Jump to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோரும் - இரா.சம்பந்தன்


Recommended Posts

பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தினாலே நிரந்தர அரசியல் தீர்வை எட்டலாம்!: இரா.சம்பந்தன்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோரும்:



ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோருதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் நேற்று நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தப்பில் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

வடக்கு கிழக்கில் வாழும் ஒவ்வொரு பொதுமகனின் உள்ளக்கிடக்கையையும் உள்ளீர்த்தவாறே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானம் அமையும் என்று சம்பந்தர் கூறியுள்ளார். 

இதேவேளை யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முழுமையாக உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் கைதிகள், காணாமல் போனோர், மீள்குடியேற்றம், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிரச்சினை, வேலையற்ற இளைஞர் யுவதிகளின் பிரச்சினை போன்றவை குறித்தும் பேசப்படவுள்ளன. 

வட கிழக்கு மக்களை மையப்படுத்தி அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிரந்தர அரசியல் தீர்வு முக்கிய விடயமாக உள்ளடக்கபபடவுள்ளது. 

ஒளிவுமறைவின்றி பெரும்பான்மை சமூகம் ஆட்சேபிக்காத வகையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்படவுள்ளது. 

தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழும் நோக்கில் அரசியல் தீர்வு வலியுறுத்தப்படவதுடன் பெரும்பான்மை சமூகத்திற்கோ வேறு தரப்பிற்கோ ஒளிவுமறைவோடு செயற்டும் எண்ணம் ஏதுமில்லை என்றும் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

 

பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தினாலே நிரந்தர அரசியல் தீர்வை எட்டலாம்!: இரா.சம்பந்தன்: 
 
 
தற்போதைய ஜனநாயகச் சூழலில் பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் வலுப்படுத்துவதன் ஊடாகவே நிரந்தர அரசியல் தீர்வை பெறமுடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
 
நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் தொடர்பில் குறிப்பிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ள அவர் வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை வெற்றி கொள்வதே தமது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். 
 
குடும்ப சர்வாதிகார ஆட்சி ஒழிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில் மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற உகந்த சூழல் என்பதால் இந்ததேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
இந்த ஜனநாயகம் தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை வாக்களிக்கச் செய்வதுடன் இளைஞர்களுக்கு தமிழ் தேசியம் தொடர்பில் எடுத்துரைப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
2004ஆம் ஆண்டு தேர்தலில் 22 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றதாகவும் இந்த தேர்தலில் 20 ஆசனங்களை பெறுவதற்காய் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கூறினார். 
 
சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்து ஓர் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட இது உகந்த சந்தர்ப்பம் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார். 
 
ஐக்கிய இலங்கைக்குள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க அதிகாரப்பகிர்வை பெற்று தமிழர்கள் அபிலாசைகளுடன் பாதுகாப்பாக வாழும் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள தமிழர்களின் வாக்கு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
 
 
Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் பா.உ க்களை வழுப்படுத்த ,பா.உ க்கள் தங்களை வழுப்படுத்த .....ஜனதிபதி,பிரதமர்கள் வெளிநாட்டில் சொத்து க்களை வழுப்படுத்த ஒரே சுயநிர்ணயம்தான்.....சுயசம்பாத்தியம்தான்

77 ஆம் ஆண்டு ஈழம்.......2009 ஐக்கிய இலங்கை......2015 சுயநிர்ணய உரிமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் பா.உ க்களை வழுப்படுத்த ,பா.உ க்கள் தங்களை வழுப்படுத்த .....ஜனதிபதி,பிரதமர்கள் வெளிநாட்டில் சொத்து க்களை வழுப்படுத்த ஒரே சுயநிர்ணயம்தான்.....சுயசம்பாத்தியம்தான்

77 ஆம் ஆண்டு ஈழம்.......2009 ஐக்கிய இலங்கை......2015 சுயநிர்ணய உரிமை

சிங்களம்: தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல  ஒட்டுமொத்த தமிழர்களும்  கோமாளிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து 2004 இல் முன் வைத்த சமஷ்டி.. ஒரு நாடு இரண்டு தேசங்கள்.. வடக்குக் கிழக்கு இணைந்த நிலையில் தமிழர் தேசம் அங்கீகரிப்பட்ட நிலையில்... தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்படுதல் வேண்டும் என்று.. தான் கேட்டவை. தனித் தமிழீழத்தை கேட்கல்ல... இப்ப.. அதில்..  இருந்து.. சம்பந்தன் பரினாமப் பின்னடைவு கண்டு இப்ப.. ஐக்கிய இலங்கைக்குள்.. ஒற்றையாட்சிக்குள்.. பிரிந்த வடக்குக் கிழக்கில்.. மாடு ஆடு கட்டுவதற்கும் அவிழ்த்து விடுவதற்கும்.. சுய நிர்ணய உரிமை கோருகிறார்.

தமிழ் மக்களை சுய நிர்ணய உரிமை என்ற புலிகள் பாவித்த பதத்தைப் பாவித்து மயக்கி வாக்குகளை அள்ளலாம் என்று நினைக்கிறார் போலும். அதுதான் இன்னும் தமிழரசுக் கட்சியோடு தனியே சென்று தேர்தலை சந்திக்காது புலிகள் இனங்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பில் நின்று தேர்தலை கேட்கினம்.

மக்கள் மயக்கத்தில் இருந்து தெளிந்து புலிகள் மக்களுக்காக கேட்ட சுயநிர்ணயத்துக்கும் சம்பந்தன் வாக்குக்காகக் கேட்கும் சுயநிர்ணயத்துக்கும் இடையில் உள்ள வித்தியாத்தை உணர்ந்தால்.. தமிழ் மக்களின் பேரம் பேசும் வலுவை வேறு வகையில் பலப்படுத்த வழி ஏற்படும்.

கூட்டமைப்பை எனி பேரம் பேசும் சக்தியாக்கி சிங்கக் கொடி பிடிக்கவும்.. சிங்கள சுதந்திர தினம் கொண்டாடவும் வேண்டுமா தமிழ் மக்கள். தம் இனத்தை அழித்து நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள அரசிடம்.. ஒற்றையாட்சிக்குள்.. ஐக்கிய இலங்கைக்குள்.. வடக்குக் கிழக்கு என்று.. துண்டாடப்பட்ட தமிழர் நிலத்தில்.. எங்கு சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவது.. வாசிகசாலையிலா...??!  மக்கள் இவர்களின் மாய விளையாட்டை.. மக்களை ஏமாற்றும் அரசியலை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டும். அதுதான் இவர்களை கொட்டாவி அரசியலை விட்டு.. சுயசிந்தனை நிலைக்கு கொண்டு வந்து தமிழ் மக்கள் சார்ந்து சிந்திக்க வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை சுய நிர்ணய உரிமை என்ற புலிகள் பாவித்த பதத்தைப் பாவித்து மயக்கி வாக்குகளை அள்ளலாம் என்று நினைக்கிறார் போலும். அதுதான் இன்னும் தமிழரசுக் கட்சியோடு தனியே சென்று தேர்தலை சந்திக்காது புலிகள் இனங்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பில் நின்று தேர்தலை கேட்கினம்.

சிரித்து குடல் அறுந்து போச்சு .அண்ணை எந்த நாட்டில இருந்தவர் .

.பயங்கரவாதம் என்ற சொல்தான் புலிகள் வந்த பின் பிரபலமானது .

Link to comment
Share on other sites

1977 ஆண்டு எதிர்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அண்ணன் அமிரின் முதல் பாராளுமன்ற உரை இது 

"சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக உழைத்து தமிழ் ஈழத்தை அடைவதற்காகவே மக்கள் எம்மை பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் ."

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்களை நினைச்சாலே சிரிப்பு தாங்க முடிவதில்லை.

புலிகளாவது கடைசியில் பயங்கரவாதிகள் ஆனார். நீங்கள்.. இந்திரா காந்தி அம்மையார் கப்பலை பறிச்சு வைச்சிட்டு துரத்தி விட்டதில் இருந்தே அது தான். கடைசியா.. அம்னாஸ்ரி அறிக்கையில் கூட.. கீழ்த்தரமான சித்திரவதைக் கூடங்களைக் கொண்ட ஒரு ஒட்டுக்குழு மனித உரிமை மீறல் குழு அதாவது கொடிய பயங்கரவாதிகளுன்னு தான் அறிக்கை சொல்லுது. நீங்க எல்லாம் புலிகளுக்கு பாடம் எடுக்கிறீங்க. புலிகளுக்கு கெட்ட பெயர் வந்ததே உந்த நாசகாரி ஒட்டுக்குழுக்களை அழிக்கப் போய்தான். இப்ப உலகமே அறியுது ஒட்டுக்குழுக்களின் தார்ப்பரியம். இதில நீங்கள் கரித்தாச்சி.. புலிகளைப் பார்த்து கரிச்சட்டி என்பது தான் சிரிப்புத் தாங்க முடியாமல் செய்கிறது.

முதலில சுயநிலை உணருங்க. சம் சும் கும்பலும் கூட அதனை உணர வேண்டி இருக்குது. !! ;)

அமிர்தலிங்கம்.. உச்சரிக்காதது என்ன இருக்குது. இந்திய இராணுவம் ரப்பர் செல் ரப்பர் ரவை பாவிச்சு தான் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது என்றும் அவர் தான் சொன்னவர். அவ்வளவும் சொந்தச் சுயநலனுக்கு. புலிகள் தான் அதைக் கேட்டார்கள்.. கேட்டுப் போராடினார்கள். உச்சரிப்பதற்கும்.. கொள்கையில் கோட்பாட்டில் வரைந்து கேட்டுப் போராடுவதற்கும் அதற்காக தியாகங்கள் செய்வதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்குண்ணே. அது உண்மையில் கொள்கையோடு நின்று போராடி இருந்தா உங்களுக்கும் விளங்கி இருக்கும். நீங்கள் தான் அப்படிப் போராடவே நினைக்கல்லையே. உங்க போராட்டம் வெளிநாட்டுக்கு எப்ப ஓடிறது என்றிறதில இருந்திருக்கும் போல. ;)

Link to comment
Share on other sites

ஆதாரத்துடன் எழதியது நல்லா சுட்டு விட்டது போலிருக்கு ?

ஆயுதம் வெளியிலும் வாங்கலாம் என்று கோடு போட்டு காட்டியவர் இந்திராகாந்தி ஆனால் ஆயுதம் வரும்போது அவர் உயிருடன் இல்லை .இந்திராகாந்தி சுடப்பட்டது 1984.ஆயுதம் வந்தது 1986.

புளொட் பிழை என்று நானே விட்டு விட்டு வந்த அமைப்பு அது .கருத்து பஞ்சத்தால் இங்கு நாலு பேர்கள் அந்த முத்திரை குத்தியே சுகம் காணுபவர்களை நான் கண்டுகொள்வதில்லை .

புலிகள் செய்த கொலைகளின் பின்னர் தான் ஒட்டுகுழுக்களே உருவானது .

எல்லாம் தலை கீழாகத்தான் எழுதுகின்றீர்கள் .ஓஓ இது பகுதி நேர பிழைப்புதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்துடன் எதனை எழுதினீர்கள்.. அமிர்தலிங்கத்தின் கேடுகெட்ட பொய்களை தானே. இப்பவும் சொல்கிறோம்.. சுயநிர்ணய உரிமை என்பதை ஒரு கோரிக்கையாக வரைந்து வலுப்படுத்தி அதனை அரசியலில் முன்னிறுத்தியது புலிகள் தான். அமிர்தலிங்கம் கிடையாது. சுய நிர்ணய உரிமை பன்னெடுங்காலமாக உச்சரிக்கப்பட்டு வந்தாலும் அதனை வலுவாக முன்னிறுத்தியது புலிகள். முதலில் இதனை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

புளொட்டின் ஆயுதக் கப்பல் பறிமுதல்.. 1982 வாக்கில் நிகழ்ந்தது. 1986 இல் அல்ல.

ஒட்டுக்குழுக்கள் புலிகளை அழிக்க இந்தியாவுடன் இணைந்து படுகொலைகளை ஆரம்பித்த பின் தான் புலிகள் இயக்கமே அவர்களை கட்டுப்படுத்த முடிவெடுத்தது. மீண்டும்.. 1984 - 86 வரை வரலாற்றை மீளப் படியுங்கள்.

தலைகீழாக.. புரிந்து வைத்திருப்பது தாங்கள் தான். நாட்டை விட்டு தாங்கள் ஓடியதே இவற்றில் பல நிகழ்வுகளுக்கு முன்னர். அப்படி இருக்க..??!

புளொட்டை சாராதா போதும்... இப்போதும் புளொட்டுக்கு வால்பிடிக்கும் கருத்துக்களை இட்டு வருகிறீர்கள். அதுவும் சொந்த மக்களை அழிக்க சித்திரவதை முகாம்களை எதிரிக்காக இயக்கும் இன்றைய நிலையிலும் (மே 2009 க்குப் பின்னும்) புளொட்டின் சித்தார்த்தனை ஆராதிக்கும் ஒருவராக கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள். இதில் இருந்து உங்கள் எண்ணம் புலப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தினாலே நிரந்தர அரசியல் தீர்வை எட்டலாம்!: இரா.சம்பந்தன்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோரும்:



 

ஒளிவுமறைவின்றி பெரும்பான்மை சமூகம் ஆட்சேபிக்காத வகையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்படவுள்ளது. 

 

 


 
 
பெரும்பான்மை இனம் ஆட்சேபிக்காத வகையில் ஒரே நாட்டுக்குள் தமிழர் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் நிலை என்றால் என்ன?

சிங்களவர்கள் போடும் பிச்சை என்றுதான் எனக்கு விளங்குகின்றது.

 
அந்தப் பிச்சையை இவர்கள் பாராளுமன்றம் சென்றுதான் வாங்க வேண்டுமா?
 

Link to comment
Share on other sites

ஆதாரத்துடன் எதனை எழுதினீர்கள்.. அமிர்தலிங்கத்தின் கேடுகெட்ட பொய்களை தானே. இப்பவும் சொல்கிறோம்.. சுயநிர்ணய உரிமை என்பதை ஒரு கோரிக்கையாக வரைந்து வலுப்படுத்தி அதனை அரசியலில் முன்னிறுத்தியது புலிகள் தான். அமிர்தலிங்கம் கிடையாது. சுய நிர்ணய உரிமை பன்னெடுங்காலமாக உச்சரிக்கப்பட்டு வந்தாலும் அதனை வலுவாக முன்னிறுத்தியது புலிகள். முதலில் இதனை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

புளொட்டின் ஆயுதக் கப்பல் பறிமுதல்.. 1982 வாக்கில் நிகழ்ந்தது. 1986 இல் அல்ல.

ஒட்டுக்குழுக்கள் புலிகளை அழிக்க இந்தியாவுடன் இணைந்து படுகொலைகளை ஆரம்பித்த பின் தான் புலிகள் இயக்கமே அவர்களை கட்டுப்படுத்த முடிவெடுத்தது. மீண்டும்.. 1984 - 86 வரை வரலாற்றை மீளப் படியுங்கள்.

தலைகீழாக.. புரிந்து வைத்திருப்பது தாங்கள் தான். நாட்டை விட்டு தாங்கள் ஓடியதே இவற்றில் பல நிகழ்வுகளுக்கு முன்னர். அப்படி இருக்க..??!

புளொட்டை சாராதா போதும்... இப்போதும் புளொட்டுக்கு வால்பிடிக்கும் கருத்துக்களை இட்டு வருகிறீர்கள். அதுவும் சொந்த மக்களை அழிக்க சித்திரவதை முகாம்களை எதிரிக்காக இயக்கும் இன்றைய நிலையிலும் (மே 2009 க்குப் பின்னும்) புளொட்டின் சித்தார்த்தனை ஆராதிக்கும் ஒருவராக கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள். இதில் இருந்து உங்கள் எண்ணம் புலப்படுகிறது.

அதிகமாக படித்து படித்து மூளை கலங்கி போச்சு .

ஆயுதம் பிடிபட்ட நாளை "தூங்காத இரவு " என்று திகதி வாரியாக நான் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லை என்று நம்புகின்றேன் .

84-86 நான் அமைப்பில் இருந்த காலம் ஒவ்வொரு நாள் நடந்ததும் பசுமரத்து ஆணியாக மனதில் இருக்கு .எனது வேலைகளில் ஒன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதும் தான் .எமது போரட்ட வரலாற்றில் துரோகத்தின் அத்தியாயம் அப்போ தான் ஆரம்பம் .அதுதான் இவ்வளவு கோவம்.

ஓடிவந்த உங்களுக்கு எதுவும் தெரிய நியாயம் இல்லை .

புளொட் பற்றி நான் எழுதிய பதிவுகளை வாசித்தால் தெரியும் எனது நிலைப்பாடு பற்றி .

Link to comment
Share on other sites

1977 ஆண்டு எதிர்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அண்ணன் அமிரின் முதல் பாராளுமன்ற உரை இது 

"சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக உழைத்து தமிழ் ஈழத்தை அடைவதற்காகவே மக்கள் எம்மை பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் ."

 

உங்கள் மனத்தாங்கல் களுக்காக புலிவாந்தி எடுப்பது உங்களுக்கு மனதில் உள்ள பொறாமையின் வெளிப்பாடு தான் வேறொன்றும் இல்லை . புளொட் மற்றும் தேசவிரோத கும்பல்களை அழிக்க முற்பட்டதால் தான் அவர்கள் பயங்கரவாதியா ? 

சம காமெடி ... சப்பா அலுப்பறை தாங்க முடியல ... என்னது அமீர் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ் ராச்சியம் கேட்டாரா ? எங்கையப்பா இருக்கிறிங்க ... முதலில் வரலாற்றினை சரியாக அறிய வேண்டும் ...

Link to comment
Share on other sites

சுயநிர்ணைய உரிமை என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியுமோ என்னமோ ? யாரும் சொன்னதை கேட்டு தாங்களும் இடைக்கிடை உச்சரித்து பார்த்தார்கள் .

அவர்களின் வாருசுகளின் பதிவுகளை பார்த்தாலே விளங்கும் .

அண்ணன் அமிர் எதிர்கட்சி தலைவராக வந்து பாராளுமன்றதில் ஆற்றிய உரையை விளங்க கூடியவர்கள் வாசிக்கலாம் .இதே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமிர் கனடா அரசியல் அமைப்பு பற்றி குறிப்பிட்டு கியுபெக் மாகாணத்தின் உரிமைகள் பற்றியும் பேசினார் .

அப்ப கனடா பற்றி பெரிதாக எமக்கு எதுவும் தெரியாது .நாங்களெல்லாம் கனடா வாருவோம் என்று யார் நினைத்தார்கள்.

Link to comment
Share on other sites

வழியில் தேங்காயை எடுத்து தெருவில் பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி தான் உள்ளது அமீரின் பித்தலாட்டங்கள் ... 

புலிகள் கொண்ட கொள்கையையும் வீரத்தையும் ...தனது வாய் பேச்சுக்கு மட்டும் பயன்படுத்தியவர் தான் இந்த கேடு கெட்ட அமீர் .... சரி பேசினாலும் பரவாயில்லை இறுதியில் என்ன செய்தார் .. புளொட் கும்பல் மாதிரி முள்ளமாரித்தனம் பண்ணிட்டு ஓட தானே இருந்தவர் ... 

கட்டாயம் கொலை செய்யப்பட வேண்டியவர் ....

Link to comment
Share on other sites

அதன் பலனைத்தான் இப்ப எல்லோருமாக அனுபவித்தார்கள் .

பாவம் மக்கள் பயங்கரவாதிகளுக்கு பயந்து எதுவும் செய்யமுடியாதநிலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை. இது புலிகளின் அரசியல் ஆலோசகர் சொன்ன உள்ளக சுயநிர்ணய உரிமையில் இருந்து சுட்டது. சுயநிர்ணய உரிமைக்கு மக்கள் ஆதரவளித்தால், பிரிந்துபோக விரும்புகின்றோம், தங்களைத் தாங்களே ஆள விரும்புகின்றோம் என்பதுதான் அர்த்தம்.

ஆனால் தாயகம், தேசியம் போன்ற பதங்களைப் பாவித்து சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளை கோபப்படுத்தாமலும், சுயநிர்ணய உரிமை சுதந்திரத்தை பெற்றுத்தரும் என்று தமிழ்மக்களை நம்பவைத்தும் தமது பாராளுமன்றக் கதிரைகளை தக்கவைத்துக்கொள்ளவே கூட்டமைப்பு விரும்புகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தலுக்கு சிலநாட்கள் முன்னர் வெளியிடாமல் இப்பவே வெளியிட்டால், இவர்களின் திட்டங்கள் என்னவென்பதை ஓரளவு சிந்திக்கக்கூடியவர்கள் கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்கள் என்பதால் புத்திசாலிகளைக் கொண்ட கூட்டமைப்பு கடைசிவரை தாங்கள்போகும் பாதையைச் சொல்லமாட்டார்கள். ஆனால் தங்களின் பாதையில் எல்லாரும் பயணிக்கவேண்டும் என்று கேட்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்த அண்ணைமார் 

எப்படி முக்கி தக்கியாவது கூத்தமைப்பை காப்பாற்ற எவ்வளவுபாடு படுகினம் அதுக்கும் புலிகள் தான் இவைக்கு தேவைப்படுகுது(என்னசெய்வது கூத்தமைப்பிட்கே புலிகள் எடுத்து கொடுத்த பெயர் தான் இன்றை வரைக்கும் அரசியல் செய்ய உதவுது) 

 அண்ணைமார்களே  கூத்தமைப்பு கூத்தாடிகள் ஒவ்வொரு நாளும் அடிக்கும் லூட்டிகளை குறைத்தாலே சேதாரத்தை குறைத்துகொள்ளலாம் முடிந்தவரை சம் சும் எதுவும் பேசாமல் இருப்பதே தற்போதைக்கு  சிறந்தது .  விஞ்ஞாபனமா 
அப்படியென்றால் என்ன ...? எனக் கேட்கும் நிலையில் இருக்கு இந்த கூத்தமைப்பு  கூட்டம் ஐக்கிய இலங்கை என்றாலே ஒற்றையாட்சி , ஒற்றையாட்சி என்றாலே சுயநிர்ணயத்தை பற்றி கதைக்க முடியாது விஷயம் முடிஞ்சிது  .....அதுக்கு போய் ஏன் இப்படி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகினம் .
எப்படியோ கடினமான புரியாத தமிழ் சொற்களை எடுத்து விட்டால் முட்டாள் தமிழ் மக்கள் நம்பிவிடுவினம் என்று நினைக்கிறார்கள் போலை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமாக படித்து படித்து மூளை கலங்கி போச்சு .

ஆயுதம் பிடிபட்ட நாளை "தூங்காத இரவு " என்று திகதி வாரியாக நான் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லை என்று நம்புகின்றேன் .

84-86 நான் அமைப்பில் இருந்த காலம் ஒவ்வொரு நாள் நடந்ததும் பசுமரத்து ஆணியாக மனதில் இருக்கு .எனது வேலைகளில் ஒன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதும் தான் .எமது போரட்ட வரலாற்றில் துரோகத்தின் அத்தியாயம் அப்போ தான் ஆரம்பம் .அதுதான் இவ்வளவு கோவம்.

ஓடிவந்த உங்களுக்கு எதுவும் தெரிய நியாயம் இல்லை .

புளொட் பற்றி நான் எழுதிய பதிவுகளை வாசித்தால் தெரியும் எனது நிலைப்பாடு பற்றி .

நீங்கள் இங்கையே யாழில் 1982 இல் புளொட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு ஓடி வந்திட்டதாக எழுதினீர்கள். இப்ப 1986 வரை இயங்கினேன் என்று புதுக்கதை அளக்கிறீர்கள்.

புளொட்டின் ஆயுதக் கப்பல் பிடிப்பட்டது இந்திரா ஆட்சியில் என்பது தெரியும். அதற்கான வரலாற்று சான்றுகள் நூல்களில் படித்திருக்கிறேன். கைவசம் அந்த நூல்கள் இல்லை.

உங்களின் மூளை மாறாட்டமாக இவை இருக்குமோ..?!

புளொட் பற்றி இப்போதும் அனுதாபத்தோடு பதிவிடுபவர் நீங்கள். அவர்கள் இன்று வரை தொடரும் நடத்தும்..ஒட்டுக்குழு.. சித்திரவதை முகாம்கள் பற்றி மூச்சும் விடாதவர்கள் புலிகளை பயங்கரவாதிகள் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை எழுதுவதில் சந்தோசப்படும் ஒரு வகை இறுக்க மனநிலை கொண்டு திரிகிறீர்கள் என்பதும்.. நாம் அறிவோம். உங்கள் மனைவி குறித்தும் இங்கே யாழில் பதிந்திருந்த ஞாபகம். அவரும் உங்களின் நிலைப்பாடுடையவர் என்றும் எழுதி இருந்தீர்கள்.

இத்தலைப்பு அர்ஜூன் பற்றிய பிரச்சாரமாக இடமளிக்காமல்.. வேளை வரும் போது உங்களுக்கு உங்கள் தவறை இனங்காட்டுகிறோம். இப்போதைக்கு இது இப்படியே இருக்கட்டும். !! ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய நிர்ணய உரிமை என்ற பதம் சேர்க்கப்பட்டதற்கான காரணம் உள்ளது.
மக்கள் தங்களுக்குக் கிடைக்காத  உரிமைகளுக்காகப் போராட எப்போதும் தயாராக உள்ளனர்.

ஆகவே தேர்தல் மேடைகளில்..... மக்களின் உரிமைகளுக்காகக் கூட்டமைப்புப் போராடும்.... இந்தத் தேர்தலே எங்களின் இறுதியான போராட்டம்...... அதிகப்படியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து நாடாளு மன்றுக்கு நீங்கள் அனுப்புங்கள். தேர்தலின் பின்னர்....நாங்கள்... உங்கள்....:lol: உரிமைகள் பற்றி..... எங்கள் ஜனாதிபதியுடன்:rolleyes:  பேரம் பேசும் சக்தியே அதுதான் என்று முழங்க..... மக்களும் உரிமைகளை மீட்டுதரப் போகும் கூட்டத்திற்கு வாக்களிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை..... :o:o:o

அண்டு தொடக்கம் இதைத்தானே இவையள் கேக்கினம்....குடுக்கிறானா இல்லையே.:lol:

ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை கேட்டால் இனக்கலவரம்.
தனிநாடு கேட்டால் இன அழிப்பு.

சிங்களவன் நிதானமாகத்தான் எதையும் செய்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயநிர்ணயம் கேட்பது, மிதவாத அரசியல்லா அல்லது தீவிர அரசியல்லா??? 

 
இதுவும் சமஷ்டியும் ஒன்றாகுமா?
 
அப்படித்தான் எனில் அது எப்ப இருந்து?
 
முக்கியமாக மைத்திரிக்கும் தெரியுமா??
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணைய உரிமை என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியுமோ என்னமோ ? யாரும் சொன்னதை கேட்டு தாங்களும் இடைக்கிடை உச்சரித்து பார்த்தார்கள் .

அவர்களின் வாருசுகளின் பதிவுகளை பார்த்தாலே விளங்கும் .

அண்ணன் அமிர் எதிர்கட்சி தலைவராக வந்து பாராளுமன்றதில் ஆற்றிய உரையை விளங்க கூடியவர்கள் வாசிக்கலாம் .இதே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமிர் கனடா அரசியல் அமைப்பு பற்றி குறிப்பிட்டு கியுபெக் மாகாணத்தின் உரிமைகள் பற்றியும் பேசினார் .

அப்ப கனடா பற்றி பெரிதாக எமக்கு எதுவும் தெரியாது .நாங்களெல்லாம் கனடா வாருவோம் என்று யார் நினைத்தார்கள்.

அன்று அமிர் சொன்னதுக்கும் இன்று புலத்தில் இருந்து நாம் சொல்வதற்கும் வித்தியாசமில்லை.2077 இலும் எமது தாயகசந்ததியினர் சுயநிர்ணயத்தைப்பற்றி மேடைகளிலும் இணையத்திலும் கூவிகொண்டிருக்கலாம் ......அது தமிழ்மக்களின் ஜனநாயக உரிமை என்று சொல்லிகொண்டே சிங்களமும் ஏனையோரும் காலம் கடத்துவார்கள்

.....ஆயுதம் ஏந்திய போராளிகள் (சந்ததியார் போன்ற போராளிகள் உள்ளடங்களாக)சொன்னது வெகுசீக்கிரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணயம் கேட்பது, மிதவாத அரசியல்லா அல்லது தீவிர அரசியல்லா??? 

 
இதுவும் சமஷ்டியும் ஒன்றாகுமா?
 
அப்படித்தான் எனில் அது எப்ப இருந்து?
 
முக்கியமாக மைத்திரிக்கும் தெரியுமா??
 
 
 

எப்படி எங்கட ஆக்களிண்ட கிளாஸ் ...
மாணவர்கள் எதனை கேட்பது,என்ன செய்வது  என்பதிலேயே குழம்பிவிட்டனர் .....

இன்னும் 6 மாசம் கிளாஸ் எடுத்தீர்கள் ...என்றால் நீங்கள் யார் என்பதையே மறந்து தெரு தெருவாக ஓட வேண்டியது தான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆண்டு எதிர்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அண்ணன் அமிரின் முதல் பாராளுமன்ற உரை இது 

"சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக உழைத்து தமிழ் ஈழத்தை அடைவதற்காகவே மக்கள் எம்மை பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் ."

 

ஆனால் இப்ப????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லுமா?? மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் இல்லையா?? மின்னம்பலம்.  திமுக உடையதா   ??🤣
    • யூன் 4ம் திக‌தி உண்மையான‌ புள்ளி விப‌ர‌ம் தெரியும்   இது ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ செய்ய‌ப் ப‌ட்ட‌ செய‌லாய் பார்க்கிறேன்...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் காணொளி மூல‌ம் உண்மையை வெளியிட‌லாம்............................. ஏன் நேர‌ம் ஒதுக்கி எழுத்தின் மூல‌ம் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவான்😁....................................
    • இல்லை அண்ணா, இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை. நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும். இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.  
    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.