Jump to content

பருவத்தில் திருமணம் செய்துகொண்டு முறையாக வாழும் வாழ்க்கைதான் அதிக காலம் ‘ஆனந்தம்’ தரும்:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Cute-Lovers-love-120115-350-seithy-healt

அவளுக்கு 35 வயது. கணவருக்கும் அதே வயதுதான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். ஒரு குழந்தை இருக்கிறது. குழந்தைக்கு நான்கு வயது. அந்த பெண் தனது உடல்ரீதியான சில பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேடி, இளம் பெண் டாக்டர் ஒருவரை சந்தித்தார். அடுத்தடுத்த சந்திப்புகளுக்கு பிறகு இருவரும் அதிக தோழமையுடன் மனம்விட்டு பேசத் தொடங்கினார்கள். தாம்பத்ய வாழ்க்கை குறித்து அந்த 35 வயது பெண் பேசிய விஷயங்கள் டாக்டரை ஆச்சரியப்படுத்திவிட்டது.

   

‘நாங்கள் தாம்பத்ய தொடர்புகொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்போதெல்லாம் எனக்கோ, என் கணவருக்கோ தாம்பத்ய ஆசை இல்லை. நாங்கள் இருவருமே தாம்பத்ய ஆர்வமற்ற நிலைக்கு சென்றுவிட்டோம்..’’ என்று அவள் கூறியதுதான் ஆச்சரியத்திற்கான அடிப்படை காரணம். திருமணத்திற்கு முன்பு அவளது ‘வாழ்க்கை முறை’ எப்படி இருந்தது? என்பதை அறியும் ஆர்வம் டாக்டருக்கு வந்தது.

அதுபற்றி அவளிடம் கேட்டபோது, அவள் அளித்த பதில் இது:

‘‘நான் வெளிமாநிலம் ஒன்றில் படிக்கும்போது 20 வயதிலே நண்பனோடு எல்லைமீறி விட்டேன். பின்பு ஒருவரிடம் காதல்வசப்பட்டேன். மூன்று வருடங்கள் காதல் வாழ்க்கை வாழ்ந்தோம். அடுத்து வேலையில் சேர்ந்தேன். அங்குதான் இவரை சந்தித்தேன். முதலில் எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் திருமணம் செய்துகொள்ளாமலே ‘ஒன்றாக வாழும்’ வாழ்க்கையை தேர்ந்தெடுத்தோம். நாலைந்து வருடங்கள் அப்படித்தான் வாழ்ந்தோம்.

பின்பு அவர்தான் ‘ஒரு குழந்தை வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். கர்ப்பம் உறவினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் நண்பர்களை மட்டும் அழைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்டோம். திட்டமிட்டபடி குழந்தை பெற்றுக்கொண்டேன். குழந்தை பெற்ற பின்பு படிப்படியாக எனக்கு ‘தாம்பத்ய’ ஆர்வம் குறைந்தது. என்னைப் போன்ற நிலையில்தான் அவரும் இருந்தார். இப்போது இரண்டு ஆண்டுகளாக எங்களுக்குள் உடல் தொடர்பே இல்லை..’’ என்றாள்.

‘சரி.. நீங்கள் மீண்டும் செக்ஸ் ஆர்வத்தை புதுப்பித்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா?’ என்று டாக்டர் கேட்டபோது, ‘‘தேவையில்லை! சலித்துவிட்டது’’ என்று அந்த பெண்ணிடம் இருந்து பதில் வந்திருக்கிறது. இளம் வயதிலே எல்லைமீறிவிடும் ஆண்களும், பெண்களும் முதல் குழந்தை பிறந்ததும் தாம்பத்யத்தில் இருந்து அகன்றுவிடுகிறார்கள். அப்படி அகன்று போகிறவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

சரியான பருவத்தில் திருமணம் செய்துகொண்டு முறையாக வாழும் வாழ்க்கைதான் அதிக காலம் ‘ஆனந்தம்’ தரும் என்பதை சொல்லவர்றோம்.. அவ்வளவுதானுங்க..!

http://seithy.com/breifNews.php?newsID=124477&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாம்பத்தியம் சலிக்க வயது காரணமில்லைங்கோ, முறையில்லா மனமும், உறவும் தான் காரணமென தெரியாமலா இந்த விடலைகள் இருக்குதுகள்..? :(:o:huh:

Link to comment
Share on other sites

பருவத்திலேயே பயிர் செய்ய வேண்டும் என்பது முதியோர் வாக்கு. அது சரியென இன்றைய சமுதாயம் நிரூபிக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.