Jump to content

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்


Recommended Posts

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

 

                                   Fotor1116195839_zps4f0d67bc.png

இப்போட்டிகள் 04 டிசம்பர் 2014 தொடக்கம் 07 ஜனவரி 2015 வரை பிரிஸ்பேன், அடிலேட்,மெல்பெர்ன்,சிட்னி நகரங்களில் நடைபெறும்.

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

இந்திய டெஸ்ட் தொடரில் மைக்கேல் கிளார்க் ஆடுவது சந்தேகம்
 

 

முதலில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விளையாடுவது கடினம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டது. இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடர் முழுதிலுமே ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் கிளார்க்கிற்கு நிரந்தர முதுகுவலி பிரச்சினை உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நேரம் இல்லாததால் அது தொடர்பான பிற காயங்களை மைக்கேல் கிளார்க் அனுபவித்து வருகிறார்.

தென் ஆப்பிரிக்காவுக்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மைக்கேல் கிளார்க்கின் பின் தொடை தசைநார் பிரச்சினை தீவிரமடைந்தது. இப்போது அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பெர்பாமன்ஸ் கமிட்டி தலைவர் ஹோவர்ட் கூறும்போது, "நாங்கள் உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரை முன் நிறுத்தியுள்ளோம், இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவரால் விளையாட முடிந்தால் நல்லதுதான்.

ஆனால் அவர் அவசரம் அவசரமாக விளையாடி மீண்டும் ஓரிரு டெஸ்ட் போட்டிகள் சென்ற பிறகு காயமடைந்தால் அது விரும்பத்தகாதது. வேகப்பந்து வீச்சாளர் கூல்டர் நைல் இதே காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 8 வாரங்களில் மீண்டும் விளையாட முடிந்துள்ளது, ஆகவே இந்த வகையில் கிளார்க்கிற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

ஓரு தொடர் அல்லது 2 தொடர் என்று யோசிக்காமல் உலகத்தின் தலை சிறந்த வீரரான மைக்கேல் கிளார்க் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வேண்டும் என்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்றார் ஹோவர்ட்.

 

கிளார்க் விளையாட முடியாமல் போனால் பிராட் ஹேடின் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவரும் சமீப காலங்களில் அடிக்கடி காயமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6608158.ece

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவிடம் ‘ஒயிட் வாஷ்’ நிச்சயம்: கிளென் மெக்ரா
 

 

இலங்கையை ஒருநாள் தொடரில் இந்தியா 5-0 என்று ‘ஒயிட் வாஷ்’ செய்து துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா டெஸ்ட் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ ஆகும் என்கிறார் கிளென் மெக்ரா.

இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

"4-0 என்று தோல்வியடையும் என்று சொல்வதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

கடந்த சீசனில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய விதம் அபாரம். அது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்தியாவுக்கும் ஒயிட் வாஷ் தர முடியும்.

 

இங்கிலாந்து தொடரில் இந்தியா விளையாடிய கடைசி 3 டெஸ்ட் போட்டிகளைப் பார்த்தேன், முடிவில் சின்னாபின்னமாகிவிட்டனர்.

ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா ஒரு தரமான அணிதான். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி கடுமையாக மேம்பாடு பெறுவது அவசியம். குறிப்பாக இங்கு பவுன்ஸ் பிட்ச்களில் அவர்கள் ஆட்டம் முன்னேற்றம் கண்டால்தான் உண்டு.

பவுன்ஸ் பிட்ச்களில் இந்தியா சரியாக விளையாடாததற்கு வரலாற்று சாட்சியங்கள் உள்ளன. ஆகவே இங்கிலாந்தில் ஆடியதை விட அவர்கள் தங்கள் ஆட்டத்தை மேலும் தரநிலையில் உயர்த்துவது அவசியம்.

 

இல்லையெனில் இங்கு கடுமையான தோல்விகளைச் சந்திக்க வேண்டியதுதான். நம் அணி இந்தியாவில் சந்தித்த தோல்விகளைப் போல” என்று கிளென் மெக்ரா கூறியதை அந்த செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு அதே ஆக்ரோஷம் இருக்குமா என்பதும் சந்தேகமே.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/article6611516.ece

Link to comment
Share on other sites

நான் இந்திய பேட்ஸ்மெனாக இருந்தால் நேதன் லயன் பந்து வீச்சையே அதிகம் விரும்புவேன்: ஆலன் பார்டர்
 

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அதிவேக பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெறுவதால் அந்த போட்டிக்கு நேதன் லயன் தேர்வு செய்யப்படக் கூடாது என்கிறார் ஆலன் பார்டர்.

"எந்த வகையான பிட்ச் அளிக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இந்திய வீரர்களுக்கு பழக்கமில்லாத அளவுக்கு பந்துகள் பவுன்ஸ் ஆகும் என்றே நான் கருதுகிறேன்.

 

ஆகவே நாம் நமது சிறந்த வேகப்பந்து வீரர்களை இந்திய அணியை முடக்க பயன்படுத்த வேண்டும். ஆகவே நேதன் லயன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடாது. மேலும், நேதன் லயன் சரியான ஃபார்மில் இல்லை. பந்தயத்திற்கு ஏற்ற குதிரைதான் தேவை.

நான் இந்திய பேட்ஸ்மெனாக இருந்தால் நேதன் லயன் பந்துகளை எதிர்கொள்ளவே விரும்புவேன். பீட்டர் சிடில், அல்லது ஹேசில்வுட் ஆகியோர் பந்துகளை எதிர்கொள்ள விரும்ப மாட்டேன். அந்த 4-வது வேகப்பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும் சரி.

 

மிட்செல் மார்ஷ், ஷேன் வாட்சன் அந்த 4-வது வீச்சாளர் இடத்தை இட்டு நிரப்புவார்கள் என்று என்னிடம் பலரும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் பிரதானமாக பேட்ஸ்மென்கள், கொஞ்சம் பந்து வீசவும் செய்வார்கள் அவ்வளவே” என்று ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றில் ஆலன் பார்டர் கூறியுள்ளார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article6618114.ece

Link to comment
Share on other sites

ஆஸி.,யை வீழ்த்துவோம்: கோஹ்லி நம்பிக்கை
நவம்பர் 21, 2014.

 

மும்பை: ‘‘ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம்,’’ என, இந்திய அணியின் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தோனி காயம் காரணமாக பிரிஸ்பேனில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு(டிச.,4–8) கோஹ்லி கேப்டனாக செயல்பட உள்ளார்.

இத்தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படும் முன் மும்பையில் கோஹ்லி கூறுகையில்,‘‘ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது,’’என்றார்.

http://sports.dinamalar.com/2014/11/1416592040/kohliindiacricket.html

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சு பிரச்சினைகளைக் கொடுக்கும்: ஜோ டேவிஸ்
 

 

இந்த முறை இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு பல பிரச்சைனைகளைக் கொடுக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜோ டேவிஸ் கூறியுள்ளார்.

"வருண் ஆரோன் அபாயகரமான வீச்சாளர், இவர் மணிக்கு 150 கிமீ வேகம் வீசக்கூடியவர். இதனை அவர் சீரான முறையில் செய்து வருகிறார். அவரை மட்டும் சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் பலன் இருக்கும்.

 

இந்திய அணியில் இந்த முறை வரும் வேகப்பந்து வீச்சாளர்களை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. நிறைய வேகம் உள்ளது அங்கே. ஹேடினோ, கிளார்க்கோ விளையாட முடியாமல் போனால் இந்திய வேகப்பந்து வீச்சு ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்களை வெளிப்படுத்தும்.

பேட்டிங்கில் ஷிகர் தவன் பற்றி கூற வேண்டுமென்றால், வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது அவர் பேட்டை பிடித்துக் கொள்ளும் விதமும், அவரது பேக் லிஃப்டும், உத்தியும் பழைமையாகவே உள்ளது எனவே அதிகம் எழும்பும் பந்துகளை அவர் எதிர்கொள்ள திணறி வருகிறார்.

மாறாக முரளி விஜய் தனது விக்கெட்டை அவ்வளவு எளிதாக கைப்பற்ற அனுமதிப்பதில்லை. இங்கிலாந்தில் விஜய்தான் அதிக சராசரி வைத்திருந்தார். இவர் நீண்ட நேரம் ஆட விருப்பம் கொண்டவர்.

 

புஜாரா, பேட்டிங்கின் பழைய பள்ளியைச் சேர்ந்தவர், அவருக்கு பேட்டிங், பேட்டிங், பேட்டிங் என்பதே தாரக மந்திரம். புஜாரா, கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஆஸ்திரேலிய பிட்ச்களில் சோபிக்கத் தகுந்த உத்திகள் உள்ளன. எனவே ஆஸி. அணி இவர்கள் மீதே சிறப்பு கவனம் செலுத்தும் என்று கூறலாம்.

அஜிங்கிய ரஹானேயின் அகலமான ஸ்டான்ஸ் வேகப்பந்தை எதிர்கொள்ள எளிதாக அமைந்துள்ளது. அவர் போராளி, கடுமையாக பயிற்சி செய்கிறார். ஆனாலும் ஆஸ்திரேலிய வேகமும், பந்தின் எழுச்சியும் அவருக்கு சிரமத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.

அதே போல் இளம் லெக்ஸ்பின்னர் கரண் சர்மாவுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.” என்றார் ஜோ டேவிஸ்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/article6625038.ece

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/article6625038.ece

Link to comment
Share on other sites

இரண்டு இருநாள் பயிற்சி போட்டிகள் போதுமானதல்ல: கங்குலி அதிருப்தி
 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக இந்திய டெஸ்ட் அணி புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், 2 இருநாள் பயிற்சி ஆட்டங்கள் போதுமானதல்ல என்று கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

டிச.4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்பாக 2 இருநாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. இது சிறந்த தயாரிப்பாக ஒருபோதும் அமையாது என்று சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சிறப்பாக விளையாடுவதற்கு தொடருக்கு முன்பான தயாரிப்புகளே முக்கியமாகும், டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே தயாரிப்புகளில் ஈடுபட முடியாது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 2 இருநாள் பயிற்சி ஆட்டங்கள் எனக்கு திருப்திகரமாக இல்லை.

 

இதன் அர்த்தம் என்னவெனில் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 2 இன்னிங்ஸ்கள்தான் பயிற்சி எடுத்துக் கொள்ளப்போகிறோம் என்பதே. இது நல்ல தயாரிப்பிற்கான அறிகுறி அல்ல. விராட் கோலி போன்ற வீரர்களுக்கே 4 இன்னிங்ஸ்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தயார் படுத்திக் கொள்ள தேவை என்றே நான் கருதுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பாக நடந்த ஓவல் மைதான டெஸ்ட் போட்டியில், நாம் முதல் இன்னிங்ஸில் 42 ஓவர்களையே விளையாடினோம், 2-வது இன்னிங்ஸில் 25ஓவர்கள் பக்கம் ஆடினோம். 2004-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் எடுத்தது. நாம் பதிலுக்கு 400க்கும் மேல் ரன்கள் குவித்தோம். அடிலெய்டில் 550 ரன்களையும், சிட்னியில் 700 ரன்களையும் குவித்தோம்.

 

2002-ஆம் ஆண்டு ஹெடிங்லீயில் 600க்கும் மே ரன்கள் குவித்தோம். அந்த அணியில் சச்சின், திராவிட், லஷ்மண், அனில் கும்ளே இருந்தனர். இவர்கள் அதிகம் சத்தம் போடுபவர்கள் அல்ல. ஆனாலும் நாம் நன்றாக ஆட முடியும் என்ற தன்னம்பிக்கையை எப்போதும் ஊட்டி வளர்ப்பவர்கள்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “உலகக் கோப்பை வரை கேப்டன்சியில் மாறுதல் இருக்காது. அது அப்படித்தான் இருக்கவேண்டும். மகேந்திர சிங் தோனி தனது அயல்நாட்டு டெஸ்ட் போட்டி ரெக்கார்ட் குறித்து கவலைப்படுவது அவசியம். ஏனெனில் இதனுடன் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் அதற்காக சவுரவ் கங்குலி கேப்ட்ன்சியையும் தோனியினுடையதையும் ஒப்பிடக் கூடாது.

 

நாங்கள் இருவரும் இருவேறு காலகட்டங்களில் கேப்டன்சி பொறுப்பு வகித்தோம். முத்தரப்பு இறுதிப் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்று எனக்கும் பட்டியல்கள் இருந்தாலும், தோனியின் வெற்றி விகிதம் அதிகம்.

அணித் தேர்வு குறித்து தோனி அதிக விளக்கங்கள் கொடுக்க வேண்டியத் தேவையில்லை. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் அனில் கும்ளேவை நான் அணியில் சேர்க்கவில்லை. அணிக்கூட்டம் முடிந்த பின்னர் அவர் என்னிடம் வந்து ‘நான் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இந்தியா செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றார். நான் எனது முடிவுக்கான காரணத்தை விளக்கினேன்.

 

லஷ்மணை தொடக்கத்தில் இறங்கவேண்டும் என்பேன், அவர் ‘இல்லை’ என்று மறுப்பார். மேத்யூ ஹெய்டனுக்கு டீப் மிட்விக்கெட், டீப் ஃபைன்லெக் பீல்ட் செட் செய்து ஜாகீர் கானை விட்டு பவுன்சர் போடச் சொல்வேன்.

ஜாகீர் கான் அவுட் ஸ்விங்கர்களை வீசுவார். நான் அவரிடம் நேராகச் செல்வேன், “என்னவாயிற்று? என்னை ஏன் முட்டாளாக தெரியவைக்கிறாய்? என்பேன். அவர் என்னை தீர்க்கமாக பார்த்து விட்டு மேலும் ஒரு ஃபுல் அவுட்ஸ்விங்கரை வீசுவார்.

 

பிறகு ஆஷிஷ் நெஹ்ரா, அவரை உட்கார வைப்பதற்காக அவரை திருப்தி செய்வது மிகக்கடினம். இரவு 11 மணிக்கு எனது விடுதி அறை மணி ஒலிக்கும், நான் நெஹ்ராவுக்கு விளக்குவேன். அதே போல் ஹர்பஜன் சிங்கிடம் நியூசிலாந்தில் ஒருமுறை நேரடியாக தகராறு செய்து பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்ட ஒரே கேப்டன் நானாகவே இருப்பேன்.

நான் அனில் கும்ளேயிடம் சென்று இந்த போட்டியில் ஹர்பஜன் ஆடட்டும், இந்த சீசனில் அவர் 50 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்றால் அவர் என்ன தெரியுமா கூறுவார், “அதனால் என்ன நான் 400 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறேன்” என்பார். பிறகு யுவராஜ் சிங், இவர் போட்டிக்கு முன்பு விடுதி அறையில்தான் இருக்கிறாரா என்பதை நான் எப்போதும் உறுதி செய்து கொள்வது அவசியம்.”

 

இவ்வாறு தனது கேப்டன்சி அனுபவங்களை ஹிந்துஸ்தான்டைம்ஸ் நடத்திய தலைமைப் பண்பு குறித்த விவாதத்தில் கங்குலி மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6625229.ece

Link to comment
Share on other sites

வேகத்தை வெல்வோம்: கேப்டன் கோஹ்லி உறுதி
நவம்பர் 23, 2014.

அடிலெய்டு: ‘‘பந்துகள் எகிறும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் மிட்சல் ஜான்சனின் ‘வேகத்தை’ சந்திக்க தயாராக உள்ளோம்,’’ என, இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.            

ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தோனிக்கு காயம் காரணமாக பிரிஸ்பேனில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு (டிச.,4–8) மட்டும் கோஹ்லி கேப்டனாக செயல்பட உள்ளார்.

இது குறித்து கோஹ்லி கூறியது:

 

ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்க அனைத்து விதத்திலும் ஆயத்தமாக உள்ளோம். பந்துகள் எகிறும் ஆடுகளம் உட்பட இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு முன், மனதளவில் தயாராவது தான் முக்கியம். 

ஆஸ்திரலியாவின் மிட்சல் ஜான்சன் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீப காலமாக சிறப்பாக செயல்படுகிறார். இவரை எதிர்த்து விளையாடும் திறமை எங்களுக்கு உள்ளது. இவருக்கு கடும் சவால் கொடுப்போம்.

 

அணியின் கேப்டனாக இருப்பதை அதிகம் நேசிக்கிறேன். சக வீரர்களின் ஆதரவு இருக்கும் வரையில் இப்பணியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.              

கேலிப்பேச்சு: இங்குள்ள ‘ரவுடி’ ரசிகர்கள் எனக்கு கூடுதல் சுமையாக அமையும் என வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் எச்சரித்துள்ளார். இந்த அனுபவத்தை எதிர்கொள்ள காத்திருக்கிறேன். ஏற்கனவே கேலிப் பேச்சுகளை துவங்கி விட்டனர். இவற்றை எல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லை. 

அனுபவம் கைகொடுக்கும்: இரண்டு பயிற்சி போட்டிகளே போதும் என நினைக்கிறேன். இதை தேர்ந்தெடுக்கும் உரிமை எங்களிடம் கிடையாது. கடந்த முறை (2011–12) சச்சின், டிராவிட்டுடன் இங்கு டெஸ்ட் தொடரில் விளையாடினேன். வேகப்பந்துவீச்சு கைகொடுக்கும் ஆடுகளங்களில் சரியான ‘ஷாட்’ தேர்வு செய்வது முக்கியம் என தெரிந்து கொண்டேன். 30 அல்லது 40 ரன்கள் வரை தாக்குப்பிடித்து விட்டால், பின் விளையாடுவதற்கு சிறப்பாக இருக்கும். என் அனுபவத்தின் மூலம் இதை தெரிந்து கொண்டேன்.

 

ஆக்ரோஷ ஆட்டம்: கடந்த முறை ரசிகர்கள், என்னை கேலி செய்ய,  ‘விரல்’ சைகை காட்டி சர்ச்சையில் சிக்கினேன். இந்த முறையும் இது போன்ற சம்பவங்களை எதிர்பார்க்கலாம். இங்கு ஆஸ்திரேலியா பாணியில் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறோம். ‘பேட்’ மூலம் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம்.   இவ்வாறு கோஹ்லி கூறினார்.

 

பயிற்சியில் அசத்துமா           

இந்திய அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (2 நாள்) பங்கேற்கிறது. முதல் பயிற்சி போட்டி இன்று அடிலெய்டில் துவங்குகிறது. இதில் இந்திய வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1416764250/ViratKohliIndiaCricketAustraliaPracticeMatch.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8352c23be5e92b981353d32955bfb81b.jpg

 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக விளையாடியுள்ளது.

 
இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்குபெறும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது.
 
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4ம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
 
அதன்படி அவுஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணியுடன் இந்திய அணி மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்கியது.
 
அவுஸ்திரேலிய லெவன் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
 
52 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அவுஸ்திரேலயா லெவன் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசி அவுஸ்திரேலிய லெவனுக்கு தொடக்கத்தில் நெருக்கடி கொடுத்தனர்.
 
தொடக்க வீரர் ஷார்ட் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அணித்தலைவர் டர்பனர் 29 ஓட்டங்களிலும் ஸ்டீவென்ஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் வருண் ஆரோன் பந்தில் ஆட்டமிழந்தனர்.
 
பின்னர் ஸ்மித் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க நீல்சன் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினர். இதனால் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் அணி 71.5 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு சுருண்டது.
 
இந்திய பந்து வீச்சாளர்களில் வருண் ஆரோன் வேகமாக வீசினார் பந்துகள் எகிறின. இதனால் 3 முன்கள வீரர்களின் விக்கெட்டுகளை அவர் சாய்த்தார்.
 
புவனேஷ் குமார்,முகமது ஷமி மற்றும் கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார். முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.
 
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு அருமையான முதல் தினமாக அமைந்தது. 5 பிடியெடுப்பு ஒரு ஸ்டம்பிங் என்று 6 பேரை வீழ்த்துவதில் பங்களிப்பு செய்துள்ளார்.
 
பின்னர் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் முடிவதற்கு முன்பாக 16 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
முரளி விஜய் 32 ஓட்டங்களுடனும், புஜாரா 13 ஓட்டங்களுடனும் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=242363670724331508

Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க்

பிரிஸ்பன் மைதானத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் இடம்பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது இருநாள் பயிற்சி போட்டி நவம்பர் 28-29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக புதன் கிழமை அவர் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்.

அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் கிளார்க் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அணித் தேர்வுக்குழு தலைவர் ராட்னி மார்ஷ் கூறும்போது,

“இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் கிளார்க் விளையாட வேண்டும் என்பதே நோக்கம். அதில் அவரது உடல் தகுதி சரியாக அமைந்தால் மட்டுமே முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் விளையாடுவது உறுதி செய்யப்படும். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றாலும் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவரும் 100% உடல் தகுதி பெறுவது அவசியம்” என்றார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், மற்றும் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் இடம்பெற்றுள்ளனர். அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:

மைக்கேல் கிளார்க் (கேப்டன்), டேவிட் வார்னர், கிறிஸ் ராஜர்ஸ், ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், பிராட் ஹேடின், மிட்செல் மார்ஷ், ரியான் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஜான்சன், நேதன் லயன், பீட்டர் சிடில்

http://tamil.thehindu.com/sports/முதல்-டெஸ்ட்-போட்டி-ஆஸ்திரேலிய-அணியில்-மைக்கேல்-கிளார்க்/article6629814.ece?homepage=true

Link to comment
Share on other sites

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்
 

 

கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது.

அடிலெய்டில் நடைபெற்று வரும் 2 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சு சிறப்பாக செயல்பட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி மிகவும் இளம் அணியாகும். இரண்டு வீரர்கள் மட்டும்தான் 22 வயதுக்கும் அதிகமானவர்கள். அந்த அணிக்கு ஏ.ஜே.டர்னர் கேப்டனாக செயல்படுகிறார்.

டாஸ் வென்ற டர்னர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்திய பந்து வீச்சாளர்களில் வருண் ஆரோன் வேகமாக வீசினார், பந்துகள் எகிறின. இதனால் 3 முன்கள வீரர்களின் விக்கெட்டுகளை அவர் சாய்த்தார்.

 

புவனேஷ் குமார், மொகமது ஷமி மற்றும் லெக்ஸ்பின்னர் கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார். முன்னணி பவுலர்கள் அனைவருக்கும் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 71.5 ஓவர்களில் 219 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்டம் முடிவதற்கு முன்பாக 16 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

முரளி விஜய் 32 ரன்களுடனும், புஜாரா 13 ரன்களுடனும் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர், இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் ஓவரின் 5-வது பந்தில் புவனேஷ் குமாரிடம் மேத்யூ ஷார்ட் என்ற வீரர் ரன் எடுக்காமல் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு டர்னர், ரியான் கார்ட்டர்ஸ் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறகு வருண் ஆரோன் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டர்னரை எட்ஜ் செய்ய வைத்த ஆரோன், பிறகு நிக் ஸ்டீவன்ஸ் என்பவரை அபார வேகப்பந்தில் பவுல்டு செய்தார்.

 

அதன் பிறகு 4-வது விக்கெட்டுக்காக கார்ட்டர்ஸ், கெல்வின் ஸ்மித் அரைசதக் கூட்டணி அமைத்தனர். அப்போது ஸ்மித்தை புவனேஷ் குமார் வீழ்த்தினார். அதிக ஸ்கோர் என்ற வகையில் 58 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் கார்ட்டர்ஸ், சஹாவிடம் கேட்ச் கொடுத்து அஸ்வினிடம் வீழ்ந்தார்.

விருத்திமான் சஹாவிற்கு அருமையான முதல் தினமாக அமைந்தது. 5 கேட்ச்கள், ஒரு ஸ்டம்பிங் என்று 6 பேரை வீழ்த்துவதில் பங்களிப்பு செய்துள்ளார்.

அதன் பிறகு ஷமி, ஆரோன், கரன் சர்மா விக்கெட்டுகளைச் சாய்க்க 167/9 என்று ஆனது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன். ஆனால் அதிகம் அறியப்படாத ஹேரி நீல்சன் என்ற வீரர் 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்காக 52 ரன்கள் சேர்க்கப்பட்டது. கரன் சர்மா இன்னிங்சை முடித்த போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா 219 ரன்களை எட்டியிருந்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6629855.ece

Link to comment
Share on other sites

வருண் ஆரோன் வேகத்தில் அசந்து போன ஆஸ்திரேலியர்கள்; அஸ்வினை ஸ்லிப்பில் நிறுத்துவது சரியா?

 

 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அதிவேக பந்துகளை வீசிய வருண் ஆரோனைக் கண்டு ஆஸ்திரேலியர்கள் அசந்து போயுள்ளனர்.

இன்று அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வழக்கமாக போதுமான வேகத்துடன் ஸ்விங் பந்துகளை வீசும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து பழகிய ஆஸ்திரேலியர்கள் இன்று வருண் ஆரோன் வீசிய வேகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸி. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் நீண்ட நாளைய பயிற்சி தொடர்புடைய பயிற்சியாளர் டிரென்ட் உட்ஹில், வருண் ஆரோன் பற்றிய தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 2011ஆம் ஆண்டு டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் பயிற்சி முகாமில் வருண் ஆரோனை தான் முதன் முதலில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

 

”விமானத்தில் வந்த என் களைப்பா, தூக்கக் கலக்கமா என்று புரியவில்லை, வருண் ஆரோன் உண்மையில் அதிவேகமாக வீசினார். இந்தியாவில் பந்துகள் விக்கெட் கீப்பரிடம் செல்லும் முன் செத்து விடும், ஆனால் இவரது பந்துகள் மேலும், மேலும் எகிறியபடி சென்றன” என்றார்.

இன்றைய பயிற்சி ஆட்டத்தில் வருண் ஆரோன் பந்து வீச்சைப் பார்த்த பிறகு அவர் கூறும் போது, “பிரிஸ்பன் பிட்சில் வருண் ஆரோன் வீசுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அந்த வேகத்தில் அவர் பந்தின் தையல் பகுதி தரையில் படுமாறு வீசுவது அரிதானது. தையல் தரையில் படாமல் வேகமாக வீசுவது என்பதல்ல இவரது வேகப்பந்து வீச்சு முறை. டெஸ்ட் போட்டிகளில் வருண் ஆரோன் மணிக்கு 140 கிமீ மற்றும் அதற்கும் அதிகமான வேகத்தில் வீசாவிட்டால் நான் பெருத்த ஏமாற்றமடைவேன். மிட்செல் ஜான்சன் வேகத்திற்கு வருண் ஆரோன் ஈடுகொடுப்பார் என்றே கருதுகிறேன்.

 

விராட் கோலி தலைமையிலான இளம் இந்திய அணியிடத்தில் தங்கள் திறமைகள் மேல் நல்ல நம்பிக்கை உள்ளது. இப்போது, எதிரணியினரின் மரியாதையைப் பெறுவது மட்டும் இந்திய அணியின் நோக்கமாக இருக்காது, அவர்கள் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்த சித்தமாயிருப்பதாகவே நான் நினைக்கிறேன்” என்றார் அவர்.

இன்று அதிகபட்சமாக 58 ரன்களை எடுத்த ரியான் கார்ட்டர்ஸ், வருண் ஆரோன் பற்றி கூறும்போது, “வருண் ஆரோன் நிச்சயம் வேகமாக, ஆக்ரோஷமாக வீசுவார் என்பதை நான் அறிவேன், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பந்து வீச்சை எதிர்கொண்டேன், அவரது வேகத்தில் மாற்றமில்லை. அவர் சில அதிவேக பவுன்சர்களை இன்று வீசினார். இது எங்கள் நடுக்கள பேட்ஸ்மென்களுக்கு சில சேதங்களை விளைவித்தது. ஆனாலும், சில வேளைகளில் அவரை சரியாகவே விளையாடினோம் என்றே நினைக்கிறேன்” என்றார்.

 

அஸ்வினை ஸ்லிப் பீல்டராகக் கருத முடியுமா?

இந்தியா, இந்த ஆஸ்திரேலியத் தொடரில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அது ஸ்லிப் கேட்சிங் மூலமாகவே முடியும். இங்கிலாந்தில் ஏகப்பட்ட கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. ஜடேஜா விட்ட கேட்சினால் ராஜஸ்தான் பவுலர் பங்கஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வே கேள்விக்குறியானது நினைவிருக்கலாம். விராட் கோலி உட்பட ஸ்லிப்பில் கேட்ச்களை கோட்டை விட்டனர். அஸ்வின் ஒரு போதும் இதற்கு மாற்று கிடையாது. வேகப்பந்துகளுக்கான அவரது நகர்வு, ரிஃப்ளெக்ஸ் டெஸ்ட் தரத்திற்கு உயர்ந்ததாக இல்லை என்பது தெளிவு.

 

இன்று, முதல் ஸ்பெல்லில் கேப்டன் ஆஷ்டன் டர்னர் மற்றும் நிக் ஸ்டீவன்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை 3 பந்துகள் இடைவெளியில் கைப்பற்றினார் ஆரோன்.

ஆனால் 2-வது ஸ்பெல்லில் கெல்வின் ஸ்மித் (40) என்ற கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியின் சிறந்த பேட்ஸ்மெனுக்கு தனது வேகத்தினால் எட்ஜ் எடுக்க வைத்தார் வருண் ஆரோன். முதல் ஸ்லிப்பில் அது ஒரு சாதாரணமாக பிடிக்கப்பட வேண்டிய கேட்சாகவே இருந்தது ஆனால் அதனைக் கோட்டை விட்டார் ரவிச்சந்திரன் அஸ்வின். பசுந்தரை ஆட்டக்களத்தில் வருண் ஆரோனின் எகிறும் பந்துகளுக்கு முதல் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்கக் கூடிய திறமை மிக்கவர்தானா அஸ்வின் என்ற சிந்தனை ஒரு கேப்டனுக்கு இருப்பது அவசியம்.

 

நாளை டேவிட் வார்னர், வாட்சன், கிளார்க் போன்ற வீரர்களுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த டெய்ல் எண்டர்களுக்குக் கூட கேட்ச் விடுவது பந்து வீச்சாளர்களை தண்டிக்கும் செயல் ஆகும்.

எனவே, ஸ்லிப் பீல்டிங்கை துல்லியமாக்குவதோடு, முதலில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் ஸ்லிப்பில் எந்த தூரத்தில் எந்த கோணத்தில், நின்றால் சவுகரியமாக இருக்கும் என்பதை அறுதியிடுவது அவசியம், இதற்கு ரவிசாஸ்திரி உள்ளிட்டவர்கள் உதவி புரிய வேண்டும். முதலில் ஸ்லிப்பில் யார் யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் இவர் சரியில்லையா, அடுத்தவர் அவரும் சரியில்லையா அடுத்தவர் என்ற சிந்தனைப் போக்கு மாறுவது அவசியம். இப்படி தோனி இங்கிலாந்தில் செய்ததால்தான் கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன.

 

2004-ஆம் ஆண்டு இந்திய அணி கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது திராவிட், லஷ்மண் என்று அபார ஸ்லிப் பீல்டர்கள் இருந்தனர். இயன் சாப்பல், குறிப்பாக பலமான ஆஸ்திரேலிய பேட்டிங்கை பிரிஸ்பன் மைதானத்தில் 323 ரன்களுக்கு இந்தியா மட்டுப்படுத்திய போது, லஷ்மண் உள்ளிட்ட ஸ்லிப் பீல்டர்களின் பங்களிப்பை பெரிதும் பாராட்டினார்.

 

இந்தத் தொடரிலும் ஸ்லிப் கேட்சிங் என்பது மிகமிக முக்கியம். இதனை விடுத்து அஸ்வினைக் கொண்டு போய் ஸ்லிப்பில் நிறுத்துவது ஒரு போதும் சரியான தீர்வை அளிக்காது.

அவரவர்கள் தங்கள் சொந்த பார்மை நினைத்து கவலைப்படுவது இப்போதெல்லாம் இந்திய அணி வீரர்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. இதனால் ஸ்லிப்பில் நின்று கொண்டு அந்தப் பந்தை நானாக இருந்தால் இப்படி ஆடியிருப்பேன் அல்லது இப்படி ஆடவேண்டும் என்று யோசனை செய்து கொண்டு கவனத்தை இழக்கின்றனர். பந்துவீச்சாளர்களோ ஒரு பேட்ஸ்மெனுக்கு சில உத்திகளை வகுத்து அதற்கேற்ப களவியூகத்தையும், பந்தை எங்கு பிட்ச் செய்வது என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுகின்றனர். இவர்களை ஊக்குவித்து வெற்றியைச் சாதிக்கும் கூட்டு மனோபாவமே இந்திய அணிக்கு தேவை. இதுவே ஸ்லிப் பீல்டிங்கிலும் கேட்ச்சிங்கிலும் வெளிப்படும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6630434.ece

Link to comment
Share on other sites

பயிற்சி போட்டி ’டிரா’: கோஹ்லி அரை சதம்
நவம்பர் 24, 2014.

 

அடிலெய்டு: இந்தியா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் பங்கேற்ற முதல் பயிற்சி போட்டி ‘டிரா’ ஆனது. இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அரை சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. இதற்கு முன், இந்திய  அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (2 நாள்)  பங்கேற்கிறது. முதல் பயிற்சி போட்டி அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் சி.ஏ., லெவன் அணி 219 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

 

முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் (32), புஜாரா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முரளி விஜய் அரை (51)  சதம் கடந்தார். தன் பங்கிற்கு அரை (55) சதம் அடித்த புஜாரா காயத்தால் வௌியேறினார். சிறப்பாக செயல்பட்ட கேப்டன் விராத் கோஹ்லி 60 ரன்கள் எடுத்தார். ரகானே (1), ரோகித் சர்மா (23) ஏமாற்றினர், அஷ்வின் 6 ரன்களில் திரும்பினார். ரெய்னா 44 ரன்கள் எடுத்தார். பொறுப்புடன் விளையாடிய விரிதிமன் சகா, கரண் சர்மா அரை சதம் அடித்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 363 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. விரிதிமன் சகா (56), கரண் சர்மா (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரு அணிகள் பங்கேற்கும் இரண்டாவது பயிற்சி போட்டி வரும் 28ம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1416810566/IndiaCricketAustraliaXIPracticeMatchCricketVarunAaron.html

Link to comment
Share on other sites

குழப்பம் ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோபத்திற்கு ஆளான மைக்கேல் கிளார்க்
 

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிளார்க் விளையாடும் விஷயத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு கிளார்க் எந்த வகையில் பொறுப்பு என்ற விளக்கத்தை அவரிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கேட்டுள்ளது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் கிளார்க் விளையாடப்போவதில்லை என்பது இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பிலிப் ஹியூஸ் பவுன்சரில் அடிபட்டு உயிருக்குப் போராடி வருவதால் இந்த அறிவிப்பை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

பிலிப் ஹியூஸ் அனுமதிக்கப்பட்டுள்ள செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனையில் ஹியூஸ் குடும்பத்தினருடன் மைக்கேல் கிளார்க் இருந்து வருகிறார்.

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நோக்கத்தில் காயமடைந்த மைக்கேல் கிளார்க் காட்டிய தீவிரம், கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அவர்களுக்கு கிளார்க் மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.

அணித் தேர்வுக் குழு தலைவர் ராட்னி மார்ஷ், அன்று முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவிக்கும் போது கேப்டன் மைக்கேல் கிளார்க் பெயரையும் அறிவித்தார். ஆனால் உடற்தகுதி நிரூபிக்கப்பட்டால்தான் அவர் ஆடுவார் என்றும் இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடி உடற்தகுதியை நிரூபிப்பார் என்றார்.

ஆனால் இவரது கூற்றுக்கு மாறாக, மைக்கேல் கிளார்க், சிட்னியில் உள்நாட்டு கிரிக்கெட் ஒன்றில் விளையாடுவேன் என்றார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இது தற்போது விசாரணையில் உள்ளது.

 

தனது உடற்தகுதியை நிரூபிப்பதில் அணித் தேர்வுக்குழுவின் அறிவிப்பிற்கு முரணாக வேறொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன், கிளார்க் விளக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் விளக்கம் கேட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article6633148.ece

 

Link to comment
Share on other sites

பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி உட்பட 5 வீரர்கள் அரைசதம்
 

 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் 5 பேட்ஸ்மென்கள் அரைசதம் கண்டனர். ஆட்டம் டிரா ஆனது.

அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில், 55/1 என்று இருந்த இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் (51), புஜாரா (55) ஆகியோர் அரைசதம் எடுத்தவுடன் ரிட்டையர்டு அவுட் ஆயினர்.

 

விராட் கோலியும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் 114 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா அதிரடி முறையில் 49 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்களை எடுக்க, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 75 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

மிகப்பெரிய விஷயம் என்னவெனில், லெக் ஸ்பின்னர் கரன் சர்மா, 54 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

புஜாரா மிக அழகாக ஆடினார். 80 பந்துகளில் அவர் 11 அழகான பவுண்டரிகளை அடித்தார். தவன் நேற்று ஏமாற்றமளிக்க இன்று அஜிங்கிய ரஹானே 1 ரன் எடுத்து 16-வயது ஆஃப் ஸ்பின்னர் சாம் கிரிம்வேட் என்பவரிடம் அவுட் ஆனார். மிட் ஆஃபில் ரயான் கார்ட்டர்ஸ் அபாரமான டைவிங் கேட்சை பிடித்தார்.

 

தோனி இடத்தில் சஹா முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது. அணித் தேர்வு கடினமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

முரளி விஜய், ஷிகர் தவன், புஜாரா, கோலி, ரஹானே, ரெய்னா, கரன் சர்மா, இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், வருண் ஆரோன், மொகமது ஷமி என்று இந்திய அணி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெய்னாவுக்கு பதில் ரோஹித் சர்மா வேண்டுமானால் இடம்பெறலாம். பிரிஸ்பன் பிட்ச் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கரன் சர்மாவுக்குப் பதில் உமேஷ் யாதவ் கூட தேர்வு செய்யப்படலாம்.

ஆனால், கோலியும், அணி நிர்வாகமும் என்ன முடிவு செய்யும் என்று டிச.4-ஆம் தேதியே தெரியவரும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6633008.ece

Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட்: கிளார்க் ‘அவுட்’
நவம்பர் 25, 2014.

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக, ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க், 33. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இடதுகால் தொடையின் பின்பகுதியில் காயமடைந்தார். இதனால் பின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால், இவர் பிரிஸ்பேன் டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில்,‘‘ இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் கிளார்க் பங்கேற்று, தனது காயத்தின் தன்மை குறித்து நிரூபிக்க வேண்டும் என தெரிவித்தோம். ஒருவேளை, இவர் இதில் பங்கேற்காவிடில், காயம் சரியாக ஒரு வார காலம் தேவைப்படும். இதன்படி, இவர் பயிற்சியில் கலந்து கொள்ளாததால், இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் பங்கேற்க மாட்டார்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்தபத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கிளார்க்குப்பதில், துணை கேப்டன் பிராட் ஹாடின் அணியை வழிநடத்த வாய்ப்பு உள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1416933651/ClarkeoutAustraliasquadindiatest.html

Link to comment
Share on other sites

பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து 2-வது பயிற்சி ஆட்டம் ரத்து
 

 

நாளை(வெள்ளி) நடைபெறுவதாக இருந்த இந்திய அணியின் 2-வது பயிற்சி ஆட்டம் பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சி அமர்வு முடிந்து வலைப்பயிற்சிக்கு தயாரான நிலையில் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி மைதானத்திற்கு வந்து பிலிப் ஹியூஸ் மரணமடைந்த செய்தியை அறிவித்தார்.

உடனடியாக வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

 

பிலிப் ஹியூஸ் குடும்பத்திற்கு இந்திய அணி தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது:

“இந்தத் துயரத்திலிருந்து அவர்கள் மீள கடவுள் கைகொடுப்பார். சக கிரிக்கெட் வீரர்களாக கிரிக்கெட் ஆட்டத்திற்கு பிலிப் ஹியூஸ் செய்த பங்களிப்பை பெரிதும் மதிக்கிறோம்” என்றனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6640175.ece

Link to comment
Share on other sites

பிலிப் ஹியூஸ் துயரம்: முதல் டெஸ்ட் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு
 

 

மரணமடைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு புதன்கிழமை அவரது சொந்த ஊரில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு எதிரான டிச.4-ஆம் தேதி தொடங்கவிருந்த முதல் டெஸ்ட் போட்டி தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் வீரர்கள் பங்கேற்க டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்பட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு பிரிஸ்பனுக்கும் சிட்னிக்கும் இடையேயுள்ள மாக்ஸ்வில் என்ற ஊரில் நடைபெறுகிறது.

இந்திய கிர்க்கெட் வாரியமும், இந்திய வீரர்களும் இத்தகைய திடீர் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்கு சானல் 9-ல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்திலும் லைவ் ஸ்ட்ரீமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6646398.ece

Link to comment
Share on other sites

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தள்ளிவைப்பு: புதன்கிழமை நடக்கிறது பிலிப் ஹியூஸ் இறுதிச்சடங்கு
 

 

பிரிஸ்பேனில் வரும் 4-ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் தேதி இறுதி செய்யப்படவில்லை.

பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறுவதால் முதல் டெஸ்ட் போட்டியை தள்ளிவைத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடர் வரும் 4-ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில், உள்ளூர் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் தாக்கியதில் மரணமடைந்தார். கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ள ஹியூஸின் மரணத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

இதனால் முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு வருகிற புதன்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதனால் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிலிப் ஹியூஸின் மரணத்தினால் கிரிக்கெட் உலகம் துக்கத்தில் இருப்பதால், டிசம்பர் 4-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குவதாக இருந்த முதல் டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்படுகிறது. பிலிப் ஹியூஸின் சொந்த ஊரான மேக்ஸ்வில்லேவில் அவர் படித்த பள்ளியில் அவருடைய இறுதிச்சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது. அதனால் அடுத்த நாள் தொடங்குகிற டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வது சாத்தியமில்லை.

பிசிசிஐ மற்றும் இந்திய அணியினர் எங்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறார்கள். முதல் டெஸ்டை தள்ளிவைப்பது குறித்து, ஆஸ்திரேலிய வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என பல தரப்பினருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

 

ஹியூஸின் இறுதிச்சடங்கு நிகழ்வின்போது அவர் படித்த மேக்ஸ்வில்லேவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹியூஸின் வாழ்க்கை மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தப்படும். 2006-ல் கிரிக்கெட் கனவுகளுடன் சிட்னிக்கு இடம்பெயரும் முன்பு ஹியூஸ் அந்தப் பள்ளியில்தான் படித்தார்.

பிரிஸ்பேன் டெஸ்டுக்கு டிக்கெட் வாங்கியவர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று எண்ணுவார்கள். ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை போட்டி தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரை பத்திரப்படுத்தி வைக்கவும். பலருடன் விவாதித்து முடிவெடுக்க வேண்டியிருப்பதால் ரசிகர்கள் பொறுமை காக்கவேண்டும்“ என்று குறிப்பிட்டுள்ளது.

 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறும்போது, “ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய சகவீரரான ஹியூஸின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அடுத்தநாளே டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. வீரர்களின் நலன் தான் முக்கியம்” என்றார்.

பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு சேனல் 9-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஹியூஸிடம் கில்கிறிஸ்ட் சாயல்: முன்னாள் கேப்டன் பாண்டிங்

மறைந்த பிலிப் ஹியூஸ் பற்றி ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையில் முன்னாள் கேப்டன் பாண்டிங் எழுதியிருப்பதாவது:

தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது, ஹியூஸிடம் சென்று பேசினேன். கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். தென் ஆப்பிரிக்க அணியினரின் பவுலிங் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் அவர்களுடைய பந்துகளை எல்லாப் பக்கமும் அடித்து ஆடினார். ஹியூஸின் வழக்கத்துக்கு மாறான ஸ்டிரோக்குகளைக் கண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆச்சர்யமடைந்தனர். 20 வயது புதிய வீரர், ஸ்டெயின் பந்தை அவர் தலைக்கு மேல் அடிக்கக்கூடாது. ஆனால் ஹியூஸ் அதை செய்தார். டர்பன் டெஸ்டில் ஹியூஸ் ஆடிய விதத்தில் கில்கிறிஸ்டின் சாயலைப் பார்க்க முடிந்தது. ஸ்டீவ் வா, ஜஸ்டின் லாங்கர் போல பேட்டிங்கை மிகவும் விரும்பினார். அதனால்தான் ஹியூஸால் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன் குவிக்க முடிந்தது.

ஸ்டீவ் வா மகனை பாதித்த ஹியூஸின் மரணம்

ஹியூஸ் மரணம் பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வா கூறியதாவது:

‘‘ஹியூஸ், என் மகனிடம் உரையாடியதால் அவர் மீது மரியாதை இருந்தது. என் மகனிடம் ஹியூஸின் மரணம் பற்றி சொன்னபோது மிகவும் உடைந்துபோனான். ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறைக்கு என் மகன் ஆஸ்டினை அழைத்து செல்வேன். என்னிடம் ஹலோ மட்டும் சொல்லிவிட்டு ஆஸ்டினிடம் நீண்ட நேரம் கிரிக்கெட் பற்றி பேசுவார். ஹியூஸ் 26 டெஸ்டுகளில் 5 முறை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது நான் என்னுடைய 26-வது டெஸ்ட் வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. தன்னை நிரூபிக்க ஹீயூஸூக்கு போதிய அவகாசம் தரப்படவில்லை” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6648545.ece

 

Link to comment
Share on other sites

அடிலெய்டில் முதல் டெஸ்ட் *அட்டவணையில் மாற்றம்
டிசம்பர் 01, 2014.

 

அடிலெய்டு: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் குறித்த குழப்பம் முடிவுக்கு வந்தது. மறைந்த பிலிப் ஹியுசிற்கு கவுரவம் அளிக்கும் விதமாக, அவரது இரண்டாவது தாயகமான அடிலெய்டில் முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி துவங்குகிறது.      

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 4ம் தேதி பிரிஸ்பேனில் துவங்க இருந்தது.

இந்தச் சூழலில், சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில், சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மேக்ஸ்விலியில் வரும் 3ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களுடன், கோஹ்லி உள்ளிட்ட சில இந்திய வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால் பிரிஸ்பேனில் வரும் 4ம் தேதி துவங்க இருந்த முதல் டெஸ்ட், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்த போட்டியை நடத்துவது தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அட்டவணையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி ஹியுசின் இரண்டாவது தாயகமான அடிலெய்டில், முதல் டெஸ்ட் போட்டியை(டிச.,9-13) நடத்த முடிவு செய்யப்பட்டது. பின், இரண்டாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் வரும் 17ல் ஆரம்பமாகிறது. மூன்றாவது டெஸ்ட் (டிச., 26-30) திட்டமிட்டபடி நடக்கும். சிட்னியில் அடுத்த ஆண்டு ஜன., 3ல் துவங்க இருந்த நான்காவது டெஸ்ட் ஜன., 6க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான மாற்று அட்டவணையை பி.சி.சி.ஐ., தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டது.           

இதனையடுத்து, பயணத்திட்டத்தின்படி நேற்று பிரிஸ்பேன் செல்ல இருந்த இந்திய அணியினர், அடிலெய்டிலேயே தங்கினர்.                 

 

வருவாரா தோனி           

கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு தோனி செல்லவில்லை. தற்போது முதல் டெஸ்ட்  வரும் 9ம் தேதி தான் துவங்குகிறது. போதிய கால அவகாசம் இருப்பதால், இதில் தோனி பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, காயத்தில் இருந்து மீண்ட மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கேப்டனாக களமிறங்க வாய்ப்புள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/12/1417455029/AdelaideconfirmedasfirstTestvenue.html

Link to comment
Share on other sites

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அணியுடன் இணைகிறார் தோனி: யார் கேப்டன்?
 

 

இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைகிறார்.

அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிச.9-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன் கேப்டன் தோனி அணியினருடன் இணைகிறார்.

 

பிரிஸ்பன் மைதானத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த முதல் டெஸ்ட் போட்டி பிலிப் ஹியூஸ் துயரத்தை அடுத்து தள்ளி வைக்கப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இப்போது டிச.9-ஆம் தேதிக்கு 2-வது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. தோனியும் அணியினருடன் இணைகிறார். இதனால் விராட் கோலிக்கு கிடைத்த கேப்டன்சி வாய்ப்பு பறிபோகும் என்றே தெரிகிறது.

 

புதிய பயண அட்டவணையின் படி டிச.9-ஆம் தேதி முதல் டெஸ்ட். டிச.17-22 ஆகிய தேதிகளில் பிரிஸ்பனில் 2-வது டெஸ்ட் நடைபெறும், டிசம்பர் 26ஆம் தேதி வழக்கம் போல் மெல்பர்னில் பாக்சிங் டே டெஸ்ட், சிட்னியில் ஜனவரி 6-ஆம் தேதி 4-வது டெஸ்ட் நடைபெறுகிறது.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியினர் தங்களது 2-வது பயிற்சி ஆட்டத்தை டிச.4ஆம் தேதி விளையாடுகின்றனர். இந்த பயிற்சி ஆட்டத்திற்கு தோனி வரமாட்டார். அதன் பிறகு ஆஸ்திரேலியா வருகிறார். எப்படியும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அணியினருடன் இணைவதால் தோனியே கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா..

மாக்ஸ்வில் என்ற ஊரில் நாளை நடைபெறும் மறைந்த பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா, முரளி விஜய், அணி இயக்குநர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர், அணி மேலாளர் அர்ஷத் அயூப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

 

நாளை ஆஸ்திரேலிய நேரப்படி மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, இதனை அனைத்து முக்கியச் சானல்களும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுத் திரும்பும் ஆஸ்திரேலிய அணியினர் வியாழனன்று அடிலெய்டில் பயிற்சியை தொடங்குகின்றனர்.

இதற்கிடையே, பிலிப் ஹியூஸ் மரணத்தின் துக்கத்தைத் தாங்க முடியாத எந்த வீரரும் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகிக்கொள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article6655040.ece

Link to comment
Share on other sites

பயிற்சி ஆட்டத்தில் விஜய், கோலி, ரஹானே, சஹா அரைசதம்
 

 

அடிலெய்டில் நடைபெற்ற இந்தியா-கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் 4 இந்திய வீரர்கள் அரைசதம் எடுத்தனர். இந்தியா 375 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டம் டிரா ஆனது. இசாந்த் சர்மா 5 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆரோன், உமேஷ், கரன் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக முரளி விஜய் 39 ரன்களுடனும், விராட் கோலி 30 ரன்களுடனும் முதல் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தனர். உணவு இடைவேளையின் போது 236/4 என்று இருந்தது இந்தியா. கோலி 94 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கும், முரளி விஜய் 60 ரன்களுக்கும் ரிட்டையர்ட் அவுட் ஆயினர்.

கோலிக்கு ஒரு கேட்ச் விடப்பட்டது. விஜய், கோலி இணைந்து 123 ரன்கள் சேர்த்தனர். முதல் நாளில் இந்தியா 36/2 என்று சரிவு கண்ட போது இவர்கள் இன்னிங்ஸை நிலை நிறுத்தினர்.

 

அஜிங்கிய ரஹானே 64 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு அவுட் ஆனார். ரோஹித் சர்மா 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மீண்டும் அரைசதம் கண்டார். அவர் 67 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.

சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 20 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்களையும் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 243 ரன்களுக்குச் சுருண்டது. மொகமது ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மீண்டும் ஆக்ரோஷமாக வீசிய வருண் ஆரோன் 14.3 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லெக்ஸ்பின்னர் கரன் சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6664916.ece

Link to comment
Share on other sites

ஆஸி. டெஸ்ட் தொடரில் இந்தியா கடும் சவாலை சந்திக்கும்: வாஸிம் அக்ரம்
 

பவுன்சர் தாக்கி மரமணடைந்த பிலிப் ஹியூஸுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி கடுமையாகப் போராடும். அதனால் இந்திய அணி கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 9-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது தொடர்பாக வாசிம் அக்ரம் கூறியதாவது: ஆஸ்திரேலிய வீரர்கள் உண்மையிலேயே கடினமாக ஆடுவார்கள். இந்திய அணி அதற்குத் தயாராக இருக்கவேண்டும். பிலிப் ஹியூஸுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் தொடரை வெல்ல நினைப்பார்கள். ஆஸ்திரேலியா வலுவான அணி. அதனால் இந்திய வீரர்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.

 

பிலிப் ஹியூஸ் மரணத்தால் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பவுலர்கள் பவுன்சர் வீசுவதை நிறுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இவ்வளவு நடந்தபிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டும் ஆடுகளத்துக்குத் திரும்புவது கடினம்தான். சில நாட்கள் ஆன பிறகு மைதானத்துக்குச் சென்று மீண்டும் பயிற்சியில் ஈடுபடும்போது இயல்பாகிவிடுவார்கள். பொதுவாக பவுன்சர் வீசுகிற ஒரு பவுலரின் நோக்கம் பேட்ஸ்மேனை அச்சுறுத்துவதுதான். பவுன்சரின் நோக்கம், விக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்ல. ஆனால் அதன் வழியாக விக்கெட் விழுந்தால் நல்லதுதான். பேட்ஸ்மேனுக்குப் பயத்தை ஏற்படுத்தி பேக்புட்டில் நின்று ஆடவைப்பதற்காகவே பவுன்சர் வீசப்படுகிறது. காயப்படுத்துவதற்காக அல்ல.” என்றார்.

 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பவுன்சர் பந்துகளால் அதிகம் பாதிப்படைவதற்கு காரணம், இந்த இரு நாடுகளிலும் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காரணமா என்று கேட்டபோது, “இந்தியாவைப் பற்றி தெரியவில்லை. ஆனால், உலகம் முழுக்க கிரிக்கெட் உபகரணங்களின் தரம் முன்னேறியுள்ளது. உபகரணங்களின் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்ஆகிய இரு தரப்பினரும் உபகரணங்கள் தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் உள்ளன. உள்ளூர் போட்டிகளில் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்று தெரியாது. ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட் உபகரணங்களின் தரம் இப்போது கூடியுள்ளது” என்றார்.

பிலிப் ஹியூஸ் மரணம் பற்றி பேசிய அக்ரம, “பவுன்சர் வீசிய சீன் அபாட்டை நினைத்துப் பாருங்கள். நான் அவரிடம், நடந்த சம்பவத்தை சுலபமாக எடுத்துக்கொள்ள சொல்வேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அபாட்டின் மீது தவறு இல்லை. அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் நிச்சயம் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார்.” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6664624.ece

Link to comment
Share on other sites

அடிலெய்ட் டெஸ்டின் முதல் பந்து பவுன்சராக இருக்க வேண்டும்: பாண்டிங் விருப்பம்
 

 

பிலிப் ஹியூஸின் அகால மரணத்தினால் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒருவகை கசப்புணர்வுக்கு மருந்து டெஸ்ட் போட்டியின் முதல் பந்து பவுன்சர்தான் என்கிறார் ரிக்கி பாண்டிங்.

'தி ஆஸ்திரேலியன்’ என்ற செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

"செவ்வாய்க்கிழமை அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் பந்து பவுன்சராக இருக்க ஆசைப்படுகிறேன். இது கசப்புணர்வை அகற்றும். ஆட்டம் தொடங்கியது என்று அறிவிப்பது போல் அமையும். அப்படி அமைந்தால் அனைவருக்கும் அது ஒரு குணப்படுத்தும் முயற்சியாக இருக்கும், குறைந்தது குணப்படுத்துதலை தொடங்கவாவது செய்யும்.

இதற்கு முன்பாக வீரர்களுக்கு ஏற்பட்ட எந்த ஒரு உணர்வும், பிலிப் மரணத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் மனநிலையுடன் ஒப்பிட முடியாதது.

 

இது வரை பயணம் செய்யாத நீரில் அவர்கள் நீந்த வேண்டும். அதாவது இதுவரை நீந்தாத அளவுக்கு ஆழமாக நீந்துவது அவசியம்.

மிகப்பெரிய மனப்போராட்டத்தை வீரர்கள் சந்தித்துள்ளனர். ஆனால் இதிலிருந்து மீண்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.

சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரையும் போல் கிரிக்கெட் வீரர்களும் பணியில் ஈடுபட்டு கடினமான கட்டத்தை கடக்க வேண்டும்.” என்று அந்த பத்தியில் கூறியுள்ளார் பாண்டிங்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article6667960.ece

Link to comment
Share on other sites

முதல் டெஸ்டில் தோனி விளையாட வாய்ப்பு: ஷிகர் தவன் சூசகம்
 

 

செவ்வாய் கிழமை தொடங்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோனி கேப்டனாக செயல்பட வாய்ப்பிருப்பதாக தொடக்க வீரர் ஷிகர் தவன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

"விராட், தோனி இருவருமே ஆக்ரோஷமான கேப்டன்கள். ஆனாலு நிச்சயமான வித்தியாசம் உள்ளது. விராட் கோலி களத்தில் கூடுதல் உயிர்ப்புடன் செயல்படுவார். இருவரின் கேப்டன்சியில் விளையாடுவதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. எனினும் இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமையேற்று நடத்த இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கலாம், ஏனெனில் தோனி இங்கு வந்துவிட்டார்” என்றார்.

 

அதன் பிறகு ஆஸ்திரேலிய பந்து வீச்சு மற்றும் இந்த தொடர் பற்றி அவர் கூறும் போது,

“ஜான்சன் தற்போது உலகின் தலைசிறந்த வீச்சாளர்களில் ஒருவர். அவரிடம் ஒரு ஆக்ரோஷமான வேகம் உள்ளது. ஆனாலும் நாங்கள் அந்த வேகத்தை எதிர்கொள்ள பயிற்சியை நன்றாகவே செய்துள்ளோம். இந்தியாவில் இவரை நிறைய முறை எதிர்கொண்டுள்ளேன், சர்வதேச போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என்று இவரை எதிர்கொண்டுள்ளேன். ஆஸ்திரேலியாவில் அவரை இப்போதுதான் எதிர்கொள்ளவிருக்கிறேன், எனவே இது ஒரு மிகப்பெரிய சவால். அவரை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வேன் என்றே கருதுகிறேன்.

ஆக்ரோஷமான ஒரு தொடக்க வீரர் அவசியம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் கூறவில்லை, மாறாக, பொதுவாகவே அது எந்த அணிக்கும் நல்லது.

நான் நம் அணிக்காக அந்த ரோலை செய்ய விரும்புகிறேன். நான் இதில் வெற்றிபெற்று விட்டால் இந்திய அணிக்கு மிகவும் நல்லது.

நான் எனது தோல்விகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அது என்னை மேலும் மெருகடையச் செய்திருக்கிறது. கணினி, பயிற்சியாளர்கள் என்று ஆலோசனை செய்து எனது ஆட்டத்தை பரிசீலனை செய்து வருகிறேன்.

 

இந்தியாவுக்காக இது எனது முதல் ஆஸ்திரேலிய பயணம். ஆனால் இந்தியா ஏ அணிக்காக இங்கு ஏற்கெனவே ஆடியுள்ளேன். பிரிஸ்பன் மைதானத்தில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன்.

எனது மனைவி, குழந்தைகள் இங்கு மெல்பர்னில் இருக்கிறார்கள். அதனால் நான் அடிக்கடி ஆஸ்திரேலியாவுக்கு வருவேன். இது எனக்கு அலுப்பூட்டுகிறது. ஒவ்வொரு முறை குடும்பத்தைப் பார்க்க 13 அல்லது 14 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. என் நாட்டிலிருந்து இது வெகுதூரம் உள்ளது.

இந்தத் தொடரில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை நல்ல உணர்வுடன் ஆட வேண்டும் என்பதே எனது திட்டம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6668203.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.