Jump to content

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்


Recommended Posts

தவான் காயத்தை தோல்விக்கு ஒரு காரணமாகக் கூறக்கூடாது: சுனில் கவாஸ்கர்
 

 

பிரிஸ்பன் டெஸ்ட் 4ஆம் நாள் ஆட்டத்தில் இன்று ஷிகர் தவன் காயம் காரணமாக தொடக்கத்தில் களமிறங்க முடியாமல் போனது. அதனை தோனி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு, தோல்விக்கு அதனை ஒரு காரணமாக்கக் கூடாது என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

"ஷிகர் தவன் காயத்தை தோல்விக்கு ஒரு சாக்குபோக்காகக் கூறக்கூடாது, கடந்த 2 இன்னிங்ஸ்களில் சதம் எடுத்த (விராட் கோலி) ஒரு வீரர் 7 நிமிடங்களில் போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

 

அவர் மேலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சரிசமமாக இந்திய வீரர்கள் வாய்ப்பேச்சில் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார்.

“ஆஸ்திரேலிய வீரர்களுடன் இந்திய வீரர்கள் பதிலுக்கு பதில் வாய்ப்பேச்சில் ஈடுபடக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இந்தியாவில் கிளப் மட்ட கிரிக்கெட்டில் கூட ஸ்லெட்ஜிங் போன்றவை இல்லை. நமக்கு அது பழக்கம் கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை அப்படி ஆடியே பழக்கப்பட்டவர்கள். எனவே அவர்களிடத்தில் இது செல்லுபடியாகாது.

 

ஆனால் இந்தியர்களான நமக்கு ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஆழமாக பதிந்து விடும். நாம் அதை வெளியே துரத்த நினைத்தாலும் அது நம் மனதில் தங்கும். அப்படி மனதில் தங்கிவிடும் போது அது ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆஸ்திரேலிய வசைக்கு பதிலடி கொடுப்பது என்பது புத்திசாலித் தனமான நடைமுறை அல்ல. நாம் ஆக்ரோஷம் பற்றி பேசுகிறோம், ஆனால் அது ஆக்ரோஷமான நோக்கத்தை தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.

 

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியர்கள் வசை, கேலி போன்றவற்றில் அவ்வளவாக ஈடுபடவில்லை. பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகே அவர்கள் இந்த விவகாரத்தில் புதிய பக்கத்தை புரட்டத் தொடங்கியுள்ளனர். இதற்காக அந்த அணியை நான் பாராட்டுகிறேன்.

 

கிரிக்கெட் போட்டியில் அவர்கள் இப்போது ஆடுவது போல்தான் ஆடவேண்டும்.

இந்திய பவுலர்கள் செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. பிரிஸ்பன் பிட்சை இவர்கள் சரியாக பயன்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலிய பிட்ச்கள் 3ஆம் நாள் மற்றும் 4ஆம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் பிடியை நழுவ விட்டு ஒரு அணியை 500 ரன்கள் அடிக்கவிட்டால் அது எப்படி நல்ல பவுலிங் ஆகும்?

ஆனாலும், இந்த முறை 4-0 ஒயிட்வாஷ் இருக்காது என்றே நான் கருதுகிறேன்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article6711314.ece

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

கேப்டனாக தோனி 8 முறை ‘டக்’ அவுட் : பிரிஸ்பன் டெஸ்ட் புள்ளி விவரங்கள்
 

 

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் எதிரணியினர் 400 ரன்களுக்கும் மேல் முதல் இன்னிங்சில் அடித்த தருணங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை என்ற நிலவரம் ஸ்மித் தலைமை வெற்றியினால் மாறியுள்ளது.

 

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் சில சுவையான தகவல்கள்:

இந்திய கேப்டனாக தோனி டெஸ்ட் போட்டிகளில் 8-வது முறையாக ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளார் இன்று அவர் ஜோஷ் ஹேசில்வுட் ஸ்விங்கை தவிர்க்க மேலேறி வந்து ஆட முயன்றார். ஆனால் ஹேசில்வுட் மிடில் ஸ்டம்பில் நேராக ஒரு பந்தை வீச தோனி மேலேறி வந்ததால் தன்னைத் தானே யார்க் செய்து கொண்டார் பந்து பேடில் பட நடுவர் அவுட் என்றார்.

 

இதன் மூலம் ஒரு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அதிக டக் அவுட்களை சந்தித்த வீரரானார் தோனி. மொத்தத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் தன் கேப்டன்சி காலத்தில் 10 முறையும், நியூசிலாந்தின் கேப்டனாக இருந்த காலத்தில் ஸ்டீவன் பிளெமிங் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர். ஆகவே, தோனி இதில் 3ஆம் இடம் பிடித்துள்ளார்.

கேப்டன்சியில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்டீவன் ஸ்மித் அந்த வகையில் 9-வது கேப்டனாகத் திகழகிறார். இதற்கு முன்னதாக அனில் கும்ளே, பிரெண்டன் டெய்லர், கிரெக் சாப்பல், இம்ரான் கான், கெவின் பீட்டர்சன், சந்தர்பால், ஷாகிப் அல் ஹசன், வக்கார் யூனிஸ் ஆகியோர் முதல் டெஸ்ட் கேப்டன்சியில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்கள்.

 

2-வது இன்னிங்ஸில் ஷேன் வாட்சன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவரது விக்கெட்டை டெஸ்ட் போட்டிகளில் 6-வது முறையாகக் கைப்பற்றியுள்ளார் இசாந்த் சர்மா. ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 முறையும், ஸ்டூவர்ட் பிராட் 7 முறையும் ஷேன் வாட்சனை வீழ்த்தியுள்ளனர்.

தொடர்ந்து 9-வது டெஸ்டாக இந்தியா 100 ரன்கள் அல்லது அதற்கு குறைவான ரன்களில் 5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை மடமடவென இழந்துள்ளனர். இன்று பிரிஸ்பனில் 71/1 என்ற நிலையிலிருந்து 117/6 என்று சரிந்தனர்.

 

46-வது இன்னிங்சில் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று 2,000 ரன்களைக் கடந்துள்ளார். ராகுல் திராவிட் 40 இன்னிங்ஸ்களில் முதல் 2000 டெஸ்ட் ரன்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் ரன் விகிதம் 4.12. ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் இதுவே அதிக ரன் விகிதம். ஒட்டுமொத்தமாக 9-வது உயர்ந்த ரன் விகிதம் ஆகும் இது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-8-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6711170.ece

Link to comment
Share on other sites

வாய்ச்சொல் வீரன்’
டிசம்பர் 21, 2014.

ஆஸ்திரேலியா சென்ற ரோகித் சர்மா, ‘இங்கு நாங்கள் வெற்றி பெறவே வந்துள்ளோம், ஆஸ்திரேலிய அணியை தோற்கடிப்போம்,’ என்றெல்லாம் வீர வசனம் பேசினார். வழக்கம் போல கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்டு ரசிகர்களை வெறுப்பேற்றுகிறார்.

இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, 27. ஒருநாள் அரங்கில் இரு முறை (209, 264) இரட்டை சதம் அடித்த உலகின் ஒரே வீரர் இவர் தான். டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க முழுமையான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பினார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் காயமடைந்து திரும்ப, இரண்டு மாதம் ஓய்வில் இருந்தார். இதில் இருந்து மீண்டு வந்த இவர், இலங்கை அணிக்கு எதிரான கோல்கட்டா ஒருநாள் இரட்டை சதம் (264) அடித்து மிரட்டினார்.

 

மீண்டும் வாய்ப்பு:

வேறு வழியில்லாத நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றார். அப்போது கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய மண்ணுக்கு நாங்கள் வெற்றி பெறவே வந்துள்ளோம், அந்த அணியை வீழ்த்துவோம்,’’ என, முதல் டெஸ்டில் கேப்டனாக செயல்பட்ட கோஹ்லியை விட அதிகமாக வீர வசனம் பேசினார்.

 

மறுபடியும் சொதப்பல்:

கடைசியில் அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 43 ரன்னுக்கு, பொறுப்பற்ற முறையில் அவுட்டானார்.

இரண்டாவது இன்னிங்சில் கோஹ்லி, முரளி விஜய் இணைந்து, பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பந்துகளை பேடு மற்றும் உடலில் வாங்கி தடுத்து விளையாடி, இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.

 

உணர வேண்டும்:

இதுபோன்ற எவ்வித திறமையும் வெளிப்படுத்தாத ரோகித், 6 ரன்னுக்கு அவுட்டாகி, ரசிகர்களை வெறுப்பேற்றினார். ஒருவேளை பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டும் தான் இந்த ‘வாய்ச்சொல் வீரனால்’ ரன்குவிக்க முடியும் போல.

இதே நிலை தொடரும் பட்சத்தில், இவரது இடத்தை பிடிக்க நிறைய வீரர்கள் களத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர் என்பதை ரோகித் உணர வேண்டும். இல்லையென்றால் சிக்கல் தான்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419143997/rohitindiacricket.html

Link to comment
Share on other sites

இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்
டிசம்பர் 21, 2014.

 

பிரிஸ்பேன்: ஐ.சி.சி., நடத்தை விதிமுறையை மீறிய இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.            

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த  இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தோற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை இந்தியாவின்  இஷாந்த் சர்மா அவுட்டாக்கினார். அப்போது ஸ்மித்தை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) நடத்தை விதிமுறையை மீறிய செயல். இத்தவறை இஷாந்த் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.   

  

சிக்கலில் ஸ்மித்: இதே போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசவில்லை. 3 ஓவர் வரை தாமதமாக பந்துவீசியது. இதற்காக கேப்டன் என்ற முறையில் ஸ்டீவன் ஸ்மித்திற்கு போட்டி சம்பளத்திலிருந்து 60 சதவீதம் மற்றும் சக வீரர்களுக்கு 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அடுத்த 12 மாதங்களில் அணி தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் மீண்டும் ஸ்மித் சிக்கினால், ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419176488/IndiaAustraliaTestCricketIshantSharmaStevenSmithFineICC.html

Link to comment
Share on other sites

நடுவர்கள் செயல்பாடு நன்றாகவே உள்ளது: தோனியை சூசகமாக மறுக்கும் லயன்
 

 

நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் நடுவர்களின் தீர்ப்பில் சீரற்ற தன்மை இருப்பதாக தோனி கூறியிருந்தார், அதனை சூசகமாக மறுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன்.

2 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 5 தீர்ப்புகளினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய கேப்டன் தோனி நடுவர்களின் தரம் உயர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கூறிய நேதன் லயன், நடுவர் தீர்ப்புகளை முன்வைத்து வீரர்கள் உணர்ச்சிவசப்படுதல் கூடாது என்றார், “நாம் உணர்ச்சிகளை களத்தில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஓரிரு தீர்ப்புகள் இருதரப்பினருக்கும் சாதகமாக இல்லை என்பதால் கொஞ்சம் பதட்டம் நிலவியது. ஆனால் அதுதான் டெஸ்ட் கிரிக்கெட். களத்தில் நிறைய உணர்ச்சிகர வெளிப்பாடுகள் நிகழ்ந்தன. நாம் பொறுமையாக இருந்து நமது வழியில் கவனம் செலுத்த வேண்டும், நடுவர் தீர்ப்புகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில் பயனில்லை.

 

நடுவரக்ள் ஓரளவுக்கு நன்றாகவே செயலாற்றுவதாகவே நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நடுவர்களுக்குமே பதட்டம் இருந்தது.

அடிலெய்ட் போட்டியில் டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் முடிவுகள் வேறுமாதிரி அமைந்திருக்கும். மேலும் எங்களுக்கு சாதகமாகக் கூட டி.ஆர்.எஸ் அமைந்திருக்கும். டி.ஆர்.எஸ். முறை அவசியமானது, இரு அணிகளுக்குமே அது நல்லதுதான்”என்றார் லயன்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article6715790.ece

Link to comment
Share on other sites

ஆஸி. செல்ல கிரிக்கெட் அணி வீரர்களின் மனைவிகளுக்கு அனுமதி, காதலிகளுக்கு தடை: பிசிசிஐ

 

டெல்லி: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் மனைவிகள் அங்கு செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் காதலிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்னும் அமலில் உள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் கிரிக்கெட் வீரர்களுடன் காதலிகள் செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

 

அணி வீரர்களை ஊக்குவிக்க அவர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் காதலிகள் செல்ல அனுமதி கிடையாது. ஆஸி. செல்ல கிரிக்கெட் அணி வீரர்களின் மனைவிகளுக்கு அனுமதி, காதலிகளுக்கு தடை: பிசிசிஐ இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது தான் திருமணம் செய்யப் போகும் பெண் என்று கூறி தனது காதலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை விராத் கோஹ்லி அழைத்துச் சென்றார். தற்போது அனுஷ்கா ஆஸ்திரேலியா சென்று கோஹ்லியுடன் இருக்க முடியாது.

 

கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவையடுத்து டோணி, ஷிகார் தவான், முரளி விஜய், பூஜாரா, அஸ்வின், உமேஷ் யாதவ் உள்ளிட்டோரின் மனைவிகள் விரைவில் மெல்போர்ன் செல்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி திண்டாடி வரும் வேளையில் அணி வீரர்களின் மனைவிகள் அங்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/wives-allowed-shore-up-team-india-s-morale-girlfriends-still-banned-report-217567.html

Link to comment
Share on other sites

2வது டெஸ்ட்டில் தோற்றதற்கு, டோணியிடம் ஒரு காரணம் அல்ல.. 10 காரணம் இருக்கு!

 

பிரிஸ்பேன்: 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கை நன்றாக ஓங்கி அதே வேகத்தில் டமாரென்று சரிந்து போன அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அந்த "டமாருக்கு" பல காரணங்கள் இருக்கு பாஸ் என்று கூறி காரணங்களையும் பட்டியல் இட்டுள்ளார் கேப்டன் டோணி.

 

முன்பெல்லாம் பிட்ச் சரியில்லை, வெதர் சரியில்லை, வெஞ்சனம் சரியில்லை, நடுவர் சரியில்லை, நாடு சரியில்லை என்று தோல்விகளுக்கு சிம்பிளாக ஏதாவது காரணத்தைச் சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் நம்மவர்கள்.

 

2வது டெஸ்ட்டில் தோற்றதற்கு, டோணியிடம் ஒரு காரணம் அல்ல.. 10 காரணம் இருக்கு! ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே "முதல் முறையாக" கேப்டன் டோணி 10 காரணங்கள் இருக்கிறது என்று கூறி அவற்றை வரிசையாக வரிசைப்படுத்தி அசத்தியுள்ளார்.!

 

பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நன்றாகவே விளையாடியது. முரளி விஜய் அழகான சதம் அடித்தார். ஆனால் பின்னால் வந்தவர்கள் சொதப்பினர். இருப்பினும் 400க்கு மேல் ரன்களைக் குவித்தது இந்தியா. ஆனால் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி நல்ல லீட் எடுத்து விட்டது. அதன் பின்னர் இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடி வந்த நிலையில் பெரும் குழப்பங்கள் நடந்தேறி விட்டன. இதனால் 224 ரன்களுக்கு சுருண்டு போனது இந்தியா. இந்த எதிர்பாராத திருப்பத்தால் 128 ரன்கள் எடுத்தால் போதும் என்ற சிம்பிளான இலக்குடன் ஆஸ்திரேலிய அணியினர் அடித்து நொறுக்கி போட்டியிலும் வென்று விட்டனர்.

 

தற்போது 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது ஆஸ்திரேலியா. 3வது போட்டி மல்போர்ன் நகரில் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், பிரிஸ்பேன் தோல்விக்கான காரணத்தை சொல்லியுள்ளார் டோணி. அதில் 10 முக்கியமான காரணங்கள்....

 

1. ஷிகர் தவன் காயமடைந்தது தொடர்பாக டிரஸ்ஸிங் ரூமில் ஏற்பட்ட குழப்பம், அசாதாரண சூழல்.

 

2. 4வது நாள் ஆட்டத் தொடக்கத்திற்கு முன்பாக தவனுக்கு ஏற்பட்ட காயம்.

 

3. மோசமான பிராக்டிஸ் பிட்ச் காரணமாக தவன் காயமடைந்தது.

 

4. 4வது நாள் ஆட்டத்தின்போது 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது சரியான பார்ட்னர்ஷிப் ஏற்படாமல் போனது.

 

5. 4வது நாள் ஆட்டத்தின்போது முதல் பாதி ஆட்டத்தில் நாம் பிரகாசிக்காமல் போனது.

 

6. 5வது நாள் ஆட்டம் வரை போட்டி நீடிக்காமல் போக விட்டது.

 

7. 5வது நாள் ஆட்டம் வரை போயிருந்தால் வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு நாம் ஏதாவது செய்திருக்கலாம்.

 

8. மிட்சல் ஜான்சன் 88 ரன்களைக் குவித்தது. இந்தியாவின் 2வது இன்னிங்ஸின்போது அவர் முக்கியமான விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது.

 

9. ஜான்சன் அடித்த பல பந்துகள் கேட்ச் ஆகும் நிலை இருந்தபோதும் ஷார்ட்டாக வந்து விழுந்ததால் நம்மால் பிடிக்க முடியாமல் போனது.

 

10. நடுவர்களின் தீர்ப்பும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது டோணி சொல்லும் காரணங்கள்.. உங்களுக்கு வேறு காரணம் ஏதாவது தோன்றுகிறதா...?

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ms-dhoni-s-10-reasons-2nd-test-defeat-brisbane-217524.html

Link to comment
Share on other sites

காயமடைந்த ஜடேஜாவுக்கு பதிலாக டெஸ்ட் அணியில் அக்‌ஷர் படேல் சேர்ப்பு
 

 

தோள்பட்டை காயம் காரணமாக இந்தியா திரும்பும் ஆல்ரவுண்கர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷர் படேல் குஜராத்தைச் சேர்ந்த இடது கை பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரது ஆட்டம் பலரையும் வியக்க வைத்ததால் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

 

வங்கதேசத்திற்கு எதிராக ஜூன் மாதம் இவர் இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 20.28 என்ற சராசரியில் எடுத்துள்ளார். சிக்கன விகிதம் ஓவருக்கு 4.49 ரன்கள் என்ற ஆரோக்கியமான விகிதத்தில் உள்ளது.

ரஞ்சி கிரிக்கெட்டில் இவர் இதுவரை 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சவுராஷ்டிராவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6716086.ece

Link to comment
Share on other sites

தோனி படைக்கு ஒருநாள் போதுமா?
 

 

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளை ‘பாக்ஸிங் டே’ என்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டி தொடங்கும். ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் என்று அது கொண்டாடப்படும். இந்த ‘பாக்ஸிங் டே’ போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியைப் போலவே இந்திய அணிக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கும் போலிருக்கிறது. இந்தப் போட்டியில் உற்சாகமாக ஆட வேண்டும் என்றால் கூடுதலாக ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என இந்திய அணியினர் நினைத்திருப்பார்கள்போலும். பிரிஸ்பேன் போட்டியில் நான்காம் நாள் காலையில் அவர்கள் ஆடிய ஆட்டத்தை வேறு எப்படியும் புரிந்துகொள்ள முடியாது.

 

அம்பலமான பலவீனங்கள்

 

பிரிஸ்பேன் ஆடுகளத்தில் முதல் நாளன்று 300 ரன்களைத் தாண்டியது இந்தியாவின் சாதனை (311-4). ஒரு கட்டத்தில் 247-6 என்ற நிலையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் திணறிக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் இந்தியாவின் பலவீ னங்கள் அம்பலமாகத் தொடங்கின. ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் மிட்செல் ஜான்சனும் சேர்ந்து இந்தியப் பந்து வீச்சைப் பதம்பார்க்கத் தொடங்கினார்கள். குறிப்பாக ஜான்சன். பொதுவாகவே அடித்து ஆடுவதில் வல்லவரான ஜான்சன் அன்று இருந்த நிலவரத்தைக் கண்டு அஞ்சாமல் வழக்கம்போல அடித்து ஆட ஆரம்பித்தார். இந்திய அணியினர் அவரை உளவியல் ரீதியாகத் தாக்குவதற்காக வாய் வீச்சு காட்ட, அது அவருடைய வேகத்தை அதிகரிக்கவே பயன்பட்டது. ரன் குவிய ஆரம்பித்தது.

 

உறுதியான கூட்டணி

 

டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் எடுப்பதுதான் பந்து வீச்சின் பிரதான நோக்கம். ஆனால் உயிரற்ற ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் நோக்குடன் வியூகம் அமைத்துப் பந்து வீசினால் விக்கெட்டும் விழாது, ரன்னும் மட்டுப்படாது. ஆனால் பிரிஸ்பேன் களம் அப்படிப்பட்டதல்ல. அங்கு தைரியமாகத் தாக்குதல் வியூகம் அமைத்து நம்பிக்கையுடன் பந்து வீசலாம். மகேந்திர சிங் தோனி அதைத்தான் செய்தார். ஆனால் ஜான்சன் ஸ்மித் ஜோடி அந்த உத்தியைத் தங்களது உறுதியான ஆட்டத்தால் தகர்த்தது.

இவர்கள் ரன் குவிக்க ஆரம்பித்ததும் இந்திய வீச்சாளர்களின் இயல்பான பலவீனம் வெளிப்பட ஆரம்பித்தது. அப்போதும் நம்பிக்கை மீதி இருந்தது. இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்து ஸ்மித்தையும் ஜான்சனையும் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்கோர் 395ஆக இருந்தபோது ஜான்சனும் 398 ஆக இருந்தபோது ஸ்மித்தும் ஆட்டமிழந்தார்கள். 398-8 என்பது இந்திய அணியின் நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்தது. ஆனால் இந்தியா மீண்டும் ஒருமுறை சாதகமான நிலையைக் கைநழுவவிட்டது. அடுத்த இரண்டு விக்கெட்கள் விழுவதற்குள் மேலும் 107 ரன்களைக் கொடுத்தது.

 

தரமற்ற பந்துவீச்சு

 

இரு அணிகளுமே தலா 109.4 ஓவர்கள்தான் ஆடின. ஆனால் ஆஸ்திரேலியா இந்தியாவைவிடக் கூடுதலாக 97 ரன் எடுத்திருந்தது. சொல்லப்போனால் இந்தியாவின் ரன் விகிதம் குறைவானது அல்ல. ஆனால் ஆஸியின் ரன் விகிதம் அதைத் தாண்டியது. காரணம், இந்தியாவின் பந்து வீச்சில் சீரான தரம் இல்லை. இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களில் இருவருக்குக் காயம்.

 

97 ரன்கள் முன்னிலை பெற்றாலும் போட்டி முற்றிலுமாக ஆஸ்திரேலியாவின் கையில் வந்துவிடவில்லை. மூன்றாம் நாள் மாலை இந்திய அணியின் ஸ்கோர் 71-1. அடுத்த நாள் 300 ரன் எடுக்க முடிந்தால் இந்தியா வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகும். காரணம் பிரிஸ்பேனில் ஐந்தாவது நாள் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவே இருக்கும். அப்படியே ஆஸ்திரேலிய மட்டை யாளர்கள் சிறப்பாக ஆடிவிட்டார்கள் என்றாலும் இந்தியா பெறக்கூடிய தோல்வி கவுரவமான தோல்வியாகவே இருந்திருக்கும்.

இந்நிலையில் என்ன செய்திருக்க வேண்டும்? வலுவான கூட்டணிகள் உருவாக வேண்டும். பொறுமையும் கவனக் குவிப்பும் வேண்டும். ஆனால் இந்தியா நான்காம் நாள் முதல் பகுதியிலேயே போட்டியைக் கிட்டத்தட்ட இழந்தது. ஜான்சனின் ஆவேசமான பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் வீழ்ந்தது. அடுத்தடுத்து நால்வர் ஆட்டமிழந்தார்கள். அதன் பிறகு அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோரின் துணையுடன் ஷிகர் தவன் போராடினாலும் அணியின் ஸ்கோர் 224ஐத்தான் எட்ட முடிந்தது. முன்னிலை வெறும் 127.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் உத்வேகத்துடன் பந்து வீசி ஆஸ்திரேலியா இந்தச் சிறிய இலக்கை எட்டுவதற்குள் 6 விக்கெட்களைச் சாய்த்தார்கள். இன்னும் 100 ரன் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்துமளவுக்குப் பந்து வீசினார்கள்.

 

தற்கொலைக்கு ஒப்பானவை

 

இரண்டு கட்டங்களில் இந்தியா இந்தப் போட்டியைக் கைநழுவவிட்டது. இரண்டுமே தற்கொலைக்கு ஒப்பானவை. ஒன்று ஆஸ்திரேலிய அணியின் கடை நிலை மட்டையாளர்களை 100 ரன்களுக்கு மேல் அடிக்க அனு மதித்தது. இன்னொன்று நான்காம் நாள் காலையில் முக்கியமான மட்டையாளர் யாருமே சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு நன்றாகத்தான் இருந்தது என்றாலும் யாராவது ஒருவர் மேலும் கவனத்துடன் ஆடியிருந்தால் இந்த வீழ்ச்சியைத் தடுத்திருக்கலாம்.

போட்டி தொடங்குவதற்கு முன்பே பயிற்சியின்போது அடிபட்டுக்கொண்டதால் களம் இறங்க முடியாமல் இருந்த ஷிகர் தவன் தாமதமாக இறங்கினார். அவர் மட்டுமே பந்துகளைக் கவனித்து ஆடினார். அஸ்வினும் யாதவும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். முன்னிலை மட்டையாளர் யாரேனும் ஒருவர் தவனுடன் நிறிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கலாம்.

 

தவனால் ஆட முடியாது என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. இதனால் அடுத்து இறங்க வேண்டிய விராட் கோலி அவசர அவசர மாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்று தோனி போட்டி முடிந்ததும் கூறினார். இதையெல்லாம் ஒரு காரணமாகச் சர்வதேச மட்டத்தில் சொல்வது தோனிக்கும் இந்தியாவுக்கும் அழகல்ல. களத்தில் இறங்கிவி ட்டால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். அப்படியே கோலியின் நிலை இக்கட்டானது என்றால் அவருக்கு அடுத்து வந்தவர்கள் எளிதாகத் தங்கள் விக்கெட்டை இழந்ததன் காரணம் என்ன? முக்கியமான கட்டத்தில் முக்கியமான ஒரு விக்கெட் விழுந்ததும் ஏற்படும் பதற்றம் அவர்கள் ஆட்டத்தைப் பாதித்தது நிதர்சனமாகத் தெரிந்தது.

 

மவுனம் சாதிக்கும் தோனியின் மட்டை

 

பந்து ‘பேசும்’ களங்களில் தோனியின் மட்டை மவுனம் சாதிக்கும் என்பது தெரிந்ததுதான். பந்தின் ஸ்விங்கை முறியடிக்க அவர் வழக்கம்போலவே கிரீஸுக்கு வெளியில் வந்து ஆட முயன்றார். ஆனால் அவரைக் காட்டிலும் வேகமாக வந்த ஹேஸில்வுட்டின் பந்து கிரீஸுக்குப் பக்கத்திலேயே அவர் காலைத் தாக்கி ஆட்டமிழக்கச் செய்தது. வழக்கமாக நன்றாகத் தொடங்கிப் பொறுப்பற்ற முறை யில் ஆட்டத்தைப் பறிகொடுக்கும் ரோஹித் ஷர்மா இந்த முறை ‘பொறுப்பாக’ ஆட முயன்று ஆட்டமிழந்தார்.

சிக்கலான நேரங்களில் கைகொடுக்க வேண்டிய கவனமும் தொழில்நுட்பத் திறனும் அவருக்கு இன்னமும் கைகூடவில்லை என்பதை இது காட்டியது. அஜிங்க்ய ரஹானே தடுமாற்றத்திலேயே ஆட்டமிழந்தார். இவர்கள் எல்லாரும் வீழ்வதைப் பார்த்தபடி 43 ரன்களுடன் உறுதியாக ஆடிக் கொண்டிருந்த சதீஸ்வர் புஜாரா ஆட்டமிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. பந்து வீச்சுக்குச் சாதகமான களங்களில் எப்போதும் ஓரிரு மட்டையாளர்கள்தான் சோபித்திருக்கிறார்கள். நிலைபெற்று ஆடிக்கொண்டிருந்த புஜாரா எகிறு பந்தை ஆட முயற்சி செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவரும் தவனும் ஒரு மணிநேரம் ஆடியிருந்தால் போட்டி திசை திரும்பியிருக்கும்.

 

நெஞ்சுரம் வேண்டும்

 

நெருக்கடியில் சிக்கினால் அதிலிருந்து மீண்டு வரும் நெஞ்சுரமும் அதற்கான திறனும் இருக்க வேண்டும். சூழ்நிலை கடினமாகும் போது உறுதிவாய்ந்தவர்களாலேயே முன்னேற முடியும். சாதாரணமான சூழல்களில் கைகொடுக்கும் திறமை நெருக்கடியில் கைகொடுக்காது. அதற்கு மேலும் தீவிரமும் கூடுதலான திறமையும் தேவை. ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அதிக வெற்றிகளைப் பெறுவது இப்படித்தான். இந்தத் திறமை கைகூடும்போதுதான் பெரிய அணிகளுக்கு இணையான இடத்தை இந்தியா பெற முடியும்.

பாக்ஸிங் டே போட்டிக்கு முன்னால் கிடைக்கும் ஒரு நாள் கூடுதல் அவகாசம் மட்டும் இது போன்ற திறமையை வளர்த்துக் கொள்ளப் போதாது. இது அணுகுமுறை சம்பந்தப்பட்டது. இதற்கான தயாரிப்பு மனஅரங்கில்தான் அதிகம் நடக்கவேண்டும்.அப்போது தான் இந்தப் பையன்கள் உண்மையிலேயே பெரியவர்களாவார்கள்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6718612.ece

Link to comment
Share on other sites

ஸ்பின்னர்கள் மீது தோனி நம்பிக்கை வைப்பதில்லை: முன்னாள் வீரர்கள் சாடல்
 

 

ஜடேஜா காயமடைந்ததையடுத்து அக்சர் படேலை கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா அனுப்புவது கரன் சர்மாவின் நிலையை குறைவாக மதிப்பிடுவதாகும் என்று முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.

பிஷன் சிங் பேடி, மற்றும் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் எராப்பள்ளி பிரசன்னா ஆகியோர் அயல்நாட்டு பிட்ச்களில் ஸ்பின்னர்களை வெறும் மாற்று பவுலர்களாக, பகுதி நேர பவுலர்களாக கேப்டன் தோனி குறுக்குவது தவறு என்று சாடியுள்ளனர்.

 

பிஷன் பேடி கூறும் போது, “அயல்நாட்டு பிட்ச்களில் இந்திய ஸ்பின்னர்களை நம்பிக்கையில்லாமல் தோனி பயன்படுத்துவது கவலையளிப்பதாகும், அக்‌ஷர் படேலை கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா அனுப்புவது கரன் சர்மாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். ஓரளவுக்கு நன்றாகவே வீசினார்.

இது அணியில் உள்ள ஸ்பின்னர்கள் மீது தோனிக்கு இருக்கும் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. ஸ்பின்னர்களை ‘ஸ்டாக் பவுலர்’களாக மட்டுமே தோனி பயன்படுத்துகிறார்.

பிரசன்னா கூறும் போது, “ஸ்பின்னர்கள் குறித்த தோனியின் அணுகுமுறை அணிக்கு நன்மை செய்யாது, அக்‌ஷர் படேல் 5 நாள் கிரிக்கெட்டுக்கான பவுலர் அல்ல. நம் பவுலர்கள் பின்னால் களமிறங்கும் பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்கவே திணறுகின்றனர்.

 

மணீந்தர் சிங் கூறும்போது, “அக்சர் படேலிடம் நல்ல அணுகுமுறை உள்ளது. தோனி அவரை சரியாகப் பயன்படுத்த வேண்டும், தோனிக்கு ஸ்பின்னர்களை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை என்றே தோன்றுகிறது. ஸ்பின் பவுலிங் என்ற கலைக்கு நடப்பு கேப்டன் நன்மை செய்வது போல் தெரியவில்லை.

ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டிகளை வெல்ல முடியாது, லார்ட்ஸில் பெற்ற வெற்றி ஒரு எதேச்சையான ஃபுளூக்.

கேப்டனாக விராட் கோலி மிகவும் பாசிடிவ்வாக தெரிகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு லெக் ஸ்பின்னரை (கரன் சர்மா) அணியில் விளையாட வைப்பது என்பதே அவரது பலமான மனநிலையை பிரதிபலிக்கிறது” என்றார் மணீந்தர் சிங்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article6719318.ece

Link to comment
Share on other sites

எங்கு சென்றனர் இந்திய வீரர்கள் * பிரிஸ்பேன் சர்ச்சை தீரவில்லை
டிசம்பர் 23, 2014.

 

மெல்போர்ன்: பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவின் ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் சரிந்த போது, பின் வரிசை வீரர்கள் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் மைதானத்திலேயே இல்லையாம்.

பிரிஸ்பேன் டெஸ்ட் நான்கு நாட்களில் முடிந்துவிட்டது என்றாலும், இந்த பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் மூன்றாவது நாள் மதியம் இஷாந்த், ரெய்னா உள்ளிட்டோர் சைவ உணவுக்காக, மைதானத்தை விட்டு வெளியில் சென்று திரும்பினர்.

4வது நாள் காலையில் மோசமான ஆடுகளத்தில் பயிற்சி செய்த ஷிகர் தவான், கோஹ்லி காயமடைந்தனர். இதனால் ஏற்பட்ட ‘டிரசிங் ரூம்’ குழப்பத்தில், பேட்டிங் ஆர்டர் மட மடவென சரிய, இந்திய அணி எளிதாக வீழ்ந்தது.

 

தற்போது மற்றொரு பிரச்னை கிளம்பியுள்ளது.

இந்திய அணி குறித்து ‘ஹெரால்டு சன்’ என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தி:

நான்காவது நாள் காலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். அப்போது, பின் வரிசை வீரர்கள் சிலர் மைதானத்திலேயே இல்லையாம். இந்திய அணியின் முன்னணி பவுலர் இஷாந்த், வருண் ஆரோன் உள்ளிட்டோர், தாமதமாகத் தான் இந்திய அணியுடன் இணைந்தனர்.

இருப்பினும், இதை மறுத்த இந்திய அணி நிர்வாகம்,‘ விளையாடும் லெவனில் இல்லாத பவுலர்கள் தான், நீச்சல் பயிற்சியை முடித்துவிட்டு, தாமதமாக வந்தனர்,’ என, தெரிவித்துள்ளது.

 

உண்மையில் யார் யார் வெளியில் சென்றது, எங்கு சென்றனர் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை.

 

http://sports.dinamalar.com/2014/12/1419354899/IshantAaronarrivedlateatbrisbane.html

Link to comment
Share on other sites

வருகிறார் புவனேஷ்வர் குமார்
டிசம்பர் 23, 2014.

 

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், 24. சூழ்நிலைக்கு ஏற்பட தனது பவுலிங்கில் மாற்றம் செய்யும் இவர், ‘இன் சுவிங்’ ‘அவுட் சுவிங்’ செய்வதில் வல்லவர்.

 

ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்ற இவருக்கு பயிற்சியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட, முதல் இரு டெஸ்டில் பங்கேற்கவில்லை. பவுலிங் தவிர, பேட்டிங்கிலும் (சராசரி 29.21 ரன்கள்) அசத்தும் இவர், பி.சி.சி.ஐ., ஒப்பந்த பட்டியலில் ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும் வகையில் ‘ஏ’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள புவனேஷ்வர் குமார், பிரிஸ்பேன் டெஸ்ட் முடிந்த பின், கணுக்காலில் அதிகளவு துணி சுற்றிய நிலையில் வலைப்பயிற்சியில் பவுலிங் செய்தார்.

 

நேற்று இந்திய அணி பயிற்சியின் போது, லேசான மழைத் துாறல் இருந்தது. இதனால், புவனேஷ்வர் குமார் பவுலிங் செய்யவில்லை. அதேநேரம், பேட்டிங் பயிற்சியில் இவர் ஈடுபட்டதால், டிச., 26ல் துவங்கும் மூன்றாவது டெஸ்டில், களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://sports.dinamalar.com/2014/12/1419355238/BhuvneshwarKumarcricketindiateam.html

Link to comment
Share on other sites

இந்த புவனேஷ்வர்குமார் நன்றாகப் பந்து வீசுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மட்டை வீரர்கள் பிளாட் ட்ரக் புலிகள். அதாவது சீமேந்து போலிருக்கும், எந்தவிதப் பந்துவீச்சுக்கும் ஒரே மாதிரியே செயற்படும் ஆடுகளங்களில் புகுந்து விளையாடும் புலிகள். இன்னும் சொல்லப்போனால், தமது மட்டையாட்டக் காரர்களுக்கென்றே வடிவமைக்கப்படும் மைதானங்களில் வெளுத்து வாங்கும் சூரர்கள். அதனால்த்தான் உள்நாட்டில் அவர்களால் ஒருநாள் போட்டிகளில். ஒருவர் 264, 204 ஓட்டங்களைப் பெற முடிகிறது.

 

ஆனால் இந்த சூரப் புலிகள் வெளிநாடு செல்லும்போது பூனையாகி விடுகிறார்கள். வெளிநாடுகளில் இந்தச் சூரப் புலிகள் தோற்பதற்கு ஒரே காரணம், அவர்கள் தம்மீது வைத்திருக்கும் முட்டாள்த்தனமான நம்பிக்கையும், அசட்டுத் தைரியமும், நாம் கிரிக்கெட் உலகின் பணக்கார கிரிக்கெட் ஒன்றியம் என்கிற தலைக்கணமும்தான். இதை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. ஆனால் தவறாமல் ஒவ்வொரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரிலும் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.

 

இம்முறை பேர்த்தில் உள்ள வக்கா ஆடுகளத்தில் நடத்த திட்டமிடப்பட்ட போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் தலையிட்டு தடுத்து விட்டது. இந்தியாவின் பண பலத்தின் முன்னால் நிற்கமுடியாமல்ப் போன அவுஸ்த்திரேலிய கிரிக்கெட் வாரியம், வக்கா ஆடுகளப் போட்டியை இன்னொரு மைதானத்திற்கு மாற்ற இணக்கம் தெரிவித்தது. இந்த ஆடுகளத்தில் ஆட மறுத்ததன் காரணம் பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியபோது, "இங்கே வீசப்படும் பந்துகளால் எமது வீரர்களுக்கு ஆபத்து நேரலாம். இங்கே பவுன்ஸ் அதிக. ஷோர்ட் போல்கள் அதிகம் பாவிக்கப்படும், அது எமது வீரர்களுக்கு அசெளகரியத்தை கொடுக்கும், அதனால் நாம் அங்கே விளையாட விரும்பவில்லை" என்று சொல்லியிருக்கிறது.

 

ஆக, உள்ளூர் சூரப் புலிகள், இப்போது  வெளிநாட்டு போட்டிகளிலும் மைதானத்தை தமது மட்டையாட்டக் காரர்களுக்கு ஏற்றபடியாக மாற்றுவதற்கு தமது கொழுத்த பணத்தைப் பாவிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

 

மிகவும் லஞ்சமும் ஊழலும் கொண்ட பெருச்சாளிகளின் உறைவிடமான இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனது பணபலத்தினைப் பாவித்து மற்றைய கிரிக்கெட் வாரியங்களைப் பலவந்தப்படுத்தி தமது சூரப் புலிகளுக்கு ஏற்ற ஆடுகளங்களை தாமே தெரிவுசெய்து வெளிநாடுகளிலும் பூனைகளைப் புலிவேஷம் போட வைக்க முயல்கிறதென்றால் அது மிகையாகாது.

 

இன்னுமிருக்கும் மீதிப் போட்டிகளிலும் அவுஸ்த்திரேலியாவிடம் அபார அடிவாங்க இந்திய பிளாட் ட்ரக் மட்டையாட்ட சூரப் புலிகளுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை பார்த்து ஆஸி. வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய தேவையில்லை, ஏனெனில் அந்த அணி வீரர்கள் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று கேலி செய்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட்டை 48 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட்டை 4 விக்கெட் வித்தியாசத்திலும் பறிகொடுத்தது.

25-1419503966-steve-smith7-6.jpg

2வது டெஸ்ட் போட்டியின்போது ஓய்வு அறையில் ஷிகர்தவான் மற்றும் சக வீரர் விராட் கோஹ்லி இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கோபித்துக் கொண்டதாகவும், அணி இயக்குநர் ரவி சாஸ்திரிதான் சமாதானம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மெல்பர்னில் நாளை 3வது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மிட் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அணி வீரர்களை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் (வார்த்தை சீண்டல்) செய்ய தேவை கிடையாது. அந்த வீரர்களுடன் அதிகம் பேசக்கூட தேவையில்லை. ஏனெனில் இந்திய அணி வீரர்கள் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொள்வார்கள்.

 

இந்த வாரமும் அந்த சண்டை தொடரும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் நான்குக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை வெல்லவே விரும்புகிறோம். வெளி நாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் ஆஸ்திரேலியாவுக்கு இப்போதுள்ள ஒரே கவலை. கடந்த ஓராண்டாகவே ஆஸ்திரேலிய மண்ணில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். 

 

 

 

http://tamil.oneindia.com/news/sports/no-need-us-sledge-indian-team-is-whingeing-among-themselves-steve-smith-217751.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பர்ன்: வீரர்களின் ஓய்வறையில் நடந்த மோதல் ஒரு பெரிய விஷயமே கிடையாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

 

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா பலமாக இருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்தியா தோல்வியடைய நேரிட்டது. துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கையில் ஏற்பட்ட காயத்தை கடைசி நிமிடத்தில் கூறி, களமிறங்க மறுத்ததால் விராட் கோஹ்லி பேட்டிங் செய்ய கிளம்பி சென்றார். போன வேகத்திலேயே 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

25-1419499342-ganguly34343-600-jpg.jpg

போதிய பயிற்சி பெறாத நிலையில் திடீரென மைதானத்திற்குள் செல்ல வைத்த ஷிகர் தவானால்தான் அவுட் ஆனதாக கருதிய விராட் கோஹ்லி, ஓய்வறைக்கு வந்ததும், ஷிகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு அடுத்தடுத்து களமிறங்க வீரர்கள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை பறிகொடுக்க காரணமாகிவிட்டது.

 

இதுகுறித்து கங்குலி கூறியுள்ளதாவது: தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது எனக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கள் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் கால நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூறி சச்சினை திருப்பியனுப்பினார் நடுவர். அப்போது, நான் உடனடியாக களமிறங்கி பேட்டிங் செய்தேன். இவையெல்லாம் கிரிக்கெட்டில் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான்.

 

மெல்பர்ன் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் இந்த பிரச்சினைகள் ஓய்ந்துவிடும் என்று கருதுகிறேன். இந்தியாவில் திறமையான வீரர்கள் உள்ளனர். 2வது டெஸ்ட்டை நாம் ஆஸ்திரேலியாவுக்கு 'அன்பளிப்பாக' அளித்துவிட்டோம். ஆனால் இந்த கிரிக்கெட் தொடரை டிரா செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

 

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்டீவன் ஸ்மித் முக்கியமான கட்டத்தில் சதம் எடுத்து அணியை வெற்றிபெற உறுதுணையாக இருந்தார். ஸ்மித்தின் அந்த ஒரு இன்னிங்ஸ்சே அவரது திறமையை நன்கு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

 

 

http://tamil.oneindia.com/news/sports/dressing-room-unrest-no-big-issue-says-sourav-ganguly-217745.html

Link to comment
Share on other sites

ஸ்மித்துக்கு வாய்க்கொழுப்பு கூடிப்போச்சு.. :huh: காதலி வராத வேக்காட்டில் இருக்கிற கோலியிட்ட இப்ப பேச்சுவாங்கப்போறார்.. :D

Link to comment
Share on other sites

இந்திய அணிக்கு வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதென்றால் அது மெல்பர்ன் டெஸ்டில்தான்: ரிக்கி பாண்டிங்
 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடப்பு தொடரில் இந்தியா 0-2 என்று பின் தங்கியிருந்தாலும், மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ரிக்கி பாண்டிங்.

“இந்திய அணி ஒரு போட்டியில் வெல்லும் என்றால் அது மெல்பர்ன் மைதானத்தில்தான். ஆஸ்திரேலிய அணிக்குள் நடக்கும் விஷயங்களும், மெல்பர்ன் மைதான ஆட்டக்களமும் இந்திய அணிக்கு பொருத்தமாக இருக்கும். மந்தமான, ஃபிளாட் பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்திய அணிக்கு இங்கு ஒரு வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

 

ஆனால், ஆஸ்திரேலியா தாங்கள் வழக்கமாக ஆடும் விதத்தில் ஆடினால் மெல்பர்னிலும் 4 நாட்களில் ஆட்டம் முடிந்து விடும்.

தோனியின் தலைமையின் மீதும் இந்திய அணியின் அணுகுமுறை மீதும் ஏதேனும் விமர்சனம் இருக்குமேயானால், நான் அவர்களுக்குக் கூறுகிறேன், ஆக்ரோஷமான கிரிக்கெட்டிற்கான அறிகுறிகளை அவர் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் காண்பித்தார். கள வியூகமும் ஆக்ரோஷமாகச் செய்தார். ஆனால் இவையெல்லாம் அவர்கள் வெற்றிக்கு சாதகமாக வேண்டும்.

 

இந்தியாவில் விளையாடும் போது ஆட்டத்தை கொஞ்சம் கூடுதலாக இழுக்கலாம். ஆனால் அவ்வகை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆகாது. எனவே வெற்றிபெறவே இங்கு ஆட வேண்டும், ஏனெனில் 4 நாட்களில் ஆட்டத்தை முடிக்க அவர்கள் ஆடுவார்கள். நான் பார்த்த வரையில் ஆஸ்திரேலியாவில் விளையாடும் அணிகள் வேகமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியிருப்பதையே நான் அறிவேன்”

இவ்வாறு கூறினார் பாண்டிங்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article6724872.ece

Link to comment
Share on other sites

இந்திய அணியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?
 

 

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி பயிற்சி ஆடுகளங்களில் காணப்படும் வசதிக் குறைவு பற்றிப் புகார் கூறினார். பயிற்சியின்போது ஷிகர் தவனுக்கு அடிபட்டதையும் அவருக்குப் பதிலாக விராட் கோலி அவசர அவசரமாகக் களம் இறங்க வேண்டியிருந்ததையும் சுட்டிக் காட்டினார்.

மேலும் சில புகார்களும் இந்திய அணியின் தரப்பில் முன்வைக்கப்பட்டன. தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்பது அவற்றில் ஒன்று. நடுவர்களின் தீர்ப்புகள் தங்களுக்கு எதிராகச் சென்றது பற்றியும் இந்திய முகாமிலிருந்து பேச்சுக்கள் கேட்டன.

 

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு அணிகளும் இதுபோன்ற புகார்களைச் சொல்லியிருக்கின்றன. போட்டி அட்டவணை, கடும் குளிரில் ஒரு நாள் ஆட்டங்களைப் பகல் ஆட்டமாக நடத்துவதால் வரும் சிக்கல்கள், ஆட்டம் நடக்கும் இடத்தில் உள்ள வசதிகள், உணவு, தண்ணீர், ஆடுகளத்தின் தரம் ஆகியவை பற்றி ஆஸ்திரேலிய அணி உள்படச் சில அணிகள் கூறியிருக்கின்றன. எந்தப் புகாராக இருந்தாலும் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதன் பெறு மானத்தின் அடிப்படையில் தீர்வு வழங்க முனைவதே போட்டியை நடத்தும் நாடு / வாரியத்தின் பொறுப்பு. எனவே இந்திய அணி முன்வைத்துள்ள புகார்களை ஆஸ்திரேலிய வாரியம் எந்த வகையிலும் ஒரு சிறிதளவேனும் அலட்சியப்படுத்துவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க இயலாது என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவு படுத்த வேண்டும்.

 

தோனியின் சப்பைக்கட்டு

இந்தத் தொடரில் நடுவர்களின் தவறான தீர்ப்புகளால் இந்தியா பாதிக்கப்பட்டது போலவே பலனும் பெற்றிருக்கிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் ஏற்பாட்டை ஏற்க மறுக்கும் இந்தியா இதுபற்றிப் பேசுவதில் பொருளில்லை. பிரச்சினை புகார்களைப் பற்றியது மட்டு மல்ல. இதுபோன்ற புகார்களை எதிர்கொள் வதிலும் கையாள்வதிலும் உள்ள மனநிலைதான் முக்கியமான பிரச்சினை.

 

தவனுக்கு அடிபட்டதைப் பற்றியும் கோலியின் அவஸ்தை பற்றியும் தோனி குறைபட்டுக்கொண்ட விதம் தோல்விக்கான சப்பைக்கட்டுபோல இருந்தது. சர்வதேச அளவில் ஆடும் ஓர் அணியின் தலைவரிடம் இதுபோன்ற அணுகுமுறையை வெளிப்படுத்தும் தொனி இருப்பது ஆரோக்கியமானதல்ல. கோலி ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து மூவர் ஆட்டமிழக்க, நான்கு ஓவர்களுக்குள் இந்தியா தோல்விக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டது.

 

இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையில் நடந்த மோதலில் இந்திய அணியின் சொல் அம்பலம் ஏறவில்லை. மோதலில் ஆண்டர்சன் மீதான புகாரை நிரூபிப்பதற்காக ஆதாரம் இல்லை என்று விசாரணை நடுவர் தீர்ப்பளித்தார். இது இந்திய அணியின் மனநிலையைப் பாதித்தது. அந்தத் தொடரில் அதன் பிறகான இந்தியாவின் ஆட்டம் மிகவும் ஆட்டம் கண்டது. பிரச்சினைகளைச் சொல்லிப் போராடுவதில் தவறு இல்லை. ஆனால் அந்தப் போராட்டத்தின் தாக்கம் களத்தில் தெரியக் கூடாது. ஒருவேளை தெரிந்தால் ஆக்கபூர்வமாகத்தான் தெரிய வேண்டும்.

 

அனில் கும்ப்ளேவின் அணுகுமுறை

2007-08-ல் அனில் கும்ப்ளே தலைமை யிலான அணி இதையெல்லாம் விடப் பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. ஹர்பஜன் சிங்குக்கும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கும் இடையே நடந்த மோதல் தொடரையே ரத்துசெய்துவிடும் அளவுக்குப் பெரிதாயிற்று. போட்டியில் நடுவர்கள் அளித்த சொதப்பலான தீர்ப்புகள் இந்தியாவுக்கு எதிராகவே அமைந்தன.

ஆஸ்திரேலிய அணியினர் அப்பீல் செய்த விதமும் ஆட்ட உணர்வை வெளிப்படுத்துவதாக இல்லை. ஹர்பஜன் விவகாரத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. தீர்ப்புகள், ஆஸி அணியினரின் அணுகுமுறை ஆகிய விஷயத்தில் கும்ப்ளே தனக்கே உரிய கண்ணியத்தை இழக்காமல் வெளிப் படையாகக் கண்டனம் தெரிவித்தார்.

 

“இன்று ஒரு அணிதான் ஆட்டத்துக்குப் பொருத்தமான உணர்வுடன் ஆடியது” என்று அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தொடரின்போது ஆஸ்திரேலிய கேப்டன் பில் வுட்ஃபால் சொன்னதைத்தான் கும்ப்ளே பயன்படுத்திக்கொண்டார். அந்தச் சொற்கள் ஆஸ்திரேலியர்களின் குறிப்பாக, ஆஸ்திரேலிய ஊடகங்களின் மனசாட்சியைத் தொட்டன. அந்த நாட்டு ஊடகங்களே ஆஸ்திரேலிய அணியை விமர்சிக்கத் தொடங்கின.

இது அல்ல விஷயம். இத்தனை கொந்தளிப்பு களுக்குப் பிறகு நடந்த பெர்த் டெஸ்டில் இந்தியா தீவிரமாக ஆடி வெற்றிபெற்றது. பிரச்சினைகளின் சுமை களத்தில் தங்கள் ஆட்டத்தைப் பாதிக்க அந்த அணி அனுமதிக்க வில்லை. மாறாக, அது அவர்களது உறுதியை, போராடும் தன்மையைக் கூட்டவே உதவியது. அணியின் ஒவ்வொரு வீரரும் ஏதேனும் ஒரு விதத்தில் வெற்றிக்குப் பங்காற்றினார்.

 

வேண்டும் போர்க்குணம்

தோனியும் அந்த அணியில் இடம்பெற்றிருந் தார். அந்த அனுபவத்தை இப்போது அவர் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். சர்ச்சைகளுக்காகப் போராடுவதன் சுமை களத்தில் எதிர்மறையாகப் பாதித்துவிடாமல் இருக்கும் மனநிலையைத் தன் அணிக்கு அவர் ஏற்படுத்த வேண்டும். மேலான போராட் டத்தின் மூலம் தங்கள் வலிமையை நிரூபிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை பாக்ஸிங் டே போட்டி தருகிறது. தோனியின் படை அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்ட வேண்டும். அதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். புகார்களை முன்வைத்துப் புலம்புவதை அல்ல.

 

ஹர்பஜன் விவகாரத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. தீர்ப்புகள், ஆஸி அணியினரின் அணுகுமுறை ஆகிய விஷயத்தில் கும்ப்ளே தனக்கே உரிய கண்ணியத்தை இழக்காமல் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6724929.ece

Link to comment
Share on other sites

ஆமாம்! ஷிகர் தவனை கோலி கத்தியால் குத்தினார் போங்கள்: செய்தியாளர்களிடம் தோனி நகைச்சுவை
 

 

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் அந்த சர்ச்சைக்குரிய 4-ஆம் நாள் ஆட்டத்தின் காலையில் ஷிகர் தவனுக்கும் விராட் கோலிக்கும் தகராறு ஏற்பட்டதாக எழுந்துள்ள செய்திகளை தோனி தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் மறுத்துள்ளார்.

அதாவது, வலைப்பயிற்சியில் தவன், கோலி இருவருமே காயமடைந்தனர், இந்நிலையில் அன்று தவன் தான் களமிறங்க மறுத்ததாகவும் அதன் பிறகு கோலிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் அப்போது கோலி, தவனை நோக்கி சவாலைச் சந்திப்பதிலிருந்து ஓடுகிறாய் என்று கூறியதாகவும் அணி இயக்குநர் ரவிசாஸ்திரி இருவரையும் சமாதானம் செய்ததாகவும் செய்திகள் எழுந்தன.

 

இதனை தோனி தனக்கேயுரிய நகைச்சுவையான பாணியில் மறுத்துக் கூறும் போது, “ஆம்! அதுதான் உண்மை (ஜோக் அடித்த தோனி) கத்தியைக் கொண்டு விராட் கோலி, தவனை குத்தினார், அதிலிருந்து அவர் மீண்டவுடன் களத்திற்குள் அவரை தள்ளிவிட்டோம் போங்கள்!

இவையெல்லாம் உண்மைக்கு புறம்பான வெறும் கதைகள். மார்வெல்-வார்னர் பிரதர்ஸ் இதனைக் கொண்டு படம் தயாரித்து விடலாம். எங்கிருந்து இந்தச் செய்திகளெல்லாம் முளைக்கின்றன என்பது எனக்கு புரிவதில்லை. அணியிலிருந்து யாராவது ஒருவர் இதனை உங்களிடம் கூறியிருந்தால் அவர் பெயரை எங்களுக்குத் தெரிவியுங்கள். ஏனெனில் அவரது கற்பனைத்திறன் அபாரம், அவர் உடனடியாக வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார். அந்த நபர் எங்கள் ஓய்வறையில் இருக்க வேண்டிய நபரேயல்ல, ஏனெனில் நடக்காத ஒன்றை அவர் படைக்கிறார் என்றால் அவர் உண்மையில் அபாரத் திறமை கொண்டவர்தானே.

 

இப்படிப்பட்ட கதைகள் பேப்பர் விற்க பயன்படும். ஆனால் நிஜத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.

ஓய்வறை சூழல் அற்புதமாக உள்ளது, எந்த ஒரு விவகாரமும் இல்லை. நாங்கள் அயல்நாடுகளில் விளையாடும் போது கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீடியாக்களிடம் இப்படிப்பட்ட செயல்பாடுகள் தோன்றுகின்றன. சில பத்திரிகையாளர்கள் தங்களுக்கேயுரிய பாணியில் கதைகளை உருவாக்குகின்றனர். அதனை வெளியிடவும் செய்து விடுகின்றனர்” என்று கூறினார் தோனி

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/article6725066.ece

Link to comment
Share on other sites

ஆஸி., வருகிறார் அனுஷ்கா: விராத் கோஹ்லி உற்சாகம்
டிசம்பர் 24, 2014.

 

புதுடில்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க, இந்திய அணி வீரர் கோஹ்லியின் தோழி அனுஷ்கா, ஆஸ்திரேலிய செல்லவுள்ளார். இதற்கு பி.சி.சி.ஐ., அனுமதி கொடுத்துள்ளது.            

சமீபத்திய இங்கிலாந்து தொடரில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதியுடன், கோஹ்லி தனது காதலி அனுஷ்காவை உடன் அழைத்துச் சென்றார். இதனால், போட்டிகளில் இவர் கவனம் சிதற, ஐந்து டெஸ்டில் மொத்தம் 134 ரன்கள் மட்டும் எடுத்தார். டெஸ்ட் தொடரை இந்திய அணி (1–3) கோட்டை விட்டது. இதனால், ஆஸ்திரேலிய தொடரின் போது, இந்திய வீரர்கள் மட்டும் சென்றனர். 2 டெஸ்ட் முடிந்த நிலையில், வீரர்களின் மனைவிகள் மட்டும் ஆஸ்திரேலியா செல்ல, பி.சி.சி.ஐ., அனுமதி தந்தது.   

         

கோஹ்லி ‘ஜாலி’: தோழிகளுக்கு அனுமதி இல்லை என்பதால், அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது கோஹ்லிக்கு வருத்தம் தந்திருக்கும்.            

தற்போது, தோழிகளும் ஆஸ்திரேலியா செல்ல பி.சி.சி.ஐ., அனுமதி கொடுத்தது.            

இருப்பினும், இவர்கள் வீரர்களுடன் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். ஆனால், வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில், சம்பந்தப்பட்ட வீரருடன் சேர்ந்து தங்கக் கூடாது. தனியாக வேறு அறையில் தான் இருக்க வேண்டுமாம்.            

 

எப்போது பயணம்: இதையடுத்து, கோஹ்லியின் தோழி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறார். இவர், வரும் 2015, ஜன. 10 வரை அதாவது நான்காவது டெஸ்ட் முடியும் வரை தங்கிக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.            

 

காரணம் என்ன:  பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,‘‘ இது முக்கிய பிரச்னை தான். எனினும், இப்போதைய நவீன காலத்தில் தோழிகளை அழைத்துச் செல்லக்கூடாது என்றெல்லாம் கட்டாயப்படுத்த முடியாது. இதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்பதால் அனுமதித்தோம்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419437263/AnushkaSharmaViratKohliIndiaCricketTestAustralia.html

Link to comment
Share on other sites

ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா: மெல்போர்ன் டெஸ்ட் நாளை ஆரம்பம்
டிசம்பர் 24, 2014.

 

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் நாளை மெல்போர்னில் துவங்குகிறது. இதில், ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை துவங்குகிறது. இதில், இந்தியா சாதிக்க தவறினால், தொடரை இழக்க நேரிடும். தவான்–கோஹ்லி மோதல், சைவ சாப்பாடு கிடைக்காதது, ஜான்சன்–ரோகித் சர்மா வாக்குவாதம் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் இந்திய அணி விரைவில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.             

 

விஜய் பலம்: பேட்டிங்கில் முரளி விஜய் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 144 ரன்கள் குவித்த இவர் நம்பிக்கை தருகிறார். முதல் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த விராத் கோஹ்லி, கசப்பான விஷயங்களை மறந்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். கேப்டன் தோனி தனது ‘பினிஷிங்’ திறமையை வெளிப்படுத்தினால் நல்லது.

 

வருகிறார் ரெய்னா: தொடர்ந்து சொதப்பி வரும் ரோகித் சர்மாவுக்கு (43, 6, 32,0) பதிலாக ரெய்னா களமிறக்கப்படலாம். இவருக்கு அணி இயக்குனர் ரவி சாஸ்திரியின் ஆதரவு உண்டு. இதனை உறுதி செய்யும் விதமாக நேற்று ரெய்னா நீண்ட நேரம் ‘பேட்டிங்’ பயிற்சியில் ஈடுபட்டார். புஜாரா, ரஹானேவுடன் சேர்ந்து தவான், கோஹ்லியும் பயிற்சி மேற்கொண்டனர். இவர்கள் பகைமை மறந்து சகஜமாக பேசிக் கொண்டது நிம்மதி அளித்தது. 

 

விழிப்பாரா அஷ்வின்: இஷாந்த், ஆரோன், உமேஷ் உள்ளிட்ட ‘வேகங்கள்’ எதிரணியின் ‘டெயிலெண்டர்களை’ விரைவில் வெளியேற்ற வேண்டும். ‘சுழல்’ வீரர் அஷ்வின், இப்போட்டியில் விழிக்க வேண்டும்.          

               

வார்னர் ‘ரெடி’: ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ரோஜர்ஸ், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் என அனைவரும் நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். பிரிஸ்பேன் டெஸ்டில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்த வார்னர் தற்போது குணமடைந்துள்ளார். இவர் கூறுகையில்,‘‘ அடிபட்ட சமயத்தில் வலி இருந்தது. இப்போது சரியாகி விட்டது. நாளைய டெஸ்டில் பங்கேற்க தயார்,’’ என்றார்.            

 

இதேபோல, பயிற்சியின் போது ‘பவுன்சர்’ தாக்கிய வாட்சனும், சகஜ நிலையில் இருப்பதால், மூன்றாவது டெஸ்டில் களமிறங்குகிறார்.            

அனல் பறக்கும் பந்துவீச்சுக்கு ஜான்சன், ஹேசல்வுட் உள்ளனர். ‘சுழல்’ வீரர் லியானும் இருப்பதால், இந்திய அணிக்கு கடும் சோதனை காத்திருக்கிறது.

 

‘பாக்சிங் டே’ பின்னணி

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் (டிச.26) ‘பாக்சிங் டே’ என அழைக்கப்படுகிறது. இதற்கு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேவாலயங்களில், ஏழைகளுக்கு உதவ மரத்திலான பெட்டியை(பாக்ஸ்) வைப்பர். இதில், வசதி படைத்தவர்கள் காணிக்கைகளை செலுத்துவர். இந்த பெட்டி கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள் திறக்கப்பட்டு, ஏழைகளுக்கு உதவிகள் அளிக்கப்படும். பண்டைய காலத்தில் கப்பலில் ‘கிறிஸ்துமஸ் பாக்ஸ்’ ஒன்று வைக்கப்படும். பின் பத்திரமாக கரை திரும்பியதும், அந்தப் பெட்டியை பாதிரியாரிடம் ஒப்படைப்பர். அதில் உள்ள பணம் ஏழைகளுக்கு அளிக்கப்படும். இது போன்று நிறைய கதைகள் உண்டு. அன்றைய தினம் விடுமுறை என்பதால், விளையாட்டு போட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடத்தப்படுவது வழக்கம். இதே போல தென் ஆப்ரிக்காவின் டர்பனில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடத்தப்படுகிறது.

 

http://sports.dinamalar.com/2014/12/1419437835/IndiaAustraliaTestCricketRaina.html

Link to comment
Share on other sites

மெல்போர்ன் டெஸ்ட்: மீண்டும் கேப்டன் ஸ்மித் அபாரம்; ஆஸ்திரேலியா 259/5

 

 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது.

மீண்டும், எந்த ஒரு இந்திய பந்து வீச்சுக்கும் அசராத கேப்டன் ஸ்மித் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். பிராட் ஹேடின் பல பவுன்சர்களை எதிர்கொண்டு புதிய பந்தில் நிலைத்து 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 43 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

 

ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரில் வைத்துள்ள சராசரி 223.50 என்பது குறிப்பிடத்தக்கது. 447 ரன்களை இந்தத் தொடரில் அவர் 2 சதங்கள், இரண்டு அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

நாளை இவர்கள் இருவரையும் உடனடியாக வீழ்த்துவதோடு டெய்ல் எண்டர்களை சொற்பமாக இந்தியா வீழ்த்தினால்தான் இந்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்புகள் ஏற்படும். இல்லையெனில் கடந்த டெஸ்ட் போன்று கடைசி 5 வீரர்களை 250-260 ரன்கள் எடுக்கவிட்டால் மீண்டும் இந்திய அணிக்கு தோல்வி நெருக்கடியே ஏற்படும்.

இன்று காலை மெல்போர்னின் ஃபிளாட் மட்டையாளர்களுக்கான ஆடுகளத்தில் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

 

இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அறிமுக வீரர் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். வருண் ஆரோனுக்கு பதிலாக மொகமது ஷமி வந்துள்ளார்

டேவிட் வார்னர் கையில் காயம் பட்டாலும் ஆடுவேன் என்று பிடிவாதமாக களமிறங்கினார். ஆனால் அவர் 2-வது ஓவரில் உமேஷ் யாதவின் லிஃப்டர் பந்துக்கு தோனியிடம் கேட்ச் கொடுத்து 0-வில் அவுட் ஆனார். ரவுண்ட் த விக்கெட்டில் வீசி அவரை செட்டில் ஆகவிட்டுக் கொண்டிருந்த பவுலர்கள் இன்று ஓவர் த விக்கெட்டில் வீசி அவரது பலவீனத்தைக் கண்டுபிடித்தனர்.

நல்ல அளவில் விழுந்த பந்து நன்றாக எழும்ப வார்னர் நின்ற இடத்திலிருந்து அதனை தொட்டார், பந்து மட்டையின் மேல்பகுதி விளிம்பில் பட்டு தவனிடம் 3-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

 

அதன் பிறகு வாட்சன், ராஜர்ஸுக்கு சில சுலபமான பவுண்டரி பந்துகளை வீசினர் இந்திய வேகப்பந்து கூட்டணி, மேலும் கள வியூகம் நெருக்கமாக அமைக்கப் படாததால் ராஜர்ஸ், வாட்சன் சுலபமாக சிங்கிள்களை எடுத்தனர். இதனால் இடது, வலது கூட்டணி மாறி மாறி பேட்டிங் முனைக்கு வர பவுலர்கள் லெந்த் கண்டுபிடிக்க கஷ்டப்பட்டனர். இந்நிலையில் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் வாட்சனுக்கு தவன் கேட்சை கோட்டை விட்டார். 3 முறை பிடித்து விட முயன்றும் முடியவில்லை.

ராஜர்ஸ் வாட்சன் இருவரும் அரைசதம் கண்டனர். அரைசதம் கண்ட பிறகு ராஜர்ஸ், வாட்சனை அடுத்தடுத்து ஷமி, அஸ்வின் ஆகியோர் வீழ்த்தினர். 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரைசதம் காணாத வாட்சன் 52 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார்.

 

பிறகு கேப்டன் ஸ்மித், ஷான் மார்ஷ் இணைந்து நிலைத்து ஆடி முக்கியமான 69 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். தேநீர் இடைவேளை முடிந்து ஷான் மார்ஷ் 32 ரன்களில் ஷமி பந்தை எட்ஜ் செய்து தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அறிமுக வீரர் ஜோ பர்ன்ஸ் போட்டிக்கு முன்பு பயங்கரமாகப் பேசினார் ஆனால் 13 ரன்களில் அவர் யாதவ் பந்தை புல் ஆட முயன்று, பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது.

 

ஹேடின் ஷாட் பிட்ச் பவுன்சர்களை சரியாகக் கையாளவில்லை. ஆனால் அஸ்வினை நேராக ஒரு சிக்சர் அடித்தார்.

இன்று ஆஸ்திரேலியா அடித்த 20 பவுண்டரிகளில் ஷமி 9 பவுண்டரிகளையும், இசாந்த் 5 பவுண்டரிகளையும் விட்டுக் கொடுத்தனர். 2 சிக்சர்களும் அஸ்வின் பந்தில் அடிக்கப்பட்டது.

மொத்தத்தில் முதல் நாள் ஆட்டம் இரு அணிகளும் சரிசமமாகத் திகழ்ந்தன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2595/article6727332.ece

 

Link to comment
Share on other sites

தோனி ‘250’
டிசம்பர் 26, 2014.

 

 

நேற்று ஷமி ‘வேகத்தில்’ ஷான் மார்ஷ் அடித்த பந்தை தோனி துடிப்பாக பிடித்தார். இது, டெஸ்டில் இவரது 250வது ‘கேட்ச்சாக’ அமைந்தது. இதுவரை இவர், 90 டெஸ்டில், 251 ‘கேட்ச்’ பிடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் இந்த இலக்கை எட்டிய 7வது விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.

* தவிர, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 50 அல்லது அதற்கு மேல் ‘கேட்ச்’ (51 கேட்ச், 19 டெஸ்ட்) பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பரானார்.

 

4 ரன்கள்

இந்திய வீரர்கள் களத்தில் இரண்டு ரன்கள் ஓடி எடுப்பதே பெரிய விஷயம். நேற்று அஷ்வின் பந்தை ‘ஆப் சைடில்’ அடித்து விளையாடிய ஸ்மித், நான்கு ரன்கள் ஓடி எடுத்தார்.

 

ராகுல் ‘284’

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 284வது வீரராக அறிமுகம் ஆனார் கர்நாடக வீரர் லோகேஷ் ராகுல். ஆஸ்திரேலியாவின் பர்ன்ஸ் 441வது வீரராக அறிமுகம் ஆனார்.

ஷமி ‘சாரி’

நேற்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு பவுலிங் செய்தார் முகமது ஷமி. பந்தை ஸ்மித் தடுத்து ஆட, இதை எடுத்த ஷமி, அவரை நோக்கி எறிந்தார். உடனே ஸ்மித் ஏதோ கோபமாக கூறினார். இதைப்பார்த்த ஷமி சிரித்துக் கொண்டே மன்னிப்பு (‘சாரி’ ) கேட்டார்.

 

27

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், நேற்று மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் 27 ஓவர்கள் பவுலிங் செய்தார். இதற்கு முன் 2011ல் இங்கு, முதல் நாளில் அஷ்வின் 26 ஓவர்கள் பவுலிங் செய்திருந்தார்.

 

ராகுல் தேர்வு சரியா

மூன்றாவது டெஸ்ட் குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,‘‘மெல்போர்ன் டெஸ்டில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கேப்டன் தோனி இம்முறை 6 பேட்ஸ்மேன்களுடன் களம் காண்கிறார் என கருதுகிறேன். ‘பார்ம்’ இல்லாமல் தவித்த ரோகித் சர்மாவுக்குப்பதில், லோகேஷ் ராகுலை தேர்வு செய்தது சரியானது,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419614254/dhoniindiacricket.html

Link to comment
Share on other sites

ஸ்மித் சதத்தால் 530 ரன்கள் குவித்தது ஆஸி. : இந்தியா 108/1

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, ஆட்ட நேர முடிவில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 108 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. முன்னதாக ஆஸிதிரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை 530 ரன்களுக்கு முடித்தது.

வழக்கம் போல ஷிகர் தவான், முரளி விஜய்யுடன் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது. 15-வது ஓவரை வீசிய ஹாரிஸின் பந்தில் தவான் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

 

முரளி விஜய் 55*

ஆனால் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் சேர்ப்பு நிதனமாக இருந்தாலும் சீராக இருந்தது. இந்தத் தொடரில் இதுவரை சிறப்பாக ஆடி வந்துள்ள முரளி விஜய் இன்றும் தனது திறமையான பேட்டிங்கைத் தொடர்ந்தார். டெஸ்ட் போட்டிகளுக்கு உரிய பாணியில் 93 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 108 ரன்களை குவித்தது. விஜய் 55 ரன்களுடனும், புஜாரா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸிதிரேலியாவை விட 422 ரன்கள் இந்தியா பின்தங்கியுள்ளது.

 

ஸ்மித்தின் மூன்றாவது சதம்

இன்றைய நாளின் ஆரம்பத்தில், 259 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி. சீரான வேகத்தில் ரன் குவிக்கத் தொடங்கியது. விக்கெட் கீப்பர் ஹாடின் 75 பந்துகளில் தனது அரை சதத்தை அடைந்தார். கடந்த சில போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாடினுக்கு இந்த அரை சதம் பெரிய ஊக்கமாக அமையும்.

 

மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் 191 பந்துகளில் சதத்தை அடந்தார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்துள்ள மூன்றாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடக்கம். ஸ்மித் சதம் எடுத்த அதே ஓவரில் ஹாடின் 55 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

 

ஸ்மித் - ஹாரிஸ் ரன் குவிப்பு

தொடர்ந்து வந்த ஜான்சன், தான் சந்தித்த 37 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசினாலும் 28 ரன்களுக்கு அஸ்வினின் சுழலுக்கு வீழ்ந்தார். உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்து ஆடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ரயன் ஹாரிஸ் ஜோடி இந்தியாவின் சொதப்பலான பந்துவீச்சை முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர். ஒரு நாள் போட்டியைப் போல அடுத்தடுத்து பவுண்டரிகளில் ரன் சேர்ந்தது.

 

ஹாரிஸ் 75 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். ஸ்மித் 273 பந்துகளில் 150 ரன்களை தொட்டார். அஸ்வினின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரை விளாசிய ஹாரிஸ், அடுத்த பந்தையும் விரட்ட முயல லெக் பிஃபோர் முறையில் ஆட்டமிழந்தார். இந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா 482 ரன்களை குவித்திருந்தாலும், ஸ்மித் இரட்டை சதம் எடுக்க வாய்ப்பிருந்ததால், ஆஸி. டிக்ளேர் செய்யவில்லை.

11 ரன்களுக்கு லயான் ஆட்டமிழக்க அடுத்த ஓவரில் ஸ்மித் 192 ரன்களுக்கு தனது ஸ்டம்பை பறிகொடுத்து இரட்டை சத வாய்ப்பை இழந்தார். முடிவில் ஆஸி. 530 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்தது.

 

சோபிக்காமல் போன பந்துவீச்சு

பல டெஸ்ட் போட்டிகளில் செய்த தவறையே இந்திய அணி இன்றைய போட்டியிலும் செய்தது. துவக்கத்தில் நன்றாக ஆடும் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்த இந்திய அணியின் பந்துவீச்சு, டெயில் என்டர்ஸ் எனப்படும் எதிரணியின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களிடம் பலிக்காமல் போனது. ஆஸியின் பந்துவீச்சாளரான ரயான் ஹாரிஸ் ஒரு பேட்ஸ்மேனுக்கே உரிய நம்பிக்கையோடு இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டார்,

 

ஸ்மித்துடன் ஹாரிஸ் இணைந்து ரன் சேர்த்தது அவர்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. வெறும் 259 ரன்களை மட்டுமே நேற்று எடுத்திருந்த ஆஸி இன்று வலுவான ஸ்கோரை எட்டியதற்கு இந்திய பந்துவீச்சின் மோசமான யுக்தியே காரணம் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-530-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1081/article6730522.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.