Jump to content

சிவகுமாரன் - ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமாரன் - ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா

முத்துக்குமார்

f34aea6b-609e-4b82-8acc-8291a68ebfb81.jp

தியாகி சிவகுமாரன் தனது உடலையும் உயிரையும் தமிழ் மண்ணிற்குக் கொடையாக்கி 41 வருடங்களாகின்றன. அவன் தொடங்கி வைத்த ஆயுதப் போராட்டம் விருட்சமாக வளர்ந்து வந்த நிலையில் பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் உதவியுடன் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆயுதப் போராட்டம் தான் அழிக்கப்பட்டதே தவிர தமிழ்த் தேசிய அரசியல் அழிக்கப்படவில்லை. அது ஆழ வேரூன்றிய மரம். இன்று இதனையும் அழிப்பதற்கு அகரீதியாகவும் புறரீதியாகவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்நிலையில் தியாகி சிவகுமாரன் பற்றிய மீளாய்வு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பதற்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும்.

சிவகுமாரனின் பங்களிப்பு பற்றிய மீளாய்வுக்கு தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வளர்ச்சி, அதில் சிவகுமாரன் பங்களித்த காலகட்டம் என்பன பற்றிப் புரிதல் அவசியம். தேசியப் போராட்ட வளர்ச்சி என்பதே ஒரு வகையான அஞ்சலோட்டம்தான். அந்த அஞ்சலோட்டத்தில் சிவகுமாரனும் ஒரு ஓட்ட வீரன். அஞ்சலோட்ட வீரர்களை அவர்களது தளங்களில் நின்று புரிந்து கொள்ளும்போதே அவர்களுடைய பங்களிப்பின் மேன்மையையும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழர் அரசியல் வரலாறு நீண்ட காலத்துக்குரியது. இலங்கையில் நவீன அரசியல் ஆரம்பிக்கப்பட்ட 1833 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களின் அரசியலும் ஆரம்பித்துவிட்டது எனலாம். அரசியல் ஆய்வின் இலகு கருதி தமிழர் அரசியல் வரலாற்றினை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.

1833 ஆம் ஆண்டு தொடக்கம் 1920 வரையான காலகட்டம்

இக்காலகட்டத்தில் ஆட்சி அதிகாரம் முழுக்கமுழுக்க பிரித்தானியாவின் கைகளிலேயே இருந்தது. இலங்கையர்களுக்கு பிரதிநிதித்துவ உரிமை மட்டும் கொடுக்கப்பட்டது. அதுவும் பெரிதளவிற்கு சுயாதீனமுடையதாக இருக்கவில்லை. பெரும்பான்மையான பிரதிநிதிகள் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். 1910 ஆம் ஆண்டு குறூ-மக்கலம் சீர்திருத்தத்தை தொடர்ந்தே சில பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களிலும் இலங்கையர் ஒருவரே தெரிவு செய்யப்பட்டார். அவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆவார்.

இக்காலத்தில் தமிழ்மக்கள் பண்பாட்டுத் தளத்தில்தான் தமிழர்கள் என்ற அடையாளத்தைப் பேணினர். அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையே பேணினர். தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக விளங்கியவர்கள் இலங்கையின் அரசியல் தலைவர்களாகவும் விளங்கினர். சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தனர். சேர் முத்துக்குமார சுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் போன்றோர் இவர்களில் முக்கியமானவர்களாவர். சேர் முத்துக்குமார சுவாமியின் மைந்தனான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஒரு கலாச்சாரத் தலைவராக விளங்கினார்.

இவர்களில் சேர் பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சிறப்பான பாத்திரம் உண்டு. இவரே இலங்கையின் சமூகமாற்ற அரசியலின் தந்தையாகவும், தேசிய இயக்க அரசியலின் தந்தையாகவும் விளங்கினார்.

1920 ஆம் ஆண்டு தொடக்கம் 1949 வரையான காலகட்டம்

இந்தக் காலகட்டம், இக்காலத்தில் அறிமுகப்படுத்திய மானிங் அரசியல் சீர்திருத்தத்துடன் ஆரம்பமாகின்றது. சிங்களத் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட எழுத்து மூல உடன்பாட்டின்படி, கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கு ஒதுக்காததினால் கோபமுற்ற சேர் பொன்னம்பலம் அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறி 1920 ஆகஸ்டில் தமிழ் மக்களுக்கான சபையை உருவாக்கினார். அவ்வமைப்பின் தோற்றத்துடன் தமிழ் மக்களுக்கான இன அடையாள அரசியலும் ஆரம்பித்துவிட்டது எனலாம்.

இக்காலத்தில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஒத்துக்கொண்டு, அதற்குள் சம வாய்ப்புக்களைக் கோருகின்ற அரசியலாகவே தமிழர் அரசியல் இருந்தது. அருணாசலம் இதனைத் தொடக்கி வைத்தாலும் 1924 இவர் மரணமடைந்தமையினால் இந்தக் காலகட்டத்தை முன்னெடுக்க அவரால் முடியவில்லை. ஜி.ஜி பொன்னம்பலமே இக்காலகட்டத்தை முன்னெடுத்தார். அவரது ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை இதன் அடிப்படையிலேயே எழுச்சியடைந்தது. இக் கோரிக்கையின் சாராம்சம் சமவாய்ப்புக்களே!

டொனமூர் யாப்பில் வழங்கப்பட்ட அரைவாசிப் பொறுப்பாட்சி இக்கட்டம் துரிதமாக வளர்வதற்குக் காரணமாகியது.

1949 தொடக்கம் 1968 வரையான காலகட்டம்

1949 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் இது ஆரம்பமாகின்றது. 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அறிமுகமானது. இவ்யாப்பு ஏற்கனவே 1833 கோல்புறுக் அரசியல் சீர்திருத்தம் உருவாக்கி வளர்த்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பொறுப்பாட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. அது இயல்பாக சிங்கள தேசத்திடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தமையினால் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து ஒதுக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட 29 ஆவது பிரிவும் போதிய பயனைத் தரவில்லை. சோல்பரி யாப்பு நடைமுறைக்கு வந்து ஒரு வருடத்திற்கு உள்ளேயே மலையக மக்களின் பிரஜாவுரிமையைப் பறித்த பிரஜாவுரிமைச் சட்டம் 29 வது பிரிவினை மீறிக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தான் ஒற்றையாட்சி அதிகாரக் கட்டடைப்புக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க முடியாது எனக் கருதிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். இச்சமஸ்டிக் கோரிக்கை வடக்குக்-கிழக்கினை தமிழர் தாயகமாக வரையறுத்து அதற்கு அதிகாரங்களைக் கோருவதாக அமைந்தது.

தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் மூன்று பெரிய போக்குகள் தமிழ் அரசியலில் இடம்பெறத் தொடங்கின. ஒன்று ஜி.ஜி பொன்னம்பலத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் இன அரசியல் தமிழ்த் தேசிய அரசியலாக வளர்ச்சியடைந்தது. இரண்டாவது, கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் மையப்படுத்திய தமிழர் அரசியல் புவியியல் பிரதேசத்தை அடையாளப்படுத்தி வடக்குக்- கிழக்காகப் பரந்தது. மூன்றாவது, கோரிக்கைகள் மனுக்கள் அனுப்புதல், சட்டமன்றத்தில் பேசுதல் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழ் அரசியல், மக்கள் இணைத்த போராட்டமாக வளர்ச்சியடைந்தது.

காலி முகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம் (1956), திருமலை யாத்திரை (1957), சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டம் (1958) கச்சேரிகளுக்கு முன்னாலான சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) எனப் போராட்டங்கள் எழுச்சியடைந்தன. 'சுதந்திரன்' பத்திரிகை விடுதலைப் பிரச்சாரத்தைச் செய்யும் பத்திரிகையாக மாறியது.

மறுபக்கத்தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), டட்லி- செல்வா ஒப்பந்தம் (1965) என்பனவும் கைச்சாத்திடப்பட்டன. இவை எதுவும் பெரிய பயன்களைத் தரவில்லை. ஒரு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. மற்றைய ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

1968 க்குப் பின்னரான காலகட்டம்

1965 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைத்து அமைச்சுப் பதவியையும் பெற்றது. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சுகளுக்கு கறுப்புக் கொடி காட்டிய தமிழரசு வாலிப முன்னணியினர் போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்களுக்கு வரவேற்புத் தோரணங்களைக் கட்டினர். தேசியக்கொடியை விமர்சித்த தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டு சிங்கக் கொடியை ஏற்றினர்.

அதேவேளை டட்லி - செல்வா ஒப்பந்தம் செயலற்றுப் போனது. பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் சிபார்சு செய்யப்பட்ட பிராந்திய சபைகளை விட குறைவான அதிகாரம் கொண்ட மாவட்டச் சபைகளை தமிழரசுக் கட்சித் தலைமை ஏற்க முன்வந்தபோதும் டட்லி அரசாங்கம் அதனைச் செயற்படுத்தவில்லை. ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

கட்சியில் இருந்த பிரக்ஞைபூர்வ இளைஞர்கள் இரண்டு தீர்மானங்களுக்கு வந்தனர். ஒன்று சமஸ்டிக் கோரிக்கையும் சரிவராது, இனி தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுப்பது. இரண்டாவது கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது.

இந்த இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் தான் 1968ஆம் ஆண்டு ஈழத்தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் முதலாவது இளைஞர் இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் வளர்ச்சியாக 1970 இல் தமிழ் மாணவர் பேரவையும், 1973 இல் தமிழ் இளைஞர் பேரவையும், 1974 இல் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பும், 1975 இல் தமிழீழ விடுதலை இயக்கமும் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழப்புரட்சி அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பனவும் தோற்றம் பெற்றன.

இந்த நான்காவது கட்டம் இலங்கை மட்டம், பிராந்திய மட்டம், சர்வதேச மட்டம் என மூன்று மட்டங்களை நோக்கிப் பயணித்தது. 1968 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 வரை அது இலங்கை மட்டத்திற்குள் நின்று செயற்பட்டது. 1983 ஆம் ஆண்டு இன அழிப்பைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் பிராந்திய மட்டத்திற்கு சென்றது. 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் மரணத்தோடு பிராந்திய மட்டத்தைத் தாண்டி சர்வதேச மட்டத்திற்கு சென்றது. 2002 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே சர்வதேச அனுசரணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை சர்வதேசம் நோக்கிய பயணத்தின் உச்சம் எனலாம்.

இலங்கை மட்டத்தை தாண்டும்வரை இலங்கை அரசு மட்டும் எதிரியாக இருந்தது. பிராந்திய மட்டத்திற்கு சென்றபோது இலங்கை அரசு, பிராந்திய வல்லரசு, சர்வதேச வல்லரசுகள் என்பன எதிரிகளாக வந்தன. இவ் மூன்று தரப்பும் இணைந்து ஆயுதப் போராட்டத்தை கொடூரமாக 2009 இல் அழித்தன. இதுதான் தமிழ் அரசியலினுடைய 2009 வரையான வரலாறு. இங்கு ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டமை ஒரு கூட்டு முயற்சி என்பதை நாம் மறக்கக் கூடாது.

2009 க்குப் பின்னர் ஆயுதப்போராட்ட அழிப்பிற்கு துணைபுரிந்த பிராந்திய வல்லரசும், சர்வதேச வல்லரசுகளும் தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கினையும், அடிப்படை அபிலாசைகளையும் கைவிடுமாறு வற்புறுத்துகின்றன. தமிழ் மக்களின் அரசியல் இலக்கினை 13 ஆவது திருத்தத்திற்குள் முடக்க முயற்சிக்கின்றன. அதற்கு நம்மவர்களையே கருவியாகப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் பிரக்ஞைபூர்வ செயற்பாட்டாளர்கள் புவிசார் அரசியல் தரும் வாய்ப்புக்களையும், சர்வதேச மட்டத்திற்குச் சென்ற தமிழ் அரசியலையையும் பயன்படுத்தி ஆயுதப் போராட்ட சக்திகள் விட்ட இடத்திலிருந்து முன்னேற முயற்சிக்கின்றனர்.

இந்த வரலாற்று ஓட்டத்தில் தான் தியாகி சிவகுமாரின் இடத்தினை நாம் மதிப்பிட வேண்டும். தியாகி சிவகுமாரன் தமிழ் அரசியல் வரலாற்றின் நான்காவது கட்டத்தின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர். ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்திலும், தமிழ் மாணவர் பேரவையிலும் அங்கம் வகித்திருக்கின்றார். தமிழ் மாணவர் பேரவையின் மத்திய குழுவிலும் அங்கத்துவம் வகித்திருக்கின்றார். தமிழ் மாணவர் பேரவை ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கின்றார்.

தியாகி சிவகுமாரன் மூன்றுவிடயங்களில் மிக உறுதியாக இருந்திருக்கின்றார். ஒன்று தமிழீழம் என்கின்ற தமிழ் நாட்டை அமைப்பது, இரண்டாவது ஆயுதப் போராட்டம் மூலமே அந்த இலக்கினை அடைந்து கொள்வது. மூன்றாவது கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு தேசிய விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது. இந்த மூன்று இலக்குகளையும் நோக்கியே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கட்டம் என்பதால் அதற்கேயுரிய நடவடிக்கைகளை சிவகுமாரன் எதிர் நோக்கினார். பொஸிசாரினதும், உளவுப்பிரிவினரதும் கெடுபிடிகள், நிதி நெருக்கடிகள், தலைமறைவு வாழ்க்கையின் நெருக்கடிகள் எனலாம் அவருக்கு ஏற்பட்டன. அக்காலத்தில் பொலீசார் சிவகுமாரன் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு 10,000 ரூபா சன்மானம் வழங்கப்படும் எனப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தனர். 70 களில் 10,000 ரூபா என்பது மிகவும் பெறுமதி வாய்ந்தது.

தற்போதுள்ளதைப் போல பொலீசாரின் வலைப்பின்னலும் வலுவாக இருந்தது. உளவுப் பிரிவில் பல பொலீசார் கடமையாற்றியிருந்தனர். சி.ஐ.டி இன்பெஸ்க்டர் பஸ்தியாம்பிள்ளை தமிழர்களை வேட்டையாடுவதில் முக்கியமான ஒருவராக விளங்கினார். இவர்களின் கண்காணிப்பிலிருந்து தப்புவது என்பது மிகக் கடினமாக இருந்தது. ஆயுதப் போராட்டம் பற்றியோ, தலைமறைவு தமிழ்த் தேசிய அரசியல் வாழ்க்கை பற்றியோ போதியளவு அனுபவமும் இருக்கவில்லை. உணர்ச்சி அரசியல் மட்டும் வழிநடத்திய காலம் அது. ஆனால் மக்களின் தார்மீக ஆதரவு மட்டும் வலுவாக இருந்தது. ஆனால் அதற்கேற்ற வகையில் மக்களுடன் வலுவான தொடர்பாடல் இருந்தது எனக் கூறமுடியாது. மக்கள் திரள் அமைப்புக்களும் போதியளவு எழுச்சி பெற்றதாக இருக்கவில்லை.

ஒரு அமைப்பு வலுவாக வளர்ந்த பின் அதில் இணைத்து செயற்படுவது பெரிய சிரமமல்ல. ஆரம்ப கட்டத்தில் அதனை வளர்த்தெடுத்து நிலைநிறுத்துவதுதான் மிகவும் சிரமமானது. சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலைமைகளில், அந்தச் சிரமம் மேலும் அதிகமாக இருந்தது. எனினும் ஆரம்பகாலத்தில் இவர்கள் பட்ட சிரமங்கள்தான் பின்னர் வலிமையான ஆயுதப் போராட்ட இயக்கங்கள் வளர்வதற்குக் காரணமாக இருந்தன. உலகில் முதலாம் நிலையில் உள்ள ஒரு விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்வதற்கும் காரணமாகியது. இந்த வகையில் ஆயுதப் போராட்டத்தின் முதற் தியாகி சிவகுமாரனேயாவான்.

சிவகுமாரனின் இன்னோர் பங்களிப்பு சமூகமாற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தமையாகும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=f34aea6b-609e-4b82-8acc-8291a68ebfb8

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.