Jump to content

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுப் பாடி கடற்படையினர் மீது நடந்த அதிரடித் தாக்குதல்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-67)

seati.jpg
 

வீடியோ படம்,

1986 மே மாதம் 5ம் திகதி, பிரிட்டன் தொலைக்காட்சியில் வீடியோ படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட இந்தப் படத்திறகுப் பெயர்:

‘குழப்பம் நிறைந்த சொர்க்கபூமி’

படத்தை தயாரித்தவர் ஒரு பெண் நிருபர்: பெயர் அலிசன் போர்டியஸ்.

இலங்கைக்கு வந்து யுத்தப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து கிட்டத்தட்ட 17 கஸட் ஃபிலிம்களில் படம்பிடித்தார்.

அலிசனோடு அவரது நண்பர் ரிம் கூப்பரும் இலங்கை வந்திருந்தார்.

யுத்தப்பிரதேசங்களில் வெளிநாட்டு நிருபர்கள் தகவல்களைத் திரட்டுவதை அரசாங்கம் விரும்பவில்;லை.

அலிசன் போர்டியஸையும், கூப்பரையும் பொலிசார் கைதுசெய்தனர். இருவரையும் ஏற்றிச் சென்ற டாக்ஸி சாரதி நையப் புடைக்கப்பட்டார்.

அந்தக் குழப்பத்தில் அலிசன் போர்டியஸ் ஒரு காரியம் செய்தார்.

தனது கமராவிலிருந்த கஸட் ஃபிலிமை கழற்றித் தனது பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டார். பொலிஸ் நிலையத்தில் இருவரும் விசாரிக்கப்படடனர்.

தாங்கள் இருவரும் உல்லாசப் பயணிகள் என்று சாதித்தனர். வெளிநாட்டவர்கள் என்பதால் வேறு வழியில்லாமல் இருவரையும் விடுதலை செய்து அனுப்பியது பொலிஸ்.

அதன்பின்னர் தொடர்ந்து தங்கள் வேலையைக் காட்டினார்கள் அலிசன் போர்டியசும், ரிம் கூப்பரும்.

அதன் பயனாகத்தான் ‘குழப்பம் நிறைந்த சொர்க்கபூமி’ பிரிட்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

பிரிட்டனிலுள்ள இலங்கைத்தூதரகம் அரண்டு போனது. அந்தப் படத்தில் ‘காண்பிக்கப்பட்டவை உண்மையில்லை’ என்று தூதரக அறிக்கை தெரிவித்தது.

‘தி கஸட்’ என்ற பிரிட்டி~; பத்திரிகையில் அலிசன் போர்டியல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அக்கட்டுரையில் ஒரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ஆயுதங்கள், சாதனங்கள் வசதிக் குறைவாக இருந்தாலும் தமிழ் தீவிரவாதிகள் தொடர்ந்து போராடுவதற்கு உறுதி பூண்டுள்ளனர்.”

வெளிநாட்டு நிருபர்கள்

வெளிநாட்டு நிருபர்கள் தொடர்பாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்களுக்கு சூடான செய்திகள் தேவை: பரபரப்பான தகவல்கள் தேவை.

தங்கள் பேனாக்களோடும், கமராக்களோடும் அவர்கள் புறப்பட்டுவிடுவார்கள். எங்கெங்கு மோதல்கள், சண்டைகள் எல்லாம் நடக்கின்றனவோ ஆங்கெல்லாம் பறந்து போய்விடுவார்கள்.

உள்நாட்டு யுத்தங்கள், அரசுகளுக்கு எதிராக கலகங்கள் என்பவை நடைபெறும் நாடுகளில் உள்ள அரசுகள் பத்திரிகையாளர்களைக் கண்டு பயப்படுகின்றன.

அதனால் பத்திரிகையாளர்களோடு – குறிப்பாக வெளிநாட்டு பத்திரிகையாளர்களோடு ஒத்துழைக்க மறுக்கின்றன. இடையூறுகளை விளைவிக்கின்றன.

அதன்பலனாக வெளிநாட்டு நிருபர்கள் மத்தியில் ஒரு வன்மம் ஏற்பட்டுவிடுகிறது.

“தடுக்கவா பார்க்கிறாய்? உன் தடையை மீறிக்காட்டுகிறோம் பார்” என்று தீர்மானித்து விடுகிறார்கள்.

அதன் விளைவு, அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் அமைப்புக்கள் பக்கம் அவர்கள் சாய்ந்து விடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் இயக்கங்கள், சாகசங்கள், புகைப்படங்கள் என்பவைதான் புதிய ஆச்சரியமான தகவல்கள்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்குத் தேவையானவை அவைதான்.

இலங்கை ஒரு சொர்க்கபூமியாக இருந்தால் உல்லாசப் பயணிகள் வந்து குவிந்திருப்பார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் வரமாட்டார்கள்.

குழப்பபூமியாக மாறியதால்தான் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள்.

இந்திய நிருபர்கள் சிலர் இயக்கங்களின் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்து தகவல் சேகரித்தனர்.

தமிழ்நாடடில் இருந்து படகுமூலமாக முதன் முதலாக வந்த பத்திரிகையாளர் பகவான்சிங். ரெலோ இயக்கத்தினர்தான் அவரை அழைத்து வந்திருந்தார்கள்.

படகில் அவர் வரும்போது கடற்படைப்படபால் அவர் வந்த படகு துரத்தப்பட்டது, கடலுக்குள் தன் கதை முடிந்தது என்றுதான் நினைத்தார் பகவான்சிங். ஆனால் கடற்படைப் படகால் ரெலோ படகை பிடிக்க முடியவில்லை. பகவான்சிங் தப்பினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா திரும்பியதும் தனது அனுபவங்களை விபரித்து பல பத்திரிகைகளுக்கு எழுதினார்: பிரபலமாகியும் விட்டார்.

‘துக்ளக்’ சஞ்கிகையிலும் பகவான் சிங்கின் இலங்கைப் பயணக் கட்டுரை வெளியானதாக ஞாபகம்.
ஜெர்மன் பத்திரிகையாளர்

அதேபோல் ஜெர்மன் பத்திரிகையாளர் ஒருவரையும் தமிழ்நாட்டிலிருந்து படகு மூலமாக யாழ்ப்பாணம் அழைத்து வந்தது ரெலோ.

வெள்ளையினத்தவரான அந்தப் பத்திரிகையாளருக்கு ஒரே குஷி வீடியோக் கமரா, புகைப்படக் கமராக்கள் சகிதம் இயக்கங்களின் நடவடிக்கைகளை சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்.

அவருக்காகவே ரெலோ உறுப்பினர்களும் அதிகப்படியாகவே ஆக் ஷன் போஸ்களில் நின்று படமாகிக் கொண்டிருந்தார்கள்.

கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல், படையினர் முன்னேற முயல்வதும், இயக்கங்களின் பதில் தாக்குதல் நடத்தி படையினரை திருப்பி அனுப்புவதும் போன்ற காட்சிகளை ஓடியோடிப் படமாக்கினர்.

ரெலோ முகாமிலேயே தங்கியிருந்தார். திடீரென்று ஒருநாள் ரெலோமீது புலிகள் தாக்குதல் தொடுத்ததும் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

இராணுவத்தினர்தான் முகாமைவிட்டு வெளியேறி யாழ்ப்பாணத்திற்குள் புகுந்து விட்டார்களோ என்று நினைத்தார்.

இயக்க மோதல் என்பதை அவர் விளங்கிக்கொண்டபோது அதிர்ச்சியடைந்துவிட்டார். அவரைப் பாதுகாக்கக்கூடிய நிலையிலும் ரெலோ இருக்கவில்லை.

இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் போய்ச் சேர்ந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். படகுமூலமாக தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜெர்மன் திரும்பியதும் தனது அனுபவங்களை புகைப்படங்களோடு வெளியிட்டார்.

ஈழம் முத்திரையும் தபாற் சேவையும்


ஈழம் முத்திரை

1986 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் ‘ஈழம் முத்திரை’ வெளியிடப்பட்டது.

பணநோட்டு, முத்திரை இரண்டும் மிக முக்கியமான விடயங்கள்.

‘முத்திரை’ வெளியிட்டு அதனைவைத்து தபால்சேவை நடத்துவது என்பது வடக்கில் தனியான அரசு ஒன்று இயங்குவதற்கான அடையாளமாகிவிடும்.

முத்திரை வெளியிட்டால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியுமா என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் பிராந்தியக் கமிட்டிக்கு சந்தேகம்.

ஈழம் முத்திரை வெளியிடும் யோசனையை கொண்டுவந்தவர் டேவிற்சன். அதனை நடைமுறைப்படுத்தமுடியும் என்று பொறுப்பெடுத்தவர் ரமேஷ்.

புலிகளும் தனி முத்திரை வெளியிடும் திட்டத்தோடு இருந்தனர். திலீபன், கிட்டு ஆகியோர் அதற்கான யோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். முந்திக் கொண்டது.

‘ஓஃப்செட்’ முறையில் அச்சிட்டால்தான் முத்திரை அழகாகவரும். யாழ்ப்பாணத்தில் இருந்தது ஒரே ஒரு ஓஃப்செட் பிரஸ்தான்.

விஜயா ஓஃப்செட் பிரஸ் என்று பெயர் இருந்ததாக ஞாபகம். புலிகளுக்கு அந்த அச்சகத்தோடு தொடர்பு இருந்தது.

அங்குதான் ‘ஈழம் முத்திரை’ அச்சிடப்படடது. முதல் கட்டமாக பதினைந்தாயிரம் முத்திரைகள் அச்சிடப்பட்டன. முத்திரை வடிவமைப்பு டேவிற்சன்தான் உருவாக்கியிருந்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நாவலர் மண்டபத்தில் ‘ஈழம் முத்திரை வெளியீட்டு விழா’ நடைபெற்றது.

விழாவுக்கு டேவிற்சன் தலைமை தாங்கினார். பிரதம பேச்சாளராக கலந்துகொண்டவர் எச்.என். பெர்னான்டோ. அவர் பிரபல தொழிற்சங்கவாதி. சிங்கள முற்போக்காளர்.

தென்னிலங்கையில் பொலிசார் அவரை வலைபோட்டுத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

அவர் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினருடன் தங்கியிருந்தார்.

ஈழம் முத்திரை விழாவில் கலந்து கொண்ட எச்.என்.பெர்னான்டோ சிங்களத்தில் உரையாற்ற, அதனை தமிழில் மொழி பெயர்த்தார் சிவதாசன்.

“தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கிறது. பிரிந்து செல்ல அவர்கள் விரும்பினால் அதனைத் தடுக்க முடியாது.” என்று பேசினார் எச்.என்.பெர்னான்டோ.

அவரது பேச்சுக்கு மண்டபம் அதிரும் கரவொலி எழுந்தது.

தபாற் சேவை

ஈழம் முத்திரைகளை யாழ்குடாநாடு முழுக்க விற்பனை செய்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

‘ஈழம் தபால் சேவை’ என்று தனியான மஞ்சள் நிற வாகனமொன்று நடமாடும் முத்திரை விற்பனை நிலையமாகச் செயற்பட்டது.

ஈழம் முத்திரைகளோடு யாழ் பிரதம தபாலகத்தில் கடிதங்கள் மலைபோலக் குவிந்தன.

‘ஈழம் முத்திரை’ ஒட்டப்பட்;ட கடிதங்களை தனியாக எடுத்துவைக்குமாறு உயரதிகாரிகள் கூறிவிட்டார்கள். அதனையறிந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். தபாலகத்திற்குள் சென்று, ஈழம் முத்திரைகள் மீது தபாலக சீல் அடிக்குமாறு உத்தரவிட்டது.

ஊழியர்களுக்கு உள்ளூர  சந்தோசம்தான்.

அதேவேளை ஈழம் முத்திரைக்கு சீல் அடிக்கக்கூடாது என்று தடைவிதித்த சில உயரதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

ஈழம் முத்திரை விடயத்தில் மற்றொரு வேடிக்கையும் நடந்தது.

யாழ்ப்பாணத்தில் வாங்கிய ஈழம் முத்திரையை கொழும்பில் இருந்த நண்பருக்கு அனுப்பியிருந்தார் ஒருவர்.
அந்த நண்பர் என்ன செய்தார் தெரியுமா? முத்திரை அனுப்பிய நண்பருக்கு ஒரு கடிதம் எழுதி, அதிலே ஈழம் முத்திரையை ஒட்டி அனுப்பிவிட்டார்.

கொழும்பு தபாலக சீலுடன் யாழ்ப்பாண முகவரிக்கு சென்றடைந்தது கடிதம். ஈழம் முத்திரைகள் ஒட்டி கடிதங்கள் போடுவதில் யாழ்ப்பாண மக்களுக்கு அலாதிப்பிரியம்.

திட்டமிட்ட செயற்பாடு காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ஈழம் முத்திரையும், தபால்சேவையும் அரச தபால் சேவை மூலமாக சிறப்பாக நடைபெற்றன.

ஒழுங்கு நடவடிக்கைகள்

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் ஏற்பட்டிருந்த உட்பிரச்சளைகள் பற்றி பேச்சு நடத்த டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாடு சென்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத் தலைமைப் பீடத்தில் கடும் முரண்பாடு எழுந்திருந்த நேரம் அது.

தலைமைப்பீடத்தில் முரண்பாடு என்பதை தெரிந்துகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவு உறுப்பினர்கள் சிலர் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்ளத் தொடங்கினார்கள்.

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தைச் சேர்ந்த மதன் என்னும் உறுப்பினர் ஒருவர் தனியார் கொள்ளைகளில் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இயக்கத்தின் ஆயுதத்ததைப் பயன்படுத்தி பல தனியார் கடைகளில் கொள்ளையிட்டிருந்தார்.

அவருக்கு ரமேஷன் சம்மத்தோடு மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவினர்.

இன்னொரு உறுப்பினர் ரவி. அவரும் இயக்கப் பெயரைப் பயன்படுத்தி கொள்ளைகளில் ஈடுபட்டார்.

அவரைப்பிடித்து வந்து தடுத்துவைத்தனர். அவர் தப்பியோடினார். துரத்திப் பிடித்துக் கொண்டுவந்து அடித்தபோது உயிர் போய்விட்டது.

இரவோடு இரவாக உடலை கொண்டு போய் ஆரியகுளம் சந்தியில் உள்ள மின்கம்பத்தில் கட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டார்கள்.

“எமது இயக்கத்தில் இருந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதால் மரண தண்டனை வழங்கப்படுகிறது.” என்று ஒரு அட்டையில் எழுதி கழுத்தில் கட்டிவிட்டு வந்துவிட்டார்கள்.

இராணுவப்பிரிவில் இருந்து கொண்டு மக்கள் மத்தியில் அத்துமீறல்களில் ஈடுபட்ட உறுப்பினர்கள் பத்துப்பேர்வரை மொட்டை அடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்கள்.

இராணுவப்பிரிவில் இருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களது பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கை ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் பிராந்திய கமிட்டிக்கு பிடிக்கவில்லை.

மரண தண்டனைகள் வழங்குவது முறையல்ல என்று கமிட்டி உறுப்பினர்கள் பலர் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

“நடவடிக்கைகள் அவசியமானவை. இயக்கம் உருவாக்கிவிடும் ஒரு நபர், மக்கள் விரோதியாக மாறும்போது தண்டிக்கவேண்டிய பொறுப்பு இயக்கத்திற்கு இருக்கிறது. அதனைத் தான் செய்திருக்கிறோம்.” என்று விளக்கம் அளித்தார் ரமேஷ்;.

யாழ் பிராந்திய கமிட்டியில் ரமேஷ், மோகன் இருவர் மட்டுமே மரண தண்டனைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்வது தவிர்க்க முடியாதது என்று வாதிட்டனர்.

கடலில் நடந்த அதிரடித் தாக்குதல்


கடலில் கைது

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க முரண்பாடுகள் காரணமாக வெளியேறியவர்களில் இருவர் கடல்வழியாக தனியார் படகொன்றின் மூலம் தமிழ்நாடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

ஒருவர் தயாபரன், இன்னொருவர் சுதன். குருநகரில் இருந்து புறப்பட்டது படகு.

தமிழ் நாட்டுக்குச் செல்லப் புறப்பட்ட அகதிகளும் படகில் இருந்தனர்.

இரணைதீவு என்னுமிடத்தில் வைத்து படகு கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. “நாங்கள் எல்லாம் அகதிகள்” என்று கூறினார்கள் படகில் இருந்தவர்கள்.

படகோடு அவர்களை தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

தயாபரன் முன்னரே பொலிசாரால் தேடப்பட்டவர். லெபனானில் இராணுவப் பயிற்சி எடுத்தவர். அகதி என்று நடித்துக் கொண்டிருந்தார்.

தலைமன்னார் கடற்படை முகாமில் படகில் வந்தவர்கள் அனைவரும் ஒரு இரவு முழுவதும் தங்கவைக்கப்பட்டனர்.

விஷயமறிந்து அவர்களை பார்வையிட வந்தனர் இரண்டு பௌத்த குருமார்.

கடற்படை வீரர்களை தனியே அழைத்து அவர்களில் ஒருவர் சொன்னார்: “இவர்களை விட்டுவிடாதீர்கள்”. அவர் சொன்னது தயாபரனின் காதில் விழுந்தது. அவருக்கு சிங்களம் தெரியும்.

எனவே, எப்படியாவது தப்ப வேண்டும் என்று சுதனுக்குச் சொல்லி உஷார்படுத்தினார்.

மறுநாள் காலையில் படகில் இருந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் அதே படகில் ஏற்றினார்கள்.

படகுக்குள் இரண்டு இராணுவத்தினர் ஆயுதங்களோடு காவலுக்கு ஏறிக் கொண்டார்கள்.

மற்றொரு கடற்படைப் படகில் கடற்படையினர் 9 பேர் அகதிகள் படகுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர். தள்ளாடி இராணுவ முகாமை நோக்கி இரண்டு படகுகளும் சென்றுகொண்டிருந்தன.

காரியப்பாட்டு

பாதிவழியில் இராணுவ வீரர்கள் இருவரையும் பழக்கம் பிடித்துக் கொண்டனர் தயாபரனும், சுதனும்.

பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டனர் இராணுவத்தினர். பாடத்தொடங்கினார்கள்.

எப்படியாவது தப்பிக் கொள்ள வேண்டும். தள்ளாடி முகாமுக்கு சென்றால் மீட்சி இல்லை என்று தயாபரனுக்கும், சுதனுக்கும் உறுதியாக தெரிந்துவிட்டது.

பாடலின் மத்தியில் பாட்டாலேயே பேசிக்கொண்டார்கள் இருவரும்.
“நான் மடக்குவேன், நீ செய்வியா கண்ணே கலைமானே லல்லல்லா.. லல்லல்லா இப்போது விட்டால் தொலைந்தோமடா லல்லல்லா…….”

உடனே அடுத்தவர் பாடினார். சோளஞ்சோறு பொங்கட்டுமா, நான் பொங்கட்டுமா? முடியட்டும் பாடி முடியட்டும், பொங்குமாமா………”

இராணுவ வீரர்கள் விஷயம் புரியாமல் பாடலை இரசித்துக்கொண்டிருந்தார்கள்.

பாடல் முடியப்போகிறது. படகில் இருந்த ஏனையோருக்கு ஏதோ நடக்கப்போகிறது என்று தெரிந்துபோனது.
எல்லோருக்கும் திக், திக்,

பாடல் முடிந்தது.

ஒரே பாய்ச்சல்

இரண்டு இராணுவ வீரர்களும் அதனை எதிர்பார்க்கவில்லை.

இராணுவ வீரரின் துப்பாக்கியைப் பறித்து சுட்டுத்தள்ளினார் தயாபரன். இராணுவ வீரர்கள் இருவரும் படகுக்குள் விழுந்தனர்.

பின்னால் வந்த கடற்படைப் படகு, ஏதோ அசம்பாவிதம் என்று விரைந்து அருகில் வந்தது. தயாபரனும், சுதனும் அப்படகு மிக அருகில் வரும்வரை காத்திருந்தனர்.

அருகே வந்தது படகு

இருவரும் துப்பாக்கிகளை இயக்கி ரவைகளைப் பொழிந்தனர்.

சூடுபட்ட கடற்படையினர் சிலர் கடலில் விழுந்துகொண்டிருக்க, படகு தப்பியோடத் தொடங்கியது.

படகைச் செலுத்திய கடற்படைவீரர் தவிர படகில் இருந்த எட்டு கடற்படை வீரர்களும் பலியானார்கள்.

முதல் படகில் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரோடு சேர்த்து மொத்தம் 10 படையினர் பலியானார்கள்.

உண்மையாகவே துணிகரமான தாக்குதல்தான். இது நடந்தது 1986 ஜுன் மாதம் 19ம் திகதி

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துக்ளக்’கின் விமர்சனமும் ‘சோ’வுக்கு குள்ளநரிப் பட்டமும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -68)

 
 

இரண்டு உரிமை கோரல்கள்: மன்னார் கடலில் அகதிகள் சென்ற படகை வழிமறித்து கைது செய்த கடற்படையினரில் எட்டுப்பேரும், இரண்டு இராணுவத்தினரும் தாக்குதலில் பலியானது பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன்.

அகதிகளோடு படகில் சென்ற தயாபரனும், சுதனும்தான் இராணுவத்தின் துப்பாக்கியைப் பறித்தெடுத்து தாக்குதல் நடத்தினார்கள்.

இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். பின்னர் விலகிக்கொண்டு அகதிகள்

சென்ற படகில் தமிழ்நாட்டுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

கடல் நடுவே தாக்குதல் நடந்து முடிந்தவுடன் படகு அகதிகளோடு மீண்டும் மன்னார் எருக்கலம்பிட்டிக்கு திரும்பி விட்டது.

தாக்கப்பட்ட கடற்படைப் படகு தப்பிச்சென்றதால் கடற்படையினரின் ஏனைய படகுகள் துரத்திவரக்கூடும் என்று கருதியே அகதிகள் படகு கரைக்குத் திரும்பியது.

கடலில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி மன்னாரில் புலிகளுக்கு எட்டிவிட்டது.

அப்போது புலிகளது மன்னார் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் சாஜகான்.

கடலில் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் தமது இயக்கத்தினர்தான் தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார் சாஜகான்.

உடனே, வானொலி தொடர்புக்கருவி மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்த கிட்டுவுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்தி அனுப்பினார்.

செய்தி கிடைத்த்தும் யாழ்ப்பாண பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார்கள் யாழ் மாவட்ட புலிகள்.

கடலில் வெற்றிகரமான தாக்குதல்: பத்துப் படையினர் பலி: புலிகள் நடத்திய துணிகரத் தாக்குதல்; என்று செய்தி வந்தது.

இதற்கிடையே மன்னார் கடற்கரையில் இறங்கிய தயாபரனும், சுதனும் அங்குள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினரிடம் சென்றடைந்தனர்.

கடலில் நடைபெற்ற தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்தும் தலைமன்னாரிலிருந்தும்

புறப்பட்ட இராணுவத்தினர் கடற்கரைப் பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் சல்லடைபோடடுத் தேடுதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

கடற்படையினர் பீரங்கிப் படகுகளில் வந்து கரையோரப் பகுதிகளை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெலி’யிலும் தேடுதல் நடந்தது.

அதனால் பாதுகாப்புக்காக தயாபரனும், சுதனும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் செல்லவேண்டியிருந்தது.

புலிகள் உதவி

காட்டுப்பகுதி வழியாக இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம் நோக்கி சென்றபோது அவர்களைப் புலிகள் கண்டுவிட்டனர்.
புலிகளின் உதவியோடு தான் இருவரும் பத்திரமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமுக்குச் சென்றனர்.

முகாமில் தமது தாக்குதல் தொடர்பாக கூறினார்கள் இருவரும்.

வெற்றிகரமான தாக்குதல் அல்லவா? உடனே யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் தகவல் அனுப்பியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். மன்னார் பிரிவு.

சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிரதிநிதியாக அப்போது இருந்தவர் கேதீஸ்வரன். அவர் உடனடியாக பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்:

“மன்னார் கடலில் கடற்படையினர் மீது எமது இயக்கமே தாக்குதல் நடத்தியது.” ஒரே சம்பவத்துக்கு இரண்டு இயக்கங்கள் உரிமை கோரியது இது இரண்டாவது தடவை.

அதற்கு முன்னர் மட்டக்களப்பு சிறையடைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பும், புளொட் அமைப்பும் உரிமை கோரிப் பிரச்சனைப்பட்டன.

மன்னார் கடலில் தாம் தாக்குதல் நடத்தவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டதால் புலிகள் அமைப்பினர் அதனை ஒரு பிரச்சனையாக வளர்க்கவில்லை.

முதன் முதலில் கடலில் வைத்து கடற்படையினர் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிதிதிரட்ட நடந்த வரிவிதிப்புக்கள். வரி அறவீடு

யாழ்-மாவட்டத்தில் நிதி திரட்டும் விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புலிகள் ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் கடும் போட்டி.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் யாழ் மாவட்டத்தில் நிதித் திரட்டலுக்கான திட்டங்களை தீட்டி செயற்படுத்தும் பொறுப்பை டேவிற்சனிடமும்,  ரமேஷிடமும்  ஒப்படைத்துவிட்டு தமிழகம் சென்றிருந்தார் டக்ளஸ் தேவானந்தா.

திறம்பட  திட்டமிட்டு நிதி திரட்டலுக்கான பல வழிகளை கையாண்டார் டேவிற்சன்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் சவர்க்கார வகைகள், ஷம்பு வகைகள் போன்றவற்றுக்கு விற்பனை வரி, இறக்குமதி வரி போன்றவை விதிக்கப்பட்டன.

யாழ் மாவட்டத்தில் அப்போதுதான் ஏராளமான மினி சினிமாக்கள் உருவாகிக் கொண்டிருந்தன.

மினி சினிமாக்களை நடத்துவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் அனுமதிப்பத்திரம் பெற வேண்டும். அதற்குக் கட்டணம் உண்டு.

மினி சினிமா அரங்குகள் எப்படி இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் தயாரித்துக் கொடுத்திருந்தார் டேவிற்சன். அதன்படி நடப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

காணி உறுதிகள் எழுதுவோர், நொத்தாரிசுகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரை அழைத்தும் அவர்கள் அறவிடும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட வீதம் கேட்கப்பட்டது.

வியாபாரிகள் சிலர் தாம் விற்பனை செய்யும் பொருட்களுக்கு ‘பில்’ போடாமல் இருந்து விடுவார்கள். அப்படிச் செய்தால் வரி கட்டத் தேவையில்லையல்லவா?

‘பில்’ போடாத முதலாளிகளைக் கண்டு பிடித்து தண்டம் அறவிடப்பட்டது.

தண்டப் பண அளவு வர்த்தகர்களின் வசதியைக் கணக்கிட்டே தீர்மானிக்கப்பட்டது.

சில வர்த்தகர்களிடம் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் அறவிடப்பட்டது, அதே சமயம் சில வர்த்தகர்களிடம் பத்தாயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்பட்டது.

அனுமதிப்பத்திரம் எடுக்காமல் மினிசினிமா நடத்தியவர்களிடமும் தண்டம் அறவிடப்பட்டது.

ஆங்கிலப் படங்கள் காண்பிப்பவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் தணிக்கைக் குழுவிடம் காண்பித்து அனுமதி பெற்றே திரையிடலாம் என்பது கண்டிப்பான உத்தரவு.

அந்த உத்தரவு மினி சினிமா உரிமையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

“இப்படியெல்லாம் உத்தரவுகள் போட்டால் நாம் மினி சினிமாவையே மூடிவிட வேண்டியதுதான்” என்றார்கள்.

“தாராளமாக மூடலாம். அதற்கு எமது அனுமதி தேவையில்லை” என்று சொல்லப்பட்டதும், வேறு வழியின்றி தணிக்கை விதிகளுக்கு கட்டுப்பட்டனர் மினி சினிமா உரிமையாளர்கள்.

மினி சினிமாக்களில் புலிகளும் நிதி கோரினர். புலிகளின் யாழ் மாவட்ட நிதிப் பொறுப்பாளராக அப்போதிருந்தவர் மதன் (86 இன் மத்தியில்)

“மினி சினிமாக்களில் இரண்டு இயக்கங்கள் ஏட்டிக்குப் போட்டியாக பணம் கேட்டால் நன்றாக இருக்காது.  நாம்தான் முன்பிருந்தே மினி சினிமா விடயத்தை கையாண்டு வருகிறோம்.” என்று திலீபனைச் சந்தித்துக் கூறினார் டேவிற்சன்.

திலீபன் புலிகள் சார்பாக சொன்ன ஒரே வார்த்தை- “இனிமேல் எம்மவர்கள் அதில் தலையிடமாட்டார்கள்!” அதன்பின்னர் பிரச்சனை இருக்கவில்லை. ஏனைய இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் இருந்த வேறுபாடு அதுதான்.

இயக்கப் போக்குகள்.

ரெலோ போன்ற இயக்கங்களிடம் பிரச்சனையை யாருடன் பேசித் தீர்ப்பது என்று தெரியாது. காரணம் எல்லோருமே தலைவர்கள் மாதிரித்தான் தம்மைக் கருதிக் கொண்டிருப்பார்கள்.

புலிகள் இயக்கத்திலும் யாழ் மாவட்டத் தலைமைக்கும் வன்னித் தலைமைக்கும் இடையே பிரச்சனை இருக்கத்தான் செய்தது.

ஆனால், யாழ் மாவட்டத்தில் கிட்டு சொன்னால் இயக்கம் முழுவதும் கேட்கும். வன்னியில் மாத்தையா சொன்னால் அங்கு இயக்கம் கட்டுப்படும். இருவரும் பிரபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிலும் அதே போன்ற நிலைதான் ஆரம்பத்தில் இருந்தது. 86ம் ஆண்டு மத்திய பகுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் போக்கு வித்தியாசமானதாகத்தான் இருந்தது.

இயக்கத்தின் விமர்சனக் கூட்டங்களில் தீப்பொறிகள் பறக்கும். அந்தளவுக்கு காரசாரமான விவாதம். நடக்கும். கூட்டம் முடிந்த பின்னர் வெளியே பேசும்போது பிரச்சனை இருப்பதாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

86 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் இயக்கமே இரண்டாகப்போகும் கட்டத்திற்கு உள்பிரச்சனை தீவிரமடைந்திருந்தது. ஆனால், வெளியே பிரச்சனையின் சாயல்கூட தெரியாதளவுக்கு நடந்து கொண்டனர்.

பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறிக்கொண்டிருந்தது.

Kapdan Pandithar.  ‘துக்ளக்’கின் விமர்சனமும் ‘சோ’வுக்கு குள்ளநரிப் பட்டமும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -68) Kapdan Panditharசரணாலயம்

1986 இன் மத்திய பகுதியில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள அரசடி வீதியில் சரணாலயம் ஒன்றை அமைத்தனர் புலிகள்.

‘பண்டிதர் சரயாலயம்’ என்று அதற்கு பெயரிடப்பட்டது.

குழந்தைகளுக்கான பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதே ‘பண்டிதர் சரணாலயம்’.

யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்தது சுப்பிரமணியம் பூங்கா.

யாழ் பொலிஸ் நிலையம், கோட்டை இராணுவ முகாம் என்பவற்றுக்கு அருகில் இருந்தமையால் அங்கு யாரும் செல்வதில்லை.

அதனால் சுப்பிரமணியம் பூங்கா பற்றைக்காடாக மாறியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் வேறு பெரிய பூங்காக்கள் இல்லாத நிலையில் புலிகள் உருவாக்கிய பண்டிதர் சரணாலயம் குழந்தைகளுக்குரிய பொழுதுபோக்கு இடமாக மாறியது.

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த சிவகுமாரின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது ‘உறுதியின் உறைவிடம்’.

தற்போது உள்ள மாவிரர் நினைவாலயங்களுக்கு முன்னோடியாக இருந்தது உறுதியின் உறைவிடம்தான்.

மறைந்த புலிகள் இயக்க போராளிகளது படங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.

உறுதியின் உறைவிடம் உருவாக காரணமாக இருந்த சிவகுமார் தற்போது கனடாவில் இருக்கிறார்.

புலிகள் இயக்கம் தொடர்பாக கனடா உளவுத்துறைக்கு தகவல் கொடுத்து வந்ததாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் தான் அவர்.



kadurau  ‘துக்ளக்’கின் விமர்சனமும் ‘சோ’வுக்கு குள்ளநரிப் பட்டமும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -68) kadurau

‘துக்ளக்’ மீது பாய்ச்சல்

தமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்தவிகடன் நிறுவனத்தின் சஞ்சிகைகளில் ஒன்றாக இருந்தது ‘துக்ளக்’.

ரெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரெத்தினம் புலிகளால் கொல்லப்பட்டதை கடுமையாகக் கண்டித்திருந்தது துக்ளக்.

“பிரபாகரன் ஒரு சர்வதிகாரியாக விரும்புகிறார்” என்று விமர்சித்திருந்தார் துக்ளக் ஆசிரியர் சோ.

அதைவிட துக்ளக் சோ எழுதியிருந்த மற்றொரு விடயம்தான் தமிழ்நாட்டில் இருந்த ஈழப்போராளிகள் இயக்கங்களின் ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்திருந்தது.


சோ சாடல்

அப்படி என்ன எழுதியிருந்தார் சோ? அது இதுதான்.

“பொலிசிடம் சிக்குகிறவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள். (அந்த வேதனை தாங்கமாட்டாமல்) காட்டிக் கொடுப்பவர்கள் தங்கள் கூட்டத்தினால் கொலை செய்யப்படுவார்கள்.

கள்ளக் கடத்தல், மற்றும் மாஃபியா கூட்டங்களில் கூட இந்தப்பழக்கம் உண்டு என்பது உலகறிந்த விஷியம்.”

16.6.86 இல் ‘இன்றைய நிலவரம் இதுதான்’ என்ற தலைப்பில் சோ எழுதிய ஏழு பக்கக் கட்டுரையில் தான் அப்படி எழுதியிருந்தார்.

“இலங்கையில் தனி ஈழம் என்ற ஒன்று உருவாகியே தீரவேண்டுமானால், அது ஒரு ஜனநாயக ஆட்சியாகவே இருக்க வேண்டும். பிரபாகரனின் பாஸிச ஆட்சியாக இருக்கக்கூடாது” என்றும் சோ எழுதியிருந்தார்.

பெரும் சர்ச்சையை கிளப்பியது இக்கட்டுரை.

புலிகளையும், பிரபாகரனையும் சோ சாடியதால் ஏனைய போராளி இயக்கங்களை சோ மதித்தார் என்று அர்த்தமல்ல.

சோவுக்குப் பிடிக்காத விஷியங்களில் கம்யூனிசம், பிரிவினை, பெண் விடுதலை, ஆயுதப் போராட்டம் என்று பல விஷியங்கள் அடக்கம்.

ஆர்.எஸ்.எஸ். என்னும் இந்து தீவிரவாத அமைப்பின் தீவிர விசுவாசி சோ. அவரது சொந்தப்பெயர் இராம சுவாமி.

சோவின் கட்டுரைக்குப் பதில் எழுதினார் சாலை இளந்திரையன். பேராசரியரான சாலை இளந்திரையன் தமிழ் நாட்டுக்காரர். ஈழப்போராளிகள் இயக்கங்களுக்கு ஆதரவானவர்.

சோவுக்கு பதில்

thuklak  ‘துக்ளக்’கின் விமர்சனமும் ‘சோ’வுக்கு குள்ளநரிப் பட்டமும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -68) thuklak

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது  அற்புதன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டதீவு கடலில் கடற்படையினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 69)

 
 

கடலில் நடந்த மனித வேட்டை.  1986 இல் நடைபெற்ற மிகப்பெரிய சோகச் சம்பவம் மண்டைத்தீவு படுகொலைகள்.

13.6.86 அன்று கடலில் தொடங்கிய வேட்டை, தரையிலும் தொடர்ந்து 32 மீனவர்களின் உயிர்களைக் குடித்தது.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை வழிமறித்த கடற்படையினர் சரமாரியாக சுட்டுத்தள்ளினார்கள்.

சூடுபட்ட மீனவர்கள் படகுகளுக்குள் சுருண்டுவிழுந்து உயிர்விட்டார்கள்.

மண்டைதீவு கரையோர வாடிகளில் தங்கியிருந்த மீனவர்களையும் கடற்படையினர் தாக்கினார்கள். துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியதுடன், வாளாலும் வெட்டப்பட்டனர்.

துப்பாக்கிப்பிரயோக சத்தங்களைக் கேட்டதும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவு மண்டைத்தீவுக்கு சென்றது. கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியது.

அதனையடுத்து கடற்படையினர் தமது தாக்குதலை நிறுத்திவிட்டுத் திரும்பிச் சென்றனர்.


பதிலடியாக முகாம் தாக்குதல்

கடலின் நடுவே படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவு சென்று காப்பாற்றியது. பலியானவர்கள் உடல்களும் கரைக்கு கொண்டுவரப்பட்டன.

32 மீனவர்கள் கடற்படையினரால் கொல்லப்பட்டனர்.

அதில் மூன்றுபேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் பகுதிநேர உறுப்பினர்கள். அவர்களும் கடற்தொழிலாளர்களாக இருந்தனர்.

கொல்லப்பட்ட 32 மீனவர்களும் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களின் உடல்களை குருநகருக்கு கொண்டுவந்து சேர்த்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவின் ஊர்காவத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் மனோகரன்.

பலியானவர்களை கடலில் மீட்டெடுத்ததிலும், கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதிலும் மனோகரனும், அவரது பொறுப்பின்கீழ் இருந்த உறுப்பினர்களும் உயிரைப் பணயம்வைத்து செயற்பட்டார்கள்.

அதனால்தான் பலியானவர்களது உடல்களை மீட்க முடிந்ததுடன், ஏனைய மீனவர்களையும் பாதுகாக்க முடிந்தது.
(மனோகரன் தற்போது ஈ.பி.டி.பி.யில் இருக்கிறார்.)

மரணச்சடங்கு

பலியானவர்களது உடல்களை குருநகருக்கு கொண்டுவந்து மக்களின் அஞ்சலிக்காக வைத்தனர். இந்த இடத்தில் குருநகரில் காணப்பட்ட இயக்க ஆதரவு நிலைபற்றியும் கூறவேண்டும்.

குருநகரில் ஒரு பகுதி புலிகளின் கோட்டையாக இருந்தது. மறுபகுதி ஈ.பி.ஆர்.எல்.எஃப். கோட்டையாக இருந்தது.

கடற்படையினரால் கொல்லப்படடவர்கள் புலிகள் அமைப்பின் கோட்டையாக இருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பலியானவர்கள் உடல்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். கொண்டுவந்து சேர்த்தவுடன் அப்பகுதியில் உள்ளவர்களது மனம் மாறிவிட்டனர்.

மரணச் சடங்குகளை நடத்தும் பொறுப்பை டேவிற்சனும், ரமேஷ், மோகன் ஆகியோர் முன்னின்று கவனித்தனர்.

அரசின் மீது மக்கள் எதிர்ப்பை உருவாக்கும் வகையில் மரணச்சடங்கை பெரியளவில் நடத்த திட்டமிடப்பட்டது.

துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டன. பதாகைகள் தொங்கவிடப்பட்டன. யாழ் நகரமே சோகமயமாக மாறியது. பெருந்திரளான மக்கள் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் இருந்து குருநகருக்கு வந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் பகுதிநேர உறுப்பினர்களாக இருந்த கடற் தொழிலாளர்களது உடல்களுக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். கொடி போர்த்தப்பட்டிருந்தது.

புலிகள் அமைப்பில் இருந்து திலீபனும், கிட்டுவும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பலியானவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களும் இருப்பதால் மரணச் சடங்கை ஈ.பி.ஆர்.எல்.எஃப். முன்னின்று நடத்தும் என்று திலீபனுக்கு சொன்னார் டேவிற்சன்.

“அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் புலிகள் அமைப்பினர்.

இறுதி ஊர்வலம் பொருந்திரளான மக்களுடன் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். பாதுகாப்பு வழங்கியது.

குருநகர் சவச்சாலையில் நடைபெற்ற இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் டேவிற்சன் உரையாற்றினார். ஒரு மணிநேரமாக உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்தினார் டேவிற்சன்.

பலியான தமது உறுப்பினர்களுக்காக மரியாதை வேட்டுக்களைத் தீர்த்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

தொலைக்காட்சி சேவைகள்

14.6.86 புதன்கிழமையன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையகள் பல நடத்தப்பட்டன.

தமிழ் சினிமா படங்களை காண்பிப்பதுதான் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வேலை.

தமது தொலைக்காட்சி ஒளிபரப்பு எந்தப் பகுதி வரை வேலை செய்கிறதோ, அந்தப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பணம் வசூலித்துக் கொள்வார்கள். அதுதான் வருமானம்.

அப்போது பலாலி இராணுவமுகாமில் இருந்து இராணுவத்தினரும் தொலைக்காட்சி சேவை ஒன்று நடத்தினார்கள்.
தமிழ் மக்களின் தொலைக்காட்சி என்று அதற்கு பெயர் சூட்டியிருந்தனர்.

தமிழ் திரைப்படங்களில் தாராளமான காட்சிகள் கொண்ட படங்களாகப் பார்த்து ஒளிபரப்பினார்கள். இடைக்கிடையே இயக்கங்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.

அவர்களது தமிழ் உச்சரிப்பும், வசன பிரயோகங்களும் சிரிப்பூட்டும் வகையில் அமைந்தனவே தவிர, யாரையும் கவரத்தக்கதாக இருக்கவில்லை.

pulikall  மண்டதீவு கடலில்  கடற்படையினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 69) pulikall2
துப்பாக்கிச் சூடு

குருநகர் மரணச் சடங்கை தனியார் தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்புவதற்காக மரணச்சடங்கு முடிந்த தினத்தன்றே எடிட் செய்து கொண்டு சென்றனர் டேவிற்சனும், ரமேசும்.

அரியாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று துப்பாக்கி வேட்டுக்கள் அவர்களை நோக்கித் தீர்க்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளை டேவிற்சன் செலுத்திக் கொண்டிருந்தார். ரமேஷ்; பின்புறம் அமர்ந்திருந்தார்.

சூடுபட்டு இருவரும் காயமடைந்தனர். துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் புலிகள்.

ரெலோ இயக்கத்தினர் என்று நினைத்து தவறுதலாக துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றதாக கூறினார்கள் புலிகள் அமைப்பினர்.

அந்த விளக்கத்தை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

துப்பாக்கிப்பிரயாகம் செய்யப்பட்ட இருவரும் புலிகள் இயக்கத்தினருக்கும் பரிச்சயமானவர்கள். எனவே அடையாளம்

தெரியாமல் தவறுதலாக நடந்ததாகச் சொல்வதை ஏற்கமுடியாது என்பது ஈ.பி.ஆர்.எல்.எஃப். தரப்பு நியாயம்.

கண்டனம்
புலிகளது நடவடிக்கையைக் கண்டித்து பத்திரிகை அறிக்கை, துண்டுப்பிரசுரம் என்பவற்றை வெளியிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதுதான்:

“ஒரு புறத்தில் எதிரியிடம் இருந்து மக்களைப்பாதுகாக்க பதுங்கு குழிகளை வெட்டும்படி அறைகூவிக்கொண்டு, மறுபுறத்தில் போராளிகளுக்குப் புதை குழிகள் தோண்டுவது எதைக் காட்டுகிறது?

“தற்செயலாக,”… “தவறுதலாக”… “தெரியாமல்” இப்படியான காரணங்கள் எவையும் ஏற்கக்கூடியவை அல்ல.

ஒரு போராளி தன் துப்பாக்கியை இயக்குவதற்கு முன்னால் அதற்குரிய ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும்.

சைகைகாட்டுதல், முன்னறிவித்தல் கொடுத்தல், எச்சரிக்கை செய்தல், சந்தேகத்தை நிச்சயப்படுத்திக்கொள்ளல் போன்ற ஒழுங்குகள் ஒவ்வொரு போராளிக்குமான கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

அதிகாரப்போட்டி, ஆணவம், தான்தோன்றித்தனம் போன்ற தீய நடத்தைகளுக்குப் பலியாகி போராளிகளின் ஐக்கியத்தை சீர்குழைப்பது ஈழப்போராட்டத்திற்கு தீங்கானது.

ஈழமக்களே! எமது தோழர்கள் டேவிற்சன், ரமேஷ்; ஆகியோர்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஈழமண்ணில் சமாதானத்தைப் பேணுவதற்கும், போராளிகளிடையே ஐக்கியத்தைக் கட்டி வளர்ப்பதற்கும் எதிரான ஒரு அராஜக நடவடிக்கையாகும்.

கொடிய எதிரிக்கெதிரான எமது புனித யுத்தத்தில் எமது உன்னதமான தோழர்கள் பலரை நாம் இழந்தோம். இந்த வேதனை எம் நெஞ்சை நெருடிய போதும் நாம் நிலை குலையவில்லை.

இந்த மண்ணில் எவ்வளவு கொடூரம் நிகழ்ந்தபோதும், உங்கள் குடும்பத்தில் சாவு வீடுகளுக்கு மாதக்கணக்கில் இடைவெளிகள் ஆவது உண்டு.

ஆனால், எங்கள் குடும்பத்தில், எமது அன்றாட விடுதலை இயக்கத்தில்-சாவு அன்றாடம் நடக்கிறது. ஆனாலும் நாம் அழவில்லை. நமது கடமையை விடாப்பிடியாகத் தொடர்கிறோம். இந்த இழப்புக்கள் எதிரியால் ஏற்பட்டவை.

ஆனால், எமது இயக்கம் என்ற ரீதியில் பார்த்தால்கூட தோழர் றேகன்.. தோழர் அமீன்.. தோழர் பிரதாப்.. இவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

இன்று தோழர்கள் டேவிற்சன், ரமேஷ்; மீது துப்பாக்கிப் பிரயோகம்.. இதுவும் புலிகளால்..

மக்களே! இப்போது நீங்களே தீர்மானியுங்கள்.” என்று தொடர்ந்தது பிரசுரம்.

ஆர்ப்பாட்ட ஊர்வலம்

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் தயாரிக்கப்பட்ட மாகாணசபைகள் திட்டத்தை ஈழப்போராளி அமைப்புக்கள் நிராகரித்திருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, இ.தொ.கா. குமார் பொன்னம்பலம் ஆகியோர் மாகாணசபை திட்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

மாகாணசபை திட்டத்தை எதிர்த்து 14.7.86 அன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன.

கூட்டணி செயலதிபர் அமிர், இ.தொ.கா.தலைவர் தொண்டமான், குமார் பொன்னம்பலம் ஆகியோர் மீது கண்டனம் தெரிவிக்கும் சுலோக அட்டைகளும் காணப்பட்டன.

“ஈழமே ஒரே தீர்வு. அரைகுறைத் தீர்வுகள் வேண்டாம்.” என்பதுதான் பிரதான கோஷம்.

pinammm  மண்டதீவு கடலில்  கடற்படையினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 69) pinammmபூசா முகாம்

சந்தேகத்தின்பேரில் பெருந்தொகையாகக் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களை காலியில் உள்ள பூசா முகாமில் தடுத்து வைத்தது ஜே.ஆர். அரசு.

ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

ஜெர்மனில் ஹிட்லர் காலத்தில் இருந்த மனிதவதை முகாம்களோடு பூசா முகாம் ஒப்பிடப்பட்டது.

ஜே.ஆர் கண்டனங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பூசா முகாமில் இளைஞர்களை அடைப்பது தொடர்ந்தது.

இடநெருக்கடி, சுகாதாரக் கேடு போன்றவற்றால் பூசா முகாமில் தொற்று நோய்கள் பரவின.

பாதிரியார் படுகொலை

யாழ்ப்பாணத்தில் உள்ள தோலகட்டிப்பகுதியில் புகுந்த இராணுவத்தினர் அங்குள்ள கத்தோலிக்க மதகுரு ஒருவரை சுட்டனர்.

20.6.86 அன்று இச் சம்பவம் நடைபெற்றது.

வண.வின்சென்ட் லோஸ்ட் என்னும் மதகுருவே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

அவருக்கு வயது 65. இந்தியா பெங்க@ரைச் சேர்ந்தவர். வசாவிளானில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவத்தினரே மதகுருவை சுட்டனர்.

இதனையடுத்து தோலகட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். இராணுவத்தினர் திரும்பிச் சென்றனர்.

முகாம் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டம் கிரானில் இருந்த புலிகளது முகாம் ஒன்றை இராணுவத்தினர் தாக்கினார்கள். மாங்கேணி இராணுவ முகாமில் இருந்து சென்ற இராணுவத்தினரே தாக்குதலில் ஈடுபட்டனர்.

அத்தாக்குதலுக்கு காரணமான மாங்கேணி இராணுவமுகாமைத் தாக்கத் திட்டமிட்டனர் புலிகள்.

5.7.86 இரவு 11.55 மணி. புலிகளது கெரில்லா அணி தாக்குதலை ஆரம்பித்தது.
இராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைக்கு ஆர்.பி.ஜி தாக்குதலையே பிரதானமாக நம்பியிருந்தனர். ஆர்.பி.ஜி இயங்க மறுத்து பொறுத்த நேரத்தில் கைவிட்டது.

எனவே-தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பியது புலிகளது அணி.

மாங்கேணி தாக்குதலுக்கு முன்பாக பனியங்கேணி, காயல்கேணி ஆகிய பாலங்கள் புலிகளால் தகர்க்கப்பட்டன.

மாங்கேணி இராணுவ முகாமுக்கு உதவிகள் வருவதைத் தடுப்பதற்காகவே பாலங்கள் தகர்க்கப்பட்டன.

ஆனாலும் மாங்கேணி இராணுவ முகாம் தாக்குதல் புலிகளுக்கு வெற்றியாக அமையவில்லை.

20 பேர் பலி

அனுராதபுரத்திலிருந்து மன்னாருக்கு சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்ற திட்டமிட்டது ஜே.ஆர். அரசு.

அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க காணிக்குடியேற்ற மேலதிகாரிகள் மன்னாருக்குச் சென்றார்கள்.

மேலதிகாரிகள் ஐந்து பேரும் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கண்ணி வெடி வெடித்தது. ஐந்து பேரும் பலியானார்கள்.

கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியது புலிகள் இயக்கத்தினர்.

திருக்கோணமலையில் குமரேசன் கடவை என்னும் தமிழ் கிராமம் ‘கோமாங்கடவ’ என்று பெயர் மாற்றப்பட்டது.
அக்கிராமத்தில் குடியேறியிருந்த சிங்கள மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

(தொடர்ந்து வரும்)

-எழுதுவது அற்புதன்-

ilakkiyainfo.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70)

கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும்  பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70)
 

யாழ்ப்பாணம் கோட்டை முகாமில் இருந்து அல்லைப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இராணுவ அணி மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

கோட்டை முகாமுக்கு சமீபமாகவுள்ள மதகு ஒன்றின் அருகே போராளிகள் பதுங்கியிருந்தனர். முகாமுக்கு அருகில் மதகு என்பதால், அங்கு போராளிகள் வருவார்கள் என்று படையினர் எதிர்பார்க்கவில்லை.

டிரக் வண்டியில் சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரை நோக்கி சிலிண்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழ இராணுவம் (TEA ) இத்தாக்குதலை மேற்கொண்டது.

தமிழீழ இராணுவத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக அப்போதிருந்தவர் நந்தன். சிறிய இயக்கமாக இருந்தபோதும் தமிழீழ இராணுவமும் வரிவிதிப்புக்களில் ஈடுபட்டது.

புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இரண்டும் வரிவிதிக்காத துறைகளாகப் பார்த்து தமிழீழ இராணுவம் வரிவிதிக்கும்.

சுரண்டல் டிக்கெற்
அதிஷ்டலாப சீட்டுகளுக்கு தமிழீழ இராணுவம் வரிஅறவிட்டு வந்தது.

யாழ்ப்பாணத்தில் அப்போது சுரண்டி இலக்கம் பார்க்கும் அதிஷ்டலாபச் சீட்டுகளுக்கு பலத்த கிராக்கி. அந்த ரிக்கெட்டுக்களை சுரண்டல் ரிக்கெட்டுக்கள் என்றுதான் சொல்லுவார்கள்.

சுரண்டல் ரிக்கெட்டுக்களை அனுமதிக்கலாமா? மாக்சிய தத்துவப்படி பிழையாச்சே! என்று நினைத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

சுரண்டல் ரிக்கெட்டுக்கள் தமிழீழ இராணுவத்திடம் ஓடினார்கள். தமிழீழ இராணுவத்தினர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புடன் பேசுவது என்றால் மாக்சியம் தெரிந்த ஆளுடன்தான் செல்ல வேண்டும் என்று நந்தன் நினைத்தார். மாக்சியம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை அழைத்துப் போனார்.

தடையை நீக்கவே முடியாது என்று விட்டனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பில் பேசிய ரமேசும், டேவிற்சனும்.

அத்தோடு சுரண்டல் ரிக்கெற் விற்பனை வடக்கில்-கிழக்கில் நிறுத்தப்பட்டது.

கிட்டுவின் பிரபலம்

kidu  கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும்  பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) kidu

1986 இன் மத்திய பகுதியில் புலிகளது யாழ்மாவட்ட பொறுப்பாளரும், தளபதியுமான கிட்டுவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.

‘கிட்டு மாமா’ என்று அழைக்கப்பட்டார். வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும் கிட்டுவின் பேட்டிகளை வெளியிட்டனர்.

கிட்டுவிடம் காணப்பட்ட  தனித்தன்மை அவரை ஏனையோரிடம் இருந்து பிரித்துக்காட்டின.

புலிகளது பயிற்சி முகாமில் கிட்டு குறிதவறாமல் சுட்டுத்தள்ளும் காட்சிகளைக் கொண்ட வீடியோ பிரசார படங்களும் காண்பிக்கப்பட்டன.

புலிகள் என்றால் கிட்டு மாமாதான் என்று நினைக்குமளவுக்கு கிட்டுவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்தது.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் கிட்டு நிற்கிறார் என்றால் உடனே தெரிந்துவிடும்.

ஏனையோர் நீண்ட காற்சட்டை போட்டிருந்தால் கிட்டு அரைக் காற்சட்டையுடன்தான் காணப்படுவார்.

எல்லோரும் நீண்ட காற்சட்டையுடன் நின்று, கிட்டுவும் நீண்டகாற்சட்டையுடன் வந்துவிட்டால், மேலே சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் காட்சியளிப்பார்.

அதனால் ஏனைய இயக்கங்கள் கிட்டுவை,‘திரில் காட்டுபவர்’ என்று பட்டம் சூட்டியிருந்தார்கள். தமது வீடுகளுக்கு வந்து விருந்துண்ணுமாறு கிட்டுவை அவரது அபிமானிகள் அழைப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்த ‘சைனிஸ் ரெஸ்டோரண்ட்’ ஒன்றில் தான் கிட்டுவும், அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சாப்பிடுவார்கள்.

கிட்டுவுக்கு நம்பிக்கையான இடம் அது. வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பவர்களிடம் குறிப்பிட்ட ரெஸ்ட்ரோரண்ட்டின் பெயரைச் சொல்லி, அங்க “தனக்கும், தனது மெய்ப்பாதுகாவலர்களுக்கும் சேர்த்து பணம் கட்டிவிடுங்கள். நாங்கள் போய் சாப்பிட்டுக்கொள்கிறோம்.” என்று கூறிவிடுவார்.

தனது மெய்ப்பாதுகாவலர்களாக கூட இருந்தவர்களையே யாழ்ப்பாணத்திற்குள் பகுதிப் பொறுப்பாளர்களாக கிட்டு நியமித்தார்.

ஆயினும், கிட்டுவிடம் இருந்த விசேஷம் என்னவென்றால், தனக்கு வேண்டியவர்கள் என்பதால் பிழை செய்பவர்களை தண்டிக்காமல் விடுவது கிடையாது.

ஏனைய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் பலரிடம் காணப்படாத குணாம்சம் இது.

கிட்டத்தட்ட

கிட்டுவின் பெயர் பிரபலமாகிவந்த அதே நேரத்தில், கிட்டு-மாத்தையா பிரச்சனையும் வளர்ந்து வந்தது.

கிட்டுவோடு பிரபாகரனுக்கும் பிரச்சனை என்று கதைகள் பரவத் தொடங்கின.

பிரபா-கிட்டு பிரச்சனை என்று நகைச்சுவையாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. அது இதுதான்.

பிரபாகரனிடம்  ஒருவர் கேட்டாராம், “உங்கள் இயக்கத்திற்குள் பிரச்சனையாமே உண்மையா?” அதற்கு பிரபாகரன் சொன்னாராம் “கிட்டத்தட்ட பிரச்சனை தீர்ந்த மாதிரித்தான்.”

கிட்டத்தட்ட என்பதை  “கிட்டைத்தட்ட”   என்ற அர்த்தத்தில் பார்த்தால் அந்த நகைச்சுவையின் சாராம்சம் புலப்படும்.

அப்போது பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் கிட்டுவின் பெயர் பிரபலமாகியதால், பிரபாகரனின் பிடி தளர்ந்துவிட்டதைப் போன்ற கருத்து ஏற்பட்டது.

பிரபாவின் ஆதரவு  மாத்தையாவுக்கு  இருப்பதாகவே நம்பப்பட்டது. ஆனாலும் கிட்டுவைமீறி  பிரபாகரன் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் என்றுதான் ஏனைய இயக்கத்தவர்கள் சொல்லிக்கொண்டனர்.

Kittu anna-16  கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும்  பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) Kittu anna 16

ஐ.நாவில் இலங்கைப் பிரச்சனை

1986 இல் நடைபெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வொன்றையும் சொல்ல வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் இனப்பிரச்சனை விவகாரத்தை கிளப்பியது இந்திய அரசு

இந்தியத் தூதுக்குழுவின் தலைவரான டாக்டர் ஜீ.எஸ். திலான் ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதலாக இலங்கைப் பிரச்சனை தொடர்பாக குரல் எழுப்பினார்.

“சிறீலங்கா அரசின் உயர் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளைப் படித்தால், அவர்கள் இராணுவத்தீர்வு ஒன்றையே விரும்புவதாகத் தெரிகிறது.” என்றார் டாக்டர். ஜி.திலான். 5.3.86 அன்று திலானின் குரல் ஒலித்தது.

13.3.86 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைப் பிரச்சனை விவாதத்துக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது. 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

சைப்பிரஸ் நாட்டு பிரதிநிதி மைக்கேல் ஷெரிப்ஸ் பின்வருமாறு சொன்;னார்: “சிறீலங்காவில் உள்ள தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள், சிவில் உரிமைகள், மற்றும் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் திட்டவட்டமான அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.”

கனடா நாட்டுப் பிரதிநிதி சொன்ன கருத்து இது: “தமிழர்கள் அடர்த்தியாக வாழும் யாழ்ப்பாண கிராமங்களில் விமானம் மூலம் சிறீலங்கா அரசு குண்டுவீசி சாதாரண மக்களை பலியாக்குவது அதிர்ச்சி தருகிறது.

சிறீலங்காவில் நடைபெறும் சண்டையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதையிட்டு கனடிய அரசு மிக வேதனை அடைந்துள்ளது.”

இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது மூலமாக இந்தியா இலங்கை அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது.

இலங்கைப்பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டிய தார்மீக காரணத்தை உலகுக்கு உணர்த்தவும் இந்தியா விரும்பியது.

அவசியம் ஏற்பட்டால் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதையும் ஓரளவு ஊகிக்கக் கூடியதாகவிருந்தது.

திலானின் உரை

இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்களும், மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளிமக்களும் இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குள்ள நியாயமான காரணிகளாக இருந்தனர்.

ஐக்கிய நாடுகளட சபையில் டாக்டர் ஜி. திலான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது:

“இலங்கைப் அரசு அங்குள்ள ஆயுத மேந்திப் போராடும் அமைப்புக்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டுவதில்லை.

ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக வந்துள்ளனர். சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்போதைய நிலையைப் பார்க்கும் போது, அவர்கள் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது.

அகதிகளாகவரும் தமிழர் தொகை மேலும் மேலும் கூடி வருகிறதேதவிர குறைவதற்கு வழியே காணவில்லை.

தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை மனித உரிமைகள்கூட இலங்கை அரசினால் கடுமையாக மீறப்படுகின்றன.

இலங்கையின் வடக்கு-கிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கண்மூடித்தனமான வன்முறை இலங்கை அரசினால் ஏவிவிடப்படுதற்கு தெளிவான சாட்சியங்கள் இந்தியாவிடம் இருக்கின்றன.

மனித உரிமைமீது அக்கறை கொண்ட சகல நாடுகளுக்கும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கை ஒரு சவாலாகிவிட்டது.” என்றார் திலான்.

அன்று இந்தியாவின் குரலையும், இன்று இந்தியாவின் மௌனத்தையும் ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியாதல்லவா.

தரையிறங்கிய ஹெலி

யாழ்ப்பாணத்தில் கைதடிப் பாலத்தருகே உள்ள வெளியில் இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்கியது.

இயந்திரக் கோளாறு காரணமாகவே ஹெலி தரையிறங்கியது.

செய்தியறிந்து இயக்கங்கள் சென்றன. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் ஆகிய இரண்டு இயக்கங்களின் உறுப்பினர்களும் ஹெலியை தாக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள்.

“நாங்கள் அடிக்கப்போகிறோம். நீங்கள் விட்டுவிடுங்கள்” என்றார்கள் ஈரோஸ் இயக்கத்தினர்.

ஹெலியில் இருந்த இராணுவத்தினரிடம் எல்.எம்.ஜி. ஆயுதம் இருந்தது. அதனால் அவர்களை உடனே நெருங்க முடியவில்லை.

ஆர்.பி.ஜி. ரக ஆயுதத்தால்தான் தூர இருந்து தாக்கவேண்டும். தமது முகாமுக்கு செய்தியனுப்பிவிட்டு ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள் காத்திருந்தனர்.

அதற்கிடையில் ஹெலி தரையிறங்கிய செய்தியறிந்து விமானப்படை விமானம் ஒன்று வந்து வட்டமிடத் தொடங்கியது.

கைதடிப்பாலமும், அதனையொட்டிய பகுதியும் திறந்தவெளியாக இருக்கும். விமானத்தில் இருந்து ஆள் நடமாட்டத்தைக் கவனித்து தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக இருக்கும்.

அதனால், கைதடி வெளிப்பகுதியில் இருந்து ஹெலியை நோக்கி தாக்குதல் நடத்துவது கஷ்டமாகிவிடும்.

ஈரோஸ் இயக்க முகாமில் இருந்து ஆர்.பி.ஜி. வந்து சேர்வதற்கிடையில் ஹெலியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாற்றைச் சரிசெய்து விட்டார்கள். ஹெலி பறந்துவிட்டார்கள்.

“ஈரோஸ் விட்டிருந்தால் நாம் அடித்திருக்கலாம், கெடுத்துவிட்டார்களே.” என்று சொல்லிக் கொண்டனர்.

ஹெலிமீது தாக்குதல்

7.6.86 அன்று வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் தரையிறங்கிவிட்டு, மேலெழுந்த ஹெலிக் கொப்டர்மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

விமானி காயமடைந்தார் என்று புலிகள் விடுத்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அரசாங்க செய்தியில் சேத விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஹெலிமீது தாக்குதல் நடத்தப்பட்டதும் வல்வை முகாமிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்திய புலிகள் சென்றுவிட்டனர். இராணுவத்தினரின் ஷெல் 16 வயதுப் பெண் ஒருவரைத் தாக்கியது.

தலையில் அடிபட்டு, மூளை வெளியே வந்த நிலையில் அப்பெண் உயிரிழந்தார்.

கறுப்புச்சட்டையினர் மீது தாக்குதல்

வல்வெட்டித்துறை இராணுவமுகாமில் பிரிட்டிஷ்  சென்று விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தினர் இருந்தனர். கறுப்பு உடைகளையே அவர்கள் அணிந்திருப்பர்.

அதனால் அவர்கள் கறுப்புச் சட்டைப் படையினர் என்று அழைக்கப்பட்டனர்.

14.6.86 அன்று கறுப்புச்சட்டைப் படையினருக்கும், புலிகளது அணியினருக்கும் இடையே வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்கு அருகே மோதல் நடந்தது.

நான்கு கறுப்புச்சட்டை படையினர் உயிரிழந்தனர். புலிகள் தரப்பில் இழப்பில்லை.

14.6.86 அன்றும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமருகே மோதல் நடைபெற்றது.

புலிகள் சிலிண்டர் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய புலிகளின் தகவலின்படி ஐந்து இராணுவத்தினர் பலியானார்கள்.

தமிழீழத்தின் குரல்

1986 இல் வடக்கு-கிழக்கு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒரு வானொலி நிலைய ஒலிபரப்பு.

தமிழீழத்தின் குரல்’ என்பது அதன் பெயர். தமிழ் ஈழ கம்யுனிஸ்ட் கட்சி என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர் இந்த வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர்கள்.

ஒருநாள் இயக்கங்களை ஆஹா, ஓஹோ என்று புகழ்வார்கள். மறுநாள் கேவலமாகத் திட்டுவார்கள். அரசுதான் நடத்துகிறதா? அல்லது இந்தியா நடத்துகிறதா? போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டன.

பாலசுப்பிரமணியம் என்பவரது தலைமையில் ஈழம் கம்யுனிஸ்ட் கட்சி என்று ஒரு அமைப்பு இருந்தது.

ஒருவேளை,  அவர்கள்தான் வானொலி நிலையம் நடத்துகிறார்களோ? என்றெல்லாம் பல்வேறு ஊகங்கள் நிலவின.

உண்மையில் இலங்கை அரசுதான் அந்த ஒலிபரப்பை செய்தது. அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்தலத்முதலியின் சம்மதத்தோடு அந்த ஒலிபரப்பு நடத்தப்பட்டது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் சேவையில் இருந்த சிலரின் உதவியோடு நடத்தப்பட்டது.

இயக்கங்கள் தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதும், இயக்கங்கள் மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் குழப்பத்தை உருவாக்குவது என்பதுதான் அந்த ஒலிபரப்பின் நோக்கமாக இருந்தது.

எனினும், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

ஈழம் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை.

ஈழம் கம்யுனிஸ்ட் கட்சி என்னவாயிற்று?

அது ஒரு சுவாரசியமான கதை.

(தொடர்ந்து வரும்)
(அரசியல்  தொ்டர் எழுதுவது அற்புதன்)

தந்தை-தளபதி-தந்தை

periyar  கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும்  பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) periyar
திராவிட-முன்னேற்றக் கழகத் தலைவர் அமரர் பெரியார் ஈ.வே.ராவை தந்தை பெரியார் என்றுதான் அழைப்பார்கள். அதுபோல தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தையும் தந்தை செல்வா என்றே அழைப்பதுண்டு. தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த தந்தை செல்வா, ‘தளபதி’ அமிர்தலிங்கம் ஆகியோர் தந்தை பெரியாரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் சாம்-7 ஏவுகணைகள் கேட்ட இயக்கங்கள்(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-71)

images?q=tbn:ANd9GcSeBB_-Wr4kPqn2rJ2RfPl
 

ஈழம் கம்யுனிஸ்ட்:

ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் பாலசுப்பிரமணியம். அவர் முன்னர் ஜே.வி.பியில் முக்கிய பிரமுகராக இருந்தவர்.

ஜே.வி.பி ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதனால் தனி இயக்கம் தொடங்குவதாகக் கூறி ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர் பாலசுப்பிரமணியம்.

இயக்கங்களில் சேர விரும்பிய இளைஞர்கள் பலருக்கு யாருடன் தொடர்பு கொள்வது என்று தெரிந்திருக்கவில்லை.

எந்த இயக்கத்தில் இணைந்தாவது ஆயுதம் ஏந்திப்போராடவேண்டும் என்பதுதான் 1983 கலவரத்தின் பின்னர் தமிழ் இளைஞர்களின் எண்ணமாக இருந்தது.

அந்த மனநிலை பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் இயக்கம் நடத்தி ஆள் திரட்டவும் வசதியாகப்போனது.

இளைஞர்களையும், பெண்களையும் திரட்டிக்கொண்டு ஆயுதப்பயிற்சி கொடுக்க தமிழ்நாட்டுக்குச் சென்றார் பாலசுப்பிரமணியம்.

அங்கு அவரது நடத்தை சரியில்லை: இளைஞர்கள் பலர் விலகினார்கள்.

கேரள மாநிலத்திற்கு சென்ற பாலசுப்பிரமணியம் தன்னை நம்பிச்சென்ற பெண்களை தவறான முறையில் கையாளத் தொடங்கினார்.

ஏனைய இயக்கங்களுக்குப் பயந்து தலைமறைவானார். அத்தோடு ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் கதையும் முடிந்தது.

வரையறைக்குள் வழங்கப்பட்ட  இந்தியாவின் ஆயுதங்கள்

1986 இன் மத்திய பகுதியில் விமானத் தாக்குதல்கள் அதிகரித்தன. பொம்பர்கள் அடிக்கடி தாழப்பறந்து குண்டுகளை வீசின.

ஹெலிகொப்டரிலிருந்து துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்யப்பட்டன.

இயக்கங்கள் தரையிலிருந்து  எல்.எம்.ஜி துப்பாக்கி   மூலமாக ஹெலியை நோக்கி தாக்குதல் தொடுத்தன.

எல்.எம்.ஜியின் சுடுதூரத்துக்கப்பால் உயரே நின்று ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதால் இயக்கங்களின் தாக்குதல்களால் அவற்றுக்கு பாதிப்பிருக்கவில்லை.

விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தால்தான் வான்மூலமான தாக்குதலை முறியடிக்கலாம் என்று இந்தியாவிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கேட்கப்பட்டது.

இந்தியா அவற்றை வழங்குவதற்கு தயக்கம் காட்டியது.

ஈழப்போராளி இயக்கங்களுக்கு கனரக ஆயுதங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் என்பவற்றை வழங்குவதற்கு இந்திய அரசு விரும்பவில்லை.

இந்தியா நினைத்திருந்தால் தம்மால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட ஐந்து பிரதான இயக்கங்களுக்கும் குறைந்த பட்சம் விமான எதிர்ப்பு ஆயுதமான ‘சாம்-7’ஐ தலா ஒன்றுவீதம் வழங்கியிருக்கமுடியும்.

ஆனால், இறுதிவரை அதனை இந்தியா வழங்க முன்வரவில்லை.

ஈழப்போராளி இயக்கங்களின் ஆயுதபலம் ஒரு வரையறைக்குள் இருப்பதையே இந்திய அரசு விரும்பியிருந்தது என்று நினைக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்திய அரசிடம் ஐந்து இயக்கங்களும் ஆயுதப் பயிற்சி பெற்று திரும்பியதும் முதற்கட்டமாக குறிப்பிட்டளவு ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

பயிற்சி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையும் இருந்தன.

அதனால் ரெலோ இயக்கத்திற்கு ஏனைய நான்கு இயக்கங்களைவிடவும் கூடுதலான ஆயுதங்கள் கிடைத்தன. ஐந்து இயக்கங்களுக்குள் குறைந்தளவான ஆயுதங்கள் கிடைத்தது ஈரோஸ் இயக்கத்திற்கே.

முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆயுதங்களில் உப-இயந்திரத் துப்பாக்கிகள், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் போன்றவையே இருந்தன. எல்.எம்.ஜி. போன்ற ஆயுதங்கள் தலா ஒன்றுதான் வழங்கப்பட்டன.

இந்திய உலவுப்பிரிவான ‘றோ’ மூலமாகவே ஆயதங்கள் தமிழ்நாட்டில் வைத்து வழங்கப்பட்டன.

கடற்கரையோர பகுதிக்கு வேனுடன் வரச்சொல்லுவார்கள். அந்தப் பகுதி ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக இருக்கும். அங்கு வைத்து ஆயுதங்களை கையளிப்பார்கள் ‘றோ’ அதிகாரிகள்.


முன் ஜாக்கிரதை

இந்தியாவும் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை சொந்தமாக உற்பத்தி செய்தது. அவை தரத்தில் உயர்ந்தவையாகவும் இருந்தன.

எனினும், தனது சொந்த உற்பத்திகளான ஆயுதம் எதனையும் இயக்கங்களுக்கு வழங்காமல் ஜாக்கிரதையாக இருந்தது இந்தியா.

இந்திய எல்லைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மற்றும் வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஆயுதங்கள் என்பவற்றையே இயக்கங்களுக்கு வழங்கியது இந்தியா.

இயக்கங்களின் ஆயுதங்கள் இலங்கை அரசின் கையில் மாட்டினால் அவை இந்தியாவின் தயாரிப்புக்களாக இருக்கும் பட்சத்தில் இராஜதந்திர பிரச்சனைகள் தோன்றும்.

இந்தியா ஆயுதம் வழங்கியது ஆதாரபூர்வமாக வெளிப்படையாகிவிடும் என்பதால்தான் முன்ஜாக்கிரதையாக நடந்தது இந்தியா.

இந்தியா மட்டுமல்ல, பிறிதொரு நாட்டுக்குள் இயக்க போராட்ட அமைப்புக்களுக்கு இரகசியமாக ஆயுத உதவி செய்யும் எந்தவொரு நாடும் தனத சொந்த ஆயுதங்களை வழங்குவதில்லை.

இரண்டாம், மூன்றாம் கட்டமாக ஆயுதங்கள் வழங்கியபோது இயக்கங்களின் ஆட்பலம் தொடர்பாக தமக்கிருந்த தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கியது ‘றோ’.

ஒவ்வொரு இயக்கமும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டுவதற்கு போட்டி போட்டன.

தலைகளை எண்ணி ஆயுதம் வழங்கப்படும் என்பதால், தலைக் கணக்குக் காட்டுவதில் இயக்கத் தலைமைகளுக்குள் கடும் போட்டி.

குறிப்பாக, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட் இயக்கங்கள் மத்தியில்தான் உறுப்பினர்களின் எண்ணிக்கை காட்டுவதில் போட்டி இருந்தது.

புலிகள் அமைப்பும், ஈரோசும் அதிலிருந்து சற்று விலகியே நின்றன.

புலிகள் அமைப்பும், ஈரோஸ் இயக்கமும் உறுப்பினர் திரட்டலில் கதவுகளை அகலத்திறக்காமல் கவனமாகவே இருந்தன.

1986 இன் பிற்பகுதியில்தான் இந்தியா கலிபர் 30 ரக ஆயுதங்களை இயக்கங்களுக்கு வழங்கியது. கலிபர் 50 ரக ஆயுதம்தான் இயக்கங்கள் கேட்டிருந்தன. எனினும், கலிபர் 30 ரக துப்பாக்கிதான் வழங்கப்பட்டன.

கலிபர் 30 ரக துப்பாக்கியால் விமானங்களை தாக்க முடியும். விமானங்கள் தாழப் பறந்து வந்தால்தான் தாக்குதல் பயனளிக்கும்.

எப்படியாவது விமான எதிர்ப்பு ஆயுதமான ‘சாம்-7’ ஒன்றே ஒன்று கிடைத்தாலும் போதும் என்று இயக்கங்கள் ஒற்றைக்காலில் நின்று பார்த்தன.

இந்தியா மசியவேயில்லை.

images?q=tbn:ANd9GcSeBB_-Wr4kPqn2rJ2RfPl
சொந்த முயற்சி

இந்தியா சாம்-7 தரப்போவதில்லை என்று தெரிந்ததும், சொந்த முயற்சியில் வெளிநாடுகளில் விலைகொடுத்தாவது சாம்-7 வாங்க புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கமும் முற்பட்டன.

சாம்-7 வாங்குவதற்கு பணம் தேவை என்று யாழ்ப்பாணத்தில் புலிகள் நிதி திரட்டலில் ஈடுபட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.வும் நிதி திரட்டலில் ஈடுபடத் தொடங்கியது.

அதனால், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று தொழில் செய்த பிரபல வர்த்தகர்கள் பலர் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு பயந்தனர்.

அங்கு சென்றால் தம்மிடம் நிதி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் ஊர் செல்வதையே நிறுத்திக்கொண்டனர்.

கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தகர் ஒருவர் இரகசியமாக யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரும் ஒரு பங்குதாரராக இருந்தார்.

இரகசியமாக செல்வதாக அவர்தான் நினைத்துக்கொண்டிருந்தாரே தவிர, அவர் யாழ்ப்பாணம் வரப்போகும் செய்தி ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.

தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அவர் திரும்பியபோது, இடைநடுவே வைத்து அவரை தமது வேனில் அழைத்துச் சென்றுவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அவரை விடுதலை செய்வதற்கு கேட்கப்பட்ட தொகை 25 இலட்சம். அப்போது அது மிகப்பெரிய தொகைதான்.

பின்னர் 10 இலட்சம் கொடுத்துவிட்டு அவர் கொழும்பு திரும்பினார்.

அந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரிவாக இருந்தது.

நிதி திரட்டலில் ஈடுபட்டவர்கள் டக்ளஸ் தேவானந்தா அணியினர்தான்.

அப்போது தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார் டக்ளஸ் தேவானந்தா. வெளிநாடொன்றில் ஆயுதங்களை விலைக்கு வாங்குவதற்குரிய தொடர்பு அவருக்குக் கிடைத்திருந்தது.

குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய்க்காவது ஆயுதங்கள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டது.

அதற்குரிய பணத்தில் ஒரு பகுதியை திரட்டுவதில்தான் டக்ளஸ் தேவானந்தா அணியினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

வட்டுக்கோட்டைத் தொகுதியில் அப்போது பொறுப்பாக இருந்தவர் ஜெகன் (தற்போது ஈ.பி.டி.பியில் இருக்கிறார்) காரைநகரில் மட்டும் பலர் தாமாகவே முன்வந்து கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரூபா வரையான நகைகளை வழங்கினார்கள்.

யாழ்ப்பாணத்தில் பணம் கேட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் கொண்டு செல்லப்பட்ட வர்த்தகர்களில் சிலர் தமது ஆதரவாளர்கள் என்றும், அவர்களை விடுதலை செய்யுமாறும் புலிகள் அமைப்பினர் கோரினார்கள்.

புலிகள் இயக்க நிதிப் பொறுப்பாளர் மதன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று ரமேசுடன் பேசினார்.

“உங்கள் ஆதரவாளர்களை நாமும் பிடிக்கமாட்டோம். எமது ஆதரவாளர்களை நீங்களும் பிடிக்க வேண்டாம்” என்றார் மதன்.

முதலில் மறுத்தாலும், பின்னர் புலிகளுக்கு ஆதரவான வர்த்தகர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

வருமானமுள்ள ஆலயங்கள்

யாழ்ப்பாணத்தில் வருமானமுள்ள ஆலயங்களில் முதன்மையானவை நல்லூர் கந்தசுவாமி போவில், துர்க்கையம்மன் கோவில் போன்றவையாகும்.

துர்க்கையம்மன் கோவிலை திறம்பட நிர்வகித்துவந்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி.

அவரிடம் சென்று, ஆலய வருமானத்தில் ஒரு பகுதியை தந்துதவுமாறு கேட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

மறுப்பேதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்தார் தங்கம்மா அப்பாக்குட்டி.

நல்லூர் கோவில் முதலாளியிடமும் கேட்டார்கள். “முன்பு போல வருமானம் இல்லை. பெரியளவில் எதிர்பார்க்காதீர்கள்” என்றார் அவர்.

“உங்களால் தரக்கூடியது எவ்வளவு?”என்று கேட்டார்கள். “என் மனைவியின் கையிலுள்ள தங்க வளையல்களைத் தருகிறேன்.” என்றார்.

“வேண்டாம், சரியாகக் கஷ்டப்படுகிறீர்கள் போல இருக்கிறது. நாங்கள் இனி உங்களிடம் பணம் கேட்கமாட்டோம்.” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அவர்கள் சொன்ன தொனியில் மறைபொருள் இருக்கலாம் என்று பயந்து போனார் கோவில் முதலாளி.

அதனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு நெருக்கமானவர்கள் மூலமாக தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையே டக்ளஸ் தேவானந்தா அணியினர் பரவலான நிதி திரட்டல்களில் ஈடுபட்டமை பத்மநாபா அணியினருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.

தற்காப்புக் குழுக்கள்

யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்தியதோடு, கிராமரீதியாக தற்காப்புக் குழுக்களை உருவாக்கும் வேலைகளிலும் டக்ளஸ் தேவானந்தா அணியினர் ஈடுபடத் தொடங்கினர்.

பொதுக்கூட்டங்களில் டேவிற்சன் உரையாற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களின் பின்னர், இயக்கங்கள் எதுவும் தொகுதி ரீதியாக பொதுக்கூட்டங்கள் நடத்தியதில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினர்தான் தொகுதி ரீதியாக பொதுக்கூட்டங்களை நடத்த் ஆரம்பித்த்னர்.

பொதுக் கூட்டங்களின் டேவிற்சன் உரையாற்றுவார். கருத்தரங்குகளில் ரமேஷ்  உரையாற்றினார். இருவருமே டக்ளஸ் தேவானந்தா அணியில் இருந்தவர்கள்.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து பத்மநாபா அணியினர் செய்த முடிவு இதுதான்.

தனியான இயக்கமாக செயற்பட திட்டமிட்டுவிட்டனர் டக்ளஸ் தேவானந்தா அணியினர்’ என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வந்தனர்.

அதனால்- ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயற்பாடுகளில் ஒருமித்ததன்மை இல்லாமல் போகத் தொடங்கியது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாயில்வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை கடத்தினார்கள் இரண்டு இளைஞர்கள்.

அந்த வழியால் வந்த புலிகள் இயக்கத்தினர் அவர்கள் இருவரையும் பிடித்துவிட்டார்கள்.

முதலில் தாம் யார் என்பதை இருவரும் சொல்லவில்லை. அதனால் அடி விழுந்தது. பின்னர்தான் தாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் என்று அவர்கள் சொன்னார்கள்.

புலிகள் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன்தான் அவர்கள் இருவரையும் விசாரித்தார்.

இருவரும் திலீபனிடம் சொன்னார்கள்- “எங்களை டக்ளஸ் தேவானந்தா ஆட்களிடம் கொடுக்க வேண்டாம். நாங்கள் பத்மநாபாவின் ஆட்கள்.”

திலீபன் உடனே தமது உறுப்பினர்கள் இருவரை ரமேசிடம் அனுப்பினார். “உங்கள் ஆட்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள். உங்களிடம் அனுப்ப வேண்டாம் என்கிறார்கள். நேரடியாக வந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லியனுப்பி இருந்தார்.

இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் பிரச்சனைகள் இருப்பதைவைத்து, கட்டுப்பாட்டை மீறி நடர்பவர்களும் பயன் அடைந்து கொள்ள முற்படுவது வழக்கம்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனையின்போது உறுப்பினர்கள் சிலர் அவ்வாறுதான் நடந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல்

பேசாலைக் கடலில் ஐந்து படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

தள்ளாடி முகாமில் இருந்து மூன்று படகுகளில் வந்த இராணுவத்தினரே தாக்குதலில் ஈடுபட்டனர்.

1.7.86 அன்று நடைபெற்ற அந்த சம்பவத்தில் 5 முஸ்லிம் மீனவர்களும், ஒரு தமிழ் மீனவரும் கொல்லப்பட்டனர்.



அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்-


 

ShareSHARE 1 TWEET
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1986 இல் புளொட் இயகத்தை மீது தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-72)

 

இளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்துகொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின.

சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் பிரசாரங்களும் இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருதயநேசன் 86 இல் பலியானார். இராணுவத்தினரோடு ஏற்பட்ட நேரடி மோதலில்தான் அவர் பலியானார்.

இருதயநேசனுக்கு இயக்கத்தில் சேரும்போது வயது 12. மன்னாரில் உள்ள அரிப்பு என்ற இடத்தில்தான் இருதயநேசனின் சொந்த ஊர்.

பதினைந்து வயதாக முன்னரே இருதயநேசன் பலியாகிவிட்டார்.

அவரது இறுதிச் சடங்கு மன்னாரில் நடைபெற்றது. இருதயநேசனுக்கு புலிகள் விடுத்த அஞ்சலி அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“இருதயநேசன் இயக்கத் தேழர்களுள் இளமையானவனாக விளங்கினான். தாய்நாட்டின் விடுதலையை தன் ஆத்ம தாகமாக நெஞ்சில் ஏற்றி ஆர்வத்துடன் செயல்பட்டான்.

இளவயது காரணமாக சிறீலங்கா இராணுவத்துடன் சண்டையிடச் செல்ல முடியவில்லையே என்று கவலை கொள்வான். அவன் விரும்பிய சந்தர்ப்பம் கிடைத்தது.

புதியதொரு தலைமுறைக்கு அறைகூவலாக அவனது மரணம் அமைந்தது.

மிக இளவயதில் பலியான முதல் போராளி இருதயநேசன்தான்.

manavann  1986 இல் புளொட்  இயகத்தை மீது தடை செய்த புலிகள்!! : (அல்பிரட்  துரையப்பா முதல் காமினிவரை-72) manavann
plottt  1986 இல் புளொட்  இயகத்தை மீது தடை செய்த புலிகள்!! : (அல்பிரட்  துரையப்பா முதல் காமினிவரை-72) plottt

புளொட் அமைப்பை நாம் தடைசெய்யப்போகிறோம் என்று கிட்டு தகவல் அனுப்பினார்.

ஆயுதங்களையும், இயக்க உடமைகளையும் 24 மணி நேரத்தில் தம்மிடம் ஒப்படைக்குமாறும், பொறுப்பாளர்களை சரணடையுமாறும் கிட்டு மெண்டிசுக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் புலிகளிடம் ஒப்படைக்க மெண்டிஸ் விரும்பவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்போடு தொடர்பு கொண்டார். ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் கொடுத்தார்.

விசாரணை

அந்த விடயம் எப்படியோ புலிகளுக்குத் தெரிந்துவிட்டது. மெண்டிசைத் தேடத் தொடங்கினார்கள்.

தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்தார் மெண்டிஸ்.

புலிகள் இயக்கத்தில் கிட்டுவின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் சிவபரன். அவரும் மெண்டிசும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.

மெண்டிசின் சகோதரி வீடு சிவபரனுக்குத் தெரியும். புலிகள் இயக்க உறுப்பினர்களோடு அங்கு சென்றார் சிவபரன்.

அவர் வருவதைக் கண்டதும் தப்பிஓட முற்பட்டார் மெண்டிஸ். அப்போது மெண்டிசின் சகோதரி சொன்னார், “ஏன் ஓடப்பார்க்கிறாய். உன் சிநேகிதன்தானே வந்திருக்கிறான்.”

மெண்டிசை அழைத்து செல்லும்போது சிவபரன் சொன்னார். “அக்கா ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். மெண்டிசை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம்.”

யாழ்ப்பாணம் வைமன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மெண்டிஸ் விசாரிக்கப்பட்டார்.

“ஆயுதங்கள் எங்கே?   ஏனைய முக்கியஸ்தர்கள் எங்கே?” என்று கேட்டனர். மெண்டிஸ் வாய் திறக்கவில்லை.

அடி விழுந்தது. அவரது கை விரல்களில் நகங்கள் பிடுங்கப்பட்டன.

“ஆயுதங்களை ஒப்படைத்தால் விடுதலை செய்து விடுவோம். இல்லாவிட்டால் மண்டையில்தான் போடுவோம்” என்று கிட்டு சொல்லிவிட்டார்.

ஏற்கனவே ரெலோ இயக்கத்தை புலிகள் தடைசெய்தபோதும், தமிழ்நாட்டில் அந்த இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் இருந்தமையாலும், புலிகளிடம் மாட்டாமல் ஏனைய இயக்கங்களின் உதவியுடன் பலர் தப்பிச் சென்றதாலும் ரெலோ இயக்கம் அழியாமல் இருந்தது.

எனவே புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் தப்பவிடக்கூடாது என்று புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

மெண்டிஸ் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தால்கூட அவரைப் புலிகள் விடுதலை செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

நீண்டநாட்கள் புலிகளின் சிறையில் மெண்டிஸ் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

சிவபரனை தேடிப்போய் மெண்டிசின் சகோதரி விசாரித்தார். “என் தம்பியை எப்போது வீட்டுக்கு அனுப்பிவைப்பீர்கள்?”

சிவபரன் சொன்னார் “விரைவில் அனுப்பிவைத்து விடுவோம்.” சகோதரிக்கு ஓரளவு நிம்மதி.

மெண்டிஸை இனிமேலும் வைத்திருப்பதால் பிரயோசனம் இல்லை என்ற நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்தனர் புலிகள்.

“விரைவில் அனுப்பிவைக்கிறோம்” என்று சிவபரன் சொன்னதின் அர்த்தம் பின்னர்தான் மெண்டிசின் சகோதரிக்குப் புரிந்தது.


இளவயதில் முதலாவது கள மரணம்

காணவில்லை

யாழ் பல்கலைக் கழகத்தில் ராக்கிங் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று புலிகள் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தமது முடிவை அறிவித்திருந்தனர்.

அப்படியிருந்தும் சில மாணவர்கள் ராக்கிங் செய்வதில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.

04.11.86 அன்று இரவு விஜிதரன் என்னும் மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். ஆயுதம் தாங்கிய சிலர் வந்து அவரை அழைத்துச் சென்றனர்.

அழைத்துச் சென்றவர்கள் புலிகள், புலிகளது முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜிதரனை வரவேற்றவர் கிட்டு.

வரவேற்பு என்றால் அப்படியொரு வரவேற்பு. விஜிதரன் புரட்டி எடுக்கப்பட்டார்.

மறுநாள் காலையில் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு. விஜிதரனை கடத்தியது யார்,

புலிகள் அமைப்பிடமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் அமைப்புக்களிடமும் சென்று பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் விசாரித்தனர்.

புலிகள் அமைப்பினரும் தமக்குத் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.

புலிகள்தான் விஜிதரனைக் கடத்திச் சென்றார்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெரிந்திருந்தது.

நேரடியாக புலிகளை குற்றம் சாட்டினால் விஜிதரனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் பொதுப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

விஜிதரனை விடுதலை செய். விஜிதரன் எங்கே? இயக்கங்களே பதில் சொல்லுங்கள்? என்று யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகள் போடப்பட்டன.

மாணவர் போராட்டம்

தமது கோரிக்கைகள் பலனற்றுப் போனதால் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

யாழ் பல்கலைக் கழக மாணவராண விமலேஸ்வரன்தான் மாணவர் போராட்டத்தில் முன்னணியில் நின்றார்.

விமலேஸ்வரன் புளொட் இயக்கத்தில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர்.

விமலேஸ்வரன் புளொட் இயக்கத் தூண்டுதல் காரணமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தமக்கெதிராக செயற்படுகிறார் என்று புலிகள் குற்றம் சாட்டினார்கள்.

உண்மையில் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான்.

உண்ணாவிரதப் போராட்டத்தோடு நிற்காமல், பாதயாத்திரையையும் மேற்கொண்டனர் பல்கலைக்கழக மாணவர்கள்.

பாதயாத்திரை வந்த மாணவர்கள்மீது பொதுமக்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது போல ஒரு சம்பவத்தை உருவாக்கினார்கள் புலிகள்.

பொதுமக்கள் என்ற போர்வையில் பாதயாத்திரையை குழப்ப முற்பட்டவர்கள் புலிகள் அமைப்பினரே என்பதை இனம் காண்பது கஷ்டமாக இருக்கவில்லை.

விஜிதரனை புலிகள்தான் கடத்தினார்கள் என்பதும் பொதுமக்கள் மத்தியிலும் தெரிய வரத் தொடங்கியது.

விஜிதரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் அருணகிரிநாதனும், தாயாரும் தமது மகனை கடத்திய செய்தியறிந்து யாழ்ப்பாணம் வந்தனர்.

அவர்களை புலிகள் இயக்க முகாமுக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள்.

தாம் விஜிதரனை கடத்தவில்லை. ஆனால், இப்படியெல்லாம் போராட்டம் நடத்தினால் விஜிதரனை கடத்தியவர்கள் விடுதலை செய்யமாட்டார்கள்.

அவரை விடுவித்தால் தமது இயக்கப் பெயர் கெட்டுவிடும் என்று யோசிப்பார்கள். போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரன் ஒரு வேளை விடுதலையாகக்கூடும் என்று தாம் நினைப்பதாக புலிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

‘போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரனை விடுதலை செய்வோம்’ என்பதை புலிகள் மறைமுகமாகத் தெரிவிப்பதாக மாணவர்களில் ஒரு பகுதியினர் நினைத்தனர்.

அச்சுறுத்தல்கள்

அதே சமயம் விஜிதரனை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டன.

கவிஞர் சேரன், விமலேஸ்வரன் போன்ற பலர் பின்னர் கவனிக்கப்படுவார்கள் என்று அவர்கள் காதுகளுக்கு எட்டக்கூடிய வகையில் சிலரிடம் சொல்லியிருந்தனர். புலிகள்.

விஜிதரனின் பெற்றோருக்கும், வேறு சிலருக்கும் விஜிதரன் வேறொரு நாட்டில் வைத்து விடுதலை செய்யப்படுவார் என்று மறைமுகமாக உணர்த்தினார் கிட்டு.

இத்தனையும் நடந்து கொண்டிருந்போது விஜிதரன் என்ன செய்து கொண்டிருந்தார்.

கடத்திச் செல்லப்பட்ட அன்றே, அன்று இரவே விஜிதரன் கொல்லப்பட்டுவிட்டார்.

அதனை அறியாமல விஜிதரனின் பெற்றோர் ஊர் திரும்பினார்கள்.

kiddu  1986 இல் புளொட்  இயகத்தை மீது தடை செய்த புலிகள்!! : (அல்பிரட்  துரையப்பா முதல் காமினிவரை-72) kidduபுலிகளுக்கு சார்பு

தற்போது புலிகளை கடுமையாக சாடி வருபவர் இந்து ராம் என்றழைக்கப்படும் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்.

முன்னர் அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அனுதாபியாக இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பிரச்சனை ஏற்பட்டபின்னர் அவர் புலிகளுக்கு சார்பானவராக மாறினார்.

புரொண்ட் லைன் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த ‘ராம்’ பிரபாகரனுக்கு அடுத்தபடியாக கிட்டுமீது பிரியம் கொண்டிருந்தார்.

புரொண்ட் லைன் இதழில் கிட்டுவின் பேட்டியை சிறப்பாக வெளியிட்டார்.

கிட்டு தொடர்பாக ராம் கொடுத்த விவரணம் இது:

“தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட தளபதி சாமான்ய உயரத்திலும் சிறிது குள்ளமானவர்.

கண்ணாடி அணிந்துள்ள அவரது தலையில் முடி கொட்டியதால் அகன்ற நெற்றியுடையவர்.

அவரது முகம் எவரையும் கவரக் கூடியது. 29 வயதுடைய அவரே சிறீலங்கா அரசினால் இன்றுவரை தேடப்படும் முக்கியமான தீவிரவாத தலைவர்.

சிறீலங்கா முழுவதும் யாரைப் பார்த்தாலும் கிட்டுவைப் பற்றியே பேசப்படுகிறது.”

அத்தோடு கிட்டுவின் பேட்டியையும் வெளியிட்டிருந்தது ‘புரொண்ட் லைன்’ அதில் ஒரு பகுதி இது.

கே:- உங்களுக்கு ‘கிட்டு’ என்ற பெயர் எப்படிக் கிடைத்தது?

பதில்- நான் இயக்கத்தில் சேர்ந்தபோது எனது இயக்கம் வைத்து வெங்கிட்டு என்ற பெயர் சுருக்கமாகி கிட்டுவாக மாறிவிட்டது.

கே:- எப்போது இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?

பதில்:- 1978 இல்! நான் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன். 1950 தொடக்கம் வல்வெட்டித்துறை மக்கள் அரசின் அடக்கு முறைக்கு உள்ளாகி வருகின்றனர்.

கள்ளக் கடத்தலையும், கள்ளக் குடியேற்றத்தையும் தடுப்பதாகக் கூறிக்கொண்டு எமது மக்கள துன்புறுத்தப்பட்டனர். இந்த ஒடுக்குமுறைக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணத்துடன் தான் வளர்ந்தேன்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் அனைவருமே அரச பயங்கரவாதத்தினால் இன்னல்படத் தொடங்கினர். ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வோடு வளர்ந்த நான் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன்.

வல்வெட்டித்துறை

கே:- சில பிரிவினர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறதே?

பதில்:- ஆம். சிலர் அவ்வாறு கூறுகிறார்ள். அதற்கு மேலாகவும் சென்று எமது இயக்கத்தில் குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்துவதாகக்கூடக் கூறுகிறார்கள். அது தவறான அபிப்பிராயம். ஆனால் என்ன நடந்தது என்பதை நீங்களும் உணரவேண்டும்.

திரு. பிரபாகரன் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்தவர்கள் யார்? அவரது நண்பர்கள். அவருடன் படித்த பாடசாலை மாணவர்கள். அவரது உறவினர்கள். அயலவர்கள். ஆகவே இயல்பாகவே வல்வெட்டித்துறையிலேயே இயக்கம் ஆரம்பமானது.

நாங்கள் படிப்படியாக வளர்ந்தோம். காலம் செல்லச் செல்ல தமிழீழத்தில் இருந்து பலரும் எம்மோடு இணைந்தனர்.

எமது இயக்கத்தில் மூத்தோருக்கே (சீனியர்) முதலிடம் என்ற அடிப்படையில் தளபதிகள் நியமனம் செய்கிறோம்.

ஆரம்பத்தில் இணைந்த முதல் முகாமைச் சேர்ந்தவர்களையே தலைவர்களாக நியமிப்பது என்ற கொள்கையை பின்பற்றி வருவதால், முதல் அணியில் உள்ள வல்வெட்டித்துறை வாலிபர்கள் பொறுப்பில் இருக்கின்றனர்.

அதே சமயம் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் தளபதிகளாக உள்ளனர்.

விரைவில் சீனியோரிட்டி, தகுதி போன்றவற்றின் அடிப்படையில் ஏனையோரும் பொறுப்;புக்கு வருவர்.

 

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

                                                                                                                                                                                                                                                                                       akkiyainfo.com       

Link to comment
Share on other sites

கிட்டுவின் செயல்களை பார்க்க கடைசியில் அந்தியேட்டிக்கும் கிடைக்காமல் போனதுதான் மிச்சம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாகிய இயக்கம், சூளைமேட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 73

இரண்டாகிய இயக்கம், சூளைமேட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 73


1986 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் உள் பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன.

ரெலோ, புளொட் இயக்கங்கள் மீது புலிகள் தடைவிதித்திருந்தனர்.

புலிகள் அமைப்பினரோடு முரண்பட்ட கருத்துக்கொண்டவர்கள் மத்தியில் தமது குரல்வளைகளும் நசுக்கப்படலாம், மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாத சூழல் தோன்றலாம் என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டது.

விஜிதரன் கடத்தப்பட்டது, பல்கலைக்கழக மாணவர்களது பாத யாத்திரைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, விஜிதரன் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் மிரட்டப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் அந்த அச்சத்தை நியாயப்படுத்தின.

அதனால், புலிகள் அமைப்பினருக்கு சமமான இன்னொரு இயக்கம் இருந்தாக வேண்டும். அப்படியானால்தான், ஒரு இயக்கம் வைப்பது சட்டம் என்ற நிலை ஏற்படாது என்பது போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த புத்திஜீவ்களது கருத்தாக இருந்தது.

ஜனநாயகத்தோடு இணைந்திருக்கும் போராட்டமே எமக்குத் தேவை. தனி ஒரு இயக்கம் இருந்தால் ஜனநாயக மறுப்புச் சூழல் தோன்றலாம் என்று அவர்கள் கருதினார்கள்.

அவ்வாறு கருதியவர்கள் புலிகளுக்கு சமமான அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பு உள் பிரச்சனைகளுக்குள் சிக்கியிருந்தது.

இயக்கத்திற்குள் இரகசிய உட்கொலைகள், உள் பிரச்சனைகளை ஆயுதத்தால் தீர்க்க முயலாத தன்மை போன்றவை இல்லாத ஒரே ஒரு அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். தான் இருந்தது.

pulikallll இரண்டாகிய இயக்கம், சூளைமேட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 73 pulikallllஇரண்டாகிய இயக்கம்
ஆனால், 1986 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள்ளும் உள் பிரச்சனைகள் ஆயுத முனையில் தீர்க்கும் நிலை தோன்றியது.

கடத்தல்

பத்மநாபாவின் உத்தரவுப்படி ரமேஷ் கடத்தப்பட்டார். ரமேஷ் வெளியே இருக்கும் வரை பத்மநாபா அணியினரின் முடிவுகளை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தன.

டக்ளஸ் தேவானந்தா அப்போது தமிழ்நாட்டில் இருந்தமையால், யாழ்ப்பாணத்தில் அவரது அணியைச் சேர்ந்த ரமேஷ் அகற்றிவிட்டால் போதும் இயக்க பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்பதுதான் பத்மநாபாவின் திட்டமாக இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் எவருமே தமது இயக்கத்திற்குள் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நினைத்திருக்கவில்லை.

அவ்வாறான திட்டம் பத்மநாபாவுக்கு இருப்பதாக தெரிந்திருந்தாலோ, அப்படியும் நடக்கும் என்று ஊகித்திருந்தாலோ டக்ளஸ் தேவானந்தா அணியினர் முந்திக் கொண்டிருப்பார்கள்.

ரமேஷ் கடத்தப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. சிறுப்பிட்டியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணம் அத்தியடியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகம் வரை சென்றது.

அதே நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் தமது ஆயுதங்களை யாழ்-பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கப் போவதாக அறிவித்தனர்.

ரமேஷ் விடுவிக்கப்படுவார் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். மத்திய குழு சார்பாக சேகர் உறுதியளித்து, அந்த முயற்சியை நிறுத்தச் செய்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக கபூர் என்னும் பாலசுப்பிரமணியத்தை பத்மநாபா நியமித்தார்.

ரமேஷ் கடத்தப்பட்டதுக்குப் பதிலாக கபூரை கடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் விடுதலைப் படை உறுப்பினர்கள் திட்டமிட்டனர்.

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து ரமேஷ் விடுதலை செய்யப்பட்டார்.

கொலைத்திட்டம்

கடத்தல் நடவடிக்கைக்கு பதிலடியாக பத்மநாபாவின் அணியைச் சேர்ந்த மூன்று முக்கியஸ்தர்களைத் தீர்த்துக்கட்ட திட்டமிடப்பட்டது.

யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். தளபதியாக பத்மநாபாவால் நியமிக்கப்பட்ட கபூரை மானிப்பாயில் வைத்து தீர்த்துக்கட்டும் பொறுப்பு இப்ராகிம் என்றழைக்கப்படும் சிவகாந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.

மக்கள் விடுதலைப்படை உளவுப்பிரிவுக்கு இப்ராகிம்தான் பொறுப்பாளராக இருந்தார்.

கபூரின் முகாமில் இருந்த உளவுப்பிரிவு ஆள் முலமாக கபூரின் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டன.

உரும்பிராயில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்திற்கு இரவோடு இரவாக குண்டு வீசுவதற்கு அலுவலகம் அருகே இருந்த வீடொன்றில் கைக்குண்டுகளையும் கொண்டு சென்று வைத்திருந்தனர்.

தான் திரும்பிவரும் வரையும் பதில் நடவடிக்கை எதிலும் ஈடுபடவேண்டாம் என்று தமிழ்நாட்டிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார் டக்ளஸ் தேவானந்தா.

தமது இயக்கத்திற்குள்ளும் ஆயுதமோதலுக்கு உரிய சூழல் உருவாகிவிட்டதை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் பலர் ஒதுங்கத் தொடங்கினார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் பிரசார பீரங்கி என்று சொல்லப்பட்ட டேவிற்சன் இயக்கத்தை விட்டு விலகிச் சென்றார்.

யாழ்-மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏற்றிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அணியினரிடமிருந்து யாழ் மாவட்ட தலைமைத்துவம் பத்மநாபா அணியினரின் கைக்குச் சென்றது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் ஏற்பட்டுக்கொண்டிருந்த பிரச்சனைகளை புலிகள் அமைப்பினர் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
thevanantha இரண்டாகிய இயக்கம், சூளைமேட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 73 thevanantha
சூளைமேட்டில் துப்பாக்கிச் சூடு

1986 நவம்பர் மாதம் தீபாவளி தினத்தன்று தமிழ் நாட்டில் சென்னை-சூளைமேட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. சூளைமேட்டில் தான் டக்ளஸ் தேவானந்தா தனது பாதுகாவலர்களுடன் தங்கியிருந்தார்.

தீபாவளி தினத்தன்று காலையில் அருகிலுள்ள தேநீர் கடைக்குச் சென்றனர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர்கள்.

தீபாவளியை முன்னிட்டுடு போதையில் நின்ற சிலர், அவர்களை உரசிக் கொண்டு சென்றனர். தாமே உரசிவிட்டு, “ஏனடா நம்மீது மோதினீர்கள்? சிலோன்காரன் எண்டால் திமிரு வருமாடா?” என்றனர்.

வாய்த் தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. அதனையடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி அரிவாள்கள், கத்தி, பொல்லுகள் சகிதம் ஒரு கும்பல் வந்தது.

“சிலோன்காரன் எல்லாம் வெளியேவா” என்று கூச்சலிட்டபடி கற்களை வீசினார்கள்.

அப்போது டக்ளஸ் தேவானந்தா வீட்டில் இருக்கவில்லை. கோடம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் இருந்தார்.

சூளைமேட்டில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அவருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டது.

உடனடியாகப் பெறப்பட்டு அவர் சூளைமேட்டுக்கு வருவற்கிடையில் பிரச்சனை பெரிமாகிவிட்டது.

வீட்டுக்கூரைமீது ஏறிய சிலர் கூரையை உடைத்து உள்ளே மண்ணெண்ணெய் ஊற்றினார்கள். “வீட்டோடு சேர்த்து எல்லோரையும் கொளுத்துங்கடா” என்று கும்பலில் ஒருவர் கூச்சல் போட்டார்.

இனியும் வீட்டுக்குள் இருந்தால் உயிர் தப்ப முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.

வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

கும்பலில் பலர் போதையில் இருந்தமையால் துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னரும் அவர்களுக்கு விபரீதம் புரியவில்லை.

சூடு விழுந்தது.

கும்பலில் ஒருவர் காட் போர்ட் மட்டையை மார்புக்கு கவசமாக பிடித்தபடி “எங்கே சுடுங்கடா பார்க்கலாம்” என்று ஓடி வந்தார்.

அந்த நேரம் பார்த்து டக்ளஸ் தேவானந்தா மோட்டார் சைக்கிளில் வந்து இறங்க, கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது.

கும்பலில் இருந்து அவரை மீட்க ஓடி வந்த பாதுகாவலர்களில் ஒருவரது துப்பாக்கயை கும்பலில் இருந்த ஒருவர் பறிக்க முற்பட, வெடி தீர்ந்தது. பறிக்க முற்பட்டவர் சுருண்டு வீழ்ந்தார்.

டக்ளஸ் தேவானந்தாவும், அவரது பாதுகாவலர்களும் அருகிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சென்று நின்று கொண்டனர்.

பொலிஸ் அதிகாரி ஸ்ரீபால் தலைமையில் பொலிசார் வந்தனர். “மொட்டை மாடிக்கு வர வேண்டாம். வந்தால் சுடுவோம்” என்றனர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர்கள்.

“பொலிஸ் அதிகாரி தேவாரம் வந்தால் அவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கலாம்” என்றார் டக்ளஸ் தேவானந்தா.

பின்னர் தேவாரம் வந்தார். தனியாக மொட்டை மாடிக்குச் சென்று டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினார். அவரிடம் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் இருந்த பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து பத்மநாபா ஓர் அறிக்கையை விடுத்தார்.

“டக்ளஸ் தேவானந்தாவும் அவரோடு இருந்தவர்களும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர்” என்று அறிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கு மத்தியில் அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

பத்மநாபா சொன்னார்: “தமிழக மக்களிடம் அதிருப்தி ஏற்படாமல் இருக்கத்தான் அப்படி அறிவித்தோம். அவர் வெளியே வந்த பின்னர் இயக்கத்தில்தான் இருப்பார்.”

புலிகளின் முடிவு
இதேவேளை, சூளைமேட்டு சம்பவம் பத்மநாபா அணியினரின் தூண்டுதலால் நடைபெற்றது என்று டக்ளஸ் தேவானந்தா அணியினர் சொல்லத் தொடங்கினர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான “சற்றர்டே ரிவீயூ” (ளுயுவுருசுனுயுலு சுநுஏஐநுறு) பத்திரிகையில் “சூளைமேட்டு சம்பவத்தின் சூத்திரதாரி யார்?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.

அது ரமேஷால் எழுதப்பட்டு கவிஞர் சேரனால் வெளியிடப்பட்டது.

‘டக்ளஸ் தேவானந்தாவை விடுதலை செய்’ என்று யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.

அதனை பத்மநாபா அணியினர் சில பகுதிகளில் கிழித்தனர்.

கிழித்துக் கொண்டிருந்த ஒருவர் டக்ளஸ் தேவானந்தா அணியினரால் தாக்கப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள் மோதல் வெளியேயும் தெரியத் தொடங்கியது.

அந்த நேரத்தில் தான் புலிகள் முடிவு செய்தார்கள்.

“ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் தடை செய்ய இதுதான் நேரம்.”

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோ’ வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74)

‘றோ’ வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74)
 

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது புலிகள் தடைவிதிக்க முன்னர் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

அச் சமயம் கண்ணி வெடிகள் வெடித்தன. அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பிவிட்டார்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். புதைத்து வைத்த கண்ணிவெடிதான் வெடித்தது.

தற்செயலாக அமுக்கப்பட்டதா, அல்லது வேண்டுமென்றே வெடிக்க வைத்தார்களா என்பது தெரியவில்லை.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ்-மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் சிலர் அதனை தமது திட்டமிட்ட நடவடிக்கை என்றே இயக்கத்திற்குள் பிரசாரம் செய்தனர்.

தம்மை புலிகளுக்கு எதிரான அதிதீவிரவாதிகளாக காண்பிப்பதுதான் அவர்களின் நோக்கம்.

 

deva1  'றோ' வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74) deva1

ilas  'றோ' வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74) ilas

SG  'றோ' வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74) SG

பத்மநாபா

அதிகாரிகள் சொன்னதை வைத்து யோசித்தார் பிரபாகரன். ‘ஈ.பி.ஆர்.எல்.எஃப். முந்துவதற்கு முன்பாக நாம் முந்திக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்திருப்பார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டுவுக்கு தகவல் வந்துவிட்டது. “நாபா றோவிடம் ஆயுதம் கேட்கிறார். வசதியைப் பார்த்து ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பையும் கவனிக்கலாம்.” என்று  உத்தரவு  வந்துவிட்டது.

டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாட்டுக்குச் சென்றபின்னர், பத்மநாபா அணியினரின் நடவடிக்கைகள் தொடர்பாக கிட்டுவுக்கு கடும் கசப்பு ஏற்பட்டிருந்தது.

ரமேஷை சந்தித்த கிட்டு தனது கசப்பை தெரிவித்தார். இப்போது நடைபெறும் இயக்க நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஆட்களுக்கும் (டக்ளஸ் தேவானந்தா ஆட்களுக்கு) ஒரு தெடர்புமில்லை என்று கூறிவிட்டார் ரமேஷ்.

இரண்டாவது முத்திரை

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈழம் முத்திரை வெளியிட்டது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். டேவிற்சன், ரமேஷ்  ஆகியோர் முன்னின்று செய்த ஏற்பாடுதான் அது.

அதனால், மற்றுமொரு முத்திரையை வெளியிட்டனர் பத்மநாபா அணியினர். அந்த வெளியீட்டு விழாவும் நல்லூர் நாவலர் மண்டபத்தில்தான் நடைபெற்றது.

பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றியவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

முத்திரை வெளியீட்டு விழா உரைகள் யாவுமே புலிகளை அராஜகவாதிகள் என்று சாடுவதாகவே இருந்தன.

இறுதியாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது உரையில் ஒரு கட்டத்தில் சொன்னது இது: “விஜிதரனை யார் கடத்தினார்கள் என்பது எமக்குத் தெரியும். அராஜக வாதிகளை நோக்கி எமது ஆயுதங்கள் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.”

சுரேஸ் பிரேமச்சந்திரனின் உரையால் உற்சாகம் கொண்ட யாழ்-பிராந்தியக் கமிட்டி மற்றொரு புலி எதிர்ப்புக்குத் தயாரானது.

ilakkiya  'றோ' வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74) ilakkiya

pulikall  'றோ' வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74) pulikall1முற்றுகை

நெருப்பு  தினத்துக்கு மறுநாள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்கள் புலிகளால் முற்றுகையிடப்பட்டன.

யாழ் நகரில் எந்தவொரு முகாமிலிருந்தும் புலிகளை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவில்லை. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். பதில் நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்று எதிர்பார்த்து புலிகள் முகாம்களை சுற்றிவளைத்து சரமாரியாக வேட்டுக்களைத் திர்த்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவில் பாழ் மாவட்டத்தில் பொறுப்பாக இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே ஒரு முடிவு செய்திருந்தனர்.

“புலிகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதில்லை. எமது இயக்கத்திலும் பிரச்சனை. நாம் எதற்கு வீணாக அடிபட்டுத் தோழர்களை பறிகொடுக்க வேண்டும்?” என்பது அவர்களது வாதம்.

யாழ்ப்பாணத் தொகுதிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈஸ்வரன். அவரும், அவரோடு இருந்தவர்களும் ஆயுதங்களை தலைமையிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிச் செல்லப்போவதாக கூறினார்கள்.

டக்ளஸ் தேவானந்தா விரைவில் திரும்பி வருவார். எனவே ஒப்படைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதால் ஈஸ்வரன் உட்பட பல பொறுப்பாளர்கள் காத்திருந்தனர்.

அப்படியிருந்தும் சில பொறுப்பாளர்கள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிச் சென்றனர். முகாம்களுக்கு முன்பாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளையும் அகற்றிவிட்டனர்.

இவ்வாறான சூழலில் புலிகள் தாக்கியபோது திருப்பித் தாக்கும் முயற்சியே நடைபெறவில்லை.

புலிகளுக்குக்கூட அது ஆச்சரியமாகவே இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களை தாக்குவது: சண்டை கடுமையாகி நீடித்தால் பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்திவிடுவது என்றுதான் கிட்டு திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஒரு இரவுக்குள்  யாழ்ப்பாணத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்கள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டில வந்துவிட்டன.
புலிகளை எதிர்ப்பதில் முன்னணியில் நின்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள்தான் முதலில் புலிகளிடம் சரணடைந்தார்கள். அவர்களில் தர்ஷனும் ஒருவர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ்-மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கபூரை தேடினார்கள் புலிகள். அவர் சாவகச்சேரியில் இருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா திரும்பி வந்ததும் தனக்கு ஆபத்து இருக்கிறது என்று சக தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கபூர்.

யாழ் மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களில் இருந்த ஆயுதங்களை சேகரித்து சாவகச்சேரியில் இருந்த முகாம் ஒன்றில் கொண்டு சென்று மறைத்து வைத்தார் கபூர்.

‘புலிகள் எந் நேரமும் தாக்கக் கூடும். அதனால் ஆயுதங்களை ஆங்காங்கே உதிரியாக இருப்பதைவிட ஒரே இடத்தில் இருப்பதுதான் சரி’ என்று காரணம் சொன்னார்.

உண்மையான காரணம் அதுவல்ல. டக்ளஸ் தேவானந்தா அணியினரின் பலத்தை குறைப்பதுதான் அவரது சாமர்த்தியமான திட்டம்.

சாவகச்சேரியிலும் புலிகள் தாக்கினார்கள். உறுப்பினரின் வீடொன்றுக்குள் சென்று கபூர் மறைந்து கொண்டார்.

இதேநேரம் சென்னையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். வட்டாரத்தில் இயக்க மோதல் தொடர்பாக கேட்கப்பட்டது. “சண்டை நடக்கிறது. கபூர் களத்தில் நிற்கிறார்” என்று சொன்னார்கள்.

கபூர் கைது

அதே நேரம் சாவகச்சேரியில் கபூர் புலிகளால் கைதுசெய்யப்பட்டார். கபூர் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளரான பின்னர்தான் முரண்பாடுகள் அதிகரித்தன. கபூரை நேரடியாக கிட்டுவுக்கு தெரியாது.

‘கபூரைப் பிடித்துவிட்டோம்’ என்று கிட்டுவுக்கு வோக்கியில் தகவல் கொடுத்தார் சாவகச்சேரி புலிகள் இயக்கப் பொறுப்பாளர் கேடில்ஸ்.

உடனே யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரச் சொன்னார் கிட்டு.

‘கபூரை போடுவது’ என்று கிட்டு முடிவு செய்துவிட்டார். அதனால் தனியான அறை ஒன்றை ஒதுக்கி கபூரை வைத்திருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் தம்மிடம் சரணடையுமாறு புலிகள் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்துச் சென்றனர்.

ஏராளமான உறுப்பினர்கள் புலிகளது முகாம்களில் சரணடைந்தனர்.

அனைவரையும் புலிகளது உளவுப்பிரிவு விசாரித்தது. இதில் ஒரு விடயம் என்னவென்றால், ரெலோ தடைசெய்யப்பட்டபோது, ரெலோ உறுப்பினர்கள் புலிகளால் கடுமையாக தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் அவ்வாறு மோசமாகத் தாக்கப்படவில்லை.

சரணடைந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தாம் ‘இயக்கத்தில் இருந்து முரண்பாடு காரணமாக ஒதுங்கியிருப்ப்’தாக தெரிவித்தனர்.

“என்ன முரண்பாடு?” என்று கேட்கப்பட்டது.

“நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள். ரமேஷ் கடத்தப்பட்டதோடு இயக்கத்தை விட்டு ஒதுங்கிவிட்டோம்!” என்றனர். “அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்.” என்று விட்டார் கிட்டு.

“நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள்” என்று சொன்னவர்களில் பத்மநாபா அணியினர் சிலரும் இருந்தனர்.

நெருப்பு தின ஊர்வலத்தில் முன்னணியில் நின்று அடையாளம் காணப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

மட்டக்களப்பில் சில பகுதிகளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.  எனினும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கக் கூடிய ஆயுதபலம் அவர்களிடம் போதியளவில் இருக்கவில்லை.

மன்னாரில் புலிகள் செய்த தந்திரம்  (புலிகளின் போட்ட வலை)

இதேவேளை மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பொறுப்பாளர் ஒருவரை புலிகள் பிடித்தனர். அவரது பெயர் மார்ட்டின்.

அவர் மூலமாக தமிழ்நாட்டுக்கு செய்தி அனுப்பினார்கள். “மன்னாரில் நாம் நிற்கிறோம். உடனடியாக ஆயுதங்கள் தேவை. அனுப்பிவைத்தால் இங்கு புலிகளை சமாளிக்க முடியும்.” என்று மார்ட்டின் மூலம் பத்மநாபாவுக்கு தகவல் அனுப்பினார்கள்.

உடனே ஆயுதங்கள் சகிதம் படகு ஒன்றில் முக்கிய உறுப்பினர்களையும் மன்னாருக்கு அனுப்பிவைத்தார் பத்மநாபா.

படகு வருவதை எதிர்பார்த்து மன்னார் கடற் கரையில் காத்திருந்தனர் புலிகள் இயக்கத்தினர்.

படகு கரைக்கு வந்தது. புலிகள் முற்றுகையிட்டனர். படகில் இருந்த உறுப்பினர்கள் அதனை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போயினர். அவர்களை கைது செய்தனர் புலிகள்.

மலையகத்தில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் இணைந்தவர்களில் முக்கியமான ஒருவர் அன்பரசன். சிறந்த போராளி.

படகில் கைது செய்யப்பட்டவர்களில் அன்பரசனும் ஒருவர். கைது செய்யப்பட்டவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆயுதங்களையும், படகுகளையும் புலிகள் கைப்பற்றினர். தமிழகக் கரையில், படகு மன்னாரில் சேர்ந்த செய்தியை அறிய தொலைத் தெடர்பு சாதனம் அருகே காத்திருந்தனர்.

மன்னாரில் இருந்து புலிகள் தொடர்பு கொண்டனர். “உங்கள் கையிலிருந்து நழுவிய ஆயுதங்களை நாங்கள் எந்திக் கொண்டோம்” என்று சொன்னார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் பெண்களுக்காக வெளியி;ப்பட்ட சஞ்சிகை ‘செந்தணல்’. அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருந்த கவிதை வரிகளைத்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கே திருப்பிச் சொன்னார்கள் புலிகள்.

தமக்கு ஒத்துழைப்புக் கொடுத்தமைக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப். மன்னார் பொறுப்பாளர் மார்ட்டினை பின்னர் விடுதலை செய்தனர் புலிகள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டார்.

ரமேஷ், செழியன், இப்ராகீம், தாஸ் ஆகியோரும் கொழும்பு சென்று தமிழ்நாட்டுக்குச் சென்றனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் சிலர் ஈரோசிடம் சென்று தமக்குப் பாதுகாப்பு தருமாறு கேட்டனர்.

அப்போது பாலகுமார் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார். ‘அடுத்தது தம்மையும் புலிகள் தடை செய்து விடுவார்களோ’ என்று பாலகுமாருக்கு யோசனை.

அதனால் பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையை சூசகமாக உணர்த்திவிட்டார். அதே சமயம் முகாமுக்கு சென்றுவிட்டவர்களை பராமரிக்வும் தவறவில்லை.

மற்றொரு தடை

1986 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தை தடை செய்த சூட்டோடு புலிகள் மற்றொரு அறிவித்தலை வெளியிட்டனர்.

தம்பாபிள்ளை  மகேஸ்வரன் தலைமையிலான  ‘தமிழீழ இராணுவத்தை (TEA) தடை செய்து விட்டதாக அறிவித்தனர்.

தமிழீழ இராணுவத்தினர் மறுபேச்சே பேசவில்லை. தம்மிடமிருந்த சொற்ப ஆயுதங்களையும் புலிகளிடம் ஒப்படைத்து விட்டனர்.

‘தமிழீழ இராணுவ உறுப்பினர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் இணைந்து விட்டனர். ஏனையோரும் வந்து சேரலாம்’ என்று புலிகள் அறிவித்தனர்.

அதனையடுத்து ஏனைய சிறு குழுக்களின் உறுப்பினர்களும் தாமாகவே செயலிழக்கத் தொடங்கினார்கள்.

இறுதியில் மிஞ்சியது ‘ஈரோஸ்’.

இக்கட்டத்தில்தான் மன்னாரில் புலிகள் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்தவர் விக்ரர்.

மன்னாரில் இராணுவத்தினருக்கும், புலிகள் இயத்தினருக்கும் இடையே கடும் சமர் ஒன்று ஏற்பட்டது.

மன்னார் சமரும், கிட்டு-கோட்டை முகாம் இராணுவ அதிகாரி கொத்தலாவலயுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாகவும் வரும் வாரம் சொல்கிறேன்.

(தொடர்ந்து வரும்)

 

pulikal  'றோ' வின் காட்டிக்கொடுப்பு: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயகத்தின் மீது புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-74) pulikal1
12.4.96 அன்று கொழும்பு துறைமுக தாக்குதல் முயற்சியில் 9 கடற்கரும்புலிகள் பலியானது தெரிந்ததே. பலியானவர்களில் கடற்புலிகளது தளபதிகளில் இருவரான லெப்டினன்ட் கேணல் ரதீஸ், மேஜர் ரதன் ஆகியோர் பிரபாகரனுடன் இறுதியாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.

தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

                                                                                                                                                                                                                                                                                      akkiyainfo.com       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல்: பிரபாகரனும் கைது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-75)

lt_col_victor4.jpg

மன்னாரில் மூத்த தளபதி லெப் கேணல் விக்டர்.

“தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள். என எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஏன் தெரியுமா??

மன்னாரில் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக குறிப்பிடுவதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற சில சம்பவங்களை கூறியாக வேண்டும்.

1986 நவம்பர் 15-16-17ம் திகதிகளில் பெங்களூரில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் வருகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

ஜே,ஆர். உயிருக்கு தமிழ்நாட்டில் உள்ள போராளிகளால் ஆபத்து நேரலாம் என்று பயந்தார் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி.

இந்திய மத்திய உள்துறையிலிருந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு இரகசியத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள போராளிகள் பெங்களூர் நோக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தது அத்தகவல்.

எம்.ஜி.ஆர். உத்தரவு

அப்போது  தமிழ்நாட்டில்  உளவுத்துறைக்கு பொறுப்பாக இருந்தவர் மோகனதாஸ். அவரை அழைத்துப் பேசினார் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் போட்ட கட்டளையைக் கேட்ட மோகனதாசுக்கு ஆச்சரியமாக இருந்தது.

mgr  தமிழ் நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல்: பிரபாகரனும் கைது!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-75) mgrஎம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்: “தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள்.

சார்க் மாநாடு நடைபெற இருக்கிறது. அதனால் பிரதமரே நேரடியாக என்னிடம் அதனைச் சொல்லியிருக்கிறார்.” என்றார் எம்.ஜி.ஆர்.

அதனால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படலாமே என்று மோகனதாஸ் தயங்கியபோது “பிரதமருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். எப்படியாவது செய்தேயாக வேண்டும்” என்று கண்டிப்பாக கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.

நவம்பர் 8ம் திகதி அதிகாலையில் சென்னையில் உள்ள சகல போராளி முகாம்களும், அலுவலகங்களும் தமிழகப் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டன.

போராளிகளுக்கு முதலில் அதிர்ச்சி. தமிழக பொலிசாரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் ‘யார் உத்தரவு?’ என்று கேட்டார்கள்.

“பிரதமரின் விருப்பம். ஆயுதங்களை ஒப்படையுங்கள். சார்க் மாநாடு முடிந்ததும் தந்துவிடுவோம். ஒரு பிரச்சனையுமில்லை” என்றார்கள் பொலிஸ் அதிகாரிகள்.

பிரபாகரனும் கைது செய்யப்பட்டார். ரெலோ தலைவர் செல்வமும் கைது செய்யப்பட்டார். புளொட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன் அப்போது டெல்லியில் இருந்தார்.

அவரை தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறாமல் கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைத்தனர் டெல்லி பொலிசார்.

கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

பொலிஸ் நிலையத்தில் பிரபாகரனை அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்து கொண்டனர். புகைப்படம் எடுத்தனர்.

‘சார்க்’ மாநாடு முடியும்வரை போராளிகள் இயக்க தலைவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவே விரும்பியது தமிழக அரசு.
Thalaivarudan  தமிழ் நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல்: பிரபாகரனும் கைது!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-75) Thalaivarudan
பிரபாகரனுடன் அப்போது எம்.ஜி.ஆர். நெருக்கமாக இருந்தார். தமிழக பொலிசார் நடந்து கொண்ட விதத்தால் பிரபாகரனும் ஏனைய இயக்கத் தலைவர்களும் அதிருப்தி கொண்டனர்.

பெங்களூர் பேச்சு

இதேவேளை சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜே.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஒழுங்கு செய்தார் ராஜிவ் காந்தி.

இந்திய விமானப்படையின் தனி விமானம் ஒன்றில் சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார் பிரபாகரன். அவருடன் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் கூடச் சென்றிருந்தார்.

பெங்களுர்ர் பேச்சுவார்த்தைக்கு செல்ல பிரபாகரன் விரும்பவில்லை. தம்மிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட  நிலையில், வேறு நடவடிக்கைகளுக்கும்  மத்திய அரசு தயங்காது என்பதை பிரபா புரிந்து கொண்டார்.

மறுத்துப் பேசுவதைவிட பேச்சுக்குச் சென்றுவிட்டு முறித்துக்கொண்டுவரலாம் என்றுதான் பிரபா புறப்பட்டுச் சென்றார்.

ஏனைய இயக்கங்களை ஒதுக்கிவிட்டு பிரபாகரனை மட்டுமே பெங்களூருக்கு அழைத்துச் சென்றது இந்திய அரசு. பெங்களூர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சென்னை திரும்பினார் பிரபாகரன்.

சென்னை திரும்பிய பிரபாகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தமிழக அரசு. புலிகளிடம் இருந்த தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிசார் கைப்பற்றினார்கள்.

எம்.ஜி.ஆர். உத்தரவுப்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் கூறியிருந்தார்.

“தமிழ்நாட்டில் நடைபெற்ற தொலைத் தொடர்பு சாதன பறிப்பு விடயத்தில் தமிழக அரசு மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை” என்று அறிவித்தார்  மத்திய உள்துறை இணை அமைச்சர் ப.சிதம்பரம்.

அமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பு தமிழக அரசை சங்கடத்தில் ஆழ்த்தியது.

உண்ணாவிரதம்

அதேவேளை பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் உள்ள தமது அலுவலகத்தில் ஆரம்பித்தார்.

பிரபாகரன் நடத்திய முதலாவது சாத்வீகப் போராட்டமும் அதுதான். பிரபாகரன் பிடிவாதகுணமுடையவர் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆரும் அவ்வாறு பிடிவாத குணமுடையவர்தான். அதனால் தான் பிரபாகரன்மீது எம்.ஜி.ஆர். தனி விருப்பம் கொண்டார் என்றும் ஒரு கருத்து உண்டு.

சென்னையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தபோது யாழ்ப்பாணத்தில் அதற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர் புலிகள்.

kidu  தமிழ் நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல்: பிரபாகரனும் கைது!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-75) kidu1சென்னையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் விமான எதிர்ப்பு ஆயுதமான சாம்-7வும் இருந்ததாக புத்திசாலித்தனமாக பிரசாரம் செய்ய வைத்தார் கிட்டு.

சாம் 7 வாங்குவதற்காக என்று புலிகள் முன்பு நிதிதிரட்டினார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அதனை வாங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டன.

பார்த்தார் கிட்டு.  இதுதான் சந்தர்ப்பம் என்று சாம் 7 ஐயும் கைப்பற்றிவிட்டர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்.

யாழ்-குடாநாடெங்கும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் புலிகள் எழுப்பிய கோஷங்களில் ஒன்று:

“தமிழக அரசே! எடுத்த சாம் 7ஐ திருப்பிக்கொடு!”

பிரபாகரனின் உண்ணாவிரதத்தை அடுத்து எம்.ஜி.ஆர். மனம் மாறினார். தொலைத் தொடர்பு சாதனங்களை திருப்பித் தாருங்கள் என்றுதான் பிரபாகரன் உண்ணாவிரதமிருந்தார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்தார் தெரியுமா? சார்க் மாநாடு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் திருப்பிக் கொடுத்துவிடுமாறு உத்தரவு போட்டுவிட்டார்.

சென்னையில் ஈழப் போராளி அமைப்புக்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை இந்தியாவெங்கும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டது.

பத்திரிகைகள் சாடல்

பத்திரிகைகள் சில வரவேற்றன. வேறு சில எதிர்த்துக் கருத்து வெளியிட்டன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ‘தேடலைத் தொடர்க’ என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அதில்

முக்கிய பகுதி இது:
“தமிழ் நாட்டிலுள்ள இலங்கைப் போராளிகள் மீதான சென்றவார அதிரடி முற்றுகை ஆச்சரியம் தருகிறது. போராளிகள் வருத்தப்பட்டார்கள்.

கொழும்புக்குத் திருப்தி. தம் மத்தியில் கொலைகார ஆயுதங்களுடன் திரிந்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை மக்களுக்கு நிம்மதியைத் தந்தது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு காவல்துறையால் நடத்தப்பட்டிருந்தாலும், டெல்லிக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் போராளிகளது எதிர்ப்பை நிறுத்திவிடலாம் என்று பொழும்பு நினைத்தால் அது புத்திசாலித்தனமல்ல. யதார்த்த நிலைகளைக் கருதி கொழும்பு ஆவன செய்ய வேண்டும்.”

‘இந்து பத்திரிகையும் ஒரு தலையங்கம் எழுதியது. அது இதுதான்:

“இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய இரசின் கொள்கை நாளுக்கு நாள் குழப்பமாகிக் கொண்டு வருகிறது. அதன் காரணங்கள், நோக்கங்கள் எவை என்பது இப்பொழுது வெளிப்படையாகி வருகிறது.

இலங்கை தீவிரவாத அமைப்புக்கள் மீது தமிழ்நாட்டு காவல்துறை பெரியளவில் வேறுபாடு காட்டாத ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த இயக்கங்களின் முன்னணித் தலைவர்கள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

அண்டை நாட்டு இனப்பிரச்சனையில் முதலில் ‘புலி வேட்டை’ என்று அழைக்கப்பட்டு, பிறகு‘ஆயுதம் களைந்து அவமானப்படுத்தல்’ என்ற பெயரிடப்படாத இந்த நடவடிக்கை முழுக்க, முழுக்க தமிழ்நாட்டு காவல்துறையினரால் மட்டுமே எடுக்கப்பட்டது.

தெளிவில்லாத ஒரு முன் தகவல் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டது என்பது இப்போது தெரியவருகிறது.

…இந்த ஆயுதம் களைதல் நடவடிக்கை உலகளாவியரீதியில் ஒரு உணர்ச்சிமயமான ஊக விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது:

அதாவது போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்படுகின்றன.

அவை தமிழ்நாட்டில் குவிக்கப்படுகின்றன. அவை இலங்கை அரசுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை இந்திய அதிகார மட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.

இதே நிலை தொடருமா! தமிழ்நாட்டு காவல் துறையினர் நடிவடிக்கை எதனை உணர்த்துகின்றது என்று தெரியவில்லையே.

இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைத் தடம் புரளாமல் திருத்தி அமைப்பதில் பிரதமர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்!”

‘டைம்ஸ் ஒஃப் இந்தியா’ பின்வருமாறு சாடியது. “இந்த நடிவடிக்கை எதேச்சாதிகாரமானது. அவமானப்படுத்தக்கூடிய அளவு கொடுமையானது என்று விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வார்த்தைகள் கடுமையானவையாக இருந்த போதும் இது மிகவும் தேவைப்பட்டது.”

சரியான செயல்பாடு என்ற தலைப்பில் போடு இந்துஸ்தான் டைம்ஸ் எழுதிய தலையங்கத்தில் ஒரு பகுதி:

“பெங்களூரில் இரண்டாவது சார்க் உச்சி மாநாடு நடைபெற சில நாட்களே இருந்த வேளையில், சென்றவார இறுதியில் இலங்கைப் போராளிகள்மீது தமிழ்நாடு அரசு எடுத்த ஆயுதம் களைதல் நடவடிக்கை மிகவுத் சரியானதே.

மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாடு அரசு இந்த முனைவில் இறங்கியிராது என்பது தெளிவு.

பார்க்கப்போனால் இந்த நடவடிக்கைக்கு சற்று முன்னதாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். புது டெல்லி சென்றிருந்தார்.”

பாய்ந்தது பதினாறடி

ஈழப்போராளிகளிடம் ஆயுதம் களையும் நடவடிக்கை எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் நடந்த ஒன்றல்ல. ஆனால் உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் எம்.ஜி.ஆர். எட்டடி பாயச் சொன்னால் பதினாறு அடி பாய்ந்து விட்டார் என்பதே போராளி இயக்கங்களின் கருத்தாக இருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே ஈழப்போராளிகள் அமைப்புக்கள்மீது மோகனதாசுக்கு பிடிப்புக் கிடையாது. அவர்மீதும் போராளி அமைப்புக்களுக்கு சந்தேகம் இருந்தது.

மோகனதாசின் கடுமையான போக்கின் விளைவாகத்தான் ஆயுதங்களை கைப்பற்றும் நடவடிக்கை பகிரங்கமாக்கப்பட்டது. இயக்கத் தலைவர்களும் அவமானத்திற்கு உள்ளானார்கள்.

கைப்பற்றிய ஆயுதங்களை திருப்பிக் கொடுக்குமாறு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டது மோகனதாசுக்கு உடன்பாடாக இருக்கவில்லை.

பதவியில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன் என்று எம்.ஜி.ஆரை மறைமுகமாக மிரட்டிப்பார்த்தார். எம்.ஜி.ஆர். அசைந்து கொடுக்கவில்லை. மோகனதாஸ் விடுப்பில் வீடு சென்றுவிட்டார்.

தமிழக உளவுத்துறை அதிகாரியாகவும், தமிழக பொலிஸ் டி.ஜி.பி யாகவும் முக்கிய பதவிகள் வகித்த மோகனதாஸ் இலங்கை அரசின் அதிகாரிகளை இரகசியமாக சந்திப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.

‘இலங்கை உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை தான் விரும்பவில்லை’ என்று ஓய்வு பெற்ற பின்னர் கூறினார் மோகனமாஸ்.

அவர் அதற்கு சொன்ன நியாயம் இது: “இன உணர்வு அல்லது வேறு காரணங்களினால் இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை.

இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு பஞ்சாப், காஷ்மீர் மாநிலத் தீவிரவாதிகளுக்கு உதவிவரும் பாகிஸ்தானைக் கேள்விகள் கேட்கும் உரிமை இல்லை.”

ஓய்வுபெற்ற பின்னர் அதனை பகிரங்கமாக தெரிவித்த மோகனதாஸ், பதவியில் இருந்தபோது தனது நடவடிக்கைகள் மூலம் தனது நிலைப்பாட்டை மறைமுகமாக காட்டியிருந்தார்.

ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட போதும் பிரபாகரன் சமாதானமாகவில்லை. இனிமேலும் தமிழ் நாட்டில் தங்கியிருப்பது நல்லதல்ல. நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட வேண்டியும் ஏற்படலாம். அதனால் யாழ்ப்பாணம் சென்றுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார் பிரபாகரன்.

viktor+anna-33  தமிழ் நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல்: பிரபாகரனும் கைது!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-75) viktor anna 33லெப் கேணல் விக்டர்

மன்னார் மோதல்

மன்னாரில் அடம்பனில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  மன்னார் பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்தவர் மறுசீலன் என்னும் விக்டர்.

மோதலில் விக்டர் கொல்லப்பட்டார். இராணுவத்தினர் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.

இராணுவத்தினர் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிச் சென்றனர். இராணுவத்தினரிடம் கைப்பற்றிய ஆயுதங்கள், கொல்லப்பட்ட இராணுவத்தினரது உடல்கள், கைதான இராணுவத்தினர், விக்டரின் உடல் அனைத்தும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டன.

கந்தசாமி கோவில் அருகே கண்காட்சி

இயக்கங்கள் தமக்குள் மோதுவதையிட்டு யாழ்ப்பாணமக்களிடம் வருத்தம் நிலவியது. ரெலோ உறுப்பினர்கள் பலர் வீதிகளில் எரிக்கப்பட்ட காட்சிகளை நேரில் கண்ட பலர் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

அவற்றையெல்லாம் சுத்தமாக துடைத்தெறியும் வகையில் மன்னார் மோதல் வெற்றியை பெரியளவில் கொண்டாடத் திட்டமிட்டார் கிட்டு. நல்லூர் கந்தசாமி கோவிலருகில் கண்காட்சியும், அஞ்சலியும் ஒன்றாக நடத்தப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு காண்பிக்கப்பட்டனர்.

இராணுவத்தினரை புலிகள் பிடித்து வந்தமை மக்களுக்கு ஆச்சரியம். பெருந்தொகையான மக்கள் சென்று பார்வையிட்டனர்.

img_0575  தமிழ் நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல்: பிரபாகரனும் கைது!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-75) img 0575மூத்த தளபதி லெப் கேணல் விக்டர்

விக்டரின் மரணச் சடங்கிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

விக்டர் அஞ்சலிக்காக கிட்டு தெரிவித்த கருத்து விஷயமறிந்தவர்களை புருவம் உயர்த்த வைத்தது.

கிட்டு சொன்னது இதுதான்: “புலிகள் அனைவரும் விக்டரை விரும்புகிறார்கள். தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களுடன் களத்தில் நிற்க வேண்டும்.” என்றார் கிட்டு.

கிட்டு சொன்னது மறைமுகமாக பிரபாகரனுக்குத்தான் என்று பேசப்பட்டது. பிரபாகரன் அப்போது தமிழ் நாட்டில் இருந்தார்.

புலிகளிடம் உள்ள தமது இரண்டு வீரர்களையும் விடுவிப்பது தொடர்பாக ஒரு இராணுவ அதிகாரி கிட்டுவுடன் தொடர்பு கொண்டார்.
kidu  தமிழ் நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல்: பிரபாகரனும் கைது!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-75) kidu

 

தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

Sh
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு துப்பாக்கி சுட பயிற்சியளித்த கிட்டு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76)

யாழ்பாணத்தில் வைத்து   சந்திரிகாவின்  கணவர்  விஜயகுமாரணதுங்காவுக்கு  துப்பாக்கி சுட  பயிற்சியளித்த கிட்டு!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76)
 

யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம் அருகே கிட்டுவும், கொத்தலாவலயும் சந்திப்பதற்கு முன்பாக நடைபெற்ற சில சம்பவங்களை முதலில் குறிப்பிட்டு விடுகிறேன்.

சென்றவாரம் அவை விடுபட்டுப் போய்விட்டன.

மன்னார் மோதலில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரின் உடல்களை நல்லூர் கந்தசாமி கோவில் அருகே புலிகள் கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

கோவில் அருகே அவ்வாறு உடல்களை வைத்திருப்பதை சைவப் பெரியார்கள் விரும்பவில்லை. அப்போது யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் பேராசிரியர் வித்தியானந்தன்.

அவரும் மேலும் பலரும் புலிகளிடம் சென்று பேசினார்கள். “கோவில் அருகே இவ்வாறான அஞ்சலி நிகழ்ச்சிகள், உடல்களை வைத்து கண்காட்சி என்பவை நடத்துவது சரியல்ல, மேலும் உடல்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு பெட்டியில் போட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைத்து விடலாமே.” என்று யோசனையும் தெரிவித்தனர்.

சடலங்கள் ஒப்படைப்பு. 

அதன் பின்னர்தான் யாழ்கோட்டை இராணுவமுகாம் அதிகாரிகளுடன் புலிகள் தொடர்பு கொண்டனர். “உங்கள் வீரர்களது உடல்களை ஒப்படைக்க விரும்புகிறோம்” என்றனர் புலிகள்.

கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கப்டன் கொத்தலாவல தனது உயரதிகாரிகளுடன்  தொடர்பு கொண்டு புலிகளது கருத்தைத் தெரிவித்தார்.

அவர்களும் கொத்தலாவலயைப் புலிகளோடு பேசி உடல்களைப் பொறுப்பெடுக்கச் சொன்னதோடு, பிரிகேடியர் ஆனந்த வீரசேகராவையும் கொழும்பில் இருந்து அனுப்பிவைத்தனர்.

முதலில் கோட்டை முகாமுக்கு அருகில் வைத்து புலிகளால் படையினரது உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. உடல்களை புலிகள் சார்பாக ஒப்படைத்தவர் ரஹீம் என்னும் கனகரத்தினம்.

இராணுவத்தினரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதும், பின்னர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் அதுவே முதற் தடவையாகும். அதன் மூலமாக புலிகளின் பிரசாரத்திற்கும் நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது.

தாம் ஒன்றும் ஈவிரக்கமற்ற அமைப்பல்ல. சர்வதேச போர்விதிகளைக் கடைப்பிடிக்கும் அரசியல் இராணுவ இயக்கம் என்று புலிகள் சொல்லிக்கொள்ளக் கூடியதாகவிருந்தது.

கிட்டுவின் ஜோக்

உடல்கள் ஒப்படைக்கப்பட்டபின்னர் தான் புலிகளிடம் இருந்த இரண்டு இராணுவத்தினரையும் விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் கப்டன் கொத்தலாவல ஈடுபட்டார்.

அதன் ஒரு கட்டமாகத்தான் கிட்டுவும், கொத்தலாவலயும் சந்திக்க முன்வந்தனர்.

கோட்டை இராணுவ முகாமுக்கு அருகே சந்திப்பு நடைபெற்றது.

கப்டன் கொத்தலாவலயும் கிட்டுவும் கை குலுக்கிக் கொண்டனர்.

கப்டன் கொத்தலாவல மாமிசமலை போன்ற தோற்றமுடையவர். உயரமான மனிதர். கிட்டுவோ ஒல்லியான தேகம், குள்ளமான உருவம். கொத்தலாவலயின் மார்பளவு உயரம்தான் இருந்தார் கிட்டு.

கொத்தலாவலயுடன் பேசும்போது கிட்டு ஒரு ஜோக் அடித்தார். “உங்களைச் சுடுவது என்றால் இலக்குப் பார்க்கும் சிரமமே இல்லை” என்றார் கிட்டு. அதனைக்கேட்டு பெரிதாகச் சிரித்தார் கொத்தலாவல.

kiduu  யாழ்பாணத்தில் வைத்து   சந்திரிகாவின்  கணவர்  விஜயகுமாரணதுங்காவுக்கு  துப்பாக்கி சுட  பயிற்சியளித்த கிட்டு!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76) kiduu

அந்தச் சந்திப்பு சுமுகமாக நடந்து முடிந்தது. யாழ்ப்பாண பத்திரிகைகளில் கிட்டு கொத்தலாவல சந்திப்பு முன்பக்கச் செய்தியாகியது. கிட்டு, கொத்தலாவல, ஆனந்த வீரசேகர, ரஹீம் ஆகியோர் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

ஏனைய இயக்கங்களை தடைசெய்து விட்டு இராணுவத்தினருடன் புலிகள் கைகோர்த்துக்கொண்டார்கள். ‘சக போராளிகளுக்கு வேட்டு. இராணுவத்தினருக்கு வரவேற்பு.’ என்று  இந்தியாவில்  இருந்த தமிழ் இயக்கங்கள் அதனை விமர்சித்திருந்தன.

“எங்களை இந்திய இராணுவத்தினரின் கைக்கூலி என்றனர். இப்போது புலிகள் இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்குகின்றனர்” என்று விமர்சனம் செய்தது ரெலோ.

அதேவேளை கிட்டு பேச்சுக்களைத் தொடர்ந்தார். கோட்டை இராணுவ முகாமிலிருந்து பிரிகேடியர் ஆனந்த வீரசேகரா புலிகளது அலுவலகம் சென்று பேச முன்வந்தார்.

கோட்டை முகாமுக்கு  அருகில் இருந்து புலிகள் அவரையும் அவருடன் வந்த சில வீரர்களையும் வரவேற்று அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணம்  சுண்டிக்குளியில்  இருந்த புலிகளது முகாமில் வைத்து ஆனந்த வீரசேகராவுடன் பேசினார் கிட்டு.

தம்மிடமுள்ள  இராணுவத்தினர்  இருவரையும் விடுதலை செய்வதற்கு தாம் விதிக்கும் நிபந்தனைகளைக் கூறினார் கிட்டு. மேலிடத்தில் பேசிவிட்டு முடிவு தெரிவிப்பதாகக் கூறினார் ஆனந்த வீரசேகரா.

பேச்சு முடிந்ததும்  ஆனந்த வீரசேகரா  யாழ்ப்பாணத்தில் உள்ள தனது நண்பர்கள் சிலரைப் பார்க்க விரும்பினார். அவர் பார்க்க விரும்பியவர்களில் முக்கியமான ஒருவர் ஈ. கனகலிங்கம். அவர் ஒரு தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர். கோல் காப்பாளர்.

பரமேஸ்வராக் கல்லூடயிணீல் அதிபராகவும் கடமையாற்றியவர். யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிய ஈ. சபாலிங்கத்தின் சகோதரர்தான் கனகலிங்கம்.

யாழ்ப்பாணம்   இந்து மகளிர்  கல்லூரிக்கு  அருகில் இருந்த  கனகலிங்கம் வீட்டுக்கு ஆனந்த வீரசேகராவை அழைத்துச் சென்றனர் புலிகள்.

ஆனந்த வீரசேகராவும் ஒரு உதைப்பந்தாட்ட வீரர். தனது விருப்பத்தை புலிகள் நிறைவேற்றியதற்காக தனிப்பட்டரீதியிலும் தனது நன்றியைத் தெரிவித்தார் ஆனந்த வீரசேகரா.

Issuespic1  யாழ்பாணத்தில் வைத்து   சந்திரிகாவின்  கணவர்  விஜயகுமாரணதுங்காவுக்கு  துப்பாக்கி சுட  பயிற்சியளித்த கிட்டு!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76) Issuespic1
 

அருணாவுக்கு சூடு

இரண்டு  இராணுவத்தினரையும் விடுதலை செய்வதற்குப் பதிலாக, தமது உறுப்பினர்களான அருணாவையும், காமினியையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் கிட்டுவின் பிரதான நிபந்தனையாகும்.

அருணாவும், காமினியும் கோட்டை இராணுவ முகாமில் தடுத்துவைத்திருக்கும் போது நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அருணா ஒருநாள் கோட்டை  முகாம் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கோட்டை முகாமுக்குள் ஷெல் ஒன்று விழுந்து வெடித்தது. அது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால்  ஏவப்பட்ட  ஷெல்.

ஷெல்  விழுந்து வெடித்ததும் முகாமுக்குள் பதட்டம். ஆத்திரமடைந்த ஒரு இராணுவவீரரின் பார்வை குளித்துக் கொண்டிருந்த அருணாமீது சென்றது.

அருணாவை நோக்கிச் சுட்டார் அந்த இராணுவ வீரர். அதனால் அருணாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

விஷயமறிந்ததும் கொத்தலாவல விசாரித்தார். “அருணா தப்பியோட முற்பட்டார். அதனால் காலில் சுடவேண்டியதாகிவிட்டது.” என்று சொன்னார் அந்த இராணுவ வீரர்.

கொத்தலாவலக்கு உண்மை தெரிந்துவிட்டது. அந்த இராணுவ வீரரைக் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டதோடு, அருணாவை கொழும்பில் இருந்த இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க ஏற்பாடும் செய்தார்.

அப்போதும் அருணா புலிகளில் முக்கியமான ஒருவர் என்பது கொத்தலாவலக்குத் தெரியாது.

முக்கியமான உறுப்பினர்கள் உயிருடன் பிடிபடமாட்டார்கள், சயனைட் அடித்துவிடுவார்கள் என்றுதான் நம்பப்பட்டது.

புலிகளால் கொடுக்கப்பட்ட விடுவிக்கப்படவேண்டியோர் பட்டியலை வைத்துத்தான் அருணா முக்கியமான புள்ளிதான் என்று தெரியவந்தது.

hqdefault  யாழ்பாணத்தில் வைத்து   சந்திரிகாவின்  கணவர்  விஜயகுமாரணதுங்காவுக்கு  துப்பாக்கி சுட  பயிற்சியளித்த கிட்டு!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76) hqdefaultவிஜய் விஜயம்

அருணாவையும், காமினியையும் விடுதலை செய்ய இராணுவத்தரப்புக்கு அனுமதி கொடுத்துவிட்டது அரசாங்கம். அக்கட்டத்தில்தான் சிறீலங்கா மக்கள் கட்சித் தலைவர் விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணம் சென்று புலிகளை நேரில் சந்திக்கவும், சமாதான விஜயம் மேற்கொள்ளவும் முன்வந்தார்.

அதற்கு முன்னரும் விஜயகுமாரணதுங்கா 1982இல் ஒரு முறை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கொப்பேகடுவவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அப்போது யாழ்ப்பாணம் வந்திருந்தார் விஜய்.

அத் தேர்தலில் கொப்பேகடுவவுக்கு யாழ் குடாநாட்டில் விவசாயிகள் செறிவாக உள்ள பகுதிகளில் கணிசமான வாக்குகள் கிடைத்தன. அதன்பின்னர் 1986 நவம்பரில்தான் விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணம் விஜயம் செய்தார்.

அவரது சமாதான விஜயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. கொழும்பு பத்திரிகைகளும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி, சிறீலங்கா மக்கள் கட்சியை ஆரம்பித்திருந்த விஜயகுமாரணதுங்காவுக்கு அரசியல்
ரீதியாக பயன்கொடுக்கக்கூடிய விஜயமாக அது அமைந்தது.

(யாழ்ப்பாணத்தில் விஜயகுமாரணதுங்கா வந்தபோது எடுக்கப்ட்ட வீடியோ)

ஹெலிகொப்டர் ஒன்றில் யாழ் கோட்டை முகாமில் வந்திறங்கினார்கள் விஜயகுமாரணதுங்கா குழுவினர்.

அவர்களை கோட்டை இராணுவ முகாமின் அருகில்வைத்து சிறப்பான வரவேற்புக் கொடுத்து அழைத்துச் சென்றனர் புலிகள்.

யாழ்ப்பாணத்தில் விஜயகுமாரணதுங்காவின் வருகைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.

இனப்பிரச்சனைக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்காக விஜயம் செய்த தென்னிலங்கை சிங்களத் தலைவர் விஜயகுமாரணதுங்கா தான்.

சிறந்த நடிகரான் விஜய் தென்னிலங்கையில் பிரபலமானளவுக்கு வடக்குகிழக்கில் பிரபலமானவராக இருக்கவில்லை.

சமாதான விஜயம் மேற்கொண்டமையினால் வடக்கில் பிரபலமானதோடு, தமிழ் மக்களது நேசத்துக்குரியவராகவும் மாறினார் விஜய்.

நல்லூர் கந்தசாமி கோவில் வீதியில் விஜயகுமாரணதுங்கா கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர் புலிகள்.
பெரும்திரளான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு விஜய் உரையாற்றனார்.

கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகில் பெரிய பீரங்கி போன்ற ஒன்றை நிறுத்திவைத்திருந்தனர் புலிகள். உண்மையில் அதனால் சுட முடியாது. பார்வைக்கு பிரமாண்டமாகத் தெரியும் அவ்வளவுதான்.

விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் தனக்கும், தனது குழுவினருக்கும் கிடைத்த வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து போனார் விஜய்.

விஜய் குமாரணதுங்கா குழுவினர் கோட்டைக்குத் திரும்பும்போது, அவர்களோடு தம் பிடியில் இருந்த இரண்டு இராணுவத்தினரையும் விடுதலை செய்து அனுப்பி வைத்தனர் புலிகள்.

அதனையடுத்து இராணுவத்தினரிடமிருந்த அருணாவும், காமினியும் விடுதலையாகி யாழ் வந்தனர். பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ச்சி தெரிவித்தனர் புலிகள்.

யாழ் சென்று புலிகளிடமிருந்து இரண்டு இராணுவத்தினரையும் அழைத்து வந்தது மூலம் தென்னிலங்கையிலும் சமாதானத் தூதுவராக மதிக்கப்பட்டார் விஜயகுமாரணதுங்கா.

விஜயகுமாரணதுங்காவுடன் யாழ் விஜயம் செய்தவர்களில் வணபிதா யோகான் தேவானந்தா, ஓ.சி.அபயகுணசேகர, வின்சன்ட் பெரேரா ஆகியோர் முக்கயமானவர்கள்.

கைதிகள் விடுவிப்பை அடுத்து புலிகளோடு பேச்சு நடத்த இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அந்த முயற்சிகளில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சதி?

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் கிட்டு ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார். அந்த பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து ஒரு தமிழ் இளைஞர் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

“இவர்தான் கிட்டுவைக்கொலை செய்ய இராணுவத்தினரால் அனுப்பப்பட்டவர், இவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது” என்று விளக்கம் கொடுத்தனர் புலிகள்.

“புலிகள் சொல்வது உண்மைதான். கிட்டுவைக் கொலை செய்யவே நான் வந்தேன்.” என்று அந்த இளைஞரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அச்செய்தி மறுநாளே பத்திரிகைகளில் பெரிதாக வெளிவந்தது.

‘கிட்டுவைக் கொல்லச் சதி’ என்று செய்திகள் வெளியானதை மக்கள் பார்த்தனர். அதனால் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் அடங்கிப் போயின.

அதேசமயம் கப்டன் கொத்தலாவலக்கு பிற்காலத்தில் சில கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டன. அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்ப்பட்டது.

அப்படியிருந்தும் 1990இல் கிட்டு வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தபோது அதற்கு ‘ஸ்பொன்சர்’ பண்ணியவர் கொத்தலாவலதான்.

இலங்கை  இராணுவத்தில் புலிகளுடன் நெருங்கிப்பழகிய ஒரே  ஒரு இராணுவ அதிகாரி கொத்தலாவலதான். அதேநேரம் புலிகள் மதிப்பு வைத்திருந்த ஒரே ஒரு இராணுவ அதிகாரியும் அவர்தான்.

புலிகள் அறிவிப்பு   (ஜனவரி 1ல் புலிகள்  யாழ் சிவில்  நிர்வாகத்தை பொறுபேற்றனர்)

1987 ஜனவரி மாதத்தில் புலிகள் ஒரு அறிவித்தலை வெளியிட்டனர்.

யாழ்குடாநாட்டில் சகல சிவில் நிர்வாக நடவடிக்கைகளும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக புலிகளின் அறிவித்தல் கூறியது.

அதற்கு முன்னரே சிவில் நிர்வாக நடிவடிக்கைகள் இயக்கங்களின் கட்டுப்பாட்டில்தான் நடந்து வந்தன. ஏனைய இயக்கங்களை (ஈரோஸ் தவிர) தடை செய்த பின்னர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் புலிகளது கட்டுப்பாடு மேலோங்கியது.

எனினும், முதன் முதலாக வெளிப்படையாக அறிவிப்புச் செய்து, யாழ்குடாநாட்டு சிவில் நிர்வாகத்தை தாம் கையேற்பதாகப் புலிகள் சொன்னது ஜனவரி 1ம் திகதிதான்.

புலிகள் வெளிப்படையாக அவ்வாறு அறிவித்தமை அரசுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அதனையடுத்து யாழ் குடாநாட்டுக்கு எரிபொருள் தடைவிதிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

31ph20_zps7729a1e3  யாழ்பாணத்தில் வைத்து   சந்திரிகாவின்  கணவர்  விஜயகுமாரணதுங்காவுக்கு  துப்பாக்கி சுட  பயிற்சியளித்த கிட்டு!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76) 31ph20 zps7729a1e31பிரபாவின் நகர்வு
யாழ்குடாநாட்டில்  புலிகளின் ஆட்சி என்று தென்னிலங்கை பத்திரிகைகள் எழுதியதோடு, அரசாங்கத்தைக் கண்டிக்கவும் செய்தன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தது.

யாழ்ப்பாணத்தை புலிகளிடம் தாரை வார்த்துவிட்டது அரசாங்கம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதேவேளை யாழ்ப்பாணம் புலிகளின் தளப் பிரதேசம் என்றநிலை உறுதியாக உருவானதால், கிட்டுவின் புகழும் வளரத்தொடங்கியது.

கிட்டுவின் வளர்ச்சியானது அவர்தான் பிரபாகரனுக்கு  அடுத்த நிலையில் உள்ள தலைவர் என்று அனைவரையும் நினைக்க வைத்தன.

உள்நாட்டுப் பத்திரிகைகளில் மட்டுமல்ல, வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் கிட்டுவின் பெயர் அடிபடத் தொடங்கியது. அதனையிட்டு பொறாமைப்பட்டவர்களில் முதன்மையானவர் மாத்தையா.

புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் என்ற தனது நிலை கிட்டுவால் பறிபோய்க்கொண்டிருப்பதாக நினைத்தார் மாத்தையா. ஏற்கனவே பல்வேறு விடயங்களில் மாத்தையாவும், கிட்டுவும் முரண்பாடு கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிட்டுவின் அதீத வளர்ச்சி மாத்தையாவை மேலும் மேலும் எரிச்சல் ஊட்டியது. அதற்கிடையே மன்னார் மாவட்டத்தில் விக்ரரின் மறைவை அடுத்து, ராதா தளபதியாக நியமிக்கப்பட்டார்.

வன்னித் தளபதியாக மாத்தையா இருந்தாலும், மன்னார் மாவட்ட புலிகளோடு கிட்டுவுக்குத்தான் தொடர்பு கூடுதலாக இருந்தது.

தளத்திலுளள் நிலவரங்களை தமிழ்நாட்டில் இருந்து அறிந்து கொண்டிருந்த பிரபாகரன் 1987 ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

பிரபாகரனுடன் வந்தவர்களில் முக்கியமானவர் பொன்னம்மான்.  பிரபாகரனின் வருகையோடு யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் வருகை: கிட்டுவை யாழிலிருந்து மாற்ற திட்டம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-77)

ponnamman.jpg

ஊர் பிரச்சனை:  பொதுமகன் ஒருவரை ‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் சுட்டுகொலை செய்த புலிகள்!!

யாழ்ப்பாணத்திற்கு பிரபாகரன் வருவதற்கிடையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது:

யாழ்ப்பாணம் பாஷையூரில்  ஒரு  குடும்ப  உறவினர்கள் மத்தியில் தகராறு. அவர்களில் ஒருவர் சென்று புலிகளிடம் முறையீடு செய்தார்.

அப்போது புலிகள் அமைப்பின் பாசையூர் பொறுப்பாளராக இருந்தவர் மலரவன். அவர் நேரடியாகச் சென்று முறைப்பாட்டை விசாரித்தார்.

மலரவன் விசாரணை செய்த முறை சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்று நினைத்தனர்.

எட்வேட் என்பவர் மலரவனோடு வாக்குவாதப் பட்டார். மலரவனுக்கு கோபம் வந்துவிட்டது. எட்வேட்டுக்கு ஒரு அடி அடித்துவிட்டார்.

எட்வேட் கடற்தொழிலாளி. வாட்டசாட்டமானவர். அவரும் திரும்பி மலரவனுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டார். பின்னர் ஊர் மக்கள் சிலர் இருவரையும் விலக்கி வைத்தனர்.

மலரவன் முகாமுக்குச் சென்றார். தனது ஆட்களை வேனில் அனுப்பி, “எட்வேட்டை பிடித்துத்வாருங்கள்” என்று உத்தரவு போட்டிருந்தார்.

எட்வேட் ஒளிற்துவிட்டார். “உடனடியாக எட்வேட் சரணடையவேண்டும். இல்லாவிட்டால் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுவோம்” என்று புலிகள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.

பாசையூர் அந்தோனியார் கோவில் குருவானவரிடம் சென்று அடைக்கலம் தேடினார் எட்வேட். குருவானவர் புலிகளுடன் தொடர்பு கொண்டார்.

“எட்வேட்டை மக்கள் முன்பாக வைத்து விசாரியுங்கள்.” என்றார் குருவானவர். மலரவன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

“எட்வேட்டை எங்களிடம் ஒப்படையுங்கள். விசாரித்துவிட்டு உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறோம்” என்றார் மலரவன்.

குருவானவர் பாசையூர் மக்களிளோடு பேசினார். “எட்வேட்டுக்கு நான் பொறுப்பு. புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு, விடுதலை செய்து தருகிறேன்” என்றார்.

அரியாலையில்  உள்ள புலிகளின் முகாமில் எட்வேட்டை ஒப்படைத்தார் குருவானவர்.  குருவானவர் திரும்பிச்சென்றதும் எட்வேட்டை கட்டிவைத்து அடித்தார் மலரவன்.

‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் வைத்து தேய்த்தார். துடிதுடித்துப் போனார் எட்வேட். அடி உதை தொடர்ந்தது. இறுதியில் எட்வேட் இறந்துபோனார்.

எட்வேட்டின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த மலரவன், ஒரு நிபந்தனையும் விதித்தார். “இரண்டு மணித்தியாலங்களுக்குள் புதைக்கவேண்டும்” என்பதுதான் நிபந்தனை.

எட்வேட் இறந்த செய்தியறிந்து குருவானவர் வாய்விட்டுக் கதறினார். பாசையூர் மக்கள் கொதித்தனர். குருவானவர் தலைமையில் பாசையூர்  அந்தோனியார் கோவில் விறாந்தையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

வீதிக்கு குறுக்கே தடைகளைப்போட்டு மறியல் போராட்டமும் செய்தனர்.  எட்வேட்டுக்கு இரண்டு பிள்ளைகள். மனைவியும், பிள்ளைகளும் கதறியழுது கொண்டிருந்தனர்.

எட்வேட்டின் உடலில் நெருப்புச் சூட்டுக் காயங்களும், அடி காயங்களும் காணப்பட்டன.

மலரவன்மீது கிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மலரவன் கிட்டுவின் தீவிர விசுவாசி.

இச்சம்பவத்தின் பின்னர் நாவற்குழியில் நடைபெற்ற இராணுவத் தாக்குதல் ஒன்றில் கை ஒன்றை இழந்தார் மலரவன். தற்போது இயக்கத்தில் இருந்து வெளியேறி வெளிநாடொன்றில் இருக்கிறார்.

தமிழ் நாட்டில் இருந்து பிரபாகரன் வந்தார் 

ஈரோஸ் தவிர ஏனைய இயக்கம்கள் யாவும் தடை செய்யபட்ட நிலையில்தான் பிரபாகரன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் .
பிரபாகரனுடன் பொன்னம்மானும் வந்த சேர்ந்தார்  தமிழ் நாட்டில் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர் பொன்னம்மான் .
அவர் குகன் என்றும் அழைப்பார்கள் புலிகள் இயக்கத்தில் இருந்த யோகரத்தினம் யோகியின் சகோதரர் பொன்னம்மான் .
யாழ்ப்பாண தளபதியாக பொன்னம்மானை நியமித்துவிட்டு கிட்டுவை மன்னார் தளபதியாக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருந்ததாகவும் அப்போது புலிகள் 
இயக்க உறுப்பினர்கள் பேசிக்கொண்டனர் .
அதனை உறுதிசெய்வது போல் நாவற்குழி இராணுவமுகாம் தாக்குதலுக்கு திட்டமிட்டார் பிரபாகரன் .
யாழ் தளபதியாக கிட்டு இருந்தும் நாவற்குழி இராணுவமுகாம் தாக்குதலுக்கான பொறுப்பை பொன்னம்மானிடம்  கொடுத்தார் பிரபாகரன் .
அதனால் கிட்டுவுக்கும் அவரது விசுவாசிகளுக்கும் மனக்கசப்புதான் அதனை வெளியில் காட்டி கொள்ளாதவாறு நடந்துகொண்டனர் .
பிரபாகரன்  வருவதட்க்குமுன் யாழ்பாணத்தில் கிட்டு தலைமையில்தான் தாக்குதல்கள் நடத்தபட்டன அதன்மூலம் கிட்டுவின் பெயரும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியிருந்தன .
நீண்ட காலத்தின் பின் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தமையினால் நாவற்குழி இராணுவமுகாம் தாக்குதலை தனது நேரடி கண்காணிப்பில் நடத்த பிரபாவும் விரும்பினார் .
 

திட்டம் வகுக்கப்பட்டது

நாவற்குழி இராணுவ முகாமுக்குத் தேவையான குடி தண்ணீர் கைதடியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பவுசரில் எடுத்துச் செல்லப்படும்.

கிணறு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்தான் இருந்தது. பவுசரும் வெளியாருக்குச் சொந்தமானது.

அந்த பவுசர் வண்டிக்குள் வெடி மருந்தை நிரப்பி அனுப்புவதுதான் திட்டம். பவுசர் சாரதியும் துணிந்து முன்வந்து புலிகளின் திட்டத்துக்கு ஒத்துழைக்க இணங்கினார்.

வெடிமருந்து நிரப்பப்பட்ட பவுசரை வழக்கம்போல முகாமுக்குள் கொண்டுசெல்ல வேண்டும். முகாமுக்குள் சென்றதும் பவுசரை விட்டுவிட்டு சாரதி இறங்கி ஓடிவிட வேண்டும்.

பவுசர் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. கீழ்ப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்படும். மேல் பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்.

முகாம் வாசலில் உள்ளவர்கள் பவுசரின் மேலே ஏறி மூடியைத் திறந்து பார்த்து விட்டுத்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

பொன்னம்மான் வெடிமருந்துகளை கையாள்வதில் தேர்ச்சியானவர். பவுசருக்கு வெடிமருந்தை நிரப்பும் வேலையை அவர்தான் செய்தார்.
சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ் பொன்னம்மானுக்கு உதவினார். நாவற்குழி இராணுவ முகாம் சாவகச்சேரி பகுதியில் இருந்தமையால் முகாமை வேவு பார்க்கும் வேலைகளை கேடில்ஸின் பொறுப்பில் இருந்தவர்களே கவனித்தனர்.

ரஞ்சன் என்னும் பொறியியலாளரும் புலிகளுக்கு உதவினார்.

புலிகள் முதன் முதலாக விமானமொன்றைத் தயாரிக்க முற்பட்டபோது, அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் ரஞ்சனும் ஒருவர்.

14.2.87 அன்றுதான் நாவற்குழி இராணுவ முகாமை தாக்குவது என்று திட்டமிடப்பட்டது.

பகலில் தாக்குதல் நடத்துவதைவிட இரவில் நடத்துவதே கெரில்லாக்களுக்கு வாய்ப்பு. பகலில் என்றால் விமானத்தாக்குதலுக்கு சுலபமாக இரையாகவேண்டி இருக்கும்.

ஆனாலும் ஒரு சிக்கல். மாலை 6.30 மணிக்குப் பின்னர் இராணுவ முகாமுக்குள் பவுசர் செல்ல அனுமதி கிடையாது.  எனவே 6.30 மணிக்கு பவுசர் உள்ளே சென்றாக வேண்டும். அதன்பின்னர் ஒரு மணி நேரத்தில் இருட்டிவிடும் என்பதால் பின்னர் பிரச்சனை இருக்காது.

lt_col_santhosam-4  தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் வருகை: கிட்டுவை  யாழிலிருந்து மாற்ற திட்டம்!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-77) lt col santhosam 4
முகாமை குறிவைத்து தயாரான வெடிகுண்டு பவுசர்

13.2.87 இரவு பவுசருக்கு வெடிமருந்து நிரப்பும் வேலை நடைபெற்றது. பொன்னம்மான், ரஞ்சன், புலிகளது உளவுப்பிரிவு பொறுப்பாளர் வாசு ஆகியோர் இரவிரவாக வெடிமருந்தை நிரப்பினார்கள்.

14.2.87 அதிகாலை வெடிமருந்து நிரப்பப்பட்ட நிலையில் பவுசர் தயாரானது.  அசதி காரணமாக பொன்னம்மான் பவுசருக்கு அருகில் தூங்கிவிட்டார்.

மற்றொரு பகுதியில் மூன்று பெரிய லொறிகள் தயார் செய்யப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும், மூன்று லொறிகளும் முகாமுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவர், வாயில் காவல் அரணை உடைத்தெறிவார்.

சூசை, ஜொனி, கேடில்ஸ் மூவரும் உள்ளே செல்லும் மூன்று குழுக்களுக்கும் தலைமை கொடுக்க வேண்டும். திட்டம் அதுதான்.

யாழ் தளபதி என்றரீதியில் ஆட்களை தெரிவுசெய்து கொடுத்தார் கிட்டு.

சகல ஏற்பாடுகளும் ரெடியாகிக் கொண்டிருந்தன. வெடிமருந்து நிரப்பப்பட்ட பவுசர் பொன்னம்மானின் உத்தரவு கிடைத்ததும் புறப்படவேண்டும்.

நேரம் மாலை ஐந்துமணி. அப்போது பவுசரில் இருந்து தண்ணீர் ஒழுகியதை ஒருவர் கண்டுவிட்டார். அதனை பொன்னம்மானும் கவனித்துவிட்டார். பொறியியலாளர் ரஞ்சனை அழைத்து வந்து, ஒழுகுவதை நிறுத்துமாறு கூறினார் பொன்னம்மான்.

ஒழுகுவதை நிறுத்த வேண்டுமானால் ‘வெல்டிங்’ செய்ய வேண்டும். நேரமோ நெருங்கிக் கொண்டிருந்தது.

அவரச அவசரமாக ‘வெல்டிங்’ செய்து பவுசரில் ஏற்பட்ட துவாரத்தை அடைக்கத் தொடங்கினார் ரஞ்சன்.

பூமி அதிர்ந்தது.

நேரம் 5.15. ‘வெல்டிங்’ நடந்து கொண்டிருந்தது. நேரம் 5.30ஐ நெருங்கியது. இன்னும் கொஞ்ச நேரம்தான். ரஞ்சனின் அவசரம் அதகரித்தது.

நேரம் 5.30 மணி.

யாழ்ப்பாணமே குலுங்கியது.

பாரிய வெடிச்சத்தம்

அப்படி வெடிச்சத்தத்தையும், பூமியதிர்ச்சி போன்ற தாக்கத்தையும் யாழ் மக்கள் அதற்கு முன்னர் சந்தித்ததில்லை.

தாக்குதலுக்கு புறப்பட இருந்த உறுப்பினர்களுக்கு ஒரே குழப்பம்ஃ

தமக்கு அறிவிக்காமலேயே முகாமுக்குள் பவுசரை அனுப்பி வெடிக்கவைத்து விட்டார்களோ? என்று நினைத்தனர்.

கிட்டு தனது ‘வோக்கி டோக்கியில்’ வாசுவை அழைத்தார்-பதில் இல்லை.

கேடில்ஸை கூப்பிட்டார். பதில் வரவேயில்லை. பின்னர் ஜொனியைத் தெடர்பு கொண்டார். பதில் கிடைத்தது. சத்தம் கேட்ட இடத்திற்கு ஜோனியை செல்லுமாறு கூறினார் கிட்டு.

ஜொனி அங்கு விரைந்தார்.

அவர் கண்ட காட்சி பயங்கரமானது.

பவுசர் நின்ற இடத்தில் பெரிய குழி ஒன்று இருந்தது. பவுசரைக் காணவில்லை.

அந்த குழிக்கு அருகில் ஒரு கார் நொறுங்கிக் கிடந்தது. அது கேடில்ஸ் பயன்படுத்திய கார்.

அதற்கு 50 யார் தூரத்தில் லொறி ஒன்று நின்றது. அதற்குள் எட்டிப் பார்த்தார் ஜொனி. உள்ளே புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஐந்துபேர் இறந்து கிடந்தனர்.

பின்னர் கிட்டுவும் அங்கு சென்றார். பொன்னம்மான், வாசு, கேடில்ஸ் ஆகியோர் எங்கே? அவர்களது உடல்களைக் காண முடியவில்லை.

வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கிடைத்தன. கேடில்ஸ் அணிந்திருந்த காற்சட்டையின் ஒரு பகுதி கிடைத்தது.

பொன்னம்மானின் உடலோ, அல்லது அவர் தொடர்பான எந்தத் தடயமோ கிடைக்கவில்லை.

பொதுமக்கள் பலி

பவுசர் வெடித்த இடத்தை சுற்றியிருந்த வீடுகளும் தரைமட்டமாகியிருந்தன.

குறைந்தது 50 பொதுமக்களாவது பலியானார்கள்.

எங்கும் ஒரே மரண ஓலம். சம்பவம் நடைபெற்ற இடத்தின் பக்கம் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.

புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 10 பேர் பலியானார்கள்.

லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் (அற்புதன்-குகன்), மேஜர் கேடில்ஸ் (திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப்டினன்ட் சித்தார்த் (வசீகரன்), இரண்டாவது லெப்டினன்ட் பரன் (அர்ச்சுனன்), யோஸே; (பாலன்), கவர் (நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன் (மோகனலிங்கம்), தேவன் (வசந்தகுமார்) ஆகியோரே பலியான புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர்.

பொதுமக்கள்  பலியானது  தொடர்பான விபரங்கள் பெரியளவில் வெளியே தெரியாமல் தடுத்துவிட்டனர் புலிகள்.

கைதடியில் பவுசர் வெடித்த செய்தியை அறிந்து நாவற்குழி இராணுவ முகாமுக்குள் நிம்மதிப் பெருமூச்சுக்கள்.

கைதடியில் வெடித்திருக்காவிட்டால்  தமது கதி என்னாகியிருக்கும் என்பதை அவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்கள் தானே!

முதன் முதலில் புலிகள் இயக்கத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்து அதுதான். துவாரத்தை அடைக்க வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட தவறுதல்தான் விபத்துக்குக் காரணம் என்று நம்பப்பட்டது.

எனினும் சம்பவத்தை நேரில் கண்ட எவருமே உயிருடன் இல்லை. அதனால் விபத்து ஏற்பட்டவிதத்தை உறுதியாகக் கூறக்கூடிய சாட்சியம் கிடைக்கவில்லை.

பொன்னம்மானின் இழப்பு புலிகள் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியில் பிரபாகரனுக்கும் பெரும் கவலை கொடுத்த இழப்பாகும்.

பொன்னம்மான் யாழ்-இந்துக் கல்லூரியின் கெட்டிக்கார மாணவன். 1975ம் ஆண்டளவில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார்.

உமையாள்புரம் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர். திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் பலியான தாக்குதலிலும் பொன்னம்மான் பங்கு கொண்டவர்.

இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்கிய போது, புலிகளின் அணிக்கு தலைமை தாங்கிச் சென்றவர் பொன்னம்மான்.

அவரது தலைமையில் பயிற்சி பெற்றவர்களில் கிட்டு, விக்ரர், புலேந்திரன், சூசை, பொட்டம்மான், கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் உட்பட முக்கியமானவர்கள் அடங்குவர்.

(தொடர்ந்து வரும்)

எழுதுவது அற்புதன்

Link to comment
Share on other sites

  • 11 months later...
On 17/04/2016 at 2:51 PM, பெருமாள் said:

தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் வருகை: கிட்டுவை யாழிலிருந்து மாற்ற திட்டம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-77)

ponnamman.jpg

ஊர் பிரச்சனை:  பொதுமகன் ஒருவரை ‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் சுட்டுகொலை செய்த புலிகள்!!

யாழ்ப்பாணத்திற்கு பிரபாகரன் வருவதற்கிடையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது:

யாழ்ப்பாணம் பாஷையூரில்  ஒரு  குடும்ப  உறவினர்கள் மத்தியில் தகராறு. அவர்களில் ஒருவர் சென்று புலிகளிடம் முறையீடு செய்தார்.

அப்போது புலிகள் அமைப்பின் பாசையூர் பொறுப்பாளராக இருந்தவர் மலரவன். அவர் நேரடியாகச் சென்று முறைப்பாட்டை விசாரித்தார்.

மலரவன் விசாரணை செய்த முறை சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்று நினைத்தனர்.

எட்வேட் என்பவர் மலரவனோடு வாக்குவாதப் பட்டார். மலரவனுக்கு கோபம் வந்துவிட்டது. எட்வேட்டுக்கு ஒரு அடி அடித்துவிட்டார்.

எட்வேட் கடற்தொழிலாளி. வாட்டசாட்டமானவர். அவரும் திரும்பி மலரவனுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டார். பின்னர் ஊர் மக்கள் சிலர் இருவரையும் விலக்கி வைத்தனர்.

மலரவன் முகாமுக்குச் சென்றார். தனது ஆட்களை வேனில் அனுப்பி, “எட்வேட்டை பிடித்துத்வாருங்கள்” என்று உத்தரவு போட்டிருந்தார்.

எட்வேட் ஒளிற்துவிட்டார். “உடனடியாக எட்வேட் சரணடையவேண்டும். இல்லாவிட்டால் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுவோம்” என்று புலிகள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.

பாசையூர் அந்தோனியார் கோவில் குருவானவரிடம் சென்று அடைக்கலம் தேடினார் எட்வேட். குருவானவர் புலிகளுடன் தொடர்பு கொண்டார்.

“எட்வேட்டை மக்கள் முன்பாக வைத்து விசாரியுங்கள்.” என்றார் குருவானவர். மலரவன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

“எட்வேட்டை எங்களிடம் ஒப்படையுங்கள். விசாரித்துவிட்டு உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறோம்” என்றார் மலரவன்.

குருவானவர் பாசையூர் மக்களிளோடு பேசினார். “எட்வேட்டுக்கு நான் பொறுப்பு. புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு, விடுதலை செய்து தருகிறேன்” என்றார்.

அரியாலையில்  உள்ள புலிகளின் முகாமில் எட்வேட்டை ஒப்படைத்தார் குருவானவர்.  குருவானவர் திரும்பிச்சென்றதும் எட்வேட்டை கட்டிவைத்து அடித்தார் மலரவன்.

‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் வைத்து தேய்த்தார். துடிதுடித்துப் போனார் எட்வேட். அடி உதை தொடர்ந்தது. இறுதியில் எட்வேட் இறந்துபோனார்.

எட்வேட்டின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த மலரவன், ஒரு நிபந்தனையும் விதித்தார். “இரண்டு மணித்தியாலங்களுக்குள் புதைக்கவேண்டும்” என்பதுதான் நிபந்தனை.

எட்வேட் இறந்த செய்தியறிந்து குருவானவர் வாய்விட்டுக் கதறினார். பாசையூர் மக்கள் கொதித்தனர். குருவானவர் தலைமையில் பாசையூர்  அந்தோனியார் கோவில் விறாந்தையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

வீதிக்கு குறுக்கே தடைகளைப்போட்டு மறியல் போராட்டமும் செய்தனர்.  எட்வேட்டுக்கு இரண்டு பிள்ளைகள். மனைவியும், பிள்ளைகளும் கதறியழுது கொண்டிருந்தனர்.

எட்வேட்டின் உடலில் நெருப்புச் சூட்டுக் காயங்களும், அடி காயங்களும் காணப்பட்டன.

மலரவன்மீது கிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மலரவன் கிட்டுவின் தீவிர விசுவாசி.

இச்சம்பவத்தின் பின்னர் நாவற்குழியில் நடைபெற்ற இராணுவத் தாக்குதல் ஒன்றில் கை ஒன்றை இழந்தார் மலரவன். தற்போது இயக்கத்தில் இருந்து வெளியேறி வெளிநாடொன்றில் இருக்கிறார்.

தமிழ் நாட்டில் இருந்து பிரபாகரன் வந்தார் 

ஈரோஸ் தவிர ஏனைய இயக்கம்கள் யாவும் தடை செய்யபட்ட நிலையில்தான் பிரபாகரன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் .
பிரபாகரனுடன் பொன்னம்மானும் வந்த சேர்ந்தார்  தமிழ் நாட்டில் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர் பொன்னம்மான் .
அவர் குகன் என்றும் அழைப்பார்கள் புலிகள் இயக்கத்தில் இருந்த யோகரத்தினம் யோகியின் சகோதரர் பொன்னம்மான் .
யாழ்ப்பாண தளபதியாக பொன்னம்மானை நியமித்துவிட்டு கிட்டுவை மன்னார் தளபதியாக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருந்ததாகவும் அப்போது புலிகள் 
இயக்க உறுப்பினர்கள் பேசிக்கொண்டனர் .
அதனை உறுதிசெய்வது போல் நாவற்குழி இராணுவமுகாம் தாக்குதலுக்கு திட்டமிட்டார் பிரபாகரன் .
யாழ் தளபதியாக கிட்டு இருந்தும் நாவற்குழி இராணுவமுகாம் தாக்குதலுக்கான பொறுப்பை பொன்னம்மானிடம்  கொடுத்தார் பிரபாகரன் .
அதனால் கிட்டுவுக்கும் அவரது விசுவாசிகளுக்கும் மனக்கசப்புதான் அதனை வெளியில் காட்டி கொள்ளாதவாறு நடந்துகொண்டனர் .
பிரபாகரன்  வருவதட்க்குமுன் யாழ்பாணத்தில் கிட்டு தலைமையில்தான் தாக்குதல்கள் நடத்தபட்டன அதன்மூலம் கிட்டுவின் பெயரும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியிருந்தன .
நீண்ட காலத்தின் பின் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தமையினால் நாவற்குழி இராணுவமுகாம் தாக்குதலை தனது நேரடி கண்காணிப்பில் நடத்த பிரபாவும் விரும்பினார் .
 

திட்டம் வகுக்கப்பட்டது

நாவற்குழி இராணுவ முகாமுக்குத் தேவையான குடி தண்ணீர் கைதடியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பவுசரில் எடுத்துச் செல்லப்படும்.

கிணறு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்தான் இருந்தது. பவுசரும் வெளியாருக்குச் சொந்தமானது.

அந்த பவுசர் வண்டிக்குள் வெடி மருந்தை நிரப்பி அனுப்புவதுதான் திட்டம். பவுசர் சாரதியும் துணிந்து முன்வந்து புலிகளின் திட்டத்துக்கு ஒத்துழைக்க இணங்கினார்.

வெடிமருந்து நிரப்பப்பட்ட பவுசரை வழக்கம்போல முகாமுக்குள் கொண்டுசெல்ல வேண்டும். முகாமுக்குள் சென்றதும் பவுசரை விட்டுவிட்டு சாரதி இறங்கி ஓடிவிட வேண்டும்.

பவுசர் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. கீழ்ப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்படும். மேல் பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்.

முகாம் வாசலில் உள்ளவர்கள் பவுசரின் மேலே ஏறி மூடியைத் திறந்து பார்த்து விட்டுத்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

பொன்னம்மான் வெடிமருந்துகளை கையாள்வதில் தேர்ச்சியானவர். பவுசருக்கு வெடிமருந்தை நிரப்பும் வேலையை அவர்தான் செய்தார்.
சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ் பொன்னம்மானுக்கு உதவினார். நாவற்குழி இராணுவ முகாம் சாவகச்சேரி பகுதியில் இருந்தமையால் முகாமை வேவு பார்க்கும் வேலைகளை கேடில்ஸின் பொறுப்பில் இருந்தவர்களே கவனித்தனர்.

ரஞ்சன் என்னும் பொறியியலாளரும் புலிகளுக்கு உதவினார்.

புலிகள் முதன் முதலாக விமானமொன்றைத் தயாரிக்க முற்பட்டபோது, அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் ரஞ்சனும் ஒருவர்.

14.2.87 அன்றுதான் நாவற்குழி இராணுவ முகாமை தாக்குவது என்று திட்டமிடப்பட்டது.

பகலில் தாக்குதல் நடத்துவதைவிட இரவில் நடத்துவதே கெரில்லாக்களுக்கு வாய்ப்பு. பகலில் என்றால் விமானத்தாக்குதலுக்கு சுலபமாக இரையாகவேண்டி இருக்கும்.

ஆனாலும் ஒரு சிக்கல். மாலை 6.30 மணிக்குப் பின்னர் இராணுவ முகாமுக்குள் பவுசர் செல்ல அனுமதி கிடையாது.  எனவே 6.30 மணிக்கு பவுசர் உள்ளே சென்றாக வேண்டும். அதன்பின்னர் ஒரு மணி நேரத்தில் இருட்டிவிடும் என்பதால் பின்னர் பிரச்சனை இருக்காது.

lt_col_santhosam-4  தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் வருகை: கிட்டுவை  யாழிலிருந்து மாற்ற திட்டம்!!  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-77) lt col santhosam 4
முகாமை குறிவைத்து தயாரான வெடிகுண்டு பவுசர்

13.2.87 இரவு பவுசருக்கு வெடிமருந்து நிரப்பும் வேலை நடைபெற்றது. பொன்னம்மான், ரஞ்சன், புலிகளது உளவுப்பிரிவு பொறுப்பாளர் வாசு ஆகியோர் இரவிரவாக வெடிமருந்தை நிரப்பினார்கள்.

14.2.87 அதிகாலை வெடிமருந்து நிரப்பப்பட்ட நிலையில் பவுசர் தயாரானது.  அசதி காரணமாக பொன்னம்மான் பவுசருக்கு அருகில் தூங்கிவிட்டார்.

மற்றொரு பகுதியில் மூன்று பெரிய லொறிகள் தயார் செய்யப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும், மூன்று லொறிகளும் முகாமுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவர், வாயில் காவல் அரணை உடைத்தெறிவார்.

சூசை, ஜொனி, கேடில்ஸ் மூவரும் உள்ளே செல்லும் மூன்று குழுக்களுக்கும் தலைமை கொடுக்க வேண்டும். திட்டம் அதுதான்.

யாழ் தளபதி என்றரீதியில் ஆட்களை தெரிவுசெய்து கொடுத்தார் கிட்டு.

சகல ஏற்பாடுகளும் ரெடியாகிக் கொண்டிருந்தன. வெடிமருந்து நிரப்பப்பட்ட பவுசர் பொன்னம்மானின் உத்தரவு கிடைத்ததும் புறப்படவேண்டும்.

நேரம் மாலை ஐந்துமணி. அப்போது பவுசரில் இருந்து தண்ணீர் ஒழுகியதை ஒருவர் கண்டுவிட்டார். அதனை பொன்னம்மானும் கவனித்துவிட்டார். பொறியியலாளர் ரஞ்சனை அழைத்து வந்து, ஒழுகுவதை நிறுத்துமாறு கூறினார் பொன்னம்மான்.

ஒழுகுவதை நிறுத்த வேண்டுமானால் ‘வெல்டிங்’ செய்ய வேண்டும். நேரமோ நெருங்கிக் கொண்டிருந்தது.

அவரச அவசரமாக ‘வெல்டிங்’ செய்து பவுசரில் ஏற்பட்ட துவாரத்தை அடைக்கத் தொடங்கினார் ரஞ்சன்.

பூமி அதிர்ந்தது.

நேரம் 5.15. ‘வெல்டிங்’ நடந்து கொண்டிருந்தது. நேரம் 5.30ஐ நெருங்கியது. இன்னும் கொஞ்ச நேரம்தான். ரஞ்சனின் அவசரம் அதகரித்தது.

நேரம் 5.30 மணி.

யாழ்ப்பாணமே குலுங்கியது.

பாரிய வெடிச்சத்தம்

அப்படி வெடிச்சத்தத்தையும், பூமியதிர்ச்சி போன்ற தாக்கத்தையும் யாழ் மக்கள் அதற்கு முன்னர் சந்தித்ததில்லை.

தாக்குதலுக்கு புறப்பட இருந்த உறுப்பினர்களுக்கு ஒரே குழப்பம்ஃ

தமக்கு அறிவிக்காமலேயே முகாமுக்குள் பவுசரை அனுப்பி வெடிக்கவைத்து விட்டார்களோ? என்று நினைத்தனர்.

கிட்டு தனது ‘வோக்கி டோக்கியில்’ வாசுவை அழைத்தார்-பதில் இல்லை.

கேடில்ஸை கூப்பிட்டார். பதில் வரவேயில்லை. பின்னர் ஜொனியைத் தெடர்பு கொண்டார். பதில் கிடைத்தது. சத்தம் கேட்ட இடத்திற்கு ஜோனியை செல்லுமாறு கூறினார் கிட்டு.

ஜொனி அங்கு விரைந்தார்.

அவர் கண்ட காட்சி பயங்கரமானது.

பவுசர் நின்ற இடத்தில் பெரிய குழி ஒன்று இருந்தது. பவுசரைக் காணவில்லை.

அந்த குழிக்கு அருகில் ஒரு கார் நொறுங்கிக் கிடந்தது. அது கேடில்ஸ் பயன்படுத்திய கார்.

அதற்கு 50 யார் தூரத்தில் லொறி ஒன்று நின்றது. அதற்குள் எட்டிப் பார்த்தார் ஜொனி. உள்ளே புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஐந்துபேர் இறந்து கிடந்தனர்.

பின்னர் கிட்டுவும் அங்கு சென்றார். பொன்னம்மான், வாசு, கேடில்ஸ் ஆகியோர் எங்கே? அவர்களது உடல்களைக் காண முடியவில்லை.

வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கிடைத்தன. கேடில்ஸ் அணிந்திருந்த காற்சட்டையின் ஒரு பகுதி கிடைத்தது.

பொன்னம்மானின் உடலோ, அல்லது அவர் தொடர்பான எந்தத் தடயமோ கிடைக்கவில்லை.

பொதுமக்கள் பலி

பவுசர் வெடித்த இடத்தை சுற்றியிருந்த வீடுகளும் தரைமட்டமாகியிருந்தன.

குறைந்தது 50 பொதுமக்களாவது பலியானார்கள்.

எங்கும் ஒரே மரண ஓலம். சம்பவம் நடைபெற்ற இடத்தின் பக்கம் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.

புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 10 பேர் பலியானார்கள்.

லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் (அற்புதன்-குகன்), மேஜர் கேடில்ஸ் (திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப்டினன்ட் சித்தார்த் (வசீகரன்), இரண்டாவது லெப்டினன்ட் பரன் (அர்ச்சுனன்), யோஸே; (பாலன்), கவர் (நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன் (மோகனலிங்கம்), தேவன் (வசந்தகுமார்) ஆகியோரே பலியான புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர்.

பொதுமக்கள்  பலியானது  தொடர்பான விபரங்கள் பெரியளவில் வெளியே தெரியாமல் தடுத்துவிட்டனர் புலிகள்.

கைதடியில் பவுசர் வெடித்த செய்தியை அறிந்து நாவற்குழி இராணுவ முகாமுக்குள் நிம்மதிப் பெருமூச்சுக்கள்.

கைதடியில் வெடித்திருக்காவிட்டால்  தமது கதி என்னாகியிருக்கும் என்பதை அவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்கள் தானே!

முதன் முதலில் புலிகள் இயக்கத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்து அதுதான். துவாரத்தை அடைக்க வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட தவறுதல்தான் விபத்துக்குக் காரணம் என்று நம்பப்பட்டது.

எனினும் சம்பவத்தை நேரில் கண்ட எவருமே உயிருடன் இல்லை. அதனால் விபத்து ஏற்பட்டவிதத்தை உறுதியாகக் கூறக்கூடிய சாட்சியம் கிடைக்கவில்லை.

பொன்னம்மானின் இழப்பு புலிகள் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியில் பிரபாகரனுக்கும் பெரும் கவலை கொடுத்த இழப்பாகும்.

பொன்னம்மான் யாழ்-இந்துக் கல்லூரியின் கெட்டிக்கார மாணவன். 1975ம் ஆண்டளவில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார்.

உமையாள்புரம் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர். திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் பலியான தாக்குதலிலும் பொன்னம்மான் பங்கு கொண்டவர்.

இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்கிய போது, புலிகளின் அணிக்கு தலைமை தாங்கிச் சென்றவர் பொன்னம்மான்.

அவரது தலைமையில் பயிற்சி பெற்றவர்களில் கிட்டு, விக்ரர், புலேந்திரன், சூசை, பொட்டம்மான், கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் உட்பட முக்கியமானவர்கள் அடங்குவர்.

(தொடர்ந்து வரும்)

எழுதுவது அற்புதன்

   தொடராதோ ???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் அதுக்கு முதல் சில பிரச்சனைகள் முடிக்கவேணும் தடங்கலுக்கு மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

 

42 minutes ago, பெருமாள் said:

தொடரும் அதுக்கு முதல் சில பிரச்சனைகள் முடிக்கவேணும் தடங்கலுக்கு மன்னிக்கவும் 

சகோதர படுகொலைகள் கிட்டுவால் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு செய்யப்பட்டவையா அல்லது தலைவர் பிரபாகரனின் கட்டளையின் பேரில் மேற்கொள்ளப்பட்டவையா ?

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் கிழக்கினை சேர்ந்தவர்களா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.