Jump to content

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை

 

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வருடம் தோறும் எமது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டத்தின்கீழ் இவ்வருடம் ஒன்றியம் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார உதவித்திட்டத்திற்காக ஓர் மாதிரி ஆடைத்தொழில்சாலை ஒன்றினை தேசிய அரச சார்பு நிறுவனமான« சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் »த்துடன்இணைந்து அவர்களின் மேற்பார்வையுடன் அதனை செயற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் முதலில் 5 குடும்பங்களுக்கு அவர்களின் குடும்பத்தலைவிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் 6மாதத்தில் அதன் எண்ணிக்கையினை 10ஆக உயர்த்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.
இத்திட்டத்திற்கான 70வீதம் நிதியுதவி முதலில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் அளிக்கப்பட்டு அதன் திறப்புவிழா 06-02-2015 கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் ஆம்பிக்கப்பட்டது.

அதன் திறப்புவிழா படங்களையும் அதில் பணிபுரிபவர்களையும்  இங்கு படங்களில் காணலாம்
 
DSC04100.JPGDSC04102.JPGDSC04104.JPG*DSC04103.JPG

DSC04105.JPGDSC04112.JPG**DSC04115.JPG**DSC04121.JPG*DSC04143.JPG*DSC04147.JPG*DSC_0634.JPG*DSC_0638.JPG*DSC_0648.JPGDSC_0659.JPGDSC_0662.JPGDSC_0663.JPG*DSC_0667.JPGDSC_0669.JPG

 

 

DSC_0675.JPG

 

தாயக மக்களை  என்றும் மறவோம்

அவர் வலிகளை  நாமும் சுமப்போம்

நாலு பேர் சேர்ந்தால்

நாலு பேருக்கு உதவலாம் என்பதை செயல்மூலம் முன்னுதாரணமாக காட்டுவோம்.....


ஏற்கனவே இது சம்பந்தமாக ஒப்பந்தம் உரையாடல்கள் சம்பந்தமாக

தொடர்பு பட்ட செய்திக்கு....

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/150151-france-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-secd/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு  மக்கள் ஓன்றியத்துக்கும் ஒன்றித்தோடு ஒன்றித்திருந்து உதவிக்கரம் கொடுப்போருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு  மக்கள் ஓன்றியத்துக்கும் ஒன்றித்தோடு ஒன்றித்திருந்து உதவிக்கரம் கொடுப்போருக்கும் வாழ்த்துகள்

 

 

நன்றி  சகோதரா...

 

இது ஒரு பரீட்சார்த்த முயற்சி

வெற்றியளிக்கும் பட்சத்தில் 

பெரிய  திட்டங்கள் செய்யும் திட்டமிருக்கு...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதன் முன்னேற்றம் சார்ந்து

இந்த மாதம் (20-02-2015) இல்

அவர்களிடமிருந்து வந்த அறிக்கை...

 

 

shop_punkudutheevu_Page_1.jpgshop_punkudutheevu_Page_2.jpgshop_punkudutheevu_Page_3.jpgshop_punkudutheevu_Page_4.jpgshop_punkudutheevu_Page_5.jpgshop_punkudutheevu_Page_6.jpgshop_punkudutheevu_Page_7.jpgshop_punkudutheevu_Page_8.jpgshop_punkudutheevu_Page_9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

shop_punkudutheevu_10_Page_1.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிடைக்கப்பெற்ற முன்னேற்ற அறிக்கை

 

யாழ் கள உறவுகள் எவராவது சென்று  பார்வையிடமுடிந்தால்

செய்யுங்கள்

 

நன்றி

 

Thaiyal_Kanakkarikkai_1_Page_1.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_2.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_3.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_4.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_5.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_6.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_7.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_8.jpgThaiyal_Kanakkarikkai_1_Page_9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நீங்கள் உங்கள் ஒன்றியத்துடன் கைகோர்த்து எவ்வளவோ செய்கின்றீர்கள்...! வாழ்த்துகள்...! :)

 

"செய்த புண்ணியம் தலையைக் காக்கும் , பாவம் தலையில் அடிக்கும்"...!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Page_6_SECDA_NGO_01_12_04.jpg

Page_7_SECDA_NGO_01_12_04.jpg

இந்தத்திட்டத்துக்காக செக்டா அமைப்பால் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட

திட்டவரைவில் கேட்கப்பட்ட தொகை        -  10 31 000, 00

ஏற்கனவே  அனுப்பப்பட்ட தொகை              -    6 74 101, 00

26/03/2015 இல்   அனுப்பப்பட்ட தொகை        -   3 57 000, 00

மொத்தம்                                                                   - 10 31 101, 00

 

 

போன கிழமை நேரடியாக நிர்வாகிகள் மற்றும் அங்கு வேலை செய்பவர்களுடன்  SKYPEஇல் பேசினோம்

இடத்தையும் வேலைகளின் தராதரம் மற்றும் சில ஒப்பந்தங்களையும் நேரடியாகப்பார்த்தோம்.

மிகவும் சந்தோசமாகவும்

பெரும் எதிர்பார்ப்பும் வந்தது.....

அவர்களை உற்சாகப்படுத்தவும்

கேட்கப்பட்ட தொகையைக்கொடுத்து அவர்களது வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்து உதவவும் தீர்மானித்து

கேட்கப்பட்ட முழுத்தொகையும்  நேற்றுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயலாளர்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

பிரான்ஸ்,

 அன்புடையீர் வணக்கம்

 அனுசரனைக்கான நன்றி மடல்

 மாதிரி ஆடைத் தொழிற்சாலை செயல்திட்டத்தினை பூரணப்படுத்துவதற்காக குறைநிரப்பு நிதியினை அனுப்பிவைத்தமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கின்றோம்.

 தங்களினால் அனுப்பிவைக்கப்பட்ட  ரூபா 357000.00 (ரூபா மூன்று இலட்சத்து ஐம்பத்து ஏழயிரம்) நிதி  27.03.2015ஆம் திகதி கிடைக்கப்பெற்றது. என்பதனை உறுதிப்படுத்துகின்றோம். குறைநிரப்பு நிதியினை அனுப்பிவைத்தமைக்கு நன்றி கூறுகின்றோம்.

 எதிர்காலத்தில் ஆடைத்தொழிற்சாலை செயல்திட்டம் நிறைவான கட்டத்தில் இயங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். எம்மீது நம்பிக்கை வைத்து முழு நிதியினையும் அனுப்பி வைத்தமைக்கு நன்றி கூறுகின்றோம். தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக என்றைக்கும் செயற்படுவோம். என்பதனையும் அறியத்தருகின்றோம்.

 நன்றி

ஆ.மேரிவயலற்

பொருலாளர்

செக்டா

 

 

செக்டா தலைவரின் நன்றிக்கடிதம்...

 

Objet: எம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு நாங்கள் ஒத்திசைவாக செயற்படுவோம்.

சஸ்பநிதி அண்ணா

குகதாசன் அண்ணா 

 

வணக்கம்

 

14.03.2015ல் தாங்கள் நேரடியாக ஸ்கைப் ஊடாக ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்தினை

நேரடியாக பார்வையிட்டதும், பயனாளிகளுடன் கதைத்ததும்ஆரோக்கியமான விடையமாக

அமைந்திருக்கின்றது. இதனால் எமக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்களுக்கும் சந்தோசம்

ஏற்பட்டது.

தங்கள் சமூகப் பணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்குஉறுதுணையாக அமைந்திருக்கின்றது.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சிந்தனைகளையும் திட்டமிடல்களையும்

தாயகத்தில் நடைமுறைப்படுத்த நாம் எம்மாலான அனைத்துப் பங்களிப்பினையும்

நிதானமாகவும், வேகமாகவும் செய்வோம்.

துடிப்புள்ள செயற்பாட்டு பயன்பாட்டினை தாங்கள் பெற்றுக்கொள்ள

உங்களுக்கு உதவியாக நாம் இருப்போம். எம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு

நாங்கள் ஒத்திசைவாக செயற்படுவோம். தங்களுக்கு விசுவாசமாகவும், கீழ்ப்பணிவுள்ள  அடக்கமான சேவையினை வழங்குவதற்கு மனித நேய

உணர்வுடன் சமூகப் பற்றுடன் செயற்படுவோம்.

தாங்கள் நிதி சேகரிப்பதில் ஏற்படும் சிரமம், வலி, வேதனைகள் அதன்

விளைவுகள் புகழ் பற்றியும் மாறான இழிவு பற்றியும் நாம் அறிவோம்.

தங்கள் தொழில், குடும்ப, நேரப் பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி

வைத்துவிட்டு தாங்கள் சமூகப் பணிக்காக நிதி சேகரிப்பது என்பது எவ்வளவு கஸ்ரமான

விடயம் என்பதனை புரிகின்றோம். அதனை உணர்ந்து நாம் விசுவாசமாக செயற்படுவோம்.

ஸ்கைப் பில் பார்த்த போது தாங்கள் மகிழ்ச்சியடைந்தது எமக்கு நின்மதி

தருகின்றது. தாங்கள் நேரில் வந்து பார்வையிட்டால் மிக்க மகிழ்ச்சியடைவீர்கள்.

தங்கள் உழைப்பு அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கின்றது என்ற திருப்தி ஏற்படும்.

தங்கள் வரவை அன்புடன் எதிர்பார்க்கின்றோம். தங்களை வருகை தரும்படி

வரவேற்பதுடன்,தங்கள் வருகையினையிட்டு நிறைவடைகின்றேன்.

செக்டா நிறுவனத்துடன் தொடர்ந்தும் கூட்டிணைந்து சமூகப்பணி செய்ய

தங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

ச.சசிகரன்

தலைவர்

செக்டா

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் செயலாளரால் நேரடியாக எடுத்துவரப்பட்ட காணொலி....

 

 


http://www.pungudutivu.fr/2015/05/1-2015.html

 


தாயகத்திலிருந்து தைத்த ஆடைகளை எடுப்பவர்களுக்கு இவர்களின் விலாசத்தை கெர்டுங்கள் உறவுகளே...

ஒன்றைச்செய்தால்

நிதியைக்கொடுத்தால் மட்டும்   போதாது

வளர்த்தும் விடணும்

அது இன்னும் இன்னும் எமக்காக உயிர் தந்தோரின் குடும்பங்களை வாழ்விக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தாயகத்திலிருந்து தைத்த ஆடைகளை எடுப்பவர்களுக்கு இவர்களின் விலாசத்தை கெர்டுங்கள் உறவுகளே...

ஒன்றைச்செய்தால்

நிதியைக்கொடுத்தால் மட்டும்   போதாது

வளர்த்தும் விடணும்

அது இன்னும் இன்னும் எமக்காக உயிர் தந்தோரின் குடும்பங்களை வாழ்விக்கும்....

 

இதோ என்னால் ஒரு பாடசாலைக்கான ஓடர் எடுத்துக்கொடுக்கப்பட்டுள்ளது....

அவர்களது நன்றிக்கடிதம்....

 

----- Mail transféré -----

De: National NGO Social Economics Children Development Assosiation <secdango@gmail.com>

À: S Saspa

Envoyé: Thu, 14 May 2015 09:33:16 +0200 (CEST)

Objet: குகதாசன் அண்ணாவுக்கு நன்றி

 

சஸ்பநிதி அண்ணா  வணக்கம்

                        

குகதாசன் அண்ணா சுன்னாகம் பாடசாலை ஒன்றின்

ஓடர் எடுப்பதற்கு ஒழுங்கு படுத்தியமைக்கு நன்றி கூறுகின்றோம். அவருக்கு

தெரியப்படுத்தவும்.

நன்றி

ச.சசிகரன்

Link to comment
Share on other sites

முன்மாதிரியான ஒரு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரான்ஸ் கிளையைச் சேர்ந்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

 

இதுபோல புலத்தில் செயற்படும் ஒவ்வொரு கிராம சங்கமும் பழைய மாணவர் சங்கங்களும் ஒரு பத்துப் பேருக்காவது வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை முன்னெடுத்தால்......

 

இல்லாதது என்ன பணமா அல்லது மனமா,..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல திட்டம் !
குறைந்த பட்சம் அங்கிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான 
சீருடைகளை தைத்தலை என்றாலும் 
ஒரு கொன்றாக் முறையில் பெற்றகொள்ள வேண்டும் 
 
குறைந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை 
ஒரு குறிபிட்ட நிச்சயமான வருமானம் 
இவர்களுக்கு என்று இரு பகுதியும் லாபம் பெறலாம். 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல திட்டம் !
குறைந்த பட்சம் அங்கிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான 
சீருடைகளை தைத்தலை என்றாலும் 
ஒரு கொன்றாக் முறையில் பெற்றகொள்ள வேண்டும் 
 
குறைந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை 
ஒரு குறிபிட்ட நிச்சயமான வருமானம் 
இவர்களுக்கு என்று இரு பகுதியும் லாபம் பெறலாம். 

 

 

நல்ல யோசனை.

தைக்கும் உடைகள் தேங்காமல், உடனடியாக விநியோகிக்கக் கூடிதாக இருக்கும்.

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்மாதிரியான ஒரு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரான்ஸ் கிளையைச் சேர்ந்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

 

இதுபோல புலத்தில் செயற்படும் ஒவ்வொரு கிராம சங்கமும் பழைய மாணவர் சங்கங்களும் ஒரு பத்துப் பேருக்காவது வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை முன்னெடுத்தால்......

 

இல்லாதது என்ன பணமா அல்லது மனமா,..

 

சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம்

Social Economics Children Development Association

அரச சார்பற்ற தேசிய தொண்டு நிறுவனம்

– செக்டா – SECDA

 

 

பிரான்ஸ் – புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்

சிறு கைத்தொழில்

மாதிரி ஆடைத்தொழிற்சாலை

வாழ்வாதார செயற்திட்டம்

கிளிநொச்சி, இலங்கை

அன்புடையீர் வணக்கம்

புங்குடுதீவு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் – புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் மனிதநேய தொண்டுப்பணியில் தாயகத்தில் இயங்கும் அரச சார்பற்ற தேசிய தொண்டு நிறுவனமான சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் (செக்டா) வுடன் கூட்டிணைந்த சமூகப்பணியில் வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மாதிரி ஆடைத் தொழிற்சாலை சிறு கைத்தொழில் வாழ்வாதாரச் செயல்திட்டம்.

மாதிரி ஆடைத் தொழிற்சாலை செயல்திட்டத்திற்காக புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செக்டாவுக்கு (சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்திற்கு) ரூபா 1030௦௦0.00 (பத்து இலட்சத்து முப்பதாயிரம்) நிதயுதவி செய்துள்ளார்கள். இந் நிதியிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அதிலும் குறிப்பாக பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களையும் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட உழைப்பாளரை இழந்த குடும்பங்களில் இருந்தும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இரத்தினபுரம் கிராமத்தில் போரினால் பாதிக்கப்பட்டபயனாளிகளுக்கான புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் 06.02.2015ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு மாதிரி ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டம் தொழில்சார் ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட (போரில் பங்கெடுத்த) குடும்பங்களின் அதிலும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் குடுப்ப வாழ்வாதாரத்தினையும், பொருளாதாரத்தினையும் கருத்தில்கொண்டு அவர்களின் ஜீவனோபாய வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் கூட்டுமுறை பண்ணை தொழில் முறையிலான அவர்களின் ஜீவனோபாய வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் ஆடைத்தொழிற்சாலை (வர்த்தக நிலையம்) அமைப்பதற்கு செக்டா நிறுவனத்துடன் கூட்டிணைந்து அனுசரணை வழங்கியமைக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திற்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றோம்..

போரினால் கணவனை இழந்த அல்லது சிறைகளில் இருக்கும் அல்லது குடும்பத் தலைவர்கள் போரில் காணாமல்போன குடும்பங்களில் இருந்து  பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

போரில் பிள்ளைகளை இழந்து குடும்ப வருமானத்திற்கு வழிதெரியாமல் சுயமாக இயங்கமுடியாமல் தடுமாறும் குடும்பங்களில் இருந்தும் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

பெற்றோரை இழந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் மேற்படி வகைகளுக்கு உட்பட்டவர்கள் ஒன்றுகூடி அல்லது அவர்களை கூட்டிவைத்து கூட்டுமுறை பண்ணை வடிவிலான செயல்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் செய்து உழைத்து குடும்ப வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

முதலீடும் மூலதனமும் செக்டாவின் பாதுகாப்பில் நிலையான சொத்தாக தாயகத்தில் எக்காலத்திலும் (தேய்மானக் காலம்வரை) இருக்கும்.

கூட்டுறவு சொத்தாக இந் நிதியிருக்கும் இம் மூலதனத்தில் எமது நிபந்தனைக்கு உட்பட்ட பயனாளிகள் தகுதியுடையோர். தொழில் வாய்ப்பு தேவை என்று கருதினால் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினரின் சொத்தில் அல்லது மூலதனத்தில் தொழில்செய்து வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்திற்கு வழிசமைக்கலாம்.

ஆரம்பத்தில் 5 பயனாளிகளுடன் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 10 பயனாளிகளாக விரிவடைந்துள்ளது. எதிர்காலத்தில் கூட்டுறவுச் சங்கமாக தொழில் வழங்கும் நிலையமாகவும், காமன்ஸ் என்ற மட்டத்திற்கு விரிவாக்கம் செய்வது திட்டத்தின் தூர நோக்கமாகும்.

பயனாளிகள் இடைவிலகினால் அவர்களின் இடத்திற்கு புதிய பயனாளிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தேறிய இலாபம் சமூக சேவைக்கும், சிறுவர்களின் கல்வித்திட்டத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

மேற்படி செயற்திட்டத்தின் நிலைத்து நிற்கக்கூடிய ஆயுளை செக்டா நிறுவனம் உறுதி செய்யும்.

கூட்டுக் குழுவாக இணைந்து உழைத்து வருமானத்தை பங்கீடு செய்வது திட்டத்தின் நோக்கமாகும். எல்லாப் பயனாளிகளும் கூட்டிணைந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து தொழில்செய்து வருமானம் ஈட்டல் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

உற்பத்திக்கு ஒரு அணியும் வியாபார நடவடிக்கைக்கு ஒரு அணியுமாக இரண்டு அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு செயற்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 வியாபார நடவடிக்கையில் பயனாளிகளுக்கு கடன் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் சுழற்ச்சிமுறையில் வழங்கப்படும். அவர்களின் வினைத்திறனுக்கு ஏற்ப கடன் எல்லை அதிகரிக்கப்படும்.......

சுழற்சி முறை நுண்கடன் செயற்திட்டம் ஆடைத் தொழிற்சாலை செயல்திட்டத்தின் உப திட்டமாக இணைக்கப்பட்டுள்ளது. இது வியாபாரக் கடன் வழங்கல் ஆகும். உடைகள் கடன் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அவர்கள் விற்பனை மூலம் வருமானமீட்டி கடனை திருப்புவார்கள். லோன் வடிவத்தில் அல்லது கடன் விற்பனை மாதிரி பயனாளிகளை ஊக்குவித்து தொழில் வாய்ப்பினை அதிகரிப்பது திட்டத்தின் நோக்கமாகும்.

எதிர்காலத்தில் செயற்திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்க்கான  சகல முயற்சிகளும் எடுக்கப்படும். திட்டத்தின் வளங்களை அதிகரித்து பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் திட்டத்தின் தூர நோக்காக உள்ளது. பல பெண்களும் சிறுவர்களும் நன்மையடையக் கூடிய வகையிலும் குறிப்பாக திட்டத்தின் தேறிய இலாபத்தில் சிறுவர்களின் கல்விக்கு உதவி புரிவதும் திட்டத்தின் தூர நோக்கமாகும்.

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தர்மப்பணியில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செக்டா நிறுவனத்துடன் கூட்டினைந்தமை தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில் பயனாளிகள் இருந்தபோது நம்பிக்கை ஒளியாக 10 குடும்பங்களின் வாழ்வில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விளக்கேற்றியிருப்பது எம்முடன் கூட்டிணைந்து பணி செய்யும் எல்லோர் இதயங்களிலும் பரவசத்தையும் புன்னகையையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

10 குடும்பங்களின் வாழ்விலும் விளக்கேற்றிய புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துடன் கூட்டிணைந்து சமூகப் பணி செய்யும் எல்லா மனிதநேயமுள்ள நல்லுள்ளங்களின் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.

தங்கள் அனுசரணைபெற்ற குடும்பங்கள் நல்வாழ்வு வாழ்வதற்கும் அவர்கள் சிறப்பான முறையில் தொழில் செய்து முன்னேறவும் செக்டா நிறுவனம் தன்னாலான அனைத்து பங்களிப்பினையும் நல்கும்.

மேற்படி பயனாளிக் குடும்பங்களின் வாழ்வில் நல்லகாரியம் செய்த உங்களை அவர்கள் இறையன்போடு நேசிக்கின்றார்கள். இறைவடிவில் உங்களை அவர்கள் தரிசிக்கிறார்கள். தங்கள் பணி மேலும் வளர செக்டா நிறுவனத்தின் சார்பிலும் பயனாளிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

நீங்கள் பயனாளிகளுக்கு செய்த உதவிக்கும் அனுசரணைக்கும் செக்டா நிறுவனத்தின் சார்பிலும் பயனாளிகள் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றோம். அதிலும் மேலாக தங்கள் சிந்தனைகளும் திட்டமிடலும் வெற்றிகரமாக முன்னேறிச்செல்ல சகல வழிகளிலும் செக்டா நிறுவனம் பக்கபலமாக இருக்கும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்துடன் செய்துகொண்ட கூட்டு உடன்படிக்கை வெற்றிகரமாக தொடர காத்திரமான பங்களிப்பினை நல்குவோம்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் புனிதப் பயணத்தில் அதன் பங்காளிகளின் உயர்வான சமூக சேவை சிந்தனை எண்ணம் ஈடேறவும் முயற்சி பயனளிக்கவும் தங்கள் அனைவரினதும் சமூகசேவை உழைப்புக்கு பெறுமானமாக தற்போது 10 குடும்பங்களுடன் தொடங்கி என்றும் பல ஜீவன்கள் தங்கள் புண்ணியத்தில் வாழ்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை செக்டா நிறுவன கூட்டு உடன்படிக்கையில் வழிகோலுமென நன்றியுடன் கூறுகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்தினை விரிவாக்கம் செய்து பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கும் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செக்டா நிறுவனத்துடன் உடன்பாடு எட்டியுள்ளனர். செக்டா நிறுவனத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் வன்னி மாதிரி ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்திற்கு அனுசரணை வழங்க பிரான்ஸ் வாழ் அனைத்து மனித நேயமுள்ள கருனையுள்ளங்களையும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக எதிர்காலத்தில் செக்டா நிறுவனத்தின் செயல் திட்டங்களுக்கு ஆதரவு நல்கும்படி பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வன்னி அபிவிருத்தியில் மாதிரி ஆடைத் தொழிற்சாலை செயல்திட்டமான நிலையான அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அனுசரணை வழங்கியிருப்பது உண்மையில் காத்திரமான பங்களிப்பு என்றுதான் கூறவேண்டும். ஏன் என்றால் இது ஒரு நிலைத்து நிற்கக்கூடிய செயற்திட்டம், பெறுமதியான நடவடிக்கை என்று கூறலாம்.

வன்னி அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் என்று கூறுகின்றபோது விரல் விட்டு எண்ணக்கூடிய சில திட்டங்களையே வன்னியில் அவதானிக்க முடியும். அதில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் மாதிரி ஆடைத்தொளிற்சாலை சிறப்புப் பெறுகின்றது.

கொப்பி கொடுத்தல், சைக்கிள் கொடுத்தல், கோழி கொடுத்தல், மாடு கொடுத்தல் ஒருசில வருடங்கள் அல்லது மாதங்களுக்கு நிதி வழங்கல் எல்லாம் தோன்றி மறையும் திட்டங்களே காணப்படுகின்றது.

அனால் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் மாதிரி ஆடைத் தொழிற்சாலை என்பது நிலைத்து நிற்கக்கூடிய நிலையான அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு மூலதனத்தையும் பாதுகாத்து நிலையான தொழிலும் வழங்கி வாழ்வாதார ஜீவனோபாய வாழ்க்கைக்கு பங்களிப்பு நல்குவதாக அமைந்திருக்கின்றது.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் – பிரான்ஸ்  எல்லை ஒன்றை வரையறுத்த அமைப்பு ஆயினும் எல்லைதாண்டி அதன் சமூகப் பணியை வியாபித்திருப்பது புங்குடுதீவு மக்கள் ஒன்றிய செயலணியின் உயர்வான சமூக சேவை எண்ணத்தையும் பறந்து விரிந்த மனித நேய உணர்வையும் சுட்டி நிற்கின்றனர்.

தமிழர் தாயகத்தின் தேசிய உணர்வையும் இனப்பற்றினையும் சமூகத்தின் மீதுள்ள பிணைப்பினையும் புகழைத் தாண்டிய புரிந்துணர்வின் வெளிப்பாடாக உள்ளது. புங்குடுதீவு சூழலைத் தாண்டி வன்னிப் பிராந்தியம் கிழக்கு மாகாணம் எனத் தொடரும் பிரான்ஸ்- புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சமூகப் பணி பலரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஊர் பெருமைக்கும், புகழுக்கும் முடங்காமல் உணர்வுபூர்வமான உள்ளத்தில் இருந்து எழும் சமூக சேவை உணர்வுடன் தூய எண்ணம் கொண்ட செயற்பாட்டினை பறைசாற்றியுள்ளார்கள்.

சமூக சேவையாளர்கள் உருவாக்கப்படுவதில்லை அவர்கள் பிறக்கின்றார்கள் அல்லது தானாக உருவாகின்றார்கள். பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எல்லை தாண்டிய பணி மூலம் அவர்கள் சமூக சேவை உணர்வுடையவர்களாக பிறப்பெடுத்தவர்கள் என்று அவர்களை கௌரவப்படுத்த விரும்புகின்றேன். எல்லை தாண்டிய பணி என்பது அவர்களின் கௌரவத்தினை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது. ஏனையகிராமத்தவர்களுக்கு புரட்சிகர சித்தாந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் இயங்கு சக்தியாக அல்லது அச்சாணியாக இருக்கும் செயட்பட்டலர்களின் சிந்தனை புரட்சிகரமானது.அது மனித நேயத்தின் உச்சம் என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

குறுகிய சுயநலன்களுக்காக சமய, சமூக, பிரதேச, சாதிய, வர்க்க வேறுபாடுகளினால் கூறுபட்டுப்போய்க்கொண்டிருக்கும் தமிழ் சமூகத்தை ஐக்கியப்படுத்துவதாகவும் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் மாதிரி ஆடைத்தொளிற்சாலை செயல்திட்ட செயற்பாடு அமைந்திருக்கிறது என் புகழாரம் சூட்டுகின்றேன்.

தமது சுயநலன்களுக்காக எமது உறவுகளை கூறுபோட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சில அமைப்புகளுக்கும் தனி நபர்களுக்கும் இந்த செயற்திட்டம் ஒரு பாடப் புத்தகம். அவர்களுக்கு ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

எமது சமூகம் ஒன்றுபட வேண்டும், கூடி வாழ வேண்டும் அதனூடாக எமது சமூக விடுதலையினையும் அடைய முடியும் என்பதற்கான புரிந்துணர்வு செயற்திட்டமாக மாதிரி ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டம் ஒன்றை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி இரத்தினபுரம் கிராம மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருகின்றார்கள். என்றும் கூறுவதில் நிறைவடைகின்றோம்.

இவ்வாறான செயற்திட்டங்கள் முன்மாதிரியானவை, பலருக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது, பலரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது. எதிர்காலத்தில் ஏனையோரால் முன்னெடுக்கப்படும். செயல்திட்டங்களுக்கு இம்மாதிரியான செயற்திட்டங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன என்று கூறலாம்.

 

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வன்னியில் காத்திரமான பங்களிப்பு ஒன்றை நல்கி வன்னி அபிவிருத்தியில் தடம் பதித்துள்ளது என்றால் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் அமைந்துள்ள மாதிரி ஆடைத் தொழிற்சாலை செயல்திட்டம் சான்று பகர்கின்றது.

 

நன்றி

ச.சசிகரன்

செக்டா

தொலைபேசி இல : 0094(0) 0774118808   

 ஈமெயில் முகவரி : secdango@gmail.com

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வாழ்த்துக்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே...

 

ஒரு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறவனத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்..

 

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டதால்

குழந்தைகள் மறுவாழ்வும் சம்பந்தப்படுவதால்

கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு

நிறுவனத்தின்  செயற்பாட்டுத்தலைவரை (சசிகரன்)

நேரே அழைத்துள்ளார்கள்.

விரைவில் இந்தியாவில் ஒரு சந்திப்பில் அவர் கலந்து கொள்வார்

அதற்கான ஒத்துழைப்பையும் அதற்கான செலவையும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சானது செய்து கொடுக்கும்.

அவர்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்

பலநூறு  ஆட்கள் வேலை செய்யும் வழி அமையும்

எல்லாவழிகளிலும் முயல்கின்றோம் .பார்க்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

இந்த திட்டம் சம்பந்தமாக இன்னுமொரு தகவல்..

எனது நண்பர்  ஒருவர் மூலம் மேலதிக நிதியாக (விநியோகம் செய்ய வாகனம்)

3 லட்சம் ரூபாக்கள் கிடைக்கப்பெற்று நிர்வாகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்.

----- Mail transféré -----
De: National NGO Social Economics Children Development Assosiation <secdango@gmail.com>
À: S Saspa 
Envoyé: Mon, 17 Aug 2015 11:30:28 +0200 (CEST)
Objet: குகதாசன் அண்ணாவின்
 

சஸ்பா அண்ணா வணக்கம் 

 

நாம் நலம் தங்கள் நலத்திற்கு
இறையாசி வேண்டுகின்றோம்.

                     

திரு.குகதாசன்
(அண்ணாவின்) அவர்களின் அக்கா காந்திமதி அவர்கள் ஆடைத் தொழிற்சாலையினை
பார்வையிடுவதற்கு 
03.08.2015ல் வருகைதந்தார்.

 

குகதாசன் அண்ணாவின்
ஒழுங்குபடுத்தலில் ......... அண்ணா அவர்கள் ரூபா 
300000.00 நிதியினை ஆடைத் தொழிற்சாலை
செயற்திட்டதிற்காக அனுசரணை வழங்கியுள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம்.

 

நன்றி

ச.சசிகரன்

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் முயற்ச்சியின் பயனாக..

20 குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பு.

எனக்கு வந்த ஈ மெயிலை இங்கு இணைக்கின்றேன்

இந்த திறப்புவிழா முடிவடைந்ததும் சம்பந்தப்பட்டவரின் பெயர்

மற்றும் விபரங்கள் இங்கு இணைக்கப்படும்.

 

 

குகதாசன் அண்ணா வணக்கம்

நன்றி கூறல்

 

.................... அண்ணா யாழ்ப்பாணம் இணுவிலில் 2016ல் ஜனவரியில் 20இலட்சம் ரூபா முதலீட்டில் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்தை ஆரம்பிக்கின்றார். அதற்க்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது.

உங்கள் முயற்சிக்கு நன்றி கூறுகின்றேன்.

உங்களுக்கும் எனக்குமான நட்பின் அடையாளம் புதிய ஆடைத் தொழிற்சாலை.

மனித உறவுகள்தான் முன்னேற்றத்திற்கு காரணம் காசை விட உறவுதான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் உயர்வுக்குமுரிய சொத்து. பணம் அல்ல நாகரிகமான நட்புறவு.

 

“தொண்டுப் பணியில் ஈடுபடுகின்ற பலர் இதனை புரிந்து கொள்வதில்லை. இதுதான் பலரின் தோல்விகளுக்கும் காரணம்.”

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரசவிக்கப் போகும் குழந்தைதான் யாழ்ப்பாண ஆடைத் தொழிற்சாலை என்று கூறுவதில் நிறைவும் அடைகின்றோம்.

ஏனெனில் எங்கள் நட்பின் அடையாளமாக அந்த தொழிற்சாலை இருக்கும்.

திட்டத்தை தொடங்க ......................... அண்ணா யாழ்ப்பாணம் வருகின்றார்.

 முடிந்தால் சந்திக்கவும். அவருக்கு நன்றி கூறவும். நல்ல மனங்கள் ஒன்றிணைவதால் நல்ல காரியங்கள் நடக்கின்றன.

 

 

நன்றி

ச.சசிகரன்

செக்டா   

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

ஏற்கனவே இங்கு நான் குறிப்பிட்ட

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலையின் 

அடுத்த கட்டம் ஈடேறியிருக்கிறது.

எமது கட்டமைப்பையும்

அதன் நோக்கத்தையும் நண்பர்களுக்கு கொண்டு சென்றதன் பலனாக

நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.

அந்த நண்பர் தனது பெயரை தற்பொழுது எங்கும் வெளியிடவேண்டாம் என அறிவுறுத்தியதால்

அவரது பெயரை மட்டும் தவிர்க்கின்றேன்.

உங்கள் யாருக்காவது இது போன்ற திட்டங்களில்

அல்லது அவர்களிடமிருந்து இறக்கமதி செய்யும் விருப்பமிருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கமாகும்.

நன்றி.

 

திரு. திருமதி..................................அவர்கள்

பாரிஸ்,

பிரான்ஸ்.

11.03.2016

 

அன்புடையீர் வணக்கம்

 

தையல் பயனாளிகளுக்கு

சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

 

 

திரு.,திருமதி .......................................... குடும்பத்தின் புண்ணிய பணியில் சாவகச்சேரி யாழ்ப்பாணத்தில்  06.02.2016ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிச்சாலையில் பயனாளிகளுக்கு ஒரு மாதகால தையல் பயிற்சி வழங்கப்பட்டு பணியாட்கள் தேர்வு செய்யப்பட்டு 30 பயனாளிகளுக்கு  09.03.2016 சான்றிதல்கள் வழங்கப்பட்டது. சான்றிதல் வழங்கல் நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இத்துடன் இணைக்கின்றோம்.

 

இரண்டு மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையில் செயல் திட்டத்தின் மூலம் 20 பயனாளிகள் நேரடியாகத் தொழில் வாய்ப்பினைப் பெறுவார்கள். மறைமுகமாகவும் , பகுதி நேரமாகவும் சந்தைப்படுத்தல் வழிமுறை மூலமும் 10 பயனாளிகள் தொழில் வாய்ப்பினைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

 

திரு. திருமதி.................................  குடும்பத்தின் சமூக பணியையும், மனித நேயம் உள்ள சமூக பார்வையினையும் இவ்சந்தர்ப்பத்திலும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

 

பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய .............................அண்ணா அவர்களினதும் .......................... அக்கா அவர்களினதும் கருணை உணர்வுகளினால் தங்களை இறைவனின் மறு வடிவமாக தரிசிக்கின்றோம். எல்லோருக்கும் உதாரணமா புருசராக வாழ்ந்து காட்டும் ................. அண்ணாவின் சமூகப்பணி தொடரவும்,அவரது குடும்பம் பேரருள் பெறவும் இறைவனிடம் பிராத்திப்போம்.

 

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

இணைப்பாளர்

சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்

 

Secda_2.jpg

 

 

Secda_3.jpg

 

 

Secda_1.jpg

 

 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கோயில் திருவிழாவுக்கு முன்னால் நடைபெற்ற

விற்பனை மற்றும் காட்சிப்படுத்தல்.......

Image_1_1.jpg

 

Image_1.jpg

(பல படங்கள் வந்தன. ஆனால் படங்களில்  மக்கள் அதிகமாக தெரிவதால் அவர்களை தவிர்த்து போடுகின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது 6 மாத கணக்கறிக்கை...

 

 

அரையாண்டு சம்பளப் பட்டியல்

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரனையில் வன்னியில் முன்னெடுக்கப்படும் ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டத்தில் பணி செய்யும் பயனாளிகளின் இறுதி அரையாண்டு சம்பளப் பட்டியலை இத்துடன் இணைக்கின்றோம்.

 

அத்துடன் கடந்த ஆறு மாதத்தில் ஏற்பட்ட நிர்வாகச் செலவுகள் பற்றிய விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.கடந்த 09.2015 – 02.2016  வரையான அரையாண்டுக்கான சம்பளமும் நிர்வாகச் செலவு விபரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

 

 

சம்பள விபரம்  09/2015-02/2016

 

 

இல

பெயர்

09/2015

10/2015

11/2015

12/2015

01/2016

02/2016     

 

01

கி.சந்திராதேவி

முகாமைத்துவம்

 

10,000.00

 

10,000.00

 

12,000.00

 

12,000.00

 

12,000.00

 

12,000.00

 

02

நா. ரகீம்ராஜ்

தையல்

 

21,400.00

 

27,900.00

 

29,000.00

 

27,150.00

 

16,400.00

 

15,000.00

 

03

செள.வதனி

தையல்

 

14,290.00

 

10,350.00

 

16,060.00

 

12,450.00

 

13,300.00

 

7,600.00

 

04

பி.மேரிமகிசட்

தையல்

 

9,400.00

 

7,200.00

 

 _

 

_

 

_

 

_

 

05

பா.ரூபகாந்தி

தையல்

 

14,200.00

 

1,530.00

 

17,300.00

 

19,200.00

 

6,700.00

 

_

 

06

த.நளாயினி

தையல்

 

13,275.00

 

9,475.00

 

7,950.00

 

_

 

_

 

_

 

07

சி.சுசிலாதேவி

தையல்

 

9,455.00

 

10,245.00

 

10,775.00

 

12,400.00

 

6,700.00

 

4,940.00

 

08

S.சுரேஸ்குமார்

தையல்

 

19,375.00

 

16,450.00

 

_

 

_

 

_

 

_

 

09

சி.மனோன்மணி

விற்பனையாளர்

 

16,975.00

 

19,450.00

 

13,900.00

 

16,400.00

 

11,500.00

 

14,000.00

 

 

 

 

 

 

 

 

 

 

10

அ.வயிலட்

விற்பனையாளர்

 

8,000.00

 

8,000.00

 

8,000.00

 

8,000.00

 

7,000.00

 

7,000.00

 

11

சு.மதிவதனி

விற்பனையாளர்

 

_

 

_

 

20,450.00

 

21,000.00

 

9,000.00

 

7,500.00

 

12

ஜோ.தனுயா

 

 

_

 

_

 

_

 

6,750.00

 

3,400.00

 

4,200.00

 

13

ச.சசிகரன்

கட்டிங்

 

10,000.00

 

10,000.00

 

10,000.00

 

10,000.00

 

10,000.00

 

10,000.00

 

மொத்தம்

1,46,370.00

1,30,600.00

1,45,435.00

1,45,350.00

96,000.00

82,240.00

 

 

 

 

 

 

 

 

 

 

நிர்வாகச் செலவு விபரம்-09/2015-02/2016

 

 

 

இல

விபரம்

09/2015

10/2015

11/2015

12/2015

01/2016

02/2016

01

மின்சாரம்

4,500.00

4,500.00

6000.00

6,000.00

4,000.00

3,500.00

02

வாடகை

5,000.00

5,000.00

5,000.00

5,000.00

5,000.00

5,000.00

03

தேனீர் செலவு

5,475.00

5,600.00

7,100.00

7,000.00

4,650.00

4,700.00

04

உபசாரம்

3,450.00

1,275.00

4,750.00

3,400.00

3,950.00

4,455.00

05

தொடர்பாடல்

2,000.00

2,000.00

2,000..00

2,000.00

2,000.00

2,000.00

06

போக்குவரத்து

12,475.00

11,350.00

15,900.00

13,400.00

9,400.00

6,700.00

 

மொத்தம்

32,900.00

29,725.00

40,750.00

36,80000

29,000.00

26,3555.00

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் ஆடைத் தொழிற்சாலை செயல்த் திட்டம் 1 மில்லியன் ரூபா அனுசரனையில் 06-02-2015 நாள் கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

இவ் நிலையத்தின் ஓராண்டு கடந்த 06-02-2016 ல் நிறைவடைந்தது.

இவ்திட்டத்தின் கடந்த ஓராண்டு வெற்றிகரமான பயணமாக அமைந்திருக்கின்றது. ஆயிரம் மூலப்பொருள் பற்றாக்குறை ஒரு தொய்வை ஏற்படுத்தியிருக்குன்றது. மூலப்பொருள் பற்றாக் குறையை சீர் செய்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செயல் திட்டத்தினை வெற்றிகரமாக நகர்த்துவதற்கு உருப்படியான திட்டம் எம்மிடம் உள்ளது. மலிவான விலையில் மூலப்பொருட்களை கொள்வனவு செய்ய “பல்கா” கொள்வனவு செய்தால் தான் இலாபம் ஈட்டும் கம்பனியாக உருவாக முடியும். சில்லறை கொள்வனவுகள் நிர்வாகச் செலவுகளுடன் கடந்து கழிந்து செல்லும் ஆகவே மூலப்பொருள் கொள்வனவு என்ற விடயத்தில் மட்டக்களப்பு, கிளிநொச்சி, சாவகச்சேரி ஆகிய மூன்று திட்டத்தையும் ஒருங்கிணைத்து திட்டத்தை நகர்த்துவது நல்ல        விடையமாக அமையும்.

 

 

 

சாவகச்சேரி ஆடைத் தொழிற்சாலையும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் முயற்ச்சியின் பிரகாரம் அல்லது அதன் முன்மாதிரி வழி காட்டலில் அதனை ஒத்து பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனை பதிவு செய்வதில் அக மகிழ்வும் பூரிப்பும் அடைகின்றோம்.

 

கிளிநொச்சி செயல் திட்டத்தின் வளர்ச்சி பாதையில் சாவகச்சேரி செயல் திட்டமும் ஒன்றுக்கொன்று சகோதர உறவுடன் முன்னேடுக்கப்படுவதனால் சகோதர குனவியல்புகளுடன் ஒன்றுக்கு ஒன்று துணையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதனை பதிவு செய்ய விரும்புகிறேன். மூன்று மாவட்ட திட்டங்களும் ஒன்றுக்கொன்று துணையாக தோல் கொடுக்கின்ற நடவடிக்கையாக அமைவதினாலும் எழுச்சியும் வீழ்ச்சியும்  சீர் செய்வதற்கு வரப்பிரசதாகமாக இருக்கும்.

 

இடையிடை வரும் இடையூறுகள் தோல்வி விமர்சனங்கள் என்பவற்றையும் சொத்துக்களாக மாற்றினால்- பாலவீனம் எல்லாம் பலமாக மாறும் என்ற நம்பிக்கையில் ஆடத் தொழிற்சாலையில் 2016 ம் ஆண்டின் வளர்ச்சியில் தாங்களும் எமக்கு உறுதுணையாக இருக்கும் படி அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றோம்.

 

2016 ம் ஆண்டிலும் ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டங்களின் விருத்திக்கு ஆதரவு நல்கும் தங்கள் கருணையுள்ளம் கொண்ட இதயங்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

 

சிறுகச்சிறுக பல திட்டங்கள் செய்து தோல்வியடைவதை விட பலமாக ஒரு திட்டத்தை நகர்த்துவதன் மூலம் வெற்றிக் கனியை நிலை நட்ட முடியும். என்பதக்கு அப்பாலான வெற்றியை தக்க வைக்க முடியும் என்பதும் முக்கிய விடையமாகும். எனவே 2016ம் ஆண்டிலும் ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் தங்கள் முயற்ச்சி பாராட்டத்தக்க முடிவு தாங்கள் எடுத்த தீர்மானத்திற்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அற்புதமான கருமம் நிறைவேற வாழ்த்துக்களை கூறுவதுடன் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டம் வெற்றிகரமாக அமைய எம்மாலான அனைத்து முயற்ச்சிகளையும் முன்னெடுப்போம் என்று கூறி இவ் ஓராண்டு நிலவர கள ஆய்வு அறிக்கையினை இத்துடன் நிறைவு செய்கின்றோம்.

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுக்கும் அனுசரணைக்கும் நன்றி  கூறுகின்றோம். பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பங்காளி உறுப்பினர்கள் அனைவரினதும் பாதாரவிந்தங்களை பணிந்து வணங்குகிறோம்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

தலைவர்.

செக்டா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயல் வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!

ஆண்டுக்கான மொத்த வருமானத்தையும் தெரிவித்து விட்டால்...முதலில் இடப்பட்ட மூலதனம்..எவ்வாறு அதிகரித்துள்ளது அல்லது குறைந்துள்ளது என மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியுமல்லவா?

இலாப நோக்கமற்ற நிறுவனம் எனினும்...இதனைப் பார்க்கும் மற்றையவர்கள்  இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஒரு ஊக்குவிப்பாக அமையும் அல்லவா?

9 hours ago, விசுகு said:

பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பங்காளி உறுப்பினர்கள் அனைவரினதும் பாதாரவிந்தங்களை பணிந்து வணங்குகிறோம்.

மேலுள்ளவாறு எழுதுவதையும் வருங்காலங்களில் குறைக்கச் சொல்லுங்கள்!

இது அவர்களது உழைப்பால் விளைந்தது என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்! அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க இது உதவும் எனக் கருதுகின்றேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.