Jump to content

ஆஷஸ் டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

Rashid, Finn in England first Test squad

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அடில் ரஷித், ஸ்டீவன் பின் வாய்ப்பு பெற்றனர்.

இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூலை 8ல் கார்டிப் நகரில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் அறிமுக சுழற்பந்துவீச்சாளராக அடில் ரஷித், 27, சேர்க்கப்பட்டார். இவர், இதுவரை 11 ஒருநாள், 6 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பின், 26, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 23 டெஸ்டில் விளையாடிய இவர், கடைசியாக 2013ல் நாட்டிங்காமில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். மீதமுள்ள 11 வீரர்கள் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றவர்கள். இத்தொடரின் போது காயமடைந்த கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கட் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இங்கிலாந்து அணி விவரம்: அலெஸ்டர் குக் (கேப்டன்), ஆடம் லித், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், மார்க்வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டீவன் பின், அடில் ரஷித்.

http://sports.dinamalar.com/2015/07/1435769414/RashidFinninEnglandfirstTestsquad.html

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

மிட்செல் ஜான்சன் எவ்வளவு வேகம் வீசுவார்? - கேட்டறிந்த இளவரசர் சார்லஸ்

 
 
 
பிரின்ஸ் சார்லஸ், ஆஸ்திரேலிய வீரர்களுடன் உரையாடுகிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.
பிரின்ஸ் சார்லஸ், ஆஸ்திரேலிய வீரர்களுடன் உரையாடுகிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் நாளை கார்டிஃபில் தொடங்குவதை அடுத்து இளவரசர் சார்லஸ், ஆஸ்திரேலிய வீரர்களை சந்தித்தார்.

ஸ்வாலெக் ஸ்டேடியத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இளவரசர் சார்லஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிடம் சிறிது நேரம் பேசினார்.

குறிப்பாக மிட்செல் ஜான்சனைப் பற்றியே அவர் அதிகம் கேட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

அவருடன் உரையாடிய பிறகு ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன் கூறும்போது, “அவர் எங்களைச் சந்தித்தது மகிழ்ச்சிகரமாக உள்ளது. மிட்செல் ஜான்சனைப் பற்றி அதிகம் விசாரித்தார். அவர் எவ்வளவு வேகம் வீசுவார் என்று கேட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்த்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/மிட்செல்-ஜான்சன்-எவ்வளவு-வேகம்-வீசுவார்-கேட்டறிந்த-இளவரசர்-சார்லஸ்/article7395818.ece

Link to comment
Share on other sites

ஆஷஸ் முதல் டெஸ்ட்: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்

 
குக், மொயீன் அலி. | கோப்புப் படம்: ஏ.எப்.பி.
குக், மொயீன் அலி. | கோப்புப் படம்: ஏ.எப்.பி.

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

கார்டிப்பில் இன்று மேகமூட்டம், குளிர்காற்று, புதிய பிட்ச் சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய அலிஸ்டர் குக் முடிவெடுத்திருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

இங்கிலாந்து அணி: குக், லித், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆஸ்திரேலிய அணி: வார்னர், ராஜர்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மைக்கேல் கிளார்க், ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன், பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், நேதன் லயன்.

குக். லித் களமிறங்கியுள்ளனர். மிட்செல் ஸ்டார்க் தொடங்கியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-முதல்-டெஸ்ட்-டாஸ்-வென்று-இங்கிலாந்து-பேட்டிங்/article7399169.ece

Link to comment
Share on other sites

ஆஷஸ் முதல் டெஸ்ட் உணவு இடைவேளை: இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள்

 
  • இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், நேதன் லயன் பந்தில் பிராட் ஹேடினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். | படம்: ராய்ட்டர்ஸ்.
    இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், நேதன் லயன் பந்தில் பிராட் ஹேடினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • இங்கிலாந்து தொடக்க வீரர் ஆடம் லித், கொடுத்த கேட்சைப் பிடிக்கும் வார்னர். | படம்: ராய்ட்டர்ஸ்.
    இங்கிலாந்து தொடக்க வீரர் ஆடம் லித், கொடுத்த கேட்சைப் பிடிக்கும் வார்னர். | படம்: ராய்ட்டர்ஸ்.

கார்டிப் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய ஆஷஸ் தொடர் முதல் டெஸ் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

ஜோ ரூட் 33 ரன்களுடனும், கேரி பேலன்ஸ் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

43/3 என்று சரிவு முகம் காட்டிய நிலையில் ஜோ ரூட் ஒரு சிறு எதிர்த்தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுக்க 4-வது விக்கெட்டுக்காக 51 பந்துகளில் 45 ரன்கள் விரைவு கதியில் சேர்க்கப்பட்டது.

ஆஷஸ் அறிமுகப் போட்டியில் ஆடும் ஜோஷ் ஹேசில்வுட் தனது 6-வது பந்தில் எதிரணி ஆஷஸ் அறிமுக வீரர் ஆடம் லித் விக்கெட்டைச் சாய்த்தார்.

லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆன பந்தை லெக் திசையில் திருப்ப முயன்றார் லித் ஆனால் பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு கல்லியில் டேவிட் வார்னருக்கு தாழ்வான கேட்ச் ஆனது.

2 மைடன் ஓவர்களுக்குப் பிறகு மிட்செல் ஸ்டார்கை எடுத்து விட்டு, கதீட்ரல் சாலை முனையில் மிட்செல் ஜான்சன் கொண்டு வரப்பட்டார். இவர் பந்துகளை நன்றாக எழும்பச் செய்தார். ஆனால் வேகம் இருக்க கட்டுப்பாடு இல்லாததால் சில பவுண்டரி பந்துகளும் விழுந்தன, குறிப்பாக ஜோ ரூட் இவரை அருமையாக ஆடினார். மிட் ஆஃபில் அடித்த டிரைவ் உண்மையில் அருமையான ஷாட் ஆகும். ஜான்சன் 6 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

மைக்கேல் கிளார்க், வீரர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் கேப்டன் அல்ல. 10-வது ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயனைக் கொண்டு வந்தார்.

நிறைய முன்னாள் வீரர்கள் நேதன் லயனை இங்கிலாந்து வீரர்கள் சாத்தியெடுக்க வேண்டும் என்றனர், ஆனால் அலிஸ்டர் குக்கிற்கு அது சரியான ஆலோசனையாகப் படவில்லை போலும். நேதன் லயனின் 14 தொடர் டாட் பால்களுக்குப் பிறகு குக் ஒரு கட் ஷாட் ஆட முயல எட்ஜ் ஆகி பிராட் ஹேடினிடம் கேட்ச் ஆனது. குக் 20 ரன்களில் வெளியேறினார்.

இயன் பெல் 1 ரன் எடுத்து மிட்செல் ஸ்டார்க்கின் ஃபுல் லெந்த் ஸ்விங் பந்துக்கு பிளம்ப் எல்.பி.ஆனார். அவரது மோசமான பார்ம் தொடர்கிறது.

கடந்த 9 இன்னிங்ஸ்களில் இயன் பெல்லின் ஸ்கோர் இதோ: 11, 1, 0, 0, 1, 29, 12, 1, 1.

ஜோ ரூட் களமிறங்கி ஸ்டார்க் பந்தில் கால்காப்பில் வாங்க, பலத்த முறையீடு அவரது மட்டையின் உள்விளிம்பில் பட்ட பந்தினால் அவுட் ஆக மாறவில்லை. மீண்டும் ஹேடின் ஒரு எட்ஜ் கேட்சை ரூட்டுக்கு கோட்டை விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் ஆடிய ஷாட்கள் அபாரமானது. ஆக்ரோஷமான கட் ஷாட்களும் அருமையான டிரைவ்களும் ரூட்டின் பவுண்டரிகளில் அடங்கும்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-முதல்-டெஸ்ட்-உணவு-இடைவேளை-இங்கிலாந்து-3-விக்கெட்-இழப்புக்கு-88-ரன்கள்/article7399558.ece

Link to comment
Share on other sites

பிராட் ஹேடின் நழுவவிட்ட கேட்சும்; ஜோ ரூட்டின் அபார சதமும்

 
 
  • ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் கார்டிப்பில் சதம் எடுத்த ஜோ ரூட். | படம்: ராய்ட்டர்ஸ்.
    ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் கார்டிப்பில் சதம் எடுத்த ஜோ ரூட். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • ஸ்டார்க் பந்தில் ஜோ ரூட்டுக்கு கேட்சை விட்டவுடன் பிராட் ஹேடினின் ரியாக்‌ஷன். | படம்: ராய்ட்டர்ஸ்.
    ஸ்டார்க் பந்தில் ஜோ ரூட்டுக்கு கேட்சை விட்டவுடன் பிராட் ஹேடினின் ரியாக்‌ஷன். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 118 பந்துகளில் சதம் அடித்து இங்கிலாந்து அணியை 43/3 என்ற நிலையிலிருந்து மீட்டுள்ளார்.

ஜோ ரூட் களமிறங்கி 2-வது பந்தில் எட்ஜ் செய்ய கேட்சை பிராட் ஹேடின் கோட்டைவிட்டார். இதன் பலனை ஆஸ்திரேலியா தற்போது அனுபவித்து வருகிறது. அப்போது அந்தக் கேட்சை ஹேடின் பிடித்திருந்தால் இங்கிலாந்து இந்நேரத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும். குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து இங்கிலாந்தை மீட்ட பெருமை பிராட் ஹேடினையே சாரும்.

உணவு இடைவேளைக்குப் பிறகு தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியாவினால் ஜோ ரூட், கேரி பேலன்ஸ் ஆகியோரை வீழ்த்த முடியவில்லை. 88/3-லிருந்து 190/3 என்று இங்கிலாந்து உயர்ந்தது.

நேதன் லயன் பந்தில் ஒரு முறை ஸ்வீப் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார் ரூட். கடும் முறையீடு எழுந்தது நடுவர் நாட் அவுட் என்றார். அப்போது கேப்டனாக இருந்த ஸ்மித் ரிவியூ செய்தார், பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகியிருந்தது, எனவே விதிமுறைகளின் படியே நாட் அவுட். ஆனால் பந்து ஸ்டம்ப்க்ளை தாக்கியது. ஆனால் லெக் ஸ்டம்புக்கு வெளியே ரவுண்ட் த விக்கெட்டில் பிட்ச் ஆனதால் நாட் அவுட் ஆனது.

அதன் பிறகு ரூட் அற்புதமான சில ஷாட்களை ஆடினார். அரைசதத்தை 56 பந்துகளில் எடுத்த ரூட், தேநீர் இடைவேளையின் போது 93 ரன்கள் எடுத்திருந்தார்.

கேரி பேலன்ஸ், திருப்திகரமாக ஆடவில்லை என்றாலும் அவர் அவுட் ஆகாமல் ஆடியதால் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 39 ஓவர்களில் 153 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். ஜான்சனின் ரவுண்ட் த விக்கெட் பவுன்சரில் இருமுறை பந்து மட்டையில் பட்டு எங்கு சென்றது என்பது பேலன்ஸுக்கே தெரியவில்லை. ‘பேலன்ஸ்’ தவறிவிட்டார்.

கேரி பேலன்ஸ் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு பந்தை ஆங்கிளாக உள்ளே கொண்டு வந்தார். பிளிக் ஆட முயன்று தோல்வியடைய பந்து கால்காப்பைத் தாக்க தர்மசேனா அவுட் கொடுத்தார்.

அதன் பிறகு 56-வது ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீச ஓவர் பிட்ச் பந்தை ஸ்கொயர் டிரைவ் செய்து பவுண்டரி மூலம் தனது 7-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 118 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் அவர் சதம் எடுத்தார். சதம் எடுத்ததை கொண்டாடும் விதமாக அற்புதமான ஒரு நேர் டிரைவை அதே ஓவரில் அடித்தார்.

பேலன்ஸ் ஆட்டமிழந்ததையடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார், ஜான்சன் வீசிய ஆஃப் திசை பவுன்சரை ஹூக் செய்ய டாப் எட்ஜ் நேராக பந்தை சிக்சருக்கு கொண்டு சென்றது. அவர் தற்போது 14 ரன்களுடனும், ஜோ ரூட் 115 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இங்கிலாந்து இன்று இன்னமும் 30 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/பிராட்-ஹேடின்-நழுவவிட்ட-கேட்சும்-ஜோ-ரூட்டின்-அபார-சதமும்/article7399890.ece

Link to comment
Share on other sites

ஆஷஸ்: இங்கிலாந்து 430 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

  • அதிரடியாக ஆடிய மொயீன் அலி ஷாட் ஆடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.
    அதிரடியாக ஆடிய மொயீன் அலி ஷாட் ஆடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.
  • 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க். | படம்: ஏ.எஃப்.பி.
    5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க். | படம்: ஏ.எஃப்.பி.

கார்டிப்பில் நடைபெறும் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 2-ம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.

343/7 என்ற நிலையில் மொயீன் அலி 26 ரன்களுடனும் ஸ்டூவர் பிராட் தனது கணக்கைத் தொடங்காமலும் இன்று களமிறங்கினர். இருவரும் இணைந்து 52 ரன்களை துரித கதியில் 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

26 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 எடுத்த பிராட், நேதன் லயன் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று ஹேடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மொயீன் அலி மிகச் சுதந்திரமாக விளையாடி 88 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 14 ஓவர்களில் 87 ரன்கள் இன்று சேர்க்கப்பட இவரது பங்களிப்பு அபரிதமானது. ஆண்டர்சனை பவுல்டு செய்து ஸ்டார்க் 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹேசில்வுட் 3 விக்கெட். லயன் 2 விக்கெட். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் 25 ஒவர்களில் 111 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார்.

நேற்றைய நாயகன் ஜோ ரூட் 166 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கிடம் ஆட்டமிழந்தார். 43/3 என்ற நிலையில் ஜோ ரூட் களமிறங்கி பிராட் ஹேடின் நழுவவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி இங்கிலாந்தை ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் தொடங்கி கிறிஸ் ராஜர்ஸ் திணறி வருகிறார். பிராட் பந்தில் ஒரு எல்.பி.முறையீடு இன்சைடு எட்ஜினால் தப்பியது, ராஜர்ஸ் பிழைத்தார். அவர் 15 ரன்களுடனும், வார்னர் 25 பந்துகளில் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

மார்க் உட், மற்றும் மொயீன் அலி தலா 1 மெய்டனுடன் தொடங்கியுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-இங்கிலாந்து-430-ரன்களுக்கு-ஆட்டமிழந்தது/article7403633.ece

Link to comment
Share on other sites

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள்: ஆஸி. வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் சாதனை

 
தொடர்ச்சியாக 7 டெஸ்ட் அரைசதங்களை அடித்து கிறிஸ் ரோஜர்ஸ் சாதனை. | படம்: ஏ.எப்.பி.
தொடர்ச்சியாக 7 டெஸ்ட் அரைசதங்களை அடித்து கிறிஸ் ரோஜர்ஸ் சாதனை. | படம்: ஏ.எப்.பி.

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் 430 ரன்கள் என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எதிர்த்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் புதிய டெஸ்ட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது இன்று அரைசதம் எடுத்த கிறிஸ் ரோஜர்ஸ், டெஸ்ட் வரலாற்றில் 7 தொடர் அரைசதங்களை எடுத்த 5-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக 7 அரைசதங்களை எடுத்துள்ள மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் சர் எவெர்ட்டன் வீக்ஸ், ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர், மே.இ.தீவுகளின் ஷிவ் நரைன் சந்தர்பால், இலங்கையின் குமார் சங்கக்காரா ஆகியோருக்கு அடுத்தபடியாக 5-வது பேட்ஸ்மெனாக இணைந்துள்ளார் கிறிஸ் ரோஜர்ஸ்.

மொயீன் அலி வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்து தன் அரைசதத்தை எடுத்த ரோஜர்சின் சாதனை ரன்னாக அது அமைந்தது. 74 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ரோஜர்ஸ் அரைசதம் கடந்தார்.

கிறிஸ் ராஜர்ஸ் அடித்த 7 தொடர் அரைசதங்கள் விவரம்:

இந்தியாவுக்கு எதிராக கடந்த தொடரில் பிரிஸ்பன் மைதானத்தில் 2 இன்னிங்ஸ்களிலும் 55. பிறகு மெல்போர்னில் 57, மீண்டும் 69, சிட்னியில் 95 மற்றும் 56.

தற்போது அவர் 83 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன்வரை 1 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 17 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆனதால் குக் கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார்.

http://tamil.thehindu.com/sports/டெஸ்ட்-போட்டிகளில்-தொடர்ச்சியாக-7-அரைசதங்கள்-ஆஸி-வீரர்-கிறிஸ்-ரோஜர்ஸ்-சாதனை/article7404205.ece

Link to comment
Share on other sites

ஆக்ரோஷத்துக்கு பலியான ஆஸ்திரேலியா 308 ரன்களுக்குச் சுருண்டது

 
  • ஸ்டீவன் ஸ்மித்தை வீழ்த்திய மொயீன் அலி. | படம்: ஏ.எஃப்.பி.
    ஸ்டீவன் ஸ்மித்தை வீழ்த்திய மொயீன் அலி. | படம்: ஏ.எஃப்.பி.
  • அவசரத்தில் அவுட் ஆன மைக்கேல் கிளார்க், வீழ்த்திய மொயீன் அலி, இங்கிலாந்து கொண்டாட்டம். படம்: ராய்ட்டர்ஸ்.
    அவசரத்தில் அவுட் ஆன மைக்கேல் கிளார்க், வீழ்த்திய மொயீன் அலி, இங்கிலாந்து கொண்டாட்டம். படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 308 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

2-ம் நாள் ஸ்கோர் 264/5 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா ஷேன் வாட்சன் விக்கெட்டை அவரது சொந்த ரன் எண்ணிக்கையான 30 ரன்களில் இழந்தது. வழக்கமான, ஃபுல் நேர் பந்தை பேடில் வாங்கினார். அது அவுட். ஆனால் ஒரு ரிவியூவையும் விரயம் செய்து விட்டு போனார்.

நேதன் லயன் 6 ரன்களில் மார்க் உட் பந்தில் கால் காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். பிராட் ஹேடினுக்கு பிராட், ஆண்டர்சன், மார்க் உட் ஆகியோர் சில டைட் ஓவர்களை வீச அவர் ஒருவாறாக 5 பவுண்டரிகளை அடித்து 22 ரன்களுக்கு வந்தார். அப்போது ஆண்டர்சனின் புதிய பந்தில் அவுட் ஸ்விங்கருக்கு பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜான்சன் 14 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தை நேராக மிட்விக்கெட் கையில் பிளிக் செய்து வெளியேறினார். கடைசியாக ஸ்டார்க் ரன் எடுக்காமல் ஆண்டர்சன் ஸ்டம்ப்களை விட்டு விலகிச் சென்று வீசிய பந்தை தவறாக டிரைவ் பந்து என்று நினைத்து ஆட எட்ஜ் ஆனது, ரூட் 3-வது ஸ்லிப்பில் இடப்புறம் டைவ் அடித்து அபாரமான கேட்சைப் பிடிக்க ஆஸ்திரேலியா 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முன்னதாக நேற்று இங்கிலாந்தின் 430 ரன்களை எதிர்த்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் எச்சரிக்கையாக ஆடிய கிறிஸ் ராஜர்ஸ் 95 ரன்கள் எடுத்தார்.

இது போன்ற மந்தமான பிட்ச்களுக்கென்றே அவர் பெயர் பெற்றவர். ஆனாலும் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் என்ற பெயரையும் எடுத்தார் இதில் இந்தியாவுக்கு எதிராக 6 அரைசதங்கள் என்பதையும் நாம் மறக்கலாகாது. மார்க் உட் ஒரு பந்தை சற்றே ஆங்கிள் மாற்றி வீச 95 ரன்கள் எடுத்த பிறகும் எட்ஜ் செய்து அவுட் ஆனார் ரோஜர்ஸ்.

ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 வீரர் ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களில் 5 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் மொயீன் அலியை அடிக்கச் சென்று இந்தியா மடிந்த வரலாற்றை ஆஸ்திரேலியா பார்க்கவில்லை போலும், முதலில் அவரை 2 பவுண்டரிகள் அடித்த ஸ்மித், மொயீன் அலி பந்துக்கு மேலேறி வர அவரோ பந்தை லெக் திசையில் வேகமாக வீச, ஸ்டம்ப்டு ஆவதைத் தடுக்க பேடைக் கொண்டு சென்றார். ஆனால் பேட்டும் அருகில் இருந்ததால் பந்து பட்டு குக்கிடம் கேட்ச் ஆனது.

மைக்கேல் கிளார்க்கும் ஆக்ரோஷமாக விளையாடி 38 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். ரோஜர்ஸ் அவுட் ஆகிவிட்ட பிறகு நிதானம் காட்டியிருக்க வேண்டிய கேப்டன் ஆக்ரோஷம் காட்டினார். இவரும் மொயீன் அலியை மேலேறி வந்து அடிக்க முயன்றார், முன்னதாகவே மேலேறியதால் பார்த்து விட்டார் மொயீன் அலி, கிளார்க் அடித்த ஷாட் மொயீனிடமே கேட்ச் ஆனது. அதாவது கிளார்க் பந்தை தூக்கி அடிக்க அங்கு நேரமில்லாமல் போனது.

மொயீன் அலி 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்து ஆடம் வோஜஸ், ஸ்டோக்ஸின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தை டிரைவ் செய்தார், சரியாகச் செய்யவில்லை ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் அருகிலேயே கேட்ச் ஆனது. இதுவும் பொறுமையின்மையின் ஆட்டமிழப்புதான். 2-ம் நாள் ஆட்டம் முடிய இன்னும் 10 நிமிடங்கள் இருந்த போது இவர் அவுட் ஆனார்.

இப்படியாக ஆஸ்திரேலியா தேவையற்ற ஆக்ரோஷத்தைக் காட்டி அதற்கான சரியான செயல்படுத்தம் இல்லாது 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆண்டர்சன் 3, பிராட், உட், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

122 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து சற்று முன் 3-ம் நாள் உணவு இடைவேளை தருணத்தில் அலிஸ்டர் குக் விக்கெட்டை ஸ்டார்க்கிடம் இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஆக்ரோஷத்துக்கு-பலியான-ஆஸ்திரேலியா-308-ரன்களுக்குச்-சுருண்டது/article7407956.ece

Link to comment
Share on other sites

412 ஓட்டங்கள் எடுத்தால் வெல்லலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடுகிறது.

Link to comment
Share on other sites

ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 412 ரன்கள்

 

  • ஸ்கோர் போர்டு 289 ரன்களுக்கு இங்கிலாந்த் ஆல் அவுட் என்பதை காட்ட 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. வீரர்கள் ஓய்வறை செல்கின்றனர். | படம்: ஏபி.
    ஸ்கோர் போர்டு 289 ரன்களுக்கு இங்கிலாந்த் ஆல் அவுட் என்பதை காட்ட 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. வீரர்கள் ஓய்வறை செல்கின்றனர். | படம்: ஏபி.
  • 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லயன். | படம்: ஏ.பி.
    2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லயன். | படம்: ஏ.பி.

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 412 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கவுள்ளது. ஆனால் பிட்ச் சுலபம் இல்லை. அதில் பந்துகள் சீரற்ற முறையில் எழும்பியும் தாழ்ந்தும் வருகிறது. எனவே இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா என்பதுதான் இப்போதைய ஆர்வம்.

ஆஸ்திரேலியா வெற்றிகரமாக 412 ரன்கள் இலக்கை துரத்தி விட்டால் புதிய ஆஷஸ் சாதனையாக அது அமையும். 1948-இல் பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணி 404/3 என்று ஹெடிங்லேயில் வெற்றி பெற்றது.

நேற்று இங்கிலாந்துக்கு அபாரமான தினமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவை துல்லியமான பவுலிங்கினால் முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்குச் சுருட்டியது, பிறகு 207/4 என்ற நிலையிலிருந்து கடைசி 6 விக்கெட்டுகளை 82 ரன்களுக்கு இழந்தது. நேதன் லயன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். விமர்சனங்களை சந்தித்த மிட்செல் ஜான்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அலிஸ்டர் குக் ஸ்டார்க்கின் ஒரு சாதாரண அவுட் ஸ்விங்கருக்கு லயனிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் வெளியேறினார். கேரி பேலன்ஸுக்கு ஒன்றும் சரியாக அங்கு அமையவில்லை. ஸ்டார்க் அவரை கொஞ்சம் கஷ்டப்படுத்தினார், அதனால் ரன்னே எடுக்க முடியாமல் 0-வில் ஜோஷ் ஹேசில்வுட் பந்து ஒன்று எகிற விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவுட் ஆஃப் பார்ம் இயன் பெல் இறங்கியது முதல் பாசிட்டிவ்வாக ஆடத் தொடங்கினார். மிட்செல் ஸ்டார்க்கை 2 அபார பவுண்டரிகள் மூலம் தனது நோக்கத்தை தெரிவித்தார். 60 ரன்களில் 11 அழகான பவுண்டரிகளை அடித்து மிட்செல் ஜான்சன் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். தொடக்க வீரர் ஆடம் லித், நேதன் லயனை ஒரு சிக்ஸ் அடித்து நானும் இருக்கிறேன் என்று அறிவித்துக் கொண்டதனால் வந்த வினை, நேதன் லயன் ஒரு அபார பந்தில் அவரை கிளார்க்கிடம் கேட்ச் கொடுக்க வைத்தார்.

207/4 என்ற நிலையில் இங்கிலாந்து சரிவு தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் சத நாயகன் ஜோ ரூட் 60 ரன்கல் எடுத்து ஹேசில்வுட்டின் அபார இன்ஸ்விங்கரில் ஸ்டம்ப்களை இழந்தார். 9 ஓவர்களில் 38 ரன்களுகு 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. பட்லர் 7 ரன்களுக்கு லயனிடம் வீழ்ந்தார். மொயீன் அலியும் 15 ரன்னில் ஜான்சன் பந்தில் அவுட் ஆனார். பென் ஸ்டோக்ஸ் கட்டுப்பாட்டுடன் ஆடி 42 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். பிராட் 4 ரன்னில் லயன் பந்தில் வெளியேறினார். ஆனால் கடைசியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் விளாச இங்கிலாந்து 289 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முன்னிலையும் 411 ரன்கள் ஆனது.

ஜான்சன், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லயன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-முதல்-டெஸ்ட்-ஆஸ்திரேலியாவுக்கு-வெற்றி-இலக்கு-412-ரன்கள்/article7411251.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து 430 & 289
ஆஸ்திரேலியா  308 & 242/9 (69.1 ov, target: 412)
ஆஸ்திரேலியாக்கு  தேவை  இன்னும் 170 ஓட்டங்கள்  1 விக்கெட்தான் இருக்கு
 
ஆக ஆஸ்திரேலியா படு தோல்வியை நோக்கி....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் இங்கிலாந்து 169 ஓட்டங்களால் வெற்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூட் சிறப்பாட்டக்காரராக தெரிவாகலாம்.

Link to comment
Share on other sites

ஆஷஸ்: இங்கிலாந்து வெற்றி

cook, cricket
கார்டிப்: ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றியுடன் துவக்கியது. முதல் டெஸ்டில் 169 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைந்தது.

 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கார்டிப் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 430, ஆஸ்திரேலியா 308 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் 289 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 411 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடின இலக்கு:

நேற்று 4ம் நாள் ஆட்டம் நடந்தது. 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கிறிஸ் ரோஜர்ஸ் (10) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட் அரங்கில் 15வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த போது மொயீன் அலி ‘சுழலில்’ வார்னர் (52) சிக்கினார். ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ ஸ்டீவ் ஸ்மித் (33), கேப்டன் மைக்கேல் கிளார்க் (4) வெளியேறினர். ஆடம் வோக்ஸ் (1), பிராட் ஹாடின் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். வாட்சன் (19) சோபிக்கவில்லை.

ஜான்சன் ஆறுதல்:

பின் இணைந்த மிட்சல் ஜான்சன், மிட்சல் ஸ்டார்க் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்பாக ஆடிய ஜான்சன் டெஸ்ட் அரங்கில் 11வது அரைசதம் கடந்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது ஸ்டார்க் (17) அவுட்டானார். ஜோ ரூட் ‘சுழலில்’ ஜான்சன் (77) சிக்கினார். மொயீன் அலியிடம் ஹேசல்வுட் (14) சரணடைந்தார்.

இரண்டாவது இன்னிங்சில் 242 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூலை 16ல் லார்ட்சில் துவங்குகிறது.

http://sports.dinamalar.com/2015/07/1436549822/cookengland.html

Link to comment
Share on other sites

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி மண்ணை கவ்வியது!

ஷஸ் தொடரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

eng.jpg

காடீஃப் நகரில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 430 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் அபாரமாக விளையாடி 134 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 289 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

shane.jpg

இதனால் 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. ரோஜர்ஸ் (10 )வார்னர் (52) ஸ்மித் (33) கிளார்க் (4) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பின்னர் வந்த வீரர்களில் யாரும் நிலைத்து ஆடவில்லை. ஜான்சன் மட்டுமே 77 ரன்களை எடுத்தார். ஷேன் வாட்சன் 19 ரன்னில் வழக்கம் போல் எல்.பி. டபிள்யூ ஆனார். இறுதில் ஆஸ்திரேலிய அணி 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.vikatan.com/news/article.php?aid=49346

Link to comment
Share on other sites

மிட்சல் ஸ்டார்க் சந்தேகம்

Mitchel Starc, Cricket, Australia, Ashes, Injury

கார்டிப்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் காயம் காரணமாக (வலது முழங்கால்) ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.      

கார்டிப் நகரில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் வரும் ஜூலை 16ல் லார்ட்சில் துவங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. முதல் டெஸ்டின் போது இவரது வலது முழங்காலில் லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் இவர், வலி நிவாரண மருந்தின் உதவியுடன் போட்டியில் பங்கேற்றார். இவர், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு முன் முழு உடற்தகுதி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.      

ஒருவேளை 2வது டெஸ்டில் ஸ்டார்க் விளையாடாத பட்சத்தில் முதல் போட்டியில் பங்கேற்காத மற்ற வேகப்பந்துவீச்சாளர்களான பீட்டர் சிடில் அல்லது பட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்படலாம். இதில் சிடிலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.      

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பிஸியோதெரபிஸ்ட் அலெக்ஸ் கூறுகையில், ‘‘முதல் டெஸ்டின் போது ஸ்டார்க்கிற்கு ஏற்பட்ட காயம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இயல்பாக வருவதுதான். இவர், 2வது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன் முழு உடற்தகுதி அடைந்துவிடுவார் என நம்புகிறேன். ஒருவேளை இவரால் பங்கேற்க முடியாத பட்சத்தில், அணியில் கூடுதலாக இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்,’’ என்றார்.

http://sports.dinamalar.com/2015/07/1436711739/MitchelStarcCricketAustraliaAshesInjury.html

Link to comment
Share on other sites

அலிஸ்டர் குக்கின் மது விருந்து அழைப்பை மறுத்த மைக்கேல் கிளார்க்

 
 
இங்கிலாந்து கேப்டன் குக்கின் மதுபான விருந்தை மறுத்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எப்.பி.
இங்கிலாந்து கேப்டன் குக்கின் மதுபான விருந்தை மறுத்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எப்.பி.

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து ஆஸ்திரேலிய அணியை மது விருந்துக்கு குக் அழைத்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.

இதனை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உறுதி செய்தார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் கூட வெற்றி பெற்ற போதும் தோல்வியடைந்த போதும் இரு அணியினரும் மது விருந்தில் கலந்து கொண்டதாக குறிப்பிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், எதிரணியினரை போட்டிக்கு பிறகு மதுபான விருந்துக்கு அழைப்பது என்பது ஒரு மரபு என்று தெரிவித்துள்ளார்.

"தோற்கிறோமோ, ஜெயிக்கிறோமோ அது பிரச்சினையல்ல, கடுமையான போட்டிக்குப் பிறகு இரு அணியினரும் விருந்தில் கலந்து கொள்வது என்பது ஒரு சுவையான அனுபவம். இதனால் கேப்டன் குக் இதனை ஒரு யோசனையாக முன்வைக்க நாங்களும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டோம், ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் மறுத்து விட்டார், அவர் ஏன் மறுத்தார் என்பது தெரியவில்லை” என்றார் ஆண்டர்சன்.

2005-ம் ஆண்டு புகழ்பெற்ற ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி தோல்விக்குப் பிறகு கூட இங்கிலாந்து ஓய்வறையில் பீர் அருந்தினர். ஆனால் அவ்வாறு தோழமை பாராட்டுவதுதான் தோல்விக்குக் காரணம் என்று அப்போதைய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார், “குடிப்பது ஒரு பெரிய பிரச்சினைதான்’ என்று பாண்டிங் கூறியதாக நினைவு.

இப்போதும் கிளார்க் அதனை மனதில் கொண்டே குக்கின் அழைப்பை நிராகரித்திருக்கலாம் என்று ஆஸி., இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

http://tamil.thehindu.com/sports/அலிஸ்டர்-குக்கின்-மது-விருந்து-அழைப்பை-மறுத்த-மைக்கேல்-கிளார்க்/article7421731.ece?homepage=true

Link to comment
Share on other sites

2-வது ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா

 
லார்ட்ஸில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்.
லார்ட்ஸில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ஆஸ்திரேலியா, இந்தப் போட்டியில் வெற்றி கண்டு தோல்வி யிலிருந்து மீள வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கு கிறது. ஆனால் இங்கிலாந்து அணியோ முதல் போட்டியில் வெற்றி கண்டிருப்பதால் இந்தப் போட்டியில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறது.

பிராட் ஹேடின் விலகல்

ஆஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் தனிப்பட்ட காரணங்களுக்காக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 37 வயதான ஹேடின் 2-வது போட்டியில் இருந்து விலகியிருந்தாலும், ஆஸ்திரேலிய அணியினருடன்தான் இருக்கிறார்.

அவர் இதுபோன்று விலகுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் 2012-ல் மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய அவர், அடுத்த 6 மாதங்கள் கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை. தனது மகள் மியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்போது விலகினார். எனினும் 2012-13 சீசனில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஹேடின், 2012-2013 ஆஷஸ் தொடரில் இடம்பிடித்ததோடு, ஆஸ்திரேலிய அணியின் வெற்றியிலும் முக்கியப் பங்காற்றினார்.

இன்றைய போட்டியில் ஹேடி னுக்குப் பதிலாக அறிமுக விக்கெட் கீப்பராக களமிறங்குகிறார் பீட்டர் நெவில். லார்ட்ஸ் மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை கணித்து விக்கெட் கீப்பிங் செய்து மிகவும் கடினமாகும். அதனால் முதல் போட்டியிலேயே பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளார் பீட்டர் நெவில்.

வாட்சன் நீக்கம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சனை இந்தப் போட்டியி லிருந்து நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. அவருக்குப் பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் களமிறங்குகிறார்.

தொடர்ந்து சொதப்பி வரும் வாட்சன், 2013 டிசம்பருக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வில்லை. கார்டிஃப்பில் நடந்த கடந்த டெஸ்ட் போட்டியில் தடுமாறிய அவர் இரு இன்னிங்ஸ்களிலும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமி ழந்தார். இதுதவிர பந்துவீச்சிலும் அவரால் பெரிய அளவில் தாக் கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் மார்ஷ், இதற்கு முன்னர் வாட்சன் இல்லாதபோதுதான் அணியில் இடம்பெற்றார். இப்போது முதல்முறையாக தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சிறப்பான தொடக்கம்

ஆஸ்திரேலிய அணி வலுவான ஸ்கோரை குவிக்க வேண்டுமெனில் தொடக்க வீரர்கள் கிறிஸ் ரோஜர்ஸ், வார்னர் சிறப்பாக ஆடுவது முக்கியம். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோஜர்ஸ் 95 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்ஸில் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். மற்றபடி எந்த வீரரும் அரை சதத்தைக்கூட எட்டவில்லை. எனவே ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் ஸ்மித், கேப்டன் கிளார்க், ஆடம் வோஜஸ் ஆகியோர் சிறப்பாக ஆடுவது அவசியம்.

பந்துவீச்சைப் பொறுத் தவரையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தாலும் இன்றைய ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்றுவிடுவார் என தெரிகிறது. ஹேஸில்வுட், ஜான்சன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் நாதன் லயனை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

மொயீன் அலி சந்தேகம்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர் மொயீன் அலிக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விளையாடுவது சந்தேகமே. கடந்த ஆட்டத்தில் 92 ரன்கள் எடுத்ததோடு, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மொயீன் அலி காயத் தால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கி லாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது. அவர் விளையாடாதபட் சத்தில் ரஷித் அடீல் சேர்க்கப்படு வார். மற்றபடி அந்த அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் குக், ஆடம் லித், ஜோ ரூட், இயான் பெல், கேரி பேலன்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் கூட்டணியை நம்பியுள்ளது இங்கிலாந்து.

மைதானம் எப்படி?

கிரிக்கெட்டின் மெக்கா என்ற ழைக்கப்படும் லார்ட்ஸ் மைதா னத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்தி ரேலியா 14 முறையும், இங்கிலாந்து 7 முறையும் வெற்றி கண்டுள்ளன. 14 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

http://tamil.thehindu.com/sports/2வது-ஆஷஸ்-டெஸ்ட்-இன்று-தொடக்கம்-இங்கிலாந்துக்கு-பதிலடி-கொடுக்குமா-ஆஸ்திரேலியா/article7428644.ece

Link to comment
Share on other sites

2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதலில் துடுபெடுத்தாடுகிறது.

Link to comment
Share on other sites

ஆஷஸ்: வாட்சன், ஹேடின் இல்லை; ஆஸ்திரேலியா பேட்டிங்

 
 
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சற்று முன் ஆண்டர்சன் பந்தை அடித்த கிறிஸ் ராஜர்ஸ். | படம்: ஏ.பி.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சற்று முன் ஆண்டர்சன் பந்தை அடித்த கிறிஸ் ராஜர்ஸ். | படம்: ஏ.பி.

ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற மைக்கேல் கிளார்க் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் பிராட் ஹேடினுக்குப் பதிலாக பீட்டர் நெவில் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட, 'எல்.பி.டபிள்யூ' வாட்சன் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் வேறு மாற்றங்கள் இல்லை. மைக்கேல் கிளார்க் கடந்த 24 இன்னிங்ஸ்களில் இருமுறையே அரைசதம் கடந்துள்ளார், அவர் மீதும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மற்றும் அணித் தேர்வுக்குழுவுனருக்கு ஒரு கண் உள்ளது. மிட்செல் ஜான்சன் முதல் டெஸ்டில் சோபிக்கவில்லை, டேவிட் வார்னர், ஸ்மித் என்று அனைவரது ஆட்டமும் கடும் நெருக்கடி நிலையில் உள்ளன.

காரணம், முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து சாதாரணமாக வென்றதே. பிராட் ஹேடின் கேட்ச் விட்ட போது கார்டிப்பில் சதநாயகன் ஜோ ரூட் ரன் எடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சதம் கண்டார். கேட்சைப் பிடித்திருந்தால் இங்கிலாந்து 200 ரன்களுக்குக் கூட மடிந்திருக்கலாம், ஆட்டத்தின் முடிவே கூட மாறியிருக்கலாம்.

ஒரு கேட்ச்தானே, கேட்ச் விடுவதெல்லாம் ஒரு விஷயமா என்று பார்க்காது ஆஸ்திரேலியா. அதே போல் ஒரு பேட்ஸ்மென் தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டமிழந்தால் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்புவதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வழக்கம். இப்படித்தான் ஷேன் வாட்சன் தன் இடத்தை இழந்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 6 ரன்களுடனும், கிறிஸ் ராஜர்ஸ் 21 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-வாட்சன்-ஹேடின்-இல்லை-ஆஸ்திரேலியா-பேட்டிங்/article7429715.ece?ref=omnews

Link to comment
Share on other sites

நிதானமிழந்த வார்னர் மொயீன் அலியிடம் வீழ்ந்தார்: ஆஸ்திரேலியா 104/1

 
  • வார்னர் ஆட்டமிழந்த ஷாட். இடம்: லார்ட்ஸ். ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம். | படம்: ராய்ட்டர்ஸ்.
    வார்னர் ஆட்டமிழந்த ஷாட். இடம்: லார்ட்ஸ். ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • வார்னரைச் சாய்த்த மொயீன் அலியை அலிஸ்டர் குக், மற்றும் பென் ஸ்டோக்ஸ் பாராட்டும் காட்சி. | படம்: ஏ.பி.
    வார்னரைச் சாய்த்த மொயீன் அலியை அலிஸ்டர் குக், மற்றும் பென் ஸ்டோக்ஸ் பாராட்டும் காட்சி. | படம்: ஏ.பி.

லார்ட்ஸில் நடைபெறும் ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா வார்னர் விக்கெட்டை இழந்து 104 ரன்கள் எடுத்துள்ளது.

கிறிஸ் ராஜர்ஸ் 43 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய வார்னர் பிறகு 7 பவுண்டரிகளை விளாசி 42 பந்துகளில் 38 ரன்களுடன் அபாயகரமாகத் திகழ்ந்தார்.

அப்போது ஆட்டத்தின் 15-வது ஒவரில் ஆஃப் ஸ்பின்னர் மொயீன் அலி பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தே ஒரு சுழற்று சுழற்றி மிட் ஆனுக்கும் மிட்விக்கெட்டுக்கும் இடையே ஒரு பவுண்டரி விளாசி மொயீனை வரவேற்றார் வார்னர். அடுத்த பந்து மேலேறி வந்து மேலும் ஒரு பவுண்டரி அடித்தார்.

திட்டம் என்னவெனில் மொயீன் அலியின் ஓர்மையை சீர்குலைப்பதே. ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் பொறுமையிழந்த வார்னர் மேலும் ஒரு முறை மேலேறி வந்து ஷாட் அடித்தார், அது மட்டையில் சரியாகச் சிக்கவில்லை, மொயீன் அலி முன்னமேயே பார்த்து விட்டார் போல்தான் தெரிந்தது. அதனால் கொஞ்சம் பந்தை இழ்த்து விட்டார். வார்னர் ஷாட் ஆட அது எக்ஸ்ட்ரா கவரில் மேல் எழும்பியது, ஆண்டர்சன் தனது வலப்புறமாக சில அடிகள் ஓடி எளிதான கேட்சை பிடித்தார்.

அதாவது 15 ஓவர்களில் 78 ரன்கள் என்ற ஆரோக்கியமான டெஸ்ட் ரன் விகிதத்தில் சென்று கொண்டிருந்த போது மேலும் ஒரு முறை மொயீன் அலியை குறைவாக எடைபோட்டு அடிக்கப் போனார் வார்னர், அதனால் வெளியேறினார்.

முன்னதாக தனது 24-வது பந்தில்தான் முதல் பவுண்டரியையே அடித்த வார்னர். அடுத்த 18 பந்துகளில் மேலும் 6 பவுண்டரிகளை அடித்து அபாயகரமாகத் திகழ்ந்தார். 7 பவுண்டரிகளில் மார்க் உட் பந்தில் மட்டும் 5 பவுண்டரிகள் விளாசினார் வார்னர். நிதானமிழந்து கூடுதல் ஆக்ரோஷத்தில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே பெவிலியன் திரும்பினார் வார்னர்.

http://tamil.thehindu.com/sports/நிதானமிழந்த-வார்னர்-மொயீன்-அலியிடம்-வீழ்ந்தார்-ஆஸ்திரேலியா-1041/article7429935.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.