Jump to content

2015 தேர்தல் கணிப்பு (கொழும்பு மாவட்டம்)


Recommended Posts

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான மாவட்ட ரீதியான தரவுகளுடனும் எதிர்வுகூறலுடனும் இந்தத் தலைப்பினூடாக உங்களைச் சந்திக்க விழைகிறேன். அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டம் தொடர்பிலான எனது கணிப்புடன் விரைவில் சந்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

1 586 598 வாக்காளர்களைக் கொண்ட கொழும்பு மாவட்டத்திலிருந்து 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். அதிக உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் மாவட்டமாகவும் கொழும்பு மாவட்டமே திகழ்கிறது.

வழமையாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக வாய்ப்புள்ள மாவட்டமாகக் கருதப்படும் கொழும்பு மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றி பெற்றது.

இதன் படி சென்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 10 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும்; ஜேவிபி சரத் பொன்சேகா இணைந்த கூட்டணிக்கு 2 ஆசனங்களும் கிடைத்திருந்தன.

கடந்த தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அணியில் இடம்பெற்றிருந்த ஹெல உறுமய இம்முறை அந்த அணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது.

அத்துடன் இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குக்களைப் பெற்ற துமிந்த சில்வாவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதே போல மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குக்களைப் பெற்ற ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக ரணவக இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர பிரபல ஊடகவியலாளரும் ஆசிரியருமான உபுல் சான்த சன்னஸ்கல ஆகியோரின் வரவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தை பொறுத்த வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை மிகப் பலவீனமான நிலையிலேயே தேர்தலைச் சந்திக்கிறது. வழமையாக தேர்தலில் போட்டியிடும் பிரதானமான முஸ்லிம் வேட்பாளரான பெளசியும் தேர்தலில் போட்டியிடாமல் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

வழமையை விட சற்றுப் பலமான நிலையில் நாடு முழுவதிலும் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணி அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் கொழும்பிலேயே போட்டியிடுவதால் அதிக வாக்குகளை குறிப்பாக இளைஞர்கள் மட்டத்தில் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனது கணிப்பு
இம்முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 3 ஆசனங்களையும் கைப்பற்றலாம் என்பதே எனது கணிப்பாக இருக்கிறது.

இதன்படி வெற்றிபெறுவார்கள் என நான் எதிர்பார்க்கும் வேட்பாளர்கள்

 

United National Party

Ranil Wickremesinghe

Ravi karunanayake

Rosy Senanayake

Sujeewa Senasinghe

Patali Champika Ranawaka

 

Hirunika Premachandra

S.M. Marikkar

Wijeyadasa Rajapaksha

Ferosza Muzammil

Mano Ganeshan

பட்டியலில் நான் தெரிவு செய்த ஓரிருவருக்குப் பதிலாக முஜிபுர் றஹ்மான்  உபுல் சான்த சன்னஸ்கல ஆகியவர்களும் தெரிவு செய்யப்படக்கூடும்

 

United People’s Freedom Alliance

Wimal Weerawansa

Udaya Gammanpila

Dinesh Gunawardane

Bandula Gunawardane

Geethanjana Gunawardana

Thilanga Sumathipala

பட்டியலில் நான் தெரிவு செய்த ஓரிருவருக்குப் பதிலாக சுசில் பிறேமஜயன்த சிலவேளைகளில் தெரிவு செய்யப்படக் கூடும்

 

 Janatha Vimukthi Peramuna

  Anura Kumara Dissanayake

  K.D. Lalkantha

  Lakshman Nipunaarachchi

 

Link to comment
Share on other sites

அரசியலில் ஆர்வமுடையவர்கள் உங்கள் கருத்துக்களையும் உங்கள் எதிர்வுகூறல்களையும் இங்கே பகிருங்கள். அப்போது தான் இந்தப் பதிவு சுவாரசியமடையும். இல்லாவிட்டால் நான் தனித் தவீல் தான் வாசிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முதல்லை சொல்லியிருக்க வேண்டும்.
நாங்களும் நீங்கள் தனித்தவில் வாசிக்கப்போவதாகவே நினைத்தோம் :grin:

Link to comment
Share on other sites

இதை முதல்லை சொல்லியிருக்க வேண்டும்.
நாங்களும் நீங்கள் தனித்தவில் வாசிக்கப்போவதாகவே நினைத்தோம் :grin:

சரி  வெத்திலை வைச்சுக் கூப்பிட்டிட்டன். வாங்கோ சேந்து சமா வைப்பம்...:cool:

 

Link to comment
Share on other sites


தேர்தல் எதிர்வு கூறல் - கம்பஹா மாவட்டம்

இலங்கையின் பாராளுமன்றத்திற்கு அதி கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் மாவட்டமான கம்பஹா பண்டாரநாயக்காக்களின் சொந்த ஊர் என்பதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றியை தொடர்ந்து தேடித் தரும் மாவட்டமாக இருந்து வந்துள்ளது. 

எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால மிகச் சொற்ப வாக்குகளால் இந்த மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தார். இதற்கு சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆதரவும் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்தது.

பண்டாரநாயக்காக்களைப் போலவே ரணதுங்க குடும்பமும் இந்த மாவட்டத்தில் மிகவும்   செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இந்தக் குடும்பத்திலிருந்து 3 சகோதரர்தகள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் மேல் மாகாண முதலமைச்சரின் மகிந்த றாஜபக்சவின் நெருங்கிய சகாவுமான பிரசன்ன றணதுங்க மற்றும் றுவன் றணதுங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பிலும் முன்னாள் கிறிக்கெற் கப்ரன் அர்யுன றணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பிரபலமானவரும் கடந்த தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் நடிகர் ரஞ்சன் றாமநாயக்காவும் இம்முறை கம்பஹா மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றார்.

எனது கணிப்பு

கடந்த 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 5 அசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

எனது கணிப்பின் படி இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  9 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும் பெறக் கூடும்.

எனது கணிப்பின் படி பின்வருவோர் வெற்றி பெறலாம்

 

UPFA

 

1 Kuranage John Felix Perera

2 A. Alaqgiyawanne Lasantha

3 Sudharshani Fernandopulle

4 Ruwan Ranatunga

5 A.G.Dulip Wijesekera

6 Pandukabhaya Bandaranayake

7 A.Sarathchandrakumara Gunarathne

 

8 Prasanna Ranatunga

9 Kokilaharshani Gunawardene

 

UNP

1. Amaratunga John Anthony Emmanuel

2 Mahapatabendige Joseph Michael Perera

3 Dinendra Ruwan Wijewardene

4 A.A. Ranjan Ramanayake Sadda Widda

10 Harshana Supun Rajakaruna

20 Arjuna Ranatunga

21 Chathura Sandeepa Senarathne Nambukara Helambage

 

JVP

Vijitha Herath

Bimal ratnayaka

 

இவர்களில் பிரசன்ன றணதங்க அதிக விருப்பு வாக்குகளைப்  பெறக் கூடும்இவர்களில் பிரசன்ன றணதங்க அதிக விருப்பு வாக்குகளைப்  பெறக் கூடும்

Link to comment
Share on other sites

மேல் மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான களுத்துறை கடந்த காலங்களில் சிங்கள முஸ்லிம் கலவரங்களால் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. சிங்கள மக்களுடன் கணிசமான முஸ்லிம் மக்களும் இறப்பர் தோட்டங்களை மையைப்படுத்தி சிறிய அளவிலான இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய இந்த மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சுகாதார அமைச்சர் றாஜித டசேனாரத்ன இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

எனது கணிப்பு

இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெறலாம் என நான் எதர்வு கூறுகிறேன்.

இதன் படி வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்கள்

 

 

UPFA

 

Kumara Welgama

Rohitha Abaygunawardana

Vidura Wickramanayaka

mahinda Samarasinghe

Nirmala Kothalawala

 

UNP

Ajith Perera

Palitha thevarapperuma

Rajitha Senaratna

Luxman Wijemanna

 

JVP

Dr. Nalin jayatissa

 

 

 

 

Link to comment
Share on other sites

கண்டி மாவட்டம்

 

மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் கண்டி மாவட்டம் வழமையாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு  சாதகமான மாவட்டமாகும். இருந்தாலும் யுத்த வெற்றி மனநிலையில் நடத்தப்பட்ட 2010ம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கசுதந்திர முன்னணி 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றிருந்தன.

பெரும்பிரபலங்கள் பலர் களமிறங்கியுள்ள கண்டி மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய தேசியக்கட்சிக்குச் சாதகமான நிலமை காணப்படுகிறது. அத்துடன் மகிந்த பிரிவு மைத்திரி பிரிவு எனப் பிளவுபட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளராக மைத்திரி சார்பு எஸ்.பி. திசாநாயக்கா களமிறக்கப்பட்டுள்ளார். ஆனாலும் மகிந்த சார்பு றம்புக்வெல்ல மகிந்தானந்த அளுத்கமகே லொகான் றத்வத்த போன்ற பலரும் ஐக்கிய மக்க்ள சுதந்திரக் கூட்டமைப்பினூடாக களமிறங்கியுள்ளனர்.

எனது கணிப்பு

இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இம்மாவட்டத்தில் வெற்றி பெறுவதுடன் அக்கட்சி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5 ஆசனங்களையும் கைப்பற்றும் என்பது எனது கணிப்பாகும்.

 

வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்கள்

ஐக்கிய தேசியக் கட்சி

Lakshman Kiriella

A.H.M halim

Rauf Hakeem

Shanthini  Kongahage

Ananda Aluthgamage

Mayantha Dissanayaka

Lucky Jayawardana

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

Mahindananda Aluthgamage

Keheliya rambukwella

S.B. Disanayaka

Lohan ratwatta

Dilum Amunugama

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.