Jump to content

ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு


Recommended Posts

ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு
 

 

புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது.    

 

 zmyvc2.jpg

 

பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.     

நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. வரும் அக்., 3ல் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, சென்னை அணிகள் மோதுகின்றன. இத்தொடருக்கான துவக்க விழா சென்னையில் நடக்கவுள்ளது.     

 

வரும் அக்., 4ல் கோவாவில் நடக்கவுள்ள போட்டியில் கோவா, டில்லி அணிகள் மோதுகின்றன. மும்பையில், வரும் அக்., 5ல் நடக்கும் போட்டியில் மும்பை, புனே அணிகள் விளையாடுகின்றன. கடந்த ஆண்டு பைனல் வரை முன்னேறிய கேரளா அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை வரும் அக்., 6ல் கொச்சியில் எதிர்கொள்கிறது. டில்லி, புனே, வடகிழக்கு யுனைடெட் அணிகள் தங்களது சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் முறையே வரும் அக்., 8, 9, 16ம் தேதிகளில் பங்கேற்கின்றன.     

 

அரையிறுதி சுற்று, 2 போட்டிகளாக நடத்தப்படும். முதல் அரையிறுதியின் முதல் போட்டி டிச., 11, 2வது போட்டி டிச., 15ல் நடக்கும். இரண்டாவது அரையிறுதியின் முதல் போட்டி டிச., 12, 2வது போட்டி டிச., 16ல் நடக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள், வரும் டிச., 20ல் நடக்கவுள்ள பைனலில் மோதும். மொத்தம் 79 நாட்கள் நடக்கும் இத்தொடரில் பைனல், அரையிறுதி உட்பட 61 போட்டிகள் நடக்கும். அனைத்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு துவங்கும்.

 

 

http://sports.dinamalar.com/2015/05/1432917081/IndianSuperLeagueFootballSecondEditionKolkataChennai.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 52
  • Created
  • Last Reply

அனெல்காவை தக்கவைத்தது மும்பை சிட்டி எப்.சி. அணி
 

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளை யாடி வரும் மும்பை சிட்டி எப்.சி. அணி, கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய பிரான்ஸ் முன்கள வீரர் நிகோலஸ் அனெல்காவை தக்கவைத்துக் கொண்டது.

 

கடந்த ஐஎஸ்எல் சீசனின் சிறந்த வீரர்களில் 5-வது வீரரான அனெல்கா, மும்பை அணிக் காக இரு கோல்களை அடித்ததோடு, இரு கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அனெல்கா 69 சர்வதேச போட்டி களிலும், கிளப் அளவிலான 500 போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

 

இது தொடர்பாக மும்பை அணியின் உரிமையாளர் ரன்பீர் கபூர் கூறுகையில், “அனெல் காவை தக்க வைத்துக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சீசனில் எங்கள் அணிக் காக அவர் சிறப்பாக ஆடினார். இந்த சீசனிலும் சிறப்பான, வலுவான அணியை களமிறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய சிலரை தக்கவைத்துக் கொள்வது முக்கியம். அதில் அனெல்கா குறிப்பிடத்தக்கவர்.

 

மும்பை அணிக்காக 2-வது சீசனில் விளையாடவிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அனெல்கா, “கடந்த சீசனில் மிகவும் ரசித்து விளையாடினேன்.

வரும் சீசனில் மும்பை அணிக்காக விளையாடவும், இளம் ரசிகர்களை குஷிப்படுத்தவும் தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். எல்லோரும் கால்பந்து விளையாடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article7301386.ece

Link to comment
Share on other sites

ஐஎஸ்எல்: கோவா அணியில் லூஸியோ
 

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளை யாடி வரும் கோவா எப்.சி. அணி யில் முன்னாள் பிரேசில் தடுப்பாட்டக் காரர் லூஸியோ (லூஸிமர் பெரைரா டா சில்வா) இடம்பெற்றுள் ளார்.

 

இது தொடர்பாக கோவா எப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவரான னிவாஸ் டெம்போ வெளியிட்டுள்ள அறிக்கையில், “2002-ல் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த லூஸியோ, 2006, 2010 உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி யுள்ளார்.

 

எங்கள் அணியின் பயிற்சி யாளர் ஸிகோ அளித்த பரிந்துரை யின்பேரில் லூஸியோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பிரேசிலின் ஆண்ட்ரி யாஸுடனும் ஒப்பந்தம் செய்துள் ளோம். அணியை பலப்படுத்து வதற்காக மேலும் பலருடன் ஒப்பந்தம் செய்யவுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பேயன் லெவர்குசன், பேயர்ன் மூனிச் அணிகளுக்காக புந்தேஸ் லிகா போட்டியில் விளையாடி யுள்ளார் லூஸியோ. புந்தேஸ்லிகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் 3 முறை இடம்பெற்றுள்ளார். இதேபோல் இண்டர் மிலன் அணிக்காக லூஸியோ விளையாடிய காலத்தில் அந்த அணி சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிஃபா கிளப் உலகக் கோப்பை போட்டிகளில் சாம்பியனாகியுள்ளது. அதன்பிறகு சில காலம் யுவன்டஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/article7301383.ece

Link to comment
Share on other sites

சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு டேவிட் பெக்காம் கேப்டன் ஆகிறார்?

 

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2vxewls.jpg

கடந்த ஆண்டு இந்தியாவில் ஐ.எஸ். எல். கால்பந்து தொடர் தொடங்கப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. 8 நகரங்களை மையமாக வைத்து அணிகள் உருவாக்கப்பட்டு, ஐ.பி.எல். போல ஐ.எஸ்.எல் தொடரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு சொந்தமானது. கடந்த ஆண்டு கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, இறுதி ஆட்டத்தில் அத்லெடிகோ டி கொல்கத்தா அணியிடம் தோல்வி கண்டு கோப்பையை பறிகொடுத்தது.

 

இதனால் வரும் சீசனுக்கு அணியை பலப்படுத்தி, கோப்பையை வெல்லும் முயற்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இறங்கியுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற வீரர்களை ஒப்பந்தம் செய்ய கேரளா பிளாஸ்டர்ஸ் அணி முயற்சித்து வருகிறது. முதல் கட்டமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்கமை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நிர்வாகம், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

தற்போது 40 வயது நிரம்பிய டேவிட் பெக்காம் மான்செஸ்டர் யுனைடெட், ரியல்மாட்ரிட், ஏ.சி.மிலன், லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி போன்ற அணிகளுக்காக விளையாடியவர்.

 

கடந்த ஆண்டு அனைத்துவிதமான கால்பந்து போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார் . பெக்காம் விளையாடிய காலக்கட்டத்தில், உலகிலேயே கவர்ச்சியான கால்பந்து வீரராகவும் கால்பந்து  மூலம் அதிகம் சம்பாதிப்பவராகவும் திகழ்ந்தவர். இங்கிலாந்து அணிக்காக 115 சர்வதேச போட்டிகளில் விளையாடி 17 கோல்களை அடித்துள்ளார்.

 

பெக்காம் தவிர அர்ஜென்டினா முன்னாள் சூப்பர் ஸ்டார் செபஸ்டியான் வெரான் மற்றும் பிரேசில் கோல் மெஷின் லூயிஸ் ஃபேபியானோ ஆகியோரையும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=47905

Link to comment
Share on other sites

சென்னை அணியில் மீண்டும் எலானோ

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் இரண்டாவது சீசனில் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடுகிறார் பிரேசிலின் எலானோ.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடந்தது. இரண்டாவது சீசன் வரும் அக்., 6ல் துவங்கி டிச., 11ல் முடிகிறது.

 

இதில் கடந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாடியவர் பிரேசிலின் எலானோ புளூமர், 34. ‘பிரீ கிக்’ மூலம் கோல் அடிப்பதில் வல்லவர். முதல் 6 போட்டியில் 8 கோல் அடித்த இவர் காயம் காரணமாக பாதியில் நாடு திரும்பினார்.

 

இருப்பினும், அதிக கோல் அடித்த வீரருக்கான ‘கோல்டன் ஷூ’ விருது இவருக்குத் தான் கிடைத்தது. இந்த ஆண்டு நடக்கும் ஐ.எஸ்.எல்., தொடரில், சென்னை அணியில் நட்சத்திர வீரராக தக்க வைத்துக் கொள்ளப்பட்டார். இதை சென்னை அணியின் வீரரும் பயிற்சியாளருமான மாட்டராசி (இத்தாலி) அறிவித்தார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1434559158/Elanosoccer.html

Link to comment
Share on other sites

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: புருனோவை தக்கவைத்தது சென்ன

 
 
புருனோ பெலிசாரி
புருனோ பெலிசாரி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனிலும் மிட்பீல்டர் புருனோ பெலிசாரியை தக்கவைத்துக் கொண்டுள்ளது சென்னையின் எப்.சி. அணி.

22 வயதான புருனோ, பிரேசில் கால்பந்து கிளப்பான அட்லெடிகோ பாரானென்ஸில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல்முறையாக நடைபெற்ற ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எப்.சி. அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். கடந்த சீசனில் சென்னையின் எப்.சி. வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த புருனோ, 4 கோல்களையும் அடித்தார்.

இது தொடர்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புருனோவை 2-வது சீசனுக்கு தக்கவைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் திறமையான வீரர். கடந்த சீசனில் தனது திறமையை அவர் பலமுறை வெளிக்காட்டினார்.

முக்கியமான ஆட்டங்களில் அதிசயம் நிகழ்த்தினார். அவருடைய வருகை எங்கள் அணியின் நடுகளத்துக்கு பலம் சேர்க்கிறது. இந்த முறை அவர் இன்னும் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக புருனோ கூறியிருப்பதாவது: இந்தியாவில் மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பளித்த சென்னை அணிக்கு நன்றி. கடந்த சீசனில் பங்கேற்றபோது களத்திலும் சரி, களத்துக்கு வெளியிலும் சரி நல்ல அனுபவம் கிடைத்தது.

கடந்த சீசனில் சென்னையில் விளை யாடியபோது அங்குள்ள ரசிகர் களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசித்து விளையாடினோம். இந்த முறை சென்னை அணியை ஐஎஸ்எல் சாம்பியனாக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-கால்பந்து-போட்டி-புருனோவை-தக்கவைத்தது-சென்னை/article7336396.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பிரேசிலின் ராபர்ட்டோ கார்லெசும் தமிழகத்தின் ராமன் விஜயனும் டெல்லி அணியின் பயிற்சியாளர்கள்!

'பிரீ கிக் ஸ்பெஷலிஸ்ட்' ராபார்டோ கார்லெஸ் டெல்லி டைனமோஸ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ராமன் விஜயன் செயல்படப் போகிறார்.

rob.jpg

ஐ.எஸ்.எல். தொடரில் விளையாடி வரும் டெல்லி அணிக்கு கடந்த சீசனில் நெதர்லாந்தை சேர்ந்த ஹார்ம் வான் வெல்தோவன் பயிற்சியாளராக இருந்தார். வரும் சீசனில் பிரேசில் அணியின் முன்னாள்  'லெப்ட் விங்கர் ' ராபர்ட்டோ கார்லெஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற தடுப்பாட்ட வீரரான ராபர்ட்டோ கார்லெஸ் பிரேசில் அணிக்காக 125 போட்டிகளில் விளையாடி 11 கோல்களை அடித்துள்ளார். பிரேசில் அணிக்காக 3 முறை உலகக் கோப்பை போட்டியில் ராபர்ட்டோ கார்லெஸ் விளையாடியுள்ளார். இதில் 2002ஆம் ஆண்டு பிரேசில் அணி உலகக் கோப்பையை வென்றது.

raman.jpgஅது மட்டுமல்ல இன்டர்மிலன், ரியல்மாட்ரிட் போன்ற புகழ்பெற்ற அணிகளுக்காகவும் ராபார்டோ கார்லெஸ் நீண்ட காலமாக விளையாடி வந்தவர். ரியல்மாட்ரிட் அணிக்காக மட்டும் 576 போட்டிகளில் விளையாடி 68 கோல்களை அடித்துள்ளார். இவரது பெண்டிங் பிரீ கிக்குகள் உலக அளவில் பிரசித்தமானது. கடந்த 1997ஆம் ஆண்டு பிரான்ஸ் அணிக்கு எதிராக ராபார்ட்டோ கார்லெஸ் அடித்த பிரீ கிக் கோல்தான் இன்றும் உலகளவில் மிகச்சிறந்த பிரீ கிக் கோலாக கருதப்படுகிறது.170 கிலோ மீட்டர் வேகத்தில் பிரீ கிக்குகளை அடிக்கும் வல்லமை படைத்தவர் ராபர்ட்டோ கார்லெஸ். 

தற்போது டெல்லி டைனமோஸ் அணியின் மார்க்கி பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 42 வயது ராபார்டோ கார்லெசுக்கு துணை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ராமன் விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் 10ஆம் தேதி நடப்பு ஐ.எஸ்.எல். தொடருக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் ராபார்ட்டோ கார்லெஸ் பங்கேற்கவுள்ளார்.

 

அதேவேளையில் மும்பை அணியின் மார்க்கி வீரராக பிரான்ஸ் முன்னாள் வீரர் நிகோலஸ் அனால்கா மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். செல்சி அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர் நிகோலஸ் அனகால்கா. கடந்த சீசனில் மும்பை அணியின் மார்க்கி வீரராக இவர்தான் இருந்தார்.

மார்க்கி வீரர்கள் உலகக் கோப்பை அல்லது சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.

http://www.vikatan.com/news/article.php?aid=48937

Link to comment
Share on other sites

இப்படி ஒரு ஃப்ரீ கிக் கோல் அடிச்சவர்தான் டெல்லி அணியின் பயிற்சியாளர்!

ஃப்ரீகிக் கோல் அடிப்பதில் புகழ்பெற்ற பிரேசில் தடுப்பாட்ட வீரர் ராபர்ட்டோ கார்லெஸ்தான் இந்தியன் சூப்பர் லீக் தொடரில் விளையாடி வரும் டெல்லி அணிக்கு பயிற்சியாளாக நியமிக்கப்பட்டுள்ளார்.

                              

கடந்த 1997ஆம் ஆண்டு பிரான்ஸ் அணிக்கு எதிராக ராபர்ட்டோ கார்லெஸ் அடித்த பென்டிங் பிரீ கிக் கோல் இது. உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக், ஸ்பானீஷ் லீக், கோபா அமெரிக்கா என ரபார்ட்டோ கார்லெஸ் வெல்லாத கோப்பைகள் இல்லை.

http://www.vikatan.com/news/article.php?aid=49038

Link to comment
Share on other sites

ஐ.எஸ்.எல்., கால்பந்து: வீரர்கள் ஏலம்

Sunil Chetri, soccer

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று மும்பையில் நடக்கிறது. இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரியை வாங்க கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வரும் அக்., 3 முதல் டிச., 6 வரை நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, கேரளா, சென்னை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த ஆண்டு வீரர்கள் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதன் முறையாக வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 

ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 22, அதிகபட்சம் 26 வீரர்கள் வரை இடம் பெற வேண்டும். இதில் 3 கோல் கீப்பர்கள் தேர்வு செய்யபட்டிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு பல்வேறு அணிகளில் இருந்து தக்கவைத்துக் கொள்ளப்படாமல் கழற்றி விடப்பட்ட 113 வீரர்கள் பங்கேன்றனர். இதில் இருந்து 64 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தவிர, கடந்த தொடரில் விளையாடாத சுனில் செத்ரி, ராபின் சிங், கரண்ஜீத் சிங் உள்ளிட்ட 10 இந்திய வீரர்கள், முதற்கட்ட ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். 

ஏலம் எப்படி:

8 அணிகளிலும் தலா ஒரு இந்திய அணி வீரரை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படாத வீரர்கள் வழக்கமான பட்டியலில் சேர்க்கப்படுவர்.

யாருக்கு எவ்வளவு: இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியை தேர்வு செய்ய பலத்த போட்டி நிலவுகிறது. சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக கோல் (76 போட்டி, 46 கோல்) அடித்த இவரது அடிப்படை ஏலத் தொகை ரூ. 80 லட்சமாக உள்ளது. 

அடுத்த இடத்தில் கோல்கீப்பர் கரண்ஜீத் சிங் (ரூ. 60 லட்சம்), ராபின் சிங் (ரூ. 40 லட்சம்), அனாஸ் (ரூ. 40 லட்சம்), அரதா இஜுமி (ரூ. 40 லட்சம்), தோய் சிங் (ரூ. 39 லட்சம்) உள்ளனர்.

பெங்களூரு அணியின் லிங்தோவுக்கு ரூ. 27.50 லட்சமும், ராயல் வாகிங்தோ அணியின் ஜாக்கிசந்த் சிங், சதியாசன் சிங் ஆகியோருக்கு தலா ரூ. 20 லட்சம் வரையறுக்கப்பட்டது. குறைந்தபட்சமாக பெங்களூரு அணியின் ரினோ ஆன்டோவுக்கு ரூ. 17.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

http://sports.dinamalar.com/2015/07/1436462404/SunilChetrisoccer.html

Link to comment
Share on other sites

ஐ.எஸ்.எல். ஏலம் : இந்திய அணியின் கேப்டன் விலை ரூ. 1.2 கோடிதான்!

ஐ.எஸ்.எல் 2வது சீசனுக்கான ஏலம் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை மும்பை அணி ஒரு கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

sun%281%29.jpg

இவரது தொடக்க விலை 80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தியன் லீக்கில் பெங்களுரு எப்.சி அணிக்காக விளையாடி வரும் சுனல் சேத்ரி, கடந்த சீசனில் ஐ.எஸ்.எல். தொடரில் விளையாடவில்லை. தற்போது அவரை பெங்களுரு அணி விடுவித்திருப்பதால், சுனில் சேத்ரியை ஒப்பந்தம் செய்ய டெல்லி டைனமோஸ், மும்பை அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவியது.

இறுதியில் மும்பை அணியே அவரை வாங்கியுள்ளது.சுனில் சேத்ரி 2 கோடிக்கும் மேல் ஏலம்  போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் குறைந்த விலைக்கே ஏலம் எடுக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்தது. சுனில் சேத்ரி இது குறித்து கூறுகையில், தான் 13 ஆண்டுகளாக கால்பந்து விளையாடி வருவதாகவும் ஒரு போதும் பணத்திற்காக விளையாடியதில்லை என்று தெரிவித்துள்ளார். 

மற்றொரு இந்திய வீரர் லிங்டோவை புனே அணி 1.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இவரது தொடக்க விலை 27.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சென்னை அணி தோய் சிங்கை 86 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது. ஜாக்கி சந்த் சிங்கை புனே அணி 45 லட்சம் கொடுத்து வாங்கியது.

http://www.vikatan.com/news/article.php?aid=49243

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கோவாவில் ஐஎஸ்எல் இறுதி ஆட்டம்

 

2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கால்பந்துக்கு பெயர் பெற்ற கோவாவில் டிசம்பர் 20-ம் தேதி நடக்கிறது என ஐஎஸ்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன. மொத்தம் 56 ஆட்டங்கள் நடக்கின்றன.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/கோவாவில்-ஐஎஸ்எல்-இறுதி-ஆட்டம்/article7455426.ece

Link to comment
Share on other sites

செல்சி சூப்பர் ஸ்டார் திடையர் டிரோக்பா கங்குலியின் கொல்கத்தா அணியில் இணைகிறார்?

 

செல்சி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் திடையர் டிரோக்பா வரும் ஐ.எஸ்.எல். தொடரில் சவுரவ் கங்குலியின் கொல்கத்தா அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு ஒரு மில்லியன் டாலர் வரை சம்பளமாக கொடுக்க கொல்கத்தா அணி  நிர்வாகம் முன் வந்துள்ளது.

adk1.jpg

ஐவரிகோஸ்ட் அணியின் கேப்டன் திடையர் டிரோக்பா லண்டனை சேர்ந்த செல்சி அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்தார். கடந்த 2004 முதல் 2012ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளில் செல்சி அணிக்காக 226 போட்டிகளில்  விளையாடி 100 கோல்களை அவர் அடித்திருந்தார். பின்னர் ஷாங்காய் சென்குவா மற்றும் துருக்கியின் கேலாட்டசரி அணிகளுக்காகவும் விளையாடிய டிரோக்பா, கடந்த சீசனில் மீண்டும் செல்சி அணியில் இணைந்தார்.

தற்போது செல்சி அணி டிரோக்பாவை மீண்டும் விடுவித்துள்ளது. இதையடுத்து லேம்பர்ட், பிர்லோ, ஸ்டீவன் ஜெரார்ட் போல திடையர் டிரோக்பாவும் அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் விளையாடவுள்ளதாகவும்  சிகாகோ ஃபயர் அணி அவரை ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும் சொல்லப்பட்டது.

adk%282%29.jpg

இந்நிலையில் திடையர் டிரோக்பாவை வரும் ஐ.எஸ்.எல். தொடடுக்காக நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அணியின் தாய்க்கழகமான ஸ்பெயினை சேர்ந்த அத்லெடிகோ மாட்ரிட் அணி இதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து  வருகிறது. இன்னும் 2 நாட்களில் இது குறித்து உறுதி செய்யப்ட்ட தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

திடையர் டிரோக்பா கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படும்பட்சத்தில் அந்த அணியின் மார்க்கி வீரராக அறிவிக்கப்படுவார். மார்க்கி வீரர்கள்  உலகக் கோப்பை அல்லது சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியிருக்க வேண்டும். வரும் ஐ.எஸ்.எல். தொடருக்கான மார்க்கி வீரரை இதுவரை அத்லெடிகோ டி கொல்கத்தா அணி அறிவிக்கவில்லை.

http://www.vikatan.com/news/article.php?aid=50044

Link to comment
Share on other sites

ஐஎஸ்எல் கால்பந்து: ஆண்ட்ரூ மோரிட்ஸை தக்கவைத்தது மும்பை

 
ஆண்ட்ரூ மோரிட்ஸ்
ஆண்ட்ரூ மோரிட்ஸ்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் மும்பை சிட்டி எப்.சி. அணி கடந்த முறை தங்கள் அணிக்காக விளையாடிய பிரேசில் மிட்பீல்டர் ஆண்ட்ரூ மோரிட்ஸை 2-வது சீசனுக்கும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரராக பேசப்பட்ட மோரிட்ஸ், 7 ஆட்டங்களில் விளையாடி புனேவுக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்தார். இதுதவிர மும்பை அணி சில கோல்களை அடிக்கவும் உதவினார்.

கடந்த சீசனைப் போன்றே இந்த சீசனிலும் உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தையும், அனுபவத்தையும் மோரிட்ஸ் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் ஆற்றல் பெற்றவரான மோரிட்ஸ், போட்டியின்போது சகவீரர்களுடன் தகவல் பரிமாறுவதோடு, ஓய்வறையில் அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றவர்.

துருக்கி, பிரேசில் லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவரான மோரிட்ஸ், மும்பை அணியில் இணைவதற்கு முன்னதாக இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் 2-வது டிவிசன் போட்டியில் போல்டான் வான்டரெர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

மும்பை சிட்டி அணிக்காக 2-வது சீசனில் விளையாடவுள்ளது குறித்துப் பேசிய மோரிட்ஸ், “மும்பை அணிக்காக மீண்டும் விளையாடவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சீசனில் இறுதிவரை ரசிகர்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு அளித்தனர். இந்த முறையும் சிறப்பாக ஆடி ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம்” என்றார்.

நிகோலஸ் அனெல்கா, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, மோரிட்ஸ் என வலுவான வீரர்களைக் கொண்டிருக்கும் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் புனே சிட்டி அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-கால்பந்து-ஆண்ட்ரூ-மோரிட்ஸை-தக்கவைத்தது-மும்பை/article7463773.ece

Link to comment
Share on other sites

ஐஎஸ்எல்: மும்பை அணியில் செலிம் பெனாச்சூர்

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் மும்பை சிட்டி எப்.சி. அணிக்காக டுனிசியா வீரர் செலிம் பெனாச்சூர் களமிறங்குகிறார்.

இது தொடர்பாக மும்பை அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டுனிசியாவின் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் பெனாச்சூர், 2002 உலகக் கோப்பையில் தங்கள் நாட்டு அணிக்காக விளையாடியபோது தனது அசத்தலான பாஸ் உள்ளிட்டவற்றால் அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய ஆட்டநுட்பமும், அனுபவமும் வரும் சீசனில் மும்பை அணிக்கு பெரிய பலமாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

2001-ல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் மூலம் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய பெனாச்சூர் 2005 வரை அந்த அணியின் தாக்குதல் மிட்பீல்டராக திகழ்ந்தார். 2009-ல் ஸ்பெயின் லீக்கில் ஆடி வரும் மலாகா அணிக்கு இடம்பெயர்ந்தார். அதன்பிறகு சைப்ரஸ் கிளப் அணியான ஏபோல் அணியுடன் 2 ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்ட அவர், அந்த அணி 2012-13 சீசனில் சைப்ரஸ் முதல் டிவிசனில் வெற்றி பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தார்.

உதவி பயிற்சியாளராக பாஸ்டாப் ராய் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் விளையாடவுள்ள அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பாஸ்டாப் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஸ்டாப் ராய், மோகன் பகான், முகமதியன் ஸ்போர்ட்டிங், டோலிகுங்கே அக்ரகாமி, சுங்கவரித் துறை, ஜார்ஜ் டெலகிராப் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் ஆவார். அவர் தலைமைப் பயிற்சியாளர் ஆன்டனி லோபஸுக்கு உதவியாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராய், “நடப்பு சாம்பியனான அட்லெடிகோ அணியின் உதவிப் பயிற்சி யாளராக செயல்படவிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன்மூலம் எனது கனவு நனவாகியுள்ளது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-மும்பை-அணியில்-செலிம்-பெனாச்சூர்/article7474733.ece

Link to comment
Share on other sites

ஐ.எஸ்.எல். : கொல்கத்தா அணியின் மார்க்கி வீரர் ஹெல்டர் போஸ்டிகா!

 

வரும் ஐ.எஸ்.எல். தொடரில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் மார்க்கி வீரராக போர்ச்சுகல் முன்னாள் வீரர் ஹெல்டர் போஸ்டிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

held.jpg

கடந்த ஐ.எஸ்.எல். சீசனில் கொல்கத்தா அணியின் மார்க்கி வீரராக லூயீஸ் கார்சியா இருந்தார்.தற்போது இந்த இடத்தில் ஹெல்டர் போஸ்டிகா விளையாடவுள்ளார் போர்ச்சுகல் அணிக்காக 71 சர்வதேச போட்டிகளில் விளையாடி 27 கோல்களை போஸ்டிகா அடித்துள்ளார். இதுதவிர போர்ட்டோ, ஸ்போர்டிங் லிஸ்பன், டாட்டன்ஹாம், வாலென்சியா போன்ற புகழ்பெற்ற கிளப்புகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டியில் 2வது இடம் பிடித்த போர்ச்சுகல் அணியில் ஹெல்டர் போஸ்டிகா இடம் பெற்றிருந்தார். வரும் ஐ.எஸ்.எல் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள போர்ச்சுகலை சேர்ந்த 2வது மார்க்கி வீரர் ஹெல்டர் போஸ்டிகா . ஏற்கனவே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சிமோவா சைப்ரோசாவை ஒப்பந்தம் செய்துள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=50235

Link to comment
Share on other sites

  • 1 month later...

பயிற்சியை முடித்து தாயகம் திரும்பிய சென்னை அணிக்கு உற்சாக வரவேற்பு

 
  • இலானோவுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.
    இலானோவுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.
  • ரசிகர்களுடன் ‘செல்பி' எடுத்துக் கொண்ட வீரர்கள்.
    ரசிகர்களுடன் ‘செல்பி' எடுத்துக் கொண்ட வீரர்கள்.

இத்தாலியின் பெருஜியாவில் ஒரு மாத கால பயிற்சி முகாமை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய சென்னையின் எப்.சி. கால்பந்து அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையின் எப்.சி. அணியினர் அதிகாலையில் வந்தபோதும் வர வேற்புக்கு பஞ்சமில்லை. 150-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத் தனர். சென்னையின் எப்.சி. அணி யின் கொடி, வீரர்களின் புகைப் படங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்திருந்த ரசிகர்கள், வீரர்களுக்கு மாலை அணிவித்தும், திலகமிட்டும் வரவேற்றதோடு, அவர்களுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

பிரம்மாண்ட வரவேற்புக்குப் பிறகு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நட்சத்திர மிட்பீல்டரான இலானோ புளூமர் பேசுகையில், “இந்தத் தருணத்தில் எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இது மிகவும் வியப்பாக இருக்கிறது. களத்தில் சிறப்பாக ஆடுவதன் மூலம்தான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல முடியும். ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்காக மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன்” என்றார்.

எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஸ்டிரைக்கரான ஃபிக்ரு டெஃபெரா கூறுகையில், “ரசிகர்களின் ஆதரவு மிக அற்புதம். நான் சென்னை அணிக்கு புதிய வீரர். ஆனால் என்னையும் சென்னை அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய ஒரு வீரரைப் போன்று நடத்தினார்கள். அவர்களின் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். ரசிகர்களுக்காக நிறைய கோல் களை அடிக்க மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்” என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த மிட்பீல்ட ரான ஹர்மான்ஜோத் சிங் கப்ரா கூறுகையில், “மீண்டும் சென் னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. பிரம்மாண்ட வரவேற்பு அளித்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை ரசிகர்களுக்காக கோப் பையை வெல்ல விரும்புகிறோம்” என்றார்.

மேலும் ஒரு சில வீரர்களும், பயிற்சியாளர் மார்க்கோ மெட்டா ரஸியும் விரைவில் சென்னை வர வுள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இத்தாலியில் ஒரு மாத காலம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னையின் எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்டானா அணியையும், 5-1 என்ற கோல் கணக் கில் சான் டொனாட்டா டவார் நெல்லே அணியையும், 2-0 என்ற கோல் கணக்கில் யூனிஒன் ஸ்போர்ட் டிவா அணியையும் தோற்கடித்தது. குவால்டோ அணியிடம் மட்டும் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/பயிற்சியை-முடித்து-தாயகம்-திரும்பிய-சென்னை-அணிக்கு-உற்சாக-வரவேற்பு/article7680406.ece

Link to comment
Share on other sites

ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி தயார்

ISL Football, Chennai Team

சென்னை: ‘‘கடந்த சீசனை விட இந்த முறை முன்கூட்டியே தயாராகி இருப்பதால் சென்னை அணி சவாலுக்கு தயாராக உள்ளது’’ என, பயிற்சியாளர் மெடாரஸி தெரிவித்தார்.             

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,) அடுத்த மாதம் 3ம் தேதி துவங்குகிறது. சென்னை அணி முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கோல்கட்டாவை எதிர்கொள்கிறது. சென்னை அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது.             

அப்போது, சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெடராஸி பேசியதாவது:             

கடந்த முறை பயிற்சிக்கு போதிய அவகாசம் இல்லை. இந்தமுறை ஒரு அணியாக இணைவதற்கும், பயிற்சிக்கும் போதுமான நேரம் இருந்தது. இத்தாலியின் பெருகுவாவில்,  ஒரு நாளைக்கு இரண்டு முறை பயிற்சி மேற்கொண்டோம்.  கடந்த முறையை விட  இந்த முறை, சிறந்த முறையில் தயாராகி இருக்கிறோம். அதை களத்தில் பிரதிபலிக்க காத்திருக்கிறோம்.             

எனது பயிற்சி முறையில், செல்சி அணியின் பயிற்சியாளர் ஜோஸ் மொரினோவின் தாக்கம் இருக்கும். கடந்த முறை சென்னை அணி அதிக கோல்கள் அடித்தது. இந்த முறையும் அந்த ஆக்ரோஷ அணுகுமுறை தொடரும்.             

இவ்வாறு, மெடாரஸி தெரிவித்தார்.            

கடந்த சீசனில், அதிக கோல்கள் அடித்து, சிறந்த வீரர் விருதை வென்ற, பிரேசிலை சேர்ந்த இலானோ கூறுகையில், ‘‘மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி.  களத்திலும், களத்துக்கு வெளியிலும் நாங்கள், ஒரு குடும்பமாக இணைந்துள்ளோம்.அணி சாம்பியன் பட்டம் வெல்வதே முக்கியம்,’’ என்றார்.

http://sports.dinamalar.com/2015/09/1443373247/ISLFootballChennaiTeam.html

Link to comment
Share on other sites

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி அட்டவணை

 
 
football_2570375f.jpg
 

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கண்கவர் நடனங்களுடன் இன்று தொடங்குகிறது.

isl_jpg1_jpg1_2570379a.jpg

isl_jpg1_jpg1_jpg1_2570380a.jpg

isl_jpg1_jpg1_jpg1_2570372a.jpg

http://tamil.thehindu.com/sports/இந்தியன்-சூப்பர்-லீக்-கால்பந்து-போட்டி-அட்டவணை/article7718631.ece

Link to comment
Share on other sites

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்குகிறது- முதல் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா மோதல்

 
 
football_2570375f.jpg
 

8 அணிகள் பங்கேற்கும் 2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கண்கவர் நடனங்களுடன் இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி எப்.சி., கேரளா பிளாஸ்டர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இரு சுற்று ஆட்டங்களாக நடைபெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறிய சென்னையின் எப்.சி. அணியும், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன. சொந்த மண்ணில் விளையாடுவது சென்னையின் எப்.சி. அணிக்கு கூடுதல் பலமாகும். அதனால் இந்தப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியோடு தொடங்குவதில் தீவிரமாக உள்ளது சென்னையின் எப்.சி. அணி.

மிரட்டும் இலானோ

சென்னை அணி கடந்த சீசனில் விளையாடிய பெரும்பாலான வீரர்களை தக்கவைத்துக் கொண்டதோடு, அணியை மேலும் வலுவாக்கும் வகையில் பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில முன்னணி வீரர்களை அணியில் சேர்த்திருக்கிறது. கடந்த முறை சென்னை அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த மிட்பீல்டர் இலானோ 9 கோல்களை அடித்து தங்கப் பந்து விருதை தட்டிச் சென்றார். இந்த சீசனிலும் அவருடைய அசத்தல் ஆட்டம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த முறை சென்னையின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த மென்டோஸா, மென்டி, பல்வந்த் சிங் உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை தலைகீழாக பல்டியத்து (சிசர் கட்) கோலடித்த மென்டி, அசுர வேகத்தில் அபாரமாக செயல்பட்ட மென்டோஸா, கோல் மழை பொழிந்த இலானோ ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க சென்னை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கடும் போட்டி

கடந்த முறை விளையாடிய மைக்கேல் சில்வர்ஸ்டார், எரிக் ஜெம்பா ஆகியோருக்குப் பதிலாக இத்தாலி மிட்பீல்டர் மானுவேல் பிளாசி, பின்கள வீரர் அலிசாண்ட்ரோ போடென்ஸா ஆகியோரை சேர்த்துள்ள சென்னை அணி, பிரேசிலைச் சேர்ந்த மிட்பீல்டர் ரபேல் அகஸ்டோ, பின்கள வீரர் இடெர் மான்டீரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ் ஆகியோரையும் வாங்கியிருக்கிறது.

கடந்த முறை கொல்கத்தா அணிக்காக ஆடிய எத்தியோப்பிய ஸ்டிரைக்கர் பிக்ரு, கேமரூன் கோல் கீப்பர் அபூலா எடிமா ஆகியோர் இந்த முறை சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர். சென்னையின் அணியின் பயிற்சியாளரும், வீரருமான மெட்டாரஸி, “எங்கள் அணியில் ஒவ் வொரு இடத்துக்கும் இரு வீரர்களிடையே போட்டி இருக்கும். அதனால் எங்கள் அணி வலுவானதாகவும், சமபலம் கொண்டதாகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் கணேஷ்

சென்னையின் எப்.சி. அணியில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழக வீரர் தனபால் கணேஷ்தான். அதனால் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருப்பதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

அணி மாறிய வீரர்கள்

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி, ஜப்பானில் பிறந்த இந்திய மிட்பீல்டர் அரட்டா ஸூமி, பின்கள வீரர் ரினோ ஆண்டோ ஆகியோருடன் ஒப்பந்தம் செய்திருப்பதோடு, உள்ளூர் வீரர்களான லால்சாவ்ன்கிமா, அகஸ்டின் பெர்னாண்டஸ், அம்ரிந்தர் சிங், குன்ஸாங் பூட்டியா ஆகியோரையும் அணியில் சேர்த்துள்ளது.

கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த பிக்ரு, லூயிஸ் கிரேஸியா, ஜோப்ரே மத்தேயூ ஆகியோர் வேறு அணிக்கு மாறியது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. எனினும் நடப்பு சாம்பியன் என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

கலக்குவாரா போஸ்டிகா

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த வீரரான போர்ச்சுகலின் ஹெல்டர் போஸ்டிகா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் கேரள அணிக்காக விளையாடிய கனடாவின் இயான் ஹியூம், இந்த முறை கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு பலம் சேர்க்கிறது.

கடந்த சீசனில் கேரள அணி இறுதிச்சுற்று வரை முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த இயான் ஹியூம், இந்த முறை பிக்ரு இல்லாத குறையை போக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர போர்ஜா பெர்னாண்டஸ், கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்ப்பார் என நம்பலாம்.

சென்னை:

கோல் கீப்பர்கள்: அபூலா இடெல் பீட், கரன்ஜித் சிங், நிதின் லால். பின்களம்: இடெர் மான்டீரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ், பெர்னாட் மென்டி, அலிசாண்ட்ரோ போடென்ஸா, தனசந்திர சிங், அபிஷேக் தாஸ், லால்மாய்சங்கா ரால்டே, ஜஸ்டின் ஸ்டீபன், மெஹ்ராஜுதீன் வாடூ. நடுகளம்: இலானோ புளூமர், மானுவேல் பிளாசி, ரஃபேல் அகஸ்டோ, புரூனோ பெலிசாரி, தோய் சிங், ஹர்மான்ஜோத் கப்ரா, தனபால் கணேஷ், குட்வின் பிரான்கோ, ஜாகீர் முந்தம்பாரா. முன்களம்: ஜான் ஸ்டீவன் மென்டோஸா, ஜேஜே லால்பெக்குலா, ஜெயேஷ் ரானே, பல்வந்த் சிங்.

கொல்கத்தா:

கோல் கீப்பர்கள் அம்ரிந்தர் சிங், ஜுவான் ஜீசஸ், குன்ஸாங் பூட்டியா. பின்களம்: அர்னாப் மான்டல், அகஸ்டின் மெல்வின், டென்ஸில் பிராங்கோ, ஜோஸ் லூயிஸ், ஜோஸ் மிக்கேல், லால்சாவ்ன்கிமா, மோகன்ராஜ், ரினோ ஆண்டோ, சயீத் ரஹிம் நபி. நடுகளம்: அரட்டா ஸூமி, போர்ஜா பெர்னாண்டஸ், கிளிப்போர்டு மிரான்டா, ஜேமி மார்ட்டினிஸ், ஜேவியர் லாரா, நடாங் பூட்டியா, அபென்ட்ஸே நேட்டோ, சமீ, ஷேக் ராஜா, வால்மிரோ லோபஸ். முன்களம்: பல்ஜித் சாஹ்னி, ஹெல்டர் போஸ்டிகா, இயான் ஹியூம், சுஷீல் குமார்.

தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான்

ஐஎஸ்எல் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அலியா பட் உள்ளிட்டோர் நடனமாடுகின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

isl_jpg1_2570373a.jpg

ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சன், சென்னையின் எப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். கடந்த முறை சென்னையின் எப்.சி. அணி விளையாடிய பல்வேறு போட்டிகளுக்கு நேரில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஐஸ்வர்யா ராய், இந்த முறை தொடக்க விழாவில் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறார்.

ஐ.எஸ்.எல். தலைவர் நீதா அம்பானி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கேரள அணி யின் உரிமையாளரான சச்சின் டெண்டுல்கர், அட்லெடிகொ அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரவ் கங்குலி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. தொடக்க விழாவுக்கான 35 ஆயிரம் டிக்கெட்டு களும் விற்றுத்தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயா மேக்ஸில் தமிழில் வர்ணனை

இந்த முறை ஐஎஸ்எல் போட்டி பிராந்திய மொழி வர்ணனைகளுடன் ஒளிபரப்பப்படுகிறது. இதில் தமிழ் வர்ணனையும் இடம்பெறுகிறது. ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையுடன் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சென்னை கால்பந்து வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்களான சி.எம்.ரஞ்சித், எஸ்.விஜயகார்த்தி கேயன் ஆகியோர் தமிழ் வர்ணனை யாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள னர். ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வரும் ரஞ்சித், தமிழக அணிக்காக சந்தோஷ் டிராபி போட்டிகளிலும், இந்திய ஜூனியர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 2014 சீசன் சந்தோஷ் டிராபி போட்டியில் தமிழக அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது தமிழக அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

isl_2570374a.jpg

இந்திய ரிசர்வ் வங்கியில் பணி யாற்றி வரும் விஜய கார்த்திகேயன், தமிழக அணியின் முன்னாள் கோல் கீப்பர் ஆவார். சந்தோஷ் டிராபி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடியுள்ள இவர், தற்போது ரிசர்வ் வங்கி கால்பந்து அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சிகளில் கால்பந்து தொடர்பான விவாதங்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

இவர்கள் இருவரும் தமிழகத் தைச் சேர்ந்த பிரபல வர்ணனை யாளர் நானி உள்ளிட்டோருடன் இணைந்து மும்பையில் இருந்து வர்ணனை செய்யவுள்ளனர். இவர்களுக்கு மும்பையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/இந்தியன்-சூப்பர்-லீக்-கால்பந்து-போட்டி-சென்னையில்-இன்று-தொடங்குகிறது-முதல்-ஆட்டத்தில்-சென்னை-கொல்கத்தா-மோதல்/article7718628.ece

Link to comment
Share on other sites

ஐ.எஸ்.எல். சென்னையில் தொடக்கம்: முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி! (படங்கள்)

 

சென்னை: இன்று (3ஆம் தேதி) கோலாகலமாக தொடங்கிய 2வது சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கெல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

ISL01.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 

சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ISL02.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 

இந்நிலையில், இரண்டாவது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் முதலில் நமது பாரம்பரிய நடனமான பரதம் நாட்டியம் நடந்தது. இதையடுத்து, கேரளாவின் பாரம்பரிய நடனம் நடந்தது.

ISL03.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 

இதைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகைகள் அலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. இதன்பின்னர், நடிகர் ரஜினிகாந்த் கால்பந்திற்கான பந்தை, முருகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானியிடம் வழங்கினார். இதையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ISL04.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 

அதனைத் தொடர்ந்து, சென்னை எப்.சி அணியும், நடப்பு சாம்பியன் அணியான அல்டெடிகோ டீ கொல்கத்தா அணியும் களமிறங்கி விளையாடியது. இந்த ஆட்டத்தின் முடிவில் 3-2க்கு என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி அணியை தோற்கடித்து, அல்டெடிகோ டீ கெல்கத்தா அணி வெற்றி பெற்றது.

ISL05.jpg

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 

இந்த தொடக்க நிகழ்ச்சியில், நடிகர் அமிதாப்பச்சன், கிரிக்கெட் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் இறுதிப் போட்டி கோவாவில் நடக்கிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=53229

Link to comment
Share on other sites

இந்திய கால்பந்து லீக்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா
 
 
சென்னை: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர், சென்னையில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்கியது.
 
 
நடிகர்கள் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன் ஆகியோர் பங்கேற்றனர். நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் போன்றோர் நடனமாடினர். இதன்பிறகு ஆட்டம் இனிதே தொடங்கியது.  உள்ளூர் அணியான சென்னையின் எஃப்சியும், நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் சந்தித்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கியது.
 
  சென்னையின் எஃப்சி அணியைப் பொருத்த வரை, கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைகளை கவனித்து அணியில் சில மாற்றங்களை செய்திருந்தது. பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து சில வலுவான வீரர்களை விளையாட அழைத்து வந்திருந்தது. கடந்த முறை சிறப்பாக விளையாடிய வீரர்களையும் சென்னை அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. மைக்கேல் சில்வெஸ்ட்ரி, எரிக் ஜெம்பா ஆகியோருக்குப் பதிலாக இத்தாலியின் நடுக்கள வீரர்கள் மேனுலி பிளாசி, தடுப்பாட்டக்காரர் அலெஸாண்ட்ரோ போடென்ஸா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
ISL Preview: Atletico de Kolkata face Chennaiyin FC in opener
 
இவர்கள் தவிர, பிரேசில் நடுக்கள வீரர் ரஃபேல் அகஸ்டோ, தடுப்பாட்டக்காரர்கள் ஈடர் மாண்ட்டெய்ரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ் ஆகியோர் சென்னை அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். எத்தியோப்பிய முன்கள வீரர் ஃபிக்ரு, கேமரூன் கோல் கீப்பர் அபௌலா எடிமா ஆகியோர் கொல்த்தா அணியிலிருந்து சென்னை அணிக்கு இடம் பெயர்ந்திருந்தனர். கொல்கத்தா அணியும், இந்த முறை தங்கள் அணியில் முக்கிய மாற்றங்களை செய்திருந்தது. ஃபிக்ரு, லூயிஸ் கார்சியா மற்றும் ஜோஃப்ரி மேட் போன்ற முக்கிய வீரர்களை விடுவித்துவிட்டது.
 
கடந்த சீசனில் சிறந்த வீரருக்கான விருது பெற்ற எய்ன் ஹூயூமி (கனடா), இந்த முறை கொல்கத்தா அணியில் இணைந்திருந்தார். ஆட்டம், தொடங்கிய 13வது நிமிடத்தில், கொல்கத்தாவின் நட்சத்திர ஆட்டக்காரர், போஸ்டிகா கோல் போட, கொல்கத்தா 1-0 என்ற கணக்கில் ஆதிக்கத்தை ஆரம்பித்தது. ஆனால், ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜிஜே ஒரு கோல் அடிக்க, சென்னை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
 
ஆட்டத்தின் இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. சமநிலையுடன் இடைவேளைக்கு பின்பு ஆட்டம் தொடங்கியபோது, கொல்கத்தா வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். 65வது நிமிடத்தில் போஸ்டிகா மீண்டும் ஒரு கோல் போட்டார். 76வது நிமிடத்தில் வல்டோ ஒரு கோல்போட்டார். இதனால் கொல்கத்தா 3-1 என்ற கணக்கில் மளமளவென முன்னிலைக்கு சென்றது. ஆட்டம் முடிவடையும்தருவாயில் 89வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை பயன்படுத்தி சென்னை வீரர் எலனோ ஒரு கோல்போட்டார்.
 
அதன்பிறகு கோல் ஏதும் போடப்படவில்லை. எனவே ஆட்ட நேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வென்றது. சொந்த மைதானத்தில் சென்னை தோற்றது. இந்த தொடர் மொத்தம் 61 போட்டிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/isl-preview-atletico-de-kolkata-face-chennaiyin-fc-opener-236951.html
Link to comment
Share on other sites

சச்சினைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வௌிப்படுத்திய ரஜினி

சச்சினைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வௌிப்படுத்திய ரஜினி

 
 
 
2வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில், பாலிவுட் நட்சத்திர நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் ஆகியோரின் கலக்கல் நடனம் இரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதில் நடிகர் ரஜினிகாந்தை காரில் அழைத்து வந்து விழா மேடையில் ஏற்றியபோது அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. கால்பந்தை கையில் ஏந்தி வந்த அவர், ஐ.எஸ்.எல். சேர்மன் நிதா அம்பானியிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான சச்சினைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Link to comment
Share on other sites

கோவா அணி அசத்தல் வெற்றி: டில்லி அணிக்கு ஏமாற்றம்

ISL Football, Delhi, Goa

கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை கோவா அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி அணியை வீழ்த்தியது.            

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கோவாவில் உள்ள படோர்டா மைதானத்தில் நேற்று நடந்த 2வது லீக் போட்டியில், விராத் கோஹ்லி சக உரிமையாளராக உள்ள எப்.சி., கோவா அணி, டில்லி டயனமோஸ் எப்.சி., அணியை சந்தித்தது.                                  

துவக்கத்தில் இருந்து கோவா அணியினரின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் கோவா அணியின் மத்திய கள வீரர் ரோமியோ பெர்ணான்டஸ் ‘பாஸ்’ செய்த பந்து டில்லி அணியின் சவ்விக் சக்கரபர்த்தி மீது பட்டு ‘சேம்சைடு’ கோல் ஆனது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கோவா வீரர் லியோ மவுரா அடித்த பந்தை டில்லி அணி கோல்கீப்பர் சஞ்சிபன் கோஷ் தடுக்க முயற்சித்தார். பந்து ‘கோல் போஸ்ட்டில்’ பட்டு திரும்பியதால் கோவா அணியின் கோல் வாய்ப்பு நழுவியது. போட்டியின் 12, 16, 18வது நிமிடத்தில் கிடைத்த கோலடிக்கும் வாய்ப்புகளை டில்லி அணியினர் வீணடித்தனர். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் கோவா அணிக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் கோவா அணியின் ஸ்பெயின் வீரர் ஜோப்ரி அடித்த பந்தை பிரேசிலின் ரெய்னால்டோ கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவில் கோவா அணி 2–0 என முன்னிலை வகித்தது.            

இரண்டாவது பாதியின் 54வது நிமிடத்தில் டில்லி அணியின் பிரான்ஸ் வீரர் புளோரன்ட் மலோடா அடித்த பந்து ‘கோல் போஸ்ட்டில்’ பட்டு திரும்பியது. அதனை மலோடா தலையால் முட்டி கோலாக மாற்ற முயற்சித்த போது பந்து வெளியே சென்றது. ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் டில்லி வீரர் ரிச்சர்டு காட்ஜி அடித்த பந்தை கோவா கோல்கீப்பர் எலின்டன் ஆன்ட்ரேடு அருமையாக தடுத்தார். இதேபோல 86வது நிமிடத்தில் கோவாவின் கோலடிக்கும் முயற்சியை டில்லி கோல்கீப்பர் சஞ்சிபன் கோஷ் தடுத்தார். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் டில்லி அணியின் நட்சத்திர வீரர் ராபர்டா கார்லஸ் அடித்த பந்தை கோவா கோல்கீப்பர் எலின்டன் ஆன்ட்ரேடு நழுவவிட்டு பிடித்தார்.            

இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். ஆட்டநேர முடிவில் கோவா அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2015/10/1443885808/ISLFootballDelhiGoa.html

Link to comment
Share on other sites

ஐ.எஸ்.எல். புனே அணியிடம் மும்பை அணி தோல்வி!

 

ந்தியன் சூப்பர் லீக்கின் இரண்டாவது சீசனின் மூன்றாவது போட்டியில், நேற்று மாலை 7 மணிக்கு மும்பை சிட்டி அணியுடன்  புனே சிட்டி அணி மோதியது.. மகாராஷ்டிரத்தை சேர்ந்த இந்த  அணிகள் மோதிய இந்த 'டெர்பி' போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கோல் கீப்பர் சுப்ரதா பால் ஆகியோர் விளையாடவில்லை.  உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இருவரும் பங்கேற்க இருப்பதால் இந்த  இருவரும் தேசிய அணிக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரு முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், மும்பை அணியின் கேப்டனும் பயிற்சியாளருமான நிக்கோலஸ் அனெல்கா,  முதல் 11 பேர் கொண்ட அணியில் களமிறங்கவில்லை.அதே வேளையில் புதிய பயிற்சியாளர் பிளாட்டின் உத்வேகத்தில் ஆரம்பம் முதலே அசத்தியது புனே அணி.

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் புனே அணியின் டன்கஸ் சன்லி முதல் கோலை அடித்தார். இஸ்ரைல் குருங்க் கொடுத் கிராஸ் பந்தை, தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் சன்லி. போராடிய மும்பை அணி, பிக்குயோன் மூலம் பதில் கோல் திருப்பியது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் போட்டி சம நிலையை எட்டியது.
 

isl_vc1.jpg

பிற்பாதியில் புனே அணியின் அதிரடி ஆட்டத்தின் முன்பு மும்பை சற்று நிலைகுலைந்தே போனது. அதன் பலனாக 56வது நிமிடத்தில் முதல் கோலைப் போலவே, குருங்க் கொடுத்த பாஸை தலையால் முட்டி கோலாக்கினார் சன்லி. இந்த பின்னடைவில் இருந்து மீண்டு வருவதற்குள், புனே அணிக்காக முதல் இரு கோல்கள் அடிக்க உதவிய குருங்க், 68 வது நிமிடத்தில் தானே ஒரு கோலடித்து அசத்தினார்.

பின்னர் கேப்டன் நிகோலஸ் அனெல்கா, ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் களம் புகுந்தார். கடைசி கால் மணி நேரம் போராடியும் அவரால் எந்த மாற்றமும் கொண்டு வர முடியவில்லை. இறுதியில் புனே அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

கோவா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், டெல்லி அணியின் கேப்டன் ராபர்டோ கார்லோஸ் இதேபோல், தான் முதலில் களமிறங்காமல் பிற்பாதியில்தான் இறங்கினார். அவர் இல்லாமல் தடுப்பாட்டத்தில் சொதப்பிய டெல்லி அணி 2-0 என தோற்றது. இன்று  அனெல்காவும் அதே போல் தவறிழைத்தது புனேவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

http://www.vikatan.com/news/article.php?aid=53314

Link to comment
Share on other sites

நார்த் ஈஸ்டை நொறுக்கியது கேரளா பிளாஸ்டர்ஸ்!

 

ந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி,  நடிகர் ஜான் ஆபிரகாமின் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நேற்று மாலை கேரளாவின் ஜவகர்லால் நேரு மைதானத்தில், 7 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியை சுமார் 60,000 பேர் கண்டு களித்தனர்.

சென்ற ஆண்டு விளையாடிய வீரர்களில் நிறைய பேர் மாறிய கேரள அணி, தொடக்கத்தில் பெரிதாய் சோபிக்கவில்லை. அதற்கு ஏற்றார்போல்  நார்த் ஈஸ்ட் அணியும் சுமாராகவே விளையாடியது. இதனால் முதல் பாதி எந்த அணியும் கோல் போடாத நிலையிலேயே முடிவுக்கு வந்தது.

isl5_vc3.jpg

ஆனால் இரண்டாம் பாதியோ அதற்கு நேர்மாறாக அமைந்தது. குறிப்பாக பிளாஸ்டர்ஸ் அணியின் ஆட்டம் அனல் பறந்தது. அதன் பலனாக 49 வது நிமிடத்தில் முன்னாள் பார்சிலோனா இளைஞர் அணி வீரர் ஜோசு குரியாஸ் கோலடித்து, பிளாஸ்டர்சுக்கு முன்னிலை ஏற்படுத்தித் தந்தார். அதன் பிறகும் ஆக்ரோஷமாக விளையாடிய கேரள அணி, 68வது நிமிடத்தில் முன்னிலையை இரட்டிப்பாக்கியது.

பீட்டர் ரமேஜ் கொடுத்த பாஸை உள்ளூர் வீரரான முகமது ரஃபி, தலையால் முட்டி கோலாக்கினார். நார்த் ஈஸ்ட் அணிக்கு மேலும் ஒரு இடியாக, அடுத்த 4வது நிமிடத்தில் சான்சஸ் வாட் கோலடிக்க, பிளாஸ்டர்ஸ் அணியின் வெற்றி உறுதியானது. நார்த் ஈஸ்ட் அணிக்கு ஆறுதலாக, ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் நிக்கோலஸ் வெலஸ் கோலடிக்க, ஆட்டம் 3-1 என்ற கணக்கில் முடிவுற்றது.

ஆட்டத்தின் சிறந்த தருணத்திற்கான விருதை பிளாஸ்டர்ஸ் அணியின் கோல்கீப்பர் பைவாட்டரும், வளர்ந்து வரும் வீரருக்கான விருதை ரஃபியும் பெற்றனர். ஜோசு குரியாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த பிளாஸ்டர்ஸ் அணி, இந்த ஆண்டை சிறப்பாக தொடங்கியுள்ளதால் கேரள ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=53397

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.