Jump to content

செத்தான்டா சேகரு..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2227497.gif

அன்று சேகரு, தன் மனைவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்துவிட்டான்.. அலுவலகத்திலிருந்து மிகத் தாமதமாக வீடு வந்து சேர்ந்தான்.. :o

மனைவி, "நான் சில நாட்கள் வீட்டில் இல்லையென்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்..?" எனக் கேட்டாள்..

சேகருக்கு மிதமிஞ்சிய சந்தோசத்தில் தன் காதுகளை நம்பமுடியவில்லை, அந்த அதிஷ்ட்ட நாளை எண்ணி கூவினான், "வாவ்...!..அப்படிக்கூட நடந்திடுமா..?"

திங்கள் வந்தது.. மனைவியைக் காணமுடியவில்லை! :huh:

செவ்வாய் வந்தது.. அவளைக் காணமுடியவில்லை...!! :o

புதன் வந்தது.. ம்ம்ஹூம்..!!! :huh:

..

..

வியாழனும் வந்தது...'ம்.. எங்கே போயிருப்பாள்..?' குழம்பினான் சேகரு..! :o

....

வெள்ளி வந்தது...! :(

வீக்கம் வடிந்து இடது கண்ணால் சிறிது அவளைக் காண முடிந்தது!  :icon_idea:

-தமிழாக்கமே!

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply

அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுந்திருக்கு சேகருக்கு.. :lol:

Link to comment
Share on other sites

சேகரின் மனைவி அப்படி எதனால் அடித்திருப்பார்....?? அவர் கல்லென்றாலும் கணவன் என்ற நெறியில் உறுதியாக இருந்திருப்பார். கையில் கல்லுடைக்கும் சுத்தியல்தான் இருந்திருக்கும். :o:D:lol:

எதை எழுதினாலும், வளைச்சுப் பிடிச்சி உவமையோடு இணைக்கிறீர்களே, எப்படி? :o:lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடி, குடியை கெடுக்குமா...தொடுக்குமா?

drunk-husband-1.jpg

ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் சேகரு கண் விழித்தான்..

முந்தைய இரவின் தலைவலியும், அயர்வும் கடுமையாக இருந்தது.. இமைகளை சிரமப்பட்டு திறந்து பார்க்கையில், கட்டிலின் அருகே மேடையில் தலைவலிக்கான குளிசைகளும், கண்ணாடி சொம்பில் அருந்த நீரும் இருந்தது..

எழுந்து உட்கார்ந்து கண்களை கசக்கி நன்றாக அறையை பார்த்தான்.. அவனுடைய உடுப்புகள் அனைத்தும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தது.. அறையும் சுத்தமாக கழுவி அழகோடு மெருகூட்டப்படிருந்தது..

வீடு முழுவதும் அப்படியே 'பளிச்'சென்று இருந்தது..!

சேகருக்கு நம்ப முடியவில்லை..!! :o

மேடையின் மீதிருந்த குளிசைகளுக்கு அருகே ஒரு சிறு காகித குறிப்பு அவனின் மனைவியால் எழுதப்பட்டிருந்தது.. :unsure:

"அன்பே, உங்களுக்கு காலை உணவு சூடாக கீழே குசினியில் தயாராக உள்ளது.. சாப்பிடவும், நான் கடைவீதிக்கு சென்று வருகிறேன்"

என்னவாயிற்று இவளுக்கு? :huh:

நம்பமுடியாதவனாக கீழே சென்று சாப்பாட்டு அறையில் பார்த்தான்.. அங்கே சூடான காலை உணவும், அருகே அன்றைய செய்தித் தாளும் இருந்தது.. அருகே அவனின் மகன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்..

சேகரு அவனிடம் கேட்டான்.. "நேற்று இரவு என்ன நடந்தது?"

"ம்.. அப்பா, நேற்றிரவு நீங்கள் 3 மணிக்கு வீட்டுக்கு வருகையில் ரொம்பவும் குடித்திருந்தீர்கள், உளறியவாறு தள்ளாட்டத்துடன் வீட்டு முன்கதவில் சரிந்து விழுந்து ரொம்ப வாந்தி எடுத்து, வீடு முழுவதும் அசிங்கம் செய்துவிட்டீர்கள்..! " என்றான்.

அதிகம் குழப்பமடைந்தவனாக சேகரு கேட்டான்.. "சரி, அப்படியிருந்தும் ஏன் வீடு ஒரே சுத்தமாக இருக்கு, காலைச் சாப்பாடும் எனக்காக சூடாக காத்திருக்கு..? உன் அம்மா என்னிடம் கடுமையாக சண்டை பிடிப்பாளென்றே எதிர்பார்த்தேன்!" என சொன்னான்..

அதற்கு மகன்  " ஓ..அதுவா..? குடித்திருந்த உங்களை அம்மா 'தரதர'வென இழுத்துச் சென்று படுக்கையில் கிடத்தி, உங்கள் உடுப்புகளையும், சப்பாத்துகளையும் களையும்போது நீங்கள் அடிக்கடி சொன்னீர்கள்.."

அப்படி என்ன சொன்னான் சேகரு?

                               |

                              V

...

"பெண்ணே, என்னை விட்டுவிடு.. எனக்கு திருமணமாகிவிட்டது" :unsure:

-இதுவும் தமிழாக்கமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் சேகர் சாகிறானோ இல்லையோ

சில வேளைகளில் நாங்க சிரித்தே செத்துடுவம் போல இருக்கு.

அடிக்கடி கருத்து எழுதுவதில்லையே தவிர எந்த நேரமும் களத்தை பார்க்க முடிவதுண்டு.

தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

"பெண்ணே, என்னை விட்டுவிடு.. எனக்கு திருமணமாகிவிட்டது.. (அதனால.. வீட்டுக்குள் வேண்டாமே.. :o )" 

சேகரு சொல்லாமல் விட்டது.. :lol:

இந்த திரியை நான் தொடங்கியதின் நோக்கமே அதுதான்..! கவலைகளை மறந்து சிரித்துக்கொண்டே இருக்கோனும்..!! :)

வரவேற்பு இருக்கும்வரை எழுதலாமென்று இருக்கிறேன்.. எந்த திரியும் சில நாட்கள்தான் ஓடும்.. அதன்பின் பார்வையாளர்களுக்கு 'இந்த திரி இன்ன மாதிரிதான், இதிலென்ன புதுமை..?' என அலுப்பு தட்டிவிடும்.. :o

நல்ல வேளை, தினமும் புதுசை தேடும் மனம், சமூக ஒழுங்கு, கட்டுப்பாடுகளால், ஒரு பெண்ணிடம் மட்டுமே லயிக்க அனுமதிப்பதால், கடிவாளம் போட்ட மாதிரி மனம் அடங்கிக் கிடக்கிறது..! :icon_idea:

கருத்திற்கு நன்றி, ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பெண்ணே, என்னை விட்டுவிடு.. எனக்கு திருமணமாகிவிட்டது.. (அதனால.. வீட்டுக்குள் வேண்டாமே.. :o )" 

சேகரு சொல்லாமல் விட்டது.. :lol:

:lol::icon_mrgreen:

இதே லாஜிக்கை ஒரு படத்தில் பாக்கியராஜ் குடித்துவிட்டு உளருவது போல பயன்படுத்தியிருப்பார்.. "மெளன கீதங்கள்" அல்லது "சின்ன வீடு" என நினைக்கிறேன்..!

Link to comment
Share on other sites

நிறை போதையில் எதனை மறந்தாலும்.... தந்திரத்தையும், சாதுரியத்தையும் மறக்கவில்லை சேகரு. அபாரம்டா சேகர்.  :D  :lol:  :icon_idea:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதல் வாங்கிய அடியில் சேகர் திருந்தியிட்டான் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

உங்களைப் பற்றிய 10 முட்டாள்தனமான உண்மைகள்.
 
 1.  இப்போது வாசிக்கிறீர்கள்.
 2.  இது ஒரு முட்டாள்தனமான உண்மை என்பதனை உணர்கிறீர்கள்.
 4.  நீங்கள் நான் மூன்றாவது வரி எழுதவில்லை என்பதைக் கவனிக்கவில்லை.
 5.  சரி பார்த்துக் கொள்கிறீர்கள்.
 6.  மனதிற்குள் சிரிக்கின்றீர்கள்.
 7.  முட்டாள்தனமாக இருந்தாலும் தொடர்ந்து வாசிக்கின்றீர்கள்.
 9.  எட்டாது வரியை மறந்ததை மறுபடியும் கவனிக்கவில்லை.
10. மறுபடியும் சரிபார்த்து மனதிற்குள் சிரிக்கின்றீர்கள்.
11. இப்போது ரசித்து வாசிக்கன்றீர்கள்
12. அட பத்து உண்மைகள என்றுவிட்டு பதினிரண்டு வரை எழுதியதையும் கோட்டை விடுகிறீர்கள்.
 
ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

எழுதியவரின்...   பத்து வரை சரியாக எண்ணத்தெரியாத முட்டாள்தனத்தை

எங்கள் மீது திணிக்கப்பார்க்கின்றீர்கள் :D :D :lol:

Link to comment
Share on other sites

களைத்து வேர்த்தபடி barக்குள் நுழைந்த சேகர் விஸ்கியை வாங்கி முன்னால் வைத்துவிட்டு கண்ணிமைக்காமல் அரை மணித்தியாலமாக பார்த்துக்கொண்டே இருந்தான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து மேசையில் குடித்துவிட்டு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த லாரி ட்ரைவர்க்கு பொறுமை எல்லை தாண்டி விட்டது.

எழுந்து தள்ளாடியபடி சேகர் அருகில் வந்து "டேய் என்னடா இது விஸ்கியா இல்லை மற்றவன் பெண்டாட்டியா தொடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாய்" என்றான். சேகரும் பதில் கூறாது விஸ்கியையே பார்த்துக் கொண்டிருந்தான். லாரி ட்ரைவரும் தலையில் சினமேற அருகே வந்து விஸ்கியை எடுத்து மடார் என்று குடித்துவிட்டான்.

இதனைப் பார்த்த சேகர் கேவிக் கேவி அழத்தொடங்கி விட்டான். வம்புச்சண்டையை எதிர்பார்த்து வந்த லாரி ட்ரைவருக்கு நிலமை தர்மசங்கடமாகிப் போச்சு. சரி நடந்தது நடந்துவிட்டது நான் உனக்கு புதிதாக விஸ்கி வாங்கித்தாறேன் என்று ஓடர் பண்ணினான். இருந்தாலும் சேகரின் அழுகை நின்ற பாடில்லை. லாரி ட்ரைவரும் பக்கத்து கதிரையில் இருந்து சமாதானப்படுத்த முய்சித்தான். அழுகை நின்ற பாடில்லை. லாரி ட்ரைவரும் பொறுமையை இழந்து அதுதானே உனக்கு புதிதாக வேண்டித் தந்திருக்கின்றேனே அழுகையை நிறுத்து என்றான்.

சேகரும் சற்று அழுகையைக் குறைத்து விட்டு இன்றைக்கு எனக்கு நாளே சரியில்லை என்றான். லாரி ட்ரைவரும் கொஞ்சம் நிம்மதியாகி ஏன் என்ன நடந்தது என்றான்.

இன்று காலை கொஞ்சம் அதிகமாக தூங்கி வி்ட்டேன். அவசரமாக வெளிக்கிட்டு லேற்றாக ஆபீஸுக்குப் போனால் அங்குள்ள சிடுமூஞ்சி மனேஜர் காட்டுக்கத்தல் கத்தி வேலையை விட்டுத் துரத்தி விட்டான். சரி என்று வெளியே வந்து கார் பார்க் பண்ணிய இடத்தைப் பார்த்தால் காரும் களவு போயிருந்தது. பஸ் அல்லது ராக்ஸி எடுப்பமென்றால் பேர்ஸையும் அவசரத்தில் மறந்து வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தேன். சரி பொடி நடையாக வீட்டிற்கு வந்து உடை மாற்ற அறைக்குள் போனால் அங்கு கட்டிலில் பெண்டாட்டி தோட்டக்காரனுடன் படுத்திருந்தாள். சரி என்று பேர்ஸை எடுத்துக் கொண்டு  barக்கு வந்தால் வாங்கி வைத்திருந்த விஸ்கியையும் நீ எடுத்துக் குடித்து விட்டாய் என்றான் சேகர்.

இப்போது லாரி ட்ரைவருக்கு இன்னமும் அதிகமாக இரக்கம் வந்தது. இன்னொரு விஸ்கி வாங்கி வந்து சேகரிடம் கொடுத்தவாறே சொன்னான். உன்ரை கவலைக்கு ஒன்று போதாது இந்தா இன்னுமொன்று என்றான்.

சேகர் இப்ப மறுபடியும் அதிகமாகவே அழத்தொடங்கியிருந்தான். லாரி ட்ரைவருக்கு எதுவுமே புரியவி்ல்லை தலையைப பிச்சுக்கலாம் போலிருந்தது. இருந்தாலும் ஏன் இப்ப அழுகின்றாய் என கேட்டான்.

அதற்கு சேகர் அழுதபடியே சொன்னான். விஸ்கியை நீ வாங்கித்தாறாய் அதில கலந்த விஷத்தை யார் தருவார்கள் என்று.

(மொழி பெயர்க்கப்பட்டது).

:D

Link to comment
Share on other sites

நன்றி இசைக்கலைஞன்!
 
ஏனோ தெரியவில்லை இதை வாசித்த போதும் மொழி பெயர்த்த போதும் வடிவேலுவின் ரசிகனான எனக்கு இந்தக்காட்சி ஞாபகத்தில் வரவே இல்லை. பதிவை நீக்குவது அழகில்லை என நினைக்கின்றேன்.

நீங்கள் ஏன் அதை நீக்க வேண்டும்? :huh: நான் அந்தக் கருத்தில் இணைக்கவில்லை. உங்கள் பதிவை வாசித்ததும் இந்தக் காட்சிதான் ஞாபத்துக்கு வந்தது. அதற்காக அந்த இணைப்பைத் தந்த உங்களுக்கு நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

நீங்கள் ரிவி இல் படம் அல்லது மேட்ச் பார்த்துகொண்டு இருக்கும்போது உங்கள் மனைவி ரிவி இல் நாடகம் பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்தால் என்ன செய்வீர்கள்?
 
சிம்பிள் தீர்வு 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ரிவி ஐ எதாவது காட்டூன் சேனல்க்கு மாத்தி விடுங்கள் ....
 
மிச்ச பஞ்சாயத்தை உங்கள் பசங்கள் பர்த்துக்கொளுவங்கள்  .......
 
(பசங்கள் இல்லாதவங்கள் என்ன செய்வது எண்டு என்னக்கு தெரியாது. பின் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பு ஏற்காது)  :icon_idea:  :D
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

20 வருட திருமண வாழ்க்கை

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.
 மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
 
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

                 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
 
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

                 இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
 
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

# இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளே, சேகரின் அடுத்த அத்தியாயத்தை பார்ப்போமா..? :lol:

0bd46903-e52b-42d1-aa22-8e098bd6bdd7.jpg

குமாரும், சேகரும் நண்பர்கள்..

இருவரும் இயற்கையழகை ரசிக்க விரும்பி, சில நாட்கள் சுற்றுலா பயணமாக மேற்குத் தொடர்ச்சி மலையின் வனாந்திரப் பகுதிக்கு காரில் சென்றனர்.. கார் அந்தி சாயும் நேரம் சில கிலோ மீட்டர்கள் காட்டிற்குள் சென்று அழகிய தேயிலை காபி தோட்டங்களை கடந்தபோது, கடுமையான சுழற்காற்று, இடியுடன் மழை பெய்ய தொடங்கியது.. இருளும் கவ்வியது..

வேறுவழியின்றி அருகே தூரத்தில் தெரிந்த எஸ்டேட் பங்களாவில் தஞ்சம் புகுரலாமென முடிவெடுத்து அங்கு சென்று கதவைத் தட்டினர்..

கதவைத் திறந்தால்... மிக அழகிய இளம் மங்கை..! amoureux.gif

இருவரும் தங்கள் நிலமையை சொல்லி, "மழை மிக அதிகமாக இருக்கிறது.. நாங்கள் இங்கே இன்று ஒரு இரவு மட்டும் தங்கலாமா..?" என தயக்கத்துடன் கேட்டனர்..

அதற்கு அப்பெண், "ம்.. உங்கள் நிலைமை புரிகிறது.. இப்பெரிய வீட்டிலும் யாரும் இல்லை.. நானோ சமீபத்தில் கணவனை இழந்த கைம்பெண், உங்கள் இங்கே தங்க அனுமத்திதால் அக்கம் பக்கத்திலுள்ளோர் தப்பாக பேசுவார்களே..!" என மறுத்து தயங்கினாள்.. :huh:

அதற்கு குமார் " நீங்கள் சொல்வதும் சரிதான்.. நாங்கள் வீட்டின் ஓரமாக இருக்கும் அந்த கிடங்கில் தங்கிவிட்டு பொழுது புலர்ந்தவுடன் சென்றுவிடுகிறோம்.." என்று உறுதியளிக்கவே அப்பெண்ணும் அக்கிடங்கில் இருவரும் இரவு மட்டும் தங்கிச் செல்ல அனுமதித்தாள்..

மறுநாள் வானம் சுத்தமாக பொழுதும் புலர்ந்தது.. இருவரும் எழுந்து தங்கள் சுற்றுலா பயணத்தை தொடர்ந்தனர்.. ஒருவாரம் மகிழ்ச்சியோடு சுற்றிவிட்டு நகரம் திரும்பினர்.. emotloisir6.gifcamping.gif

9 மாதங்கள் கழிந்தன.. :o :o

குமாருக்கு அவன் பெயரில் பிரபல வழகறிஞ்ஞரிடமிருந்து எதிர்பாராதவிதமாக ஓலை வந்தது...!  :huh:

அதிலுள்ள விடயங்களை படித்தவுடன் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. சில நிமிடங்கள் மூளையை கசக்கி சிந்தித்தவுடன்தான் 'ஓ.. இது காட்டில் தங்கிய அந்த அழகிய மங்கையின் வக்கீலிடமிருந்து வந்துள்ளது..' என தெளிவு வந்தது..

விடயம் பாரதூரமாக இருக்கவே நண்பன் சேகரை நோக்கி ஓடினான்..

அவனிடம், "சேகர், நினைவிருக்கா...? நாம் இருவரும் 9 மாதங்களுக்கு முன் காட்டில் சுற்றுலா சென்றபோது ஒரு அழகிய மங்கையின் வீட்டில் இரவில் தங்கினோமே..?"

சேகர் " ஆமாம் அதற்கென்ன இப்போ..? " என அசிரத்தையாக சொன்னான்..

குமார் அவசரமாக இடைமறித்து, "சேகர், உண்மையைச் சொல், நீ நடுஇரவில் எழுந்து அந்தப்பெண்ணின் அறைக்குச் சென்றாயா..? அவளை சந்தித்தாயா..?" என அதட்டிக் கேட்டான்..

குட்டு வெளிப்பட்டதால் தர்மசங்கடத்துடன் நெளிந்த சேகர், "மன்னித்துக்கொள் குமார், நீ சொல்வது உண்மைதான்..!" என ஒத்துக்கொண்டான். :huh:

ஆத்திரமுற்ற குமார், சேகரிடம் கடுங்குரலில் "அவளிடம் உன் பெயரைச் சொல்லாமல், என் பெயரை ஏன் பாவித்தாய்..?"

சேகரின் முகம் வெளிறிச் சிவந்து, " ஐ' யாம் சாரி, குமார்.. நான் செய்த செயலுக்கு வருந்துகிறேன், ஆமாம் நீ ஏன் அதை இப்பொழுது வந்து என்னிடம் கேட்கிறாய்..?" என தயக்கத்தோடும், குழப்பத்தோடும் சேகர் கேட்டான்..

அதற்கு குமார் சொன்ன பதிலைக் கேட்டதும், சேகர் மயக்கமானான்... vil-triste2.gif

குமார் என்ன சொன்னான்..?

vil-crazy.gif

...

...

...

...

...

"ம்.. அப்பெண் தற்பொழுது இறந்துவிட்டாள்.. அவளின் அளப்பரிய சொத்துக்களை என் பெயரில் எழுதிவைத்துச் சென்றுள்ளாள்.." :o

- தமிழாக்கமே!

vil-hello3.gif

யாழ்கள உறவுகள், இந்த முடிவை எதிர்பார்க்கவில்லைதானே? :lol::D

இன்று வெள்ளிக்கிழமை.. வார விடுமுறை இனிமையாக அமைய உங்களுக்கு வாழ்த்துக்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகருக்கு.... நல்லாய், வேணும்.
சேகர் பொய் சொன்னதால்... நல்ல காத்தோட்டமான, தோட்டத்துடன் உள்ள அழகிய வீட்டை... இழந்து விட்டான்.
 
குமாருக்கு.... வெள்ளி திசை அடிச்ச படியால். நல்ல வீட்டுக்கு, சொந்தக்காரனாகி விட்டான்.
இனிமேல்.... இப்படியான, வேலைகளில் ஈடுபடும் போது.... உண்மைப் பெயருடன் போவதே... உத்தமம். :D  :lol:

Link to comment
Share on other sites

சேகரா ????

இப்பத்தான் பார்த்தேன் ...வன்மையாக கண்டிக்கிறேன் ....[லொள்ஸ் .... :lol: ...]  தொடருங்கள்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகரா ????

இப்பத்தான் பார்த்தேன் ...வன்மையாக கண்டிக்கிறேன் ....[லொள்ஸ் .... :lol: ...]  தொடருங்கள்  :)

நீங்க எழுதிய பின்னர் தான் நானும் பார்த்தேன்

வன்மையாக கண்டிக்கின்றேன்

அந்த பெயரின் மகிமை தெரியாதவர்கள்

நம்ம சேகர் என்றால்  தனது (எனது என்று வருகுது :lol: )பெயரைத்தான் கொடுத்திருப்பார்.. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.... கடவுளே.... :o

சேகர் என்பது, அந்த நகைச்சுவைகளின்..... கதா பாத்திரம். :) 
இந்தத் தொப்பியை... தமிழ்ச் சூரியன், ஏன்.. எடுத்துப் போட்டு.... எச்சரிக்கைப் புள்ளியை வாங்கினார். :rolleyes: 
"சொறி சிறி" என்று..... சொன்னாலும்,  கவலைப்படாத ஜென்மம் நான். :D

(உண்மையில், தானாச் சூனா எழுதிய கருத்தை வாசிக்கும், சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை.)

அண்ணே இதுக்கெல்லாம் எச்சரிக்கை புள்ளி கிடைக்கல .......அது உண்மைக்காக எப்போது உணர்ச்சி வசப்படுவேனோ அப்பவே எனக்கு எச்சரிக்கைப்புள்ளி கிடைக்கும் ..[அந்த மகுடம் கிடைத்தது வேறு ஒரு திரியில் அண்ணே :D ]
 
இது ஒரு பன்பலுக்கு எழுதினேன் .அதற்கெல்லாம் எச்சரிக்கை புள்ளி வாங்கும் சிறுவனா சிரியண்ணே தமிழ்சூரியன் . :lol:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.