Jump to content

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நாளை ஆரம்பம்


Recommended Posts

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நாளை ஆரம்பம்
 

2zoi6ih.jpg

 

நடப்பு சம்­பியன் ஜப்பான், தலா இரண்டு தட­வைகள் சம்பியன்­க­ளான ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஜேர்மனி, ஒரு தடவை சம்­பி­ய­னான நோர்வே உட்பட 24 நாடுகள் பங்­கு­பற்றும் ஏழா­வது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் கனடாவில் நாளை ஆரம்பமாக­வுள்­ளன.

வென்­கூவர், எட்­மொன்டன், வின்னிபெக், ஒட்டாவா, மொன்ட்றியல், மொன்க்டொன் ஆகிய நக­ரங்­களில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

 

ஆசி­யா­வி­லி­ருந்து நடப்பு உலக சம்பியன் ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, தாய்­லாந்து ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும்.

2llluz8.jpg

தாய்­லாந்து தீர்­மா­ன­மிக்க போட்­டியில் வியட்நாமை வெற்­றி­ கொண்டே இறுதிச் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்­றது.

 

இப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடுகள்:

 

குழு ஏ: கனடா, சீனா, நியூ­ஸி­லாந்து, நெதர்­லாந்து.

 

குழு பி: ஜெர்­மனி, ஐவரி கோஸ்ட், நோர்வே, தாய்­லாந்து.

 

குழு சி: ஜப்பான், சுவிட்­ஸர்­லாந்து, கமரூன், ஈக்­வடோர்.

 

குழு டி: ஐக்­கிய அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, சுவீடன், நைஜீ­ரியா.

 

குழு ஈ: பிரேஸில், தென் கொரியா, ஸ்பெய்ன், கொஸ்டா ரிக்கா.

 

குழு எவ்: பிரான்ஸ், இங்­கி­லாந்து, கொலம்­பியா, மெக்சிகோ.

 

2011வரை நடந்து முடிந்­துள்ள 6 உலகக் கிண்ண அத்தியா­யங்­களில் பிரேஸில் வீராங்­கனை மார்த்தா (மார்த்தா வியரா டா சில்வா), ஜேர்­ம­னியின் பேர்கிட் ப்றின்ஸ் ஆகி யோர் தலா 14 கோல்­களைப் புகுத்தி அதிக கோல்­களைப் போட்ட தனி­ந­பர்­க­ளுக்­கான பட்டியலில் முத­லி­டத்தைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளனர்.

ஐக்­கிய அமெரிக்காவின் அபி வம்பேக் 13 கோல்­க­ளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

 

ப்றின்ஸ் ஓய்வு பெற்­றுள்ள நிலையில் மார்த்தாவும் வம்­பெக்கும் அதிக கோல்கள் போட்டவர்கள் வரி­சையில் முத­லி­டத்தை அடைவ­தற்கு கடு­மை­யாக முயற்­சிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஆட­வ­ருக்­கான உலகக் கிண்ணப் போட்­டி­களைப் போன்றே இப் போட்டிகளும் முதல் சுற்று லீக் அடிப்படையில் நடத்­தப்­படும்.

 

லீக் சுற்று முடிவில் ஆறு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் 12 அணி­களும் அதி சிறந்த மூன்றாம் இடங்­களைப் பெறும் நான்கு அணி­களும் 16 அணிகள் கொண்ட இரண்டாம் சுற்றில் நீக்கல் முறையில் விளை­யாட தகு­தி­பெறும்.

 

தொடர்ந்து கால் இறு­திகள், அரை இறு­திகள், மூன்றாம் இடத்திற்கான போட்டி, இறுதிப் போட்டி என்­பன நடை­பெ­ற­வுள்­ளன.

 

சம்­பி­ய­னாகும் அணிக்கு சம்­பியன் கிண்­ணத்­துடன் தங்கப் பதக்கங்களும் இரண்டாம் இடத்­திற்கு வெள்ளிப் பதக்­கங்­களும் மூன்றாம் இடத்திற்கு வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

 

அத்துடன் தங்கப் பாதணி, தங்கப் பந்து, தங்கக் கையுறை ஆகிய விசேட விருதுகளும் நேர்த்தியான அணிக்கான விருதும் வழங்கப்படும்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10446#sthash.T2yiD73l.dpuf

Link to comment
Share on other sites

பெண்கள் உலக கால்பந்து: கனடா, நெதர்லாந்து வெற்றி

 

 

 

எட்மன்டன்: பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில், கனடா, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.     

 

கனடாவில், பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பிரேசில், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. எட்மன்டனில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கனடா, சீனா அணிகள் மோதின. இதில் கனடா அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கனடா சார்பில் சின்க்ளேர் (90+2 நிமிடம்) ‘பெனால்டி கிக்’ மூலம் கோல் அடித்தார்.    

 

மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் மார்டன்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு நியூசிலாந்து வீராங்கனைகளால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 1–0 என வென்றது.

 

http://sports.dinamalar.com/2015/06/1433689344/FIFAWomenWorldCupFootballCanadaNetherland.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2,w=650,c=0.bild.jpg

 

எங்கடை ஜேர்மன் சிங்கியள் வந்த வீச்சிலையே 10 கோல்........ ஒரே சாத்து flagge_smile.gif

Link to comment
Share on other sites

நார்வே, ஜெர்மனி வெற்றி

 

ஒட்டாவா: பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நார்வே, ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றன.

 

கனடாவில், பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பிரேசில், இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

 

ஒட்டாவா நகரில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் நார்வே, தாய்லாந்து அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நார்வே அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த ஜெர்மனி அணி 10–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனி சார்பில் சசிக் (3, 14, 31வது நிமிடம்), மிட்டாக் (29, 35, 64வது நிமிடம்) தலா 3 கோல் அடித்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2015/06/1433784291/Fifawomenworldcup.html

Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஐவரி கோஸ்டை 10 – 0 என வென்றது ஜேர்மனி
 

கன­டாவின் ஒட்­டாவா, லான்ஸ்­டவுன் விளை­யாட்­ட­ரங்கில் நேற்றுமுன்தினம்   நடை­பெற்ற குழு பியிற்­கான மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் ஐவரி கோஸ்ட் அணியை எதிர்த்­தா­டிய ஜேர்­மனி 10 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் அமோக வெற்­றி­யீட்­டி­யது.

 

போட்டி முழு­வதும் ஆதிக்கம் செலுத்­திய ஜேர்­மனி 3ஆவது நிமி­டத்­தி­லி­ருந்து கோல் மழை பொழியத் தொடங்­கி­யது.

1687dsj.jpg

ஜேர்­மனி சார்­பாக சசிக் (3, 14, 31 நி.), மிட்டாக் (29, 35, 64  நி.), லௌதர் (71 நி.), டப்ரிட்ஸ் (75 நி.), பெஹ்­ரிஞ்சர் (79 நி.), பொப் (89 நி.) ஆகியோர் கோல்­களைப் போட்­டனர்.

 

இதே மைதா­னத்தில் நடை­பெற்ற மற்­றொரு குழு பி போட்­டியில் தாய்­லாந்தை 4 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் நோர்வே வெற்­றி­கொண்­டது.

 

நோர்வே சார்­பாக ரொன்னிங் (15 நி.), ஹேர்­லவ்சன் (29, 34 நி.), ஹேகர்பேர்க் (68 நி.) ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10501#sthash.cBNVJlPf.dpuf

Link to comment
Share on other sites

நடப்பு சம்பியன் ஜப்பானுக்கு இறுக்கமான வெற்றி
 

 

கன­டாவில் நடை­பெற்­று­வரும் ஏழா­வது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்­டி­களில் நடப்பு சம்­பி­ய­னான ஜப்பான் தனது ஆரம்பப் போட்­டியில் பெனல்டி கோல் ஒன்றின் மூலம் சுவிட்­ஸர்­லாந்தை வெற்றி கொண்­டுள்­ளது.

 

வன்­கூவர் பி சி பிளேஸ் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற குழு சியிற்­கான இப்போட்­டியில் இரண்டு அணி­யி­னரும் சரி­ச­ம­மாக மோதிக்கொண்­டனர்.

எனினும் போட்­டியின் 29ஆவது நிமி­டத்தில் தனது அணிக்கு கிடைத்த பெனல்டியை இலக்கு தவ­றாமல் கோலினுள் புகுத்­திய அணித் தலைவி ஆயா மியாமா, ஜப்­பானை முன்­னி­லையில் இட்டார்.

 

 

அதன் பின்னர் இரண்டு அணி­யி­ன­ராலும் கோல் போடப்­ப­டாத நிலையில் ஜப்பான் 1 – 0 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

 

இதே குழு­வுக்­கான மற்­றொரு போட்­டியில் ஈக்­வ­டோரை 6 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் கெமரூன் துவம்சம் செய்­தது.

 

வினிபெக் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற சுவீ­ட­னுக்கும் நைஜீ­ரி­யா­வுக்கும் இடை­யி­லான குழு டி போட் 3 – 3 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­ தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

 

இக் குழு­வுக்­கான மற்­றைய போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யாவை எதிர்த்­தா­டிய ஐக்­கிய அமெ­ரிக்கா 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

 

இன்று ஓய்வு தினமாகும். குழு நிலைப் போட்டிகள் நாளை தொடரும்.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10522

Link to comment
Share on other sites

பிரேசில் அணி வெற்றி

 

மான்ட்ரியல்: பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 2–0 என தென் கொரியாவை வீழ்த்தியது.                        

கனடாவில், பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. ‘இ’ பிரிவு லீக் போட்டியில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின. முதல் பாதியின் 33வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பார்மிகா ஒரு கோல் அடித்தார். 53வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கிக்’ வாய்ப்பை மார்டா கோலாக மாற்ற, பிரேசில் அணி 2–0 என வெற்றி பெற்றது.

 

பிரான்ஸ் அசத்தல்: ஸ்பெயின், கோஸ்டாரிகா அணிகள் மோதிய மற்றொரு ‘இ’ பிரிவு லீக் போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது. இங்கிலாந்துக்கு எதிரான ‘எப்’ பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 1–0 என வெற்றி பெற்றது. இதன் மூலம், 1974ம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாக இங்கிலாந்தை வீழ்த்தியது.            

      

கொலம்பியா, மெக்சிகோ அணிகள் மோதிய போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது.          

                    

‘சூப்பர்’ மார்டா      

நேற்று அசத்திய பிரேசிலின் மார்டா, உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இவர் 15 போட்டிகளில் 15 கோல் அடித்துள்ளார். இதற்கு முன் ஜெர்மனியின் பிர்ஜிட் பிரின்ஸ் 14 கோல் அடித்திருந்தார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433943051/FIFAWomensWorldCupFootballBrazil.html

Link to comment
Share on other sites

‘நாக்–அவுட்’ சுற்றில் ஜப்பான்: உலக கால்பந்தில் முன்னேற்றம்

 

வான்கூவர்: பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு ஜப்பான் அணி முன்னேறியது.

கனடாவில், பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

 

வான்கூவர் நகரில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், காமரூன் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணிக்கு சமேஷிமா (6வது நிமிடம்), சுகாசவா (17வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதற்கு காமரூன் வீராங்கனைகளால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் கடைசி நிமிடத்தில் காமரூன் வீராங்கனை அஜாரா ஒரு கோல் அடித்தார்.

 

ஆட்டநேர முடிவில் ஜப்பான் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே சுவிட்சர்லாந்தை வீழ்த்திய ஜப்பான் அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்து ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.

 

கோல் மழை: மற்றொரு ‘சி’ பிரிவு போட்டியில் சுவிட்சர்லாந்து, ஈகுவடார் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்தின் ஹம் (47, 49, 52வது நிமிடம்), பாக்மன் (60, 61, 81வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தனர். தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்ற காமரூன் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. வரும் ஜூன் 16ல் எட்மன்டனில் நடக்கவுள்ள சுவிட்சர்லாந்து, காமரூன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

 

ஆஸி., வெற்றி: வின்னிபெக் நகரில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, நைஜீரியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது. அமெரிக்கா, சுவீடன் அணிகளுக்கு இடையிலான மற்றொரு ‘டி’ பிரிவு போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது.

 

http://sports.dinamalar.com/2015/06/1434173065/WomenFIFAWorldCupFootballJapanCamaroon.html

Link to comment
Share on other sites

பெண்கள் கால்பந்து: அடுத்த சுற்றில் பிரேசில்

 

மான்ட்ரியல்: பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த சுற்றுக்கு பிரேசில் அணி முன்னேறியது.

கனடாவில் பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

 

மான்ட்ரில் நகரில் நடந்த ‘இ’ பிரிவு லீக் போட்டியில் பிரேசில், ஸ்பெயின் அணிகள் மோதின. இதன் 44வது நிமிடத்தில் ஆண்ட்ரிசா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் பிரேசில் முன்னிலை பெற்றது. இறுதி வரை போராடியும் ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில், பிரேசில் அணி 1–0 என வெற்றி பெற்றது.

ஏற்கனவே தென் கொரியாவை வீழ்த்திய பிரேசில் அணி இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று ‘ரவுண்ட்–16’ சுற்றுக்கு முன்னேறியது.

 

தென் கொரியா, கோஸ்டாரிகா அணிகள் மோதிய மற்றொரு ‘இ’ பிரிவு லீக் போட்டி 2–2 என ‘டிரா’ ஆனது.

 

‘எப்’ பிரிவு லீக் போட்டியில் கொலம்பியா அணி 2–0 என பிரான்சை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி 1–0 என மெக்சிகோவை தோற்கடித்தது.

 

http://sports.dinamalar.com/2015/06/1434261971/brazilteamworldcup.html

Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் சுவிட்சர்லாந்து சாதனைமிகு 10– 1 வெற்றி
 

கன­டாவில் நடை­பெற்­று­வரும் ஏழா­வது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்­டி­களில் ஜேர்­ம­னியைத் தொடர்ந்து ஒரு போட்­டியில் பத்து கோல்கள் குவித்த இரண்­டா­வது அணி என்ற பெரு­மையை சுவிட்ஸர்லாந்து பெற்­றுள்­ளது.

ஈக்­வ­டோரை 10 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் சுவிட்­ஸர்­லாந்து துவம்சம் செய்­தது.

 

வான்­கூ­வரில் நடை­பெற்ற குழு சிக்­கான இப் போட்­டியில் ஈக்­வ­டோரின் போன்ஸ் என்ற வீராங்­கனை இரண்டு கோல்­களை தான­மாக வழங்­கி­யமை விசேட அம்­ச­மாகும்.

 

சுவிட்­சர்­லாந்து சார்­பாக ஃபேபியன் ஹும், பெச்மான் ஆகிய இரு­வரும் தலா 3 கோல்­களைப் போட்­ட­துடன் எய்க்­போகன், மோசெர் ஆகியோர் தலா ஒரு கொலைப் போட்­டனர்.

 

ஏனைய லீக் போட்டி முடி­வுகள் வரு­மாறு

 

குழு சி ஜப்பான் 2 எதிர் கமறூன் 1

குழு டி அவுஸ்­தி­ரே­லியா 2 எதிர் நைஜீ­ரியா 0


குழு டி ஐக்­கிய அமெ­ரிக்கா 0 எதிர் சுவீடன் 0

குழு ஈ பிறேஸில் 1 எதிர்


ஸ்பெய்ன் 0

குழு ஈ தென் கொரியா 2 எதிர் கொஸ்தா ரிக்கா 2


குழு எவ் கொலம்­பியா 2 எதிர் பிரான்ஸ் 0

குழு எவ் இங்கிலாந்து 2 எதிர் மெக்ஸிகோ 1

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10589

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2,w=559,c=0.bild.jpg

 

ஜேர்மன் சிங்கிமார் தாய்லாந்து குடுக்கையளுக்கும் ஒரே சாத்துப்படிதான்  :D

 

2,w=559,c=0.bild.jpg

Link to comment
Share on other sites

பெண்கள் கால்பந்து: அடுத்த சுற்றில் ஜெர்மனி, கனடா
ஜூன் 16, 2015.

 

வின்னிபெக்: பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி, கனடா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

 

கனடாவில் பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

 

வின்னிபெக் நகரில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி, தாய்லாந்து அணிகள் மோதின. துவக்க முதலே ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 24வது நிமிடத்தில் ஜெர்மனி வீராங்கனை மெலினி ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் பீட்டர்மான் (56, 58) இரண்டு கோல் அடிக்க ஜெர்மனி வலுப்பெற்றது. தன் பங்கிற்கு சாராவும் (73) ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய தாய்லாந்து வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில், ஜெர்மனி அணி 4–0 என வெற்றி பெற்றது.

 

ஏற்கனவே ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்திய ஜெர்மனி 7 புள்ளியுடன் ‘ரவுண்ட்–16’ சுற்றுக்கு முன்னேறியது.

 

‘பி’ பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் நார்வே அணி 3–1 என ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

 

கனடா அசத்தல்:

தொடரை நடத்தும் கனடா, நெதர்லாந்து அணிகள் மோதிய லீக் போட்டி ‘1–1’ என டிரா ஆனது. ஏற்கனவே சீனாவை வீழ்த்திய கனடா அணி (5 புள்ளி) ‘ரவுண்ட்–16’ சுற்றுக்கு முன்னேறியது.

 

சீனா, நியூசிலாந்து அணிகள் மோதிய ’ஏ’ பிரிவு லீக் போட்டி 2–2 என ‘டிரா’ ஆனது. இருப்பினும் 4 புள்ளிகள் பெற்ற சீனா அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

 

http://sports.dinamalar.com/2015/06/1434437283/germanysoccer.html

Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2ஆம் சுற்றில் மேலும் நான்கு நாடுகள்
 

 

கன­டாவில் நடை­பெற்­று­வரும் மகளிர் உலகக் கிண்ணப் போட்­டி­களில் குழு ஏ இ­லி­ருந்து கனடா, சீனா ஆகிய நாடு­களும் குழு பி இ­லி­ருந்து ஜெர்­மனி, நோர்வே ஆகிய நாடு­களும் இரண்டாம் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்­றுள்­ளன.

 

இரண்டாம் சுற்­றுக்கு வர­வேற்பு நாடு என்ற வகையில் தகு­தி­பெற்­ற­தை­யிட்டு கனடா மிகந்த மகிழ்ச்­சியும் திருப்­தியும் அடைந்­துள்­ளது.

இந்தக் குழுக்­க­ளுக்­கான லீக் சுற்றுப் போட்­டிகள் நேற்­று­முன்­தினம் நிறை­வு­பெற்­ற­துடன் இரண்டு குழுக்­களில் இந்த நாடுகள் முறையே முத­லி­ரண்டு இடங்­களைப் பெற்­றுள்­ளன.

குழு ஏ இற்­காக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இரண்டு போட்டிகளும் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தன.

 

கன­டா­வுக்கும் நெதர்­லாந்­துக்கும் இடை­யி­லான போட்டி 1–1 எனவும் சீனா­வுக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் இடை­யி­லான போட்டி 2 – 2 எனவும் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தன.

 

இதனையடுத்து இக்குழுவில் 5 புள்­ளி­க­ளுடன் கனடா முதலாம் இடத்தைப் பெற்­றுக்­கொண்­டது.

சீனாவும் நெதர்­லாந்தும் தலா 4 புள்­ளி­களைப் பெற்றிருந்தபோதிலும் அதிக கோல்­களைப் போட்ட அணி என்ற அடிப்­ப­டையில் சீனா இரண்டாம் இடத்தைப் பெற்று கன­டா­வுடன் இரண்டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

 

குழு பி இல் தாய்­லாந்தை எதிர்­கொண்ட ஜெர்­மனி மிக இல­கு­வாக 4-0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யது.

ஐவரி கோஸ்டை சந்­தித்த நோர்வே 3 – 1 என வெற்­றி­பெற்­றது.

 

இந்த முடி­வு­களை அடுத்து குழு பி இல் ஜெர்­ம­னியும் நோர்­வேயும் தலா 7 புள்­ளி­க­ளுடன் சிறந்த கோல் பெறு­தி­களின் அடிப்­ப­டையில் முத­லி­ரண்டு இடங்­களைப் பெற்று இரண்டாம் சுற்றில் நுழைந்­தன.

 

எவ்­வா­றா­யினும் குழு ஈயில் 2 வெற்­றி­களை ஈட்டி 6 புள்­ளி­களைப் பெற்­றுள்ள பிரேஸில் இன்னும் ஒரு போட்டி மீத­மி­ருக்­கின்ற நிலையில் இரண்டாம் சுற்றில் விளை­யாட முதலாவது அணியாக தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இக் குழுவில் வேறு எந்த அணிக்கும் 5 புள்ளிகளுக்கு மேல் பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10648

Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கோப்பை: கேமரூன், ஜப்பான் முன்னேற்றம்
 

 

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு கேமரூன், ஜப்பான் அணிகள் முன்னேறியுள்ளன.

 

கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. இதன்மூலம் சி பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த ஜப்பான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

 

எட்மாண்டன் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்திய கேமரூன் 6 புள்ளிகளுடன் சி பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் அந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்தது. யாரும் எதிர்பாராத கத்துக்குட்டி அணியான கேமரூன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து நைஜீரியா 1999-ல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதற்கடுத்தபடியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய 2-வது ஆப்பிரிக்க அணி கேமரூன் ஆகும்.

 

இதுதவிர நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 3-வது இடத்தைப் பிடித்த சிறந்த 4 அணிகளின் அடிப்படையில் நெதர்லாந்தும், ஸ்விட்சர்லாந்தும் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளன.

 

ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நெதர்லாந்து அணி கனடா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தைப் பிடித்தது. சி பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், கேமரூனுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தைப் பிடித்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7328794.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை: 4 அணிகள் முன்னேற்றம்
 

 

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து, கொலம்பியா, தென் கொரியா ஆகிய 4 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கொலம்பியா மட்டும் 3-வது இடத்தைப் பிடித்த சிறந்த அணிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

 

ஒட்டாவாவில் நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் எப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த பிரான்ஸ் அடுத்த சுற்றை உறுதி செய்தது.

 

மான்ட்ரியாலில் நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி 6 புள்ளிகளைப் பெற்றது. கோல் வித்தியாச அடிப்படையில் 2-வது இடத்தைப் பிடித்த அந்த அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

இ பிரிவு லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்த தென் கொரிய அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியிருக்கும் தென் கொரியா, அதில் பிரான்ஸை சந்திக்கிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7332502.ece

Link to comment
Share on other sites

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி

 

 

germany, soccer

ஒடாவா: பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி, சீன அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 

கனடாவில், பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ‘ரவுண்ட்–16’ சுற்றுகள் நடக்கின்றன. 

ஒடாவாவில் நடந்த போட்டியில் ஜெர்மனி, சுவீடன் அணிகள் மோதின. ஜெர்மனி அணியின் மிட்டாக் 24வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து சசிக் (36, 78வது நிமிடம்) இரண்டு கோல் அடித்து ஜெர்மனி அணியை வலுப்படுத்தினார். கடைசி (82) கட்டத்தில் சுவீடன் அணியின் லின்டா ஒரு கோல் அடித்தார். இதற்கு ஜெர்மனியின் மரோசான் (88) ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். முடிவில், ஜெர்மனி அணி 4–1 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. 

எட்மன்டான் நகரில் நடந்த மற்றொரு ‘ரவுண்ட்–16’ சுற்றில் சீன அணி 1–0 என காமரூனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

 

http://sports.dinamalar.com/2015/06/1434869736/germanysoccer.html

Link to comment
Share on other sites

இரண்டாம் சுற்றில் ஆஸியிடம் பணிந்தது பிரேஸில் பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளும் கால் இறுதியில்
 

கன­டாவில் நடை­பெற்­று­வரும் மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் இரண்டாம் சுற்றுப் போட்­டியில் பலம் வாய்ந்த பிரே­ஸிலை எதிர்­கொண்ட அவுஸ்­தி­ரே­லியா, போட்­டியின் 80ஆவது நிமி­டத்தில் கியா சைமன் போட்ட கோலின் உத­வி­யுடன் 1 – 0 என வெற்­றி­யீட்டி கால் இறுதி தகு­தியைப் பெற்றுக்­கொண்­டது.

 

10742kyah-simon-no-17.jpg

பிரேஸிலுக்கு எதிராக வெற்றிக் கோலைப் போட்ட அவுஸ்திரேலியாவின் கியான சைமன் (இலக்கம் 17), சக வீராங்கனைகளான கேட்ரினா கொரி (19), எலிஸ் கெலொண்ட் நைட் (8) ஆகியோருடன் குதூகலிப்பதைப் படத்தில் காணலாம்.

......................................................................................................................................................

 

 

இந்த உலகக் கிண்ணப் போட்­டி­களில் எதி­ர­ணிக்கு ஒரு கோலைத்­தானும் விட்­டுக்­கொ­டுக்­காமல் இருந்த பிரே­ஸி­லுக்கு எதி­ராக கோல் போட்ட முதலாவது நாடு என்ற பெரு­மையை அவுஸ்­தி­ரே­லியா பெற்றுக்கொண்டமையும் விசேட அம்­ச­மாகும்.

 

அத்­துடன் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட அரங்கில் உலகக் கிண்­ணங்­க­ளுக்­கான சகல­வி­த­மான சிரேஷ்ட பிரி­வி­ன­ருக்­கான போட்­டி­க­ளிலும் அவுஸ்­தி­ரே­லியா கால் இறு­திக்கு முன்­னே­றி­யி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும்.

 

மொன்க்­டனில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பிரே­ஸி­லுக்கும் அவுஸ்திரேலி­யா­வுக்கும் இடை­யி­லான போட்டி மிகவும் பர­ப­ரப்பை ஏற்படுத்து­வ­தாக அமைந்­தது.

 

இரண்டு அணி­களும் சில வாய்ப்­பு­களைத் தவ­ற­விட்ட நிலையில் போட்­டியின் 80ஆவது நிமி­டத்தில் அவுஸ்­தி­ரே­லிய வீராங்­கனை கியா சைமன், கோல் போட்டு பிரே­ஸிலை அதிரச்செய்தார்.

 

பிரான்­ஸுக்கு இல­கு­வான வெற்றி

 

மொன்ட்­றியல் ஒலிம்பிக் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மற்­றொரு இரண்டாம் சுற்றுப் போட்­டியில் தென் கொரி­யாவை 3 – 0 என வெற்­றி­கொண்ட பிரான்ஸும் கால் இறு­தியில் விளை­யாட தகு­தி­பெற்­றது.

 

பிரான்ஸ் சார்­பாக டெலி (4 நி., 48 நி.), தோமிஸ் (8 நி.) ஆகியோர் கோல்­களைப் போட்­டனர்.

 

கால் இறு­தியில் கனடா

 

மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னின்று நடத்தும் கன­டாவும் கால் இறு­தியில் விளை­யாட தகு­தி­ பெற்­றுக்­கொண்­டது. 

 

வான்­கூவர் பி சி ப்ளேஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் இறுக்கமான போட்டியின் 52 ஆவது நிமிடத்தில் பெலெஞ்சர் போட்ட கோல் கனடாவை கால் இறுதிக்குள் இட்டுச் சென்றது.

 http://www.metronews.lk/article.php?category=sports&news=10743  

Link to comment
Share on other sites

 
மகளிர் உலகக் கிண்ண கால் இறுதிகளில் ஜேர்மனி, சீனா
2015-06-22 11:05:44

கன­டாவில் நடை­பெற்­று­வரும் மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் கால் இறு­தி­களில் விளை­யா­டு­வ­தற்கு ஜேர்­ம­னியும் சீனாவும் முத­லி­ரண்டு நாடு­க­ளாகத் தகு­தி­பெற்­றுள்­ளன.

 

லன்ஸ்டௌன் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற சுவீடனுக்கு எதி­ரான இரண்டாம் சுற்று போட்­டியில் 4 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் ஜேர்­மனி வெற்­றி­யீட்­டி­யது.

 

10725germany-women-wc.jpg

 

அஞ்சா மிட்டக் (24 நி.), சசிக் ( 36 நி. பெனல்டி, 78 நி.), சிமோனி லௌதர் (88 நி) ஆகியோர் ஜேர்­மனி சார்­பா­கவும் செம்ப்ரான்ட் (82 நி.) சுவீடன் சார்­பா­கவும் கோல்­களைப் போட்­டனர்.

 

இதே­வேளை, கொமன்வெல்த் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மற்­றொரு இரண்டாம் சுற்று போட்­டியில் கெம­ரூ­னிடம் கடும் சவாலை எதிர்­கொண்ட சீனா 1 க்கு 0 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

 

107263799462.jpg

 

சீனா சார்­பாக 12ஆவது நிமி­டத்தில் வெங் ஷான்ஷான் கோல் போட்டார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10726#sthash.IdUZYI4O.dpuf
Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி; நடப்பு சம்பியன் ஜப்பான் கால் இறுதிக்கு தகுதி
2015-06-25 10:44:11

நெதர்லாந்துக்கு எதிராக வான்கூவர் பி சி ப்ளேஸ் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 2 க்கு 1 என்ற கோல் கள் அடிப்படையில் வெற்றிபெற்ற நடப்பு உலக சம்பியன் ஜப்பான், மகளிர் உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாட தகுதி பெற்றது.

 

1077931.jpg

 

இந்த வெற்றியை அடுத்து, கால் இறுதியில் அவுஸ்திரேலியாவை ஜப்பான் எதிர்த்தாடவுள்ளது.

 

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ள இரண்டு ஆசிய நாடு களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாட நேரிட்டுள்ளமை துரதிர்ஷ்டமாகும்.

 

நெதர்லாந்துடனான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் திறமையாக விளையாடிய ஜப்பான் சார்பாக 10ஆவது நிமிடத்தில் அரியோஷியும் 78ஆவது நிமிடத்தில் சகாகூச்சியும் கோல்களைப் போட்டனர்.

 

போட்டி முடிவடைய ஒருசில நிமிடங்கள் இருந்தபோது நெதர்லாந்து சார்பாக வன் டி வென் ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார்.

 

கால் இறுதிப் போட்டிகள் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10779#sthash.GOpbDYZg.dpuf
Link to comment
Share on other sites

கால்பந்து:அரையிறுதியில் இங்கிலாந்து

 

england team, soccer

வான்கூவர்: பெண்கள் உலக கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி முதல் முறையாக முன்னேறியது. காலிறுதியில் கனடாவை சொந்த மண்ணில் வீழ்த்தியது. 

கனடாவில் பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. வான்கூவரில் நடந்த காலிறுதியில் இங்கிலாந்து, கனடா அணிகள் மோதின. துவக்கம் முதலே இங்கிலாந்து அணி அசத்தியது. போட்டியின் 11வது நிமிடத்தில் டெய்லர் ஒரு கோல் அடித்தார். அடுத்த சில (14) நிமிடத்தில் தன் பங்கிற்கு இங்கிலாந்தின் லுாசி பிரான்ஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதற்கு 42வது நிமிடத்தில் எதிரணியின் கிறிஸ்டினா கோல் அடித்து பதிலடி தந்தார். இரண்டாவது பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில், இங்கிலாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இத்தொடரில் முதல் முறையாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதற்கு முன் இரண்டு (2007, 2011) முறை காலிறுதி வரை மட்டுமே முன்னேறியிருந்தது. 

மற்றொரு காலிறுதியில் ஜப்பான் அணி 1–0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அரையிறுதியில் ஜப்பான், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

http://sports.dinamalar.com/2015/06/1435472863/englandteamsoccer.html

Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில் ஜெர்மனி-அமெரிக்கா மோதல்

 
 
பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸின் கோல் வாய்ப்பை முறியடிக்கிறார் ஜெர்மனி கோல் கீப்பர் நேடின் ஆங்கர். இந்த கோல் முறியடிக்கப்பட்டதால்தான் ஜெர்மனி வெற்றி கண்டது. | படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போரட்ஸ்
பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸின் கோல் வாய்ப்பை முறியடிக்கிறார் ஜெர்மனி கோல் கீப்பர் நேடின் ஆங்கர். இந்த கோல் முறியடிக்கப்பட்டதால்தான் ஜெர்மனி வெற்றி கண்டது. | படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போரட்ஸ்

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் 2003, 2007 சாம்பியனான ஜெர்மனியும், 1991, 1999 சாம்பியனான அமெரிக்காவும் மோதவுள்ளன.

ஜெர்மனி தனது காலிறுதியில் பிரான்ஸையும், அமெரிக்கா தனது காலிறுதியில் சீனாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

கனடாவின் மான்ட்ரியால் நகரில் 25 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை அணியான ஜெர்மனி, பிரான்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸின் நெசிப் 64-வது நிமிடத்திலும், ஜெர்மனியின் சசிச் 84-வது நிமிடத்திலும் கோலடிக்க, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப் பட்டது. அந்த 30 நிமிடத்தில் இரு அணிகளும் கோலடிக்காததைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5 வாய்ப்புகளிலும் கோலடித்த ஜெர்மனி, 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது.

ஒட்டாவாவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. அமெரிக்கா தரப்பில் கார்லி லாய்ட் 51-வது நிமிடத்தில் கோலடித்தார்.

http://tamil.thehindu.com/sports/மகளிர்-உலகக்-கோப்பை-கால்பந்து-அரையிறுதியில்-ஜெர்மனிஅமெரிக்கா-மோதல்/article7363849.ece

Link to comment
Share on other sites

நடப்பு சம்­பியன் ஜப்­பா­னுக்கு வெற்றி! வர­வேற்பு நாடு கன­டா­வுக்கு தோல்வி!!
2015-06-29 11:14:13

கன­டாவில் நடை­பெற்­று­வரும் ஏழா­வது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்­டி­களில் மாற்று வீராங்­கனை மானா இவா­புச்­சியின் கடைசி நேர கோலின் உத­வி­யுடன் அவுஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான கால் இறுதியில் 1 – 0 என வெற்­றி­யீட்­டிய நடப்பு சம்­பியன் ஜப்பான் அரை இறு­திக்கு முன்­னே­றி­யது.

 

இதே­வேளை கடைசி கால் இறுதிப் போட்­டியில் இங்­கி­லாந்­திடம் 2–1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் தோல்வி அடைந்த போட்­டி­களை முன்­னின்று நடத்தும் கனடா, ஏமாற்­றத்­துடன் வெளி­யே­றி­யது.

 

எட்­மன்டன், பொது­ந­ல­வாய விளை­யாட்­ட­ரங்கில் இரண்டு ஆசிய நாடுகள் மோதிக்­கொண்­டன முத­லா­வது கால் இறுதிப் போட்­டியில் எந்த அணி வெற்றி­பெறும் என்று கூற­மு­டி­யாத அள­வுக்கு விறு­வி­றுப்பைத் தோற்­று­வித்த வண்ணம் இருந்­தது.

 

போட்­டியின் 72ஆவது நிமி­டத்தில் ஜப்­பானின் மாற்று வீராங்­க­னை­யாக களம் புகுந்த மானா இவா­புச்சி, அடுத்த 15ஆவது நிமி­டத்தில் கோல் ஒன்றைப் போட்டு அவுஸ்­தி­ரே­லி­யாவைப் பிர­மிப்பில் ஆழ்த்­தினார்.

 

10830japan-joy-ausie-ectasy.jpg

 

கன­டா­வுக்கு ஏமாற்றம்

 

வான்­கூவர் பி சி ப்ளேஸ் விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற வரவேற்பு நாடான கன­டா­வுக்கு எதி­ரான கடைசி கால் இறுதிப் போட்­டியின் ஆரம்பக் கட்­டத்தில் போட்ட இரண்டு கோல்­களின் உத­வி­யுடன் 2–1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இங்­கி­லாந்து வெற்­றி­யீட்டி அரை இறு­தியில் விளை­யாட தகு­தி­பெற்­றது.

 

ஜோடி டெய்லர் (11ஆவது நிமிடம்), லூசி ப்ரொன்ஸ் (14ஆவது நிமிடம்) ஆகிய இரு­வரும் மூன்று நிமிட இடை­வெ­ளியில் இரண்டு கோல்களைப் போட்டு இங்­கி­லாந்தை முன்­னி­லையில் இட்­டனர்.

 

போட்­டியின் 42ஆவது நிமி­டத்தில் கிறிஸ்டின் சின்கி­ளயார் கோல் போட்டு கன­டா­வுக்கு உற்­சா­கத்தை ஊட்­டினார்.

 

ஆனால் இங்­கி­லாந்து வீராங்­க­னைகள் சாது­ரி­ய­மாக விளை­யாடி அரை இறுதி வாய்ப்பைப் பெற்­றுக்­கொண்­டனர்.

 

பெனல்டி முறையில் ஜேர்­மனி வெற்றி

 

வெள்­ளி­யன்று நடை­பெற்ற முத­லா­வது கால் இறு­தியில் பிரான்ஸை 5 – 4 என்ற பெனல்டி அடிப்­ப­டையில் ஜேர்­மனி வெற்­றி­கொண்­டது.

 

இப் போட்டி முழு நேரத்தைத் தொட்­ட­போது இரண்டு அணி­களும் தலா ஒரு கோலைப் போட்­டி­ருந்­தன.

 

பெனல்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது முதல் நான்கு பெனல்­டி­க­ளையும் ஜேர்­ம­னியும் பிரான்ஸும் மாறி­மாறி போட்­டன.

 

108303821494.jpg

 

ஐந்­தா­வது பெனல்­டியை ஜேர்­மனிய வீராங்கனை கோலினுள் செலுத்­தி­ய­போ­திலும் பிரான்ஸ் வீராங்­க­னையின் பெனல்­டியை ஜேர்­மனி கோல்­காப்­பாளரான அணித் தலைவி நாடின் ஏஞ்­சரர் தடுத்து நிறுத்தி தனது அணிக்கு அரை இறுதி வாய்ப்பைப் பெற்­றுக்­கொ­டுத்தார்.

 

இரண்­டா­வது கால் இறு­தியில் சீனாவின் கடும் சவா­லுக்கு மத்­தியில் 1 – 0 என ஐக்­கிய அமெ­ரிக்கா வெற்­றி­பெற்­றது.டின் ஏஞ்சரர் தடுத்து நிறுத்தி தனது அணிக்கு அரை இறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.

 

இரண்டாவது கால் இறுதியில் சீனாவின் கடும் சவாலுக்கு மத்தியில் 1 – 0 என ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெற்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10830#sthash.jmpFBfnT.dpuf
Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் மீண்டும் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான்
2015-07-03 11:33:48


ஜேர்­ம­னியில் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர்  நடை­பெற்ற ஆறா­வது மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட அத்­தி­யா­யத்தில் சம்­பி­ய­னான ஜப்­பானும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஐக்­கிய அமெ­ரிக்காவும் ஏழா­வது அத்­தி­யா­யத் தின் இறுதி ஆட்­டத்தில் சந்­திக்கத் தகு­தி­பெற்­றுள்­ளன.

 

இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான இறுதி ஆட்டம் கன­டாவின் வான் ­கூவர் பி சி ப்ளேஸ் விளை­யாட்­ட­ரங்கில் நாளை­ம­று­தினம் நடை­பெ­ற­வுள்­ளது.

 

10921us-team.jpg

 

ஜேர்­ம­னி­யு­ட­னான அரை இறுதி ஆட்­டத்தில் ஐக்­கிய அமெ­ரிக்கா எவ்­வாறு அதிர்ஷ்­ட­வ­ச­மாக வெற்­றி­பெற்­றதோ அதே­போன்று இங்­கி­லாந்­து­டான இரண்­டா­வது அரை இறு­தியில் ஜப்­பானும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக வெற்­றி­பெற்­றது.

 

இங்­கி­லாந்­துக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் கன­டாவின் எட்­மன்டன் பொது­ந­ல­வாய விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற மிகவும் இறுக்­க­மான அரை இறுதிப் போட்­டியின் உபாதை ஈடு (இஞ்­சரி டைம்) நேரத்­தின்­போது கிடைக்­கப்­பெற்ற இனாம் (ஓன் கோல்) கோலின் உத­வி­யுடன் மகளிர் உலகக் கிண்ண இறுதி ஆட்­டத்தில் மீண்டும் விளை­யா­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் நடப்பு சம்­பியன் ஜப்­பா­னுக்கு கிட்­டி­யது.

 

இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் இரண்டு அணி­யி­னரும் மிகவும் உக்­கி­ர­ம­மா­கவும் முரட்­டுத்­த­ன­மாகவும் மோதிக்­கொண்­டதன் கார­ண­மாக இரண்டு பெனல்­டிகள் வழங்­கப்­பட்­டன.

 

போட்­டியின் 31 ஆவது நிமி­டத்தில் ஜப்பான் வீராங்கனை சயோரி அரி­யோ­ஷியை தனது கோல் எல்­லையில் இங்­கி­லாந்தின் கிளயார் ரஃவர்ட்டி முர­ணான வகையில் வீழ்த்­தி­யதால் ஜப்­பா­னுக்கு பெனல்டி வழங்­கப்­பட்­டது.

 

இந்த பெனல்­டியை 33 ஆவது நிமி­டத்தில் ஆய்யா மியாமா இலக்கு தவ­றாமல் கோலினுள் புகுத்தி ஜப்­பானை முன்­னி­லையில் இட்டார்.

 

ஏழு நிமி­டங்கள் கழித்து ஜப்பான் கோல் எல்­லையில் இங்­கி­லாந்து வீராங்­கனை ஸ்டெவ் ஹுட்­டனை யூக்கி ஒஜிமி முர­ணான வகையில் வீழ்த்­தி­யதால் இங்­கி­லாந்­துக்கு பெனல்டி ஒன்று வழங்­கப்­பட்­டது.

 

10921japan-women-team.jpg

 

இந்தப் பெனல்டி மூலம் கோல் நிலையை 1–1 என ஃபாரா வில்லியம்ஸ் சமப்­ப­டுத்­தினார்.

 

அதன் பின்னர் இரண்டு அணி­யி­னரும் வெற்றிக் கோலுக்­காக கடு­மை­யாக முயற்­சித்­த­வண்ணம் இருந்­தனர்.

 

போட்டி முடி­வ­டைய ஓரிரு நிமி­டங்கள் இருந்­த­போது இங்­கி­லாந்து வீராங்­கனை பஸெட் தனது கோலை நோக்கி வந்து பந்தை திசை திருப்ப விளைந்­த­போது பந்து அவ­ரது சொந்த கோலினுள் சென்­றதால் ஜப்­பா­னுக்­கான வெற்றி கோல் இனா­மாகக் கிடைத்­தது. 

 

இறுதி ஆட்டம் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் இடை­யி­லான இறுதி ஆட்­டமும் மிகவும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான இறுதி ஆட்டம் மேல­திக நேர ஆட்ட நிறை­வின்­போதும் 2–2 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தி­ருந்­தது.

 

இதனை அடுத்து வழங்­கப்­பட்ட பெனல்டி முறையில் 3–2 என ஜப்பான் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தது.

 

எனவே, இம்­முறை இறுதிப் போட்டியும் மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படு கின்றது.

 

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான மூன் றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டி எட்மன்டன் பொதுநலவாய விளை யாட்டரங்கில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

http://www.metronews.lk/article.php?category=sports&news=10921

Link to comment
Share on other sites

இங்கிலாந்து 3வது இடம்

Fara Williams, soccer

எட்மான்டன்: பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி 3வது இடம் பிடித்தது. நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி அணியை 1–0 என வீழ்த்தியது. 

கனடாவில், பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 3–4வது இடத்திற்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியிலும் சம பலத்தை வெளிப்படுத்த கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 

இதனையடுத்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. இதில் ஜெர்மனியின் கெம்மி, இங்கிலாந்தின் லியானா சாண்டர்சனை ‘பவுல்’ செய்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் (90+18 நிமிடம்) இங்கிலாந்தின் பாரா வில்லியம்ஸ் கோல் அடித்து அசத்தினார். முடிவில், இங்கிலாந்து அணி 1–0 என வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது. 

இந்த வெற்றியின் மூலம், இத்தொடரில் முதல் முறையாக 3வது இடம் பிடித்தது. இதற்கு முன் இரண்டு (2007,11) முறை காலிறுதி வரை மட்டுமே முன்னேறியிருந்தது. 

http://sports.dinamalar.com/2015/07/1436119406/FaraWilliamssoccer.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.