Jump to content

கூட்டமைப்பு தொகுதி பங்கீடு


Recommended Posts


யாழ்ப்பாணம்
தமிழரசுக்கட்சி – 6
ஈபிஆர்எல்எவ் - 2
புளொட் 1
ரெலோ 1


வன்னி
தமிழரசுக்கட்சி – 3
ரெலோ 3
ஈபிஆர்எல்எவ் - 2
புளொட் - 1

மட்டக்களப்பு
தமிழரசுக்கட்சி –5
ஈபிஆர்எல்எவ் - 1
புளொட் 1
ரெலோ 1

அம்பாறை
தமிழரசுக்கட்சி – 6
ஈபிஆர்எல்எவ் - 2
ரெலோ 1
புளொட் 1


திருகோணமலை
அதிக ஆசனம் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனம்..

தமிழரசுக் கட்சி - 3

ஈபிஆர்எல்எவ் - 1
ரெலோ 1
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாரி முற்றாயீட்டுது, இனிக் கூறை எடுக்கப் போவேண்டியான் ?

யாழில் - ஈபி - சுரேசும் அவரின் தம்பி சர்வேசும்.

டெலோ - சிறீகாந்தா

புளொட் - சித்தர்

தமிழரசு - மாவை, சிறீதரன், சும், சரா

மிச்ச 2 பேர் யார்?

 

உங்கள் கணிப்புக்களையும் பதியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு வவுனியாவில் முடிவானது
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 03:03.16 PM GMT ]

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 10 இடங்களில் 6 இடங்களில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள், டெலோ 1 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,

வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலையில் தமிழரசுக்கட்சி 4 இடங்களுக்கும், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டதுள்ளது.

மட்டக்களப்பில் 8 இடங்களில் தமிழரசுக்கட்சி 5 இடங்களிலும், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் தலா 1 இடங்களிலும், அம்பாறையில் 10 இடங்களில் 5 இடங்கள் தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள் டெலோ 2 ஆசனம் புளொட் 1 ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/show-RUmtyHTaSUeuzI.html

Link to comment
Share on other sites

ஒரு சீட் ஆவது கொடுத்திருக்கலாம் .பாவங்கள் .

Link to comment
Share on other sites

ஒரு சீட் ஆவது கொடுத்திருக்கலாம் .பாவங்கள் .

அவை தான் கறை படியாத கைக் காறர் ஆச்சே! ஆயுதம் தூக்கினவைக்கு எப்படி சீற் குடுப்பினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவை தான் கறை படியாத கைக் காறர் ஆச்சே! ஆயுதம் தூக்கினவைக்கு எப்படி சீற் குடுப்பினம்..

அவருக்கு கையும் ஓடல

காலும் ஓடல...

அவைக்கு 3 சீற் கிடைத்திருக்கே..

ஆச்சரியம் அவருக்கே

என்னடா சனம் இன்னுமா எங்களை நம்புது......??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே வரை அதன் பின்னர் வரை ஒட்டுக்குழுவாக இருந்து சொந்த மக்களைப் படுகொலை செய்த புளொட்டுக்கு 4 இடம் வழங்கி இருக்கிறது சம் சும் கும்பல். இதில இரத்தக்கறை படியாத அரசியல் புடுங்கினமாம்.

புளொட்.. ஈபிடிபிக்கு நிகராக.. கருணா பிள்ளையான் குழுக்களுக்கு நிகராக.. சர்வதேச மன்னிப்புச் சபை..மற்றும் மனித உரிமை அமைப்புக்களால் மானுடத்துக்கு எதிரான படுகொலைகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு ஒட்டுக்குழு அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிலும் மாகாண சபை உறுப்பினராக இருக்கும் சித்தார்த்தனுக்கு என்ன தேவைக்கு இப்ப எம் பி பதவி..?! முன்னர் வவுனியாவில் இருந்து கொண்டு ஆயுத முனையில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்.. எம் பி பதவியாகி இவர் என்னத்தை வெட்டிக் கிழிச்சவர். அது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மே 2009 வரை சேர மறுத்து வந்தவர்களில் புளொட் கொலைக்காரக் கும்பலினர் முக்கியமானவர்கள். அவர்களுக்கு இன்று சம்பந்தன் என்பவர் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு வந்து 4 தொகுதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

ஆனால் சிங்கள அரசால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தமிழ்  தேசியக் கூட்டமைப்பில் கூட இடமில்லையாம்..??!

சம்பந்தனின் இந்த பச்சோந்தித் தனம்.. யாரை திருப்திப்படுத்த..?!

ஒது நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஒரு ஆபத்தான அரசியலுக்கான காள்கோளாகவே இருக்கப் போகிறது. தமிழ் மக்கள் அவர்கள் இந்த உலகில் எங்கிருந்தாலும்.. இந்த அரசியல் சித்து விளையாட்டின் தீமை உணர்ந்து விரைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

LOCKED AWAY: SRI LANKA’S SECURITY DETAINEES  Amnesty International March 2012   Index: ASA 37/003/2012  33  Intelligence detained, tortured and killed pris oners they suspected of ties to the  LTTE – including civilians who he said had  no LTTE associations.  At least two of  the victims he knows to have been killed were minors, 15 and 17 years old. He  accused the Navy Intelligence in Trincomalee of  operating a secret detention facility  within the Navy dockyards – a secured area  that includes the ruins of British and  Dutch fortifications.  A copy of a letter smuggled out of a detention camp dated 1 February 2010  indicated that the writer was being held incommunicado and in a secret location  and that detainees were beaten for attempting to communicate with the outside  world.  The letter, which was addressed to  the detainee’s family, urged them not to  try to locate him as he and fellow  detainees were being kept hidden. 81 In August 2009, a confidential source  with links to Sri Lankan military  intelligence provided Amnesty International  with details of several places where  enforced disappearances, torture, and extrajudicial killings were alleged. These  included camps where the Sri Lankan au thorities acknowledged holding alleged  LTTE detainees as well as facilities used principally for interrogation including the  211 Brigade Headquarters in Vavuniya, and the paramilitary organization PLOTE’s  detention centre in Vavuniya, which the source said contained a small torture  chamber.

http://files.amnesty.org/archives/asa370032012eng.pdf

Link to comment
Share on other sites

இந்தத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக , ஒரே அணியில் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என்ற எதிபார்ப்பு என்னுள் இருந்தது, ஆனால் கடைசியில் எல்லாம் பாழ்............., மிகவும் கவலையான விடயம் 

இந்நேரத்தில் முன்னின்று  இணைவுக்காக குரல் கொடுப்பார்கள் என எதிர் பார்க்கப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன், மன்னார் ஆயர் போன்றோரின் மெளனமும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..... தாயகத்திலுள்ள  புத்திஜீவிகளுக்குக் கூட ஒற்றுமையை வலியுருத்தும் வலிமையில்லாது போனது ஏன்?

உங்களால் கொள்கைக்காக இணைய முடியாவிட்டாலும் பரவாயில்லை வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக என்றாலும் இணைந்து இருக்கலாம், தேர்தலின் பின்னர் தனித்தனியே செயற்பட்டிருக்கலாம்.....,

இம்முறையும் திருகோணமலைக்கான போனஸ் ஆசனம் சிங்களவனுக்கே போகப் போகிறது........, என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை...

குறைந்தது ஒரு மேலதிக தேசிய பட்டியல் MPஆவது பெற்றிருக்கலாம்..........

எல்லாவற்றையும் விட மிகக் கவலை தருவது, ஒற்றுமையை வலியுருத்த யாழ் இணயக்கருத்துக் களத்தில் கூட ஒருவரும் முன் வராதது.......

பிளவுகள் தந்த இழவுகள் போதாதா? இன்னும் இன்னும் பிளவுகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சீட் ஆவது கொடுத்திருக்கலாம் .பாவங்கள் .

 உங்களைப் போன்றோர்  தம் இன மொழி அழிவிலும் தம் உடன்பிறப்புகளின் அழிவிலும் சுய இன்பம் காண்பவர்கள் அல்லவா.

Link to comment
Share on other sites

இந்தத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக , ஒரே அணியில் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என்ற எதிபார்ப்பு என்னுள் இருந்தது, ஆனால் கடைசியில் எல்லாம் பாழ்............., மிகவும் கவலையான விடயம் 

இந்நேரத்தில் முன்னின்று  இணைவுக்காக குரல் கொடுப்பார்கள் என எதிர் பார்க்கப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன், மன்னார் ஆயர் போன்றோரின் மெளனமும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..... தாயகத்திலுள்ள  புத்திஜீவிகளுக்குக் கூட ஒற்றுமையை வலியுருத்தும் வலிமையில்லாது போனது ஏன்?

உங்களால் கொள்கைக்காக இணைய முடியாவிட்டாலும் பரவாயில்லை வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக என்றாலும் இணைந்து இருக்கலாம், தேர்தலின் பின்னர் தனித்தனியே செயற்பட்டிருக்கலாம்.....,

இம்முறையும் திருகோணமலைக்கான போனஸ் ஆசனம் சிங்களவனுக்கே போகப் போகிறது........, என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை...

குறைந்தது ஒரு மேலதிக தேசிய பட்டியல் MPஆவது பெற்றிருக்கலாம்..........

எல்லாவற்றையும் விட மிகக் கவலை தருவது, ஒற்றுமையை வலியுருத்த யாழ் இணயக்கருத்துக் களத்தில் கூட ஒருவரும் முன் வராதது.......

பிளவுகள் தந்த இழவுகள் போதாதா? இன்னும் இன்னும் பிளவுகளா?

ஒற்றுமையாக இல்லை என சொல்ல முடியாது.

தாயகத்து மக்கள் தெளிவாக உள்ளார்கள் அவர்களின் முடிவை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருந்தாலே போதும்.

ஒற்றுமையை வலியுறுத்தி பயப்பட்டதுகளையும் ஏளனம் செய்யும் இந்த கள உறுப்பினர்களின் ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்று இங்குள்ள சிலர் தங்கட விசமங்களே தான் அந்த மக்களின் தெளிவு என்று நினைக்கிறார்கள்.

அண்மையில் தாயகத்தில் இருந்து வரும்.. ஆய்வாளர்களின் கருத்துப்படி பார்த்தால் கூட மக்கள்.. ஊடகவியலாளர்கள்.. மூத்த அரசியல் ஆய்வாளர்கள் எல்லாமே கூட்டமைப்பின் இன்றைய அணுகுமுறை குறித்து மிகக் கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக மைத்திரி அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு.. தமிழ் மக்களின் பிரச்சனையை.. முன்னாள் போராளிகளின் பிரச்சனையை.. முன்னிறுத்தினால்.. மகிந்தவுக்கு ஆதரவு பெருகும் என்ற பூச்சாண்டி.. என்று பல.

அண்மையில் கொழும்பில் இருந்து லண்டன் SOAS பல்கலைக்கழக ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த தமிழ் பேராசிரியர் உட்பட பலரின் கருத்தும்.. மக்களின் கருத்தை பிரதிபலிக்காமல்.. இங்கு சுற்றித் திரியும் சிலரின் கருத்து தான் மக்களின் தெளிவான நிலைப்படாப் போச்சுதாம்.

சும்மா போவியளா.. போய் புள்ள குட்டிக்கு பாலூட்டுங்க. அதுங்க வளர்ந்து உங்க விசமத்தை அடுத்த சந்ததிக்கு கடத்த உதவும். ;)

Link to comment
Share on other sites

எனக்கும் தெரிந்த ஒரு அமைப்போடு பெசும் பொழுது அவர்கள் புலம்பெயர் மக்கள்தான் தெளிவாம்.

தாயக மக்கள் வெறும் மந்தைகளாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக இல்லை என சொல்ல முடியாது.

தாயகத்து மக்கள் தெளிவாக உள்ளார்கள் அவர்களின் முடிவை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருந்தாலே போதும்.

ஒற்றுமையை வலியுறுத்தி பயப்பட்டதுகளையும் ஏளனம் செய்யும் இந்த கள உறுப்பினர்களின் ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை.

தாயக மக்கள் தெளிவாக உள்ளார்கள்.... என்று, எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள் சூறாவளி.
தமிழ் தேசிய  கூட்டமைப்பிற்கு விழுந்த வாக்குகள், வேறு தெரிவில்லாமல் வாக்களிக்கப் பட்டவை என்பதை, 
கூட்டமைப்பின்  கொள்கைக்காக விழுந்த வாக்குகள் என்று, நீங்கள் தப்புக் கணக்கு போடக் கூடாது.
இந்த நிலை, நீண்ட காலம் நீடிக்காது. 

 

Link to comment
Share on other sites

தாயகத்து மக்கள் தெளிவாக உள்ளார்கள்

தாயகத்து மக்கள் தெளிவாக உள்ளார்களா? எங்கென்னவோ, நாம் யாழ் இணையத் தளத்தின் புதிய வடிவமைப்பினைப் பார்த்து முழுசிகொண்டு நின்றது போல்.........  அவர்களும் அங்கு அப்படி நிற்பது போல் தான் உள்ளது  

11542110_1171071109577050_36800824259878

Link to comment
Share on other sites

எனக்கும் தெரிந்த ஒரு அமைப்போடு பெசும் பொழுது அவர்கள் புலம்பெயர் மக்கள்தான் தெளிவாம்.

தாயக மக்கள் வெறும் மந்தைகளாம்.
 

சீ..ஆ..,  ஆர் அந்த அமைப்பு என்று கூறமுடியுமோ? இது நீங்களா வரைந்த அமைப்பு மாதிரி கிடக்கு

Link to comment
Share on other sites

தாயக மக்கள் தெளிவாக உள்ளார்கள்.... என்று, எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள் சூறாவளி.
தமிழ் தேசிய  கூட்டமைப்பிற்கு விழுந்த வாக்குகள், வேறு தெரிவில்லாமல் வாக்களிக்கப் பட்டவை என்பதை, 
கூட்டமைப்பின்  கொள்கைக்காக விழுந்த வாக்குகள் என்று, நீங்கள் தப்புக் கணக்கு போடக் கூடாது.
இந்த நிலை, நீண்ட காலம் நீடிக்காது. 

 

உங்களை போல எனக்கு திரையருங்கு உரிமையாளர், ரீக்கடை உணர் சந்தை வியாபாரிகளோடு தொடர்பு இல்லை.

நான் சொவதேல்லாம் வெறும் குத்து மதிப்புத்தான், கூட்டமைப்புக்கு போட்ட வாக்குகள் வேற வழியில்லாமல் போட்டது என்று நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

எந்த நிலையும் நீடிக்காது அதுதான் வரலாறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போல எனக்கு திரையருங்கு உரிமையாளர், ரீக்கடை உணர் சந்தை வியாபாரிகளோடு தொடர்பு இல்லை.

நான் சொவதேல்லாம் வெறும் குத்து மதிப்புத்தான், கூட்டமைப்புக்கு போட்ட வாக்குகள் வேற வழியில்லாமல் போட்டது என்று நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

எந்த நிலையும் நீடிக்காது அதுதான் வரலாறு. 

மீண்டும்.... "சேம் சைட் கோல்"  அடிக்கிறார்கள்......
திரு. சூறாவளி அவர்களே.... 
கறுப்பு எழுத்தில், நீங்கள் எழுதி  உள்ளதை.... மீண்டும், வாசித்துப் பார்க்கவும்.
டிஸ்கி; (எனக்கு, யாழ்.களத்தை.... வாசிக்க, சரியான  தமாசாய் இருக்கு.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முன் கூட்டமைபுக்கு 180 பாகை எதிரான ததேமமு இருக்கு. அதை தேத பொறுக்கி எடுத்தாக்கள் வழிநடத்தீனம்.

 

 இப்பவும் மக்கள் வழியில்லாமல் கூட்டமைப்புக்கு போடீனம் என்பது ஏற்புடையதல்ல.

மக்கள் தெளிவா உங்கள் தீவிர தேசிய அரசியலுக்கு பட்டை நாமம் போடுவார்கள் 18 ஆகஸ்டு வரை பொறுக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப  இனிக் கோவிந்தா கோவிந்தா தானா? :D

Link to comment
Share on other sites

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியா?

இலங்கையின் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் தொகுதிப் பங்கீடு, தமிழரசுக் கட்சி தவிர்த்த பிற கட்சிகளால் சுமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.


null
தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லையென்றாலும் ஒற்றுமைக்காக இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாக கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்த முடிவுகள் ஒரு கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டதாகத் தெரிவதாகவும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இதேவேளை மாகாண சபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்தத் தேரதலில் போட்டியிடுவதற்குத் தடையேற்படுத்தும் வகையில் எந்த முடிவும் கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களில் சிலர் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
ப்ளொட்டின் தலைவரும் வடமாகாண சபையின் உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், டெலோ கட்சியின் முக்கியஸ்தருமாகிய ஜனா ஆகியோரும் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150707_tna_seat_sharing

Link to comment
Share on other sites

கூட்டமைப்பில் புளொட் சார்பில் யாழ்ப்பாணத்தில் சித்தார்த்தன்; மட்டக்களப்பில் வியாழேந்திரன் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அதன் தலைவர் த.சித்தார்த்தனும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சதாசிவம் வியாழேந்திரனும் போட்டியிடுவதற்கு புளொட் அமைப்பின் மத்திய குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. புளொட் அமைப்பின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. அந்தக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான த.சித்தார்த்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் த.சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சதாசிவம் வியாழேந்திரன் (அமலன் மாஸ்ரர்) ஆகிய இருவரும் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கி இறுதிசெய்யப்பட்டுள்ளது. வன்னி, திருகோணமலை, அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் பொருத்தமான வேட்பாளரை கட்சித் தலைவரே (த.சித்தார்த்தனே) தீர்மானிப்பதற்கும் மத்திய குழு அனுமதி வழங்கியுள்ளது.

http://www.malarum.com/article/tam/2015/07/07/10893/கூட்டமைப்பில்-புளொட்-சார்பில்-யாழ்ப்பாணத்தில்-சித்தார்த்தன்-மட்டக்களப்பில்-வியாழேந்திரன்-.html#sthash.hKSh9Op7.dpuf

 

Link to comment
Share on other sites

TNAயின் மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியல்.?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று புர்த்தியாகிவிடுமெனவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேட்பாளர் மனு  தாக்கல் செய்யப்படுமெனவும் தெரியவருகிறது..

 பட்டியலில் இடம்பெற்றுள்ளோர்.


பொன் செல்வராசா- இலங்கை தமிழரசுக்கட்சி 


பா.அரியநேத்திரன் இலங்கை தமிழரசுக்கட்சி 


சீ.யோகேஸ்வரன் இலங்கை தமிழரசுக்கட்சி 


ஞா.ஸ்ரீநேசன் இலங்கை தமிழரசுக்கட்சி (பிரதிக் கல்விப்பணிப்பாளர்)


கோ.கருணாகரன் ரெலோ (மாகாணசபை உறுப்பினர்)


இரா.துரைரெட்ணம் ஈ பி ஆர் எல் எப் (மாகாணசபை உறுப்பினர்)

ச.வியாழேந்திரன் புளொட் (ஆசிரியர்) 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121784/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

பாரா­ளு­மன்­றத்­துக்­கான தேர்தல் களம் சூடு பிடித்­தி­ருக்­கின்ற நிலையில் இம்­முறை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வேட்­பு­மனு நாளை வெள்ளிக்­கி­ழமை மாவட்ட செயலக­த்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. இந்த நிலை­யிலும் கூட இன்­னமும் வேட்­பாளர் பட்­டியல் சரி செய்தல் நிறை­வ­டைந்­து­வி­ட­வில்லை என்றே தெரி­கி­றது.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில், முன்னாள் எம்­.பி.க்­க­ளான பா.அரி­ய­நேத்­திரன், பொன் செல்­வ­ராசா, சீ.யோகேஸ்­வரன் ஆகிய மூவரும் போட்­டி­யி­டு­கின்­றனர். அத்­துடன், மட்­டக்­க­ளப்பு மேற்கு கல்வி வல­யத்தின் பிரதிக் கல்விப் பணிப்­பாளர் ஜீ.ஸ்ரீநேசன் தமி­ழ­ர­சுக்­கட்சி சார்­பாகப் போட்­டி­யி­டு­கிறார். அதே நேரம், ரெலோ சார்பில் மாகாண சபை உறுப்­பி­னரான கோவிந்தன் கரு­ணா­கரம், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் ஆர்.துரை­ரெட்­ணமும், புளொட் அமைப்பின் சார்­பாக மட்­டக்­க­ளப்பில் தனியார் கல்வி நிறு­வக ஆசி­ரி­ய­ரான எஸ்.எஸ்.அமலும் களமிறங்கவுள்ள அதேவேளை இன்னுமொருவரை தெரிவு செய்வதில் இழுபறி நிலவுகிறது. இந்­தத்­தீர்­மானம், மட்­டக்­க­ளப்புத் தொகு­தியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவும், கிறிஸ்­த­வர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­தி­ருப்­ப­த­னையே அதிகம் பேர் விரும்­பு­வ­தா­கவும் தெரி­கி­றது.

இதற்­கி­டையில், கிறிஸ்­த­வர்­களும் மட்­டக்­க­ளப்புத் தொகு­தியைச் சேர்ந்­த­வர்­களும் தொடர்ச்­சி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினால் புறக்­க­ணிக்கப்­பட்டு வரு­வ­தற்கு மற்­று­மொரு உதா­ரணம் இம் முறை தேர்­த­லி­லும் நிக­ழ­வி­ருப்­ப­தாக மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தமி­ழ­ர­சுக்­கட்­சி­யிடம் விண்­ணப்­பித்த வாக­ரையைச் சொந்த இட­மா­கக்­கொண்ட மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த கிறிஸ்­த­வரும் ஆரம்­ப­காலம் முதல் தமிழ் தேசிய அர­சி­யலில் நின்று செயற்­ப­டு­ப­வ­ரு­மான ஆ.கி.பிரான்சிஸ் போட்­டி­யி­டு­வ­தற்­காக அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்ற கேள்வி ஒன்று மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­த­வர்கள் மத்­தியில் எழுந்­தி­ருக்­கி­றது.

இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லா­ளரும் கிழக்­கு­மா­காண விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ஜ­சிங்­கத்­திடம் பிரான்சிஸ் விண்ணப்பம் கைய­ளித்­தி­ருந்தார். இதன் பிர­திகள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை. சேனா­தி­ராஜா, தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் ஆக­யோ­ருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

http://www.virakesari.lk/articles/2015/07/09/வேட்பாளர்-பட்டியலை-பூர்த்தி-செய்யாதுள்ள-கூட்டமைப்பு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.