Jump to content

1250 KM வேகத்தில் குழாய்க்குள் ரெயில்..! அதிசயமா…? ‘ஹைபர்லூப்’ எனும் நவீன போக்குவரத்து நுட்பம்


Recommended Posts

1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் போக்குவரத்து சோதனை திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது.

புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும்.

ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. தற்போது ‘ஹைபர்லூப்’ எனும் நவீன போக்குவரத்து நுட்பம் சாத்தியம் என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது உருக்கு குழாய்களுக்குள், கூண்டுகளைக் கொண்டு ‘லிப்ட்’ போல வேகமாக இயக்கும் தொழில்நுட்பமாகும்.

‘எலான் மஸ்க்’ எனும் நிறுவனம் தெற்கு கலிபோர்னியாவில் இதற்கான சோதனை தடம் அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அரை மணி நேரத்தில் அடைந்துவிட முடியும். இந்த தொழில்நுட்பத்தில் அதிகவேகமாக மணிக்கு 1,287 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

உருக்கு குழாய்க்குள் குறைந்த அழுத்தம் பராமரிக்கப்படும். சுற்றிலும் அழுத்தம் குறைவாக இருப்பதால் அதிக தடைகள் இன்றி அதிவேகத்தில் பயணிக்க உதவும்.

கடந்த 2012 ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, பல்வேறு தடைகளால் திட்டம் தாமதப்பட்டு வந்தது. தற்போது வெற்றிகரமாக சோதனை முயற்சிகள் தொடங்கி உள்ளன.Rail

- See more at: http://www.canadamirror.com/canada/46151.html#sthash.hRTjmAD7.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.