் பேசுவார். மற்ற சில நடிகர்கள் இந்தியில் வசனம் பேசுவார்கள். ஆக இப்படி பல மொழிப்படமாக அது அமைந்து விட்டது. எது எப்படியோ அதுவே தமிழின் முதல் பேசும் படம் என்று திரைப்பட வரலாற்றில் பதிவாகிவிட்டது.

" தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ் டி.பி. ராஜலஷ்மி முதல் முதலாக சினிமாவில் தோன்றுவதை, நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும். தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பேசும் படம், சில வாரங்கள் இங்கு செல்லும் என்று எளிதில் கூறலாம்.

t,p%20rajalakshmi%20550%203.jpg

காளிதாஸ் படத்தின் கதை இதுதான். தேஜோவதி நாட்டு விஜயவர்மனின் மகள் வித்யாதரி தன் மனதிற்கு பிடித்த கணவனை நினைத்துப் பாடிக் கொண்டிருந்தாள். தகப்பனும், மந்திரியும் கேட்டு அவளருகே சென்றனர். மந்திரி, தன் குமாரனை விவாகம் செய்துகொள்ளும்படி வேண்டினான். ஆனால் அது மறுக்கப்படவே, மந்திரி வேறு ஒருவனைத் தேடிவரக் கிளம்பினான்.

ஒரு நாள் காட்டில் இடையன் ஒருவன் மர நுனிக் கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவதைக் கண்டு, இவனே அவளுக்குத் தகுந்தவன் என்று எண்ணி அவனை வித்யாதரிக்கு மணம் செய்வித்தான். மறுநாள், தான் மோசம் போனதை அறிந்து தன் புருஷனை அழைத்துக்கொண்டு காளி கோயிலுக்குச் சென்று வித்யாதரி துதித்தாள். காளி பிரசன்னமாகி அவர்களை ஆசீர்வதித்து, அவனுக்குக் காளிதாஸன் எனப் பெயரையும் அளித்தாள்.

நாடக மேடையில் இவரது பாட்டுகளில் சிறந்ததாகிய தியாகராய கிருதிகளான ""எந்தரா நீதனா'', ""சுரராகசுதா'' என்ற இரு பாட்டுகளையும் ஹரிகாம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் கேட்கலாம். பாடல்களில் வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸி பாயும், மிஸ்டர் ஆர்டியும் செய்த குறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத்தகுந்தது“ என்று காளிதாஸ் படத்திற்கு 'சுதேசமித்திரன்' பத்திரிகை விமர்சனம் எழுதியது.

t,p%20kalidass%20ad.jpg'காளிதாஸ்' படம் மற்றொரு விதத்திலும் முக்கியத்துவம் பெற்றது. படத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பாடல்கள் இடம்பெற்றன. "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை" என்பதாக அப்பாடல் வரிகள் இருந்தது. இன்னொரு தேசியப் பாடல் 'ராட்டினமாம் காந்தி கை பாணமாம்' என்பது. காளிதாஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பத்திரிக்கையாளர்கள் டி.பி. ராஜலக்ஷ்மி வசனம் பேசி, பாடி, ஆடி நடிக்கும் சிறந்த திரைப்படம் என்று புகழ்ந்து எழுதினார்கள்.

இயல்பாகவே கலைத்துறை மட்டுமன்றி தேச உணர்வும் ராஜலட்சுமியிடம் மேலோங்கி நின்றது. அக்காலத்தில் தேசிய பாடல்களை தேசபக்தியுணர்வுடன் ராஜலட்சுமி நாடக மேடைகளில் பாடுவது வழக்கம். தேசபக்தி பாடல்களை நாடக மேடைகளில் பாடியதற்காக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்ற அனுபவமும் அவருக்கு உண்டு.

1933-இல் 'வள்ளித் திருமணம்' என்ற பெயரில் பம்பாயில் ஒன்றும் கல்கத்தாவில் ஒன்றுமாக இரண்டு சினிமாப் படங்கள் தயாரிக்கப்பட்டன. கல்கத்தா படத்தில் சி.எம்.துரை என்பவர் முருகன், டி.பி.ராஜலக்ஷ்மி வள்ளி. அந்தப் படத்தில் தினைப்புனம் காக்கும் காட்சியில் ராஜலக்ஷ்மி பாடிய 'வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா, விரட்டி அடித்தாலும் வாரீகளா" என்ற பாடல் வரிகள் வெள்ளையர் ஆட்சியை கண்டித்து எழுதப்பட்ட பாடல். அது வள்ளித்திருமணம் படத்தில் நாசூக்காக பாடப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. கோவை சாமிகண்ணுவின் சென்ட் தயாரித்தப் படம் வள்ளித்திருமணம். இப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டது. அதிக வசூலான முதல் தமிழ் படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு. 

'வள்ளித் திருமணம்' படம் திரைப்படம் வெளியாகிய சூட்டுடன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார் ராஜலட்சுமி. ஆம் அந்த படத்தில் நாரதராக நடித்திருந்த டி.வி.சுந்தரம் எம்பாருடன் காதல் வயப்பட்ட அவர் இந்தப் பட வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர், அவரை திருமணம் செய்து கொண்டார். 1933- தம் சொந்தப்படமான சத்தியவான் சாவித்திரியை வெளியிட்டார். படம் 3 வாரத்துக்கு மேல் ஓடியது.

t,p%20rajalakshmi%20right%2034.jpgமதுரை ராயல் டாக்கீஸ்காரர்கள் தயாரித்த கோவலன் படத்தில் வி.ஏ.செல்லப்பா கோவலனாகவும் டி.பி.ராஜலஷ்மி-கண்ணகியாகவும் நடித்தனர். 1935ல் 'குலேபகாவலி' எனும் திரைப்படம் வெளிவந்தது. அப்படத்தில் செல்லப்பாவும், ராஜலஷ்மியும் நடித்தனர். அதே ஆண்டில் 'லலிதாங்கி', 'அரிச்சந்திரா' ஆகிய இவர் நடித்த படங்கள் வெளிவந்தன. ரசிகர்கள் அவரை 'சினிமா ராணி' என்று கொண்டாடினார்கள். முதன் முதலாக தமிழ் நாட்டில் ஒரு சினிமாக்கலைஞருக்கு என ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது டி.பி.ராஜலஷ்மிக்குத்தான் என்பது ஆச்சர்யமான தகவல்.

1936- ல் இவர் சொந்தமாக எடுத்த 'மிஸ் கமலா' எனும் படத்திற்கு கதை, வசனம், பாடல்களை எழுதியதோடு இயக்கவும் செய்தார். கதாநாயகி கமலாவும் அவர்தான். மிஸ் கமலா படத்தில், குறிப்பிடத்தக்க விஷயம், பிரபல நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர வித்வானாக இதில் நடித்ததுதான். இந்தப் படம் தான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த முதல் தமிழ்ப் படம். இந்த படத்திற்கு பின்புதான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 'காளமேகம்' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் 1940ல் வெளிவந்தது.
தம் திரையுலக அனுபவம் குறித்து 1956- ம் ஆண்டு பிரபல சினிமா பத்திரிகை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார் ராஜலட்சமி.

“1931ஆம் வருஷத்தில் பேசும் படங்களைப் பரீட்சார்த்தமாகத் தயாரிக்க வேண்டுமென்று பம்பாய் இம்பீரியல் கம்பெனியார் முயற்சி செய்து, அதற்கு தமிழ் நடிகை தேவையென்று தேடியபோது, அந்தச் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் நான் என்ன செய்தேன் தெரியுமா? இரண்டு கீர்த்தனைகளையும், இரண்டு தேசிய கீதங்களையும் பாடினேன். குறத்தி டான்ஸ் ஒன்று ஆடினேன். அந்தப் பரீட்சையில் அவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதோடு நானும் வெற்றி பெற்றேன் என்பதையும் குறிப்பிட வேண்டும். அன்றிலிருந்து நான் ஒரு பேசும் சினிமா நடிகையாகிவிட்டேன். இப்படி ஆரம்பமான என் நட்சத்திர வாழ்க்கைத் தொடர்ந்து ஓய்வில்லாமல் செல்ல ஆரம்பித்தது.

t,p%20rajalakshmi%20leftt%201.jpg'வள்ளித் திருமணம்' எனக்கு நல்ல பெயரைச் சம்பாதித்து கொடுக்கவே கல்கத்தாவில் முகாம் போட்டு தொடர்ந்து பத்து படங்களில் நடித்தேன். அனுபவம் எனக்கு அருமையான ஆசானாக அமைந்தது. ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்டால் கூட அவ்வளவு அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்காது. அந்தச் சமயத்தில் நான் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் 'மிஸ் கமலா'. அதன் கதை வசனம் பாடல்கள் டைரக்‌ஷன் அனைத்தையுமே நான் கவனித்துக் கொண்டேன். தொடர்ந்து 'மதுரை வீரன்', 'இந்தியத் தாய்' ஆகிய படங்களையும் தயாரித்தேன். .

1954 ல் பத்திரிக்கை ஒன்றிற்கு டி.பி.ராஜலஷ்மி அளித்த ஒரு பேட்டியில், அந்தக் காலத்தில் 80 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடலாம். தயாரிக்கும் காலம் 45 நாட்கள் போதும் என்று சொல்லியிருக்கிறார்.

ரூ.10 ஆயிரத்தில் பத்து நடிகர்கள், 2 ஆர்கெஸ்ட்ரா, ஒரு டைரக்டர் தவிர தானும் நடித்திருப்பதாகச் சொல்லும் அவர்,  தங்களுக்கான மேக்கப் தாங்களே போட்டுக்கொண்டதாகவும், நடிகர்கள் சாப்பாட்டுச் செலவுக்காக 12 அணாவும் (75 பைசா) இடைவெளியில் ஒரு டீ மட்டும் கொடுப்பார்களாம். இது ஹீரோவானாலும் சரி, சிப்பாய் வேடமிடுபவரானாலும் சரி இவ்வளவுதான் என்றும் தெரிவித்துள்ளார். இன்று இவைகளை ஒப்பிட்டால் வியப்புதான் ஏற்படும்.

சினிமா பிரபல்யம், பணம் என சேர்ந்தாலும் ராஜலஷ்மி தன் சுயமரியாயை விட்டுக்கொடுத்து அதை தக்கவைக்க விரும்பாதவர். தனக்கென்று சில வரைமுறைகளை அவர் ஆரம்பத்திலேயே வகுத்துக்கொண்டார்.

'நந்தகுமார்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதில் கிருஷ்ணனின் தாய் யசோதா வேடம் தரப் பட்டது. யசோதைக்கு புராண காலத்தையொட்டி ஒரு கச்சை கட்டிக்கொண்டால் போதும். ரவிக்கை தேவையில்லை என்று அப்படத்தின் இயக்குனர் ஏ.வி.எம்.செட்டியார் கூறினார். இப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்த நடிகை இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் தமிழ் பதி்ப்பில் ராஜலஷ்மி ரவிக்கைக்குப் பதில் கச்சை அணிய மறுத்துவிட்டார். புராணக் கதையில் கச்சை அணிவதுதான் பொருத்தம்.

ரவிக்கை அணிந்தால் செயற்கையாக இருக்கும் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். தன் முடிவில் மிகவும் உறுதியாக நின்ற ராஜலஷ்மி, தன்னை கட்டாயப்படுத்தினால், படத்தில் தான் நடிக்கத் தயாரில்லை என்று உறுதிபட சொல்லிவிட்டார். முடிவில் 'நந்தகுமார்' திரைப்படத்தில் தமிழ் யசோதா ரவிக்கை அணிந்துதான் தோன்றினார்.

t,p%20rajalakshmi%20550%202%281%29.jpg

ஏற்கனவே 'மிஸ் கமலா' படத்திற்கு கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என்று எல்லா துறைகளிலும் கிடைத்த அனுபவத்தின் பயனாக 1939- ல் 'மதுரை வீரன்' படத்தையும் அவர் உருவாக்கினார். இந்தப் படத்தில் அவரே பாடல்களையும் எழுதினார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் அப்படத்தில் வி.ஏ.செல்லப்பா வுடன் இணைந்து பாடிய 'ஆசை வச்சேன் உந்தன்மேலே' என்ற பாடலும் 'கூடினோமே கூடினோமே கூட்டு வண்டிக்காளைபோல' என்ற பாடலும் அக்காலத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது.  குறிப்பாக கிராமபோன் இசைத்தட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மதுரை, காரைக்குடி ஆகிய இரண்டு நகரங்களிலும் எங்கு திரும்பினாலும் ஒலித்துக்கொண்டு இருந்ததாக அக்கால ரசிகர்கள் கூறுவார்கள்.

1936- ம் ஆண்டு ராஜலஷ்மி இலங்கையில் நாடகம் நடத்தினார். இவரது நாடகத்தை கண்டுகளித்த இலங்கை ரசிகர்கள் 'இலங்கை திலகம்' என்ற பட்டத்தை இவருக்கு அளித்து சிறப்பித்தனர்.

1940 களில் தமிழ் சினிமா  உலகம் புதிய நடிகர் நடிகைகளை உருவாக்கிக் கொண்டு தொழில்நுட்ப விஷயங்களிலும் முன்னேறிக்கொண்டு இருந்தது. காலம் செல்ல செல்ல பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் இயற்கை விதிப்படி பழைய நடிகை நடிகர்கள் ஓய்வுபெறவும், புதியவர்கள் அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து கொள்வதுமான நிலைக்கு தமிழக திரையுலகம் புதுவடிவம் பெற்று மாறியிருந்தது. விட்டுக்கொடுத்து சமரசம் செய்துக்கொள்ளும் மனப்பான்மை அறவே இல்லாத டி.பி.ராஜலஷ்மி அவர்களுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

t,p%20rajalakshmi%20leftt%202.jpgராஜலஷ்மி சொந்த வாழ்க்கையிலும் மாசுமருவற்று வாழ்ந்தவர். பழமையில் நம்பிக்கை உள்ளவர். எனவே இவரது பட வாய்ப்புகள் காலப்போக்கில் குறைய ஆரம்பித்தன.

புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த ராஜலஷ்மியிடம் தைரியமும், குறிக்கோளும் இருந்தன. அந்த நாட்களிலேயே இவர் குழந்தைத் திருமணத்தையும்ம், சிசுக் கொலையையும் எதிர்த்துப் போராடியுள்ளார். பெண் சிசுக்கொலையை சும்மா பேச்சால் எதிர்த்ததோடல்லாமல், அப்படி கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தானே தத்து எடுத்து மல்லிகா என பெயர் சூட்டி வளர்த்து, அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைத்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தரம், ராஜலஷ்மி தம்பதியினருக்கு 1936ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் டி.எஸ்.கமலா. தனது மகள் கமலா பெயரில்தான் 'மிஸ் கமலா' என்று தான் தயாரித்த தமிழ் படத்திற்கு பெயர் வைத்தார்.
படம் நன்றாக தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல்தான் ஆகவில்லை. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் தயாரிப்பாளர் ராஜலஷ்மி. விளைவு அவரது குடும்பம் கடனில் தத்தளித்தது.

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'குலேபகாவலி' என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். இவர் சொந்தமாக ஒரு சினிமா கம்பெனியும் சென்னையில் நடத்தி வந்தார். அதன் பெயர் 'ராஜம் டாக்கிஸ்' சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ராஜரத்தினம் தெருவில் இவர் வசித்தார். இப்பகுதியில் இவருக்கு 10 க்கும் மேற்பட்ட வீடுகள் சொந்தமாக இருந்தன. அந்த தெருவில் முதல் எண் உள்ள தனது வீட்டிற்கு 'ராஜ்மஹால்' என்று பெயரிட்டிருந்தார்.

1935ஆம் ஆண்டு பர்மாவில் இவர் நாடகம் நடத்தினார். பர்மாவின் ரங்கூன் நகரில் இவரது நாடகம் மூன்று மாதத்திற்கு மேல் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தது. அங்கு இவர் நடித்த நாடகங்களை தொடர்ந்து பார்த்து வந்த பர்மிய மீனவரசிகர் ஒருவர் ராஜலஷ்மியின் நாடக நடிப்பை மெச்சி" வலம்புரி சங்கு" ஒன்றை இவருக்கு பரிசாக அளித்தார். டி.பி.ராஜலஷ்மி என்ற எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட அந்த வலம்புரி சங்கு தான் ராஜலஷ்மி தன் குடும்பத்திற்கு விட்டுச் சென்ற ஒரே சொத்து. அதை அவரது மகள் கமலா சென்னை திருமங்கலத்திலுள்ள தனது வீட்டின் பூஜை அறையில் வைத்து போற்றி பாதுகாத்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் ராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த 'சாகர்மூவிடோன்" தயாரித்த குறத்தி பாட்டும் நடனமும் என்ற துண்டுப்படத்தில் ராஜலட்சுமி நடித்தார். இப்படம் நான்கு ரீல்கள் கொன்டது. இந்தப் படம் 1931ல் வெளி வந்தது. படத்தில் ராஜலட்சுமியின் வசன உச்சரிப்பு மிகத் தெளிவாக இருந்தது. பின்னணி இசையே இல்லாமல் தாள லயத்துடன் பாட்டு பாடும் திறன் இவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. இத்தகைய திறமைகளை நிறைவாக பெற்றிருந்த ராஜலட்சுமி சிறந்த நடிகையாக மிளர முடிந்தது.

t,p%20rajalakshmi%20right%2023.jpgடி.பி. ராஜலஷ்மியின் நாடகங்கள் நாட்டின் பல இடங்களிலும் அரங்கேறி புகழடைந்தன. யாழ்ப்பாணத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தி அந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார். கோவலன் - மாதவி காட்சி நடந்து கொண்டிருந்தது. நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த காந்திஜி ஒரு பொம்மைப் புலியை டி.பி. ராஜலஷ்மி கையில் கொடுத்து "இந்த வெற்றிப் புலியை வைத்துக் கொள்'' என்று சொல்லிக்கொடுத்தார். டி.பி. ராஜலஷ்மிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தான் அணிந்திருந்த கை வளையல்களைக் கழற்றி கஸ்தூரிபாய் நிதிக்கென்று உடனேயே கொடுத்து விட்டார். இந்த சம்பவத்தை அவரது வளர்ப்பு பெண் மல்லிகா, தம் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவுலகில் 1931 ஆண்டு முதல் 1950 ஆண்டு வரை முன்னணி நடிகையாகவே வலம் வந்த டி.பி.ராஜலஷ்மியின் பல படங்கள் பல மாதங்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தன. 1950- ம் ஆண்டு ஜோசப் தளியத் இயக்கிய 'இதயகீதம்' என்ற படம்தான் டி.பி.ராஜலட்சுமி நடித்த கடைசி படம். 'இந்தியத்தாய்' என்ற பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கி தயாரித்தார். அது தோல்வியைக் கண்டது. அதற்கு நிறைய பணம் செலவு செய்திருந்தார்.

அந்தப்படத்தினால் ஏற்பட்ட கடன் சுமை ராஜலஷ்மியை அழுத்தியது. மன உளைச்சலுக்குள்ளானார். கட்டுப்பெட்டியான ஆச்சாரமான குடும்பத்தில் பெண்ணாக  பிறந்து வாழ்வின் உச்சத்தைப் பார்த்துவிட்ட ராஜலஷ்மியின் உடல்நலம் கெட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளானார். அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் படுத்த படுக்கையானார்.

வறுமையினால் தன் அனைத்து சொத்துக்களையும் விற்க நேர்ந்தாலும் டி.பி.ராஜலஷ்மி ஒரே ஒரு வீட்டை மட்டும் வைத்துக்கொண்டிருந்தார். அந்த வீட்டை தன் மகள் கமலாவிற்கே கொடுத்துவிட்டார். வறுமையின் காரணமாக அந்த வீட்டையும் விற்க நேர்ந்தது. மனம் உடைந்துபோன ராஜலஷ்மி நினைவிழந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் இருந்த ஒரு வாடகை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த வீட்டிலேயே 1964ல் அவர் மரணம் அடைந்தார். அவரது நினைவுகளை தமிழ் சினிமா தன் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பதித்துக் கொண்டு பெருமைப்படுகிறது. இவருக்கு தமிழக அரசால் 'கலைமாமணி' விருது கொடுக்கப்பட்டது.

ராஜலஷ்மி நடித்த படங்கள்.

1. காளிதாஸ்
2. ராமாயணம்
3. வள்ளித்திருமணம்
4. சத்தியவான் சாவித்திரி
5. திரௌபதி வஸ்திராப ஹரணம்
6. கோவலன்
7. பக்தகுசேலா
8. குலேபகாவலி
9. பூர்ணசந்திரா
10. சம்பூர்ண அரிச்சந்திரா
11. பாமா பரிணயம்
12. மிஸ்கமலா
13. வீர அபிமன்யு
14. சீமந்தனி
15. கௌசல்யா பரிணயம்
16. நந்தகுமார்
17. அநாதைப் பெண்
18. சுகுண சரஸா
19. தமிழ் தியாகி
20. மதுரைவீரன்
21. குமார குலோத்துங்கன்
22. பக்த குமணன் (அல்லது) ராஜயோகி
23. மாத்ருதர்மம்
24. உத்தமி
25. பரஞ்சோதி
26. ஜீவஜோதி
27. இதயகீதம்

ராஜலஷ்மி ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பது பலருக்கு தெரியாத செய்தியாக இருந்திருக்கலாம். கமலவேணி,  விமலா என்ற இரு நாவல்களை ராஜலஷ்மி எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய தமிழ் நாவல் தான் 'மிஸ் கமலா' என்ற பெயரில் படமாக்கப்பட்டு தமிழ் ரசிகர்களுக்கு விருந்தானது.

t,p%20rajalakshmi%20550%201.jpg

இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா 1931ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இதையொட்டி 'இந்திய பேசும் படத்தின் வெள்ளி விழா' 1957- ம் ஆண்டு சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கத்தினரால் சென்னை வி.பி.ஹாலில் சிறப்பாக நடத்தப்பட்டது.

நகைச்சுவை மேதை என்.எஸ்.கிருஷ்ணனின் தலைமையில் நடந்த இந்த விழாவில், முதல் தமிழ் பேசும்படமான 'காளிதாஸின் கதாநாயகியான டி.பி.ராஜலஷ்மியையும் அதை இயக்கிய எச்.எம். ரெட்டியையும் தென்னிந்தியாவின் முதல் ஹிந்திப் படத்தை டைரக்ட் செய்து தயாரித்த கே. சுப்ரமண்யத்தையும் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வர்ணப் படத்தைத் தயாரித்தவர் என்பதற்காக டி.ஆர். சுந்தரத்தையும் விழாவில் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
,
பெண்களை பொதுவெளியில் உலவவிடாத கட்டுப்பெட்டியான ஒரு காலகட்டத்தில், ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து பெண்ணுக்குரிய தடைகளையெல்லாம் புறந்தள்ளி திரையுலகில் சாதனைப்பெண்மணியாக திகழ்ந்த டி.பி ராஜலஷ்மியின் புகழ் திரையுலகம் உள்ளவரை நிலைத்து நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

http://www.vikatan.com/news/article.php?aid=49680

 

Link to comment
Share on other sites

ராஜா சாண்டோ ( தமிழ் சினிமா முன்னோடிகள் - 2 )

 

 

tamil%20cinima%20celeberities%20550%20lo

பி.கே.ராஜா சாண்டோ- வட இந்தியாவில் கோலோச்சிய முதல் தமிழக கலைஞர்

க்காலத்தில் திரைப்பட தயாரிப்புகளுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ்பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும்  சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை "சாலா மதராஸி" என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு.

sando%20leftt%20250.jpgமும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை தமிழக கலைஞர் ஒருவர், மும்பைவாசி ஒருவரால் இப்படி அவமானப் பட்டதை நேரில் கண்டார் ஒரு மனிதர். குஸ்திக்கலைஞரும் விளையாட்டு வீரருமான அந்த மனிதர்,  கிண்டல் செய்த அந்த மும்பைவாசிக்கு தன் பாணியில் பதில்கொடுத்துவிட்டு, உக்கிரமான குரலில்,  “ பம்பாய் ஸ்டியோகாரர்கள் இனி 'சாலா மதராஸி' என்று தமிழன் எவனையும் பார்த்து விளிக்கக் கூடாது” என்றார். அன்றோடு சென்னைவாசிகளை கேலி செய்வது நின்றுபோனது. அதன்பின் தமிழக  கலைஞர்களுக்கு பம்பாயில் உரிய மரியாதை கிடைத்தது.

தமிழருக்கு நேர்ந்த அவமானத்தை போக்கி மரியாதை கிடைக்கச் செய்த அந்த மனிதர் வேறு யாருமல்ல.....ராஜா சாண்டோ.


சிறந்த டைரக்டர், திறமையான நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் விளங்கி,  வட இந்தியாவில் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுப் பெற்ற முதல் தமிழர். ஊமைப்படங்களிலும்,  பேசும் படங்களிலும் சிறப்பாக நடித்து புகழ்பெற்றவர்.

சிறந்த விளையாட்டு வீரராகவும், குஸ்தி சாம்பியனாகவும் விளங்கிய ராஜா சாண்டோ, 1895 ம் வருடம் பொள்ளாச்சியில் பிறந்தார். இவரது நிஜப்பெயர் நாகலிங்கம். டைரக்டராகவும், சிறந்த வசனகர்த்தாவாகவும் பன்முக ஆற்றலுடன் விளங்கிய ராஜா சாண்டோ, 1915 -ல் தம் இருபது வயதில் சென்னை வந்தார். தேகப் பயிற்சி காட்சிகளை வட சென்னையில் சில காலம் நடத்தினார். சென்னை ஒற்றை வாடை  தியேட்டரில் தனது அற்புதமான தேகப்பயிற்சி காட்சிகளை நடத்தி, மிக பிரபலமாக விளங்கினார்.

சென்னை மட்டுமின்றி நாகப்பட்டணம், தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் அவரது காட்சிகள் நடந்தன.

sando%20ad%202%20550%202.jpg

ஒருமுறை கொல்லங்கோடு அரண்மனைக்குச் சென்ற சாண்டோ,  அங்கு விஜயம் செய்திருந்த பரோடா மன்னருக்கு தேகப் பயிற்சி காட்சிகளை நடத்திக் காட்டினார். சிறிய வயதில் அவரது திறமையை பாராட்டிய மன்னர், ஆயிரம் ரூபாய் சன்மானமாக கொடுத்து சாண்டோவை கவுரவித்தார். 1000 ரூபாய் என்பது அக்காலத்தில் பல லட்சங்களுக்கு சமம். பின்னர் மங்களூரில் சில காலம் தேகப்பயிற்சிகளை நடத்தினார்.

தம் இருபதாவது வயதில் பம்பாய் வந்த சாண்டோ, பிரபலமான நேஷனல் பிலிம் கம்பெனியில் சேர்ந்தார். இந்த நிறுவனம் 'பக்தபோதனா" என்ற மௌனப்படத்தை தயாரித்தது. இதில் ரூ.101 சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தார். இதுதான் ராஜா சாண்டோ நடித்த முதல் திரைப்படம்.

sando%20dir%20santhlal.jpg"வீர பீம்சிங்" படத்தில் இவரே வீரன் பீம்சிங்காக நடித்தார். பிறகு கோஹினூர் பிலிம் ஸில் சேர்ந்து அதன் தயாரிப்புகளிலும் கதாநாயகனாக நடித்தார். பம்பாய் லட்சுமி பிலிம்சுக்காக இவர் பல படங்களைத் தயாரித்தார். ''தேவதாசி", "பஞ்ச தண்டா", "மீரா" ஆகிய  படங்களில், அந்நாளில் புகழ்பெற்ற நடிகைகளான சுபைதா, புட்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

'சதி மாதுரி", "இடையர் மன்னன்", "ஞான சவுந்தரி", "டைபிஸ்ட் பெண்", "மும்தாஜ் மகால்", "படித்த மனைவி", "மனோரமா" ஆகிய கோஹினூர் பிலிம் கம்பெனியின் படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தன. சந்த்லால்ஷாவின் டைரக்‌ஷனில் இவர் ''விசுவமோகினி", "கிருகலட்சுமி", "சந்திரமுகி", "ராஜ லட்சுமி" ஆகிய படங்களில் கோஹர் என்ற புகழ்மிக்க நடிகையோடு நடித்தார். ரஞ்சித் பிலிம் கம்பெனியார் தயாரித்த பல படங்களில் கதாநாயகனாக ராஜா சாண்டோ நடித்தார். அவற்றில் "பாரிஸ்டரின் மனைவி"  பெரிதும் பேசப்பட்டது.

"பேயும் பெண்ணும்", "அனாதைப் பெண்", 'கருந்திருடன்", "ராஜேசுவரி", ஆகிய படங்களை இயக்கிய சாண்டோ, அப்படங்களில் நடிக்கவும் செய்தார். இவை சென்னை அசோஸியேடட் பிக்சர்ஸார் தயாரித்த ஊமைப் படங்களாகும். "மேனகா" "விஷ்ணு லீலா" "சந்திரகாந்தா", "திருநீலகண்டர்" முதலிய தமிழ்ப் பேசும் படங்களையும் டைரக்ட் செய்தார்.

ஊமைப்பட காலம் எனப்பட்ட அந்நாளில், சலனப்படங்களின் டைட்டில் கார்டில், படத்தை தயாரித்த கம்பெனியின் பெயரும், அதை இயக்கிய டைரக்டர் பெயரும்தான் காட்டப்பட்டு வந்தன.

sando%20ad%201.jpg

ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகிற நடிக, நடிகைகள் இப்படி புறக்கணிக்கப்படுவது ராஜாசாண்டாவுக்கு எரிச்சலை தந்தது. தன் ஒரு படத்தில்,  அதன் தயாரிப்பாளரான பம்பாய் முதலாளியோடு இதுகுறித்து வாதித்து போராடி, அந்த படத்தின் டைட்டில் கார்டில் நடிக, நடிகைகளை பெயர்களை இடம்பெறச் செய்தார். அதைத்தொடர்ந்து இந்திய மொழிப்படங்களில் நடிக, நடிகையர் பெயர் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தன. இப்படி தன் சக கலைஞர்களின் மீது அளவற்ற அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார் சாண்டோ.

பம்பாய், ரஞ்சித் பிலிம் கம்பெனியில் சேர்ந்து திரையுலகில் தீவிரமாக இயங்கிவந்த சாண்டோ, அங்கு திரையுலகின் நுணுக்கங்களை நன்கு அறிந்துகொண்டார். தன் திறமையையும் ,அனுபவங்களையும் கொண்டு,  ஆரம்ப நிலையிலிருந்த தமிழ்ப் பேசும் படத்துறையை வளர்த்தெடுக்க ராஜா சாண்டோ விரும்பினார். 1931-ம் ஆண்டு வெளிவந்த முதல் தென்னக சினிமாவான 'காளிதாஸ்", முழுமையான ஒரு தமிழ் படமாய் அமையவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் உறுத்திக்கொண்டிருந்ததே அதற்கு காரணம்.

பரிசோதனை ரீதியில் எடுக்கப்பட்ட ஒரு பன்மொழித் தொகுப்பாக அப்படம் உருவாகியிருந்தது. சென்னை வந்த ராஜா சாண்டோ, தமிழில் சில படங்களை டைரக்ட் செய்தார்.

நாற்பதுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் "சவுக்கடி சந்திரகாந்தா". அதில் பண்டார சந்நதியாக நடித்தவர் காளி என்.ரத்தினம். பண்டார சந்நதிக்கு பல ஆசை நாயகிகள் இருந்தனர். அதில் ஒருத்தி ஆங்கில அழகி. அவளுக்கு தமிழ் தெரியாது. காளி என்.ரத்னத்திற்கோ ஆங்கிலம் தெரியாது. அவள் தமிழ்ப் பேச்சு புரியாமல் "ஓ காட்" என்று தலையில் அடித்துக் கொள்கிறாள். காளி என். ரத்னம், ஆள் பேசுவது புரியாமல் 'பாவம், தலைவலி போலிருக்கிறது' என்று நினைத்து "அமிர்தாஞ்சனம் வேண்டுமா",  நெற்றியில் தேய்த்துவிடவா?" என்கிறார். அர்த்தம் புரியாமல் பேசும் அவரைப் பார்த்து,  அவள் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். இது அன்றைய காட்சி.

படமாக்கும் போது அந்த நடிகைக்கு சிரிக்கவே வரவில்லை. டைரக்டர் ராஜா சாண்டோ எவ்வளவு விளக்கியும் பயன் ஏற்படவில்லை. அவர் திடீரென்று ஏதோ நினைத்தவராய், "ரெடி, ஸ்டார்ட்" என்றவர், காமிராவுக்குப் பின்னால் நின்றபடி தன் கால் செருப்புகளை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு "தை தை" என்று கூத்தாடினார். இதைப் பார்த்த அந்த ஆங்கில அழகி கை கொட்டிச் சிரித்தாள். அந்தக் காட்சி சிறப்பாகப் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தில் குண்டூர் இளவரசராக நடித்தவர் பி.யு.சின்னப்பா.

"இப்படித்தான் என் குருநாதர் டைரக்டர் ராஜா சாண்டோ அவர்கள் நடிக்கத் தெரியாதவர்களையும் தனது சமயோசித யுக்தியால் சிறப்பாக நடிக்க வைத்து விடுவார். அவர் ஒரு பிறவி மேதை" என்று புகழ்ந்து பேசினார் நடிகர் பி.யு.சின்னப்பா. டைரக்டர் ராஜா சாண்டோ படமாக்கும் பாங்கும், நடிக, நடிகைகளிடம் பழகும் பண்பும் எல்லோராலும் பாராட்டப்பட்ட காலம் அது.  இருவருமே குஸ்தி, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களில் தீரர்கள். திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள்.

sando%20550%204.jpg

பின்னர்,  துவாரகாதாஸ் நாராயணதாஸின் கோஹினூர் பிலிம் கம்பெனியில் ஒப்பந்தம் செய்துகொண்டு,  கம்பெனி படங்களில் நடித்தார். சில காலம் சென்ற பின் "மெஜஸ்டிக் பிலிம்" கம்பெனியாரின் படமான "ரஷியாபேகம்" என்ற மௌனப் படத்தில் நடித்தார். 'எக்பால்' என்ற கதாநாயகியுடன் "இரவு லீலைகள்" (Midnight Romance) என்ற படத்தில் கதாநாயகனாக ராஜா சாண்டோ நடித்தார்.

படப்படிப்பு தளங்களில் ராஜா சாண்டோ ஒரு கறாரான மனிதர். தான் விரும்பியபடி காட்சி சிறப்பாக வரும் வரையிலும் நடிகர்களை உண்டு இல்லையென்று செய்துவிடுவார். அந்த சமயங்களில் அவர்கள் ராஜா மீது கடும் எரிச்சல் அடைவார்கள். ஆனால் காட்சி திரையில் வரும்போது அவர்கள் ராஜா சாண்டோவின் திறமையை எண்ணி வியப்பிலாழ்ந்துவிடுவர்.

sando%20puc%20200.jpgஇந்த காரணங்களால் பி.யு சின்னப்பா மட்டுமின்றி மக்கள் திலகம் எம்.ஜி. ஆரும் அவரை தன் குரு என போற்றினார். என் திரைப்படங்கள் ராஜா சாண்டோ பாணியை பின்பற்றியது என ஒருமுறை குறிப்பிட்டார் எம்.ஜி. ஆர்.

சாண்டோ அவருக்கு மிகவும் பிடித்தமான டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர். சாண்டோவை அவரது ஒவ்வொரு கோணத்திலும் ரசித்து சிலாகித்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழ்சினிமாவிற்கு பெரும்பங்களிப்பு செய்த சாண்டோவிற்கு,  நாடகங்கள் பிடிக்காது என்பது ஆச்சர்யமான தகவல். புராதன, இதிகாச கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அரதப்பழசான விஷயங்களை முன்னிறுத்துவதாக கருதிய அவர்,  திரும்ப திரும்ப அத்தகைய தகவல்களை காட்சிகளாக்குவதை வெறுத்தார். சமூக படங்களின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், புராண நாடகங்களின் மீது எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒருமுறை பிரபல நாடக கலைஞர் எஸ். ஜி. கிட்டப்பா இவரை சந்திக்க அனுமதி கேட்டு,  நாடக நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சந்திக்க மறுத்தார் என்ற தகவல் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு நாடகங்களின் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

sando%20ad%202%20550%203.jpg

இந்திய திரையுலகிற்கு ராஜா சாண்டோ பங்களிப்பு செய்த மேலும் பல படங்கள்...

(மௌனப் படங்கள்)

1. பக்த போதனா
2. வீர பீம்சேனன்
3. விஷ்வ மோகினி
4.கிருஹலஷ்மி
5. ரஷிய கேர்ள்ஸ்
6. அபிசீனிய அடிமை
7. கிருஷ்ணகுமாரி
8. சாம்ராட் சிலதித்யா
9. மைனாகுமாரி
10. படித்த மனைவி
11. குணசுந்தரி
12. வீரகுணாளன்
13. தேவதாசி
14.காலாசோர்
15. நீரா
16. நாகபத்மினி
17.வீர பத்மினி
18.இரவு காதல்
19.பேயும் பெண்ணும் (1930)
20. நந்தனார்
21.ஹிந்துஸ்தானின் பெருமை
22.ராஜேஸ்வரி
23.அனாதைப்பெண்
24.உஷாசுந்தரி
25.பக்தவத்சலா 1931 (தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம்)

sando%20right%20ad%201.jpgஇந்தி மொழியில் பங்கேற்ற பேசும் படங்கள்..

1.இந்திரா
2. காலேஜ் கேர்ள்
3. பாரிஸ்டர் வைஃப்
4. மத்லபி துனியா
5. தேவகி

ராஜா டைரக்ட் செய்த தமிழ் படங்கள்

1. பாரிஜாத புஷ்பஹாரம் (1932,இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார்)
2.  மேனகா (1935)
3. வசந்த சேனா (1936, இப்படத்திற்கு வசனம் எழுதி நடித்தும் உள்ளார்)
4. மைனர் ராஜாமணி (1937)
5. சந்திரகாந்தா (1936)
6. விஷ்ணுலீலா (1938)
7. நந்தகுமார் (1938, இதில் நடித்துள்ளார்)
8. திருநீலகண்டர் (1939)
9. ஆராய்ச்சி மணி (1942)

இதுமட்டுமின்றி இந்திய திரையுலகிற்கு ராஜா சாண்டோ  பங்களிப்பு செய்த படங்கள் என 1994 ல் வெளியான சினிமா பற்றிய என்சைக்ளோபிடீயா, ராஜாவின் படங்களின் எண்ணிக்கையை 56 எனக் குறிப்பிட்டுள்ளது. அதன் விபரங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மேனகா படத்திற்கு சில சிறப்புகள் உண்டு. நகைச்சுவை மேதை கலைவாணர் இதில்தான் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். கே.ஆர் இராமசாமி இதில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்த இந்த படத்தின் கதை  சுவாரஸ்யமானது.

மேனகா படத்தின் கதை இதுதான். டெபுடி கலெக்டர் சாம்பசிவ ஐயங்காரின் மகள் மேனகா. வக்கீல் வராகசாமியை மணந்த மேனகா, புகுந்த வீட்டில் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். வராகசாமியின் சகோதரிகள் மேனகாவைக் கொடுமைப் படுத்தியதுடன், வராகசாமிக்கு மறுமணம் செய்விக்கும்  நோக்கத்தில், மேனகாவை நைனா முகமது என்பவனுக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு சாமா என்பவன் உதவி செய்கிறான்.

வஞ்சிக்கப்பட்ட மேனகாவை நைனா முகமது பலாத்காரம் செய்ய முயலும்போது, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். அப்போது நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹானால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.

இதற்கிடையில் மேனகா, ஒரு நடிகனுடன் ஓடிப் போய் விட்டதாக, வராகசாமியின் சகோதரிகளும், சாமாவும் கதை கட்டி விட, அதை வராகசாமியும் நம்பி விடுகிறான்.

ஒருதடவை நூர்ஜஹானுடன் மேனகா காரில் சென்று கொண்டிருக்கும்போது, வராகசாமி பார்த்து விடுகிறான். தன்னை ஏமாற்றிய அவளைக் கொல்வதற்காக, பின்தொடரும்போது, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மருத்துவ மனையில் மேனகா நர்ஸ் வேடத்தில் கணவனுக்குப் பணிவிடை செய்கிறாள். இறுதியில் உண்மை தெரிய வர, வராகசாமியும், மேனகாவும் ஒன்று சேர்வதாக கதை முடிகிறது.

sando%20mkt%20550%203.jpg

ராஜா சாண்டோவின் இயக்கத்தில், அந்த ஆண்டில் வெளியான படங்களில் வெற்றிகரமான படமாக ஓடிய படம் என்ற பெருமையை "மேனகா"  பெற்றது.  பிற்காலத்தில் கலைவாணர் எனப் புகழ்பெற்ற என்.எஸ்.கே. யின் திரையுலகப் பிரவேசம் மேனகாவின் மூலம்தான் நடந்தது.

இந்தப் படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள் நான்குபேருமே நடித்தனர். மேனகாவின் தந்தை சாம்பசிவ ஐயங்காராக டி.கே.சங்கரன் நடித்தார். பெருந்தேவி என்னும் விதவைப் பெண் வேடத்தில் வேடப்பொருத்தத்துடன் டி.கே. முத்துசாமி தோன்றி பாராட்டுப் பெற்றார்.

nsk%20550%201.jpg

பெண்கள் கூச்சப்பட்டு நடிக்க முன்வராத அந்தக் காலத்தில், நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் முறையைப் பின்பற்றி டி.கே.சண்முகத்தின் சகோதரர் முத்துசாமி தலையை மழித்து விதவைப் பெண் வேடமிட்டு நடித்தார். அதேபோல வேலைக்கார ரங்கராஜனின் மனைவி மற்றும் மகள் வேடங்களிலும் முறையே டி.என். சுப்பையா, பி.எஸ்.திவாகரன் என்ற ஆண்களே நடித்தனர் என்பதும், அவ்வை சண்முகி போன்ற வேடங்களுக்கு இதுவே முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படமான முதல் நாவல் என்பதுடன், முதல் சமூகத் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் “மேனகா" பெற்றது. 

அந்நாளில் புகழ்பெற்ற நடிகரும், சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான தியாகராஜ பாகவதர் நடிப்பில் உருவான "சிவகவி" படத்தின் டைரக்‌ஷன் பொறுப்பை ஏற்றார். ஒப்பந்தப்படி படத்தினை இயக்கிவந்த சாண்டோ, படத் தயாரிப்பில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக பாதியிலே விட்டு விலகினார். பின் கோவையில் சிலகாலம் தங்கியிருந்தார்.

தமிழ்சினிமாவின் அந்நாளைய சாபக்கேடுக்கு  ராஜாவும் தப்பவில்லை. சம்பாதித்த எதையும் சேமித்துவைக்கும் பழக்கம் இல்லாத ராஜா,  தம் இறுதிக்காலத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார். நெருங்கிய நண்பர்கள் உதவியால் ஓரளவு சமாளித்தாலும், அவர் அல்லல்படும் அளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது.

sando%20ad%202%20550%204.jpg

ராஜா சாண்டோ,  தன் மனைவி ஜானகி பாய் பெயரில் ஜானகி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் துவங்கி ஒரிரு தமிழ்ப்படங்களை துவக்கியதாக குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அது பாதி தயாரிப்புடன் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.

1942 ஆம் ஆண்டு,  ராஜா சாண்டோ ஒரு விநோத நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடலில் முதுகுப் பகுதியில் ஒரு கட்டி உருவாகி அவருக்கு தொந்தரவு அளித்தது. இதை எடுக்க அவர் புகழ்பெற்ற மருத்துவமனையை அணுகினார். ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்கான செலவை நண்பர்கள் உதவியுடன் செலுத்தினார். இருப்பினும் அதே இடத்தில் அடுத்தடுத்து கட்டிகள் உருவாகி தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

sando%20veer%20ad.jpgஇந்த முறை அவரது நண்பர்கள் உஷாரானார்கள். ராஜா உடல்நிலை முன்போல இல்லை. அவருக்கு  செலவிடும் பணம் திரும்ப வராது என அவர்கள் முடிவெடுத்தனரோ என்னவோ, சத்தமில்லாமல் விலகிக்கொண்டனர். மருத்துவரும் அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிவிட்டதாகவே ராஜாவின் மனைவி ஜானகியிடம் தெரிவித்தனர்.

ஆனால் உடல் வலிமை மட்டுமின்றி, மனவலிமையும் அதிகம் பெற்றவரான ராஜா, அதிலிருந்து அதிசயமாக மீண்டார். சகஜமாகி உலவத் துவங்கினார்.  சில காலம் அதிக உற்சாகத்துடன் காலம் கழித்த ராஜா, திடீர் மாரடைப்பு காரணமாக 1943 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி கோவையில் மரணமடைந்தார். தமிழில் ராஜா சாண்டோ கடைசியாக டைரக்ட் செய்த படம் "ஆராய்ச்சிமணி".

அதீதி திறமையால், வட இந்தியாவில் கோலோச்சிய தமிழகத்தின் முதல் கலைஞனான ராஜா சாண்டோவின் சினிமா சேவையைப் போற்றும் வகையில்,  தமிழ்நாடு அரசு அவரது பெயரில் "ராஜா சாண்டோ" நினைவு விருதொன்றை நிறுவியது. ஆண்டுதோறும் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அரும் பணியாற்றிய கலைஞர்களில் ஒருவருக்கு வழங்கி சிறப்பிக்கின்றது.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் ராஜா சாண்டோவின் சாதனை தவிர்க்க முடியாத பக்கங்கள். திரையுலகின் கடைசி சாதனையாளர் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்!

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

http://www.vikatan.com/news/article.php?aid=50096

Link to comment
Share on other sites

  • 2 months later...

தமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்

 

samikkannu%20vincent%20logo.jpg

1905 ஆம் ஆண்டு டுபாண்ட்  என்ற ஒரு பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) திருச்சிக்கு விஜயம் செய்தது. இலங்கையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்த பிரெஞ்சுக்காரர் உடல்நிலை எதிர்பாராத விதமாக கெட்டது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட ஒரு கட்டத்தில் தன் தாய் நாடான பிரான்சுக்கு திரும்ப எண்ணினார். தனக்குச் சொந்தமான டேரா கொட்டகையை இங்கேயே யாரிடமாவது விற்று விட்டு செல்வதென முடிவெடுத்தார்.

samikkannu%20vincent%20lefttt.jpgஇந்த தகவல் கோவையை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு தெரியவந்தது. 21 வயது இளைஞனான அவருக்கு ஆரம்பகால பிரெஞ்சு மொழியின் பேசாத திரைப்படங்கள் மீது பெரும் ஈர்ப்பு இருந்ததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். தென்னிந்திய ரயில்வேயில் 25 ரூபாய் சம்பளத்திற்கு கிளர்க்காக பணியாற்றி வந்த அந்த இளைஞன் பிரெஞ்சுக்காரரிடமிருந்து (Dupond) ரூ.2000 (அப்போது மிகப்பெரிய தொகை இது) கொடுத்து 1905 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேரா கொட்டகையை வாங்கினார்.

ஏற்கனவே சலனப்படங்களைப்பற்றி கேள்விப்பட்டிருந்த  அந்த இளைஞனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் கொள்ளை மகிழ்ச்சி. அதனுடன் சில பிலிம் ரோல்களையும் விலைக்கு வாங்கிய அவர், தான் விலைக்கு வாங்கிய சினிமா புரொஜக்டரையும் அத்துடன் சில பிலிம் ரோல்களையும் தன்னுடன் எடுத்து கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடம் காட்டி அதிசயிக்க வைத்தார். முதல் சலனப்படத்தை காட்சிப்படுத்திய அந்த இளைஞர் சாமிக்கண்ணு வின்செண்ட்.

சினிமா பிறந்து அதன் 10 வருடங்களில் அதை தென்னிந்தியாவிற்கு அறிமுகம் செய்த வரலாற்றுக்கு சொந்தக்காரரான சாமிக்கண்ணு வின்செண்ட், 1883 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் கோட்டை மேடு பகுதியில் பிறந்தவர். தென்னிந்தியாவின் முதல் தியேட்டரை கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர்.

டுபாண்டிடமிருந்து நகரும் சினிமா கொட்டகையை வாங்க இருப்பதாக வின்சென்ட்டின் உறவினர்களுக்கு தெரியவந்தபோது எழுந்த எதிர்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. 2000 ரூபாய் என்பது அக்காலத்தில் மதிப்பற்ற தொகை என்பதால் நண்பர்களும், உறவினர்களும், அவருக்கு போறாத காலம் ஏற்பட்டுவிட்டதாக கிண்டலடித்தனர். சிலர் நிஜமாகவே வின்செண்ட் எடுத்த முடிவுக்காக வருந்தினர்.

திரையில் விரிந்தது முதல் சலனப்படக்காட்சி

ஆனால் சினிமாவின் பிற்காலம் எவ்வாறு அமையும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்த வின்செண்ட் அதைப் பற்றி கவலையடையவில்லை. எந்த குழப்பமும் அடையவில்லை. போட்டியின்றி அந்த கொட்டகையை வாங்கிவிடுவதில் குறியாய் இருந்தார். அதில் வெற்றியும் கண்டார்.

சுமார் 500 அடிக்கு ஒரு ரீல் என்று 5 ரீல்களை விலைக்கு வாங்கியிருந்த வின்செண்ட் தமது முதல் படக்காட்சியை முதன்முதலாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரிக்கு அருகிலிருந்த ஒரு வெட்டவெளி மைதானத்தில் 1905- ம் ஆண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்டினார்.

samikkannu%20vincent%20550%201.jpg

தென்னிந்தியாவின் முதல் சலனப்படம் சுமார் 45 நிமிடங்கள் திரையில் ஓடியது. வின்செண்ட் மக்களுக்கு காட்சிப்படுத்திய சலனப்படத்தின் பெயர் "இயேசு கிறிஸ்துவின் சரிதை" (Life of Jesus). தனது முதல் Tent சினிமாவை Edison's Grand Cinema Mega Phone என்ற பெயரில் வெளியிட்டார்.

சினிமா காட்சிக்கு மக்கள் தந்த ஆரவாரத்தைக் கண்ட வின்செண்ட் தெளிவான முடிவோடு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்து டென்ட் அமைத்து படங்களை மக்களுக்கு திரையிட்டுக் காட்டினார். தொடர்ந்து சிங்கப்பூர் ,மலேசியா ,பெஷாவர், மியான்மர் உள்ளிட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று திரையிட்டார்.

திருச்சியில் தொடங்கிய வின்செண்ட் பின் அப்படக் காட்சியை இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடத்தினார்.

உருவானது தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு

ஆர்வத்துடன் மட்டுமே களத்தி்ல் இறங்கிய வின்செண்ட்டுக்கு அவரது முயற்சி பெரும் வியாபார களமாகவும் இருந்தது. கை நிறைய சம்பாதித்தார். சினிமாவின் மீதான இந்த ஈர்ப்பை உணர்ந்த வின்செண்ட் இதில் சம்பாதித்ததை வேறு தொழிலில் முதலீடு செலுத்துவதை தவிர்த்து மீண்டும் சினிமாவிலேயே செலவிட முடிவுசெய்தார். அவரது இந்த எண்ணம்தான் தென்னிந்தியாவின் முதல் நிலையான திரையரங்கு (Permanent theatre) கோவையில் உருவாக காரணமானது. 1914 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் திரையரங்கள் கோவையில் உருவானது. தான் கட்டிய திரையரங்கிற்கு Variety Hall என்று பெயர் சூட்டினார் வின்செண்ட்.

samikkannu%20vincent%20right%20ad.jpgஆம், அதுவரை சபாக்களிலும் திறந்தவெளி அரங்குகளிலும் நாடக காட்சிகளை மட்டுமே பார்த்து ரசித்துவந்த மக்களுக்கு வெள்ளைத்திரையில் உயிருள்ள மனிதர்கள் உலவுவதும் பேசுவதுமாக இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டதால் உண்மையில் வெரைட்டி ஹால் என்ற பெயர் அதற்குப் பொருத்தம்தான்.

அக்காலத்தில் கோவையில் மின் விளக்குகள் கிடையாது. வின்செண்ட் சகோதரர்கள் ஒரு ஆயில் என்ஜினும், ஜெனரேட்டரும் வைத்து பற்பல வண்ண விளக்குச் சரங்களை தங்கள் கொட்டகையைச் சுற்றிலும் எரியச் செய்து மக்களின் மனதைக் கவர்ந்தனர். வெரைட்டி தியேட்டர் அருகிலேயே மின்சாரத்தால் இயங்கும் மாவு அரைக்கும் இயந்திரத்தை நிறுவினர்.

வெரைட்டி ஹாலில் சினிமா காட்சி திரையிடுவதற்கு முன் அரங்கேறும் காட்சிகள் இன்னும் ஜோர்.

கொட்டகையின் எதிர்புறம் ஒரு மேடை அமைத்து அதைச் சுற்றிலும் வெள்ளை நிற பேண்ட், வெள்ளை கோட், தொப்பி என ஒரே மாதிரியான சீருடையணிந்த பத்து பதினைந்து ஊழியர்கள் நின்றுகொண்டு காட்சி திரையிடப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்னர் பாண்டு வாத்தியங்களை இசைப்பர். அந்த இசைக்கு தக்கபடி நளினமாக அழகிய பெண்கள் நடனமாடுவர். அது பொதுமக்களை வரவேற்பது போன்று தோன்றும்.

நடனமாடுவதற்கென்றே கோவையின் சுற்றுப்புறங்களில் அக்காலத்தில் வாழ்ந்து வந்த அழகிய ஆங்கிலோ இந்தியப் பெண்களை சம்பளத்திற்கு அமர்த்தியிருந்தார்கள் வின்செண்ட் சகோதரர்கள். இவர்களது இக்காட்சியைக் கண்டுகளிக்கக் கோவை மாநகரே அங்கு திரண்டுவரும்

தமிழ் சினிமா என்ற விதையை இம்மண்ணில் முதலில் விதைத்தவர் என்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தக்காரரானார் சாமிகண்ணு வின்செண்ட். 1914 ல் உருவான வெரைட்டி ஹால் என்ற சினிமா கொட்டகையை தொடர்ந்து கோவையில் 10-க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகளை அமைத்தார் வின்செண்ட். இவ்வாறு தமிழகத்தில் முதன் முதலாக சினிமா தியேட்டர் கட்டிய பெருமை சாமிக்கண்ணு வின்செண்ட், ஜேம்ஸ் வின்செண்ட் சகோதரர்களையே சாரும். வெரைட்டி ஹாலை ஒட்டியே சகோதரர்கள் தாங்கள் குடியிருக்க ஒரு பிரம்மாண்ட வீட்டையும் கட்டினர். பின்னாளில் அப்பகுதி வெரைட்டி ஹால் ரோடு என்றே அழைக்கப் பெற்றது.

சினிமா மீதான ஆர்வம் மட்டுமே கொண்டவரல்ல வின்செண்ட். ஆரம்ப காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி பெறாத அக்காலத்தில் தான் சென்ற நாடுகளில் காணப்பட்ட வளர்ச்சியினால் கவரப்பட்ட அவர் அதை தமிழகத்தில் செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

வெரைட்டி தியேட்டரில் தமிழ் படங்கள் திரையிடப்பட்ட அதே சமயம் எடிசன் என்ற தனது மற்றொரு தியேட்டரில் ஆங்கில படங்களை திரையிட்டார். அந்தக் காலத்தில் ஆங்கில பட திரையிடலுக்கு அந்த தியேட்டர் புகழ்பெற்றிருந்தது. கோவையில் முதன் முதலில் எலெக்ட்ரிக் பிரஸ் அச்சு இயந்திர சாலையை நிறுவியவரும் அவரே. 1936ல் வின்சென்ட், பேலஸ் தியேட்டரை (palace theatre) நண்பர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி இந்த தியேட்டரில் இந்தி படங்களை வெளியிட்டார்.

இந்த தியேட்டர் பின்னர் கென்னடி (Kennedy) தியேட்டர் என்ற பெயரில் இயங்கியது. கோவையில் இவரது தியேட்டர்களில் ஒன்றான 'லைட் ஹவுஸ்' தியேட்டரில் உணவு விடுதி நடத்திய தாமோதரசாமி என்பவர்தான் கோவையின் பிரபல ''Annapoorna" ஹோட்டலின் நிறுவனர் என்பது ஆச்சரியமான செய்தி.

samikkannu%20vincent%20550%202.jpg

கோவையின் முதன்முதலில் மின்சாரம் உற்பத்தி செய்த தனி நபரும் வின்செண்ட்தான். 1919-ல் கோவையில் மின்சார உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தைத் தொடங்கினார். ஜெனரேட்டர் மூலம் தயாரித்த மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் கம்பெனியின் (Stanes) ஐரோப்பிய உயர்நிலைப் பள்ளிக்கு விநியோகம் செய்து பெரும் பொருள் ஈட்டினார்.

சினிமா அதிபர் தொழிலதிபர் என்ற அடையாளங்களோடு மட்டுமின்றி வின்செண்ட் பத்திரிகையாளராகவும் விளங்கினார். காங்கிரஸ்காரரான அவர் சத்தியாகிரக போராட்டங்களை ஆதரித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் "மஹஜனநேசன்" என்ற ஒரு பத்திரிகையை நடத்தினார். காங்கிரஸ் மதுவிலக்கு பிரசாரத்திற்காக பல தடவை தன் அச்சகங்களில் தம் சொந்த செலவில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து கொடுத்தார்.

இவரது முயற்சிகளுக்கு வின்செண்ட்டின் சகோதரர் ஜேம்ஸ் வின்செண்ட் பெரும் பலமாக இருந்தார். சகோதரர்கள் இருவரும், வெள்ளை "சூட்" அணிந்து, தங்கள் மீசைக்கு பசை போட்டுக் கூர்மையாக முறுக்கிய கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

படத்தயாரிப்பாளர்

தனது தியேட்டர் பெயரிலேயே (Variety Hall Theatre) படத் தயாரிப்பு தொழிலிலும் கால் பதித்தார் வின்செண்ட். 1935 ம் ஆண்டு கல்கத்தா பயனீர் ஸ்டியோவில் தயாரான அவரது "சம்பூர்ண ஹரிச்சந்திரா" என்ற தமிழ்ப் படம் வெளியானது. முதல் தமிழ்ப்படமான காளிதாஸ் பல மொழி பேசி வந்ததால் அது முதல் தமிழ்ப்படம் என்பதில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்த சமயம் என்பதால் தனது படத்தின் விளம்பரத்தில் வின்செண்ட், '100% முதல் தமிழ் படம்' என்று விளம்பரப்படுத்தினார். இப்படத்தில் V.A. செல்லப்பாவும் டி.பி. ராஜலஷ்மியும் நடித்தனர். படம் நல்ல வசூலை தந்தது. பிரபல நடிகை லட்சுமியின் தாயான பேபி ருக்மணி லோகிதாசன் என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் அறிமுகமானார்.

samikkannu%20vincent%20550%203.jpg

வள்ளித்திருமணம் என்ற படத்தை இவர் தயாரித்தார். இப்படத்தில் V.A. செல்லப்பா-டி.பி.ராஜலஷ்மி ஜோடியாக நடித்தனர். இப்படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் பாக் ஆஃபிஸ் ஹிட் ஆக இப்படம் அமைந்தது. இப்படம்தான் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட பேசும் படங்களில் வசூலில் வரலாற்று சாதனை புரிந்தது. இப்படத் தயாரிப்புக்கு பின் சாமிகண்ணு வின்சென்ட் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்தார். கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோவை நண்பர்கள் ஆர்.கே. ரங்கசாமி, 'பக்‌ஷீராஜா' ஶ்ரீராமுலு நாயுடு ஆகியோர் துணையுடன் தொடங்கினார்.

மஹாஜன நேசன் பத்திரிகை

வின்செண்ட் சகோதரர்கள் தங்கள் எலக்ட்ரிக் பிரிண்டிங் அச்சகத்திலிருந்து "மஹாஜன நேசன்" எனும் தமிழ் ஆங்கில இரு மொழி வார ஏடு ஒன்றையும் சில காலம் நடத்தினர்.

வின்செண்ட் அந்நாளில் ராணுவ வீரர்கள் பிரத்யேகமாக சினிமா காட்சிகளை பார்க்க Vincent Forces Cinema என்ற பெயரில் திருச்சி ரோட்டில் ஒரு டூரிங் டாக்கீஸை உருவாக்கினர். ஆங்கில படங்களை திரையிடுவ தற்கென வின்செண்ட் உருவாக்கிங Rainbow தியேட்டர், தற்போது Kennedy Theatre என்று அழைக்கப்படு கிறது. Variety Hall Talkies திலிப் குமாரின் பல ஹிந்தி படங்களை திரையிட்டன அவை மிகப்பெரிய வெற்றி பெற்றன. Edison மற்றும் Carnatic தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன.

கடும் உழைப்பாளியான வின்செண்ட் தன் வாழ்வின் எந்தநாளையும் வீணாக்குவதை விரும்பாதவர். தன் அலுவலகத்தில் தன் இருக்கைக்கு மேலே எந்த ஒன்றையும் முடிக்காமல் ஒரு நாளை கடத்திவிடாதே என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். தன் வாழ்நாள் முழுமையும் தானும் அதை பின்பற்றினார்.

1883 மு ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பிறந்த சாமிக்கண்ணு வின்செண்ட் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ந்தேதி தனது 59 வயதில் மறைந்தார்.

samikkannu%20vincent%20rightttt%282%29.jசாமிக்கண்ணு வின்செண்ட் பிறப்பில் கிருஸ்துவரானாலும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந் தார். கோவை பேரூரில் உள்ள சிவன் கோவிலுக்கு வாரந்தோறும் செல்வதை இறுதிவரை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அங்குள்ள யானையை அழைத்துவந்து தன் வெரைட்டி தியேட்டரில் வைத்து வணங்கி உணவிடுவார். இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை முதலில் கண்டு அதை வெற்றிகரமாக கைக் கொண்டு புகழின் உச்சியை தொட்ட முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்செண்ட் ஆவார்.

மறக்கடிக்கப்பட்ட மனிதர் வின்செண்ட்

தென்னிந்திய மக்களுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்செண்ட்டின் புகழ் பிற்காலத்தில் மக்களால் மறக்கப்பட்டது சோகம். சினிமா வரலாற்று ஆய்வாளர்களும் அவருக்குரிய புகழோடு அவரை பதிவுசெய்யவில்லை என்பது வேதனையானது.

அதை விட அவலம், வெரைட்டி தியேட்டரை அலங்கரித்த அவரது பிரம்மாண்ட சிலை,  இப்போது வறுமையில் வாடும் அவரது 4- வது தலைமுறை வாரிசுகளின் ஏதோவொரு வீட்டில் தட்டுமுட்டு சாமான்கள் அறையில் கிடப்பது.

சாமிக்கண்ணு வின்செண்ட் இறப்புக்கு பின் ஒரு பிரபல இதழ் அவருக்கு பின்வருமாறு குறிப்பு எழுதியிருந் தது.

காலஞ்சென்ற திரு .டி. வின்செண்ட் முன்னோடியாகச் சிறப்புற விளங்கிய பட விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர், தயாரிப்பாளராவர். ஆரம்ப காலத்தில் கிராமப்புறங்களில் சினிமாவைப் பரப்பியதற்கு இவரே முக்கிய பொறுப்பாளராவார். 1925ஆம் ஆண்டிலிருந்து மலபாரில் டூரிங் சினிமாக் காட்சிகளை நடத்தினார்.

கோவையில் வெரைட்டி ஹாலைக் கட்டினார். வெற்றிகரமாக ஓடிய 'வள்ளி திருமணம்' படத்தைத் தயாரித் தவர் இவரே. டி.பி.ராஜலட்சுமி, வி.ஏ. செல்லப்பா ஆகியோர் இதில் நடித்தனர். பிறகு இவர் தமிழில் 'அரிச்சந்திரா' வைத் தயாரித்து வெளியிட்டார். அதுவும் இவருக்குப் பெரும் வெற்றியையே அளித்தது. தனது பங்களிப்பின் மூலம் சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்களும் தமிழ் சினிமாவின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக திகழ்கிறார்


தமிழ் சினிமா உலகம் தங்கள் முன்னோடிகளில் ஒருவரான சாமிக்கண்ணு வின்செண்ட் புகழ்வாழ்க்கையை நினைவு கூர்ந்து மரியாதை செய்வது தங்களை தாங்களே கவுரவப்படுத்தும் செயலாகும். சலனப் படங்களின் மூலம் தென்னிந்திய மக்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி சினிமா உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சிய சாமிக்கண்ணுவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

http://www.vikatan.com/news/article.php?aid=50439

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா முன்னோடிகள் (4) : ஆர். நடராஜ முதலியார்

 

natarja%20mudaliyar%20logo%204.jpg

தென்னிந்தியாவின் முதல் சலனப்படத்தை தயாரித்த தமிழர்- 'தமிழ் சினிமாவின் தந்தை' நடராஜ முதலியார்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் சினிமா, மௌனப்பட உருவில் சென்னையில் ஜனனம் ஆனது. தென்னாட்டின் முதல் சலனப்படமான கீசக வதம்  1916 ஆம் ஆண்டு சென்னையில் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவின் முதல் சலனப்படத்தை தயாரித்தவர் வேலூரைச் சார்ந்த ஆர்.நடராஜ முதலியார். இச்சாதனையை நிகழ்த்திய முதலியாரே 'தென்னிந்திய சினிமாவின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.

கீசக வதம்

இந்தியாவின் முதல் முழு நீளக்கதைப் படமான புண்டாலிக் , 1912-ம் ஆண்டு ஆர்.ஜி.டோர்னி என்ற ஐரோப்பியரால் திரையிடப்பட்டது. இதுவே இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட துண்டு படமாகும். இதை தயாரித்தவர் வெளிநாட்டவர் என்பதால்,  இந்தியாவின் முதல் திரைப்படம் என்ற தகுதியை பெற இப்படம் தவறிவிட்டது. இந்தியாவின் முதல் சலனப்படமான ஹரிச்சந்திரா 1913-ஆம் ஆண்டு, துண்டிராஜ் கோவிந்தபால்கே என்ற மராத்தியரால் தயாரிக்கப்பட்டு, மும்பை காரனேஷன் தியேட்டரில் வெளியிடப்பட்டது.

natarja%20mudaliyar%20rightt.jpgஇப்படத்தை வெளியிட்டதன் மூலம், தாதாசாகிப் பால்கே இந்திய திரைப்பட தந்தை என்று போற்றி புகழப்படுகிறார். இவர் தயாரித்த ஹரிச்சந்திரா என்ற சலனப்படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் 1914-ம் ஆண்டு திரையிடப்பட்டது.

இப்படத்தை சென்னையில் மோட்டார் கார் வியாபாரம் செய்து வந்த இளைஞர் ஒருவர் சென்னை கெயிட்டி தியேட்டருக்கு சென்று பார்த்தார். விளைவு, தான் நடத்தி வந்த மோட்டார் கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்று, அதில் கிடைத்த வருவாயில் சலனப்படம் தயாரிக்க ஆர்வம் கொண்டார். அந்த இளைஞரின் பெயர் ஆர். நடராஜ முதலியார்.

ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து மிதிவண்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வந்தவர் நடராஜ முதலியார். பின்னர், தொழிலில் ஏற்றம் அடைந்தபின், கார்களை இறக்குமதி செய்யும் தொழிலில் இறங்கினார்.

தொழிலை கைவிட்டார், சினிமா எடுத்தார்!

கார் இறக்குமதி தொழிலில் வெற்றிகரமாக இயங்கிவந்தபோதுதான் ஹரிச்சந்திரா படம், அவருக்குள் சினிமா ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தனது மோட்டார் கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்றுவிட்டு, தீவிரமாக இறங்கினார். 

சலனப்பட தொழில் நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகியிருந்த வேளையில், அதை முழுமையாக அறிந்துகொள்ள, அதில் தேர்ந்த நிபுணர் ஒருவரைத்தேடி அலைந்தார். இவருக்கு உதவியவர் அப்பொழுது சென்னையில் 'ஸ்டுட்பேக்கர்' என்ற மோட்டார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர். இந்த ஆங்கிலேயர், நடராஜ முதலியாரை பூனாவில் உள்ள 'ஸ்மித்' என்ற ஆங்கிலேயே புகைப்பட நிபுணரிடம் அனுப்பி வைத்தார். ஸ்மித், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பணியாற்றிய கர்சன் பிரபுவின் டெல்லி அலுவலகத்தில், சிறப்பு புகைப்படக் கலைஞராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இவர் கர்சன் பிரபுவின் டெல்லி ஆட்சி நிர்வாகத்தை துண்டுப் படமாக தயாரித்து புகழ் பெற்றார். எனவே ஸ்மித்திடம் சலனப்பட தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டி, 1915-ஆம் ஆண்டு பூனா நகருக்கு முதலியார் பயணம் மேற்கொண்டார்.

முதலியாரின் ஆர்வத்தை பாராட்டிய ஸ்மித், சினிமா ஒளிப்பதிவு நுணுக்கங்களை முதலியாருக்கு சொல்லி கொடுத்தார். முதல் நாள் பயிற்சியிலேயே, மூவி கேமராவை எப்படி கையால் கழற்றி சீராக இயக்குவது என்பது பற்றிய தொழில் நுட்பங்களை, முதலியாருக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார் ஸ்மித். பின்னர் தனது கேமிராவை முதலியர் கையில் கொடுத்து, துண்டு படம் ஒன்றை தயாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஸ்மித்தின் ஆலோசனையை ஏற்று, ஒரு துண்டு படத்தை முதலியார் பூனாவில் தயாரித்து, தன் குருவான ஸ்மித்திடம் ஒப்படைத்தார்.

தோல்வியில் முடிந்த முதல்முயற்சி

ஸ்மித் வீட்டில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தின் போது அப்படம் திரையிடப்பட்டது. ஸ்மித்தும் அவரது மனைவியும், முதலியாருடன் அமர்ந்து அப்படத்தை பார்த்தனர். திரையிடப்பட்ட அப்படத்தில் தோன்றிய நபர்களின் நடையும், அசைவுகளும் ஒரே சீராக அமையாமல் விந்தையாகவும், கோமாளித்தனமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. படத்தை பார்த்த ஸ்மித் தம்பதியினர், கேலியாக சிரித்து மகிழ்ந்தனர்.

படம் சரியாக அமையாதது கண்டு மனம் தளர்ந்த முதலியாரை, ஸ்மித் தேற்றி உற்சாகப்படுத்தினார். சில மாதங்கள் பூனாவில் தங்கி பயிற்சியை தொடரும்படி கேட்டுக்கொண்டார். முதன்முறை ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியால், இந்த முறை கேமிராவை சரியாக இயக்குவதற்கான பயிற்சியை முதலியார் முழுமையாக கற்றறிந்தார்.

nataraja%20mudaliyar%20550%201.jpg

பூரண பயிற்சிக்கு பின், பூனாவிலிருந்து சென்னை திரும்பினார் நடராஜ முதலியார். சென்னை திரும்பிய அவர், தனது புதிய படப்பிடிப்பு நிலையத்தை சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் அமைந்த 'டவர் ஹவுஸ்' என்ற பங்களாவில் 1916-ஆம் ஆண்டு தொடங்கினார். தான் துவங்கிய ஸ்டுடியோவிற்கு 'இந்தியா பிலிம் கம்பெனி' என்று பெயர் வைத்தார். இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சினிமா ஸ்டுடியோ என்பது வரலாற்றுச் செய்தி.

ஸ்டுடியோவை ஸ்தாபிதம் செய்த முதலியார், சென்னையில் மௌனப்படம் தயாரிக்க விரும்பினார். அதற்கு தேவைப்பட்ட கச்சா பிலிமை லண்டனுக்கு தந்தி கொடுத்து, இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்தார். கச்சா பிலிமை இறக்குமதி செய்வதற்கு, பாம்பே கோட்டக் பிலிம் கம்பெனியில் வேலை பார்த்த 'கார்பென்டர்' என்ற ஆங்கிலேயே நண்பர் உதவி புரிந்தார். படப்பிடிப்பு கேமராவை, பூனாவிலேயே ஸ்மித்திடம் இருந்து விலைக்கு வாங்கியிருந்ததினால், கேமிராவை புதிதாக வாங்க வேண்டிய அவசியம் முதலியாருக்கு ஏற்படவில்லை.

சலனப் படமெடுக்கும் முயற்சியை, 1916- ஆம் ஆண்டு சென்னையில் முதலியார் தொடங்கினார். படத்தில் நடிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க, சுகுனவிலாச நாடகச் சபையில் அப்போது ஸ்திரிபார்ட்டாக நடித்து வந்த ரங்கவடிவேலு என்ற புகழ்பெற்ற நாடக நடிகரை அமர்த்திக்கொண்டார். தன்னால் எடுக்கப்பட்ட நெகடிவ் பிலிம் ரோலை டெவலப் செய்து கொள்வதற்கு வசதியாக, பிலிம் லேபாரட்டரி ஒன்றை பெங்களூரில் நிர்மாணித்துக்கொண்டார்.

எம்.கந்தசாமி முதலியாரை நிராகரித்த நடராஜ முதலியார்

nataraja%20mudaliyar%20right.jpgலேபாரட்டரியில் வேலை செய்வதற்காக நாராயணசாமி என்பவரை பணியில் அமர்த்தினார். படப்பிடிப்பின் போது தனக்கு உதவியாளராக பணியாற்ற ஜெகநாத ஆசாரி என்ற நபரையும் அமர்த்திக் கொண்டார். பிரபல நாடக ஆசிரியரான எம்.கந்தசாமி முதலியார், இவரது மௌனப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு அணுகி, நடராஜ முதலியார் அதை நிராகரித்ததாகவும் சொல்வார்கள்.

1916-ஆம் ஆண்டு கீசக வதம் என்ற மகாபாரதத்தின் கிளைக்க கதையை மௌனப் படமாக சென்னையில் தயாரித்தார். இதற்கு முன்பே 1913 களில் துவங்கி, தொடர்ந்து மராட்டியத்தில் தாதா சாஹேப் பால்கே மவுனப்படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தார். அந்த கணக்கின் அடிப்படையிலதான் சினிமா நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

மராட்டியத்தை அடுத்து இந்தியாவில் இரண்டாவதாக மவுனப்படத்தை தயாரித்த மாநிலம் தமிழ்நாடு. அதை தயாரித்தவர் ஒரு தமிழர், அவர் நடராஜ முதலியார். நடராஜ முதலியாரால் எடுக்கப்பட்ட கீசக வதம் தான் தென்னிந்தியாவில் தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட முதல் சலனப்படம். கீசக வதம் படத்திற்கான படப்பிடிப்பு,  சென்னையில் 35 நாட்கள் நடைபெற்றன. இவரே தமிழ் சினிமாவின் முதல் இயக்குனர் என்றும் சொல்லலாம். 6000 அடி நீளத்தில், 35,000 ரூபாய் செலவில் கீசக வதம் 1916-ம் ஆண்டில் வெளியானது.

அடுத்தடுத்து தனது தயாரிப்பில் 6 படங்களை தயாரித்தார் நடராஜ முதலியார். பின் சில காரணங்களால் திரைத்துறையின் மீது கசப்பு கொண்டு திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

நடராஜா முதலியார் 1917ல் எடுத்த தனது இரண்டாவது படமான திரௌபதி வச்திராபுராணம் படத்தில் மரின் ஹில் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை கதாநாயகியாய் நடிக்க வைத்தார். இவருக்கு லியோச்சனா என பெயர் சூட்டினார்.

மௌனப்படங்களில் அதிக சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயர் இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் முதல் வெளிப்புற படப்பிடிப்பையும் செய்தவரும் நடராஜா முதலியாரே. மயில்ராவணா, மார்க்கண்டேயா போன்ற படங்களுக்கு தனது சொந்த ஊரான வேலூர் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தினார்.

மவுனப்பட தயாரிப்புகளில் நடராஜ முதலியார் பரபரப்பாக இயங்கிவந்த நேரத்தில், 1923 ஆம் ஆண்டு அவரது சினிமா ஸ்டுடீயோ எதிர்பாராதவிதமாக தீக்கிரையானது. அதே ஆண்டு அவருடைய மகன் இறந்தார்.

மேலும் அவரது சினிமா தொழிலுக்கான ஆதரவு சில காரணங்களால் கிடைக்காததும், தொடர்ந்த நஷ்டம் காரணமாகவும் சினிமாத் தொழிலை விட்டு  விலகினார் நடராஜ முதலியார். தமிழ் படத் தயாரிப்புக்கு கால்கோள் செய்த நடராஜ முதலியார், தமிழ்சினிமா வரலாற்றில் தனிப்பெரும் சாதனைக்குரிய மனிதர்.

natarja%20mudaliyar%20550%202.jpg

தனது சினிமா தொழில் அனுபவம் குறித்து 1970-ஆம் ஆண்டு பிரபல தமிழ் சினிமா பத்திரிகை ஒன்றுக்கு நடராஜ முதலியார் பேட்டி அளித்தார். அந்த பேட்டி...


உங்கள் சினிமா அனுபவம் பற்றி கூறுங்கள்...

அப்பொதெல்லாம் சினிமாவில் நடிக்க நடிக, நடிகைகள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது. நாடக நடிகர்கள் சினிமாவில் நடிக்க தகுதியற்றவர்களாக இருந்தார்கள். முக்கியமாக பெண்கள் படத்தில் நடிப்பதை அறவே வெறுத்தனர். இதனால் படம் எடுப்பதில் சில சங்கடங்கள் எனக்கு ஏற்பட்டது.

நீங்கள் எத்தனை படங்கள் தயாரித்தீர்கள்?

natarja%20mudaliyar%20leftt.jpgநான், திரௌபதி வஸ்திராபரணம், கீசக வதம், லவகுசா, ருக்மணி சத்யமாமா, மார்கண்டேயா, காளிங்கமர்தனம் ஆகிய படங்களை தயாரித்தேன். இப்படங்களின் வடநாட்டு வினியோக உரிமையை கல்கத்தாவில் இருந்த மதன் கம்பெனியாரும், பம்பாய் வினியோக உரிமையை ஆதிர்ஷ் ஈரானி என்பவரும் விலைக்கு வாங்கிக் கொண்டனர். இவ்வாறாக என்னுடைய படங்கள் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டிருக்கின்றன.

நீங்கள் எப்படி நடிகர்களை தேர்ந்தெடுத்தீர்கள்?

நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைத்தான் நான் என் திரைப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தேன். அந்த காலத்தில் பெண்கள் சினிமாவில் நடிக்க முன்வர வில்லை. விலைமாதர்கள் கூட சினிமாவில் நடிப்பதை ஓர் அவமதிப்பாக கருதினார்கள். அதனால் என்னுடைய திரௌபதி வஸ்திராபரணம் படத்தில் திரௌபதியாக நடிப்பதற்கு ஒரு ஆங்கிலேயே பெண்மணியைதான் நான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

அந்த ஆங்கிலேய பெண்மணிக்கு படக்காட்சிகளை ஆங்கிலத்தில் விளக்கி கூற வேண்டி, ரயில்வேயில் வேலை பார்த்து வந்த ரங்க சாமிப்பிள்ளை என்பவரை நான் நியமித்தேன். அவரே துச்சாதனனாக அப்படத்தில் வேடமேற்று நடித்தார்.

நீங்கள் விரும்பிய படங்கள்?

நான் எடுத்த படங்களிலேயே நான் விரும்பிய படம் திரௌபதி வஸ்திராபரணம்.

நீங்கள் ஏன் தொடர்ந்து படம் தயாரிக்கவில்லை?

அந்நிய நாட்டு துணி வகைகளை இந்தியாவில் விற்பனை செய்வதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பகிஷ்காரம் செய்வது பற்றி ஒரு துண்டு படம் எடுக்க விரும்பினேன். அத்துண்டுப்பட தயாரிப்பிற்கு நிதி உதவி வேண்டி பம்பாய் மில் அதிபர்களின் சங்கத்தில் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்த 'மோடி',  'மெலோனி' என்ற இரு தொழில் அதிபர்களை பம்பாயில் சந்தித்து, நிதி உதவி கேட்டேன். படம் எடுக்கும் என் திட்டத்தை புகழ்ந்த அவர்கள், பண உதவி செய்ய மறுத்துவிட்டார்கள்.

தொடர்ந்து ஸ்டோன்  என்ற ஐரோப்பியரிடமும் நிதி உதவி கேட்டேன். படம் எடுக்கும் முயற்சியை பாராட்டிய ஸ்டோன், நான் திட்டமிட்டிருந்த திரைப்படம் தன் தாய் நாட்டிற்கு விரோதமாக அமைய வாய்ப்பு உள்ளதாக கூறி, பண உதவி செய்ய மறுத்து விட்டார். அன்னிய துணி பகிஷ்கார போராட்டத்தை சினிமா மூலம் பிரசாரம் செய்ய நான் திட்டமிட்டேன். அதற்காக டாக்குமென்டரி ஒன்று தயாரிக்க முயற்சி செய்தேன். என் முயற்சிகள் தோல்வியுற்றன. அத்துடன் திரைப்படத் தொழிலிலிருந்து விலகிக்கொண்டேன்.

இன்றைய திரைப்படத் துறையைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

nataraja%20mudaliyar%20200.jpgமுதலில் திரைப்படங்கலில் கவர்ச்சியை காட்டி மக்களிடம் பணம் வசூலிப்பதை நான் அறவே வெறுக்கிறேன். அதனால் இளம் சந்ததிகளின் கலாச்சாரம், பண்பு இவை பறிபோகிறது என்பது என் எண்ணம்.

காதல் காட்சிகள் கூட கௌரவமான முறையிலே தூய்மையோட படமாக்கப்பட வேண்டும். நல்லவைகளையும், தீயவைகளையும் மக்களிடையே பரப்ப சினிமா ஒரு முக்கிய சாதனமாக பயன்படுகிறது. ஆகவே தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் மக்களின் பண்புள்ள எதிர்கால வாழ்க்கைக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடிய சாதனமாக இத்துறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேச துரோக செயல்களையும், இனக்கலவரங்களையும், சமூக விரோதிகளின் தீவைப்பு அட்டூழியங்களையும் அறவே ஒழித்து மக்களிடையே அமைதியை நிலைநாட்ட சினிமாவைத் தவிர வேறு சாதனம் கிடையாது என்பது என் அபிப்பிராயம்

இவ்வாறு பொறுப்புள்ள ஒரு சினிமா கலைஞராக அந்த பத்திரிக்கை பேட்டியில் மிளிர்ந்தார் நடராஜ முதலியார்.

தமிழ்சினிமா மரியாதை

நடராஜ முதலியாரின் திரைத்துறை சாதனையை கவுரவித்து, சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1970-ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில், 'தென்னிந்திய சினிமா டெக்னீஷியன்கள் சங்கம்' பாராட்டு விழா நடத்தியது. இவ்விழாவில் முதலியாரின் சாதனைகளை பாராட்டி வெள்ளி பதக்கம் பரிசளித்தனர்.

தென்னிந்தியாவின் முதல் சலனப்படத்தை தயாரித்த தமிழரான ஆர். நடராஜ முதலியார், சினிமா அதிபர் ஏ.வி.மெய்யப்பன் உட்பட 36 பேர்களுக்கு அன்றைய மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சர் ஒய்.பி.சவான் வெள்ளிப் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். இதை தவிர வேறு எந்த ஒரு பாராட்டு விழாவும் தமிழகத்தில் இவருக்காக சிறப்பாக நடத்தப்பட்டதாக தகவல்கள் இல்லை. வழக்கம்போல் தமிழக சினிமாத்துறை மறந்த தமிழர்களில் ஒருவரானார் நடராஜ முதலியார்.

1885 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த நடராஜ முதலியார், 87 வயது வரை வாழ்ந்தார். தனது இறுதிக் காலத்தை சென்னை அயனாவரத்திலிருந்த தன் மகள் ராதாபாய் வீட்டில் தங்கி அமைதியாக கழித்தார். தன் இறுதி காலத்தில் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து உருவாக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது ஆச்சர்யமான தகவல்.

மறைவு

தனது தள்ளாத வயதிலும் சினிமா பிரக்ஞையோடு வாழ்ந்த முதலியார், திடீரென சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்றார். சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி சென்னை பொது மருத்துவமனையிலேயே 1971- ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நள்ளிரவு 12.50 மணிக்கு மரணமடைந்தார்.

nataraja%20mudaliyar%20550%204.jpg

மறைந்த அந்த சினிமா மேதையின் உடலை, சென்னை அண்ணாநகர் இடுகாட்டில் தகனம் செய்தார்கள். ஆரவாரம், ஆர்ப்பாட்டம் ஏதுவுமின்றி நடந்தது அவரது இறுதி ஊர்வலம். சினிமாத்துறையினர் எவரும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை.

தமிழ் சினிமா வழக்கம்போல் தன் மூதாதையர் ஒருவரை புறக்கணித்து, தன்னை 'பெருமை'ப்படுத்திக் கொண்டது. இதில் வருத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள்தானே தவிர, நடராஜ முதலியார் அல்ல.

தமிழ்சினிமா பிரபலங்கள் நடராஜ முதலியாரை மறந்தாலும், சினிமாவை நேசித்து இத்துறையில் கால்பதிக்க அணிவகுத்து வரும் இன்றைய இளைஞர்களின் வரிசையில் கடைசி இளைஞன் உள்ளவரை, முதலியாரின் புகழ் நிலைத்திருக்கும்.

http://www.vikatan.com/news/article.php?aid=50790

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா முன்னோடிகள்: ஆரம்ப கால டைரக்டர் ஒய்.வி.ராவ்!

 

yv%20rao%20logo.jpg

டத்தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர், படவிநியோகஸ்தர், சினிமா எடிட்டர் என்ற பன்முக ஆற்றல் படைத்த கலைஞர் ஒய்.வி.ராவ். வெற்றிகரமான டைரக்டராக விளங்கிய ஒய்.வி.ராவின் சினிமா சாதனைகளை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க முடியாது.

1903- ஆண்டு ஆந்திர பிரதேச நெல்லூர் நகரில் பிறந்தவர் இவர். நெல்லூரிலிருந்த உயர்நிலைப் பள்ளியில் படித்து பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் வேலை தேடி சென்னை வந்தார். கலை ஆர்வம் கொண்டிருந்த அவர், மௌனப் படங்களை பார்த்து நாடக நடிப்பில் அக்கறை கொண்டு நடிப்பு கற்றுக் கொண்டார்.

yv%20rao%20right%201.jpg1920-ஆம் ஆண்டு சென்னையில் மௌனப் படங்களை தயாரித்து வந்த ரகுபதி பிரகாஷ் என்ற படத் தயாரிப்பாளரை சந்தித்தார். மௌனப் படங்களை டைரக்ட் செய்துவந்த ரகுபதி பிரகாஷும், ஏ.நாராயணன் என்பவரும், ஒய்.வி. ராவை தங்களின் மௌனப் படங்களில் நடிக்க வைத்தார்கள்.

கருட கர்வ பங்கம் என்ற மௌனப் படத்தில் கதாநாயகனாக நடித்து, ராவ் தன் திரைப்பயணத்தை துவங்கினார்.

பின்னர் சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ராவ், இயக்குனராக பொறுப்பேற்று பாண்டவ நிர்வாணம், பாண்டவ அஞ்ஞான வாசம், ஹரி மாயா போன்ற மௌனப் படங்களை சென்னையில் தயாரித்து வெளியிட்டார். ஹரி மாயா என்ற படத்தை தயாரித்தவர் கர்நாடக நாடக மேடையின் ஜாம்பவானாக திகழ்ந்த குப்பி வீரண்ணா.

பின்னாளில் ராஜம் என்ற நடிகையை இவர் மணந்து கொண்டார். ராஜமும், ராவும் இணைந்து அக்கால மௌனப் படங்களில் நடித்தார்கள். இயக்கத்தில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கப்பெறாத ராவ், பம்பாய்க்கு பயணமானார்.

அங்கு "லட்சுமி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தில் நடிகராக சேர்ந்தார். இது நடந்தது 1925- ம் ஆண்டு. பம்பாயில் சௌத்ரி என்பவர் தயாரித்த ஊமைப் படமான மீரா வில் இவர் நடித்தார். பின்பு பம்பாய் ராயல் ஆர்ட்ஸ் என்ற ஸ்டுடியோ தயாரித்த பாவத்தின் கூலி என்ற ஊமைப் படத்திற்கு சீனரியோ (Scenerio) எழுதினார்.

அக்காலத்தில் புராணப் படங்களில் கிருஷ்ண பகவான் வேடம் ஏற்று நடிப்பதில் வெற்றிகரமாக விளங் கினார். பின்னர் "பாப்புலர் பிக்சர்ஸ்" என்ற பெயர் கொண்ட படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் மௌனப் படங்களை விநியோகம் செய்துவந்தார்.

பெங்களூரிலிருந்த "மைசூர் பிலிம் கம்பெனி" என்ற நிறுவனத்தில் நடிகராகவும், அவர்களது தயாரிப்பில் வெளியான சில படங்களின் டைரக்டராகவும் பணியாற்றினார். சதி சுலோசனா என்ற கன்னட  படத்தை டைரக்ட் செய்தார். சதி சுலோசனா படத்தில் ஒரு நடிகராகவும் ராவ் இடம்பெற்றார். இப்படம், "கோலாப்பூர் மகாராஷ்டிர சினிடோன்" என்ற ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. பின்னர் கோலாப்பூர் சாம்ராட் சினிடோன் நிறுவனத்திற்காக நாகானந்த் என்ற படத்தை டைரக்ட் செய்தார்.

yv%20rao%20550%2011.jpg

1937- ம் ஆண்டு மதுரை ராயல் டாக்கிஸாரின் சிந்தாமணி என்ற திரைப்படம் ஒய்.வி.ராவால் டைரக்ட் செய்யப்பட்டது. எம்.கே.டி.பாகவதர் நடித்த இப்படம் சென்னையில் ஒரே தியேட்டரில் ஓராண்டுக்கு மேல் ஒடிய சாதனைப் படைத்தது திரையுலகை அறிந்த யாவருக்கும் தெரிந்த சேதி.

சிந்தாமணி படத்தை டைரக்ட் செய்த ஒய்.வி.ராவ், அப்படத்தில் நடித்தும் உள்ளார். மதுரை ராயல் டாக்கிஸாரின் மற்றொரு படம் பாமா பரிணயம் . இதை டைரக்ட் செய்த ஒய்.வி.ராவ் தொடர்ந்து பக்த மீரா, சுவர்ணலதா ஆகிய படங்களை டைரக்ட் செய்து வெளியிட்டார். சொந்தமாக "ஶ்ரீஜெகதீஷ்" பிலிம்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கி மள்ளி வெள்ளி, விசுவ மோகினி, சத்யபாமா, தாசில்தார் ஆகிய தெலுங்குப் படங்களை தயாரித்தார்.

லவங்கி என்ற தமிழ்ப்படத்தை தயாரித்த ராவ், அதனை இந்தியிலும் தயாரித்து வெளியிட்டார்.

yv%20rao%20bhagavathar%20250.jpgஇவர் டைரக்ட் செய்து வெற்றிகரமாக ஓடிய படங்கள் சாவித்திரி, மஞ்சரி, மானவதி, பாக்ய சக்கரம், கிருஷ்ண காருடி போன்றவையாகும். புகழ்பெற்ற நடிகர்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், அசுவத்தம்மா, டி.பி.ராஜலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சாந்தா ஆப்தே, காஞ்சன மாலா செருகளத்தூர் போன்றவர்கள் இவரது டைரக்‌ஷனில் படங்களில் நடித்து புகழ் பெற்றார்கள்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கில ஆகிய பல மொழிகளை கற்ற ராவ், முற்போக்கு சிந்தனை கொண்டவர். திறமைமிக்க முன்னோடி கலைஞர். ஆரம்பக்கால தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

தன் இளமை தாண்டிய வயதில், ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான ஶ்ரீவள்ளி படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை குமாரி ருக்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது திருமணமும் திருப்திகரமானதாக அமையவில்லை.

குமாரி ருக்மணியுடனான திருமண வாழ்க்கை துயரத்தில் முடிந்தது. ஒய்.வி.ராவ் கடந்த 13.2.1973-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ம் தேதி உடல்நிலை குன்றி  மரணமடைந்தார்.

yv%20rao%20550%201.jpg

தனது உழைப்பால் பங்களிப்பு செய்து தமிழ் சினிமாவை வளர்த்த ஒய்.வி.ராவ், தமிழ் சினிமாவின் தொடக்கப் புள்ளி என்பதை எவரும் நிராகரிக்க இயலாது.

http://www.vikatan.com/news/article.php?aid=51101

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா முன்னோடிகள்( 6): சிவகங்கை ஏ.நாராயணன்

 

old%20%20cinema%20logo%206%281%29.jpg

   சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் படத்தின் தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன்

 மிழ்சினிமாவின் ஆளுமைகள் பற்றிய இந்த கட்டுரைகளில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளமுடியும். அறிவியல் வளர்ச்சியின் ஆரம்பநாளில் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா காமிரா, உலக மக்கள் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. மேலைநாடுகளில் மக்களின் இந்த ஆச்சர்யத்தை, வணிகநோக்கில் பயன்படுத்தி வெற்றிக்கண்டனர் பலர்.

ஆனால் தென்னிந்தியாவில் அதை கலையம்சமாக கருதி கையாண்டனர். மக்கள் மத்தியில், சினிமா வெற்றிகரமான வியாபாரம் என்று தெரிந்த பின்னரும், அதை கலைநோக்கில்தான் அணுகினர் நம்மவர்கள். இதுதான் இன்றைய சினிமாபெற்ற வெற்றிக்கு அடித்தளம்.

ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த அக்காலத்தில், ஒரு முழு நீள ஊமை படத்தை தயாரிப்பதற்கான அன்றைய செலவு, அதிகபட்சம் ரூ.5000 முதல் 6000/- வரை. ஆனால் திரைப்படங்களின் மீது காதல் கொண்டு திரிந்த ஒருவர்,  தான் விரும்பியபடி படம் தயாரிக்க அதிகட்சமாக செலவிட்டார்.

a_narayanan%20leftt%281%29.jpg''ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா என்ற 20 ரீல்கள் கொண்ட திரைப்படம், முழுக்க முழுக்க சென்னையில் தயாரிக்கப்பட்டது. இதற்காக அதன் தயாரிப்பாளர் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?... ரூ.75,000/- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊமைப் படங்கள் எதற்கும், இவ்வளவு தொகை செலவிடப்பட்டதாக புள்ளிவிவரம் இல்லை. அந்த தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன். முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்த பெருமைக்குரியவர்.

இன்சூரன்ஸ் ஏஜென்ட்

சிவகங்கையில் ஜனவரி 1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்த ஏ.நாராயணன், ஒரு பி.ஏ.பட்டதாரி. சினிமா தொழிலுக்கு வருவதற்கு முன்னர் பம்பாயில் ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக பணியாற்றியவர். ஆங்கிலப் படங்களின் விநியோகஸ்தர்களான கே.டி.சகோதரர்களோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. 1922-ஆம் ஆண்டு கல்கத்தாவில் 'க்வின்ஸ் சினிமா' என்ற டாக்கீஸை நடத்தினார். பின்னர் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் இவர் பாப்புலர் சினிமாவை (ஸ்டார் டாக்கீஸ்) நடத்தினார்.
 

அதே சமயத்தில் ஆங்கில மொழி துண்டுப் படங்களையும், டிராமாக்களையும் சென்னையில்,  தான் நடத்தி வந்த 'எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ், சென்னை' என்ற கம்பெனி மூலம் விநியோகம் செய்து வந்தார். 1927 ஆம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், 'ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சினிமா ஸ்டுடியோவை துவக்கினார். மூன்று ஆண்டுகளில் (1927-30) இவர் 20 க்கும் மேற்பட்ட ஊமைப் படங்களைத் தயாரித்ததாக தெரிகிறது. தென்னிந்திய பிலிம் தொழிலின் தந்தை என ஏ.நாராயணன் அழைப்படுகிறார்.

நாராயணன் தமது படங்களை, தம் சொந்தக் கம்பெனியான எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ் மூலமாகவும், அதன் பம்பாய், டில்லி, ரங்கூன், சிங்கப்பூர் கிளைகள் மூலமாகவும் விநியோகம் செய்தார். கல்கத்தாவில் அரோரா பிலிம் கார்ப்பரேஷன், வங்காள விநியோகத்தை மேற்கொண்டது. 1928 ல் ஹாலிவுட் சென்றார்.

இந்த நாளில்தான் மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா 20 ரீல்களில் சென்னையில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் சென்னை வெலிங்டன் தியேட்டரிலும், பம்பாய் சூப்பர் சினிமாவிலும், ரங்கூன் சினிமா டி-பாரிஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு 6 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த வெற்றி படமாகும். நேர்த்தியான இதன் தயாரிப்பிற்காக நாராயணன், பத்திரிக்கைகளால் அந்நாளில் பெரிதும் பாராட்டப்பட்டார்.

1929-ல் நாராயணன் கோவலனும் காற்சிலம்பும் என்ற ஒரு ஊமைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கான வெளிப்புறக் காட்சிகள் சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டன.

a_narayanan%20550%201%281%29.jpg

விவசாய உணர்வு என்ற 8000 அடி துண்டு படத்தை, இம்பீரியல் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டிற்காக இவர் தயாரித்தார். பிரசவமும குழந்தை நலனும், மேக நோய் (பால்வினை நோய்) ஆகிய டாக்குமென்ட்ரி படங்களை சென்னை பொது சுகாதார இலாகாவிற்காக தயாரித்து கொடுத்தார். 1929-ல் சென்னையில் செயல்பட்டுவந்த வர்மா எண்ணெய் கம்பெனிக் கிடங்கு தீப்பற்றி பலமணிநேரம் எரிந்தது. இதை டாகுமெண்டரி படமாக எடுத்து வெளியிட்டார் ஏ.நாராயணன்.

தென்னகத்தின் முதல் ஸ்டுடியோ சீனிவாஸ் சினிடோன்

1930களில் தென்னிந்தியர்கள் தங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க பம்பாய்க்கும், கோலாப்பூருக்கும், கல்கத்தாவுக்கும், நடிக நடிகையர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களோடும், பல மாதங்கள் தங்கி படத்தை முடித்துக் கொண்டு வரத் தேவையான மூட்டை முடிச்சுகளோடு போய்க் கொண்டிருந்தார்கள்.  இந்த நிலையைப் போக்க எண்ணிய நாராயணன், தென்னகத்தின் முதல்பேசும் பட ஸ்டுடியோவை 1934-ல் சென்னையில் உருவாக்கினார். சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் நிறுவப்பட்ட அந்த ஸ்டுடியோவின் பெயர் சவுண்ட் சிட்டி என்கிற சீனிவாஸ் சினிடோன்.

வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற அளவில் தன் சினிமா ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாத ஏ. நாராயணன், 'ஹிந்து' நாளேட்டில் சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டு, மக்கள் மத்தியில் மௌனப் படத்தின் கலை நுணுக்கங்களை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியவர்.

jithan%20banarjee%282%29.jpgமுதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை வெளிநாட்டில் திரையிட்ட பெருமையும் ஏ.நாராயணனையே சாரும். அனார்கலி என்ற மௌனப் படத்தை எடுத்து சென்று அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் அமெரிக்கர்களுக்கு திரையிட்டு காட்டினார்.

1931-க்கு பின் பேசும் படங்கள் சென்னையில் வெளிவர ஆரம்பித்தன. இவரால் ஆரம்பிக்கப்பட்ட 'சவுண்ட் சிட்டி ஸ்டுடியோ' வில் சென்னையில் தயாரிக்கப்பட்ட தமிழின் முதல் பேசும் படமான சீனிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து "தூக்கு தூக்கி", "தாராசசாங்கம்", "ஞானசுந்தரி", "துளசிபிருந்தா", "விக்கிரமாதித்தன்", "ராஜாம்பாள்", "விசுவாமித்ரா", "சிப்பாய் மனைவி", "விப்ரநாராயணா", "கிருஷ்ண துலாபாரம்", "ராமானுஜர்", ஆகிய படங்களை தயாரித்தார்.

இவர் தயாரித்த சிப்பாய் மனைவி என்ற படத்தின் கதாநாயகன், ஓர் போர்வீரன். அவன் போருக்கு போய்விட்டுத் திரும்பி வருவதற்குள், அவனுடைய மனைவியை ஓர் உயர் அதிகாரி 'பெண்டாள' நினைப்பார். படத்தில் இடம் பெற்றிருந்த இக்காட்சிக்கு பெரும் எதிர்ப்பு தோன்றியது. அந்த நாளில் இப்படம் பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மட சாம்பிராணி என்ற பெயரில் ஒரு நகைச்சுவை துண்டுப் படம் இவரால் தயாரிக்கப்பட்டது. ஏ.நாராயணனின் சீனிவாஸ் சினிடோனின் படம் மட சாம்பிராணி அல்லது அச்சுபிச்சு இதில் ஒரு பாடல்; கிச்சு பாடுகிறான்...

மாமனாராத்தைப்போல்
ஆனந்தம் வேறில்லை!
மாட்டுக் கொட்டாய் சாணி
வாசனைக்கீடில்லை!"
பலே! -

அந்தக் காலத்தில் சராசரி இளைஞனின் மாமனார் வீட்டைப் பற்றிய கருத்து இது!

r_prakash%282%29.jpgஇப்படத்தின் ராமுலு-சீனு என்ற இரண்டு நடிகர்கள் அச்சு, பிச்சு என்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தனர். நகரத்தின் நாகரீக மோகத்தில் சிக்கி, அச்சு பிச்சு இருவரும் தங்களின் பூணூல்களைக் கூட கழற்றி வீசி எறிந்துவிடுவார்கள். இறுதியில் நகரத்தில் கஷ்டப்பட்டு, மீண்டும் சொந்த ஊருக்குப் போய்விடுவார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை துண்டுபடமான  இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.

நாராயணனுக்கு ஈடான திறமையும், சினிமா மீது பெரிதும் ஆர்வமும் கொண்டவரான அவரது துணைவியார் மீனாம்பாள், ஐந்து படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தவர் என்பது வரலாறு நினைவுபடுத்தாமல் விட்ட செய்தி. சினிமா படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்திய பெண்மணி மீனாம்பாள் நாராயணன்.

சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கிய ஏ.நாராயணனிடம் பயிற்சி பெற்று பின்னாளில் பிரபல டைரக்டர்களாக உருவெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஆர்.பிரகாஷ், ஜித்தன் பானர்ஜி, பி.சி.புல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவர் தயாரித்த மௌன படங்களின் விவரம் (இயக்குனர் பெயர் அடைப்புக்குறிக்குள்)

படத்தின் பெயர் (டைரக்டர்கள்)
1. தர்மபத்தினி (ஏ.நாராயணன்)
2. ஞானசௌந்தரி (ஏ.நாராயணன்)
3. கோவலன் (ஏ.நாராயணன்)
4. கருட கர்வபங்கம் (ஏ.நாராயணன்)
5. லங்கா தகனம் (ஆர்.பிரகாஷ்)
6. பாண்டவ நிர்வாகன் (ஒய்.வி.ராவ்)
7. கஜேந்திர மோட்சம் (ஆர்.பிரகாஷ்)
8. சாரங்கதாரா (ஒய்.வி.ராவ்)
9. காந்தாரி வதம் (ஆர்.பிரகாஷ்)
10. பிரமீளா அர்ஜூனன் (எஸ்.கோபாலன்)
11. போஜராஜன் (ஒய்.வி.ராவ்)
12. பாண்டவ அஞ்ஞான வாசம் (ஒய்.வி.ராவ்)
13. ராஜஸ்தான் ரோஜா (ஆர்.பிரகாஷ்)
14. நரநாராயணன் (ஆர்.பிரகாஷ்)
15. விசவாமித்ரா (ஜிதன் பானர்ஜி)
16. பவழராணி (ஆ.பிரகாஷ்)
17. மாயா மதுசூதனன் (ஜிதன் பானர்ஜி)
18. மிங்கிரேல்லியத்தாரகை அல்லது லைலா (ஆர்.பிரகாஷ்)
19. பீஷ்மர் பிரதிக்ஞை (ஆர்.பிரகாஷ்)
20. மச்சாவதாரம் (ஆர்.பிரகாஷ்)

சென்னையில் தயாரான முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்த பெருமைக்குரிய ஏ.நாராயணன், தமிழ் சினிமா உலகம் மறந்த ஒரு முன்னோடி. 1939 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள் எதிர்பாராதவிதமாக மறைந்தார்.

a_narayanan%20550%2011%281%29.jpg

இவர் தயாரித்த எந்த மௌனப்படங்கள் இன்று காட்சிக்கு கிடைக்கவில்லை. இந்தியர்களின் அலட்சியத் தால் நாராயணனின் மௌனப்படங்களில் எதுவும் மிஞ்சவில்லை; அனைத்தும் அழிந்து போயின. தமிழ்சினிமாவின் சாபக் கேடுகளில் ஒன்று தங்கள் முன்னவர்களின் படைப்புகளை பாதுகாக்காதது. அவர்களின் புகழை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லாதது.

ஹாலிவுட்டுக்கு போய் சினிமா "ரகசியங்களை அறிந்து கொண்டு வந்த சில இந்தியர்களில் இவரும் ஒருவர். இவர் தொடங்கிய 'சீனிவாஸ் ஸினிடோன்' என்ற ஸ்டுடியோவிற்கு 'சப்த நகரம்' என்று கூட பெயர் உண்டு. "தமிழ் சினிமா பிரபஞ்சத்தின் ஆதிகர்த்தா மிஸ்டர் (ஏ) நாராயணன் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்“ என ஏ.நாராயணனுக்கு புகழ் வார்த்தைகளால் அஞ்சலி செலுத்தியது ஆனந்த விகடன் - 1939 ஆம் வருட இதழ்.

http://www.vikatan.com/news/article.php?aid=51410

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா முன்னோடிகள்: இயக்குனர் ஆர்.பிரகாஷ்

 

old%20cinema%207%20logo.jpg

சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர் ஆர். பிரகாஷ்

சென்னையின் முதல் சினிமா  தியேட்டரைத் தொடங்கிய ஆர்.வெங்கையாவின் மூத்த மகனான இவர், சிறந்த தியேட்டர் அதிபராக விளங்கினார்.

சினிமாடோகிராபி' கலையை ஒரு கல்விப்படிப்பாக லண்டனிலும், ஹாலிவுட்டிலும் கற்றவர். மேலை நாட்டிலிருந்து நாடு திரும்பியவுடன் தமது தந்தையாரின் விருப்பத்திற்கிணங்க 'ஸ்டார் ஆப் ஈஸ்ட் பிலிம்ஸ்' ஸ்டூடியோவை சென்னையில் ஆரம்பித்து, 'கஜேந்திர மோட்சம்', 'மச்சாவதாரம்', 'நந்தனார்', 'பீஷமர் பிரதிக்ஞை' ஆகிய மௌனப் படங்களைத் தயாரித்தார்.

r_prakash.jpgபின்னாளில் சிறந்த டைரக்டர்களாக விளங்கிய சி.புல்லையா, ஒய்.வி.ராவ் ஆகியோர் இவரிடம்தான் இக்காலகட்டத்தில் வேலை செய்து வந்தனர். சினிமாக் கலையைப் பற்றிய ஆரம்ப பாடமே இவரிடம்தான் இவர்கள் கற்றதாக சொல்லலாம்.

தென்னிந்திய பிலிம் தொழிலின் தந்தை என அழைக்கப்பட்ட காலஞ்சென்ற ஏ.நாராயணன், 'பீஷ்மர் பிரதிக்ஞை' (ஆர்.பிரகாஷினால் தயாரிக்கப்பட்டது) திரைப்படத்தில் சிறிய பாகமேற்று நடித்ததாகக் கூறப்படுகிறது.

1929- ல் இவர் ஒரு எழுத்தாளரானார். தண்டையார்பேட்டையில் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற ஸ்டூடியோவின் உரிமையாளரான ஏ.நாராயணனுடன் இணைந்து சினிமா தொழிலில் ஈடுபட்டார்.

ஆர். பிரகாஷ், நாராயணன் தயாரித்த படங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டும், சில படங்களை இயக்கவும் செய்தார். அதில் குறிப்பிடத்தக்க படங்கள்  'பாண்டவ நிர்வாகன்', 'விசுவாமித்ரா', 'மாயா மதுசூதன்', 'ராஜஸ்தான் ரோஜா', 'மங்கிரேலிய நட்சத்திரம்', 'போஜ ராஜன்' போன்ற படங்கள்.

பேசும் படங்கள் தயாரிக்கப்பட ஆரம்பித்தபின் 'சவுண்டு ஸிடி' நிறுவனத்தில் பணியாற்றினார். (.ஏ.நாராயணனால் அமைக்கப்பட்டது). பின் சீனிவாசா சினிடோன் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்ட 'இந்திர சபா'வை டைரக்ட் செய்தார். 1935-ஆம் ஆண்டில் சுந்தரம் சவுண்டு ஸ்டூடியோவுக்காக 'கிருஷ்ண நாரதி'யை டைரக்ட் செய்தார். 1936-ல் இவரது இயக்கத்தில் 'நளாயினி' வெளிவந்தது. 

r%20prakash%20right%20leftt.jpg1937-ஆம் ஆண்டு ஏ.எம்.கம்பெனிக்காக சீனிவாசா மூவிடோனில் தயாரிக்கப்பட்ட 'சிப்பாயின் மனைவி' என்ற படத்தையும், ஜூபிடரின் 'அநாதைப் பெண்' என்ற படத்தையும் டைரக்ட் செய்தார். இந்தப்படத்தில் பியு சின்னப்பாவுடன் இணைந்து எம்.கே ராதா நடித்திருந்தார்.

1938-ஆம் ஆண்டு ராஜகோபால் டாக்கீஸாருக்காக 'கிருஷ்ணன் தூது' திரைப்படத்தினை இயக்கினார்.

இப்படத்தின் மூலம்தான் பிரபல தெலுங்கு நடிகையான கண்ணாம்பா தமிழ்த்திரையுலகிற்குள் நுழைந்தார்.

இதே ஆண்டில் 'பாரிஸ்டர் பார்வதீஸம்' என்ற தெலுங்குப் படத்தை மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷனுக் காகத் தயாரித்தார். 1939 ஆம் ஆண்டு பவானி புரொடக்‌ஷன்ஸ் 'சண்டிகா' (தெலுங்கு)வை டைரக்ட் செய்தார்.

தமது சொந்த கம்பெனி மூலம் 'தாரா சசாங்கம்' (தெலுங்கு) படத்தைத் தயாரித்தார். பிறகு 'மாயபில்லா' படத்தைத் தயாரித்தார்.

1956-ஆம் ஆண்டுத் தமிழ்ப் படமான 'மூன்று பெண்கள் படத்தை டைரக்ட் செய்தத்தோடு, முனாஸ் தயாரித்த 'தேவ சுந்தரி' படத்தின் தெலுங்குப் பதிப்பை டைரக்ட் செய்யப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தப் பட தயாராப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரகாஷ், 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.

தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்த ஜாம்பவான் என அழைக்கப்பட்ட டைரக்டர் ஆர்.பிரகாஷ், பல டாகுமெண்டரி படங்களை சென்னையில் தயாரித்தார். சென்னையில் மூன்று தியேட்டர்களுக்கு உரிமையாளராக இருந்த பிரகாஷ், தான் தயாரித்த படங்களை இவற்றில் திரையிட்டார்.

'வெலிங்டன்' பாலத் திறப்பு விழாவை ஒரு டாக்குமெண்டரியாக தயாரித்து இவர் வெளியிட்டார். பிறகு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 'காலரா நோயை  தடுப்பது எப்படி?' என்ற படத்தை எடுத்து வெளியிட்டார்.

r%20prakash%20550%201.jpg

டைரக்டர் ஆர்.பிரகாஷ் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் சென்னையில் தொடங்கிய 'தி ஸ்டார் ஆஃப் ஈஸ்ட் கம்பெனி' சில ஆண்டுகளிலேயே கடனில் மூழ்கி அழிந்தது. இவர் கம்பெனியில் வேலை பார்த்தவர்களில் சிலர் செய்த நம்பிக்கைத் துரோகம், அதீதக்கடன் போன்ற விஷயங்கள் இவரின் சினிமாக் கம்பெனியின் மூடுவிழாவிற்கு காரணமானது.

r%20prakash%20550%202.jpg

அரசாங்கம் இவரது சினிமா ஸ்டுடியோவை எடுத்துக் கொண்டது. எனினும் அரசாங்கத்திடமிருந்து சினிமா காமிராவை வாடகைக்கு எடுத்து, அக்காலத்தில் தளரா முயற்சியுடன் துண்டுப் படங்கள் எடுத்தார் டைரக்டர் ஆர்.பிரகாஷ்.

தமிழ்சினிமா உலகம் நன்றியோடு நினைவு கூறப்படவேண்டியவர்களில் தமிழ்சினிமா முன்னோடியான ஆர்.பிரகாஷ் முக்கியமானவர்!

http://www.vikatan.com/news/article.php?aid=51712

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா முன்னோடிகள்: 'மாடர்ன் தியேட்டர்ஸ்' டி.ஆர். சுந்தரம்!

 

old%20cinema%20logo%208.jpg

மாடர்ன் தியேட்டர்ஸ் 'டி.ஆர்.சுந்தரம்'

வெள்ளையர் ஆட்சியில் மக்களின் அபிமானமாக விளங்கிய சினிமாவிற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போர் சமயங்களில், பிரிட்டிஷாரின் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் எடுக்கப்பட வேண்டும் என கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்ட வரலாறும் தமிழ் சினிமாக்களுக்கு உண்டு. பிரிட்டிஷாரின் கெடுபிடிகளை மீறி, சுதந்திர உணர்வை வளர்த்தன சில சினிமாக்கள். சுதந்திர வீரர்களை தீரர்களாக சித்தரித்து, அவர்கள்தம் படைப்புகளை மறைமுகமாக திணித்து தங்கள் தேச உணர்வை வெளிப்படுத்தின அத்தகைய சினிமாக்கள்.

modern%20theatre%20550%201.jpg

இந்த நேரத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தமிழக தளகர்த்தகர்களில் ஒருவரும், மாபெரும் கவியுமான பாரதியின் எழுச்சி மிகு பாடல் ஒன்றை, தம் படத்தில் துணிச்சலுடன் முதன்முறையாக பயன்படுத்தினார் ஒரு தயாரிப்பாளர். அவர், தமிழ்த்திரையுலகில் மறக்கவியலா படங்களை தந்து, மக்களிடம் நற்பெயர் பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.எஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட டி. ஆர். சுந்தரம்.

சினிமா வளர்த்த சீமான் டி.ஆர்.சுந்தரம்

modern%20theatre%20250.jpgசேலம் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1907-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16- ஆம் தேதி பிறந்தார் டி.ஆர்.சுந்தரம். தந்தை ராமலிங்க முதலியார். திருச்செங்கோடு பகுதியில் பருத்தி நூல் விற்பனையில்  முக்கிய பிரமுகர். பள்ளிப்படிப்பை முடித்து, இளைஞர் வயதை எட்டிய தன் மகன் சுந்தரத்தை,  நெசவுத்தொழிலின் புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள, 1930 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு அனுப்பினார் ராமலிங்கம்.

பிரிட்டனில் லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழகத்தில், பருத்தி நூலின் மீது சாயம் ஏற்றும் புதிய தொழில் நுட்பத்தை பயின்று, பட்டம் பெற்றார் சுந்தரம். பிரிட்டனில் ஆங்கில பிரபு ஒருவர் சுந்தரத்திற்கு நண்பரானார்.

அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்ல நேர்ந்த சுந்தரம், பிரபுவின் மகள் கிளாடிஸ் மீது காதல் கொண்டார். ஆரம்பத்தில் எதிர்த்த அந்த ஆங்கிலேய நண்பர், பின்னர் சுந்தரத்தின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். கிளாடிஸ்ஸுடன் 1933 ல் தாய்நாடு திரும்பிய சுந்தரம், தனது காதல் மனைவியை ஏற்காடு மலைவாசஸ்தலத்தில் குடியமர்த்தினார்.

வெளிநாடு சென்றுவந்ததிலிருந்து சுந்தரம், தனது  மூதாதையினரின் தொழிலை தொடர்வதில் நாட்டமில்லாதவராக இருந்தார். அவரது கவனம், அப்போது மக்களிடையே எழுச்சிபெற்றுவந்த சினிமாவின் மீது திரும்பியது. 1934- ல்  சேலம் நகரத்தில் அப்பொழுது 'ஏஞ்சல் பிலிம்ஸ்' என்ற கம்பெனி, சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது. அதன் உரிமையாளர்களான சுப்பராய முதலியார், வேலாயுதம் பிள்ளை ஆகியோருடன் ஏஞ்சல் பிலிம்ஸில் பங்குதாரரானார் டி.ஆர்.சுந்தரம்.

புதிய நிறுவனத்தின் சார்பில் கல்கத்தா சென்று ஐந்து பேசும் படங்களை தயாரித்தார். படத்தயாரிப்பிற்காக கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களுக்கு செல்வதில் நேர்ந்த சங்கடங்களையும், வீண் தாமதத்தையும் மனதிற்கொண்டு சேலத்திலேயே ஒரு ஸ்டுடியோவை நிர்மாணிக்க முடிவு செய்த டி.ஆர். சுந்தரம், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பாதையில் மலையடி வாரத்தில், சுமார் 10 ஏக்கர் புன்செய் நிலத்தை விலைக்கு வாங்கி 1936 ல் புதிய ஸ்டுடியோவை நிர்மாணித்தார்.

modern%20theatre%20250%202.jpg'மார்டர்ன் தியேட்டர்ஸ்' என்ற பெயரில் கம்பீரமாக எழுந்து நின்ற அந்த ஸ்டுடியோவை, 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, அப்போதைய சேலம் மாவட்ட கலெக்டர் ராமூர்த்தி திறந்துவைத்தார். தன் சொந்த ஸ்டுடியோவில் 1937 ஆம் ஆண்டு, தனது முதல் படமான சதி அகல்யா வின் படப்பிடிப்பை தயாரித்தார். அந்நாளைய ரசிகர்களை கிறங்கடித்த சிங்களத்து குயில், தமிழ் சினிமாவின் முதற் கவர்ச்சி கன்னி எனப்பட்ட தவமணி தேவி, அகல்யாவாக நடித்தார்.

இந்த படத் தயாரிப்பின்போது, கதாநாயகி தவமணிதேவியை சென்னைக்கு அழைத்து வந்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார் சுந்தரம். அப்போது நடிகை தவமணிதேவி ' தமிழ்ப் பெண்கள் கூச்சத்தை துறந்து சினிமாவில் நடிக்க முன் வர வேண்டும்'  என்ற வேண்டுகோளை முன் வைத்தார். சந்திப்பிற்கு பின் நிருபர்களுக்கு கொடுக்கப்பட்ட அவரது புகைப்படங்களை கண்டு பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள் (அன்று!). படத்தில் நடிகை தவமணி தேவி நீச்சல் உடையில் புன்னகைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு தனது முதல் படமான 'சதி அகல்யா' விற்கு வித்தியாசமான முறையில் விளம்பரத்தை செய்தார் சுந்தரம். 'சதி அகல்யா' வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை பெற்றுத் தந்தது.

ஆங்கில வீரதீர சாகசப் படங்களை விரும்பிப் பார்க்கும் சுந்தரத்திற்கு தமிழகத்தில் 'ஸ்டண்ட் படங்கள்" தயாரிக்க விருப்பமாக இருந்தது. இதற்கென ஜெர்மனியிலிருந்து வாக்கர் (Walker) மற்றும் (Baez) 'பேய்ஸ்' என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களை தனது ஸ்டுடியோவிற்கு வரவழைத்தார். ஒளிப்பதிவில் புதிய தொழில் நுட்பங்களில் தேர்ந்த அவர்களைக் கொண்டு, தமிழின் முதல் 'ஸ்டண்ட் படமான மாயா மாயவன் வெளியிடப்பட்டது.

தமிழ்த்திரையுலகின் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பி. யு சின்னப்பாவை வைத்து,  பிரெஞ்சு எழுத்தாளர் 'அலெக்ஸாண்டர் தூய்மா' என்பவர் எழுதிய Mar in the Iron mask என்ற நாவலைத் தழுவி 'உத்தமபுத்திரன்' என்ற படத்தை சுந்தரம் டைரக்ட் செய்தார். இப்படத்தில் சின்னப்பாவிற்கு இரட்டை வேடம். இப்படத்தில்தான் பாரதியாரின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே...' என்ற பாடலை தன் சொந்தக் குரலில் சின்னப்பா பாடினார். தமிழ்த் திரை வரலாற்றிலேயே முதன் முறையாக பாரதியாரின் பாடல் இடம் பெற்றது இப்படத்தில்தான். இந்த புகழுக்குரியவர் டி.ஆர்.எஸ்.

24.10-1940ல் வெளியான உத்தமபுத்திரன் பெரும் வெற்றி பெற்றது. உத்தமபுத்திரனை தொடர்ந்து, சுந்தரம் எடுத்த தமிழ்ப் படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆகவே உத்தமபுத்திரனுக்குப் பிறகு மற்றொரு வெற்றிப் படத்தை தர வேண்டிய கட்டாயத்தில் டி.ஆர்.சுந்தரம் இருந்தார். அதற்காக சுந்தரம்பிள்ளை இயற்றிய 'மனோன்மணியம்' என்ற கவிதை நடை காப்பியத்தை படமாக்க சுந்தரம் முடிவு செய்தார்.

modern%20theatre%20550%203%281%29.jpg

கதையை தேர்ந்தெடுத்தப்பின் நடிக, நடிகையர் தேர்வை புதுமையான முறையில் நடத்தினார் டி.ஆர்.சுந்தரம். அதாவது, அதற்கு முன் யாருமே செய்யாத வகையில், எல்லா தமிழ் நாளிதழ்களிலும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.

''சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணியை திரைப்படமாக தயாரிக்கவுள்ளோம். அப்படத்திற்கு பொருத்தமான கதாநாயகன், கதாநாயகியை ரசிகர்களே தேர்ந்தெடுத்து எங்களுக்கு கடிதம் எழுதுங்கள்'' என்பதுதான் விளம்பர வரிகள். இந்த விளம்பரத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள், 'மாடர்ன் தியேட்டர்ஸ்'க்கு நூற்றுக்கணக்கில் கடிதங்கள் எழுதினர். பெரும்பான்மை ரசிகர்களின் எண்ணப்படி பி.யு.சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் படத்தின் கதாநாயகன், கதாநாயகியாகவும் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழ்த்திரையுலகில் பெரும்பொருட்செலவில் உருவான படம் 'மனோன்மணி' என்ற பெயர் கிடைத்தது படத்திற்கு. படத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் செலவழித்தார் டி.ஆர்.சுந்தரம். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு போர்க்காட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்தனர். படப்பிடிப்பு ஏற்காடு மலை அடிவாரத்தில் நடந்தது. இப்படப்பிடிப்பில் சேர, பாண்டிய படைவீரர்களாக நடித்தவர்களுக்கு நாள் ஊதியமாக 'மூன்றணா' கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு உணவு, நீர் அளிக்க பத்து மாட்டுவண்டிகளில் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டன.

modern%20theatre%20right%201.jpgஆறு காமிராக்கள் பல்வேறு கோணங்களில் நிறுத்தப்பட்டு, போர் காட்சிகளை படம்பிடித்தது. பெரும் பிரம்மாண்டமான இந்த காட்சியை பத்து நாட்களில் எடுத்தார் சுந்தரம். படத்தில் பி.யு.சின்னப்பா மிகவும் கவர்ச்சிகரமாக புலித்தோல் உடையில் தோன்றியது, விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும் ரசிகர்கள் திரும்ப திரும்ப வந்து படத்தை பார்த்து வெற்றிகரமானதாக்கினர்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பிரிட்டனின் யுத்த முயற்சிகளை ஆதரித்து, ஒரு படத்தை 1944-ல் டி.ஆர்.சுந்தரம் எடுத்தார். பர்மா ராணி என்ற அந்த படத்தை 11000 ஆயிரம் அடியில் தயாரித்தார். இதில் 'சுந்தரமே பஜ்ஜினாமா' என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் கதாநாயகன் ஹொன்னப் பாகவதர், கதாநாயகி கே.எல்.வி.வசந்தா. ஜப்பான் ராணுவம், பர்மாவை ஆக்ரமித்திருந்ததை முறியடிக்க, பிரிட்டிஷ், இந்திய ராணுவம் போரிடுவதாக கதையை அமைத்தார் சுந்தரம்.

படத்தில் ஜப்பானிய போர் வீரராக நடித்தவர் காளி என்.ரத்தினம். சம்பிரதாயமாக எடுக்கப்பட்ட 'பர்மா ராணி' யில் சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்த்திருந்ததால் வெற்றிபெற்றது. நாடு சுதந்திரம் அடைந்ததபின் ஆங்கிலேயர் ஆதரவுப் படம் என்று முத்திரை குத்தப்பட்டு 'பர்மா ராணி' தடை செய்யப்பட்டது.

அடுத்ததாக 'சௌ சௌ' என்ற நகைச்சுவை துண்டுப் படத்தை சுந்தரம் தயாரித்து, இயக்கினார். படத்தில் மூன்று தனிதனித் நகைச்சுவை கதைகள் இடம்பெற்றிருந்தது மக்களை ரசிக்க வைத்தது.
1. கலிகால மைனர் - அதில் காளி என்.ரத்தினம்,  டி.எஸ்.துரைராஜன், மற்றும் சி.டி.ராஜகாந்தம் நடித்திருந்தனர்.  2. பள்ளி நாடகம் - இதில் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் நடித்திருந்தனர்.
3. சூரப்புலி - இதில் காளி என்.ரத்தினம், சி.டி. ராஜகாந்தம் நடித்திருந்தனர். இவர்கள் பின்னாளில் கணவன் மனைவியானார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி', அதுவரை மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய படங்களிலேயே மிக அதிக செலவும், மிகப் பெரிய வெற்றியையும் பெற்ற படம். 1947ல் வெளிவந்த இப்படத்தில், ஊமையனாக நடித்த காளி என்.ரத்தினம்" அந்நாளில் தியாகராஜ பாகவதர் பாடி நடித்த மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற பாடலை தனது நகைச்சுவையான பாணியில் " .... மம்மும மீமையை மெம்மார்..." என்று பாடி நடித்தது, ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 

'சுலோச்சனா' என்ற இராமாயணக் கால கதையை படமாக்க சுந்தரம் முடிவு செய்தார். அப்படத்தின் கதா நாயகன் 'இந்திரஜித்' வேடத்தில் நடிக்க, பி.யு.சின்னப்பாவை ஒப்பந்தம் செய்தார். 1946 ஆம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பின் முதல் நாள்,  இந்திரஜித்தாக நடிக்க வேண்டிய பி.யு.சின்னப்பா, ஸ்டுடியோவிற்கு உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. எரிச்சலான சுந்தரம், தானே இந்திரஜித்தாக மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்க தொடங்கிவிட்டார். பி.யு.சின்னப்பா, கதாநாயகன் வேடத்திலிருந்து நீக்கப்பட்டார். டி.ஆர்.சுந்தரம் கதாநாயகனாக நடித்த முதல் படம் என்ற பெருமைதான் வந்தது, 'சுலோச்சனா' விற்கு. மற்றபடி ரசிகர்களிடம் எடுபடவில்லை.

modern%20theatre%20550%2022.jpg

டி.ஆர். சுந்தரம், தனது எந்த சினிமா தயாரிப்புக்கும் வெளியிலிருந்து பணம் கடனாக வாங்குவதில்லை. தானே படத்திற்கான பட்ஜெட்டை தயாரித்து, குறித்த தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கி, குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவார். தமிழ் நாட்டிலேயே வெளியிலிருந்து கடன் பெறாமல் சொந்தப் பணத்திலேயே படம் தயாரித்த ஒரே நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பட தயாரிப்பிற்காக அல்லாமல் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தை வளர்ப்பதற்காக, சுந்தரம் 100 ரூபாய் மதிப்பில் 5000 பங்கு பத்திரங்களை வெளியிட்டு, அந்த காலத்திலேயே ஐந்து லட்சத்தை திரட்டினார். இப்பங்குகள் மாடர்ன் தியேட்டர்ஸ் பெயரில் வெளியிடப்பட்டன. படத் தயாரிப்பிற்காக தனது ஸ்டுடீயோ வில் நடிகர், நடிகைகள், மற்ற கலைஞர்கள் தங்கி பணிபுரிய, தனி குடியிருப்பு கட்டிக்கொடுத்தார்.

modern%20puc.jpg

படப்பிடிப்பின்போது கறாரான மனிதராக தோற்றம் காட்டும் டி.ஆர்.எஸ், மற்ற விதங்களில் கலைஞர் களோடு சுமூகமான தயாரிப்பாளராக விளங்கினார். கலைஞர்கள் அவரை முதலாளி என்று அழைத்தனர். இன்றளவும் சினிமா உலகில் முதலாளி என்றால் அது டி.ஆர்.எஸ் தான்.

தினந்தோறும் தனது ஸ்டுடீயோவிற்கு வரும் சுந்தரம், நேரே தன் அறைக்கு செல்லமாட்டார். படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று, படக்குழுவினரிடம் அவர்களது நிறை குறைகளை கேட்பார். அவர்கள் சொல்கிற குறைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு கூறி, நிவர்த்திச் செய்ய நடவடிக்கை எடுப்பார். ஸ்டுடியோ ஊழியர்களிடம், அந்த நேரத்தில் தங்களின் குறைகளை சிறிய தாளில் எழுதித்தரச் சொல்லி பெற்றுக்கொள்வார்.

modern%20theatre%20550%202.jpg

திராவிட இயக்க தலைவர்களாக பின்னாளில் விளங்கிய பலருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தாய்வீடு போன்று விளங்கியது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பங்கேற்றதனால் புகழ்பெற்றனர். திரைப்பட பாடலாசிரியர்கள் மருதகாசி, கவி கா.மு.ஷெரிப் பாடல்கள் எழுதி புகழ் பெற்றது இங்குதான்.

பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் டி.எம்.சௌந்தர ராஜன் போன்றோர் ஆரம்ப காலத்தில் தங்களை திறமையை வளர்த்துக் கொண்டதும் இந்த ஸ்டுடியோவில் தான். நடிகர் ஜெயசங்கர், மனோகர், நம்பியார் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் பிரபலமடைந்ததும் இங்குதான்.

கண்ணதாசனின் திரையுலக பிரவேசம் நிகழ்ந்தது மாடர்ன் தியேட்டர்ஸில்தான். 'சண்டமாருதம்' என்ற தனது பத்திரிகையில் உதவி ஆசிரியராக கண்ணதாசனை நியமித்தார். கண்ணதாசன் முதன்முதலில் சினிமாவிற்கு பாட்டு எழுதியதும் மாடர்ன் தியேட்டர்ஸில்தான். அஞ்சலி தேவியையும், எம்.ஆர்.ராதாவையும் சினிமாவில் அறிமுகம் செய்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

கண்டிப்புக்கு பேர் போன சுந்தரம், படப்பிடிப்பின் போது ஒரு சர்வாதிகாரிப் போல்தான் நடந்து கொள்வார். படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி, படத்தை குறித்த நேரத்தில் வெளியிடும் பழக்கமுடையவர். தனது ஸ்டுடியோவில் தயாராகி, எதிர்பாராதவிதமாக எரிந்து போன 'போஜன்' படத்தை ஒரே மாதத்தில் திரும்பவும் படமாக்கி திரையிட்ட சாதனையாளர் சுந்தரம். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை தயாரித்தது.

modern%20theatre%20250%20last.jpg மலையாள மொழியின் முதல் பேசும் படமான 'பாலன்' திரைப்படத்தை 1938 ல் எடுத்தவர் சுந்தரமே. தமிழின் முதல் கலர் படமான 'அலிபாபவும் நாற்பது திருடர்களும்' படத்தை தயாரித்தவரும் சுந்தரமே. அதேபோல் மலையாளத்தில் முதல் வண்ணப் படமான 'கண்டம்பெச்சகோட்டு' என்ற படம் மாடர்ன் தியேட்டர்ஸில் 1961ல் தயாரிக்கப்பட்டது என்பது ஒரு சாதனை. அமெரிக்க படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'Jungle' என்ற ஆங்கில படத்தையும் தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம் .

பாரதிதாசனின் 'எதிர்பாராத முத்தம்' என்ற கதையை பொன்முடி என்ற பெயரில் சுந்தரம் தயாரித்தார். இப்படத்தை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். இப்படம் 1950 ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. படத்தில் பொன்முடியாக நரசிம்ம பாரதியும், பூங்கோதையாக அந்நாளைய கவர்ச்சி ராணி எனப்பட்ட மாதுரிதேவியும் நடித்திருந்தனர். அப்படத்தின் காதல் காட்சிகள், மிக விரசமாக அமைந்திருந்தன என பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தன.

இப்படத்தை தொடர்ந்து 'திகம்பர சாமியார்' என்ற படத்தை தானே டைரக்ட் செய்து தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம். இப்படத்தில் நம்பியார், 10 வேடங்களில் தோன்றினார். இப்படத்தின் கதை வழுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவலைத் தழுவியது.

மந்திரி குமாரி

'மந்திரி குமாரி' என்ற நாடகம் தமிழ் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. கருணாநிதி எழுதிய இந்த நாடகத்தை விலைக்கு வாங்கிய டி.ஆர்.சுந்தரம், 'மந்திரகுமாரி' என்ற பெயரில் படமெடுத்தார். எல்லிஸ் ஆர். டங்கன் என்ற வெளிநாட்டைச்சேர்ந்தவர் டைரக்டர் பொறுப்பை ஏற்றார். திரைப்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை எழுத, கருணாநிதி சேலம் வந்து, மாத சம்பளமாக ரூ500/- பெற்று திரைப்படத்தின் வசனத்தை எழுதிக் கொடுத்தார். கனல் பறக்கும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றது. படத்தின் கதாநாயகனாக, தளபதியின் வேடம் அப்போது வளர்ந்துவந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு தரப்பட்டது.

படத்தின் வில்லன் காதாபாத்திரம் பேசும் வசனங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. தன் காதல் மனைவி, தன் திரைமறைவு வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால், அவளை கொல்ல திட்டம் தீட்டி, மலையுச்சிக்கு கொண்டுவருகிறான் வில்லன். ஆனால் அதை புரிந்துகொள்கிற மனைவி, தன் சாமர்த்தியத்தால் அவனையே கொன்று, தான் தப்பிக்கும் உத்தியை மக்கள் ரசித்து பார்த்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது.

modern%20theatre%20550%204.jpg

'Many Rivers to Cross' என்ற ஆங்கிலப் படத்தை தழுவி, 'கொஞ்சும் குமரி'  என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தின் கதாநாயகி,  ஒரு ரௌடி டைப். ஹீரோவை முரட்டுத்தனமாகக் காதலிக்க கதாநாயகன் மறுக்க, இறுதியில் அவனை துப்பாக்கி முனையில் தன் சகோதரர்களின் ஆதரவில் மணக்கிறார். இதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் கதாநாயகி மனோரமா.

மனோரமாதான் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்த டி.ஆர்.சுந்தரம், முதன் முதலாக ஒரு காமெடி நடிகையைக் கதாநாயகி ஆக்கினார். 'கொஞ்சும் குமரி' படம் தயாராகிக் கொண்டிருந்த சமயம்தான் அந்த துக்ககராமான நிகழ்வு நடந்தது.  சாதனைகள் பல படைத்த சுந்தரம், திடீர் மாரடைப்பால் 1963 ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாள், சேலத்தில் மரணமடைந்தார். டி.ஆர்.எஸ். முழுமையாகத் தயாரித்த கடைசிப் படம் 'கவிதா'.

டி.ஆர். எஸ் மரணத்திற்குப்பிறகு அவரது மகன் தொடர்ந்து படங்களை எடுத்தார். இருப்பினும் கால மாற்றத்தால் தங்களை மெருகேற்றிக்கொள்ளமுடியாத சூழலில், மாடர்ன் தியேட்டர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டது. தன் புதுமையான தயாரிப்புகளால் மக்களை மகிழ்வித்த மாடர்ன் தியேட்டர்ஸ் தமிழ்சினிமா வளர்ச்சியின் ஒரு மவுன அடையாளமானது.

modern%20theatre%20left.jpg1937 முதல் 1982 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய படங்களின் எண்ணிக்கை 136. இதில் டி.ஆர்.எஸ். தயாரித்தது 98 படங்கள். இதில் டி.ஆர்.எஸ் இயக்கியது 55 படங்கள். 1937-ல் சதி அகல்யாவில் தொடங்கி 1963ல் எடுக்கப்பட்ட 'யாருக்கு சொந்தம்' வரை (சுமார் 27ஆண்டுகளில்) 52 தமிழ்படங்களையும், ஏழு சிங்கள படங்களையும், எட்டு மலையாளப்படங்களையும் மற்றும் தெலுங்கு, கன்னடம் இந்தி ஆங்கிலம் உட்பட மொத்தம் 98 படங்கள் தயாரித்து அவற்றில் 55 படங்களை இயக்கியும் சாதனை படைத்தவர் சுந்தரம்.

டி.ஆர்.சுந்தரத்தை கவுரவிக்கும் விதமாக பாராட்டி, அவரது மார்பளவுச் சிலையை கடந்த 2000 ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி, சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் திறந்துவைத்தார்.

டி.ஆர். சுந்தரம், இரண்டுமுறை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத அடையாளமாகவும், ஏராளமான திரைக்கலைஞர்களுக்கும் தாய் வீடாக விளங்கிய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தற்பொழுது நவீன குடியிருப்பு வளாகமாக மாறிவிட்டது. மாடர்ன் தியேட்டரை ஞாபகப்படுத்தும் ஒரே அடையாளமாக 'மாடர்ன் தியேட்டார்ஸ்'  என்ற அலங்கார வளைவு மட்டும் இன்றும் மௌன சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=52064

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா முன்னோடிகள் - புரட்சி இயக்குனர் - கே.சுப்பிரமணியம்-தொடர் 9

 

k_s%20logo%209.jpg

யக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம்

தமிழ் திரைப்பட உலகின் முதல் புரட்சிக்காரர்

மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அவரை நாடக மேடையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். புரட்சி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் முதல் படம் ''பவளக்கொடி"

k_s%20left.jpgஅந்நாளில் புகழ்பெற்றிருந்தது, காரைக்குடி ஏ.நாராயணனின் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் படத்தயாரிப்பு நிறுவனம். பம்பாய் ஹோக் ஹாப்பூர் நகரங்களில் தயாரிக்கப்பட்டு, சென்னை விநியோகத்திற்கு அனுப்பப்பட்ட படத்தயாரிப்புகளோடு ஒருகட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை. அதனால், அந்த நிறுவனம் நொடிய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் உருவான 'அசோசியேட்டட் ஃபிலிம்ஸ்" என்ற படத்தயாரிப்பு ஸ்தாபனமும் நஷ்டத்தில் செயலற்று போய்விட்டது. இதைக் கேள்வியுற்ற நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராவ்பகதூர் கே.பி.வெங்கடராம அய்யர் என்பவர், தன் பொறுப்பில் அதை எடுத்து நடத்தினார். இந்த நிறுவனத்தில் பணியாற்ற கும்பகோணம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை நியமித்தார் வெங்கட்ராம அய்யர்.

அந்த இளைஞரும் ஒரு வழக்கறிஞர்தான். இருந்தாலும், அவருக்கு சினிமா மீது ஒருவித ஈர்ப்பு. இதனால் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு சினிமாவில் இயங்க விரும்பினார். பாபநாசம் கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்ட அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் முதல் புரட்சிகர இயக்குநர் என்ற புகழுக்குரிய டைரக்டர் கே.சுப்பிரமணியம். பாபநாசம் என்ற ஊரில் சி.எஸ்.கிருஷ்ணசாமி- வெங்கலட்சுமி என்ற தம்பதிக்கு 1904ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ந் தேதி (20.4.1904) மகனாக பிறந்தவர் சுப்ரமணியம்.

டைரக்டர் கே.சுப்பிரமணியம்

பின்னாளில் முதலாளி கே.பி.வெங்கடராம அய்யரின் பேத்தி மீனாட்சியை மணந்து அக்கம்பெனியின் முக்கிய பொறுப்பாளராக மாறினார். கே. சுப்பிரமணியம்தான் புகழ்பெற்ற இயக்குநர் ராஜா சாண்டோவை பாம்பேயிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து அசோசியேட்டட் ஃபிலிம்ஸில் வேலையில் சேர்த்தவர். ராஜா சாண்டோ இக்கம்பெனிக்கான 'அநாதைப்பெண்' 'பேயும் பெண்ணும்' 'உஷா சுந்தரி' ஆகிய மௌனப் படங்களை சென்னையில் தயாரித்தவர்.

இந்தப் படத்தயாரிப்பின்போது ராஜா சாண்டோவிடம் உதவி டைரக்டராக கே.சுப்பிரமணியம் பணியாற்றி சினிமா தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார்.

1934-ல் 'பவளக்கொடி' என்ற நாடகம் காரைக்குடி வட்டாரத்தில் வெற்றிகரமாக நடந்துவந்தது. எஸ்.எம்.லட்சுமண செட்டியார் என்கிற லேனா செட்டியார் மற்றும் அழகப்ப செட்டியார் இருவரும் கூட்டுசேர்ந்து நடத்திய இந்த  நாடகத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் இணைந்து நடித்தனர். இருவரின் உணர்ச்சிகரமான நடிப்பால் இந்த நாடகம் தொடர்ந்து பல மாதங்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்த கே.சுப்பிரமணியம், லேனா செட்டியாருடன் சேர்ந்து ஒருநாள் அந்த நாடகத்தை காரைக்குடிக்கு சென்று பார்த்தார். அன்றே பவளக்கொடி நாடகத்தைப் படமாகத் தயாரிக்கும் உறுதியான முடிவுக்கு வந்தார்.

k_s%20mkt.jpg

பவளக்கொடி நாடகத்தை பேசும் படமாக எடுக்கும் சுப்பிரமணியத்தின் திட்டத்திற்கு லேனா செட்டியாரும் அழகப்பச் செட்டியாரும் நிதியுதவி செய்ய முன்வந்தனர். பவளக்கொடி படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி அல்லியாகவும் எம்.கே.டி.பாகவதர் அர்ஜுனனாகவும், மணி பாகவதர் என்பவர் கிருஷ்ணராகவும் நடித்தனர். சென்னை அடையாறு மீனாட்சி சினிடோனில் படப்பிடிப்பு நடைபெற்றது. (இதுதான் "சத்யா ஸ்டுடியோ" வாகி இன்று ஜானகி எம்.ஜி.ஆர் கல்லுாரியாக இயங்கிவருகிறது).

சுப்ரமணியம் டைரக்ட் செய்து தயாரித்த "பவளக்கொடி" பல வாரங்கள் தென்னக திரையரங்களில் ஓடி வெற்றிகண்டது. அமோக வசூல் கண்டதில் பொருளாதார ஏற்றம் கண்டார் சுப்பிரமணியம். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ம்ஸ்டாரை எம்.கே.டி.தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்திய நிரந்தர பெருமைக்குரியவரானார் கே.சுபிரமணியம்.

k_s%20sds.jpgமுதல் படத்தில் கிடைத்த வெற்றியில் உந்தப்பட்டு "சாரங்கதாரா" என்ற திரைப்படத்தை கல்கத்தாவில் தயாரித்தார். இதில் எஸ்.டி.சுப்பு லட்சுமி, எம்.கே.டி. பாகவதர் ஜோடியை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படமும் வெற்றி. பவளக்கொடி படப்பிடிப்பின்போது எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் காதல் வயப்பட்ட கே.சுப்பிரமணியம், படம் முடிந்த தருவாயில் அவரை தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். 

காதலும் திருமணமும்

முதல் இரண்டு படங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டு எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை துவங்கினார்.  இந்த கம்பெனி 19 நாட்களில் தயாரித்து வெளியிட்ட வெற்றிப் படம்தான் "நவின சதாரம்" அதற்கடுத்து அவர் தயாரித்தவை "பாலயோகினி" "பக்த குசேலா" "மிஸ்டர் அம்மாஞ்சி" "கௌசல்யா கல்யாணம்" முதலியவை.

1937 ஆம் ஆண்டு சென்னை வெள்ளாள தேனாம்பேட்டை பகுதியிலிருந்த "ஸ்பிரிங் கார்டன்" (Spring Garden) என்ற இடத்தில் "மோஷன் ஃபிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கன்பைன்ஸ்" என்ற பெயரில் தனது சொந்த படப்பிடிப்பு நிலையத்தைத் தொடங்கினார் கே. சுப்ரமணியம். இந்த ஸ்டுடியோவில் வங்காளத்தைச் சேர்ந்த சிறந்த கேமரா கலைஞரான சைலன்போஸ் பணியமர்த்தப்பட்டார்

உயர்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட படங்களை உருவாக்கும் எண்ணத்தில், வட நாட்டில் இருந்து சைலன்போஸ், கமால்கோஷ் போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்களையும் ஒலிப்பதிவு கலையில் தேர்ச்சியுற்ற சி.எஸ்.நிகாம், "சரண் பஹதூர் போன்ற நிபுணர்களை தன் ஸ்டுடியோவில் பணியமர்த்தினார் கே.சுப்பிரமணியம்.

சேவாசதனம்

பிரபலமாக விளங்கிய கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி சினிமா பிரவேசம் செய்த முதல் படம் "சேவா சதனம். 1938-ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் கே.சுப்பிரமணியம். கொடுமைப்படுத்தும் கணவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்காமல் வெளியேறி தன்னம்பிக்கையோடு வாழ முயற்சிக்கும் பெண்ணின் கதைதான் சேவா சதனம். இதில் மனைவி சுமதியாக எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். படம் வெற்றிகரமாக ஓடியது.

இந்தப் படத்திற்கு "ஆனந்த விகடன் 8.5.1938 தேதியிட்ட இதழில் வெளியான விமர்சனத்திலிருந்து சில பகுதிகள்:

"சுப்பிரமணியத்தின் டைரக்‌ஷனில் சில விஷயங்களை எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும். அவரது படங்களில் சமூக கொடுமைகளின் பிரதிபலிப்பு விசேஷமாக இருக்கும்...“இந்த டாக்கியைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் முடிவாகச் சொல்லிவிட வேண்டுமானால் 'போய்ப் பாருங்கள்" என்று சொல்வேன்".

k_s%20seva.jpg

விபத்து- நஷ்டம் -ஏலம்

இவர் தொடங்கிய "மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்" என்ற சினிமா ஸ்டுடியோவில் கோவை அய்யாமுத்து எழுதிய "இன்பசாகரன்" என்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இன்பசாகரன் படத்தை கே.சுப்பிரமணியம் டைரக்ட் செய்தார். இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆரின் துணைவியாரும் முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகி அறிமுகமானார்.

ஜானகிக்கு அப்பொழுது வயது 13. இந்தப் படத் தயாரிப்பின்போது துர்சகுனமாக ஒரு சம்பவம் நடந்தது. படம் முழுவதுமாகத் தயாரிக்கப் பெற்று வெளிவரும் நாளும் விளம்பரப்படுத்திவிட்ட சூழலில் எதிர்பாராதவிதமாக 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் தேதி அந்த ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது. அதில் 'இன்ப சாகரன்' படத்தின் நெகடிவ்களும் எரிந்து போயின. பெரும் நட்டத்திற்கு ஆளானார் சுப்ரமணியம். ஆனாலும் மனம் சஞ்சலம் அடையவில்லை சுப்பிரமணியம்.

கடனால் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்தது. அதை ஏலத்தில் எடுத்தவர் அமரர் எஸ்.எஸ்.வாசன். ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த இடத்தை புனர் நிர்மாணம் செய்து புது ஸ்டுடியோவை அவ்விடத்தில் அமைத்த எஸ்.எஸ்.வாசன். 'மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோ' என்று தன் ஸ்டுடியோவிற்கு பெயர் சூட்டி ராஜா சர்.முத்தையா செட்டியாரைக் கொண்டு துவக்க விழா நடத்தினார்.

தியாகபூமி (1939)

தியாகபூமி என்ற சமூக கதை கல்கி அவர்களால் ஆனந்த விகடனில் இருபது வாரம் தொடராக வெளிவந்தது. வாசகர்களின் அமோக  ஆதரவைப்பெற்ற இந்த நாவலை தொடராக வெளிவரும்போதே சுப்பிரமணியம் திரைப் படமாகவும் தயாரித்துக் கொண்டிருந்தார். தியாகபூமியில் 'சாவித்திரி' வேஷத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். சம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவன் நடித்தார்.

k_s%20thiyaga.jpg

படத்தில் ஓர் காட்சி, "சாவித்திரியிடம் சாஸ்திரி “இந்திய பூமி, தியாக பூமி. இங்கு மனைவிமார்கள் கணவர்களோடு வாழ்வதுதான் பண்பு" என்று எடுத்துக் கூறி கணவனோடு இணையச் சொல்கிறார். ஆனால் அதற்கு சாவித்திரி, "மனைவி சீதையாக இருக்க வேண்டுமானால், கணவன் ராமனாக இருக்க வேண்டும் என்று சொல்லி மறுத்து விடுகிறாள்.

நீதிமன்றத்தில் தன் கணவன் பிந்தரனோடு தன்னால் வாழமுடியாது என்று கூறும் சாவித்திரி, “வேண்டுமானால் ஆண்கள் மனைவிமார்களுக்கு அளிப்பதுபோல் தான் தன் கணவனுக்கு ஜீவனாம்சம் அளிப்பதாகவும் கூறுகிறாள். அக்காலத்தில் புரட்சிகர சிந்தனை கொண்டதாக பரபரப்பு ஏற்படுத்தியது இந்தப்படம்.

பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், படம் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் காங்கிரஸ் பிரசாரப் படம் என்று நினைத்து அரசு தடை செய்ய தீர்மானித்தது. இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்-இயக்குனர் கே.சுப்ரமணியம் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையாக தடை உத்தரவு வரும் முன், அனுமதி இலவசம் என்று அறிவித்து தொடர்ந்து பல காட்சிகள் நடத்தினார்.

k_s%20thiyaga%202.jpg

படத்தில் நாயகி, கடைசி காட்சியில் காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் சென்று பாடிக்கொண்டு செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததுதான் இதற்கு காரணம். பாரதியார் பாடலை டி.கே.பட்டம்மாள் பாடியார். எதிர்பார்த்தபடி படம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டது. (சுதந்திரத்திற்கு பின் தடை நீக்கப்பட்டது)

எஸ்.டி.சுப்புலெட்சுமி இந்த படத்தின் மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டார். சுப்பிரமணியம் புகழ் இப்படத்தின் மூலம் பன்மடங்கு பெருகியது.

படம் வெற்றிபெற்றபின் “டைரக்டர் சுப்ரமணியத்துக்கே முழுதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை” என்று தன் மேதைமையை வெளியிப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் கல்கி.

"மானசம்ரக்ஷணம்" (மானம் காத்தல்)

1945 ஆம் ஆண்டு யுத்த ஆதரவு படம் ஒன்றை கே.சுப்பிரமணியம் எடுத்து வெளியிட்டார். படத்தின் பெயர் "மானசம்ரக்ஷணம்" சுமார் 11000 அடிகளில் எடுக்கப்பட்ட பிரசாரப் படம் இது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் எடுத்த நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம், வெளிவந்த சில நாட்களில் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

சென்னை கெயிட்டி தியேட்டரில் இப்படத்தின் இடைவேளைக் காட்சியின் போது படத்தின் நடித்த காளி என் ரத்தினம், எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகியோ சினிமா மேடையில் தோன்றி ரசிகர்களுக்கு காட்சியளித்தது அந்நாளில் பிரபலம். இப்படம் கே.சுப்பிரமணியத்திற்கு புகழ்சேர்த்த படங்களில் ஒன்று.

k_s%20trible.jpg

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரியை திரையுலகில் அறிமுகம் செய்ததும் கே.சுப்பிரமணியம்தான். சுப்பிரமணியத்தின் "கச்ச தேவயானி" படத்தில் நடித்தபின் டி.ஆர்.ராஜகுமாரியின் "கவர்ச்சி புகழ்" தமிழகம் முழுவதும் பரவியது. 

"பிரேம் சாகர்" என்ற இந்திப் படத்தை தமிழ்நாட்டில் தயாரித்த முதல் தென்னிந்தியரும் இவரே. 1960 ஆம் ஆண்டு "மோரக்" (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் கீழ் "பாண்டித்தேவன்" படத்தை தயாரித்தார்.

பால யோகினி படத்தில் சாதிக்கொடுமைகளை சாடியது, சேவாசதனம் திரைப்படத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அவசியத்தை முன்வைத்தது, "பக்தசேதாவில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தது போன்ற அந்நாளில் பேசத் தயங்கிய பல கருத்துக்களை சினிமாவில் முன்வைத்ததால் கே.சுப்ரமணியம், புரட்சி இயக்குனர் என்ற பெயர் பெற்றார்.

ஹாலிவுட், ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு தொழில் முறையாக சென்று வந்தார். ரஷ்ய அரசால் சிறப்பு விருந்தினராக ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்ட தென்னிந்திய கலைஞர்கள் குழுவில் கலைவாணர் என்.எஸ்.கே.வுடன் ரஷ்யா சென்று வந்தவர் டைரக்டர் கே.சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கிய படங்கள்

    நவீன சாரங்கதாரா (1936)
    பாலயோகினி (1937)
    சேவாசதனம் (1938)
    தியாகபூமி (1939)
    இன்பசாகரன் (1939)[4]
    பக்த தேசா (1940)
    மானசம்ரட்சணம் (1945)
    மிஸ்டர் அம்மாஞ்சி (கௌசல்யா பிரணயம்)
    கச்சதேவயானி
    அனந்தசயனம்
    விகடயோகி
    விசித்திரவனிதா
    கோகுலதாசி
    கீதகாந்தி
    பாண்டித் தேவன்


மறைவு

k_s%20russia.jpg

திரையுலகில் பல சாதனைகளை புரிந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் 1971 ஆம் ஏப்ரல் மாதம் 7ம் நாள் சென்னையில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் சடலத்தை தாங்கிய பல்லக்கை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சுமந்தனர். ஊர்வலம் அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குப் பின்புறம் உள்ள மயானத்தை அடைந்தது. அங்கே சுப்ரமணியம் உடல் மீது ரோஜா மாலை வைத்து எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தினார். நடிகர் சந்திரபாபு ஜெபம் செய்தார். அவரது இறுதிச்சடங்குகளை மத்திய அரசின் செய்திப் படப் பிரிவினர் படம் எடுத்தனர். தமிழ்ப் பட உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது.

1952 ஆம் ஆண்டு "அமெரிக்க சினி டைரக்டர்கள் கில்டு" உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த தகுதி மெடலை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியது. தென்னிந்திய ஃபிலிம்சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பில் நான்குமுறை தலைவராக பணியாற்றியுள்ளார். பாபநாசம் சிவனை "பக்த குசேலாவில்" நடிகராக அறிமுகப்படுத்தினார்.

k_s%20rajkappor.jpg

அனந்தசயனம் என்ற (1942) படத்தில் சுப்பிரமணியம் கிருஷ்ணன் வேஷத்தில் நடித்தார். 1942 ல் நிருத்யோதயா என்ற நடனப்பள்ளியை ஆரம்பித்தனர். புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் இவரது மகள். மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் 19 நாட்களில் "நவின சதாரம்" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.

தன் திரைவாழ்க்கையில் கே.சுப்பிரமணியம் தயாரித்த படங்கள் மொத்தம் 22.. இதில் அவர் இயக்கியது 20 படங்கள்.   2005- ல் கே.சுப்ரணியத்தை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. திரையுலகில் கே. சுப்ரமணியத்தின் இடத்தை இட்டுநிரப்ப யாராலும் இயலாது.

http://www.vikatan.com/news/article.php?aid=52400

Link to comment
Share on other sites

'கெயிட்டி'யை கட்டி எழுப்பிய ஆர்.வெங்கையா! - (தமிழ் சினிமா முன்னோடிகள் தொடர்-10)

 

old%20cinema%20logo%2010.jpg

சென்னையில் சினிமா தியேட்டர் கட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமைக்குரியவர் காலம் சென்ற ஆர்.வெங்கையா. சென்னையின் அடையாளப்படுத்தும் இடங்களில் முதலிடம் வகித்த அந்த தியேட்டர், கெயிட்டி. 1914 ல் சென்னையில் சினிமா படங்களை திரையிடுவதற்காக, அண்ணாசாலையை ஒட்டிய நரசிங்கபுரம் ரேடியோ மார்க்கெட் என்ற பகுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் இது அமைந்தது.

venkaiya%20cinema%20250%20right.jpgரகுபதி வெங்கையா நாயுடு என்கிற ஆர்.வெங்கையா, ஒரு சிறந்த ஸ்டில் போடோகிராபர். பேசும்படங்கள் உருவாகாத காலத்தில் இவரது சிந்தனையால் விளைந்த சில தொழில்நுட்ப உத்திகள் பேசும்படத்திற்கான முன்முயற்சிகளாக இருந்தது. திரையில் மவுனப்படங்களை ஓடவிட்டு, அதேசமயம் பதிவுசெய்யப்பட்ட அதற்கு தகுந்த ஒலிப்பின்னணியை உருவாக்கி, ஒரே சமயத்தில் அதை மவுனக்காட்சியுடன் இணைத்து ஓட்டிக் காண்பித்தார். தனித்தனியே இயங்கும் இந்த உத்தியால், காட்சிகளுடன் ஒலி ஒன்றிணைந்து,  பார்வையாளர்களுக்கு பேசும்படங்களை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

வெங்கையாவின் இந்த முயற்சிக்கு பின்னணியாக அமைந்தது எது தெரியுமா?

1909-ஆம் ஆண்டில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட தகட்டிலிருந்து (படம் எடுக்கப்படும் அதே சமயத்தில்) ஒலிபரப்பப்படும் 'கிரானோ - மெகாகிராமபோன்' என்ற சினிமாக் கருவியைப் பற்றி, பத்திரிகைகளில் இவர் படிக்க நேர்ந்தது.

இங்கிலாந்து அரசர், அரசியாரின் அரண்மனைக்காக நியமிக்கப்பட்ட 'காமெண்ட்' கம்பெனியாரால் இதன் முதல் காட்சி காட்டப்பட்டது. வெங்கையா இக்கருவிகளை, சென்னை ஜான் டிக்கின்ஸன் கம்பெனி மூலமாகத் தருவித்தார். சென்னை டவுன் ஹாலில் (சென்னை மாநகராட்சி கட்டடம் அருகேயுள்ள வி.பி.ஹால்) தமது காட்சிகளைத் திரையிட்டார். 2 சிறிய ரீல்களைக் கொண்ட இந்த படம், 300 லிருந்து 400 அடிகள் வரையிலான நீளம் கொண்டவை.

அவ்வாறு அவர் திரையிட்ட 12 படங்களும் பெரும் வரவேற்பு பெற்றன. அவை 1.பனாமாவுக்குக் கீழ் (Under Panama) 2. ஊஞ்சல் பாட்டு (Swing Song) - 3. நெருப்பணைப்பவனின் பாடல் (Fire-man song) 4. கடல்பாம்பு (Sea Serpent) மெகாடோ (Mecado)-18 ஆகியவை ஆகும். மேலும் காட்சிப்படுத்திய படங்கள் அரசனின் பெட்டகம் மற்றும் முத்துக்குளித்தல் ஆகியவை.

venkaiya%20gaiety%20550%201.jpg

படம் ஆரம்பமானவுடன் ஒலிபரப்பும் ஆரம்பமாகியது. அது அந்த ஊமைப் படத்திற்கு ஒலி உயிரோட்டத்தை கொடுத்தது. இந்தக் கருவிக்கான செலவு அக்காலத்தில் சுமார் முப்பதாயிரம் ரூபாய். 1910-ஆம் ஆண்டில் எஸ்பிளனேடில் ஒரு தற்காலிக பிரயாண கூடாரத்தை அமைத்து, இந்த படங்களை மக்களுக்கு காட்டினார். பெங்ளூர், பம்பாய், ஆந்திரா ஜில்லாக்களிலும் பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று, வெற்றிகரமாக அதை செயல்படுத்தி, பெரும் பொருள் ஈட்டினார்.

கொழும்புவில் இந்தக் கருவியுடன் 500 அடிகள் கொண்ட மௌனப் படங்களான முத்துக்குளிப்பவன் (Pearl Fisher), சிகரெட் பெட்டி (Cigar Box), ராஜாவின் பெட்டி (Raja's Casket) கறுப்பு ராஜகுமாரி ஆகிய படங்களுடன் சுற்றுப்பயணம் செய்து இப்படங்களை திரையிட்டார்.

தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தினை பல நாடுகளுக்கும் சென்று இவர் திரையிட்டார். இதனால் பெரும் வருவாய் கண்டார் வெங்கையா. 1912-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய வெங்கையா,  தனக்கென நிரந்தரமாக ஒரு தியேட்டர் வேண்டும் என்ற எண்ணத்தில் கெயிட்டி தியேட்டரை ஆரம்பித்தார். யூனிவர்சல் சீரியல் படங்களான சர்க்கஸ் ஆட்டம் (எட்டிபோலோ நடித்தது) 'முறிந்த நாணயம்' 'பெரிய பரிசு' (பிரான்சில் போர்டு நடித்தது) ஆகியவைகளைத் திரையிட்டார்.

venkaiya%20gaiety%20550%202.jpg

'மிலியன் டாலர் அற்புதம்', 'மைராலின் திடுக்கிடும் செயல்கள்', 'பிரம்மாண்ட எல்மோ', ஆகிய படங்களையும் இங்கு திரையிட்டார். தங்க சாலைத் தெருவில் கிரவுண் டாக்கீசைக் கட்டி எல்லா ஊமைப் படங்களையும் அங்குக் காட்டினார். கெயிட்டி தியேட்டரைப் பொறுத்தவரை, அதை வெறும் சினிமா அரங்கம் என்றில்லாமல்,  தமிழர்கள் அதை சென்னையின் முக்கிய அடையாளமாக கருதினர்.

மவுனப்படங்கள் காலத்திலேயே கிட்டத்தட்ட இருபதாண்டுகள், சென்னை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அரங்கமாக திகழ்ந்தது கெயிட்டி. பின்னாளில் பேசும் படங்கள் வெளிவந்தபோது இன்னும் புகழடைந்தது இந்த தியேட்டர்.

venkaiaya%20black%20and%20white.jpgஎழுபதாவது ஆண்டை கொண்டாடிய வேளையில் இந்த திரையரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, நவீனமாக ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டது. காலமாற்றத்தினால் புதிய படங்கள் திரையிடப்படாததாலும், சென்னையில் இன்னும் நவீனமான பல தியேட்டர்கள் உருவெடுத்ததாலும்  2005ஆம் ஆண்டு கெயிட்டி தியேட்டர் தன்னுடைய சேவையை நிறுத்திக்கொண்டது.

நூற்றாண்டை காண்பதற்கு ஒன்பது ஆண்டுகள் இருந்த நிலையில், கெயிட்டிக்கு நேர்ந்த இந்த துயரம் தமிழ் ரசிக நெஞ்சங்களை வருத்தம் கொள்ளச் செய்தது.

1913-ஆம் ஆண்டிலேயே குளோப் தியேட்டரை (தற்போது ராக்ஸி) கட்டி எழுப்பினார். இக் கட்டடத்தின் பின்புறம் ஸ்டார் ஆப் ஈஸ்ட் பிலிம் என்ற ஸ்டூடியோ துவக்கப்பட்டது. வெங்கையா படத் தொழிலில் 1929-ஆம் ஆண்டு வரை தியேட்டர் அதிபராக இருந்து, பின்னர் ஓய்வுபெற்றார். பிரபல இயக்குனர் ஆர்.பிரகாஷ் இவருடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுபதி வெங்கையா நாயுடு, 1941-ஆம் ஆண்டு இறுதியில் உடல்நலமின்றி காலமானார். தமிழ்சினிமா சரித்திரத்தில் வெங்கையாவுக்கு தனி இடம் உண்டு!

http://www.vikatan.com/news/article.php?aid=52988

Link to comment
Share on other sites

தென்னிந்திய படங்களுக்கு வட இந்திய வாசலை திறந்துவிட்ட எஸ்.எஸ்.வாசன்!

 

s_s_vasan%2011%20logo.jpg

 

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்

தென்னிந்திய மொழிப்படத் தயாரிப்புகள் பரவலான ஒரு வியாபார வட்டத்தைப் பெற்றிருக்காத காலம் அது. குறிப்பாக, தமிழ்த் திரைப்படங்கள் வட இந்திய உலகில் தீண்டத்தகாதவையாகக் கருதப்பட்ட கால கட்டம்! அப்படிப்பட்ட ஒரு சூழலில், தமிழில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வட இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தின் கதவுகளையே தட்டித் திரும்பிப் பார்க்க வைத்தது.

s_s_%20vasan%2011%20250.jpgஅந்தப் படத்தின் பிரமாண்டமும் தொழில்நுட்ப விஷயங்களும் ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்தன. படத்தின் காட்சியமைப்புகளும், பிரமாண்டமான செட்டுகளும் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பிரமிப்பில் ஆழ்த்தின. இம்மாதிரி மீண்டும் ஒரு படம் வெளிவருமா என எல்லா தரப்பினரிடையேயும் பட்டிமன்றமே நடந்தது அந்நாளில்!

ஒரே நாள் இரவில், ஒரு தமிழரின் பெயரை வட இந்தியா தன் திரைப்பட வரலாற்றில் குறித்துக்கொண்டது. திரையுலகம் அவர் பெயரைப் பொன்னேட்டில் பொறித்துக்கொண்டது.

அந்தத் திரைப்படம் - சந்திரலேகா. அந்தத் தமிழர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்.

தென்னிந்திய மொழிப்படங்களுக்கு, வட இந்திய வியாபார வாசலை திறந்துவிட்ட முதல்திரைப்படம் சந்திரலேகா.

இளமைப் பருவம்

1903-ஆம் ஆண்டு, திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்  எஸ்.சீனிவாசன். தனது நான்காவது வயதில் தந்தை சுப்பிரமணிய அய்யரை இழந்தார். தாயார் வாலாம்பாள் அரவணைப்பில், திருத்துறைப்பூண்டியில்  பள்ளிக் கல்வியை முடித்தார். மேற்படிப்புக்காக சென்னைக்குத் தன் தாயாருடன் வந்து சேர்ந்தார்.

சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் B.A. வகுப்பில் சேர்ந்தார். ஏழ்மை காரணமாக அவரால் தொடர்ந்து படிக்கமுடியாமல் போனது. கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னை ரயில்வே கம்பெனியில் வேலை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

இதனையடுத்து ’குடியரசு’, 'ஊழியன்' போன்ற பத்திரிகைகளுக்கு விளம்பரங்களைப் பெற்றுத்தந்து, கமிஷன் பெற்று வருவாய் ஈட்டினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமை பெற்றவர் வாசன். வாசிக்கும் ஆர்வமும் இயல்பாகவே இருந்ததால், சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அடிக்கடி சென்று, அங்கு கிடைக்கும் பிரபலமான ஆங்கில நாவல்களையும், வாழ்க்கை முன்னேற்றத்துக்கான நூல்களையும் வாங்கி வந்து படிப்பார். 

s_s_vasan%2011%20550%2011.jpg

படித்து ரசிப்பதோடு மட்டுமின்றி, அவற்றை எளிய தமிழில் மொழிபெயர்த்து, பாமரனும் படிக்கும் வகையில் புத்தகமாக வெளியிட்டார். இதனால் வருவாய் சற்று அதிகரித்தது.

அந்த வகையில், 1920-களில், ஆங்கிலத்தில் வெளிவந்த ’Thirty three Secrets to a Successful Marriage' என்ற நூலை வாசித்தவர், அதை எளிய தமிழில் மொழி பெயர்த்து, 'இல்வாழ்க்கையின் ரகசியங்கள்’ என்னும் தலைப்பில் வெளியிட்டார். 400 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாய்.

s_s_vasan%2011%20karamarajar%202.jpg

கைவசமானது விகடன்!

பூதூர் வைத்தியநாதய்யர் என்பவர் நடத்தி வந்த ஆனந்த விகடன் பத்திரிகைக்கும் விளம்பரம் சேகரித்துக் கொடுத்து வந்தார் வாசன். ஒருமுறை, தனது புத்தகம் பற்றியும் அதில் விளம்பரம் தந்தார். ஆனால், அந்த இதழ் ஆனந்த விகடன் வெளிவரவில்லை. விசாரித்தபோது, பணமுடை காரணமாகவே வைத்திய நாதய்யரால் பத்திரிகையை வெளியிடமுடியவில்லை என்பது தெரிந்தது. அவரது தவிப்பைக் கண்ட வாசன், ”ஆனந்த விகடன் பத்திரிகையை நான் எடுத்து நடத்துகிறேன். உங்கள் உரிமையை விட்டுத் தர என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

s_s_vasan%2011%20550%203.jpg

“ஒரு எழுத்துக்கு 25 ரூபாய் வீதம், ஆனந்த விகடன் என்னும் எட்டு எழுத்துக்களுக்கு ரூ.200/-” என்று வைத்தியநாதய்யர் விலை சொல்ல, அதன்படியே கொடுத்து ஆனந்த விகடன் பத்திரிகையைச் சொந்தமாக்கிக் கொண்டார் வாசன். இது நடந்தது 1928-ஆம் ஆண்டு.

விகடனின் அடிப்படை நோக்கம்,  'நகைச்சுவையோடு, நல்ல பல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, சமுதாயத்தை மேம்படுத்துவதே' என்பதில் உறுதியாக நின்று, சமூகத்தின் அடித்தள மக்களுக்கும் நகைச்சுவை உணர்வை ஊட்டிய முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெயரை விகடனுக்குப் பெற்றுத் தந்தார் வாசன். விகடன் தன் கைக்கு வந்த பின்பு, அதில் பல புதுமையான அம்சங்களைப் புகுத்தி, அதன் விற்பனையைப் பல மடங்கு உயர்த்தினார்.

s_s_vasan%2011%20550%202.jpg

கல்கி

கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி), தேவன் (மகாதேவன்) போன்ற திறமையான எழுத்தாளர்களைத் தனது பத்திரிகையின் பணியில் நியமித்து, அவர்களின் எழுத்துக்களை வெளியிட்டார். மார்கன், மாலி போன்ற பிரபல ஓவியர்களைப் பணியில் அமர்த்தி, தரமான கார்ட்டூன்களையும் அற்புதமான சித்திரங்களையும் வாசகர்களின் பார்வைக்கு விருந்தாக்கினார்.

புத்தகக் கட்டுகள் வந்து இறங்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு, விடியற்காலையிலேயே வாசகர்கள் வந்து காத்திருந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு ஆனந்த விகடன் பத்திரிகையில் சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சேர்த்து, அதன் மீது ஒரு ஈர்ப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தினார். தமிழர்களின் இல்லங்கள்தோறும் வெற்றி உலா வந்தது விகடன்.

s_s%20vasan%20with%20gemini%20studio.jpg

பத்திரிகை, சினிமா இரட்டைச் சவாரி

தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவானாக வலம் வந்த எஸ்.எஸ்.வாசன், திரையுலகிலும் சாதனை படைத்தார். ஆரம்பத்தில் விநியோகஸ்தராக திரையுலகில் களம் இறங்கியவர், பின்னர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டினார்.

1935-ஆம் ஆண்டில், ஆனந்த விகடனில் வெளியான தொடர்கதை 'சதிலீலாவதி'. அதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன்தான். வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற அந்த நாவலைத் திரைப்படமாகத் தயாரிக்க விருப்பம் கொண்டார் மருதாசலம் செட்டியார் என்ற பட அதிபர். எந்தத் தொகையும் கோராமல், படத்தை எடுக்கத் தன் மனப்பூர்வமான ஒப்புதலைக் கொடுத்தார் வாசன்.

s_s_vasan%2011%20sathi%20leelavathi.jpg

இந்தப் படத்துக்குக் கந்தசாமி முதலியார் (நாடக வாத்தியார்) வசனம் எழுதினார். 1936-ல் 'சதிலீலாவதி' படம் வெளியாகி, வசூலை அள்ளிக் குவித்தது. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு முக்கியமான இரண்டு நடிகர்கள் கிடைத்தார்கள். ஒருவர், ராம்சந்தர். பின்னாளில் தமிழ்த்திரையுலகையே கட்டி ஆண்டதோடு, தமிழகத்தின் முதலமைச்சராகவும் கோலோச்சிய எம்.ஜி.ஆர்-தான் அவர். மற்றொருவர், குணச்சித்திர நடிகர் டி.எஸ்.பாலையா.

’சந்திரலேகா’வின் மாபெரும் வெற்றிக்குப் பின், வாசன் எடுத்த மற்றுமொரு பிரமாண்ட திரைப்படம் ‘ஔவையார்’. அதில் ஔவையாராக நடிப்பதற்கு கே.பி.சுந்தராம்பாளுக்கு அந்நாளிலேயே வாசன் கொடுத்த தொகை ஒரு லட்சம் ரூபாய்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/article.php?aid=53264

Link to comment
Share on other sites

சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை...!- வாசன் விதைத்த பிரம்மாண்டம் ( தொடர்-12)

 

s_s_vasan%2012%20logo.jpg

ஜெமினி பிக்சர்ஸ் என்ற பட விநியோக நிறுவனத்தை தொடங்கினார் வாசன். அந்நிறுவனம் சார்பில் பல தமிழ் படங்களை விலைக்கு வாங்கி விநியோகித்தார். இதனால் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தரமான படங்களை விநியோகம் செய்யும் என்ற நற்பெயர் மக்களிடையே பரவியது. 1939-ல் 'சிரிக்காதே' என்று பெயரிடப்பட்ட பல ஹாஸ்யங்கள் நிறைந்த முழு தமாஷ் படம் வெளியானது. இதன் விநியோக உரிமையை பெற்று தமிழ் நாடெங்கும் திரையிட்டார் வாசன்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி.எம். ஏழுமலை, டி.எஸ்.துரைராஜ், எம்.எஸ். முருகேசன், பி.எஸ்.ஞானம் போன்ற பிரபல நகைச்சுவை நடிகர்கள் நடித்த இப்படம், அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன் ஆகிய தனித்தனி கதைகளின் தொகுப்பு. 'சிரிக்காதே' என்ற பொது தலைப்பில் இப்படத்தை வெளியிட்ட வாசனின் வீட்டில் குபேரன் நிரந்தரமாக குடியிருக்கத் துவங்கினான். வாசன் திரையுலகின் மீது அதீத நம்பிக்கைகொண்டு வேகமாக இயங்க ஆரம்பித்தார்.

s_s_vasan%2011%20karamarajar%202.jpg

புதுமைக்கு இன்னொரு பெயர் எஸ்.எஸ். வாசன்

பத்திரிகை தொழிலில் ஓரளவுக்கு பணம், புகழ் ஈட்டிய வாசன், தன் திறமையை நீட்டிக்க வேண்டி தேர்ந்தெடுத்த துறை திரைப்படத்துறை.  விகடனில் வெளியான'தியாகபூமி' கதையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்தார் டைரக்டர் கே.சுப்ரமணியம். டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் விருப்பத்தை ஏற்ற வாசன் 'தியாகபூமி' படத்தை தயாரிக்க அனுமதியளித்தார்.

பிரபல எழுத்தாளரும் ஆனந்தவிகடனின் துணை ஆசிரியருமான கல்கி எழுதிய 'தியாகபூமி' கதை,  ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவரத் தொடங்கியபோதே ஏறத்தாழ சினிமா படப்பிடிப்பும் அப்பொழுதே தொடங்கியது. 'தியாகபூமி' படத்திற்கு பண முதலீடு செய்த வாசன்,  அதை விளம்பரப்படுத்த ஒரு புது யுக்தியை கண்டுபிடித்தார். சாதாரணமாக தொடர்கதையில் வரும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு படம் போடப்படுவது வழக்கம். ஆனால் 'தியாகபூமி' நாவலுக்கு வாசன் , திரைப்படத்தின் காட்சிகளையே 'விகடனில்' பிரசுரித்தார்.

s_s_%20vasan%20kalki.jpgஇது நாவலுக்கு நிஜத்தன்மையை ஏற்படுத்தியது. அதேசமயம் படத்திற்கு' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது.

படத்தைப் பற்றிய மெகா விளம்பரமாகவும் இது அமைந்தது. அந்நாளில் யாருமே செய்திராத ஒரு புதுமை இது. வாசன் ஒவ்வொன்றையும், புதுமையாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பதில் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். வாசனின் புதுமை விரும்பும் மனம், ஏதாவது ஒன்றை புரட்சிகரமாகவோ, புதுமையாகவோ செய்து முடிக்கும். இது வாசனுக்கு இயல்பாக வாய்த்த திறமை.

'செய்யும் தொழிலே தெய்வம்' என்று கருதுபவரான வாசன், எந்த தொழிலைச் செய்தாலும் அதை முழுமையான ஈடுபாட்டுடன் நேர்த்தியாக செய்து முடிக்கும் மனோபாவத்திற்கு சொந்தக்காரர். ஆம் அவர் ஒரு Totalist. எதையும் பூரணமாக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுபவர். அதனால்தான் அவரால் இமாலய சாதனைகளை செய்ய முடிந்தது.

தியாகபூமி கதை என்ன?

'தியாகபூமி' படத்தின் கதாநாயகி சாவித்திரியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும், கதாநாயகன் ஸ்ரீதரனாக கே.ஜே. மகாதேவனும் நடித்தனர். கதாநாயகி சாவித்திரி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அதிகம் படிப்பறிவு இல்லாதவள். கதாநாயகன் ஸ்ரீதரன் மேல் நாட்டிற்கு சென்று படித்தவன்.
 
ஏற்கனவே ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் காதல் வயப்பட்ட அவன், தனது தாயாரின் வற்புறுத்தலால், சாவித்திரியை மணக்கிறான். புகுந்த வீட்டில், சாவித்திரி பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். இதுபற்றி அவள், தன் தந்தை சம்பு சாஸ்திரிக்கு (பாபநாசம் சிவன்) எழுதும் கடிதங்களை, சித்தி எரித்து விடுகிறாள். மாமியார் வீட்டில் இருந்து விரட்டப்படும் சாவித்திரி, ஒரு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைக்கு (பேபி சரோஜா) தாய் ஆகிறாள். குழந்தையுடன் அவள் தற்கொலை செய்து கொள்ள முயல, அங்கே தந்தை சம்பு சாஸ்திரியின் குரல் கேட்க, குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகிறாள்.
 
அக்குழந்தையை, தன் சொந்த பேத்தி என்று அறியாமலேயே, சாருமதி என்று பெயரிட்டு வளர்க்கிறார், சம்பு சாஸ்திரி. சாவித்திரி, பம்பாய் சென்று தன் பணக்கார அத்தையின் உதவியினால் உயர் கல்வி பயில்கிறாள். ஏராளமான சொத்துக்களுடன், நாகரீக மங்கையாக 'உமாராணி' என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறாள்.

s_s_vasan%20thiyagaboomi.jpg

ஐந்தாண்டுகள் உருண்டோடுகின்றன. தன் மகள் என்று தெரியாமலேயே சாருமதியை சந்தித்து பாசம்கொள்கிறாள், உமாராணி (சாவித்திரி). மோசடி குற்றத்துக்காக கைது செய்யப்படும் ஸ்ரீதரனை மீட்கிறாள். தன் மனைவி சாவித்திரிதான் உமாராணி என்பதை அறியும் ஸ்ரீதரன், அவளுடன் மீண்டும் வாழ விரும்புகிறான்.
 
ஆனால், அவன் கோரிக்கையை சாவித்திரி நிராகரிக்கிறாள். அவள் தன்னுடன் வாழவேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடருகிறான், ஸ்ரீதரன். ஆனால் சாவித்திரியோ, 'கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை விரட்டி அடித்த அவருடன் இனி வாழமாட்டேன். வேண்டுமானால், நான் வசதியுடன் இருப்பதால் அவருக்கு ஜீவனாம்சம் தருகிறேன்' என்று கோர்ட்டில் கூறுகிறாள். இறுதியில், சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை செல்கிறாள், சாவித்திரி. ஸ்ரீதரனும், சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்கிறான். பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது.

1939-ம் ஆண்டு மே 20-ம் தேதி சென்னையில் கெயிட்டி, ஸ்டார் ஆகிய திரையரங்குகளில் 'தியாக பூமி' திரையிடப்பட்டது. கதை அமைப்பு, நடிப்பு, இயக்கம் எல்லாவற்றிலும் படம் சிறப்பாக அமைந்திருந்தது. டி.கே.பட்டம்மாளின் தேச பக்திப் பாடல்கள் கணீர் என்று ஒலித்தன.

s_s_vasan%20th.jpg

தியாக பூமி' படத்துக்கு 'தடை'

'ஆணுக்கு பெண் அடிமை இல்லை' என்ற சீரிய கருத்தை மையமாக கொண்டிருந்ததால் படத்தை பெண்கள் மிகவும் விரும்பிப் பார்த்தனர். 'தியாக பூமி புடவை' 'தியாகபூமி வளையல்' என்ற பெயர்களில் சேலைகளும், வளையல்களும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. படம் சில நாட்கள் ஓடியது. அதற்குள் அது ஒரு சோதனையை சந்திக்க நேர்ந்தது.

படத்தில் இடம் பெற்றிருந்த சில உரையாடல்கள், தேசபக்தி பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் காரணமாக இந்தப் படத்திற்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு தடை விதிக்கப்போவதாக தகவல் வெளியானது.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இத்தகவல் தெரிந்து விட்டதால், படத்தை விடிய விடிய இடைவெளியின்றி, மக்களுக்கு இலவசமாக காட்ட எஸ்.எஸ்.வாசனும், டைரக்டர் கே.சுப்பிரமணியமும் ஏற்பாடு செய்தனர். மக்கள் வெள்ளம் சென்னை தியேட்டர்களின் வாசலில் மொய்த்தது. மக்கள் திரளால் கெயிட்டி தியேட்டரின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவமும் நடந்தது. சுதந்திரத்திற்கு பின் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை பின்னர் அகற்றப்பட்டது.

மும்பையை அதிர வைத்த முதல் தமிழ்ப் பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்

1941-ல் வெளிவந்த 'குமாஸ்தாவின் பெண்' படத்தின் விநியோக உரிமையை விலைக்கு வாங்கி, தமிழகத்தின்  பட்டி தொட்டிகளில் எல்லாம் படத்தை ஓட்டி பணம் சம்பாதித்தார் வாசன். இந்தப் படத்திற்காக 80 பிரிண்ட்கள் போடப்பட்டன என்பது கூடுதல் செய்தி.

s_s%20vasan%20%202%20t_r%20rajakumari.jp

தமிழ் சினிமாவில் 'பிரம்மாண்டம்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் எஸ்.எஸ்.வாசன்தான். 1948-ல் சந்திரலேகா படத்தை ஜெமினி ஸ்டுடியோவில் வாசன் தயாரித்தார். தயாரிப்புக்காக வாசன் செலவழித்த தொகை ரூ. 35 லட்சம்.

அந்நாளில் தென்னிந்தியாவில் தயாரான ஹிந்தி படங்களை, வட இந்திய தியேட்டர்களில் காட்சிப்படுத்த இரும்புத் திரை போட்டு வைத்திருந்தார்கள் இந்திப்பட தயாரிப்பாளர்கள். 1939-ல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் 'பிரேம் சாகர் . படத்தை சென்னையில் எடுத்து முடித்து, பம்பாய் தியேட்டர்களில் வெளியிட வெகு நம்பிக்கையுடன் சென்றார் டைரக்டர் கே.சுப்பிரமணியம். படம் வெகு பிரமாதமாக வந்துள்ளது என்று பம்பாய் பட உலக பிரமுகர்கள் மனதார பாராட்டினர். பிரேம் சாகர் பற்றிய இந்த விமர்சனம் பம்பாய் பட உலகில் காதோடு காதாகப் பரவியது.

s_s%20vasan%202%20%20avm%20550%201%281%2

தமிழகத்திலிருந்து இப்படி ஒரு அற்புதமான ஹிந்திப் படம் பம்பாய்க்கு திரையிட வந்திருக்கிறதா? அதை வெளியிட்டால் நம் படங்களின் கதி என்ன ஆவது, என்று பம்பாய் பல உலக ஜாம்பவான்கள் கூடிப் பேசினர். படத்தை திரையிட விடாமல் 'அரசியல்' செய்தனர். படத்தை திரையிட முடியாமல் தோல்வி முகத்தோடு சென்னை திரும்பினார் கே.சுப்ரமணியம்.

'பம்பாயில் தயாராகும் ஹிந்திப் படங்கள் தமிழத்தில்  வெளியாகி வெற்றிகரமாக ஓடும்போது, சென்னையில்  தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்கள் பம்பாய் திரையரங்குகளில் ஓடாவிட்டாலும், சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹிந்திப் படங்களாவது மும்பையில் ஓடக் கூடாதா' என எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட பிரபல தமிழ்ப் பட தயாரிப்பாளர்களின் மனதில் பெரும் ஆதங்கம் உருவானது.

சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை

வாசனுக்கு இது பெரும் வருத்தமாகவே இருந்திருக்கலாம். மனதில் இருந்த குறையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 1949-ல் வாசன் செயலில் காட்டினார். பதுங்கிய புலி பாய்ந்த கதையாக, வாசன் தன் தயாரிப்பான 'சந்திரலேகாவுடன்' பம்பாய்க்குச் சென்றார். பிரமிக்க தக்க வகையில் விளம்பரம் செய்து இபபடத்தை பம்பாயில் வெளியிட்டார். முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப் போன்று சந்திரலேகா வை கொண்டு பம்பாய் பட உலகிற்கு பயங்காட்டினார் வாசன்.

s_s_vasan%2011%20550%201.jpg

சந்திரலேகாவிற்கு கூட்டமோ கூட்டம்! வசூலோ வசூல்! பம்பாய் அதிசயித்தது, கல்கத்தா கலங்கியது, புது டெல்லி பிரமித்தது.

'சந்திரலேகா' ஹிந்தி பட உலகை பொறுத்த வரையில் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமைந்தது. 1939-ல் சுப்பிரமணியத்தால் செய்ய முடியாததை 1949-ல் சந்திரலேகாவை பம்பாயில் வெளியிட்டு சாதித்துக் காட்டினார் வாசன். அதன்பின்னர்தான் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள், சென்னையில் ஹிந்திப் படங்களை தயாரித்து அவற்றை பம்பாயில் வெற்றிகரமாக வெளியிட்டார்கள்.

ஏ.வி.எம்.செட்டியார் தனது 'பஹார்' (வாழ்க்கை) படத்தை ஹிந்தியில் வெளியிட்டு பெரும் பொருளிட்டீனார். இந்த நிகழ்வு முதல் ஏ.வி.எம்.செட்டியாரின் நெருங்கிய நண்பராகவும் மானசீக குருவாகவும் ஆனார் எஸ்.எஸ்.வாசன்.

பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற சந்திரலேகா, வாசன் அவரகளுக்கு கொடுத்த புகழை இன்றைய டிஜிட்டல் உலகில் பெற இருக்கிறது, சந்திரஹாசம். விகடனின் மூன்றாம் தலைமுறையின் இந்த முன்முயற்சி, விகடனுக்கு மட்டுமல்ல டிஜிட்டல் மீடியா உலகிற்கே புதியது. முடிவில்லா யுத்தத்தின் கதையாக 2000 பிரம்மாண்ட ஓவியங்களுடன் வாசகர்களை ஈர்க்க உள்ளது இந்த கிராபிக் நாவல்.

s_s_vasan%2012%20chandrahasam.jpg

இங்கே க்ளிக் செய்க... 

வாசன் ஏலத்தில் எடுத்த ஸ்டுடியோ

பிரபல இயக்குனர் கே.சுப்பிரமணியம் தம் நண்பர்கள் சிலருடன் கூட்டுச் சேர்ந்து 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்" என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவை துவக்கி படங்களை தயாரித்துவந்தார். இந்த ஸ்டுடியோவில் இன்பசாகரன் என்ற படத் தயாரிப்பின்போது துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம் நடந்தது. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி அந்த ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது.  

படம் முழுவதுமாகத் தயாரிக்கப் பெற்று, வெளிவரும் நாளும் விளம்பரப்படுத்தப்பட்டுவிட்ட சூழலில் நிகழ்ந்த இந்த தீ விபத்தில் 'இன்ப சாகரன்' படத்தின் நெகடிவ்களும் எரிந்து போயின. பெரும் நட்டத்திற்கு ஆளானார் சுப்ரமணியம்.

இதனால் ஸ்டூடியோவின் பங்குதாரர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல, கோர்ட் உத்தரவுப் படி, ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்தது. டெண்டர் மூலம் ஏலத்தொகை கோரப்பட்டது. அந்த ஸ்டுடியோவை விலைக்கு வாங்க எண்ணிய வாசன், அதற்காக அளித்த டெண்டரில் அதிகபட்சத் தொகையை குறிப்பிட்டிருந்தார். (86 ஆயிரத்து 423 ரூபாய், 1 அனா 9 காசு). ஸ்டுடியோ வாசன் கைக்கு வந்தது.

s_s_vasan%202%20%20gemini%20studio.jpg

ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த இடத்தை புதுப்பித்து புது ஸ்டுடியோவை அவ்விடத்தில் நிர்மாணித்த எஸ்.எஸ்.வாசன், 'மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோ' என்று தன் ஸ்டுடியோவிற்கு பெயர் சூட்டினார். ராஜா சர்.முத்தையா செட்டியாரைக் கொண்டு துவக்கப்பட்ட அந்த ஸ்டுடியோ, 1940 முதல் செயல்பட தொடங்கியது. '' ஜெமினி ஸ்டுடியோ " மூவிலேண்ட் என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ சென்னை மவுண்ட் ரோட்டில் உருவானது.

தற்பொழுது அண்ணா மேம்பாலத்தருகே 'ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸ்' என்ற பெயரில் பலமாடி கட்டடங்களை உள்ளடக்கிய குடியிருப்பு ஒன்று வானை பிளந்து கொண்டு நிற்கின்றதல்லவா? அங்குதான் முன்பு ஜெமினி ஸ்டுடியோ இருந்தது

புதிதாக ஆரம்பித்த  ஜெமினி ஸ்டுடியோவை மற்ற சினிமா தயாரிப்பாளர்களின் படப்பிடிப்பு தேவைகளுக்காக வேண்டி வாடகைக்கு விடவே வாசன் விரும்பினார். ஆனால் அவர் எண்ணம் பலிக்கவில்லை. 1940-களில் 'திண்டுக்கல்லில்' சினிமா தியேட்டர் நடத்தி வந்த வி.கோபாலகிருஷ்ணன் என்பவர் தம் நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து 'மதன காமராஜன்' என்று ஒரு சினிமா படம் தயாரித்துக்கொண்டிருந்தனர். நிதி நெருக்கடியால் படம் பாதியிலே நின்றது.

s_s%20vasan%202%20%20mathanakamarajan.jpசஞ்சலமடைந்த கோபாலகிருஷ்ணன் தனது நண்பர்கள் நால்வருடன் சென்னை புறப்பட்டார். சென்னை வந்தடைந்த அவர்கள் நேரே வாசன் வீட்டிற்கு சென்றனர். வீட்டிலிருந்த வாசனின் காலில் விழுந்து வணங்கி, நின்று போன படத்தயாரிப்பை தொடர்ந்து நடத்தி முடித்துக் கொடுக்கும் படி, ஒரு விண்ணப்பத்தை அவர் முன் வைத்தனர்.

படத்தயாரிப்பாளர்கள் தன் காலில் விழுந்ததை கண்ட வாசன் பதறிப் போய் விட்டார். ''எதற்கு இதெல்லாம்; நான் உதவி செய்கிறேன்" கவலையில்லாமல் போங்கள் என்றார் வாசன். 

படத் தயாரிப்பாளர்

கோபாலகிருஷ்ணனை தனியே அழைத்த வாசன் “ உங்க சினிமா ஆர்வம் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க ஜெமினியிலேயே தங்கி விடுங்கள்.எனக்கு உதவியாக இருங்கள்” என்றார். திண்டுக்கல் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கிய 'மதன காமராஜன்' படத்தை ஜெமினியே தயாரிக்க நேர்ந்தது.

இதுதான் ஜெமினியில் உருவான முதல் தயாரிப்பு. 1941- ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான 'மதன காமராஜன்' அதே ஆண்டு நவம்பரில் திரையிடப்பட்டது. பல திரையரங்களில் பல மாதங்கள் ஓடியது. படம் சூப்பர் ஹிட் வாசனுக்கு நல்ல வருவாய் கொடுத்தது.

வாசனின் அடுத்த முயற்சி என்ன...

http://www.vikatan.com/news/article.php?aid=53596

Link to comment
Share on other sites

கைதட்டலை கணித்த கெட்டிக்காரர் எஸ்.எஸ்.வாசன் ( தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர்-13)

 

s_s_vasan%2013%20logo.jpg 

'பாலநாகம்மா' பெற்ற வெற்றி

s_s%20vasan.jpgஜெமினியில் உருவான முதல் தயாரிப்பான 'மதன காமராஜன்' ,  திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் பல மாதங்கள் ஓடியது. படம் சூப்பர் ஹிட்.  வாசனுக்கு நல்ல வருவாய் கொடுத்தது.

வாசனின் அடுத்த முயற்சி

இதன்பிறகு 'பால நாகம்மா' என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தார் எஸ்.எஸ்.வாசன். அதே படத்தை ஆந்திரத்திலும் தமிழக திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டார். தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது, தெலுங்கு பதிப்பு. ஆனால் மற்ற தமிழ் தயாரிப்புகளுக்கு இணையாக வெற்றிகரமாக ஓடியது.

நந்தனார்

காதல் காட்சிகள் இல்லாமலேயே ஒரு தமிழ் படத்தை தயாரிக்க முடியும் என்ற எண்ணத்தைத் தமிழ்த் திரையுலகில் விதைத்தவர் வாசன். முருகதாசு இயக்கத்தில் நந்தனார் படத்தை வாசன்,  ஜெமினியில் தயாரித்தார். காதல் இல்லாத பக்தி கதை. படத்தில் நந்தனாராக பிரபல தமிழிசைப் பாடகர் எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்தார்.


படம் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் தண்டபாணி தேசிகர் பாடிய ''கான வேண்டாமோ?, ''வழி மறித்து நிக்குதே'' ''என்னப்பன் அல்லவா" பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. காதல் காட்சிகள் எதுவும் இடம்பெறாத நந்தனார் படத்தை தயாரித்து, வெற்றிகரமாக வெளியிட்டு சாதனை புரிந்தார் வாசன்.

சந்திரலேகா இன்னும் சில சுவாரஸ்யங்கள்

1943-ல் ஜெமினியின் தயாரிப்பில் வெளியான 'மங்கம்மா சபதம்'  மெகா ஹிட் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. படத்தில் ரஞ்சனும், வசுந்தராதேவியும் (நடிகை வைஜயந்தி மாலாவின் தாயார்) ஜோடியாக நடித்தனர். டைரக்ட் செய்தவர் ஆச்சார்யா. படத்தில் வசுந்தராதேவி ஆங்கில பாணியில் ஆடிய நடனமும், பாட்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

vasan%203%20600%202%281%29.jpg

படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், படத்தின் கதையை தமிழ் பத்திரிகைகள் சில ஆட்சேபித்து எழுதின. மங்கம்மா சபதத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆங்கில படங்களுக்கு இணையாக தமிழில் ஒரு படம் தயாரிக்க வாசன் திட்டமிட்டார். அதற்கான கதையை உருவாக்குவதில் ஜெமினி கதை இலாகா ஈடுபட்டது. அந்தப் படம் தான் 'சந்திரலேகா' 

கதை இலாகாவில் அப்பொழுது பணியாற்றிய கே.ஜே.மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, வேம்பத்தூர் கிருஷ்ணன், நயினா ஆகியோர் பல மாதங்கள் இரவு பகலாக விவாதித்து 'சந்திரலேகா' கதையை உருவாக்கினார்கள்.

ஜெமினி சர்க்கஸ்  என மாறிய கமலா சர்க்கஸ்

சர்க்கஸ் காட்சிகளை பின்னணியாகக் கொண்ட அந்த படத்தில் நடிக்க,  கமலா சர்க்கஸ் கம்பெனியையே பல மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்து, ஜெமினி ஸ்டுடியோவுக்குள் அழைத்து வந்து கூடாரம் போட்டு தங்க வைத்தார் வாசன். படத்தில் ஹீரோவாக எம்.கே.ராதாவும்,  வில்லனாக ரஞ்சனும் நடித்தனர். கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி.  என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தரிபாய், ஆர்.நாராயணராவ் ஆகியோர் படத்தில் நகைச்சுவை காட்சியில் நடித்தனர்.

vasan%203%20600%203%281%29.jpg

பாடல்களை பாபநாசம் சிவனும் கொத்தமங்கலம் சுப்புவும் எழுதியிருந்தார்கள். (மங்கம்மா சபதம் படத்தை டைரக்ட் செய்தவர் டி.ஜி.ராகவாச்சாரி (ஆச்சார்யா). ஆச்சார்யா, வழக்கறிஞராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.

சில கருத்து வேற்றுமையால் ஆச்சார்யா விலகிக் கொள்ள, 'சந்திரலேகாவை' எஸ்.எஸ்.வாசன் டைரக்ட் செய்தார். வாசன் டைரக்ட் செய்த முதல் தமிழ்ப்படம். 'சந்திரலேகா' இதுதான் தமிழ் பட வரலாற்றில் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட முதல் பிரம்மாண்ட தயாரிப்பும் கூட. பின்னாளில் சந்திரலேகா பெற்ற வெற்றியினால் கமலா சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் என்றே மக்களிடையே புகழ்பெற்றது.

vasan%203%20600%20friends.jpg

திரையில் சுமார் மூன்றேமுக்கால் மணி நேரம் ஓடிய இப்படத்தை,  ரூ.35 லட்சம் செலவு செய்து தயாரித்தவர் வாசன். இந்த படத்தின் தயாரிப்பிற்காக தனது ஜெமினி ஸ்டுடியோவையும், வீட்டையும் வட இந்திய ஃபைனான்ஸியர் ஒருவரிடம் அடகு வைத்து பணம் திரட்டினார். அதிக வட்டிக்கு கடன் வாங்கியிருந்த வாசன், மாதம் தோறும் செலுத்த வேண்டிய வட்டி தொகையைக் கண்டு சற்று நிலைகுலைந்து போனார். கடன் சுமை வாசனை அழுத்தியது.

படத்தை வாசன் தயாரித்து முடிக்க, சுமார் மூன்றரை வருட காலம் ஆனது. வாசன் மனம் தளரவில்லை. ஸ்டுடியோவை விற்றுவிட்டு கடன் சுமையிலிருந்து மீளலாமே என நண்பர்கள் சிலர் வாசனுக்கு ஆலோசனை கூறினர். வாசன் முன்னம் இருந்ததை விட மிகவும் மன உறுதியுடன் இருந்தார். 'சந்திரலேகா' படத்தை 1948-ம் ஆண்டு வெளியிட ஆயத்த பணிகளைச் செய்தார்.

1948- ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் அதாவது தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று 'சந்திரலேகா' படத்தை காக்கிநாடாவிலிருந்து கொழும்பு வரை, தென்னிந்தியா முழுவதும் 50 தியேட்டர்களில் ஒரே நாளில் திரையிட்டார்.

vasan%203%20600%2011.jpg

சென்னை நகரில் பிரபாத், க்ரௌன், ஸ்டார், வெலிங்டன் ஆகிய நான்கு தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. ஒவ்வொருநாளும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இப்படத்தைக் கண்டு களித்தனர். படம் வெற்றிகரமாக ஓடியது. வாசன் கடன் சுமையிலிருந்து மீண்டார்.

படத்தில் கவர்ச்சி வில்லனாக நடித்த நடிகர் ரஞ்சனின் குதிரை சவாரிக் காட்சி, வாள் சண்டையை பற்றி பத்திரிக்கைகள் வெகுவாக சிலாகித்து எழுதின. கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி சர்க்கஸில் பார் விளையாடும் காட்சி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டன. ஒரு பத்திரிகை 'ஊதியமாக ஒரு லட்சம் பெற்ற டி.ஆர். ராஜ குமாரியின் அற்புதமாக பார் விளையாடும் காட்சியை காணத்தவறாதீர்கள்' என்று செய்தி வெளியிட்டிருந்தது.

* அந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக வசூலைத் தந்தப் படம் என்ற பெருமையை 'சந்திரலேகா' பெற்றுத்தந்தது.

ஹிந்தி பேசிய சந்திரலேகா

சந்திரலேகா படத்தை அப்படியே 'டப்' செய்யாமல், சில காட்சிகளை மீண்டும் ஹிந்தியில் படமாக்கினார். ஹிந்திப் படத்தின் வசனங்களை பண்டிட் இந்திரா என்பவர் எழுதினார். தமிழ் படத்தில் நடித்த 'ரஞ்சன் உள்ளிட்ட சிலர் தங்கள் பாகங்களை, தாங்களே ஹிந்தியில் பேசி நடித்தார்கள். சந்திரலேகா டப்பிங் முடிந்ததும் ஹிந்தி பதிப்பை பம்பாய் நகரில் முதலில் வெளியிட முடிவு செய்தார். அதற்காக பம்பாயிலிருந்து வெளியான Times of India போன்ற பிரபல நாளேடுகளில் முழு பக்க விளம்பரங்கள் வெளியிட்டார்.

vasan%203%20600%20mgr.jpg

'சந்திரலேகா' படத்தின் விளம்பர பேனர்களை ஹிந்தியில் அச்சடித்து' மும்பையின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். 'சந்திரலேகா' இந்திப்பட விளம்பரங்களுக்காக வாசன் செலவழித்த தொகை அந்நாளிலேயே சுமார் 7 லட்சம். ''ஆங்கிலப் படங்களுக்கே சவால் விடும்படி இப்படி ஒரு படத்தை தமிழர் ஒருவரால் இந்தியாவில் எப்படி தயாரிக்க முடிந்தது'' என்று வட இந்திய பட வட்டாரங்கள் வியப்பில் மூழ்கின. இப்படத்தின் மூலம் 'வாசனின் நறுமணம் திக்கெட்டும் பரவியது. வட இந்திய தயாரிப்பாளர்களை ''படம் எடுப்பதில் தமிழர்கள் திறமைசாலிகள்தான்” என்பதை இப்படத்தின் மூலம் ஒப்புக்கொள்ள வைத்தார் வாசன்.

ரஞ்சனுக்கு வரவேற்பு

சந்திரலேகாவில் ரஞ்சனின் நடிப்பும், அனல் பறக்கும் அவருடைய வாள் வீச்சும் வட இந்திய ரசிகர்களை கவர்ந்தது. மும்பை பட அதிபர்கள் ரஞ்சனை இந்திப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ரஞ்சனுக்கு ஹிந்தி தெரியுமாதலால் மும்பைக்கு குடியேறி, வீரதீரச் செயல்கள் நிறைந்த இந்திப் படங்களில் நடித்து புகழப்பட்டார்.

ஆங்கிலத்தில் சந்திரலேகா

சந்திரலேகாவின் நீளத்தை குறைத்து ஆங்கில விளக்க உரையுடன் அமெரிக்கா, சுவீடன், ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகளில் திரையிட்ட தகவலும் அந்நாளில் ஆச்சர்யத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்ற விஷயம். மொத்தத்தில் உலக அளவிலும் புகழ்பெற்ற முதல் தமிழ்ப் படம் 'சந்திரலேகா' என்று கூறலாம்.

vasan%203%20600%20sivaji.jpg

திரையுலகின் வாசன் புகுத்திய புதிய முறை

ஜெமினியில் தயாராகும் படங்களில் எஸ்.எஸ்.வாசனின் கவனத்தை மீறி எதுவும் இடம்பெறாது. படம் தயாரித்து முடிந்ததும், தன்னிடம் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களிடமும் கதை பற்றி கருத்து கேட்பார். யாரொருவர் படத்தின் காட்சியையோ, கதையின் ஓட்டத்தையோ விமர்சித்தாலும் அதற்கு முக்கியத்துவம் தந்து படத்தில் மாற்றங்கள் செய்வார்.

ஒருமுறை தான் எடுத்த படத்தின் காட்சிகளை பார்த்த வாசன், தியேட்டரில் அந்த படத்திற்கு எத்தனை இடங்களில் கைதட்டல் எழும் என கணித்திருந்தார்.

vasan%203%20600%204%281%29.jpg

பெரும்பாலும் அவரது கணக்கு தப்பாது. அத்தனை கூர்மையான மனிதர். ஆனால் படத்தின் பிரத்யேக காட்சியில், அவர் சொன்னதற்கு மாறாக ஒரு இடத்தில் பார்வையாளர்களிடமிருந்து எந்த சலனமுமில்லை. குழம்பிப்போன வாசன், உடனடியாக அந்த காட்சியை திரும்ப வேறு விதமாக சூட் செய்து படத்தில் புகுத்தினார்.

படம் தியேட்டரில் ரிலீசானபோது வாசன் கணித்ததுபோல் அதற்கும் சேர்த்து ரசிகர்களிடமிருந்து கைதட்டல் எழுந்தது. நிம்மதியடைந்தார் வாசன். அதுதான் அவரது தொழில் ஈடுபாடு.

vasan%203%20right.jpgநடிகர்,  நடிகைகளை ஒப்பந்தம் செய்வதிலும், பிறர் பின்பற்றாத ஒரு வழக்கத்தை வாசன் பின்பற்றினார். சினிமா நடிகைகளையும், நடிகர்களையும் தனது ஸ்டுடியோவில் மாத ஊதியம் பெரும் கலைஞர்களாக வாசன் நியமித்துக் கொண்டார்.

இதன் மூலம் கால்ஷீட் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்த்தார்.  எம்.கே.ராதா, புஷ்பவல்லி, கொத்தமங்கலம், சுப்பு, நடிகை சுந்தரிபாய், ஶ்ரீராம், வனஜா, எல்.நாராயணராவ் போன்றவர்கள் ஜெமினியில் மாத சம்பளத்தில் பணியாற்றிய கலைஞர்கள். 1940- களிலேயே நடிகர் எம்.கே.ராதாவுக்கு மாத சம்பளமாக 2 ஆயிரம் ரூபாய் தரப்பட்டிருக்கிறது.

சந்திரலேகா படத்தை தயாரிப்பதற்கு முன் குறுகிய கால தயாரிப்பு களாக 'தாசி அபரஞ்சி', 'மிஸ் மாலினி' ஆகிய படங்களை தயாரித்தார் வாசன். இரண்டு  படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

பிரபல நாவல் எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் ஆங்கிலத்தில் எழுதிய 'மிஸ்டர் சம்பத்' என்ற நாவல்தான் 'மிஸ் மாலினி' என்ற பெயரில் படமாகியது. கதாநாயகி மாலினியாக புஷ்பவல்லி நடித்தார். இப்படத்தில் சினிமா டைரக்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர்,  பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜாவர் சீத்தாராமன்.

மிஸ் மாலினி படத்தில்தான் ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடம் ஒன்றில் நடித்தார் என்பது கூடுதல் தகவல்

http://www.vikatan.com/news/article.php?aid=53952

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தேவரை தியேட்டருக்கு வரவழைத்த வாசன்! ( தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர் -14)

 

vasan%2014%20logo.jpg

ஔவையார்

முருக பக்தர், இந்திய தேசிய போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தென்னிந்திய தலைவர்களில் ஒருவரான அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நண்பராகவும் திகழ்ந்தவர். தேசப்பற்றும், தெய்வீகப்பற்றும் நிரம்பிய தேவர், ஒரு சினிமாவை விரும்பி பார்த்தார் என்றால் ஆச்சரியம் இல்லையா? ஆம்! முத்துராமலிங்கத் தேவர் பார்த்த சினிமா, ஜெமினி தயாரிப்பில் வெளியாகி பெரும்புகழ் கொடுத்த “ஒளவையார்“.

vasan%2014%20right%20last.jpgசந்திரலேகா வின் வெற்றிக்களிப்பிற்கு  நேர் எதிராக  அமைந்தது,  சந்திரலேகாவுக்கு அடுத்த ஓரிரு மாதங்களுக்குப்பின் வெளியான ஜெமினியின் ஞானசவுந்தரி'. எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதேபெயரில் அப்போது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்த திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. காரணம் ஜெமினியின் தயாரிப்பில் நேட்டிவிட்டி விடுபட்டிருந்ததே. தனது திரைப்படம் மக்களிடையே எடுபடாததும், விமர்சனத்திற்குள்ளானதும் எஸ்.எஸ். வாசனை சிந்திக்க வைத்தது.

நேர்மையான முறையில் அந்த தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர், முத்தாய்ப்பாக தனது உதவியாளரை அழைத்து, “ நம் படத்தை மக்கள் ரசிக்காதபோது, இனி எந்த காலத்திலும் இந்தப்படம் திரையரங்கில் வெளியாகக் கூடாது. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் எல்லா திரையரங்குகளிலிருந்தும் படத்தை உடனடியாக திரும்பப்பெற்று விடுங்கள்” என உத்தரவிட்டார்.

'ஞானசவுந்தரி' யினால் ஏற்பட்ட தோல்வியை அதே ஆண்டின் (1948) இறுதியில் வெளியான சக்ரதாரி படத்தின் வெற்றியின் மூலமாக மீட்டெடுத்தார். வி.நாகையா, புஷ்பவல்லி, ஜெமினிகணேஷ் நடித்த அந்தப்படம் ஜெமினிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

சந்திரலேகாவைப்போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953-ல் ஔவையார் படத்தை வாசன் தயாரித்தார். பொழுதுபோக்கு அம்சங்களால் மக்களை மகிழ்வித்து, படங்களை வெற்றிகரமாக்கி வந்த அந்த நேரத்தில், சினிமாவிற்கான எந்தச் சிறப்பம்சமும் இல்லாத ஔவையார் வரலாற்றை எடுக்க முனைந்தார் வாசன். ஜெமினி நிறுவனம் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே அடையாளப்படுத்தும் நிறுவனம் அல்ல என்பதுபோல, அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும்படியாக 'ஔவையார்' படத்தை ஒரு வெற்றிப்படமாக்கினார் வாசன்.

'ஔவையார்' படம் ரசிகர்கள், ஆன்மிகவாதிகளை மட்டுமில்லாமல் அதுவரை சினிமா பக்கம் தலைவைத்து படுக்காத பல பெரும் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. 

vasan%2014%20550%2011.jpg

'ஔவையார்' பாத்திரத்தில் அந்நாளைய நாடக கலைஞரும்' பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளை அவர் தேர்ந்தெடுத்தார். தனது படத்தில் ஔவையாராக கே.பி.எஸ் நடிக்கவேண்டும் என வாசன் ஆர்வப்பட்ட அதே நேரம், தன் கணவரின் மறைவு மற்றும் சொந்த வாழ்க்கை சோகங்களினால் நாடகம் மற்றும் சினிமாவிலிருந்து முற்றாக விலகி ஒதுங்கியிருந்தார் கே.பி.எஸ்.

எதிர்பார்த்ததுபோல அவரை அணுகியபோது ஒரே குரலில் மறுத்துவிட்டார். ஆனால், 'ஔவையார் திரைப்படம் எடுத்தால் அதில் கே.பி.எஸ்.தான் ஔவையார்; இல்லையேல் படத்தை எடுப்பதில்லை' என்பதில் உறுதியாக இருந்தார் வாசன்.

vasan%2014%20600%2044.jpg

கே.பி.எஸ். பெற்ற 1 லட்சம்

மரியாதைக்குரிய ஒரு தயாரிப்பாளரின் கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை. அதே சமயம் நடிக்கவும் விருப்பமில்லை. இந்தநேரத்தில் கே.பி.எஸ். ஒரு உபாயம் செய்தார். 'வாசனின் படத்தில் நடிப்பதற்காக பெரும்தொகை ஒன்றை கேட்போம். அவர் அதிர்ச்சியாகி இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா என வேறு ஒரு நடிகையை அணுகுவார். நாம் பிரச்னையிலிருந்து விடுபடலாம்' என திட்டம் தீட்டினார். ஆனால் நடந்தது வேறு.

vasan%2014%20600%201.jpg

கே.பி.எஸ். கேட்ட தொகையை வாசன் எந்த மறுப்புமின்றி ஒப்புக்கொண்டார். இப்போது அதிர்ச்சி கே.பி.எஸ்.க்கு. சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் தனக்கு கேட்ட தொகையை தரும் அளவுக்கு வாசன் 'ஔவையார்' படத்தில் தீவிர ஆர்வம் கொண்டிருப்பதை உணர்ந்த கே.பி.எஸ்.,  சிறு புன்முறுவலோடு ஔவையாராக நடிக்க ஒப்புக்கொண்டார். கே.பி.எஸ். கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா. 1 லட்சம்.
(1950 களில் பிரபல நடிக, நடிகையர்களே சில ஆயிரங்களில்தான் சம்பளம் பெற்றனர்)

'ஔவையார்' படம் வெளியானபோது வாசனின் தீர்க்க தரிசனமும், தேர்ந்த சினிமா சிந்தனையும் வெளிப்பட்டது. ஆம்!  'ஔவையார்' வேடத்தில் அற்புதமாக பாடி, அருமையாக நடித்திருந்ததோடு வயதிலும், தோற்றத்திலும் கே.பி.சுந்தராம்பாள் கனக் கச்சிதமாக பொருந்தி இருந்தார்.

கே.பி.சுந்தராம்பாளின் நடிப்பு தமிழகமெங்கும் சிலாகித்து பேசப்பட்டது. சங்க காலத் தமிழ் மூதாட்டியான ஔவையாரின் வரலாற்றை 'செல்லுலாய்டில்' பதிவு செய்த பெருமை பெற்றார் வாசன்.

vasan%2014%20600%205.jpg

ஔவையார் திரைப்படத்திற்கு தமிழறிஞர்களிடமிருந்தும் ஆன்மிகவாதிகளிடமிருந்தும் பாராட்டு கிடைத்தது. ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், ம.பொ.சி., 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் வாசனுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.

தேவரை சினிமா பார்க்க வைத்த எஸ்.எஸ். வாசன்

அதுவரை எந்த சினிமாப் படத்தையும் பார்த்திராத தேவர், சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்.  தியேட்டர் பால்கனியில் தன் நண்பர் ஒருவருடன் அமர்ந்திருந்த தேவரைப் பார்த்த தியேட்டர் முதலாளி, திக்குமுக்காடிப் போய் விட்டார். இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து 'ஔவையார்' படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். அதுவரை தேவர் எந்த சினிமாவுக்கும் சென்றதில்லை என்பார்கள். தேவரை சினிமா பார்க்க வைத்து சாதனை படைத்தவர் எஸ்.எஸ்.வாசன். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதியும் நன்றி தெரிவித்தார் வாசன்.

vasan%2014%20devar.jpgதனது திரைப்படங்கள் பாமர மக்களின் ரசனையிலிருந்து விலகித் தெரிய கூடாது, அதே சமயம் கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் அமைந்து விடக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்ட வாசன், ஜெமினியில் ஒவ்வொரு படமும் எடுத்து முடிந்ததும், ஸ்டுடியோவின் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடுவார். காட்சி முடிந்தபின் அவரவர் தங்கள் கருத்துக்களை எழுதி அலுவலகத்தில் உள்ள ஒரு பெட்டியில் போடவேண்டும்.

மறுதினம் அவற்றில் ஒன்றுவிடாமல் படித்து, படத்தின் நிறை, குறைகளைத் தெரிந்து கொள்வார். 

படம் குறித்து ஏதாவது எதிர்மறை விமர்சனம் வந்தாலும் அவற்றை கருத்தில்கொண்டு அந்த மாற்றத்தை செய்ய உத்தரவிடுவார். அதன் பிறகே படத்தின் இறுதிப் பிரதிகள் எடுக்கப்படும். ஜெமினியின் வெற்றிக்கு அடித்தளமாக வாசன் கையாண்ட வழக்கம் இது.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடும் வாசனின் பங்கேற்பும்

காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட வாசன், காங்கிரஸ் அனுதாபியாக இருந்தாலும் எல்லா கட்சியினரிடமும் அன்பு பாராட்டினார். தமது இதழில் தனது கட்சி சார்பு, எந்த காரணம் கொண்டு எதிரொலிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆதரவு, எதிர்ப்பு கருத்து எதுவானாலும், அது எந்த கட்சியினுடையது என்றாலும், நடுநிலையாக ஆனந்தவிகடனில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

vasan%2014%20600%204.jpg 

ராஜாஜி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோடு  நெருக்கம் பாராட்டினாலும், காங்கிரசுக்கு எதிர் அணியில் நின்ற அண்ணாவுக்கும் அவர் நண்பராகவே விளங்கினார். 1968-ம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டை நடத்தியது அண்ணா அவர்களின் தலைமையிலான அரசு. இந்த மாநாட்டு ஏற்பாடுகளில் வாசன் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மாநாட்டையொட்டி சென்னை மவுண்ட் ரோடில் ஒரு பிரம்மாண்ட அலங்கார ஊர்தி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பட அதிபர்கள் நாகிரெட்டி, ஏ.எல்.சீனிவாசன், எ.வி.மெய்யப்ப செட்டியார் ஆகியோருடன் இணைந்து வாசன் செய்து கொடுத்தார். இந்த ஊர்வலத்தில் இடம் பெற்ற ஊர்திகளில் சிலப்பதிகாரக் காட்சிகள் மற்றும் கம்பர், பாரதி, பாரதிதாசன் போன்றோர் உருவங்கள் அழகாக அமைக்க பெற்றிருந்தன. முத்தாய்ப்பாக இந்த மாநாட்டிற்கான இலச்சினையை (logo) தயாரித்துக் கொடுத்தவரும் வாசனே.

vasan%2014%2055.jpg

இம்மாநாட்டை ஒட்டி தமிழ்ப் புலவர்களுக்கும், அறிஞர்களுக்கும் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் சிலைகள் நிறுவப்பெற்றன. இந்த சிலைகளை அமைத்தவர்கள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் 02.01.1968 -ம் நாள் ஔவையாரின் திருவுருவச் சிலையை எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார். இச்சிலை அமைவதற்கான  நிதி உதவி செய்தவர் எஸ்.எஸ்.வாசன்.

தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்த வாசன் என்ற மாமேதையின் கலைப்பயணம், 1969 ஆகஸ்ட்டில் முடிவுக்கு வந்தது. இயற்கையின் இலக்கிற்கு அவரும் தப்பவில்லை. பத்திரிக்கை, சினிமா, பொதுவாழ்க்கை என வாழ்நாள் முழுவதும் பரபரப்பாக இயங்கிவந்த அந்த மேதை, தன் உடல்நிலையை கவனிக்கவில்லை. விளைவு, வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர்,  தம் 65-வது வயதில் 1969 ஆகஸ்ட் 26 ம்-தேதி சினிமா மற்றும் பத்திரிகை உலகிற்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு  மறைந்தார்.

vasan%2014%20leftt.jpgஅவரது மறைவிற்கு சர்வகட்சித் தலைவர்களும் சினிமா உலகத்தினரும் கண்ணீர் வடித்தனர். மதன காமராஜனில் துவங்கிய வெற்றிகரமான அவரது கலைப்பயணம், எல்லோரும் நல்லவரே படத்துடன் முடிவடைந்தது. எம்.ஜி.யாரை வைத்து ஒளிவிளக்கு படத்தையும், சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தையும் தயாரித்தார்.

மத்திய அரசு கவுரவம்

வாசனின் சேவையை பாராட்டி, கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசு, எஸ்.எஸ்.வாசனின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு கவுரவப்படுத்தியது. 

தனது 32-வது வயதில், ஓர் எளிய கதாசிரியராக சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்து, தம் உழைப்பால் வெற்றிகரமான இதழாளராகவும் தயாரிப்பாளராவும் ஒருங்கே விளங்கிய வாசன் என்ற பெருமகனாரின் புகழ், சினிமாவை நேசிக்கிற கடைசி ஒரு ரசிகன் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

http://www.vikatan.com/news/article.php?aid=54532

Link to comment
Share on other sites

எஸ்.ஜி. கிட்டப்பா - கே.பி. சுந்தராம்பாள்: (தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-15)

 

kittappa%2015%20logo.jpg

செங்கோட்டையை சேர்ந்த அந்த சிறுவன், தமிழ் நாடக மேடையை தனது பிரத்யேக சங்கீத பிரயோகத்தினால் தனது சொந்த சாம்ராஜ்யமாகவே மாற்றியிருந்தான். எட்டுக்கட்டை சுருதியில் இளைப்பில்லாத சங்கீத மழை பொழியும்  ஆற்றல் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.

10 வயது கூட நிரம்பாத அந்த பாலகனின் சங்கீத கச்சேரியை கேட்க, பிரபல சங்கீத வித்வான்கள் அவன் நிகழ்ச்சி நடக்கும் சபாக்களை நோக்கி வண்டுபோல் மொய்த்தனர்.

எஸ்.ஜி.கிட்டப்பா

'தாய்மொழித் தமிழில் சுவையுடன் பாடினால் பாமரனும் ரசித்துக்கேட்பான்' என்ற சூத்திரத்தை புரிந்துகொண்ட முதல் கலைஞன் அவன்தான். அதுதான் பின்னாளில் இசை உலகில் அந்த சிறுவன் வெற்றிபெறவும், நாடக உலகம் அவரை கொண்டாடவும் காரணமானது. நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஜி கிட்டப்பாதான் அந்த சிறுவன்.

kittappa%20leftt%201.jpgசெங்கோட்டையில் பிறந்த கிட்டப்பாவின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டையில் 1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி. இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டில் ராமகிருஷ்ணனின் செல்லப்பெயர் கிட்டன். அதுவே பின்னாளில் கிட்டப்பா என்றானது. நெருங்கிய நண்பர்கள் அவரை 'பொங்கப்பா' என அழைப்பர்.

5 வயதில் நாடக பிரவேசம்

1911 -ம் ஆண்டு கொட்டம்பட்டியில் நல்லதங்காள் நாடகம் நடைபெற்றது. அதில் கிட்டப்பாவின் சகோரரான செல்லப்பா பெண்வேடமிட்டு நல்லதங்காளாக நடித்தார். கிட்டப்பா, நல்லதங்காளின் குழந்தைகளில் ஒருவராக நடித்தார். அதுதான் நாடக உலகில் கிட்டப்பாவின் முதல் பிரவேசம். அடுத்தவருடம் மதுரை டவுன்ஹாலில் இருந்த ஸ்ரீமீனாட்சிசுந்தரா சென்டரில்  நடந்த ஒரு நாடகத்தில்,  5 வயது சிறுவனான கிட்டப்பா வெறும் நடிப்பின்றி, பாடல்களையும் பாடி நடித்தார்.

அதே டவுன் ஹாலில், மற்றொரு நாடகத்தில் பாதுஷாவின் மகனாக நடித்தார். அந்த நாடகத்திற்கு வந்திருந்த நாடக உலகின் தந்தை எனப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள், சிறுவன் கிட்டப்பாவின் அபார இசைஞானத்தை கண்டு அதிசயித்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நட்பு, சிறுவன் கிட்டப்பா தன்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

ஏழை, எளிய மக்களின் இசை ரசனையை புரிந்துகொண்டு, அதற்கேற்ப மேடைகளில் பாடி புகழ்பெற்ற கிட்டப்பா, வறுமையினால் முறையான கல்வி பயிலாதவர் என்பது ஆச்சர்யம். ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும், நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. 5 வயதில் மேடைப்பிரவேசம் செய்த கிட்டப்பா, தனது 6-வது வயதில் சிங்கப்பூர் சென்று சில நாடகங்களில் நடித்தார்.

மிக சிறுவயதிலேயே கடல் கடந்து சென்று அரிதாரம் பூசி நடிக்கும் வாய்ப்பு பெற்ற கிட்டப்பாவின் சிலோன் பயணத்தின்போது,  அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு அவரது கலைஞானத்தை பாராட்டி, தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப்படுத்தியது.

தனது 12-வது வயதில்,  சென்னையில் முகாமிட்டு நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த பிரபல கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்தார் கிட்டப்பா. கம்பெனி நாடகங்களில் கிட்டப்பாவுக்கு நாரதர் வேடம். ஒருமுறை அவரது நாடகத்தை பார்க்க வந்த நீதியரசர் அப்துல் ரஹீம், கிட்டப்பாவை பாராட்டி மகிழ்ந்தார்.

kittappa%20600%2011.jpg

திருமணம்

1924 ல் கிட்டப்பா, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கிட்டம்மாளை திருமணம் செய்துகொண்டார். தண்டையார்பேட்டை பரமானந்ததாஸ்- சோட்டாதாஸ் பங்களாவில் நடந்த இவர்களது திருமணத்திற்கு பிரபல சங்கீத வித்வான்கள் செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் உள்ளிட்ட பிரபலங்கள் வந்தனர்.

கிட்டதட்ட 7 வருடங்கள் கன்னையா நாடக கம்பெனியில் பணியாற்றிய பின், 1926 -ல் விலகி ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அப்போது இலங்கையில் கிட்டப்பா நாடகங்கள் தொடர்ந்து நடந்தன. அவருடன் அவரின் ஹார்மோனிய கலைஞரான சகோதரர் காசியும் சென்றார். நாடகத்தில் நடிப்பதற்காக, சிங்கம் அய்யர் என்பவரின் அழைப்பின்பேரில் இலங்கை சென்ற கிட்டப்பாவின் வாழ்க்கையில் அந்த பயணம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

kittappa%20600%201.jpg

அப்போது தமிழ் நாடகமேடையில், தன் இனிய சாரீரத்தாலும் நடிப்பாலும், நாடக உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்திவந்த பெண்மணி ஒருவரும் அப்போது இலங்கையில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தார். கிட்டப்பா விற்கு ஈடான புகழ்கொண்ட அவர், நாடகமேடை ராணி என நாடக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டார்.

இலங்கையில் நிகழ்ந்த அதிசயம்

kittappa%20right.jpg2 வருட காண்டராக்டில் இலங்கை வந்திருந்தார் அவர். தமிழகத்தில் நாடக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு அரங்கேற்றிய சாரங்கதாரா, ஆண்டாள், நந்தனார், பவளக்கொடி போன்ற நாடகங்களால் கிடைத்த புகழ்தான்  அந்த நாடகமேடை ராணியை இலங்கை வரை விஜயம் செய்ய வைத்தது. அப்போது அவருக்கு வயது 18.

இலங்கையில் இந்த பெண்மணி நாடகங்களை நடத்தி வருவது அறிந்து கிட்டப்பாவின் நண்பர்கள், “ இது சரியான நேரம் இல்லை. அவரது நாடகங்கள் முன் உன் நாடகங்கள் நிற்குமா. வீணே சிக்கிக்கொள்ள வேண்டாம். பயணத்தை தள்ளிப்போடு” என்றெல்லாம் எச்சரித்தனர்.

அதே சமயம்  அந்த பிரபல பெண்மணியிடமும் அவரது நலம் விரும்பிகள், “ கிட்டப்பா வருகிறாராம். அவரது குரலுக்கு முன் நீ பாடல் பாடி வெற்றி பெறமுடியாது. காண்ட்ராக்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவது உத்தமம்” என்று எச்சரித்தனர்.

கிட்டப்பா தனது நண்பர்களின் அச்சத்தை ஒதுக்கிவிட்டு இலங்கை புறப்பட்டார்.

அங்கு நடந்தது என்ன...

http://www.vikatan.com/news/article.php?aid=54880

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சுந்தராம்பாளை நேரில் தேடிவந்த கிட்டப்பா ( தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-16)

 

kbs%2016%20logo.jpg

லங்கையில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த அந்த இசைக்குயிலுடன் எஸ்.ஜி. கிட்டப்பா இணைந்து நடிப்பார் என அப்போது யாரேனும் சொல்லியிருந்தால், அவர்களே அதை நம்பியிருக்கமாட்டார்கள். தனித்தனியே புகழ் பெற்றிருந்த அவர்கள் இருவரையும் இணைந்து நடிக்கவைத்தால், நாடகத்திற்கு இன்னும் புகழும் வசூலும் கிடைக்குமே என காண்ட்ராக்டர்கள் திட்டமிட்டதன் பலன் அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதன்படி இரு தரப்பிலும் பேசி, அதற்கு சம்மதம் பெறப்பட்டது.

kbs%202%20right%203.jpgகிட்டப்பாவுக்கு ஈடான புகழுடன் அன்று இலங்கையில் முகாமிட்டிருந்த அந்த கந்தர்வ கானக் குயில் யார் தெரியுமா? எட்டுக்கட்டை சுருதியிலும் வேட்டுச்சத்தமாக வெளிக் கிளம்பும் அவரது நாதத்தை, இசைப்புலமை இல்லாதவர் கேட்டாலும் அவரது காதுகள் புடைத்துக்கொள்ளும். அத்தகைய திறமைப் பெற்றவர், அந்த பெண்மணி. தன் பாட்டு திறமையால், நாட்டு விடுதலைக்கு மக்களைத் தூண்டிய, நீதிக் கட்சியை தன் வெண்கலக் குரல் பாட்டுப் பிரசாரத்தால் வீட்டுக்கு அனுப்பி, காங்கிரஸ் கட்சியை சென்னை ராஜதானியில், ராஜாஜி தலைமையில் ஆட்சியில் அமர்த்திய அந்த தேசபக்தை வேறு யாருமல்ல...கே.பி.சுந்தராம்பாள்!

கொடுமுடி கோகிலம்

தமிழ் மேடை நாடக ராணியாக வலம் வந்த கே.பி.சுந்தராம்பாள் பிறந்தது, கொடுமுடி. 1908 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடுமுடியில் பிறந்ததால் கொடுமுடி கோகிலம் என்ற பெயரும் இவருக்குண்டு.

சிறு வயதில் ஓடும் ரயிலில் இவர் ஒருமுறை பாட, அது அதே ரயிலின் இன்னொரு பெட்டியில் பயணம் செய்த F.G. நடேசன் என்கிற ரயில்வே அதிகாரியை கிறங்க வைத்தது. கானமழையில் நனைந்த அவர், கே.பி. சுந்தராம்பாளை P.S. வேலு நாயர் நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார். நாடக உலகிற்கு ஒரு இசை பொக்கிஷம் கிடைத்தது.

இளம் சிறுமியாக நாடக் கம்பெனியில் சேர்ந்த சுந்தராம்பாள்,  ''பாலபார்ட் வேடத்திலிருந்து வெகு சீக்கிரத்தில் புரொமோஷன் பெற்று, 'ஸ்திரிபார்ட் நடிகையாக முன்னேற்றம் கண்டார். கொட்டகையில் அமர்ந்திருக்கும் கடைசி ரசிகனின் காதுக்குள் பாயும் உச்சஸ்தாயி குரல் வளம் சுந்தராம்பாளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. அக்கால நாடக மேடைகளில் அரங்கேறிய 'வள்ளி திருமணம்' , 'நந்தனார்', 'பவளக்கொடி', ''சாரங்கதாரா', 'ஆண்டாள் திருக்கல்யாணம்' போன்ற நாடகங்கள் சுந்தராம்பாளின் ஸ்திரிபார்ட் வேடத்துக்கு நல்ல விருந்தாக அமைந்தன. தமிழ் நாடக மேடையில் தன் இனிய சாரீரத்தாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டு நாடகமேடை ராணியானார் சுந்தராம்பாள்.

1926-ம் ஆண்டு இரண்டு வருட காண்ட்ராக்ட்டில் நாடகத்தில் நடிக்க இலங்கைக்கு சென்றார். அப்பொழுது அவருக்கு வயது 18. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கொழும்பு (Colombo) நகரத்தில் நாடகங்களில் கல்திரிபார்ட்டாகவும், ராஜபார்ட்டாகவும் வேலன், வேடன், விருத்தன், நாரதர், நந்தனார் போன்ற வேடங்களில் நடித்தார்.

இலங்கை கொழும்பு நகரில்,  சுந்தராம்பாள் வெற்றிக் கொடி நாடக மேடையில் பறந்து கொண்டிருந்த சூழலில்தான் கிட்டப்பாவின் இலங்கைப் பயணம் அமைந்தது.

kbs%202%20600%202.jpg

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து நடிக்கவுள்ள செய்தி, இலங்கை முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஒரே நாளில் 'ராஜபார்ட் கிட்டப்பா- சுந்தராம்பாள் இணைந்து நடிக்கும்...' என கொழும்பு நகர் முழுவதும் விளம்பர தட்டிகள் முளைத்தன. ரசிகர்கள் அந்த நாளுக்காக காத்திருக்கத் துவங்கினர். அந்த நாளுக்கு முன்னதாக ஒரு சம்பவம் நடந்தது. கொழும்புவில் தங்கியிருந்த கிட்டப்பா, திடீரென ஒருநாள் சுந்தராம்பாள் தங்கியிருந்த இடத்திற்கு தேடி வந்தார்.

திடீர் சந்திப்பு

அந்தக் காட்சியை கே.பி. சுந்தராம்பாள் பின்னாளில் ஒரு பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.

“ ராஜா மாதிரி ஒரு ஆள் உன்னைப் பார்க்க வந்திருக்கிறான் என்று என் தாய் பாலம்பாள் என்னிடம் வந்து சொன்னார். நான் எழுந்திருந்து முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளும் முன்பே, சத்தமில்லாமல் ஒருவர் வந்து என் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். நான் பிரமித்துப் போய் நின்று கொண்டிருந்தேன். 'சிறிதும் கூச்சமில்லாமல் என் கட்டிலின் மேல் வந்து உட்காருவதாவது..!' என்று கோபத்துடன் எண்ணினேன். ஆனால் அதற்குள் அவர் பேசத் தொடங்கி விட்டார். என்ன கம்பீரமான தோற்றம்...என்ன தெளிவான வாக்கு... 'எனக்குரிய சுந்தரபுருஷன் வந்து விட்டார்' என்று எனக்கு அசரீரிபோல் தோன்றியது.

kittappa%20leftt%201.jpgவந்தவர், ''நாடகத்துக்கு முன் ஒத்திகை வேண்டும்" என்றார். "வேண்டாம்" என்றேன் நான். என் பாடல்கள் ஒரு புதுவிதம் என்றார். எப்படி இருந்தாலும் சமாளித்து கொள்கிறேன் என்றேன்.  ''நீ ஏமாந்து போவாய்" என்றார். "யார் ஏமாந்து போகிறவர் என்பது பின்னாலே தெரியும் என்றேன். என் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். நானும் சிலைபோல் நின்று கொண்டு அவர் முகத்தை அப்படியே மனதுக்குள் விழுங்கி கொண்டிருந்தேன். இதுதான் எங்கள் முதல் சந்திப்பு“

1926-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கிட்டப்பா - சுந்தராம்பாள் நடித்த 'வள்ளித்திருமணம்' நாடகம் கொழும்புவில் நடந்தது. நாடகத்தின் குறிப்பிட்ட பாடலை கிட்டப்பா தன்னுடைய பாணியிலேயே அற்புதமாக பாட, அந்த குரலுக்கு ஈடுகொடுத்து தன் கம்பீர குரலால் மயக்கினார் சுந்தராம்பாள். கொழும்பு ரசிகர்கள் இருவரின் நடிப்பையுமே சமமாக பாவித்து பாராட்டினர். 'நாடக வாழ்வுக்கு ஏற்ற சரியான ஜோடி!' என்று இருவரது நடிப்பையும் சிலாகித்துப் பேசினர்.

எஸ்.ஜி.கிட்டப்பா, சங்கராபரணம் ராகத்தில் பாடுவதில் தனி நிபுணத்துவம் பெற்றிருந்தார். வெண்கலக் குரலில் தமிழை உச்சரிப்பவர் கே.பி.சுந்தராம்பாள். தமிழ் உச்சரிப்பில் நறுக்கு தெரித்தாற் போல் தமிழை உச்சரிப்பதில் சமர்த்தர். கிட்டப்பாவிற்கும் சுந்தராம்பாளுக்குமுள்ள ஒற்றுமை- இருவருமே வறுமை பின்னணியில் மேடைக்கு பாட வந்தவர்கள். தொழிலில் சரிசமமாக புகழ்பெற்றவர்கள்.

இந்தியாவில் நடந்த இரண்டாவது சந்திப்பு

1927- ல் காரைக்குடியில் இருவரும் சேர்ந்து வள்ளித்திருமணம் நாடகத்தில் நடித்தனர். இங்குதான் அவர்களின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது அங்கு நடந்த நாடகத்தில் கிட்டப்பா வேலன் - வேடன் - விகுத்தன், வேடங்கள் ஏற்று நடித்தார். கிட்டப்பா, தியாகராய கீர்த்தனையை உச்சிஸ்தாயில் பாடிக்கொண்டே மேடைக்கு வந்தால், குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். அவ்வளவு நிசப்தம். சில சமயங்களில் வள்ளி நாடகத்தில் ''அம்மா ராவம்ம" என்று கல்யாணி ராகத்தில் கிட்டப்பா பாடிக்கொண்டே வருவார். சுந்தராம்பாள் ''சாக்ஷாத்காரணி பாடிக்கொண்டே வருவார். ரசிகர்கள் உற்சாகத்தில் எழுப்பும் கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடிக்கும். அவ்வளவு ரம்மியமான பாடல் காட்சி அது.

இதன்பின் இருவரும் பர்மா சென்று ரங்கூனில் நாடகங்களில் நடித்து நல்ல வருவாய் பெற்றனர். சில மாதங்கள் கடந்து இந்தியா திரும்பினர். இதன் பின்னர் கிட்டப்பா மீண்டும் கண்ணையா கம்பெனியிலேயே சேர்ந்து விட்டார். அங்கு நடைபெற்ற 'ஆண்டாள் திருக்கல்யாணம்' நாடகத்தில்,  கிட்டப்பா அசல் ஆண்டாளாகவே தோன்றி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்துவார். கிட்டப்பா, கண்ணையா கம்பெனியில் நடித்து வந்தபோது, சுந்தரம்பாள் தனியாக ஸ்பெஷல் நாடகங்களில் நடித்து வந்தனர். நாளோரு மேனியும் பொழுதொரு  வண்ணமுமாக அவர்களின் மானசீக காதல் வளர்ந்தது.

kbs%202%20600%203.jpg

திருநெல்வேலியில் நந்தனார் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அப்போது கே.பி.எஸ் நாடகத்தில் வேதியராக நடித்து வந்தார். வேதியர் வேடத்திற்கான பாடலையும், பாடத்தையும் கிட்டப்பா, சுந்தராம்பாள் வீட்டிற்கே வந்து சொல்லிக் கொடுத்தார். பாட வாத்தியார் என்ற பெயரில் சுந்தராம்பாள் மீதுள்ள தனது மையல் அவ்வப்பொழுது சைகைகள் மூலம் தெரிவித்தார்.

சுந்தராம்பாளின் திருநெல்வேலி வீட்டிற்கு கிட்டப்பா வந்தார். அவர் உள்ளத்தில் கள்ளம் இருப்பதை அவருடைய பார்வை காட்டிக் கொடுத்து விட்டது. ''எங்கே வந்தீர்கள்?" என்றார், சுந்தராம்பாள். பதில் சொல்லமால் மௌன சிலையாக அங்கேயே நின்று கொண்டிருந்தார் கிட்டப்பா. அவர் எண்ணம்  கே.பி. சுந்தராம்பாளுக்கு புரிந்தது. தன்னை கடைசி வரை காப்பாற்றுவதாக அவரிடம் உறுதிமொழி வாங்கி கொண்ட பின்னரே, அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.

திடீர் சிக்கல்

சுந்தராம்பாள் வீட்டிலிருந்து இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தோன்றியது. தாய்மாமன் மலைக் கொழுந்து இந்த திருமணத்தை விரும்பவில்லை. கடும் எதிர்ப்பையும் மீறி கிட்டப்பா- சுந்தராம்பாள் திருமணம் 1927 -ம் ஆண்டு நடந்தது. கிட்டப்பாவை காந்தர்வ மணம் செய்து கொண்டார். மாயவரம் கோயிலில் இறைவன் சன்னதியில் இருவரும் கணவன் மனைவியாக இணைந்தனர். திருமணத்திற்கு பின்னர் கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து 'ஶ்ரீகானசபா' என்ற நாடக கம்பெனி தொடங்கி தமிழ் நாடெங்கும் சுற்றி நாடகங்களை நடத்தினர்.

kbs%202%20600%201.jpg

அரங்குக்கு வெளியேதான் தம்பதியர். மேடை ஏறிவிட்டால் அவர்கள் நடிப்பில் அனல் பறக்கும். நாடக பாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள். ஒரு நாடகத்தில் சத்யபாமாவாக தோன்றிய சுந்தராம்பாளிடம் கிருஷ்ணனாக தோன்றிய கிட்டப்பா வேடிக்கையாக, ''என்ன பாமா இது? உனக்கு எந்த நகையை எங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையே? சுத்த மக்காக இருக்கிறாயே என்று பேசி கிண்டல் செய்தார். நாடகத்தில் இல்லாத வசனம் இது.

பதிலுக்கு சுந்தராம்பாள், “பெண்கள் அணியும் நகையைப் பற்றி உமக்கு என்ன தெரியும். சுத்த அசடாயிருக்கீங்களே நீங்க! என்று சொல்ல பதிலுக்கு கிட்டப்பா 'அடி அசடே! என் தாய் நான் பிறக்கும் போதே எனக்கு அணிவித்து அழகு பார்க்க ஆண்கள் நகை ஒரு செட்டும், பெண்கள் அணியும் நகை ஒரு செட்டும் வாங்கியிருந்தார். அதனால் எனக்கு அதெல்லாம் அத்துப்படி என்று சொல்ல, நாடக அரங்கமே கை தட்டலாக அதிர்ந்தது.

என்னதான் காதல் கிளிகளாக இருவரும் வலம் வந்தாலும் அவர்களின் வாழ்க்கைக் கூட்டை சிதைக்கவும் மனித உருவில் சிலர் வலம் வரத்தான் செய்தனர். கிட்டப்பா-சுந்தராம்பாள் வாழ்க்கையில் மூன்றாம் நபர்கள் மூக்கை நுழைக்க ஆரம்பித்தனர். என்ன ஆனது...?

-தொடரும்

http://www.vikatan.com/news/article.php?aid=55468

Link to comment
Share on other sites

மூன்றாண்டுகளில் முடிந்த வாழ்வு! ( தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-17)

 

kbs%2017%20logo.jpg

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்த திருமண வாழ்வு, சுமார் இரண்டரை ஆண்டுகள் இனிதாய் இருந்தது. பின்னர் இருவருக்குமிடையே மனக்கசப்பு உருவாகி அவர்கள் தாம்பத்ய உறவில் விரிசல் விடத் தொடங்கியது.

சுந்தராம்பாளுக்கு கிட்டப்பாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் அளவற்ற அன்பும், அதிக அக்கறையும் ஏற்பட்டிருந்தது. கிட்டப்பாவின் மீது ஒரு சிறு துரும்பு விழுந்தாலும் கண்ணீர் சிந்தும் சுபாவமுடையவர் சுந்தராம்பாள். இவர்களின் மணவாழ்க்கை சிலரின் கண்களில் எரிச்சலாக இருந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்களில் சிலர் அவ்வப்பொழுது பொய்யான வதந்திகளை இருவரிடமும் சொல்லி, அவர்களின் இன்ப வாழ்வை சிதைக்கத் தொடங்கினர்.

kbs%2017%20right.jpgசென்னையில் இவர்கள் தங்கியிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இவர்களின் பிரிவுக்கு அச்சாரமாக அமைந்து விட்டது. சென்னையில் அவர்கள் தங்கியிருந்தபோது, வேறொரு நாடகக் கம்பெனி,  கிருஷ்ணலீலா என்ற நாடகத்தை நடத்தி வந்தது.

அந்த நாடகத்தை பார்க்க விரும்பினார் சுந்தராம்பாள். 'நாடகத்திற்கு போக வேண்டாம்' என்றார் கிட்டப்பா. நாடகம் பார்க்கப் போனார் சுந்தராம்பாள். அன்று இரவே செங்கோட்டைக்கு புறப்பட்டுப் போய் விட்டார் கிட்டப்பா.

இருவருக்குமிடையே எழுந்த சில கருத்து மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இல்லற வாழ்க்கை,,  நிரந்தர சோகமாக உருமாறியது. அந்த நேரத்தில் கிட்டப்பா -  சுந்தராம்பாள் இல்லறத்தின் அடையாளமாக ஒரு ஆண் குழந்தை சுந்தராம்பாளுக்கு பிறந்திருந்தது.

பிறந்த ஒரே மாதத்திற்குள்ளேயே அக்குழந்தை மரணமடைந்தது. குழந்தை இறந்துபோன செய்தியை கிட்டப்பாவுக்கு கே.பி.சுந்தராம்பாள் தெரிவித்தார். கிட்டப்பா மனம் இளக வில்லை. அவர் கரூர் வந்து,  தனது மனைவி கே.பி.சுந்தராம்பாளை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. பிரிவு நீண்டது. இருவரும் தனித்தனியாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். 1929-ம் ஆண்டு பிரிந்த அந்த ஜோடி, 1933 ஜனவரி மாதம் மீண்டும் சந்தித்தது. அது ஒரு துயரமான சந்திப்பு.

ஆம்... 1933-ம் ஆண்டு கிட்டப்பாவின் உடல்நிலை மோசமடைந்ததை கேள்வியுற்ற கே.பி.சுந்தராம்பாள்,  கரூரிலிருந்து செங்கோட்டைக்கு நேரில் சென்று சந்தித்தார். உடல்நிலை மோசமாய் இருந்ததால்,  அவரை சென்னைக்கு அழைத்து வந்து, மயிலாப்பூரில் உள்ள டாக்டர் பி.ராமராவின் கிளினிக்கில் சேர்த்து அவருக்கு வைத்தியம் செய்தார்.

கிட்டப்பாவின் வைத்திய செலவை அவரே ஏற்றார். கணவன் மீது கொண்ட அன்பினால், அவரின் கோபதாபங்களை ஒதுக்கிவிட்டு அவருக்கு பணிவிடைகள் செய்தார். ஆனால் குணமடைந்து வந்த கிட்டப்பா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சென்னையிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வந்து சேர்ந்தார். கணவன் சொல்லாமல் புறப்பட்டு போய் விட்டது கே.பி.சுந்தராம்பாளை மனம் கலங்க வைத்தது. கே.பி.சுந்தராம்பாள் எவ்வளவுதான் தன் கணவன் மீது உண்மையான அன்பு செலுத்தினாலும், அதை ஏற்கும் நிலையில் கிட்டப்பா இல்லை. கிட்டப்பா மனம் போன போக்கில் பயணித்தார்.

kittappa%20leftt.jpgஇதனால் சில பலவீனங்களுக்கு ஆட்பட்டார். இதனால் கிட்டப்பாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. குடல் அழுகல், மற்றும் கல்லீரல் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டார். மரண வாயிலில் தானே வந்து சிக்கிக் கொண்டார் கிட்டப்பா. பாவம், இயற்கை தயவு தாட்சண்யம் காட்டவில்லை.

சிகிச்சை பலனின்றி 1933-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் செங்கோட்டையில் கிட்டப்பா மரணமடைந்தார்.

கிட்டப்பா சாவு செய்தி கேட்டு கே.பி.சுந்தராம்பாள் செங்கோட்டை வந்தார். சாகும்போது கிட்டப்பாவிற்கு இருந்த சில கடன்களை தானே அடைத்தார். சடங்கு முடிந்தபின் அவரது அஸ்தி கலசத்தை காசிக்கு எடுத்துச் சென்றார். பின் மனம் வாடி, கரூரில் வசித்தார்.

'எங்க ஆத்துக்காரர்...'  என்று பொதுவெளியில் பெருமையுடனும்,  உரிமையுடன் விளித்து பெருமைக்கொண்டாடிய கே.பி.சுந்தராம்பாள், கணவர் மரணத்திற்குப்பின் விரக்தியான மனநிலைக்கு வந்தார். கரூரிலுள்ள தன் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்த நிலையில் ஒரு மாற்றம் நேர்ந்தது....
http://www.vikatan.com/news/coverstory/55786-the-legend-kb-sundarambal-tamil-cinema-pioneers.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆண் வேடத்தில் நடித்த கே.பி. சுந்தராம்பாளுக்கு எழுந்த எதிர்ப்பு! (தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-18

 

kbs%20logo%2018.jpg

ணவர் கிட்டப்பாவின் மறைவிற்குப்பின் சுந்தராம்பாள் கரூரில் தங்கியிருந்தார். எந்த கம்பெனி நாடகங்களிலும் நடிக்கவில்லை. துறவி போல் கரூரில் காலம் கழித்தார்.  நாடக மேடைகளில் சிங்கார இசை பாடிய சின்ன குயிலொன்று சிறகொடிந்து தனிமையில் வாடுவதையறிந்து அவரது ரசிகர்கள் மனம் வருந்தினர்.

பின்னர் மனமாற்றத்திற்காக தேனாம்பேட்டையில் கொஞ்ச காலம் தங்கியிருந்தபோது சுந்தராம்பாள்,   Indian Review என்ற பத்திரிகையை நடத்திவந்த ஜி.என்.நடேசனின் மாம்பலம் வீட்டிற்கு அவ்வப்பொழுது சென்றுவருவது வழக்கம் .

kbs%202.jpgஒருநாள் அப்படி சென்றபோது அங்கு வந்திருந்த எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் படத்தயாரிப்பாளர் அஸன்தாஸ் ஆகியோர், அங்கிருந்த சுந்தராம்பாளின் தாய்மாமாவிடம்,  'சுந்தராம்பாளை நந்தனார் படத்தில்,  நந்தனாராக நடிக்க ஏற்பாடு செய்யமுடியுமா?' என்று கேட்டனராம். கிட்டப்பாவின் மறைவிற்கு பின் எந்த ஆண் நடிகருடனும் கதாநாயகியாக நடிக்க விருப்பமில்லாமல் இருந்த சுந்தராம்பாள்,  தன் கொள்கைக்கு ஏற்ற வேடமாக இருந்ததால் 1935-ல் நந்தனாரில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே இடத்தில் முன்பணமாக ரூபாய் 25,000த்திற்கு செக் கொடுக்கப்பட்டது. 

நந்தனார் படத்தில் கே.பி.எஸ் நடிக்கவிருந்த செய்தியை முதன்முதலில் வெளியிட்ட ஆனந்தவிகடன், அதன் சினிமா அனுபந்தம் என்ற பகுதியில் கே.பி.எஸ் ஆண் வேடத்தில் மயிலின் மீது முருகனாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "நந்தனார் படத்தில் நடிக்கப்போகும் ஶ்ரீமதி கே.பி.சுந்தராம்பாள் (ஆண் வேடத்தில் இருந்த புகைப்படம்) " என்ற செய்தியை வெளியிட்டது.  இதில் சங்கீத பூபதி மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் வேதியராக நடித்தார். 

இப்படத்தில் "வழிமறைத்திருக்குதே மலைபோல் ஒரு மாடு படுத்திருக்குதே" என்று ரூபக தாளத்தில் அமைந்த பாடல், அதன்பின் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது.

ஆனால் கே.பி சுந்தராம்பாள் ஆண் வேடத்தில் நடிப்பதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. "ஒரு பெண்மணி  ஆண் வேடத்தில் நடிப்பதா? " என்று கல்கி கடுமையாக விமர்சனம் செய்தார்.

நந்தனார் படம் 3 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம். 1935-36 ல் ஒரு படம் தயாரிக்க ஆன செலவு சுமார் 40 ஆயிரம்தான். அந்நாட்களில் தமிழ் படவுலகில் பிரபலமாக இருந்த கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி வாங்கிய சம்பளம் ஒரு வருடத்திற்கு சுமார் 12 ஆயிரம் மட்டுமே. இதனால்தான் நந்தனார் படத்தில் ஒரு நடிகைக்கு ரூ. ஒரு லட்சம் அளிக்கப்பட்ட விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டது.

"கே.பி.எஸ். நந்தனாராக நடிப்பது கேலி கூத்தாகும். பெண்கள் ஆண் வேஷத்திலும், ஆண்கள் பெண் வேஷத்திலும் நடிக்கும் அந்தச் செயல் நாடகவுலகுடன் நிற்கட்டும்; சினிமாவுக்கு வேண்டாம்" என்று ந.ராமரத்னம் என்பவர் வன்மையாக கண்டித்து தினமணியில் நீண்ட கட்டுரை வெளியிட்டார். பல மாதங்கள் பத்திரிகைகளில் கண்டன குரல் பலமாக வீசியது. பாட்டுக்கள் நன்றாக இருந்ததால் படம் தோல்வியுறவில்லை. சுமாராக ஓடியது.

kbs%202%20600%202.jpg

ஆனால் எதிர்ப்பு எடுபடவில்லை. சுந்தராம்பாளை தொடர்ந்து பெண்கள்,  ஆண் வேடத்தில் நடிக்கும் வழக்கம் அமலுக்கு வந்தது. '

பக்த குசேலா' படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி கிருஷ்ணராக நடித்தார். எஸ்.டி.சுப்புலட்சுமியை தொடர்ந்து டி.பி.ராஜலக்ஷ்மி, எம்.எஸ்.விஜயாள், எம்.ஆர்.சந்தானலட்சுமி போன்ற நடிகைகள் படத்தில் கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, யு.ஆர்.ஜீவரத்தினம், வசந்தகோகிலம் போன்ற பிரபல நடிகைகள் நாரதர் வேஷத்தில் தோன்றினர். பெண்கள் ஆண் வேஷத்தில் நடிக்க வழி அமைத்தவர் கே.பி.சுந்தராம்பாள் என்பதுதான் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

அடுத்தவாரம்:  திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை துவக்கினார் கே.பி.எஸ்...

http://www.vikatan.com/news/coverstory/56361-kb-sundarambal-men-character-nandhanar.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தென்னகத்தின் இசைக்குயில் மறைந்தது; தமிழ் சினிமா முன்னோடிகள் தொடர்-19

 

kbs%2019%20leftttt.jpgந்தனார் படப்பிடிப்பு தொடங்கி இறுதிக்காட்சிக்கு வந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. "நந்தனாரே! உன்பெருமையை அறியாமல் மோசம் போனேனே..!" என்று வருந்தி,  வேதியராக நடித்த மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர்,  நந்தனராக நடித்த கே.பி. சுந்தராம்பாளின் காலில் விழ வேண்டும்.

நந்தனராக நடித்தவர் விஸ்வநாத அய்யர். 'போயும் போயும் ஒரு பெண்ணின் காலில் அவர் விழுவதா?' என அன்றைய சமூகச் சூழலில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. "கே.பி.எஸ் என் முன்னால் தெய்வம் போல் நிற்கிறார், கலைஞர்களான எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது" என்று கூறி,  அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஸ்வநாத அய்யர்.

கே.பி.எஸ். மீது ஒரு பிரபல சங்கீத வித்வான் கொண்டிருந்த மரியாதையை இது காட்டியது.

சினிமாவில் கே.பி.எஸ்.

நந்தனார் படத்தைத் தொடர்ந்து, 1940-ல் மீண்டும் அஸன்தாஸ் தயாரிப்பில் மணிமேகலை என்ற படத்தில் "புத்தபிரானே..." என்ற பாடலைப் பாடி,  மணிமேகலையாக கே.பி. சுந்தராம்பாள் நடித்தார். 1953-ல் ஜெமினியின் ஔவையார் படத்தில் நடித்தார். எஸ்.எஸ்.வாசன் தயாரித்த இப்படத்தில்,  கே.பி.எஸ். பெற்ற ஊதியம் அன்றைய சினிமா உலகில் வாய்பிளக்கவைத்த விஷயம்.

திராவிட இயக்கங்கள் மற்றும் நாத்திக இயக்கங்கள் இந்துமத கடவுள் எதிர்ப்பு பிரசாரம் செய்தபோது,  தமிழரின் நன்னெறிகளையும், கடவுள் பக்தியையும் பரப்பிய பெருமைக்குரிய திரைப்படம் ஔவையார். இதில் ஔவையாராக நடித்த கே.பி.எஸ், தெய்வப்படங்களை எடுத்து புகழ்பெற்ற ஏ.பி.நாகராஜன் தயாரித்த திருவிளையாடலில் மீண்டும் ஔவையாராக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இப்படத்தில் இவர் பாடிய "ஒன்றானவன்..." என்றப் பாடல் மிகப் பிரசித்தம்.

kbs%202%20600%202.jpg

1964 ல் கலைஞரின் பூம்புகார் படத்தில் கவுந்தியடிகளாக தோன்றி "வாழ்க்கையெனும் ஓடம்.." என்ற தத்துவ பாடலை பாடி,  அழியாத புகழ்பெற்றார். கே.பி எஸ்.ஸின் திரையுலக சாதனையை பாராட்டி,  அவருக்கு பத்மஶ்ரீ பட்டத்தை வழங்கியது மத்திய அரசு.

1966-ல் இவர் மகாகவி காளிதாஸ் என்ற படத்தில் பாடிய "காலத்தில் அழியாத காவியம் பல தந்து..." என்றப் பாடல் மிக பிரசித்தம். 1967ல் கந்தன் கருணை என்ற படத்திலும், உயிர் மேல் ஆசை என்ற படத்திலும் நடித்தார். இந்தப் படம் ஏனோ வெளி வரவில்லை. 1969ல் சின்னப்ப தேவரின் துணைவன் மற்றும் ஏ.பி.நாகராஜனின் திருமலைத் தெய்வம்காரைக்கால் அம்மையார் ஆகிய படங்களில் நடித்தார். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சக்தி லீலை படத்தில் ஒரு பக்தையாக தோன்றி நடித்தார். கே.பி.எஸ் நடித்து இறுதியாக வந்த படம் திருமலைத் தெய்வம்.

kbs%202%20600%203.jpg

கே.பி.எஸ். 13 படங்களில் நடித்துள்ளார். 12 படங்கள் வெளிவந்தன. காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்த கே.பி.எஸ்,  பிரசாரங்களில் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் மேடையில் பாடி வந்தார். 1958-ம் ஆண்டு காமராசர் முதல்வராக இருந்தபோது,   தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969-ம் ஆண்டு வெளியான துணைவன் படத்திற்காக மத்திய அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். எம்.ஜி.ஆர்,  சிவாஜி போன்ற தன் அடுத்த தலைமுறை நடிகர்களிடம் பெரும் மதிப்பு கொண்டிருந்த கே.பி.எஸ்,  தன் சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டியபோது,  எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரையும் ஒரே ஜீப்பில் மக்கள் முன் வரவழைத்து பெருமைப்படுத்தினார்.

kbs%2019%20600%203.jpg

மரணம்

புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ள சிவாஜி கணேசன்,  கே.பி.எஸ் நடிக்கும்போது செட்டில் சிகரெட் பிடிக்கமாட்டார். கே.பி.எஸ் மீது அவ்வளவு மரியாதை. கே.பி.எஸ். சென்னையில் 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி,  தன் 72 வயதில் மரணமடைந்தார். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.,  அரசு மரியாதை செலுத்தி,  கே.பி.எஸ்ஸின் பெருமையை நாடறியச் செய்தார்.

தன் சிறப்பு நடிப்பு மூலம் "ஔவையாராகவே" இன்றும் தமிழர் மத்தியில் உலா வரும் இசையரசி கே.பி.சுந்தராம்பாளின் புகழ் இசை, நாடக, சினிமா, உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

kbs%2019%20600%202.jpg

கே.பி.எஸ். நடித்த படங்கள்

1. நந்தனார் -1935
2. மணிமேகலை- 1940
3. ஔவையார் -1953
4. பூம்புகார் -1964
5. திருவிளையாடல் -1965
6. மகாகவி காளிதாஸ் -1966
7. கந்தன் கருணை -1967
8. உயிர்மேல் ஆசை- 1967 (வெளிவராத படம்)
9. துணைவன் -1969
10. சக்தி லீலை - 1972
11. ஞாயிறு திங்கள் - 1972
12. காரைக்கால் அம்மையார் 1973
13. திருமலை தெய்வம் 1973

http://www.vikatan.com/news/coverstory/56909-kb-sundarambal-tamil-cinema-pioneers-.art

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நகைச்சுவையில் உச்சம் தொட்ட காளி என்.ரத்தினம்! ( தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-20

 

kali%20n%20rathnam%20logo.jpg

பாபதி என்ற சிரிப்பு துணுக்கு சமூக நாடகத்தை, பம்மல் சம்பந்த முதலியார் எழுதினார். இக்கதையை வாங்கி சில மாற்றங்களுடன் சபாபதி என்று அதே பெயரில் திரைப்படமாக, தனது சென்னை பிரகதி ஸ்டுடியோவில்,  1941-ம் ஆண்டு  தயாரித்து வெளியிட்டார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். இதற்கு முன் தான் தயாரித்த திரைப்படங்களால் சிறிது நஷ்டம் அடைந்து, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த ஏ.வி.எம்,   இப்படம் தந்த அமோக வெற்றியினால் உற்சாகமாகினார் என்பார்கள்.

இரண்டு மாதங்களில் தயாரிக்கப்பட்ட சபாபதி படத்தின் தயாரிப்பு செலவு ரூ.37000/-  இதில் படத்தின் கதாநாயகன் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாத ஊதியம் ரூ.70 மட்டுமே. கதாநாயகி நடிகை பத்மாவுக்கு மாத ஊதியம் நாற்பத்தைந்து ரூபாய். தமிழ் ஆசிரியராக நடித்த பிரபல நடிகர் கே.சாரங்கபாணிக்கு கொடுத்த தொகை ரூ.2000. ஆனால் கதாநாயகனின் வேலையாளாக நடித்த நடிகர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...? மூவாயிரம் ரூபாய்!

kali%20n_%20rathinam%20lefttt.jpgமற்ற எந்த கதாபாத்திரங்களையும் விட அதிக சம்பளம் வாங்கிய அந்த நடிகர் காளி. என்.ரத்தினம். 40-களில் நகைச்சுவை பாத்திரங்களில் உச்சம் தொட்ட மகா நடிகன்.

தனது பத்திரிகையில் 'கர்நாடகம்' என்ற புனைபெயரில் கல்கி இந்த திரைப்படத்தை வெகுவாக புகழ்ந்து சிலாகித்து விமர்சனம் எழுதினார். மக்களை சிரிக்க வைக்கும் படம் என்றும் போலித்தனமான கௌரவங்கள், வீண் ஜம்பம் இவற்றை சாடிய படம் என்றும் கல்கி தமது பத்திரிகையில் இரண்டு பக்க அளவுக்கு பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தார். இப்படத்தில் தன் நகைச்சுவை சரவெடிகள் மூலம் காளி என் ரத்தினம் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தார்.

படத்தில் வேலைக்காரி குண்டு முத்துவுக்கு (சி.டி.ராஜகாந்தம்)  அவர் திருட்டுத்தனமாக தாலி கட்டி படத்தில் ஏக களேபாரம் செய்து விட்டார். இக்காட்சியை மீண்டும் மீண்டும் திரையரங்கில் காண்பதற்காக ரசிகர்கள் பலமுறை டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்று பார்த்து ரசித்தார்களாம். ஏவி.எம்.எம். எடுத்த ஆரம்பக்கால படங்களுள் அதிக வசூலை பெற்றுத் தந்ததாம் இப்படம். காளி என்.ரத்தினத்தின் நகைச்சுவை அபரிதமாக பளிச்சிட்ட படம் இது.

ராவ் சாகிப் மாணிக்க முதலியாரின் செல்ல மகன் சபாபதி படிப்பில் நாட்டமில்லாத சுத்த அசடு, சற்றே மந்தப் புத்தியுடையவன். எல்லாவற்றையும் வேடிக்கையாக செய்யும் சுபாவம் கொண்டவன். அவனுக்கு உதவி செய்யும் வேலைக்கார மண்டு சபாபதியாக காளி என்.ரத்தினம் வெகு கச்சிதமாக நடித்தார். எனவே கதையில் இரண்டு 'சபாபதி' பாத்திரங்கள் இடம் பெற்றன. இப்படத்தில் இவ்விரண்டு பேரும் செய்த கூத்துக்கள் பார்ப்போர் வயிறு வலிக்குமளவுக்கு சிரிப்பை வர வழைத்தன. இப்படத்தில் காளி என்.ரத்தினத்தின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இப்படத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்த காளி என். ரத்தினம் தன் பண்பட்ட நகைச்சுவை நடிப்பால் படத்தின் வெற்றியை உச்சிக்குக் கொண்டு போனார். படம் ஓடிய எல்லா திரையங்களிலும் வசூல் மழை பெய்தது.

இந்த நாடகத்தை பம்மல் சம்பந்த முதலியார் எழுத காரணம் அவரது நண்பர் சென்னை வி.வி.ஶ்ரீனிவாச ஐயங்கார். அவரிடம் வேலையாளாக இருந்த நரசிம்மன் உண்மையில் புத்திசாலியாக இருந்த போதிலும், மேற்பார்வைக்கு மட்டியைப் போல் தோன்றுவாராம். அவரின் சேட்டைகள் மற்றும் செயல்கள் நண்பர்களுக்கு பலமுறை நகைப்பை விளைவித்திருக்கிறது. அவரின் செய்கைகள்தான் தான் எழுதிய சபாபதி நாடகத்தில் வேலைக்கார சபாபதியின் பாத்திரத்திற்கு அடிப்படையாக அமைந்ததாக பின்னாளில் பம்மல் சம்பந்தமுதலியார் தெரிவித்தார்.

kali%20n_%20rathinam%20600%203.jpg

இதோடு ஒரு ஆங்கில நாவலில் 'வறாண்டி ஆன்டி' என்னும் மூட வேலையாள் பற்றியும் நான் படித்திருந்த செய்திகளை ஒன்றாய் சேர்த்து சபாபதி நாடகத்தில் வரும் வேலையாள் பாத்திரத்தை உருவாக்கியதாக அவர் தனது 'நாடக மேடை' நினைவுகள் என்ற நூலில் (பக்கம் 347) கூறியுள்ளார். சபாபதி நாடகத்தில் ஒரு சிரமம் இருந்தது. இந்த வேலைக்கார சபாபதியாக நடிப்பவர் நடிக்கும் போது தன் முகத்தில் கொஞ்சமாவது புத்தியுடையவன் போல் நடித்தாலும், இப்பாத்திரம் ரசாபாசமாகும் எனவே நடிப்பவன் திறமையிலேயே இந்த நாடகத்தின் வெற்றி அமையும்.

ஒருமுறை சென்னையில் இந்த நாடகத்தை காளி என் ரத்தினம் பார்த்தார். அப்பொழுது பம்மல் சம்பந்தம் அந்த நாடகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தார். பார்த்து பரவசமடைந்த ரத்னம் தன் நடிப்பாற்றலை வளமைபடுத்திக் கொள்ள அமைந்த சிறந்த வாய்ப்பாக கருதினார். இதன் விளைவை 1941-ல் வந்த 'சபாபதி' திரைப்படத்தில் காளி என் ரத்தினம் நடிப்பில் நாம் இன்றும் கண்டு ரசிக்கிறோம்.

படத்தில் ஒரு காட்சி பணக்கார முதலாளியின் செல்லப் பிள்ளை சபாபதி பள்ளிக் கூடத்தில் படிக்கும். வெகுளித்தனமான மாணவன் அவனது ஆஸ்தான வேலைக்காரன் சபாபதி காளி என். ரத்தினம் சபாபதி முதலியார் (T.R.R.) தன் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாட வீட்டை விட்டு வெளியே வருகிறார். விளையாட வெளியே கிளம்பும் டி.ஆர். ராமச்சந்திரன்... காளி என் ரத்தினத்தை பார்த்து டேய் 'சபாபதி' போய் என்னோட பூட்சை கொண்டு வாடா' ரத்தினம் எதிர் கேள்வி கேட்பதற்குள் ராமச்சந்திரன் போய்க் கொண்டு வாடா என்று அதட்டுவார்.

kali_n_rathinam%20600%202.jpg

தயங்கி, தயங்கி வீட்டுக்குள் சென்ற ரத்தினம் 'பூட்சை' வெள்ளித்தட்டின் மேல் வைத்து வெகு பவ்யமாக கொண்டு வந்து ராமச்சந்திரனிடம் கொடுப்பார். ரத்தினத்தைப் பார்த்த ராமச்சந்திரனும் அவரது நண்பர்களும் கொல்லென்று சிரித்து விடுவார்கள். வெற்றிலை பாக்கு கொண்டு வருவது போல் பூட்சை வெள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு வந்தால் யார் தான் சிரிக்க மாட்டார்கள்.

மீதி உரையாடல் உரையாடல் இங்கு..

T.R.R: என்னடா இது
K.N.R: பூட்ஸ்..அப்பா

T.R.R.: என்னடா தட்ல (plate)  வைச்சு கொண்டு வர்ரிய
K.N.R:நீதானப்பா சொன்னே.
 
T.R.R.: பிளடி ஃபூல் (Bloody Fool) ஏதாவது தின்றை வஸ்துவை தட்ல வைச்சுக் கொண்டாடான்னு சொன்னா பூட்ஸை கூடவா தட்ல வைச்சிக் கொண்டு வரச் சொன்னேன்.
K.N.R:இதெல்லாம் எனக்கு என்னம்மாப்பாத் தெரியும் - சொல்லிக் கொடுத்தாதானேப்பா தெரியும்.

tr%20ramachandran.jpgT.R.R.: இதக்கூடவா சொல்லித்தரனும். இனிமே  பூட்ஸ்ஸ தட்ல வைச்சுக் கொண்டு வராதே - போ
K.N.R:இனிமே பூட்ஸ்ஸ தல வைச்சுக்கொண்டு வரலேப்பா எம்பா - என்னமோ இங்கிலீஷ்ல பிளடி ஃபூல்ஸ் (Bloody Fool) என்னம்மோ சொன்னியேப்பா - அப்படின்னா - என்னப்பா?
 
T.R.R.: பிளடி ஃபூல்ன்ன (Bloody Fool) ரொம்ப கெட்டிக்காரன் அர்த்தம் ஆமாம்.

டி.ஆர். ராமச்சந்திரன் பூட்ஸ் அணிந்து விளையாட மைதானத்திற்கு செல்வதற்குள் மழை வந்து விடும்.

T.R.R.: (மழை பெய்வதை பார்த்துக் கொண்டே) இன்னிக்கு டென்னீஸ் விளையாடின மாதிரிதான் வேரென்ன செய்யலாம் பிரதர்?

T.R.R.ன் நண்பர் ஏன் கார்ட்ஸ் ஆடலாமே

T.R.R.: (ரத்தினத்தைப் பார்த்து) டேய் சபாபதி போய் கார்ட்ஸ் கொண்டு வா.

K.N.R: கார்ட்ஸ் (Cards என்றால் என்ன ஏதுவென்று தெரியாத ரத்தினம் கடிதம் எழுதும் தபால் கார்டை கொண்டு வருவார். (தபால் கார்டை பார்த்ததும் வெறுத்து) இத ஏண்டா கொண்டாந்தே?

K.N.R: நீ இங்கிலிஷீலே சொன்னப்பா! - எனக்கு எப்படி புரியும்பா! தமிழ்லே சொல்லப்பா!
(தமிழில் எப்படி சொல்வது என்று T.R.R. முழிக்க அவரது) நண்பர்: காய்த கட்டுப்பா பிரதர்.

K.N.R: (T.R.R. ன் நண்பரை பார்த்து) சரியான ஃபிளடிபூல்பா (ரத்தினத்தின் பேச்சைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்)

T.R.R;  டேய் சபாபதி அவரை ஏன் திட்டுற?

K.N.R: நீதானப்பா சொன்னே பிளடி ஃபூல்ன்னா கெட்டிகாரன்னு... அதனாலேதான்பா... அப்படி சொன்னேன்பா என்பார்.

T.R.R; சரி சரி நீ வாய மூடிக்கிட்டு போய் காகித கட்டை கொண்டு வா.

kali%20n_%20rathinam%20600%201.jpg

வாயை மூடிக்கொண்டே போய் பழைய நியூஸ்பேப்பர் கட்டை தூக்கி கொண்டு வந்து கொடுப்பார் ரத்னம்)

T.R.R.; ஏண்டா இதபோய் தூக்கிக் கொண்டு வந்திருக்கியே உன்ன கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கணும்!

K.N.R; நான் எப்படிப்பா ஒண்டியா போறதுப்பா - நீயும் என்னோட தொணைக்கு வாப்பா - போகலாம்.

T.R.R; (தன் தலையில் அடித்துக் கொண்டே) சீட்டுக்கட்டுப்பா! ரத்னம் ஒரு வழியாக சீட்டு கட்டை (playing cards) கொண்டு வந்து தருவார்.

படத்தில் வரும் இக்காட்சியை ரசிகர்கள் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார்கள். பின்னே வேலைக்கார 'சபாபதி' ரத்தினத்தின் நகைச்சுவை நடிப்பை பார்த்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது!

தமிழ்சினிமாவை தன் நகைச்சுவை நடிப்பால் வயிறுகுலுங்க சிரிக்க வைத்த காளி என். ரத்தினம் அந்த பெயர் வந்தது எப்படி....

அடுத்தவாரம் பார்ப்போம்!

http://www.vikatan.com/news/coverstory/58086-the-king-of-comedy-kali-rathinam.art

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த காளி என்.ரத்தினம்! (தமிழ்சினிமா முன்னோடிகள் தொடர்-21)

 

kali%20n%20rathinam%2021%20logo.jpg

பாய்ஸ் நாடக கம்பெனி

காளி என்.ரத்தினம், மலையப்ப நல்லூரில் 1897-ம் வருடத்தில் பிறந்தார். தந்தை பெயர் நாராயணன். நான்காம் வகுப்பு வரை படித்தார். வறுமை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார். 

அதேசமயம் நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டு திரிந்த ரத்தினம், கும்பகோணத்தில் தம்பா வெங்கடாசல பாகவதர் நாடகக் கம்பெனியில் நடிகராக 1904-ம் ஆண்டு சேர்ந்தார். இது ஒரு பாய்ஸ் நாடகக் கம்பெனி. இதுதான் தமிழ் நாட்டில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட பாய்ஸ் நாடகக் கம்பெனி. பின்னர் இந்த கம்பெனியின் நிர்வாகம் மாறியது.  புதிய நிர்வாகிகளாக மதுரை சச்சிதானந்தம் பிள்ளையும்,  மதுரை ஜெகன்னாத அய்யரும் இதில் சேர்ந்து கொண்டார்கள்.

kali%20n%20rathinam%20lefttt.jpgஇவர்கள் தொடங்கிய 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 1909 முதல் ரத்தினம் நடிக்கத் தொடங்கினார். 1936-ம் ஆண்டு வரை அதே நாடகக் குழுவில்,  நடிகராக சுமார் 27 ஆண்டுகள் விளங்கினார். 1936-ல் அந்த கம்பெனி எடுத்த 'பதி பக்தி' திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இதுதான் ரத்தினத்தின் முதல் சினிமா பிரவேசம்.

'காளி என். ரத்தினம்' பெயர் வந்தது எப்படி?

தஞ்சை மாவட்டத்திலுள்ள சில ஊர்களில்,  பங்குனி மாதத்தில் அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இவ்வூர்களில் குடிகொண்டுள்ள ஶ்ரீமாரியம்மன், ஶ்ரீ காளியம்மன் போன்ற தெய்வங்களுக்கு,  திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டி, தீ மிதித்து, 'காளியாட்டம்' என்ற சிறப்பு வைபவம் நடந்தேறும். காளியாட்டத்திற்கு,  சுற்ற வட்டார கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள். இந்த விழா ஶ்ரீ காளியம்மன் ஊர்வலத்துடன் துவங்கும். ஶ்ரீ காளியம்மன்,  ஊரின் ஒவ்வொரு வீட்டிற்கும் முன் சென்று ஆசிர்வதிப்பாள். அம்மன் ஊர்வலத்தில், பூசாரி ஒருவர் காளியாக வேடம் தரித்து வருவார். சிவப்பு புடவையணிந்த பூசாரி,  நிஜ காளியாகவே பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

1916-ம் ஆண்டு நடந்த திருவிழாவில், கோவலன் நாடகம் நடைபெற்றது. அதில் அல்லி பரமேஸ்வரன் அய்யர் என்பவர் 'காளியாக' வேடம் தரித்து,  வெகு தத்ரூபமாக நடித்தார். நாடக மேடையில் அவர் காளியாக நடிக்கும் போது,  ஶ்ரீ காளியம்மனே மேடையில் பிரச்சன்னமாகியிருப்பதுபோல் தோன்றும்.  அவ்வளவு நேர்த்தியாக நடிப்பார். இந்த நாடகத்தை சுமார் 19 வயது இளைஞர் ஒருவர் பார்த்து பிரமித்து போனார். ஏன் நாமும் இவரைப் போன்று காளி வேஷம் போட்டு நடிக்கக் கூடாது என்று எண்ணினார். அந்த இளைஞர்தான் நாடக நடிகர் என். ரத்தினம்.

அல்லி பரமேஸ்வர அய்யரை குருவாகக் கொண்டு,  காளி வேஷம் போட்டு நடிக்கக் கற்றுக் கொண்டார். 1920-களில் காளி வேஷம் போடுவதில் ரத்தினத்திற்கு நிகர் எவருமில்லை என்ற நிலைக்கு தன் நடிப்பால் உயர்ந்தார்.

சபாபதி

அதுவரை காளி வேஷத்தில் புகழ் பெற்று வந்த அல்லி பரமேஸ்வர அய்யரே,  தனது சீடனான ரத்தினத்திற்கு வெள்ளி சூலம் வழங்கி,  அவரது காளி நடிப்பை பாராட்டி 'காளி' என்ற பட்டத்தை வழங்கினார். ரத்தினம், 'காளி' என். ரத்தினம் ஆனார்.

kali%20n%20rathinam%20600%202.jpg

காளி என். ரத்தினம் சுமார் 65 படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களில் பதி பக்தி (1936), சபாபதி (1941) , பக்த கௌரி (1941), மானசம்ரக்ஷ்ணம் (1945), பர்மா ராணி, சகடயோகம், வால்மீகி, மனோன்மணி‎, பிருத்விராஜன், பரஞ்சோதி‎, சந்திரகாந்தா‎, ‎‎காளமேகம், லட்சுமி விஜயம், உத்தமி, சதிசுகன்யா, உத்தமபுத்திரன் ஆகியவை குறிப்பிடத்தகுந்த படங்கள். ‎பெரும்பான்மையான படங்களில் அவர் வழங்கிய நகைச்சுவை,  காலத்தைக் கடந்தும் இன்றும் நம்மை மகிழ்வித்து வருகிறது.

லட்சுமி விஜயம், சபாபதி,  உத்தமி, சதிசுகன்யா, உத்தமபுத்திரன்,  மனோன்மணி போன்ற படங்களில் அவர் செய்த காமெடி இன்றும் திரைப்படம் பார்ப்பவரை மகிழ்ச்சி பரவசத்தில் ஆழ்த்தும். காளி என்.ரத்தினத்தின் சுமார் 10 படங்கள் இன்று DVD உருவில் கிடைக்கிறது. இது தமிழ் ரசிகர்கள் செய்த பாக்யமே! இந்தப் படங்களில் நடித்துள்ள காளி என் ரத்தினத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்றைய ரசிகர்கள் பார்த்து ரத்தினத்தின் நடிப்பாற்றலை விளங்கிக் கொள்ளலாம்.

வாத்தியாரின் வாத்யார் என்.காளி என்.ரத்தினம்

1924-ம் ஆண்டு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக் கம்பெனியில்,  பின்னாளில் தமிழ்த்திரையுலகை கட்டிப்போட்ட ஒரு பிரமுகர்,  தன் 7 வயதில் தன் சகோதரரருடன் சேர்ந்தார்.  பின்னாளில் திரையுலகில் பிரபலமடையவும், தேர்ந்த நடிகராக அவரும் அவரின் சகோதரரும் புகழடைய பாய்ஸ் நாடக கம்பெனியில் அவர்கள் பெற்ற பயிற்சியே காரணம் என்பர். நடிகராயிருந்து,  பின்னர் தமிழக முதல்வராகவும் ஆன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்தான் அந்த பிரபலம். அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி.

mgr%20300%20kali.jpg
சகோதரர்கள் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த சமயம்,  கம்பெனியின் நாடக ஒத்திகை ஆசிரியர் மற்றும் மேனேஜராக இருந்தவர் காளி என்.ரத்தினம். சின்னஞ்சிறுவயதில் நாடக அனுபவம் இல்லாத அந்த சகோதரர்களுக்கு,  நடிப்பு பயிற்சி அளிப்பதுதான் காளி.என். ரத்தினத்தின் பணி. தேர்ந்த கலைஞரான காளி.என்.ரத்தினம், சகோதரர்களுக்கு நன்கு பயிற்சி அளித்தார்.

ஆனால் காளி என்.ரத்தினம் மிகவும் கறாரான ஆசிரியர். இது சகோதரர்களுக்கு மிக பயத்தை ஏற்படுத்தியது. அந்த பயத்தினாலேயே அவரிடம் முரண்டு பிடிக்காமல் பயிற்சிபெற்றனர் இருவரும். பாய்ஸ் நாடக கம்பெனியில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகத்தில்,  சிறுவன் எம்.ஜி.ஆர் தன் தாயை பார்த்து கதறி அழவேண்டும்.
ஆனால் எம்.ஜி.ஆருக்கு அழ வரவில்லை. அதற்கான ஒத்திகையின்போது எம்.ஜி.ஆர் அழாததால் காளி.என்.ரத்தினம் ஒரு உபாயம் செய்தார். 

அரங்கேற்றத்தின்போது அழவேண்டிய காட்சிக்கு முன் எம்.ஜி.ஆரை,  காளி.என்.ரத்தினம் படுதாவின் பின்புறம் ஒளிந்துகொண்டு அழைப்பார். எம்.ஜி.ஆர் ஓடோடி என்னண்ணே என்று நிற்க,  காளி.என்.ரத்தினம் அவர் தலையில் ஒரு குட்டு வைப்பார். வலிதாங்காமல் எம்.ஜி.ஆர் அழ,  காட்சிக்கு அது தத்ரூபமாக அமைந்து பார்வையாளர்களை அழ வைத்தது. எம்.ஜி.ஆருக்கு கைதட்டல் எழுந்தது.

பின்னாளில் எம்.ஜி.ஆர் அந்த காட்சியில் இயற்கையாய் அழுது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றார். பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நடிக்கக் கிடைத்த முதல்வாய்ப்பு,  மகாபாரத நாடகத்தில் உத்திரன் வேடம். அதில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர் காளி என்.ரத்தினம். இந்த வாய்ப்புதான் எம்.ஜி.ஆரை நாடக உலகத்தில் அறிமுகம் செய்து வைத்தது.  அந்த வகையில் வாத்தியார் என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் முதல் வாத்தியார், அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த முதல் ஆசான் காளி என்.ரத்தினமே.

kali_n_rathinam%20600%202.jpg

சந்திரகாந்தா

1936 ல் வெளியான சந்திரகாந்தா என்ற படத்தில் பண்டார சன்னதியாக காளி என்.ரத்தினம் நடித்தார். படத்தில் 'பெண்ணாகி வந்ததொருமாயப் பிசாசாம் பிடித்திட்டென்னை.....என்ற பாடலை பாடி, சில பண்டார சன்னதிகள், சைவ மடங்களில் செய்து வந்த அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டினார். படத்தில் இக்காட்சியை ரசிகர்கள் பலமுறை கொட்டகைக்குச் சென்று பார்த்து ரசித்தார்கள். 1930-களில் சமூக சீர்திருத்தப் படமாக வெளிவந்த இப்படம்,  மதவாதிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளான போதும், படம் திரையிடப்பட்ட ஒவ்வொரு ஊரிலும் பல நாட்கள் படம் ஓடி,  வெற்றி சாதனை படைத்தது. சில ஊர்களில் காளி என்.ரத்தினத்தின் ஒரு வசனத்தில் வரும், 'சுவாமிகாள்' என்ற பதபிரயோகத்திற்கு போலீஸ் தடைவிதித்தது.

படத்தில் காளி என்.ரத்தினத்தின் நடிப்பு வெகுவாக  ரசிக்கப்பட்டது. முதன்முதலாக ஒரு தமிழ்த் திரைப்படம்,  ஒரே ஊரில் இரண்டு தியேட்டர்களில் காட்டப்பட்ட புதிய வழக்கம்,  இப்படத்திலிருந்துதான் தொடங்கியது எனலாம். கும்பகோணத்தில்தான் ஒரே நேரத்தில் இரண்டு தியேட்டர்களில் இப்படம் ஓடியது.

சந்திரகாந்தா படம் வெற்றி பெற்று, வசூலில் சாதனைப் படைத்தது. இவ்வெற்றிக்குக் காரணம்  ரத்தினத்தின் 'சுவாமிகாள்' நடிப்புத்தான் காரணமென்று அன்று திரையுலகில் சிலாகித்து பேசப்பட்டது. இந்தப் படத்தில் பி. யு. சின்னப்பா,  சுண்டூர் இளவரசன் என்ற சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

காளி. என்.ரத்தினம்-சி.டி. ராஜகாந்தம் நகைச்சுவை ஜோடி

மாடர்ன் தியேட்டர்ஸ் 1940 ல் உத்தம புத்திரன் படத்தை தயாரித்தனர். இதில் பி. யு. சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்தப் படத்தில்தான், காளி என். ரத்தினத்துடன் சி. டி. ராஜகாந்தம் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்.

kali%20n%20rathinam%20600%201.jpg

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ மதுரம் நகைச்சுவை ஜோடிக்குப்பின் திரையுலகில் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடி காளி. என்.ரத்தினம்-சி.டி. ராஜகாந்தம். மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில்,  இந்த ஜோடி நகைச்சுவை விருந்தளித்தனர். ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி,  போஜன், பர்மா ராணி முதலான படங்களில் இவர்கள் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது. சந்திரகாந்தா உட்பட சுமார் 65 படங்களில் நடித்த காளி என்.ரத்தினம் 1950-ம் ஆண்டு,  ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி, சொந்த ஊரான மலையப்ப நல்லூரில் காலமானார்.

தமிழ் திரைப்பட ரசிகர்கள் சிரிக்க மறக்கும் வரையில் காளி என்.ரத்தினம் புகழ் நிலையான ஒரு இடத்தை பெற்றிருக்கும்.

http://www.vikatan.com/news/coverstory/58373-mgrs-drama-guru-kalinrathinam.art

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நூற்றாண்டு விழா நாயகர் பி.யு.சின்னப்பா! (தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர்-22)

 

puc%20logo%2022.jpg

மிழ் சினிமாவின் ஆரோக்கியம் ஒருவகையில் போட்டியினால் கட்டிக்காக்கப்பட்டுவருகிறது என்றே சொல்லலாம். கமல் - ரஜினி,  அஜித் - விஜய்,  எம்.ஜி.ஆர் - சிவாஜி என ஒவ்வொரு தலைமுறைக்கும் இரு போட்டி நடிகர்கள் வெற்றிகரமாக உலாவி,  தமிழ்சினிமாவை கட்டிக்காத்தனர் என்றே சொல்லலாம். இதில் எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு முந்தைய தலைமுறையை கட்டிப்போட்ட  முதல்தலைமுறை போட்டி நடிகர்கள் தியாகராஜபாகவதர்- பி.யு சின்னப்பா.

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பகாலமான அன்று,  ஒரே நேரத்தில் பாடவும் நடிக்கவும் கூடிய திறமை வாய்ந்த நடிகர்களாக விளங்கிய இவர்கள்,  மற்ற போட்டியாளர்களை விடவும் பாராட்டுக்குரியவர்கள். இவர்களில் பி.யு சின்னப்பாவின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு துவங்குகிறது.

தமிழ் சினிமாவின் முதல் போட்டியாளர்கள்

puc%20lefttt.jpg1905- ம் ஆண்டு மௌனப்படமாக விதையூன்றப் பெற்ற தமிழ் சினிமா, பிரமாண்ட வளர்ச்சி பெற்று பலகோடி தமிழ் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இக்கனவுத் தொழிற்சாலை ஆசியாவிலேயே பெரிதாக இன்று தோற்றம் கண்டுள்ளது. சினிமா என்ற இந்த கனவுத்தொழிற்சாலையை,  அதன் ஆரம்பக் காலத்தில் இம்மண்ணில் கட்டியெழுப்பிய கலைஞர்கள் பலர்.  அவர்களில் ஒருவர்தான் 1916-ம் ஆண்டு நூற்றாண்டு விழா காண உள்ள தவ நடிக பூபதி நடிகர் பி.யு.சின்னப்பா.

1916 -ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் பிறந்தார் சின்னப்பா. இயற்பெயர் சின்னசாமி. மீனாட்சி -  உலகநாதம் தம்பதியின் மூத்த மகனாக பிறந்த சின்னப்பா,  நான்காம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டவர். வறுமை காரணமாக தேங்காய் நாரில் கயிறு திரிக்கும் வேலையில் சேர்ந்தார். மாத ஊதியம் ஐந்து ரூபாய்.  சிறுவயதிலேயே நாடகத்தின் மீது காதல் கொண்டிருந்த அவர்,  தனது 6 வயதில் 'சதாரம்' என்ற நாடகத்தில் 'பக்கா கள்ளனாக' நடித்து புகழ்பெற்றார்.

அக்காலத்தில் குப்பி வீரண்ணா, கள்ள பார்ட் நடராஜ ஆச்சாரி என்பவர்கள் 'கள்ளப்பார்ட்டாக' நடிப்பதில் பெயர் பெற்று விளங்கினார்கள். இவர்களது 'சதாரம்'' நாடகத்தைப் பார்த்து தானும் அவர்கள் போல் 'பக்கா திருடனாக'' நடிக்க ஆசைப்பட்டு ''சதாரம்'' நாடகத்தில் நடித்து புகழ் பெற்றார்.

சிறு வயதிலேயே தசாவதாரம் சி.கன்னையா நாடகம் கம்பெனி நடத்திய நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. கன்னையா நாடகத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா பிரதான நடிகர். இவர் அக்கம்பெனியின் நாடகமான ''ஆண்டாள் திருக்கல்யாணம்" ''வள்ளி திருமணம்'' ''தசாவதாரம்'' ஆகிய நாடகங்களில் முக்கிய நடிகராக விளங்கினார். எஸ்.ஜி. கிட்டப்பா நடித்த நாடகங்களை அடிக்கடி சென்று பார்த்து தனது நாடக திறமையை மேன்மேலும் பட்டைத் தீட்டிக் கொண்ட சின்னப்பா 1924 -ம் ஆண்டுவரை நாடகங்களை பார்ப்பதில் செலவிட்டார் சின்னப்பா. பின்னர் சில மாதங்கள் புதுக்கோட்டை மார்கழி பஜனை கோஷ்டியில் சேர்ந்து பஜனை பாடி வந்தார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சின்னப்பா

தனது ஏழு வயதில் பழனியாப் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து சில மாதங்கள் நாடகங்களில் நடித்தார். பின்னர் விலகி விட்டார். அந்த சமயத்தில் புதுக்கோட்டை நகருக்கு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனி வந்து நாடகம் நடத்தியது. புதுக்கோட்டை நாராயணன் செட்டியார் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நாடக ஒத்திகை வாத்தியார் காளி என்.ரத்தினத்தை நேரில் பார்த்து சின்னசாமியை நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்தார். காளி என். ரத்தினம் ஆதரவில் சின்னப்பா மதுரை ஒரிஜினல் பாய்ஸ்  கம்பெனி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். மாத சம்பளம் ரூ15. பிறகு வருஷத்துக்கு 5 ரூபாய் சம்பள உயர்வுடன் மூன்று வருடம் பணியாற்றினார்.

puc%20600%202.jpg

திருச்சியில் நாடகங்கள் நடந்த சமயம் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருநாள் கம்பெனி வீட்டின் மேல் மாடியில் நடிகர் காளி என்.ரத்தினத்துடன் விவாதம் செய்து கொண்டிருந்தார் நாடக கம்பெனி உரிமையாளர் சச்சிதானந்தம் பிள்ளை. வீட்டின் கீழ்தளத்தில் அனுசுயா 'நாடக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அந்நாடகத்தில் நாரதராக நடித்தவர், பாட்டுகளைப் பாடுவதற்கு சிரமப்பட்டார். அக்கம்பெனியில் அப்பொழுது நாடக வாத்தியாராக பணியாற்றி வந்த சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கம்பெனியில் அப்பொழுதான் வந்து சேர்ந்திருந்த சின்னப்பாவை அப்பாட்டைப் பாடச் சொன்னாராம். சின்னப்பா நாரதர் கதாபாத்திரம் பாடவேண்டிய பாடல்களை சிரமமின்றி மிக இனிமையாக பாடினார். பாடலை பாடி முடித்ததும் மேல் மாடியிலிருந்து ஒரு ஆள் வந்தார். '' இப்பொழுது பாடியவரை முதலாளி கூப்பிட்டு வரச் சொன்னார்" என்றார்.

ஒரே நாளில் எழுபத்தி ஐந்து ரூபாய் சம்பளம்

சின்னப்பா ஏதோ தான் தவறு செய்து விட்டது போல் அச்சமடைந்தார். தன் துடுக்குத்தனத்திற்கு முதலாளி வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்போகிறார் என பயந்தபடி சின்னப்பா மாடிக்கு போனார். உள்ளே சென்ற மறுவினாடி முதலாளி அவரை கட்டித்தழுவினார். பின்னர் உட்காரச்சொல்லி நாரதர் வேஷப் பாட்டுகளையெல்லாம் மீண்டும் பாடச் சொன்னார். சின்னப்பா பாடினார். முதலாளி மகிழ்ச்சியடைந்தார். விளைவு சின்னப்பா நாடக கம்பெனியில் பிரதம நடிகராக்கப்பட்டார். சின்னப்பாவின் மாத சம்பளம் ஒரே நாளில் எழுபத்தி ஐந்து ரூபாய் ஆனது.

puc%20right.jpgதொடர்ந்து கம்பெனி நடத்திய சந்திரகாந்தா, ராஜேந்திரன், கோவலன், பதிபக்தி போன்ற நாடகங்களில் சின்னப்பா நடித்தார். அப்பொழுது இக்கம்பெனியில் கே.எஸ். சொக்கலிங்கப் பாகவதர் கே.பி.கேசவன், காளி, என்.ரத்தினம் பி.ஜி.வெங்கடேசன் டி.ஆர்.பி. ராவ் ஆகியோர் பிரபலமாக விளங்கி வந்தனர். வாத்யார் காளி என்.ரத்தினம் சின்னப்பாவிற்கு நடிப்பு வசன உச்சரிப்பு பாட்டு பாடுதல் ஆகியவற்றில் சிறப்பான பயிற்சி கொடுத்து சின்னப்பாவை ஒரு தேர்ந்த நடிகராக உருமாற்றினார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி சென்னையில் முகாமிட்டு ஒருவருடத்திற்கு மேல் தொடர்ச்சியாய் நாடகங்களை நடத்தியது. இந்த நாடகம் பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது. சின்னப்பாவிற்கு மக்களிடம் பாராட்டுகள் குவிந்தது. தன் நடிப்பின் மூலம் மக்களை வசிகரித்தார்.

மகரக்கட்டால் வந்த வினை

சமயங்களில் நாடகக் கம்பெனி நடத்திய நாடகங்கள் போதுமான அளவிற்கு வசூல் பெறுவதில்லை. அத்தகைய நேரங்களில் சின்னப்பா கோவலனாகவும், காளி என் ரத்தினம் காளியாகவும் நடிக்கும் ''கோவலன்" நாடகத்தை மேடையில் நடத்துவார்கள். வசூல்மழை பொழியும் கோவலன் நடிப்பில் சின்னப்பா நிகரற்று விளங்கினார். இவர் நடித்த 'சந்திரகாந்தா' நாடகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவருக்கு புகழைத் தேடி தந்தது. ஆனால் சின்னப்பாவின் புகழ் உச்சியிலிருக்கும்போதே அவரது தொண்டை தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது.

ஆம் அவருக்கு மகரக்கட்டு ஏற்பட்டது. தனது நிலையைக் கண்டு வருந்திய சின்னப்பா கம்பெனியை விட்டு யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டார். வெளியேறிய பின் தன் பாட்டுத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டி கடும் விரதங்களை அனுஷ்டிக்கத் தொடங்கினார். தாம் இழ்ந்த குரலை மீண்டும் பெற்றார். இந்த சமயத்தில் தான் ஜுபிடர் பிக்சர்ஸ் அவரை 'சந்திரகாந்தா' படத்திற்கு ஒப்பந்தம் செய்தது.

திரைப்படம் 1936-ல் வந்தபோது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது. டெல்லி, கல்கத்தா, மைசூர், பெங்களூர் போன்ற ஊர்களிலும் இத்திரைப்படம், திரையிடப்பட்டது. அதுவரை சின்னசாமி என்ற பெயருடன் நாடகங்களில் நடித்து வந்தவரை ''சின்னப்பா'' என்ற பெயரில் அறிமுகம் செய்தது சந்திரகாந்தா திரைப்படம். உதயமானார் தமிழ்த்திரையுலகின் ஒப்பற்ற நடிகர் பி.யு. சின்னப்பா...

கண்ணகி படத்தில் பெரும்புகழ்பெற்ற பி.யு சின்னப்பா பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்...

http://www.vikatan.com/news/coverstory/59234-the-legend-pu-chinnappa.art

 

Link to comment
Share on other sites

மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த தமிழ்சினிமா சூப்பர்ஸ்டார்! (தமிழ்சினிமா முன்னோடிகள்:தொடர்-23)

 

 puc%2023%20logo.jpg

முதல் படவாய்ப்பு

ஜுபிடர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை எம்.சோமசுந்தரம் என்பவரும்,  எஸ்.கே. மொய்தீன் என்பவரும் இணைந்து தொடங்கினர். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் கோவையில் செயல்பட்டது. பின்னர் 1936-ல் சென்னை பிராட்வேக்கு இடம்மாறியது. 1936-ல் ஜுபிடர் பிக்சர்ஸ் ஜே.ஆர். ரங்கராஜுவின் சமூக சீர்திருத்த நாவலான ''சந்திரகாந்தாவை'' சரஸ்வதி ஸ்டுடியோவில் தயாரித்தனர். இப்படத்தின் இயக்குநர் ராஜா சாண்டோ.

கே.சோமசுந்தரம் பொறுப்பில் 'சந்திரகாந்தா' படப்பிடிப்பு நடந்து வந்தது. சென்னை அலுவலகத்தில் எஸ்.கே.மொய்தீன் பொறுப்பில்,  படத்தில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்தது. சந்திரகாந்தா படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க, தகுந்த திறமையான நடிகரை தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகர் காளி என்.ரத்தினம்,  ஒரு நடிகரின் பெயரை அந்த வேடத்திற்கு சிபாரிசு செய்தார். சிபாரிசு செய்யப்பட்ட நாடக நடிகரை முதலாளிகளில் ஒருவரான எஸ்.கே.மொய்தீன் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வரவழைத்து தன் அலுவலகத்தில் நடிப்பு ஒத்திகை நடத்தினார்.

puc%2023%20300.jpgகருத்த, குட்டையான புதுக்கோட்டை சின்னசாமியின் நடிப்பு பரிசோதிக்கப்பட்டது. அக்காலத்தில் நடிகரின் பிரதான தகுதி குரல் வளமும் பாடும் திறமும்தான். ஒத்திகையின்போது,  நாடகங்களில் தான் பாடி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ''பக்தி கொண்டாடுவோம்" என்ற பாடலை,  சுமார் முக்கால் மணி நேரம் விஸ்தாரமாக பாடி,  தன் திறமையை நிரூபித்தார் சின்னசாமி.

ஆழ்ந்த இசைஞானத்துடன் சின்னசாமி பாடிக் காட்டியதால், அப்படத்தின் வில்லன் 'சுண்டூர் இளவரசன்' வேடத்துக்கு சின்னசாமியை ரூ300/-க்கு ஜுபிடர் ஒப்பந்தம் செய்தது. சின்னசாமி படப்பிடிப்பில் கலந்து கொள்ள பூனா சென்றார். படத்தில் வில்லனாக ஜுபிடர் அறிமுகப்படுத்திய அந்த சின்னசாமிதான் பின்னாளில் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய பி.யு.சின்னப்பா. முதல்பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது இப்படித்தான்.

இப்படத்தைத் தொடர்ந்து மாத்ரூபூமி, ராஜ்மோஹன், பஞ்சாப் கேசரி, ஆரியமாலா, கண்ணகி, குபேரகுசேலா, ஹரிச்சந்திரா, மகாமாயா, பிருதிவிராஜன் ஜகதலப்பிரதாபன், மனோன்மணி, உத்தமபுத்திரன், மங்கையர்க்கரசி, கிருஷ்ண பக்தி என்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தந்து மகிழ்ந்தார் சின்னப்பா.

பி.யு.சின்னப்பாவும் எம்.கே. டி. பாகவதரும்

உத்தமபுத்திரன் படத்தில் நடித்த சின்னப்பா,  தனது பட்டை தீட்டப்பட்ட நடிப்பால் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தார். சின்னப்பாவின் திரையுலக வளர்ச்சி எம்.கே. டி. பாகவதருக்கு ஒரு பலமான போட்டியை ஏற்படுத்தியது. பாகவாதர் நடித்த சத்தியசீலனும், சின்னப்பா நடித்த சந்திரகாந்தவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோதே இரு நடிகர்களின் அபிமானிகள் சிலர் இருவரையும் 'பவளக்கொடி' என்ற நாடகத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்.

mkt%20bhagavathar%20250.jpg'சத்தியசீலன் சுண்டூர் இளவரசன் சந்திப்பு' என்று விளம்பரத் தட்டிகளை வைத்து நோட்டீசுகளை அச்சடித்து வினியோகித்தனர். பொதுமக்களும் ரசிகர்களும் இதை நம்பவில்லை. காரைக்குடி சண்முக விலாஸ் தியேட்டரில் பவளக்கொடி நாடகத்தில் பாகவதர் அர்ச்சுனனாகவும், பி.யு. சின்னப்பா கிருஷ்ணனாகவும் நடித்ததை கண்டு ரசிகர்கள் வியப்பின் உச்சிக்கு சென்றனர். காரைக்குடியே விழாக்கோலம் பூண்டது. நாடகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இதுதான் இந்த இருவரும் இணைந்து நடித்த ஒரே நாடகம்.  இதற்கு பின் இவர்கள் நாடகத்திலோ திரையிலோ இணைந்து நடிக்க முடியவில்லை. திரையுலகின் உச்சிக்கு சென்றதே காரணம்.

எழுத்தாளர் சின்னப்பா

சின்னப்பா எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். ''என்னுடன் நடித்த கதாநாயகிகள்'' என்ற தலைப்பில் ஒரு பிரபல சினிமா பத்திரிக்கையில் தொடர் கட்டுரை எழுதினார். கண்ணாம்பா, சகுந்தலா, பானுமதி, எம்.வி.ராஜம்மா, டி.ஆர்.ராஜகுமாரி என ஒவ்வொரு நடிகையை பற்றியும் சிறப்புடன் எழுதினார்.

அவதுாறுகளை புறந்தள்ளிய சின்னப்பா

சி. என். இலட்சுமிகாந்தன் என்ற பத்திரிக்கையாளர்,  தான் நடத்திய சினிமாதூது, இந்துநேசன் என்ற பத்திரிகைகளில் பிரபல சினிமா நடிகர்,  நடிகைகளை தரக்குறைவாக தாக்கி எழுதிவந்தார். இதில் பி.யு. சின்னப்பாவின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றியும் எழுதப்பட்டது. சின்னப்பா அந்தப் பத்திரிகைகளைக் கண்டு அச்சப்படவில்லை. அந்தப் பத்திரிகையில் வந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல் அலட்சியப்படுத்தினார். 'நடித்துப் பிழைப்பது நம் தொழில்,  அந்த ஆளுக்கு இதுதான் தொழில். விட்டுவிட்டு வேலைபார்ப்போம்' என அந்த பத்திரிக்கையை புறந்தள்ளினார். ஆனால் சக நடிகரான எம்.கே.டி. பாகவதர்,  லட்சுமிகாந்தன் விவகாரத்தில் தேவையின்றி சிக்கி வாழ்க்கையை தொலைத்தார். இதுதான் சின்னப்பாவின் அணுகுமுறை.

இப்படி தியாகராஜ பாகவதருக்கும் சின்னப்பாவிற்கும் தனிப்பட்ட வாழ்வில் குணாதிசயங்கள் வெவ்வேறு. திரையுலகின் உச்சத்திற்கு சென்ற பின் பாகதவரின் தனிப்பட்ட வாழ்க்கை படோடமாக மாறியது. ஆனால் சின்னப்பா அதற்கு நேர்மாறானவர். சாதாரண தனிமனிதர்களின் சிக்கனத்தை அவர் கடைபிடித்தார். சாதாரண சுருட்டு ரசிகர் அவர். திரையுலகில் சிக்கனம் சின்னப்பா என்று அவருக்கு பட்டப்பெயர் உண்டு. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தபோதிலும், அவர் ரயிலில் மூன்றாவது வகுப்பில்தான் பயணம் செய்வார் என்பார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

puc%2023%20600%202.jpg

சிக்கனம் சின்னப்பா

ஒருமுறை சேலத்திலிருந்து சின்னப்பா,  புதுக்கோட்டைக்கு ரயிலில் மூன்றாவது வகுப்பில் (IIIrd Class) பிரயாணம் செய்தார். சின்னப்பா தனது அடையாளத்தை மறைக்க வேண்டி,  தலையில் முண்டாசு கட்டிக் கொண்டிருந்தார். இவ்வாறு செய்தால் சக பிரயாணிகள் தன்னை நடிகர் என்று தெரிந்து அன்புத்தொல்லைகள் விளைவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை. ரயில்பெட்டியில் எதிர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு பிரயாணி இவரை அடையாளங்கண்டு கொண்டு; ''நீங்கள் பி.யு. சின்னப்பா தானே என்றார்." உடனே இவர் 'நான் சின்னப்பா" இல்லை; சின்னப்பா போன்ற தோற்றம் எனக்கு அமைந்திருந்தால் நான் சின்னப்பா ஆகிவிடுவேனோ... உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? நடிகர் பைத்தியம் பிடித்து அலைகிறீர்கள்...!" என்று அந்த கேள்விகேட்ட சக பிரயாணியை கண்டித்து விட்டு,  ரயில் பிரயாணத்தை தொடர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியை புதுக்கோட்டை வந்து சேர்ந்த பின் தன் மனைவியிடம் தெரிவித்து விட்டு,   ''எனக்குத் தேவையில்லாத பப்ளிசிட்டி பிடிக்காது என்பதுதான் உனக்குத் தெரியுமே! அதனால்தான் உத்தமபுத்திரன் படத்தில் இரண்டு வேடம் புனைந்த நான் 'ரயிலில் மூன்றாவது வேடமும் போட்டேன் என்று மேற்கொண்டு சொன்னார்.

சிறைக்கு அனுப்பிய தேசபக்தி

சின்னப்பாவின் சிக்கனம் அவருக்கு சிக்கலானதும் உண்டு. தான் ஈட்டிய செல்வத்தையெல்லாம் புதுக்கோட்டையில் வீடுகளாகவும்,  நிலமாகவும் மாற்றி வைத்திருந்தார். ஒருகட்டத்தில் புதுக்கோட்டை நகரசபை, 'மேற்கொண்டு புதுக்கோட்டையில் சின்னப்பா அசையா சொத்து எதுவும் வாங்கக் கூடாது' என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கும் அளவுக்கு இடங்களை வாங்கிப்போட்டிருந்தார் என்பார்கள்.

puc%2023%20600%203.jpg

ஒருமுறை புதுக்கோட்டை திவான்  கலிபுல்லா சாயுபு, சின்னப்பாவை அணுகி, இரண்டாம் உலக யுத்தத்திற்கு ஆயுதம் வாங்க, நாடகம் நடத்தி யுத்த நிதிக்கு நிதி திரட்டித் தரும்படி கோரிக்கை வைத்தார். சின்னப்பா,  தன் தாய் நாட்டின் மீது கொண்டிருந்த தேசபக்தியால் அதற்கு மறுத்து விட்டார். விளைவுகளை கண்டு அசரவில்லை சின்னப்பா. ஒரு சமயம் புதுக்கோட்டையில் மதுவிலக்கு சட்ட பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மது அருந்தியதாக ஒப்புக் கொண்டு போலீஸ் லாக்கப்பில் ஒரு நாள் முழுவதும் இருந்தார். கோர்ட்டில் 200 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு விடுதலையாகி வெளியே வந்து விட்டார். யுத்த நிதி திரட்டிக் கொடுக்காததால் வந்த வினை இது.

பி.யு.சின்னப்பாவைப் போல் நடிக்க விரும்பிய எம்.ஜி.ஆர்

''சின்னவர்'' என்று திரைத்துறையினரால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.,  நடிகர் பி.யு.சின்னப்பாவின் பரமரசிகர். அவரைப் பற்றி புகழ்ந்து பெருமையாக பேசுவார். சின்னப்பா நடித்த ஆரியமாலா என்ற படம் அந்தக் காலத்தில் வசூலில் சக்கைப் போடு போட்டு வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தைப் பார்த்து 'சின்னப்பா' போன்றே ஒரு படத்தில் தானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர்.

mgr%20bharath%20600%2044.jpg

அப்படி ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இப்படத்தில் சில காட்சிகளில் நடித்த எம்.ஜி.ஆர்., அப்போது தான் சார்ந்திருந்த தி.மு.க.-வின் கொள்கை காரணமாக தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. 'காத்தவராயன்' என்ற அத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'மந்திர தந்திரங்கள்' செய்து புடலங்காயை பாம்பாக மாற்றுவது போன்ற காட்சியில்,  தான் நடிக்க வேண்டியிருந்ததால் அது தன் கொண்ட கட்சிக் கொள்கைக்கு முரணானது என்று தீர்மானித்து படத்திலிருந்து விலகிக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

பி.யு.சின்னப்பா போன்றே காத்தவராயனில் நடிக்க விரும்பிய எம்.ஜி.ஆரின் எண்ணம் திராவிட இயக்க கொள்கைகளால் சிதைவுபட்டது. எம்.ஜி.ஆர். இதை பின்னாளில் வருத்ததுடன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சின்னப்பாவின் காதல் திருமணம் பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்...

http://www.vikatan.com/news/coverstory/59459-superstar-travel-by-train-in-3rd-class.art

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

10 வேடத்தில் நடித்த முதல் நடிகர் பி.யு சின்னப்பா ! ( தமிழ்சினிமா முன்னோடிகள்-தொடர் 24)

 
  •  
  •  
  •  
 
 

puc%2024%20logo.jpg

சின்னப்பாவின் காதல் திருமணம்

1939-ம் ஆண்டு ஆர்யமாலா என்ற திரைப்படத்தை கே.எஸ். நாராயண அய்யங்கார் மற்றும் எஸ்.எம்.ஶ்ரீராமுலு நாயுடு இருவரும் இணைந்து தயாரித்தனர். இதில் காத்தவராயனாக பி.யு. சின்னப்பா நடித்தார். படத்தின் படப்பிடிப்பு கோவை பக் ஷி ராஜா ஸ்டுடியோவில் நடந்தது. (கோவையில் ''கந்தன் ஸ்டியோ" என்ற பெயரில் செயல்படாமல் கிடந்த ஸ்டியோ வளாகத்தை ஶ்ரீராமுலு நாயுடு விலைக்கு வாங்கி ''பட்சிராஜா' என்று பெயர் மாற்றம் செய்தார் எஸ்.எம்.ஶ்ரீராமுலு). இப்படத்தில் நடித்த ஏ. சகுந்தலா என்ற நடிகை நல்ல அழகி, படப்பிடிப்பில் அடிக்கடி சந்தித்து கொண்ட சகுந்தலாவுக்கும் பி.யு. சின்னப்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு சகுந்தலாவின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

a_sakunthala%20right.jpgஆர்யமாலா திரைப்படத்தில் அரும்பிய அவர்கள் காதல்,  பிருதிவிராஜ் படப்பிடிப்பு தளம் வரை தொடர்ந்தது. இதற்கிடையில், மார்டன் தியேட்டர்ஸின் மனோன்மணி திரைப்படத்தில் பி.யு. சின்னப்பா புருஷோத்தமனாகவும் ஏ.சகுந்தலா வாணி என்ற பாத்திரத்திலும் நடித்தனர். பி.யு.சின்னப்பாவுடன் மனோன்மணியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். படப்பிடிப்பு சேலத்தில் 1942 ஆம் ஆண்டு தொடங்கியது. படப்பிடிப்புக்கு சகுந்தலா காலதாமதமாக வர ஆரம்பித்தார். வந்தாலும் பதட்டத்துடன் காணப்பட்டார்.

பி.யு.சின்னப்பா - ஏ.சகுந்தலா காதல் குறித்து முன்னமேயே அறிந்திருந்த டைரக்டர் டி.ஆர். சுந்தரம், பி.யு. சின்னப்பாவை அழைத்து உடனே சகுந்தலாவை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். சகுந்தலாவின் தாய் எதிர்ப்பையும் மீறி அவரை 1943ஆம் ஆண்டு சேலத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார் பி.யு.சின்னப்பா. டி.ஆர்.சுந்தரத்திற்கும் பிரச்னை தீர்ந்தது. படத்தில் பி.யு. சின்னப்பாவும் சகுந்தலாவும் வெகு நேர்த்தியாக நடித்தனர். படம் வெற்றி பெற்றது.

பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் ஆறு படங்கள் தமிழ் திரையுலகில் மீண்டும் தயாரிக்கப்பட்டன. 1958-ல் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன்  ஒன்று. சின்னப்பா நடித்த 6 படங்களின் கதைகள் மீண்டும் படங்களாக்கப்பட்டன. உத்தம புத்திரன் (1940), ஆர்யமாலா (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944) ஆகிய சின்னப்பா நடித்த படங்கள் முறையே, உத்தம புத்திரன் (1958 சிவாஜி), காத்தவராயன் (1958 சிவாஜி), பூம்புகார் (1964 எஸ்.எஸ்.ஆர்) ராணி சம்யுக்தா (1962 எம்.ஜி.ஆர்.), ஜெகதல ப்ரதாபன் (1963 என்.டி.ராமாராவ்), ஹரிச்சந்திரா (1968 சிவாஜி) ஆகிய பெயர்களில் வெளிவந்தன.

மதுப்பழக்கத்தினாலும் அசைவ உணவு பண்டங்களை அளவுக்கு அதிகமாக புசித்ததாலும், குறுகிய காலத்திலேயே இவர் உடல் பெருத்து தடிமனாகி விட்டார். குள்ளமாய் இருந்த இவர் உடல் குண்டாகி பெருத்துப் போனதால் முன் போல் இவரால் படத்தில் நடிக்க இயலவில்லை. உடம்பு பெருத்ததால் சினிமா வாய்ப்பு சிறுத்து போய் விட்டது. 26 படங்களுக்கு மேல் நடிக்க முடியவில்லை. அவர் நடித்த அவரது கடைசி படமான சுதர்ஸன் அவரது சாவிற்குப் பின்னர்தான் திரைக்கு வந்தது.

1936- ல் சந்திரகாந்தாவில் தொடங்கிய சின்னப்பாவின் திரையுல வாழ்க்கை சுதர்ஸன் (1951) படத்துடன் முடிவுக்கு வந்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 26. திரைப்பட நடிகராக வெற்றிகரமாக இவர் உலா வந்தது சுமார் 15 ஆண்டுகள். சின்னப்பா நடித்தது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்த தமிழ் படங்கள் ஆர்யமாலா, கண்ணகி, மனோன்மணி, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, ரத்னகுமார், விகடயோகி ஆகியவை.

puc%2023%20600%202.jpg

10 வேடத்தில் நடித்த முதல் நடிகர்

ஒரே நடிகர் இரு வேடங்களில் நடிக்கும் தமிழ் சினிமா மரபு பி.யு சின்னப்பா இரு வேடங்களில் தோன்றி நடித்த உத்தம புத்திரன் படத்திலிருந்துதான் தொடங்குகின்றது. மூன்று வேடங்களில் முதன்முதலில் நடித்தவரும் சின்னப்பாதான். படத்தின் பெயர் மங்கையர்க்கரசி.

1965- ஆம் ஆண்டு வெளிவந்த ''திருவிளையாடல்" படத்தில் வரும் ''பாட்டும் நானே" என்ற பாடலை பாடிய சிவாஜிக்கு முன்னோடியாக ஜெகதல ப்ரதாபன் என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் 5 வேடங்களில் நடித்தவர் பி.யு.சின்னப்பா. நவராத்திரி 1964 படத்தில் 9 வேடங்களில் சிறப்பாக நடித்த நடிகர் திலகம் சிவாஜிக்கும் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் தோன்றிய கமல்காசனுக்கும் முன்னோடியாக ஆர்யமாலா என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார் பி.யு. சின்னப்பா.

நடித்த திரைப்படங்கள்:

சந்திரகாந்தா (1936), ராஜமோகன் (1937), பஞ்சாப் கேசரி (1938), யயாதி (1968), அனாதைப் பெண் (1938), மாத்ரு பூமி (1939) உத்தம புத்திரன் (1940), ஆரியமாலா (1941), தர்மவீரன் (1941) தயாளன் (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), மனோன்மணி (1942), குபேர குசேலா (1943), மஹா மாயா (1945), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944), அர்த்தநாரி (1946), விகடயோகி (1946), துளஸி ஜலந்தர் (1947), பங்கஜ வல்லி (1947), கிருஷ்ண பக்தி (1948), மங்கையர்க்கரசி (1949), ரத்னகுமார் (1949), வனசுந்தரி (1951) சுதர்ஸன் (1951).
சின்னப்பா நடித்து வெளிவராத படங்கள் கட்டபொம்மு (1948)

puc%2023%20600%204.jpg

குபேரகுசேலா, மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகிய படங்களில் திருவாளர் பி.யு. சின்னப்பா அவர்களுடன் நடித்திருக்கிறேன். சின்னப்பா அவர்களை ஒரு சாதாரன நடிகர் என்று சொல்லி நிறுத்தி விட முடியாது. அவர் ஒரு பிறவி நடிகர். வசனம் சொல்வதிலும் சரி, பாட்டிலும் சரி, கத்தி சண்டை சிலம்பு சுற்றுதல், சுருள் பட்டா வீசுதல் ஆகியவற்றிலும் சரி அவர் ஈடு இணையற்றே விளங்கினார்” என 1963- ஆனந்த விகடன் பேட்டியில் டி.ஆர்.ராஜகுமாரி புகழ் சூ்ட்டினார்.

வெற்றி கொடி நாட்டிய கண்ணகி

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் கண்ணகி திரைப்படத்தை 1942ல் தயாரித்தனர். இளங்கோவலன் கதைவசனத்தில் கண்ணகியாக நடிக்க நடிகை கண்ணாம்பாவை ஒப்பந்தம் செய்தனர். கோவலனாக நடிக்க தகுந்த நடிகரை தேடினர். இறுதியா பி.யு.சின்னப்பா தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தில் கதாநாயகன் பி.யு. சின்னப்பா பெற்ற ஊதியம் ரூ.10000/- ஆனால் கதாநாயகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு கொடுத்த ஊதியம் ரூ.20000/- குறைந்த ஊதியத்திற்கு பி.யு. சின்னப்பா நடிக்க ஒப்புக் கொள்ள காரணம் அவர் ஜூபிடர் பிக்சர்ஸ் மேல் வைத்திருந்த மரியாதை. அதுமட்டுமன்று பி.யு.சின்னப்பாவை முதன் முதலில் 'சந்திரகாந்தா" படத்தில் நடிக்க வைத்த நிறுவனம் என்பதால் ஜூபிடர்ஸ்  நிறுவனத்தின் கருத்தில் கொண்டே இப்படத்தில் குறைந்த ஊதியத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

puc%2023%20300.jpgகண்ணகி படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் விளக்கணைப்புச் செய்யப்படும் மாலை ஆறு மணிக்கு மேல் ஊரங்குச் சட்டம் அமலில் இருந்தது. அதனால் பகலிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துக் கொண்டு, நடிக, நடிகையர்களை, காஞ்சிபுரத்திற்கும், செங்கல்பட்டிற்கும், திருவள்ளுருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியிருந்தது. பி.யு.சின்னப்பா படப்பிடிப்பு முடிந்து சென்னையிலிருந்து செங்கற்பட்டுக்கு வந்து இரவு தங்கி விட்டு மறுநாள் புறப்பட்டுச் சென்று சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். இந்த சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தில் நடித்துக் கொடுத்தார் பி.யு.சின்னப்பா.

படம் ஓடிய ஊர்களுக்குகெல்லாம் பி.யு.சின்னப்பா நேரில் சென்று படம் எப்படி ஓடுகிறது என்று மதிப்பீடு செய்தார். மதுரையில் கண்ணகி படம் பார்த்து முடிந்து ஜனங்கள் தியேட்டரை விட்டு வெளியே வருகிற வேலையில் அந்தச் சாலைக்குள்ளேயே நுழைய முடியாது! அவ்வளவு கூட்டம் இதுதான் சின்னப்பா நடிப்பிற்கு மக்கள் வழங்கிய உண்மையான அங்கீகாரம்.

பாரதி புகழ்பாடிய சின்னப்பா

பாரதியார் பாடல்களில் சின்னப்பாவுக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு முதன் முதலில் தமிழ் திரையில் பாரதியின் பாடல்களை பாடியவரும் இவர்தான். ''உத்தம புத்திரன்" என்ற திரைப்படத்தில் அவர் பாடிய ' செந்தமிழ் நாடேனும் போதினிலே' என்ற பாடல் பெரிய ஹிட். இப்பாடலுக்கு அன்றைய ஆங்கிலேய அரசு (1940 ஆம் ஆண்டு) தடை விதித்தது. சுதந்திரம் பெற்ற பின்தான் அத்தடை நீக்கப்பெற்றது.

எட்டைய புரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்ட ரூ.1000/- நிதியுதவி செய்தார். பிருதிவிராஜ் படத்தில் ''அச்சமில்லை" "பாரத சமுதாயம் வாழ்கவே" "வெற்றியெட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே" ஆகிய மூன்று பாடல்களை பாடினார். தயாளன் படத்திலும் பாரதியார் பாடலை பாடியுள்ளார். தமிழ் நடிகர்களில், அதிக எண்ணிக்கையில் பாரதி பாடல்களை திரையில் பாடி சாதனை படைத்துள்ளார் சின்னப்பா.

"கட்டபொம்மு" என்ற படத்தை தயாரிப்பதாக 1948ஆம் ஆண்டு செல்வம் பிக்சர்ஸ் விளம்பரம் வெளியிட்டனர். பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடிக்க போகிறார் என்றும் விளம்பரம் சொல்லியது. ஆனால் எக்காரணத்தினாலோ படம் வெளிவரவில்லை. '' ஒருவேளை பி.யு. சின்னப்பா கட்டபொம்மனாக நடித்து அந்தப் படம் திரைக்கு வந்திருந்தால், பின்னாளில் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது மட்டும் சர்வம் நிச்சயம் என்கிறார் திரைப்பட வரலாற்று ஆய்வாளர் திரு.அறந்தை நாராயணன்.

puc%20600%202.jpg

எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு

ஜுபிடரின் மஹாமாயா (1944) படத்தில் கதாநாயகனாக வில்லன் உருவில் பி.யு. சின்னப்பா நடித்தார். கண்ணம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எல்.சரோஜா, சஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்கரபாணி ஆகியோர் நடித்தனர். சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சோமுவை பார்ப்பதற்காகவும், படப்பிடிப்பை கண்டு களிப்பதற்காகவும் எம்.ஜி.ஆர். ஜூபிடரின் படப்பிடிப்பு தளத்திற்கு அப்பொழுது வருவதுண்டு. தனது பழைய சீடர் எம்.ஜி.ஆரை படப்பிடிப்புத் தளத்தில் பார்த்த சின்னப்பாவுக்கு அவரை எப்படியாவது அந்த திரைப்படத்தில் (மஹாமாயா) நடிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.

எம்.ஜி.ஆருக்கு அப்படத்தில் ஒரு வேடம் கொடுக்கும்படி தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார். ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டாலும், பி.யு. சின்னப்பாவின் ஏற்று ஒரு சிறு வேடம் எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கித் தரப்பட்டது. படத்தில் ''அஸ்வபாலன்" என்ற வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

தமிழகத்தின் தவ நடிகர் பி.யு சின்னப்பா என்பதில் ஐயமில்லை!

- பேராசிரியர். வா. பாலகிருஷ்ணன்

தமிழ்சினிமாவின் முன்னோடிகளைப்பற்றி பேசிய இந்த கட்டுரை இத்துடன் நிறைவுபெறுகிறது. நன்றி!

http://www.vikatan.com/news/coverstory/60547-pu-chinnappatamil-cinema-pioneers-series-24.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.