Jump to content

வட மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலகம்; சம்பிக்கவினால் திறந்துவைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வட மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலகம்; சம்பிக்கவினால் திறந்துவைப்பு
news
இலங்கை மின்சார சபையின்  வடக்கு மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலக கட்டட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. 
DSCF1016%281%29.jpg
 
 
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க , இராஜாங்க அமைச்சர் பாலித ரங்ககே பண்டார , இலங்கை மின்சார சபையின்  தலைவர் விஜயபால மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்கார ஆகியோர் கலந்துகொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். 
 
IMG_7574.jpg
 
 
IMG_7539.jpg
 
DSCF1018%282%29.jpg
 
DSCF1022.jpg
 
DSCF1028%281%29.jpg
 
DSCF1032.jpg
 
DSCF1033.jpg
 
IMG_7550.jpg
 
DSCF1038%281%29.jpg
 
DSCF1047.jpg
 
DSCF1049.jpg
 
DSCF1061.jpg
 
DSCF1063.jpg
 
250 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கான அடிக்கலினை கடந்த 2012 ஆம்  ஆண்டு சம்பிக்க ரணவக்க நாட்டி வைத்திருந்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=731164130307862028#sthash.fjdriH5u.dpuf
இந்த வருடத்திற்குள் யாழ்.குடாவிற்கு 100% மின்சாரம்; உறுதியளித்தார் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்
news
யாழ்.மாவட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 100 % மின்சாரம் கிடைக்கும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். 
 
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின்  வடக்கு மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலக கட்டட தொகுதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.    
 
அவர் மேலும்  தெரிவிக்கையில்,  
 
2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வரும்போது மின்சாரப்பிரச்சினை காணப்பட்டது. சரியாக மின்சாரத்தை வழங்கமுடியாத நிலை காணப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டமும் கடந்தகால யுத்தத்தினால் நிறுத்தப்பட்டு இருந்தது. 
 
எனவே மின்சாரத்தை பெறுவதற்கு அமைத்துத்தந்த யப்பான் நாட்டுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் நன்றிகளைக் கூறுகின்றோம். அத்துடன் இந்த கட்டடத்தை அமைப்பதற்கு நியமித்த பொறியியலாளர் மதிக்கப்பட்ட தொகையினை விட குறைந்த செலவில் இந்த கட்டடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
 
மீதமுள்ள பணத்தை மின்சாரம் இல்லாது வறுமையான கிராமங்களுக்கு வழங்குவதற்காக ஒப்படைத்துள்ளார். கடந்த காலங்களில் 50% மின்சாரமே மக்களுக்கு கிடைத்தது. 
 
இதனால் சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் மின்சாரம் தொடர்ந்தும்  தடைப்பட்டிருந்தது.  எனினும்  தற்போது 90 % வீதமான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
எனினும்  இந்தவருட இறுதிக்குள்  100% மின்சாரம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதேபோல வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும்  முல்லைத்தீவினையும் எதிர்பார்க்கின்றோம்.
 
அத்துடன்  வவுனியாவில் இருந்து மன்னார் ஊடாக புதிய திட்டம் ஒன்றினை செயற்படுத்த எண்ணியுள்ளோம்.
 
மேலும் குறைந்தளவு வருமானம்  பெறும்  மக்களுக்கு இலவச மின்சார இணைப்பினை வழங்குவது என்றும்  தீர்மானம் எடுக்கப்பட்டது. இருப்பினும்  இவ்வருடம் முதல் குறித்த விடயம்  தொடர்பில் புனர்வாழ்வு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.  
 
எனவே தற்போது மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் புனர்வாழ்வு அமைச்சு மற்றும்  ஜனாதிபதியுடன்  கலந்துரையாடி இலவச மின்சார இணைப்பு வழங்கவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=358234130507853672#sthash.ZkkLq4ms.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பா வைக்கினம் அவர்தான் மின்சார சபைக்கு மாப்பிள்ளையா?ஒன்றும் புரியல்ல விளக்கமா சொல்லுங்கப்பா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உப்பிடி எத்தனை கோமாளித்தனம் நடக்கும். பேசாமல் பாத்துக்கொண்டு இருங்கோ, விளக்கம் எல்லாம் கேக்கப்படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உப்பிடி எத்தனை கோமாளித்தனம் நடக்கும். பேசாமல் பாத்துக்கொண்டு இருங்கோ, விளக்கம் எல்லாம் கேக்கப்படாது.

உந்த கம்பன் கழகத்திலும் இப்படியான சேட்டைகள் நடப்பதை கவனித்திருக்கிறேன் அதுதான்..............ஒரு சந்தேகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
250 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கான அடிக்கலினை கடந்த 2012 ஆம்  ஆண்டு சம்பிக்க ரணவக்க நாட்டி வைத்திருந்தார். 

 

யார் குற்றினாலும்

25 கோடி வரவு

100வீத மின்சாரம்

நன்றி  ஐயாக்கள்...........

Link to comment
Share on other sites

250 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கான அடிக்கலினை கடந்த 2012 ஆம்  ஆண்டு சம்பிக்க ரணவக்க நாட்டி வைத்திருந்தார். 

 

யார் குற்றினாலும்

25 கோடி வரவு

100வீத மின்சாரம்

நன்றி  ஐயாக்கள்...........

ந்த பெரிய இன்வாதியானாலும்  சிங்களவனும் நாமும் எமது பிரச்சனைகளை பேசி முடிவெடுப்பது நல்லம், இல்லா விடில் அராபிய வந்தேறு  குடிகளுக்கு நாம் அடிமையாக வேண்டி வரும் நாள் தொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இப்ப நாங்கள் எல்லோரும் ஒன்றுக்கை ஒன்று, புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம்மாளுகளை மருந்துக்கும் காணவில்லை.. பெரிய தலைகள் இல்லை என்று ஒழிச்சிட்டினம் போல..இல்லாட்டி அங்கால போன இங்காலை கதிரைக்கு ஆபத்து என்று பயமோ?? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.