Jump to content

மாவீரர் தினம் 2014 சிறப்பு பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி.

ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது.

அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு என்ற கோட்பாட்டுடன் மேடையேறியது. இவனா நண்பன் என்ற மண் மணம் சுமந்த நாட்டுக்கூத்து. இதில் எம்மேடைகளுக்கு முற்றிலும் புதிதான இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களுள் ஒருவனாக உள்வந்த ஒரு கவிஞன் அன்று முதல் தன்னை தன் தேசத்தின் விடுதலைச் செயற்பாட்டுடன் இணைத்துக் கொண்டான்.

ஆம் நாம் எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது. இலக்கியச் சிந்தனை விடுதலை தாகம் சமூக பொறுப்புணர்வுமிக்க ஒரு முற்போக்கு கவிஞனாகவே எமது விடுதலை இயக்கம் கயனை உருவாக்கியது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் ஒரு நடுத்தர வர்க்க உழைப்பாளர் குடும்பத்தின் தலைமகனாக பிறந்த கயன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவன். இனவாத புயல் எம் தேசத்தின் வேலிகளை பிய்த்தெறிந்த போது பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்ற மரப ரீதியான சமூக நியதியினால் கட்டாயத்தின் நிமித்தம். இந்த மேற்குலகு நோக்கி பயணித்தவன்.

தன் சகோதரர்களை ஆழமாக நேசித்த அவன் தன் இளமைப் பொழுதுகளை பாரிஸ் நகரத்தின் அடிப்படைத் தொழிலாளர் வர்க்கத்துடன் கலந்தே பணியாற்ற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டான். குடும்பப் பாசம் கொண்ட கயன் மௌனமாக இருந்தாலும் அவனுக்குள் எழுந்த விடுதலை தாகம் அவனை நீண்டகாலம் மௌனிக்கவிடவில்லை. தன் குடும்பத்தை கவனித்தவாறு தன் போனாவினால் அடக்குமுறை மீது போர்த் தொடுத்தான். இயக்கத்தின் கலை பண்பாட்டு பிரிவிற்காக கலாச்சாரம் என்கின்ற பத்திரிகையை உருவாக்கி அதன் ஆசிரியனாகவும் சில காலம் பங்கேற்றான். கயன் தன் அனுபவங்களை சரியான கோணத்தினுள் உள்வாங்கி அதனை தன் எண்ணங்களினால் செழுமைப்படுத்தி அவற்றை தன் போனாவினுள் நிரப்பி சமூகத்தின் விழிப்புணர்வுக்கான ஆயுதமாக்கினான். கலாச்சாரம் இதழில் அவன் பெற்ற அனுபவம் பிற்காலத்தில் அவனால் ஈழமுரசு என்னும் வார இதழை உருவாக்க முடிந்தது.

இரு ஆண்டுகளுக்கு மேலாக எமது இயக்கத்தின் பகுதி நேர தொண்டனாக இயங்கிய கயன் இயக்கத் தேவைகள் அதிகரித்த போது தன் முழுமையான விடுதலைப் புலி உறுப்பினனாக இணைத்துக் கொண்டான். எமது மூத்த தளபதி கிட்டு அவர்கள் இலண்டனில் குடிகொண்டு அங்கு சர்வதேச தலைமைச் செயலகத்தை வைத்து அனைத்துலக தொடர்பகம் என செயற்பட தொடங்கிய போது அவருக்கு உதவியாக இயங்குவதற்கு பிரெஞ்சு பணியகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் கயன்.

தளபதி கிட்டுவின் ஆளுமை மிக்க வழிகாட்டல் அனுபவம் நிறைந்த அறிவுரைகள் சிந்தனைமிக்க செயற்பாடுகள் என்பன அவருடன் முழுமையாகப் பணிபுரிந்த எமது இயக்கத் தோழர்களை செழுமைப்படுத்தி நெறிப்படுத்தியது. கயன் தளபதி கிட்டுவின் புலம்பெயர் வாழ்வில் அதிக காலம் அவருடன் வாழ்ந்த இயக்க உறுப்பினர். எம்மைப் போல கிட்டுவிடம் பேச்சுவாங்கி வளர்ந்தவன் கயன். பிற்காலத்தில் கயனின் செயற்பாடுகளில் இந்த அடையாளங்கள் பல்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தப்பட்டதை நாங்கள் கண்டிருக்கின்றோம்.

ஈழமுரசு வார இதழை உருவாக்கி அதனை புலம்பெயர்வாழ் மக்களின் தகவல் தொடர்பு மற்றும் கலை பண்பாட்டு ஊடகமாக உருமாற்றிய கயனின் எழுத்தாற்றல் இயக்கத்தின் உத்தியோகபூர்வ சர்வதேசப் பதிப்பான களத்தில் மற்றும் எரிமலை மாத இதழ்களில் வெளிப்பட்டது. இயக்க கலை மாலை கலை பண்பாட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்ட ஜீவகானங்கள் மற்றும் ஜீவராகங்கள் ஒலிப்பதிவு நாடாக்களில் அவன் பதித்த கவிதை வரிகள் பல்துறைப் பரிமாணங்களைத் தொட்டு நின்றது.

அவன் மக்கள் போர் பற்றி பரணி பாடினான். கண்ணோடு ஒரு கனவு என அவன் எழுதிய பாடல் அவனது கவித்துவத்திற்கு ஒரு சான்றாகும். கயன் மக்கள் மொழி புரிந்தவன். சிரிக்கச் சிரிக்க அவனால் கதை சொல்ல முடியும். தன்னோடு இருக்கும் நண்பர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களுடைய ஆற்றல்களை வெளிக்கொணரவும் அவனால் முடியும் அவனோடு பழகாமல் அவனை மேலோட்டமாகப் பார்த்தவர்கள் அவனை புரிந்துக் கொள்ள சிரமமப்படுவர். ஏனெனில் அவன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனக்குத் தானே அமைத்து வைத்திருந்த ஒரு தனிமைத் தோற்றம் அப்படியாய் இருந்தது.

ஆனால் அந்தப் பிரமையை ஒரு புதிய இயக்க உறுப்பினராய் கூட இலகுவாக உடைத்து விட முடியும். அதனை தடுக்கும் ஆற்றல் கயனிடம் இல்லை. ஏனெனில் தோழமை உணர்வு என்பது அவனால் எதிர்த்து நிற்க முடியாத ஆயுதம். உண்மையான போலித்தனமற்ற கவிஞனாக வாழ்ந்த அவன் எழுதி வைத்த கவிதைகள் அவன் இறப்பால் எமக்கு உருவாக்கிய இடைவெளியை என்றும் ஈடு செய்யும். கயன் என்ற போராளி எம் தேசத்தின் உயர்வுக்காக உலக வரலாறு இருக்கும் வரை பரணி பாடுவான்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்தைத் தேடி………..

இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன்.

வஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள்.

மயூரி மாநிறம் நல்ல சொக்கு.

பால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள்.

இருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணியுடன் வந்திருந்தார்கள்.

மட்டக்களப்புத் தமிழ் சாதாரணமாகவே கேட்க அழகாக இருக்கும். இவர்கள் தங்கள் மழலை மொழியில் அந்தத் தமிழை உச்சரிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும்.

‘அக்கா’ என்று சொல்லத் தெரியாது.’அக்கே,அக்கே’ என்று கொஞ்சுவார்கள்.

இருவரும் சின்னவர்கள் என்பதால் எல்லோரும் இவர்களுக்குச் சரியான செல்லம். செல்லம் என்பதால் குழப்படி செய்வதில்லை. நிறையக் குறும்புகள் செய்வார்கள். மட்டக்களப்பிலிருந்து வந்த புதிதில், அங்கிருந்து வந்த எல்லோரிடமிருந்தும் பயிற்சியாளர்கள் அவ்விடத்துப் பயிற்சி பற்றிக் கேட்டு இவ்விடத்துப் பயிற்சி பற்றி சொல்லிக் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு காடு என்பது தண்ணீர் பட்டபாடு, காவலுலாப் போகும் இராணுவ அணியை மறைந்திருந்து தாக்குவது வெல்லம் சாப்பிடுவது போல. இங்கே நடக்கின்ற தளமுற்றுகைகள், தகர்ப்புக்கள், வெளிகளில் நடக்கும் சண்டைகள் எல்லாம் அவர்களுக்குப் புதிது.

ஆனையிறவு வெளிகளில் எப்படிச் சண்டை நடந்தது என்று வஞ்சிக்கும், மயூரிக்கும் வாய்கொள்ளாத ஆச்சரியம். “எப்படி அக்கே வெளிக்குள்ளே நிண்டு சண்டை பிடிச்சீங்க? நாங்களெல்லாம் பத்தைக்குள்ள உருமறைஞ்சிருந்துதான் சண்டை பிடிப்பம். நீங்க எப்படி ஆனையிறவில சண்டை பிடிச்சீங்க?”

“ஏன் அந்தச் சண்டைக்கு ஆகாய,கடல்,வெளித் தாக்குதல் எண்டு பேர் வைச்சீங்க?”

என்றெல்லாம் துருவித்துருவிக் கேட்பார்கள். பூநகரிச் சண்டைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததால் இவர்களும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரண்டு பேருக்கும் குண்டுகள் கொடுக்கப்பட்டன.

பயிற்சியின் போது இருவரும் நல்ல சுறுசுறுப்பு.

வகுப்புகளிலும் அப்படித்தான்.

ஒருமுறை சொர்ணமண்ணை, பெண்போராளிகளின் பயிற்சித் தளத்திற்கு வந்து, தான் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த ஆண் போராளிகளுக்குப் பத்துக் குண்டுகளைப் பரிசாக அனுப்பியதாகவும், அதேபோல பெண் போராளிகளும் சரியாகப் பதிலளித்தால் பத்துக் குண்டுகள் தருவதாகவும் கூறினார்.

வஞ்சி, மயூரி உட்பட எல்லோரும் வகுப்புகளுக்கு வந்துவிட்டார்கள். சொர்ணமண்ணையின் கேள்விகளுக்கு வஞ்சியும், மயூரியும் சுறுசுறுப்பாக எழுந்து நின்று சரியான பதில்களைச் சொல்லிவிட்டார்கள். சரியாகச் சந்தோசப்பட்ட சொர்ணமண்ணை அடுத்தநாளே இரண்டு பேருக்கும் கொடுக்குமாறு பத்துக் குண்டுகளை அனுப்பிவைத்தார்.

குண்டுகள் கிடைத்ததில் இரண்டு பேருக்கும் சரியான புளுகு. கண்ணில் பட்ட எல்லோரிடமும் குண்டுகள் கிடைத்த விடயத்தைச் சொல்லிவிட்டு, தங்களின் பயிற்சி ஆசிரியருடன் போய் பத்துக் குண்டுகளையும் எறிந்து பயிற்சி செய்தார்கள். நாலு குண்டுகள் வெடிக்கவில்லை.

எறிந்து வெடிக்காத குண்டுகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற பயிற்சி அப்போது இவர்களுக்குக் கொடுக்கப்ப ட்டிருக்கவில்லை. எனவே பயிற்சி ஆசிரியர், இருவரையும் அருகில் போகவிடாமல் தடுத்துவிட்டு, அந்த இடத்தை அபாயமானது என அடையாளப்படுத்தி பலகை நட்டுவிட்டு, இவர்களைப் போகுமாறு அனுப்பிவிட்டார்.

பயிற்சியாசிரியர் அந்த இடத்திலேயே ஏதோ வே லையில் மூழ்கிப்போனார். தாங்கள் எறிந்த குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை என்று மண்டையைக் குடைந்துபார்த்து அலுத்துப்போன மயூரியும், வஞ்சியும் குண்டுகளைச் சோதித்துப் பார்க்கும் யோசனையுடன் இன்னுமொரு போராளியையும் அழைத்துக்கொண்டு, பயிற்சியாளரின் கண்ணில்படாமல் பற்றைக்குள் மறைந்து மறைந்து குண்டுகள் விழுந்த இடத்தை அண்மித்தவர்கள், ஒரு தடியால் குண்டைத் தட்டிவிட்டு ஓடிவந்து நிலை எடுத்தார்கள்.

திடீரென்று குண்டு வெடித்ததில் திகைத்துப்போன பயிற்சியாசிரியர் திரும்பிப் பார்க்க, பற்றைக்குள் படுத்தவாறு மூன்று சோடிக்கண்கள் திருதிருவென முழிசிக் கொண்டிருந்தன.

“ஏண்டாப்பா இந்த வேலை செய்தியள்?” என்று கேட்க,

“என்ன நடக்கும் எண்டு பார்த்தனாங்களக்கே” என்று பதில் வந்தது.

எதையுமே உடனேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் எப்போதுமே மிகுந்து காணப்பட்டது.

தங்களிடம் குண்டுகள் மட்டுமே இருப்பதை நினைத்து இடையிடையில் கவலைப்படுவார்கள்.

“சண்டைக்குப் போகேக்க குண்டுதானே தருவியள், எங்களுக்கு அருள் 89 தாங்கோ” என்பார்கள்.

சின்னன்கள் விருப்பத்தைக் கெடுக்கக்கூடாது என்று அருள் 89களைக் கொடுத்தால், பயிற்சித் தளத்துக்குப் போய் அவற்றை ஏவி, வெடிக்கச் செய்துவிட்டு துள்ளிக் குதிப்பார்கள்.

சண்டைக்கான பயிற்சி காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு கடந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி அல்லது ஒன்றரை மணிவரையில் நடக்கும். அது முடிந்து தளத்துக்குத் திரும்பி வந்து படுக்க அதிகாலை நான்கு மணியாகிவிடும். படுத்துவிட்டு ஐந்து மணிக்கு விழுந்தடித்து எழும்பி, பல்லை விளக்காமலேயே மைதானத்துக்குப் போகும் வழியிலுள்ள அருவியில் முகத்தைக் கழுவிக்கொண்டு ஓடிப்போகும் வழியிலேயே தலையை கைகளால் கிளறிச் சீர்படுத்திக்கொண்டு, மைதானத்துக்குப் போய்ச் சேர்வார்கள். இவ்வளவு வேலைகளும் கண்கள் மூடிய நிலையிலேயே நடைபெறும். அவ்வளவு நித்திரை.

திடீரென்று நெற்றி வலிக்கும். திடுக்கிட்டு கண்களை விழித்துப்பார்த்தால் மைதானத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலிருந்து விலகி, காட்டுமரமொன்றுடன் மோதியிருப்பது தெரியும். நெற்றியைத் தடவியவாறே மீண்டும் ஒற்றையடிப் பாதையால் ஓட்டம்.

ஓரளவு வெட்டையான இடங்களில் எழும்பி ஓடுவதற்கு அனுமதியில்லை. ஊர்ந்துதான் போகவேண்டும். காடுகள் என்பதால் இரவு நேரங்களில் மாடுகள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகும். அந்த இடம் ஒரே சாணமாக இருக்கும். சும்மாவே முழங்காலளவு சேறும், அதற்கு மேல் அரையடி உயரம் வரை தண்ணீரும் நிற்கும். அதற்குள் மாட்டுச் சாணமும் சேர்ந்தால், நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

அந்த அழகான பாதையால்தான் எங்கள் படையணி ஊர்ந்தவாறு செல்லும். நடக்கின்ற போதே நித்திரை செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்கள், ஊர்ந்து போகத் தொடங்கினால்…..

பின்னால் வந்த அணியைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தால் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். அந்தச் சேற்றுக்குள் வஞ்சியையும் மயூரியையும் கைகளை விட்டுத் தேடினால் கண்டுபிடிக்கலாம். எல்லோரையும் தட்டிவிட்டு, “என்ன பிள்ளையள், நித்திரையோ?” என்று கேட்டால்,

“சீ நாங்கள் நல்ல முழிப்பு. ஆர் சொன்னது நித்திரையெண்டு” என்றவாறு ஊர்ந்துபோவார்கள்.

எழும்பி நடக்கின்ற வேளைகளில் பார்த்தால், விண்வெளியில் நடமாடுவது போல சமநிலை இல்லாமல் ஆடி ஆடிப் போவார்கள்.

பெரும்பாலான போராளிகள் வயதில் இளையவர்கள். வஞ்சி, மயூரி போல மிகச் சின்னவர்களும் இருக்கிறார்கள். அம்மா,அப்பாவுடன் செல்லப்பிள்ளைகளாக துள்ளிக் குதித்துத் திரிய வேண்டிய பருவத்தில், சூரியக் கதிர்கள் கூட ஊடுருவச் சிரமப்படும் அடர்ந்த காட்டுக்குள், நாட்கணக்காக குளிக்காமல், ஒழுங்காகச் சாப்பிட நேரமில்லாமல் தங்களை வருத்தி ஒவ்வொரு போராளியும் பயிற்சி எடுப்பதைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ செய்யும்.

ஆனால்……தமிழன் வலை வீசி மீன்பிடித்த நாகதேவன்துறையில், தமிழன் வேளாண்மை செய்த பூநகரியில், ஒரு அந்நிய மொழி பேசுகின்ற இராணுவம் ஆளுவதை நினைத்தால்….

“விடக்கூடாது” என்று வெறி வரும்.

“அக்கே பசிக்குதக்கே”

என்று வஞ்சியும், மயூரியும் முன்னால் வந்து இருப்பார்கள். சட்டியில் இருக்கும் குழைத்த சோற்றை உருட்டி கையிலெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இருவரும் நித்திரை தூங்கிப் போயிருப்பார்கள். மெல்லமாக வாயைத் திறந்து ஊட்டிவிட்டால், வாய்க்குள் சோற்றை வைத்தபடியே உறங்குவார்கள்.

“அம்மன், வாய்க்குள்ள இருக்கின்ற சோத்தை விழுங்கம்மா”

என்று சொல்லிச் சொல்லி, அவர்களைத் தட்டித்தட்டி, ஒவ்வொரு சோற்று உருண்டையாக ஊட்டி அவர்களைச் சாப்பிட வைக்கும்போது….எங்கள் மனங்களில் எழும் வேதனையையும் விஞ்சி….’இந்தத் துன்பம் அடுத்த தலைமுறைக்கு வரவிடக்கூடாது. எங்களோடேயே எல்லாம் முடியட்டும்’ என்ற எண்ணம் வலுப்பெறும்.

ஒருநாள் அதிகாலை ‘மாதிரிச் சண்டை’ செய்து பார்க்கப்பட்டது. இரவு ஒரு மணிக்கு தொடங்கிய சண்டை அதிகாலையில் நிறுத்தப்பட்டு, இராணுவத் தளத்தின் மாதிரியைச் சூழ போராளிகள் நிலைஎடுத்துப் படுத்திருந்தனர். அணிகளின் பிரதான பொறுப்பாளர்கள் எல்லா நிலைகளுக்கும் போய் நிலைகள் சரியா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் எல்லோரும் அப்படியே நின்று விட்டனர். அவசர அவசரமாக கைகளால் கிண்டி அமைக்கப்பட்ட நிலை ஒன்றில் ஒரு சின்ன உருவம் தன்னையும் தன் ஆயுதத்தையும் குழைகளால் உருமறைத்த நிலையில் நல்ல நித்திரை. உடையும் ஈரம்,நிலமும் ஈரம். ஆனால் நல்ல நித்திரை. யாரென்று பார்த்தால் மயூரி!

“மயூரி எழும்பு. முன்னுக்கு ஆமியின்ர இடம். நீ நித்திரை கொள்ளுகிறாய், என்ன?”

என்று ஏச, எழும்பி பொறுப்பாளரின் முகத்தைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்றாள். பொறுப்பாளர் போய்விட்டார். அவர் திரும்பி அடுத்ததரம் நிலைகளைச் சோத்திதுக்கொண்டு வரும் போது பார்த்தால், மயூரி நல்ல நித்திரையில் இருந்தாள்.

“மயூரி, எழும்பு” அதட்டினார்.

கண்களைக் கசக்கியவாறே எழும்பிய மயூரி, பொறுப்பாளரின் முகத்தை பரிதாபமாகப் பார்த்து.

“அக்கோய், பேசாதீங்கக்கா. எனக்கு இப்படி இரவில நித்திரை முழிச்செல்லாம் பழக்கமில்லையக்கா, எனக்கு நித்திரை நித்திரையா வருது” என்று கண்ணீர் வடிய கெஞ்சினாள்.

பொறுப்பாளருக்கோ இந்த வயதில், மழைக்காலத்தில், வீட்டிலே தான் குளிராமல் போர்த்துக்கொண்டு படுத்திருந்தது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் கலங்கிப் போனார்.

“சரி. இனி அலேட்டா இரு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பயிற்சி நடைபெறும் நேரங்களில் சுறுசுறுப்பாக ஓடித்திரியும் மயூரிக்கும் வஞ்சிக்கும், வகுப்பு நேரத்தை நினைத்தாலே நித்திரை வரும். பயிற்சி ஆசிரியர் முன்னுக்கு நின்று தாக்குதல்களைப் பற்றியோ, ஆயுதங்களைப் பற்றியோ விளக்கிக் கொண்டிருப்பார். அமர்ந்திருந்து கேட்பவர்கள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு விழித்துக்கொண்டிருப்பார்கள்.

வஞ்சி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கருமுகில் ஒன்றைக் கண்டதும் பக்கத்திலிருப்பவளைச் சுரண்டி முகிலைக் காட்டுவாள். அடுத்த முகிலைக் கண்டதும் மீண்டும் சுரண்டி,

“ரெண்டு முகிலும் முட்டினவுடனே மழை பெய்யும் பார்” என்பாள்.

ஒரு துளி மழை விழுந்தாலும் போதும். தங்களுடைய அறைக்குப் போவதற்கு ஆயத்தமாகிவிடுவாள். மழை பெய்து,பயிற்சியாசிரியர் எல்லோரையும் போகுமாறு சொல்லி வாய்மூட முன்னரே வஞ்சியும், மயூரியும் அறைக்குள்ளே ஓடிப்போய் படுத்துவிடுவார்கள்.

காட்டுக்குள்ளே ஒருமுறை நாங்கள் புதிய கொட்டிலொன்றை அமைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒரு பாம்பு வர, அதை அடித்து வாலில் கட்டி, கொட்டில் வாசலில் தொங்கவிட்டுவிட்டு, வேலையைச் செய்துகொண்டிருந்தோம். எங்களைத் தேடி வஞ்சியும் மயூரியும் வந்துவிட்டார்கள். வாசலில் தொங்கிய பாம்பைப் பார்த்துவிட்டு,

“ஏன் பாம்பைத் தொங்கவிட்டிருக்கிறீங்கக்கா?” என்றார்கள். அதற்கு நாங்கள்,

” இந்தக் கொட்டில் கட்டி முடிய இதுக்குள்ள வச்சுச் சமைக்கப்போறம்” என்று புளுக ஆரம்பித்தோம்.

” என்னண்டக்கா சமைக்கிறது?”

“தலைப் பக்கமாகவும் வால்ப் பக்கமாகவும் ஒரு அங்குலம் வெட்டியெறிஞ்சு போட்டு, சின்னச் சின்னத் துண்டா வெட்டிப் பொரிச்சு குழம்பு வைக்கப் போறம். ஏன் நீங்க ஒருநாளும் சாப்பிடேல்லையா?”

“மட்டக்களப்புக் காட்டிலையும் பாம்பு இருக்குத்தானக்கா. ஆனா நாங்க பாம்புக்கறி சாப்பிடுறதில்லைக்கா. இஞ்ச நீங்க சாப்பிடுறனீங்க எண்டு சொல்லுறவங்கள். ஒரு பாம்பு என்னண்டு எல்லோருக்கும் கறி வைக்கக் காணும்?”

” இண்டைக்கு புதுக் கொட்டிலில சமைக்க வேணுமெண்டுதான் பாம்பைப் பிடிச்சனாங்கள். எல்லோருக்கும் குடுக்க காணாதுதான். சும்மா எல்லோரும் ரேஸ்ட் பண்ணிப்பார்ப்பம்”

இருவரும் உண்மையிலேயே நம்பிவிட்டார்கள். பேசாமல் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டோம். இருவரும் வியப்புடன் எம்மைப் பார்த்தார்கள்.

“நாங்கள் சும்மா சொன்னனாங்கள். பாம்புக் கறி சமைக்கேல்ல. பாம்பை வெட்டி உறுப்புக்களைப் பார்க்கிறதுக்குத்தான் வச்சிருக்கிறம்” என்றோம். பாம்பை நெடுக்கு வெட்டாகக் கீறிப் பிளந்து, இதயம் குடல் போன்றவற்றைக் காட்டிய போது ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

“அதென்னக்கா, இதென்னக்கா” என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். பாம்பைப் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொண்டதில் இருவருக்குமே மகிழ்ச்சி.

ஒரு நாள் இருவரிடமும்,

“உங்களைச் சண்டைக்கு விடாட்டி என்ன செய்வீங்க?” என்று கேட்டோம். உடனேயே இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு, ” நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததே அண்ணையைப் பாத்திட்டு, சண்டைக்குப் போயிட்டு திரும்பிப் போறதுக்குத்தான். அதெப்படிச் சண்டைக்கு விடாமலிருக்கலாம்?. எங்களை விட்டிட்டுப் போனாலும் நாங்க ஒருத்தருக்கும் தெரியாம, வாகனம் ஒண்டில ஏறிச் சண்டை நடக்கிற இடத்துக்கு வந்திடுவம்” என்றார்கள்.

சண்டைக்குப் போவதற்கு என்ன தடை வந்தாலும் தாண்டத் தயாராக இருந்தார்கள். சண்டைவிடயம் தவிர்ந்த ஏனைய எல்லாவற்றிலும் குழந்தைகளாகவே நடந்துகொள்வார்கள்.

காட்டிலிருக்கும் போது சிற்றுண்டிகள் வந்தால் முதலில் எங்களுக்கு வந்து, பின்னர்தான் ஆண் போராளிகளுக்குப் போகும். வாகனத்தில் ஏறி எமக்குரியதை இறக்கி விட்டு , வாகனத்தின் ஓட்டுனருக்குத் தெரியாமல் ஆண் போராளிகளுக்குரிய பொதிகளில் ஓட்டை வைத்து எடுத்து, காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு இறங்கிவிடுவார்கள். இரண்டு பேருமே பிரபலமற்ற, ஆனால் மிகப்பெரிய சிற்றுண்டித் திருடர்கள்.

நல்லூர்க் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப் போயிருந்தோம். இரண்டு, இரண்டு ஐஸ்கிறீம் குடித்துவிட்டு, ஊதுகுழல் வாங்கித்தருமாறு அடம்பிடித்து, வாங்கி ஊதுகுழலை ஊதியவாறே நல்லூரைச் சுற்றிப் பார்த்தார்கள். இந்தமாதிரி எங்கேயாவது கூட்டிப்போனால் இருவருக்கும் உற்சாகம் வந்துவிடும். சின்னவர்கள்தானே?

ஒருமுறை மக்கள் குடியிருப்புப் பகுதியில் தங்கிநின்ற போது பக்கத்துக் கோயிலொன்றில் திருவிழா நடந்தது. எங்களுடைய இடத்தில் நின்று பார்த்தால், சிற்றுண்டிக் கடைகள் தெரியும். விடுவார்களா வஞ்சியும் மயூரியும்?

“அக்கோய், கலர் கலரா நிறைய முட்டாசிக் கடையக்கா. எங்களைக் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களாக்கா?” என்று கேட்டதால் இருவரையும் கூட்டிப் போனோம். வாய் நிறைய, காற்சட்டைப் பை நிறைய இனிப்புக்களுடன் திரும்பினார்கள்.

சண்டைக்குப் போக முதல் எல்லோரும் முடிவெட்டி, முழுகி, அவரவரின் ஆயுதங்களுடன் படம் பிடிப்பது வழக்கம். வஞ்சியும், மயூரியும் முடிவெட்டிவிட்டு எங்களிடம் வந்து,

“வடிவா இருக்கிறோமாக்கா?” என்று கேட்டு விட்டு,

தங்களுடைய குண்டுகளையெல்லாம் கட்டிக்கொண்டு, ஒரு மணல் குவியலுக்கு மேல் ஏறி நின்று கம்பீரமாய் போஸ் குடுத்துவிட்டு,

“நீங்களும் எங்களோட நிண்டு எடுங்கக்கா” என்று தங்கள் பொறுப்பாளர்களிடம் கேட்டு படம் எடுத்தார்கள். பொறுப்பாளர் அவர்களுடன் நின்று படம் எடுத்ததில் ஒரே சந்தோசம்தான்.

சண்டைக்குரிய சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இனி அடிக்க வேண்டியதுதான். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு இலக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

மயூரி, வஞ்சிக்குரிய பாதையில் வழிகாட்டியுடன் இவர்கள் முன்னே போய் முட்கம்பி வேலியைத் தகர்த்தவுடன் இந்த இடைவெளியூடாக அணிகள் உட்சென்று தாக்குவதுதான் ஏற்பாடு.

எதிரியின் அரணுக்கு முன்னால், முள்வேலியையும் மேவி வெள்ளம் நின்றது. தண்ணீர் சலசலக்காமல் அமைதியாக முன்னேறிய வஞ்சியும் மயூரியும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். ஏதேதோ கனவுகளெல்லாம் அவர்களுக்கு.சண்டை முடிந்து வந்து அது செய்ய வேண்டும், இது செய்யவேண்டும் என்றெல்லாம்……

எதிரியின் காவலரணுக்கு முன்புள்ள முள்வேலிகளை நெருங்கிய சமயத்தில், தற்செயலாக எதிரி ஏவிய டொங்கான் எறிகணை ஒன்று இவர்கள் அருகில் வந்து விழ……

இரண்டு குஞ்சுகளும் காணாமற் போனார்கள்.

இரண்டும் கடைசி நேரத்தில் புகைப்படக் கருவிக்குப் ‘போஸ்’ கொடுத்த அழகில் மயங்கியதும்……

எதையும் சுறுசுறுப்பாகவும் ஆளுமையுடனும் செய்வதைப் பார்த்து, இந்தச் சண்டை முடிய இருவருக்கும் நல்ல பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்ததும்……

இன்னும் எங்களுக்கு மறக்கவில்லை.

அந்தப் பிஞ்சுகளைச் சுற்றி நாங்கள் கட்டியெளுப்பியிருந்த கனவுக்கோட்டையெல்லாம் பூநகரியில் ஓடிய இரத்த ஆறுடன் கரைந்துபோனது.

சுவரில் இருந்து சிரித்துக்கொண்டேயிருக்கின்ற இரண்டு சின்னன்களையும் பார்க்கும் போதெல்லாம் “எந்தத் துன்பத்தையும் நாங்கள் அடுத்த தலைமுறை வரை தொடர விடக்கூடாது. எல்லாமே எங்களோடு முடியட்டும்”

என்ற எங்களின் எண்ணம் இன்னும் வலுப்பெறுகின்றது.

நினைவுப்பகிர்வு:- மலைமகள்.

நீண்டகாலமாக, வளர்ச்சிகண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் நவநீதன்

நவம்பர் 10, 2014 | போர்க்கள நாயகர்கள் (சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி).

ஒரு உண்மை வீரனின் கதை

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி லெப். கேணல் நவநீதன்.

நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடரவேண்டும்; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான்.

பழம்பாசியில் ஒரு சண்டை.

பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது, அவரது பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக இருந்தவன் நவநீதன்.

தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்டினன்ட் கேணல் சந்திரனும் கூட போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது.

அது இந்தியப்படைக் காலம்; இடறுப்படும் இடங்களிலெல்லாம் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்த ஒரு சூழ்நிலை. மிக நெருக்கடியான ஒரு நேரம் ; இடமும் அப்படித்தான் ; மைய இலக்கு வைத்து இந்தியர்கள் படை நடாத்திக்கொண்டிருந்த மனலாற்றின் வேலியோடு – குறைந்தளவு வீரர்களையே கொண்டு நகர்ந்துகொண்டிருந்த எம் அணிக்கு, திசையறி கருவி வழி காட்டிக்கொண்டிருந்தது. தண்ணி முறிப்பு வீதியைக் கடந்து பழம்பாசிக் காட்டுக்குள் இறங்கியபோது – வழமைபோல முதலாவது ஆளாகச் சென்றுகொண்டிருந்த நவநீதன், திடீரென நடை தயங்கி, ‘அலேட் பொசிசனில்’ வைத்திருந்த ‘எம் – 16’ ஐ உயர்த்தி, மூக்கைச் சுழித்துக்கொண்டு திரும்பினான்.

அநேகமான தடவைகளில் இந்தியர்களின் அரவம் காட்டி, எம்மை அரட்டிவிடுகிற அந்த ‘மணம்’ – சற்றுக் கூடுதலாக சுவாசத்தோடு கலந்தது.

காட்டுப் பாதை; இடைக்கிடை நாம் பயன்படுத்துகின்ற தடம் தான் – அவதானித்திருக்கக்கூடிய எதிரி , இரை தேடி வந்திருந்தான். ‘’இந்தியப்படையின் விசேட அதிரடிக் கொமாண்டோக்கள்” – தடயங்களை வைத்து புலிகள் ஊகித்துக்கொண்டனர் . எங்கள் பாதையின் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயமாக எதிரி நிலை எடுத்திருப்பான்; நம்பிக்கை உறுதியாக இருந்தது.

கைவிடமுடியாத பயணம்; தேவை பெரியது . இது ஒருபுறம் போக, ‘அடிக்கப் போகின்றவனுக்குத் திருப்பி அடித்தே ஆகவேண்டும்’ என்ற ஆவேசமும் எழுந்தது. நவநீதனே முனைப்பாக நின்றான்.

தளபதி ஒழுங்கமைத்தார். அணி இரண்டாக்கப்பட்டது. பிரதான குழுவிலிருந்து குறிப்பிட்ட ஒரு தூரத்தில் துணைக்குழு நகரும்.

ஒரு பதுங்கித் தாக்குதலானது பலவகைப்பட்டதாக அமையும் . வலதுபுறமிருந்து வரலாம் ; இடதுபுறமிருந்து வரலாம் ; நேரெதிலிருந்து வரலாம். சில சமயம் , வலது அல்லது இடது புறத்தோடு எதிர்ப்பக்கத்திலிருந்து ‘’L’’ வடிவத்தில் வரலாம் . இவற்றில் எது நடந்தாலும் எதிர்கொள்ளக்கூடியவாறு திட்டமிடப்பட்டது ; பிரதான குழு தாக்குதலைச் சந்திக்க , துணைக்குழு காட்டுக்குள் இறங்கி, வளைத்து , எதிரியை நாரிப்பக்கத்தால் தாக்கவேண்டும் . நவநீதன் தான் கொமாண்டர்.

அணி அசையத்துவங்கியது; வழமைபோல நவநீதன் முன்னுக்கு . அது அவனுக்கே உரிய துணிவு – கத்திக்கொண்டு பரந்த ஒரு காட்டுக் குருவியைத்தவிர நிசப்தம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருந்தது; ‘ மயான அமைதி ‘ யை விடப் பயங்கரமானது ‘வன அமைதி’ . எதிர்பார்க்கும் சண்டை ; எதிர்ப்படப்போகும் நேரத்தை எதிர்கொள்ளத் துணிந்த மனது. அதிகரிக்கும் இதயத் துடிப்போடு கலந்த ஆக்ரோசம் . சுடத் தயாரான துப்பாக்கிகளின் குழல் வாய்கள் நிமிர்த்தி – பாயத்தயாரான புலிகளின் பதுங்கல் நகர்வு. சருகு நெரிபடும் சத்தத்தோடு மட்டும் , அடிமேல் அடிவைத்து அணி நகர்ந்து கொண்டு …….

திடீரென, இயல்பு மாறிப்போயிருந்த காடு ; இயற்கை குலைந்து போயிருந்தது வனம். சூரியனை நோக்கி வளரவேண்டிய மரக்கிளைகள் சில பூமியை நோக்கி இருந்தன . இருக்கக்கூடாத இடங்களில் , சருகுகள் கூடுதலாய்.

சருகுகளின் மறைப்பினூடு மின்னுகின்ற எல்.எம்.ஜி குழல் ; இலை குளைகளின் உருமறைப்பிற்குள் வெட்டிவெட்டி முழிக்கும் கண்கள் ; மெல்ல அசையும் ‘ஹெல்மெட்’டுகள்.

கண்டுகொண்ட நவநீதன் நிதானிக்க , பார்த்துவிட்ட தளபதி சைகை செய்ய, தாசனின் துணைக்குழு காட்டுக்குள் இறங்க – மூர்கத்தனமான சண்டையைத் தொடங்கி வைத்தான் நவநீதன். எட்டித் தொடும் தூரத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளின் குமுறல்; எம்.16 சுடுகுழல் சிவக்க, எதிரிகளின் உச்சந்தலையைக் குறிவைத்தான் அந்த வீரன். இந்தியக் கொமாண்டோக்களின் முன்வரிசை அணியை, பதுங்கிய இடத்திலேயே அவன் படுக்க வைத்தது, பிரமிப்பூட்டுகின்ற வேகம். முதலாவது ஆளைச் சுட்டதிலிருந்து, சண்டையை நடாத்தி, துரத்தித் துரத்தி அடித்து, ஆயுதங்களை எடுத்து முடித்து வைத்து – எல்லாமே அவன்தான்.

‘அதிரடியை முறியடித்து அதிரடித்தல்’ – படையியல் விஞ்ஞானத்தில் இதற்கு ‘ Counter Ambush’ என்று பெயர் . எங்கள் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய சம்பவம்; தளபதி பால்ராஜின் நெறிப்படுத்தலில் செய்வித்து முடித்தவன் நவநீதன்.

ஆனால், தினேசுக்கு இதயத்துக்குப் பக்கத்தில் வெடி கொளுவிக்கொண்டது . பீறிட்டுப் பாய்ந்த இரத்தத்திற்கு சாரத்தைக் கிழித்துக் கட்டுப்போட்டு, தடிமுறித்து ‘ஸ்ரெச்செர் ‘ கட்டித் தூக்க முற்பட்ட போதும், வேதனையின் முனகலோடு தினேஸ் மறுத்துவிட்டான்.

ஆசையோடு தளபதியின் கன்னங்களைத் தடவினான்; கூடவந்த தோழர்களின் நிலைமைகளை விசாரித்தான் ; பெற்றெடுத்த ஆயுதங்களை தொட்டுப்பார்த்துப் பூரித்தான் ; எங்கள் ‘டடி’ முகாமில் – மற்றத் தோழர்களுக்குப் பக்கத்தில்தான் தன்னையும் புதைக்குமாறு வேண்டியவன் முனகி முனகி , மெல்ல அடங்கி எல்லோரையும் பார்த்து விழிகளை மூடியபோது , வெற்றியின் ஆயுதங்களைக்காட்டி அதற்கு வித்தாகிப் போனவனை வழியனுப்பிவைத்துவிட்டு, நவநீதன் இறுகிப்போய் நின்றான்.

வரலாற்றில் பொறிக்கப்பட்ட மாங்குளம் முகாம் தகர்ப்பு –

தமிழீழத்தின் நெஞ்சத்தின்மீது குந்தியிருந்த பக்கத்து நாட்டுப் படைகளைக் குடியெழுப்ப நிகழ்த்தப்பட்ட தாக்குதல் . இரண்டாவது தடவையாகவும் – நிச்சயமாக இறுதியானது எனவும் முடிவு செய்யப்பட்ட சமர்.

முதல்நாள் – நள்ளிரவுக்குச் சற்று முன்னர் ஆரம்பித்த சண்டை , மறுநாள் விடிந்து மதியமாகியும் நடந்து கொண்டிருந்தது . தென்முனை முற்றாகவே எதிரிக்குச் சாதகமான பிரதேசம். அது வயல்வெளி ; அங்கு அவனது கைதான் ஓங்கியது. கூடுதலான இழப்பைச் சந்தித்ததால், எங்கள் தாக்குதலணி காலையிலேயே பின்னால் எடுக்கப்பட்டுவிட்டது. தென்முனை வழியான தாக்குதல் நிறுத்தப்பட்டுவிட்டது .

வடமுனையில் தனது முழுச் சக்தியையும் பிரயோகித்து எதிரி தடுத்து நின்றும் , அவனது அரண்களையும் , மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய புலிகளின் அணி , பிரதான முகாமிற்கு அருகில் , ‘ஹெலி ‘ இறங்கு தளத்தில் – கடும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எதிரி, தனது பலமான அரண் ஒன்றிலிருந்து மூர்க்கத்தனமாக மோதினான் ; தனது முழுப் பலத்தையும் திரட்டிச் சண்டையிட்டான் .

ஏனெனில் , ‘ஹெலி ‘ இறங்கு தளம் யாருடைய கைக்குப் போகின்றதோ அந்தப்பக்கம்தான் வெல்லும். அவனிடம் போய்விட்டால் உதவி எடுத்து புத்துயிர் பெற்றுவிடுவான் . எங்களிடம் வீழ்ந்துவிட்டால் தனித்துவிடப்பட்டுக் குற்றுயிர் ஆகிவிடுவான் . எனவே எதிரி இறுதி முயற்சியாக மோதினான் . உயிர் பிரிகிற நேரத்தில் ஒரு அசுர பலம் வருமாமே , அந்தப் பலம் கொண்டு தாக்கினான்.

சண்டை உக்கிரமடைய அடைய , எங்கள் தாக்குதலணி பலவீனப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் கைவிட முடியாது; ஹெலித்தளத்தை விட்டுச் சற்றுப் பின்னால் வந்தால்கூட, நாங்கள் தோல்வியடைந்ததற்குச் சமம். எதிரி நிலத்தோடு மட்டுமே மோதினான் ; நாங்களோ வானத்தோடும் மோதவேண்டியிருந்தது. நேரம் நீள நீள எங்கள் கை சோர்ந்துகொண்டு போனது. அவனா ? நாங்களா ? என்ற நிலை . சண்டையை நடத்திக்கொண்டிருந்த தளபதி , நிலைமையின் இக்கட்டைப் பிரதான கட்டளையகத்துக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார் . கை விடமுடியாது ; ஏற்கனவே இந்த முகமாய் அளிப்பதற்காக நாங்கள் செலுத்திவிட்ட விலை பெறுமதியானது ; திரும்பவும் ஒருதடவை அற்புதமான உயிர்களைக் கொடுக்க முடியாது . துவங்கியததோடு அடித்துத் துடைத்து முடித்து விடவேண்டும் ; இனி விட இயலாது .

கடைசி வழிமுறை ஒன்றைக் கையாள கட்டளைப்பீடம் முடிவு செய்தது . கைவசம் வைத்திருந்த , தேர்ச்சிபெற்ற வீரர்களைக் கொண்ட மேலதிக தாக்குதலணி ஒன்றை – நுட்பமான ஒரு தந்திரோபாயத்தோடு பிரயோகித்து ஒரு இறுதி எத்தனிப்பைச் செய்வதே அது . அவனா ? நாங்களா ? என்ற எதிர்பார்ப்புக்கு விடை தரப்போகும் அடி ; அந்த வரலாற்றுத் தாக்குதலின் வெற்றியை நிர்ணயிக்கப்போகிற அதிரடி . இதன் முக்கியத்துவம் முக்கியமானது .

ஹெலித்தளத்தில் சண்டையிடும் எதிரியை கிழக்குத் திசை வழியாக மேவி வளைத்து , அவனை வளைத்து பக்கத்தால் நெருங்கி , அறைந்து நொறுக்க வேண்டும் . வான் ஆதிக்கத்தைத் தனது கையில் வைத்திருப்பவனின் கண்களுக்கு மண் தூவி – நிலா ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போரிடுகின்றவனின் பார்வையில் பட்டு விடாமல் – அவனை அண்மிப்பது என்பது , அந்த உச்சி வெயில் பகலில் ஒரு இமாலயக் காரியம் . எதிரியை எதிர்கொள்ளும் நேரம் வரை , தன்னைச் சேதப்பட்டுவிடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அந்த அணிக்கு உண்டு ; தோல்வியைத் தழுவும் நிலையிலிருந்து அந்தத் தாக்குதலை மீட்கவேண்டிய பொறுப்பும் அதற்குத்தான் உண்டு. எனவே, அந்தச் சிக்கலான சூழ்நிலையிலும் சரியான முறையில் நகர்திச்சென்று , சரியான நேரத்தில் – சரியான இடத்தில் – தாக்குதலைத் தொடுத்து , அந்த அணியை வழிநடாத்தக்கூடிய திறமை , அதன் கொமாண்டருக்கு இருக்க வேண்டும் . அணியின் தளபதியாக நகரத் துவங்கியவன் நவநீதன் .

தாக்கிக் கொண்டிருந்த எமதணி தளர்ந்துகொண்டிருந்த வேளை , அனுப்பி வைத்த தளபதி காத்திருந்த நேரம் , என்ன முடிவோ என நாங்கள் ஏங்கி நின்ற பொழுது – மூர்க்கங்கொண்ட புலிகளாய் பாய்ந்தனர் வீரர்கள். ஆக்ரோசமான தாக்குதல் தடைகள் உடைத்து , தானை சிதைந்து , பகைவன் சின்னாபின்னமாகிப்போக – புதிய தெம்புடனும் , புதிய வேகத்துடனும் பிரதான முகாமைக் குறிவைத்தனர் புலிகள்.

எங்கள் கதாநாயகனுக்கு வெடி, இடுப்பு எலும்பை நொறுக்கிச் சென்று விட்டது சன்னம் . காலுக்கு மணல் மூட்டை கட்டித் தொங்கவிட்டு , யாழ்ப்பாணம் மருத்துவமனையில் படுத்திருந்து, ‘’இந்தச் சுமையின் வேதனையைவிட , மாங்குளத்தை வென்றதே மனதுக்கு மகிழ்வு’’ என்றவன் , 7 மாதங்களிற்குப் பிறகு எழுந்து நடக்கத் துவங்கியபோது, இடதுகாலில் ஒரு அங்குலம் கட்டையாகிப்போயிருந்தது.

முல்லைத்தீவில் ஒரு படையெடுப்பு – நவநீதன் அப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்குத் தளபதி ; லெப்டினண்ட் கேணல் நரேசுக்குத் துணையாய் நின்று , நிர்வாக வேலைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தான்.

தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக தளபதி தீபனும், நரேசும் எமது படையணிகளை எடுத்து வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றிருந்தவேளை, ‘சத்பல’ என்று பெயர் சூட்டிக்கொண்டு முல்லைத்தீவிலிருந்து படையெடுத்தான் எதிரி; ஆயிரக்கணக்கான துருப்புக்கள், யுத்த வானூர்திகள் பலம் சேர்க்க பெருமெடுப்பில் முன்னேறத் துவங்கினர்.

ஆனால் காவலரணில் இருந்ததோ சண்டைக்குத் தேர்ச்சி பெறாத போராளிகள். சண்டை செய்யக் கூடியவர்கள் என்று எவருமே இல்லை. இருந்தவர்களைத்தான் பொறுக்கி எடுத்து அனுப்பியாகி விட்டதே. இருப்பவர்கள் சண்டைக்கு அனுபவப்படாதவர்கள்; புதியவர்கள்.

அவர்களை வைத்துக்கொண்டு, எதிரி முகாமின் வாசலிலேயே களத்தைத் திறந்தான் நவநீதன்.

ஒரு முழுநாள் – ‘நவநீதன் சண்டையைச் செய்வித்தான்’ என்பதைவிட, ‘நவநீதன் தான் சண்டை செய்தான்’ என்றுதான் சொல்ல வேண்டும். திரண்டு நகர்ந்த அந்நியச்சேனையை, திறமையுடனும் – துணிவுடனும் தடுத்துத் தாமதப் படுத்தினான் அந்தப் போர்வீரன். மறுநாள் எமது படைப்பிரிவுகள் வந்துசேருகின்றபோது, தந்திரமாகச் சண்டையிட்டு, திரண்டு நகர்ந்த பகைவர்களை அவன் தடுமாற வைத்திருந்தான் . அந்த முதல் நாள் சண்டையில் தங்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக ஸ்ரீலங்கா வானொலி அறிவித்தது .

‘’இனியாவது என்ர பெடியனை வீட்டை விடுவியளே?’’ என்று கேட்காத, கேட்க நினையாத – ‘’எப்ப தம்பி எங்களுக்குச் சுதந்திரம் எடுத்துத் தரப்போறியள்?” என்று மட்டும் மனதாரவே ஆதங்கப்படுகின்ற – ஒரு தமிழன்னையின் மடியில், அந்தப் பூ முகையவிழந்தது. அது – 1969 ஆம் ஆண்டு, நவம்பர் 12 ஆம் நாள். திருலோகநாதன் என்று திருநாமம் சூட்டினார்கள்.

‘’குவா…. குவா….!” சத்தத்தோடு, அந்தக் குழந்தை – தவழ்ந்து, உருண்டு, மண்ணளைந்து, தத்தித் தடுமாறி எழுந்து நடக்கத் துவங்கிய அந்த ஓலைக்குடிசையில், அவனுக்கு முன்னமே ஏழ்மை பிறந்துவிட்டது. நிரந்தரத் தொழில் இல்லை. நிலபுலங்கள் எதுவும் இல்லை. இரண்டு நேரம் சாப்பிடக்கூட வழியில்லை; வறுமை.

கனகராயன்குளம் மகாவித்தியலயத்தில் படித்துக்கொண்டிருந்தவன், 7 ஆம் வகுப்போடு – குடும்பத்தின் ஏழ்மைச் சிலுவைக்குத் தோள் கொடுக்க, வீட்டில் நின்று கொண்டான். இருந்தாற்போல் ஒருநாள் – திடீரென, அப்பா தில்லையம்பலத்தார் மீளாத் துயில் கொண்டுவிட்ட போது, துன்பமும் ஏழ்மையும் சேர்ந்து அழுத்திய பெருஞ்ச்சுமைக்குள் அந்தக் குடும்பம் சிக்குண்டது; வதங்கியது.

இத்தகைய – துயர்படிந்த ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து, அவன் போராட்டத்துக்கு வந்த போது, அவனுக்கு 16 வயது.

தளபதி பசீலனின் அரவணைப்பில் அந்தச் சின்னப் போராளி வளரத் துவங்கினான்.

அவனுக்குப் போர் ஆசானாகி நின்ற, அவனது போராட்ட வாழ்வின் ஆரம்பத்தை வழிப்படுத்தி விட்ட குரு அவர்தான்.

துப்பாக்கிகள் தந்து, சிறந்த வீரர்களுக்கு நிகரானவனாகச் சுடப் பழக்கி, பயிற்சிகள் வழங்கி – அந்தச் சின்ன வயதிலேயே, நவநீதனுக்குள் மாபெரும் வீரத் தன்மைக்கு வித்திட்ட பெருமை, பசீலனையே சாரும்.

தளபதி பசீலனின் மெய்ப்பாதுகாவலனாக, ‘எம் 16′ உடன் கூடத்திரிந்த நாட்கள், அவனுக்குள் ஆழப்பதிந்த நினைவுகள்; அந்தக் காலத்தில் அவர் சொல்லித்தந்த சண்டை முறைகள், மறத்தலற்ற மனப்பாடங்கள்.

நவநீதன் பகைவரைச் சந்தித்த முதற்களம் என்று குறிப்பிடக்கூடியது, முந்திரிகைக்குளம் தாக்குதல்.

மணலாற்றில் சிங்களக் குடியேற்றத்துக்கு விழுந்த பலமான முதல் அடி அது. அந்தப் பெரு வெற்றியைப் பெற்றுத் தந்தவன் பசீலன். அப்போது – ‘கென்ற்’, ‘டொலர்’ பண்ணைகளில் மட்டுமே தொற்றியிருந்த அந்த விசக் கிருமிகள், பல்கிப் பெருகி மணலாற்றில் படரத் துவங்கிய பிரதான அசைவுப் பாதையை, பதவியாவில் இருந்து மேற்குக் கரை நோக்கி காட்டினூடு அமைத்துக்கொண்டிருந்த இராணுவ அணியே தாக்கப்பட்டது.

வியூகம் அமைத்து நின்று, தளபதி பசீலன் தாக்குதலை நடாத்தியபோது அவரது நிழலாக நின்று பொறி கக்கினான் நவநீதன். கொல்லப்பட்ட 20 வரையான படையினரில் சிலரது உடல்களில் அந்தச் சின்ன வீரனது துப்பாக்கிதான் கோலம் போட்டதாம்… சண்டை முடிந்தபோது புலிகள் இயக்கத்தின் ஆயுத இருப்பில் 12, ‘ரி 56’ கள் கூடியிருந்தன; சிங்களக் குடியேற்றத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், திட்டத்தின் அந்தப் பிரதான அசைவுப் பாதை, நிரந்தரமாகவே கைவிடப்பட்டது.

இந்தியப் போர் ஆரம்பித்தபோது – இந்தியப் படையின் ‘புகழ்பெற்ற யாழ்ப்பாணச் சமரில்’, கோப்பாய்ச் சண்டை எமது முல்லைத்தீவு மாவட்டப் படையணியால் எதிர் கொள்ளப்பட்டது. தளபதி பசீலனின் அந்த அணியில் நவநீதனும் களத்தில் நின்றான். இந்தியர்களின் இரண்டு ‘B.M.P’ ராங்க்’குகள் நொருக்கப்பட்டதுடன், அங்குலமும் அசையாமல் தடுத்துநிறுத்தப்பட்ட அந்த நாட்கணக்கான சண்டையில், சொல்லிக்காட்டக் கூடியளவு திறமையுடன் நவநீதன் போரிட்டான்.

கோப்பாயில் சண்டையை முடித்துக்கொண்டு திரும்பிய படையணி, முல்லைத்தீவில் போர் அரங்கைத் திரைநீக்கம் செய்தபோது – துயரம்! கொடுந்துயரம்; முல்லைத்தீவில் ஒரு சண்டைக்களத்தில், மாபெரும் வீரன் பசீலன் வீழ்ந்துபோனான்; முல்லை மண் துடித்தது. அதன் மடியில் பிறந்த குழந்தை அவன்; அந்த மண்ணின் வரலாற்றில் பொறிக்கப்பட்ட தளபதி அவன். நவநீதன் கலங்கினான்; கதறினான்; அவனால் தாங்க முடியவில்லை.

அடிபட்ட நாகமாய் அலையத் துவங்கினர் புலிகள். பதிலடி கொடுக்க பகலிரவாய்த் திரிந்தவர்களிடம் வசமாகச் சிக்கியது ஒரு இந்திய அணி – பசீலனை எம்மிடமிருந்து பிரித்தது இதே அணிதான் என்பது முக்கியமானது – தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால், தளபதி பால்ராஜின் தலைமையில் எம் இரண்டு அணிகள். ஒன்றுக்குக் கொமாண்டர் போர்க்; அடுத்ததுக்கு நவநீதன். மூர்க்கத்தனமான சண்டை. நவநீதனின் நெஞ்சுக்குள் பசீலன் அண்ணாவின் நினைவுகள் கனன்றன. பகைவர்களை நெருப்பெனச் சுட்டெரித்தான் அந்த வீரன். இந்தியரின் முதலாவது குழு தாக்கியழிக்கப்பட்ட பின்னர், மீட்கவந்த அடுத்த குழு தாக்கப்பட்டது. 25 பேரளவில் கொல்லப்பட்ட சண்டையில், கைப்பற்றபட்ட ஆயுதங்கள் இரண்டு எல். எம். ஜிகள்.

இந்தியர்கள் ‘ஒப்பரேசன் செக்மேற்’ றை நடாத்திக்கொண்டிருந்தார்கள்.

பெரும் போர்களைக் கண்ட, உலகின் நான்காவது பெரிய தரைப்படையின் 30,000 துருப்புக்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மையக் கருவைக் கிள்ளியெறிய நகர்த்தப்பட்ட வரலாற்றுச் சமர்; பிரசித்தி பெற்ற மணலாற்றுப் படையெடுப்பு.

குமுழமுனை மலைமுகாம் என்ற இந்தியத் தளம்தான் ‘செக்மெற்’ றின் மையம்: கட்டளைப்பீடம்: உயர் தளபதிகள் தங்கியிருந்து ‘பிரபாகரனைக் கொல்லும்’ போரை நெறிப்படுத்திய தலைமையகம். இந்த முகாமில் ஒரு தாக்குதலைச் செய்வதன்மூலம் , ‘செக்மேற்’ றுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கவும் ,இந்தியரின் கவனத்தைத் திசைதிருப்பவும் திட்டமிடப்பட்டது. ஒரு புலர்வுப் பொழுதில், அந்த முகாமின் தலைவாசலைத் தாக்கினர் புலிகள். மேஜர் கிண்ணிக்குத் துணைக் கொமாண்டராய்ச் சென்று வெற்றியைப் பெற்றுவந்தவன் நவநீதன். எதிர்பாராத மையத்தில் விழுந்த அதிரடி – புலிகள் கொடுத்த நெற்றியடி. இந்தியத் தளபதிகள் குழம்பிப் போயினர். செய்வதறியாது திகைத்தனர். படை நகர்த்து முன்னர், நகர்த்தும் பீடத்தைப் பாதுகாக்கவேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு ‘செக்மேற்’ நிறுத்தப்பட்டது. தங்கள் இலக்கு மீது இந்தியர்கள் கொடுத்த நெருக்கடி தளர்ந்தது. இந்த வெற்றியில் நவநீதனுக்கும் பெரும் பங்குண்ட

நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும் ; சண்டைகளால் தொடரவேண்டும் ; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும்.

போர்தான் அவனுடைய’ தனிச் சிறப்புக் கலை’ போரில்தான் அவன் ‘துறைசார் வல்லுனன்’. எங்கள் இயக்கத்தின் தலைசிறந்த சண்டை வீரர்கள் என்று தேர்ந்தெடுத்தால், நவநீதன் தவறமாட்டான்.

எதிரிகளை எதிர்கொள்ளும் வேளைகளில், எல்லோரையும் மேவி முன்னால் நின்று – அவனுடைய துப்பாக்கி தீ உமிழும்.

கணப்பொழுதுக்குள் எதிரியின் மூச்சுப்படும் தூரத்துக்கு நெருங்கி, அவன் சுழன்றடித்துச் சுட்டு வீழ்த்தும் லாவகம் – மெய் சிலிர்க்க வைக்கும்.

அவனொரு ‘Quick Gunner’ – ‘மின்னல் வேகத் துப்பாக்கி வீரன்.’ பொருதுகளங்களில், எதிரி காணும்முன் எதிரியைக் கண்டு துப்பாக்கியைப் புயலின் வேகத்தில் இயக்குவான். அந்த வேகத்திலும், குறி பிசகாமல், நிதானமாகக் குறி வைக்கும் வல்லமை, அவனது தனி ஆற்றல்.

அவனது சண்டைகள் பார்ப்பவர்களை வியக்கவைக்கும்; சண்டை தெரிந்தவர்களைக் கூட ஆச்சரியப்படுத்தும்.

சமர்க்களங்களின் நடுவில் சிக்கலான சூழ்நிலைகள் பிறக்கும்போது, மதினுட்பம்வாய்ந்தவிதமாக முடிவெடுத்து – எச்சரிக்கையாகவும், அவதானமாகவும் செயற்பட்டு – இடையூறுகளை வெற்றிகரமாகச் சமாளித்துவிடும் திறமை மிக்கவன் அந்தத் தளபதி.

போர்வீரர்கள் இரண்டு வகையானவர்களாகக் காணப்படுவார்கள். ஒருவகை – குழுச்சண்டை வீரர்கள். அடுத்தவகை – தனிச் சண்டை வீரர்கள். குழுச்சண்டையானது படையாட்கள் எல்லோர்க்கும் பொதுவானது. யுத்தப் பயிற்சி பெற்ற எல்லோருமே செய்யக்கூடியது. ஆனால் தனிச்சண்டை அப்படியானதல்ல; அதற்குத் தனித்தன்மையான நிபுணத்துவம் தேவை. குறிப்பிட்ட சிலர் தான் அதில் வல்லவர்களாக இருப்பார்கள். நவநீதன் ஒரு தனிச்சண்டைக்காரன். நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொண்ட ஒரு சேனையை தனித்து நின்று எதிர்கொள்ளக்கூடிய மனத் துணிவும், புத்திக் கூர்மையும், செயற்திறனும் அவனிடம் உண்டு.

போரன்றி வேறேதும் நினையாத புலிவீரன் அவன். பயிற்சியைப் பற்றியும், வேவைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும், சண்டையைப் பற்றியுமே அவன் பேசிக்கொண்டிருப்பான். தூக்கத்தில் வருகின்ற கனவுகள் கூட அவனுக்குக் கள நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கும்.

எல்லாப் போராளிகளுமே அவனோடு சண்டைக்களத்துக்குப் போக விருப்பப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இயக்கத்தின் உயர் தளபதிகளினதும் அதீத நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளியாக அவன் திகழ்ந்தான். தனது செயல்களாலே அவன் வளர்த்துக்கொண்ட நம்பிக்கை அது. ஆம், செயலால் மட்டும்.

சமர் அரங்கு ஒன்றின் பின் முனையிலிருந்து நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கும் கட்டளைத் தளபதி, சண்டை சிக்கல்படுகின்ற சில சூழ்நிலைகளில், ‘’இந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும்” என நினைக்கின்றாரோ, சண்டையின் முன் முனையில் வழிநடாத்தும் நவநீதன் அப்படியே செய்து முடிப்பான். அந்த அளவுக்கு, போர்பற்றிய அறிவை – ஞானத்தை – அவன் பெற்றிருந்தான்.

கட்டையாகிப்போன காலைப் பற்றி அவன் கருத்தில் எடுப்பதேயில்லை. சண்டைகளில் அவன் முன்னுக்கு ஓடித்திரிந்து தாக்கும் போதும், தாக்குதல்களுக்காக நாங்கள் நீண்ட தூரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் – மனம் சோராமல் உற்சாகத்தோடு நடக்கும் போதும், அவன் தனது மனவுறுதியைக்காட்டுவான்; அது வியப்பைத் தரும்.

நவநீதன் அன்பானவன் . அமைதியானவன் . மென்மையான சுபாவத்தைக் கொண்டவன் .

‘’நவநீதன் பேசிப்போட்டான் ” என்று , யாருமே சொல்லாத அளவு பண்பானவன்.

அவன் அதிகம் கதைக்கமாட்டான் – இடைக்கிடை பகிடி சொல்லுவான் ; மற்றவர்களது மனங்களை நோகவைக்காமல் , எப்போதாவது யாரையும் கிண்டல் செய்வான். அவ்வளவோடு சரி .

நிர்வாக வேலைகளைச் செய்யும்போது வளைந்து கொடுத்து , எல்லோரையும் சமாளித்து , விடயங்களை ஒப்பேற்றிவிடுகிற திறமையைக் கொண்டவன் . எல்லாவகையான மனப்போக்கு உடையவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக நடந்துகொள்ளும் பக்குவம் மிக்கவன் .

எப்போதும் ஒரு அப்பாவித்தனம் அவனது விழிகளில் மிதக்கும் .

எப்போதும் , ஒரு குழந்தைத்தனம் அவனது முகத்தில் குடியிருக்கும் .

எங்கள் நெஞ்சுகளுக்குள் பொந்து அமைத்து வாழ்ந்த மாடப்புறா அவன் .

பகைவர்களுக்கு முன்னால் யுத்த சன்னதனாகி நெருப்பென நிற்கும் அந்த வீரன் , எங்களுக்குள் – பனிநீராய்ப் படர்ந்து குளிர்மையாக வருடுகின்ற நண்பன்.

எவ்வளவு ஆற்றல்கள் அவனுக்குள் குவிந்து கிடந்தன! எத்துனை திறமைகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக அவன் உலா வந்தான்! ஆனாலும் அவன் வெளியில் மிளிராத போர்வீரன்; தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள விரும்பாத விடுதலைப் புலி இலைமறைகாயாக இருந்து, பிரளயங்களைப் படைத்துக்கொண்டிருந்த பிரபாகரனின் பிள்ளை.

இறுதிக்காலத்தில் சண்டைகளுக்குப் பின்னாலேயே அவன் வைத்திருக்கப்பட்டான். ஏற்கனவே ஏராளமான சண்டைகளுக்குள் நின்றவன்; மாங்குளத்தில் வெடி வாங்கி காலைச் சின்னதாக்கிக் கொண்டவன். சண்டைகளில், அவன் பயன்படுவதைவிட, அவன் பட்டறிந்து பெற்றிருக்கும் அனுபவம் மிகுந்த பயன்பாட்டைத் தரும். எனவேதான், இயக்கத்திற்காகவும் அவனுக்காகவும் சமர்களங்களின் பின்முனையிலேயே அவன் வைத்திருக்கப்படுவான். ஆனாலும், பின்னுக்கே நின்று ஒழுங்குகளைச் செய்து கொண்டிருப்பவன், சண்டை வெடித்த அடுத்த நிமிடங்களில் முன்னுக்குப் போய்விடுவான்.

புலோப்பளைச் சண்டையைப் பாருங்கள். அதில் அவனது பங்கு முக்கியமானது; குறிப்பிடத்தக்கது.

பூநகரிக்குப் படையெடுக்க நாங்கள் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த போதுதான், எதிரியானவன் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்தான்.

ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து ஆரவாரமான ஏற்பாடுகளுடன் ‘யாழ்தேவி’ புறப்பட்டவுடனேயே நவநீதனது குழுதான் அங்கு அனுப்பப்பட்டது.

பகைவர் சேனைக்கு வாசலிலேயே வரவேற்புக்கொடுக்க அல்ல; அவர்களின் அசைவுகளை அவதானித்துத் தகவல் சொல்ல மட்டும்.

ஒரு படையெடுப்பை முறியடிக்க முனையும்போது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடயம் போர் வியூகமாகும். எமது படைவீரர்களை சரியானதோர் வியூகமமைத்து நிறுத்திவைக்கும் போதுதான், எதிரிப்படையை அதற்குள் தப்பும் வழியற்றுச் சிக்கவைத்துத் தாக்கி அழிக்க முடியும். அவ்வளவு நேர்த்தியாக வியூகம் அமைக்க வேண்டுமானால், எதிரியின் நகர்வு பற்றி மிகத் துல்லியமான தகவல்கள் தேவை. படையினரின் தொகை என்ன? ஆயுத – படைக்கல வகைகள் என்னென்ன? படையூர்திகள் மற்றும் வசதிகள் எப்படி? என்ன ஒழுங்குமுறையைக் கையாண்டு எதிரி படை நகர்த்துகின்றான்? என்ற தரவுகள் எந்தப் பிசகுமின்றிக் கிடைக்கவேண்டும்.

அவற்றின் அடிப்படையில்தான் – நாம் சிறந்தொரு வியூகத்தை அமைத்து, நம்பிக்கையோடு காத்திருக்க முடியும்.

புலோப்பளையில் இந்தப் பணியைச் செய்து முடித்தவன் நவநீதன். நாங்கள் காவியம் படைத்த அந்தப் பெருஞ்சமரில், வெற்றி வாகை சூடக்கூடியவாறு, நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்தை அமைக்க சரியான தகவல்களைத் தந்தது மட்டுமல்ல – இரவிரவாக நடந்துதிரிந்து சண்டைக்கேற்ற ‘நிலை இடம்’ தேடுவதில் நவநீதன் தளபதிகளுக்கு உதவினான்.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்பும், மீண்டும் முன்னுக்கே சென்று இறுதிவரை எதிரியின் நகர்வுகளைப்பற்றிய தகவல்களைத் தந்துகொண்டிருந்தவனுக்கு, சண்டை துவங்கியவுடன் பின்னுக்கு வந்துவிடுமாறுதான் சொல்லப்பட்டது. ஆனால், உரிய இடத்திற்குள் எதிரியின் படையணி வர, எமது முதலணியோடு களத்தில் இறங்கிச் சமரை ஆரம்பித்தது அவன்தான்.

அடுத்ததுதான் பூநகரிச் சமர் – புலிகள் இயக்கத்தின் போரிடும் சக்தியைப்பற்றி சர்வதேச செய்தி அலைவரிசைகளையெல்லாம் வியந்துரைக்கவைத்த செருக்களம்.

அவலப்பட்ட மக்களுக்குப் பாதை திரிக்கக் கேட்டபோது – அரசியல் பேரம்பேசி அகங்காரம் செய்தோருக்கு உச்சந்தலையடி கொடுத்த போர் அரங்கு.

அந்தக் கூட்டுத்தளத்தின், ‘வில்லடி’ கட்டளை முகாமைத் தாக்கும் பெரும் படையணிக்குள், உப குழுவொன்றுக்கு நவநீதன் தளபதி. ஒதுக்கப்பட்ட ஒரு காவலரண் தொகுதியைத் தாக்கி அழித்தபின், முகாமின் மையத்தைத் தாக்கும் பிரதான படைப்பிரிவுக்குத் துணைக்குழுவாக இறங்கவேண்டுமென்பதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணி.

‘வில்லடி’ முகாம்தான், கூட்டுத்தளத்தின் கட்டளை முகாம். அது மிகப் பலமானது. 91 ஆம் ஆண்டு ஆனையிறவுத்தளத்தை நாம் வெற்றி கொள்ள முற்பட்டபோது அது இருந்ததைப்போல, ஏறக்குறைய அதேயளவு பலத்துடன்தான் இது இருந்தது.

நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் சண்டை ஆரம்பித்தது. விடிந்த போது நவநீதனுக்கான காவலரண் தொகுதி தாக்கியழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கட்டளை முகாமில், ‘ராங்க்’ குகளையும், பெருந்தொகை ஆயுதங்களையும் இழந்த எதிரி, சிறு பகுதியொன்றில் எஞ்சியிருந்தான்.

அர்த்தசாம இருளில் சிதறியோடிப்போன சிப்பாய்களும், விடிந்த பின் கட்டளை முகாமை நோக்கி ஓடிவர, திடீரென எதிரி அசுர பலம் பெற்றான்.

எதிரி, ‘அடுக்குமுறைப் பாதுகாப்பு முறையில்’ (Depth Defence System) ஒன்றன் பின் ஒன்றாக அமைத்திருந்த காவலரண்களைத் தகர்த்தெறிந்துகொண்டு, ‘கனரக மோட்டார் பீரங்கி’ உள்ள தளத்தை நோக்கி முன்னேறிய எமதணி அதனைக் கைப்பற்றும்போது, அணி பெருமளவில் சேதப்பட்டுவிட்டது; பொழுதும் விடிந்துவிட்டது.

அந்த நேரத்திலேயே – துணைக் குழுக்களை அழைத்து பீரங்கிகளை அப்புறப்படுத்த முன்னர் – எதிரி புதுப்பலம் கொண்டு கடுமையாகத் தாக்கத் துவங்கினான்.

பீரங்கித்தளம் வெளியான தரையமைப்பைக் கொண்டது. முற்றாக அவனுக்குச் சாதகமான களம். அத்தோடு, திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்பட்ட சக்திமிக்க அரண்களிலிருந்து எதிரி தாக்கி முன்னேறினான்; விடிந்துவேறுவிட்டது. வானூர்திகள் பார்த்துப் பார்த்துக் குண்டடித்தன. இரவுச் சண்டையிலே மிகுந்தளவில் பலவீனப்பட்டுப்போன எமதணி, இயலுமானவரை போரிட்டது; பீரங்கிகளை விடக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் போரிட்டது. ஆனால், ஏறக்குறைய அது முற்றாகவே சேதப்பட்டு விட்ட நிலையில், பீரங்கிகளை மீட்க முடியாமலே பின்வாங்க நேரிட்டது.

கைப்பற்றப்பட்ட பீரங்கித் தளமும், பீரங்கிகளும் கைவிடப்பட்டன. இப்போது பீரங்கித் தளம் நடுவில். அதன் பின்னால் எதிரிப் படை; முன்னால் புலிகள் படை. பீரங்கிகள் அநாதரவாகக் கிடந்தன – அவனுக்குப் பக்கத்தில், எங்களுக்கு எட்டத்தில்.

திரும்பவும் அவற்றைக் கைப்பற்றியே ஆகவேண்டும். அனால் பகலில்……? அது முற்று முழுதாகவே பகைவனுக்குச் சாதகமான சூழ்நிலை. பெரும் இழப்பைக் கொடுத்து, மிகுந்த சிரமத்துடனேயே நாம் மோதவேண்டியிருக்கும். அப்படியானால் இரவு……? இல்லை: இருளும்வரை காத்திருக்க முடியாது. எதிரி மீண்டும் சுதாகரித்து, முழுப்பலத்தையும் திரட்டி முன்னேறி, பீரங்கிகளைத் திரும்பக் கைப்பற்றிவிடக்கூடும். அதனால், அவனுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாகத் தாக்குதலை நடாத்தவேண்டும்.

இது ஒரு சிக்கல் நிறைந்த கள நிலைமை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நவநீதன் அழைக்கப்பட்டான்; அவன்தான் அதற்கு உரித்தானவன்.

தேர்ந்தெடுத்த வீரர்களைக் கொண்டு உடனடியாக ஒரு தாக்குதலணி தயார் செய்யப்பட்டது. அந்த அணியின் கொமாண்டராகி சண்டையைத் துவக்கினான் தளபதி.

முரட்டுத்தனமான முன்னேற்றம். அது அவனுக்குப் பழக்கப்பட்ட வேகம். ‘பீரங்கிகள்’ – என்ற ஒரே உறுதியுடன் பாய்ந்தனர் புலிகள். நிலைமையைப் புரிந்து கொண்ட எதிரி பலம்கொண்ட மட்டும் மோதினான்; தாக்குதலை முறியடிக்க தன் சக்திக்கு மீறிச் சண்டையிட்டான்.

இருந்தபோதும் – பீரங்கிகளை அடையும்வரை நவநீதன் சண்டையை நடாத்திச் சென்றான்.

எதிரியின் வெறித்தனமான தாக்குதலுக்கு மத்தியிலும் தளத்தைக் கைப்பற்றினர் புலிகள்.

பீரங்கிகள் இரண்டு.

முதலாவதைக் கழற்றி எடுத்துப் பின்னுக்கு அனுப்பிவிட்டபோது – உற்சாகம் பொங்கியது.

நெருப்பு மழைக்குள்ளும் இரண்டாவதைக் களற்றிக் கொண்டிருந்தபோதுதான்….. அந்தத் துயரம் நடந்தது!

எங்கள் கதாநாயகனுக்குப் பக்கத்தில்….. மிக அருகில்….. எதிரி ஏவிய மோட்டார் குண்டொன்று விழுந்து வெடித்தது…… அவனை…..ஓ! அதை எப்படிச் சொல்ல……?

எங்கள் கண்களுக்கு முன்னாலேயே, எங்கள் நெஞ்சினிய நண்பன்….. கை…. கால்…. இடுப்பு….. நெஞ்சு…. முகம்….. எல்லாமே பிய்ந்துபோய்….. தசைகள் தொங்கி….. இறைச்சியாய்…..ஓ! அதை எப்படி விபரிக்க…….

இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்துகொண்டும் எங்கள் நவநீதன் கத்தினான்…. ‘’மோட்டாரை எடுங்கோடா…..”, ‘’மோட்டாரை விடாதேங்கோடா….”

உயிரின் கடைத்துளி சிந்தும் போதும், சத்தமில்லாமல் அவனது வாய் அசைந்துகொண்டேயிருந்தது…. அது ‘’மோட்டாரை விடாதேங்கோடா….” என்ற கட்டளையாகத்தான் இருந்திருக்கும்.

அவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நாங்கள் விடவில்லை.

கொண்டுதான் வந்தோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்

 

lep%2Bsellakili%2B.jpg

 

சதாசிவம் செல்வநாயகம்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

lep%2Bsellakili.jpg
முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.

sellakili.jpg

 

தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ''அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ"" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

"அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்" என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

28eelam.jpg

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக'கும' எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து '"பசீர் காக்கா"" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். 'சுடு" என்ற அப்பையா அண்ணை உடனே 'கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு" என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ''தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ''யாரது"" என்று முன்னே வந்தனர்.

''அது நான்ராப்பா"" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ''அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை"" என்றார் ரஞ்சன்.

''இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்"" என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. 'எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்" எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ''அண்ணா அவன் அனுங்குகிறான்." மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

''கரையால் வாருங்கள்"" என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ''யாரது'' என்று வினவ அம்மான் ''அது நான் தம்பி" என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ''அம்மானைக் காணவில்லை"" என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ''டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது" என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

- அன்புடன் கிட்டு -

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qY5FGdPaHZ4

 

செல்லக்கிளி அம்மான் பற்றி, தேசியத் தலைவர்.

Link to comment
Share on other sites

 

 

பிரிகேடியர் தீபன்
 
Theepan_LTTE_002.jpg
 
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல்...
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. 
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
 
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
 
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
 
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
 
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
 
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
 
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
 
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
 
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
 
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
 
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
 
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
 
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.
 
இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
 
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
 
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
 
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
 
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
 
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
 
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
 
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
 
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
 
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.
 
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
 
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
 
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.
 
இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
 
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.
 
2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
 
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.
 
கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.
 
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.
 
சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."
 
தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.
 
-சாணக்கியன்- 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

capt_ranjan.gif

“மக்கள் போராட்டம்” என்ற தமக்கே புரியாத சில மெய்யியல்களை (தத்துவங்களை) பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு இயலக்கூடியாத என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் படையத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்.

பருத்தித்துறைக் காவல்துறை நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! “  என பாடம் புகட்டியவன் ரஞ்சன்.

capt_ranjan2.jpg

இன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது ஈகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை.

ஒவ்வோர் ஆண்டு சனவரி முதலாம் நாள் உன்னை எனக்கு நினைவுபடுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டறிக்கை கொடுத்தல்,  இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை செய்து வந்தாய்.

சிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.

விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்து கொண்ட தொடக்க காலத்தில் நீ பட்ட அல்லல்கள் இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் விடுதலையின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

நீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதை சீர்குலைந்து காணப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பயணத்தை மேற்கொண்டோம். எமது பயணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி, மாறித் துக்கிச் சென்று எமது பயணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ? கையை விரித்து விட்டார்.

மீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பேரூந்து மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் மூன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின.

ஊர்திப் பயண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு தேவைகளிற்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன். உனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். பயிற்வெள்பை என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது.

‘கோட்பாடு வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை அழிக்க புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று உணவு கொடுத்து அனுப்பிவைத் தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமானை போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் தொடங்கியாயிற்று.

capt_ranjan1.jpg

கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள். S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது புத்திசாலித்தனமாக இந்தச் செயற்பாடு அன்று சீலனைக் காப்பாற்றியது.

நீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட கடுமைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. படையினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக படையினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள்.

படையினரின் சுடுகலன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல கேட்டுத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவர் பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை.

பயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமையும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன.

மீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மையே அதிகாரம் செய்து  அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம்.

சாவகச்சேரி காவல்துறை நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன்.

உமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் படையினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்தவேளை முதல் நாள் இரவு மாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூட்டிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய்.

5capt_ranjan4.png

மீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் நன்மை அந்த கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை.

தொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதலாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள். பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை காவல்துறை நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய்.

அதன் பின்னே பருத்தித்துறை காவல்துறை நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் காவல்துறை நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் காவல்துறையினரிடம் பறிகொடுத்த உந்துருளியும் எமது கையில் கிடைத்தன.

ஊந்துருளி பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மெச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டோம். எமது பையை சோதனையிட்ட காவல்துறையினர் “இதென்னடா கிறனைட்டோ” என்று கேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் காவல்துறையினரிடம் பிலிம் றோல், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான். எம்மால் பறிகொடுக்கப்பட்டஉந்துருளி எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

 

காவல்துறை நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய்.

ஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. ஊர்தியில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ ஊந்துருளியில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் ஊந்துருளி நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு மிதிவண்டியை எடுத்தபோது அதன் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய்.

உனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது ஈகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய்.

உன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான்.

அனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான்.

- அஜித்

 

http://www.veeravengaikal.com/index.php/adikatkal/49-captain-ranjan-lala-kanaganayagam-gnanenthiramohan-ptpedro-jaffna

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் கேடில்ஸ்

 
மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை 
வீரஜனனம: 14-05-1966 - வீரமரணம் 14-02-1987

போராட்டத்தின் நிழலில்
பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கண்டாவளையில் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.

அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.

தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்@ர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.

தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.

மூலம் - எரிமலை
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

capt_pandithar.gif

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் நாளன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது.

அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் படையினருக்குமிடையே கடுமையான சண்டை மூண்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் கப்டன் ரவீந்திரன் இறுதிவரை போராடி, விடுதலை இலட்சியத்திற்காகத் தனது உயரைத் ஈகம் செய்தார். கப்டன் ரவீந்திரனுடன் நான்கு இளம்புலிகள் வீரச்சாவு அடைந்தனர். ஏனைய போராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பினர்.

capt_pandithar1.jpg

கப்டன் ரவீந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராவார். அத்துடன் புலி இயக்கத்தின் நிதியமைப்பிற்கும் ஆயுதப் பராமரிப்பிற்கும் பொறுப்பாக இருந்தார்.

வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு அகவை 24. 1977ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயக்க வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப்பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் ரவீந்திரன், விடுதலைப் போராளிகளின் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராக, அவரது வலது கையாகத் திகழ்ந்தார். இயக்க நிர்வாகப் பொறுப்புக்களைச் சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது, கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றி வந்தார். ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகத் தனது உயிரை அர்ப்பணித்துக்கொண்ட இந்த வீர மறவனுக்கு, விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றனர்.

capt_pandithar2.jpg

அச்சுவேலித் தாக்குதல் சம்பந்தமாக சிங்கள அரசு விசமத்தனமான பொய்ப் பரப்புரையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. புலி இயக்கத்தின் படையத் தலைமையகத்தை அழித்துவிட்டதாகவும், புலி இயக்கத்தையே ஒழித்துவிட்டதாகவும் வெற்றி முரசு கொட்டியது. இந்தப் பரப்புரையில் எவ்வித உண்மையுமில்லை.   புலிகள் இயக்கத்தின் படைய பிரிவில், பெரிதும் சிறிதுமாக ஏராளமான கெரில்லாத் தளங்கள் தமிழீழத்தில் உள்ளன.

அச்சுவேலியிலுள்ள சிறிய கெரில்லாத் தளமொன்றே இம்முற்றுகைக்கு இலக்காகியது. அதுவும் 500இற்கு மேற்பட்ட படையினர் கனரக ஆயுதங்களுடன், எமது 15 கெரில்லா வீரர்களை சூழ்ந்து கொண்டனர். இந்தச் சண்டையில் 10 புலிக் கெரில்லா வீரர்கள் வீரமுடன் போராடி முற்றுகை அரண்களை உடைத்துக் கொண்டு மீண்டது, பெரிய போர்ச் சாதனை என்றே சொல்லவேண்டும்.

கெரில்லா வீரர்களைக் கைநழுவ விட்ட படையினர், அச்சுவேலிக் கிராமத்திலுள்ள 50 அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி, ‘வெற்றி வாகை’ சூடிக்கொண்டனர். சிறீலங்கா அரசின் இந்தப் பொய்ப் பரப்புரையானது, தமிழ் மக்களின் மனவுறுதியைத் தளர வைத்து, சிங்கள ஆயுதப்படைக்கு ஊக்கத்தை அளிக்கும் நாசகார நோக்கத்தைக் கொண்டது. வெறும் பொய்ப் பரப்புரையின் மூலம் தமிழரின் விடுதலைப் போரட்டத்தை நசுக்கிவிட முடியாது என்பதை, சிங்கள அரசுக்கு நாம் உணர்த்தப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

 

http://www.veeravengaikal.com/index.php/adikatkal/50-captain-pandithar-ilango-sinnathurai-raveendran-kamparmalai-jaffna

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maj_maraiselvan.gif

maj_maraiselvan1.jpg

அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்துகொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்தபடி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்துகொண்டிருந்தது.

அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்துகொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன்.

அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்குநோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிகநேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போகவேண்டியிருந்தது.

வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்தபோது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான்.

அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும்.

தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்ததன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்துவிட்டு தண்ணீர் எடுத்துவரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான்.

காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்குக் காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்கவேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதிபெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்றபோது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம்தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டிநிற்பது அதுவே.

maj_maraiselvan.jpg

வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும்போதுதான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கண்டிவீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்றபோது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒருபுறம் அவர்கள் தேடிவந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்றபோது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன.

வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ்மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன.

இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச்  துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவிவந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும்போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது.

அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன.

ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்துகொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணையவேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூரநோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின.

கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது.

அந்தப் பெரிய சமரரங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்திவிட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது.

வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்துகொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான்.

ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்றபோது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.

துளசிச்செல்வன்

 

 

http://www.veeravengaikal.com/index.php/blacktigers/104-major-maraiselvan-selvarajah-rajinikanthan-sasthirikulangkulam-vavuniya

Link to comment
Share on other sites

lt_col_bama.gif

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா !
 

lt_col_bama2.jpg

லெப்.கேணல் பாமா(கோதை)

எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன    அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச் செய்யும்.
 
எங்கட பாமாக்காவோ ?
 
என்று அவளைப்பற்றிக் கூறி கண்கலங்கும் போராளிகள் ஏராளம், நேற்றுவரை இந்தப் தென்னந்தோட்டங்களிலும், கடலின் உப்பு நீரிலும் கால்களை நீள நீள வைத்தபடி உலா வந்தவள். இன்று எங்கள் நினைவுக்குள் நீளமாய் உறைந்து போனாள்.
 
பருத்திதுறையிலுள்ள இன்பருட்டி கடற்கரை ஓரத்தில் சின்னக் குழந்தையாய் விளையாடி சிப்பிகளும் கிழிஞ்சல்களும் பொறுக்கி......... அவள் குழப்படிக்காரியாகத்தான் இருந்தாள். சண்முகசுந்தரம் ஐயாவுக்கும், இரத்தினேஸ்வரி அம்மாவுக்கும் நாலாவது பிள்ளையான அவள் சியாமளாவாக வலம் வந்து அந்த வீட்டை நிறைய வைத்தவள். 1971.03.28 இல் அவள் பிறந்த போது அந்த வீடு நிறைந்துதான் போனது. சியாமளா சரியான துடியாட்டக்காரி அம்மாவுக்கு விளையாட்டுக்காட்டிவிட்டு, இன்பருட்டிக் கடற்கரை ஓரங்களில் கால்கள் மண்ணிற் புதைய, சின்னக் குழந்தையாய் தத்தித் தத்தி வருவாள். தொடுவானைப் பார்த்தபடி, எறிகின்ற அலைகளில் நனைந்தபடி நீண்ட நேரங்கள் நிற்பாள். அம்மா அவளைக் காணாது தேடிவரும் வேளைகளில் ஓடி ஒளித்து, அவளது குழந்தைக் காலக் குழப்படிகள் சொல்லிமாளாது.
 
அவள் தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலும் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தனது உயர்தரக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரியில் கற்றபோது உயிரியல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்திருந்தாள். படிபபிலும் சரி, விளையாட்டிலும் சரி என்றுமே பின்தங்கியது இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் அவள் பெற்ற சான்றிதழ்கள் ஏராளம்.
 
இப்படி இருந்தவளது வாழ்வின் அமைதியை இந்திய படை நடவடிக்கைகள் குலைத்தன. அவளது அண்ணன் கடற்புலி லெப்டினன்ட் வெங்கடேஸ் வீரச்சாவைத் தழுவிக் கொண்டபோது படிப்பை விட நாடடுப்பணி மேலாகப்பட்டது. அண்ணன் கொண்ட இலட்சியப்பணியைத் தொடர சியமளா இயக்கத்தில் இணைந்தாள்.
 
1989 ஆம் ஆண்டு பங்குனி திங்கள் இவள் இயக்கத்துக்கு வந்தநேரம், தமிழீழத்தில் வழுக்கி விழுகிற இடமெல்லாம் இந்திய படைகள், புலிகளை இரவும் பகலும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரம். புலிகளின் முக்கியமான நடவடிக்கைகள் யாவும் காட்டிலே மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்த சூழ்நிலையில் இயக்கத்தில் போராளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதுவும் பெண் போராளிகளின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளுக்குள் மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில் சியாமளா, பாமாவாக தன் பெயரை வைத்துக் கொண்டு நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தாள். பயிற்சிகளில் அவள் காட்டிய திறமையும் உயர்ந்த திடமான உடலமைப்பும் அவளை 50 கலிபர் துப்பாக்கியின் உதவிச் சூட்டாளராக செயற்பட வைத்தது. தனது கனரக ஆயுதத்தை தோளிலே சுமந்தபடி இணைப்பிகளை (லிங்குகள்) தோளின் குறுக்காகப் போட்டபடி அவள் நடப்பது தனியான கம்பீரம் ! காட்டுக்குள் நீண்டதூரங்கள் நடந்து, காடு முறித்து, எமக்குத் தேவையான பொருட்களை நாம் சுமந்துவருவது வழக்கம் பெரும் சுமைகள் தோளை அழுத்த அந்த வேளையிலும் இவள் கலகலத்தபடி வருவாள். எங்களுக்குப் பாரங்குறைந்தது போற்தோன்றும்.
 
1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய படைகள் எம் நாட்டைவிட்டு வெளியேறிய பொது காட்டில் இருந்த இருநூறு பேர் கொண்ட குழு யாழ்பாணம் வந்தது. இக் குழுவில் பாமாவும் ஒருத்தியாக இருந்தாள். அன்றிலிருந்து விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில் அவளது தடயங்கள் பதிந்த வண்ணமிருந்தன.
 
கோட்டை, பலாலி, காரைநகர், சிலாவத்துறை, பலவேகய ஒன்று, மணலாறு என்ற நீண்ட பட்டியலில் அங்குள்ள காவலரண்களில் அவளது கால்கள் அகலப் பதிந்தன.
 
பாமா! குறிப்பிட்ட சில காலப்பகுதியினுள்ளே இவளது வளர்ச்சி அபாரமானது. இவளின் உறுதியான செயற்பாடுகளும் நினைத்தகைச் சாதிக்கும் பண்பும் இவளைப் படிப்படியாக வளரச் செய்தன.
 
பலாலி காவலரண்களில் பாமா நின்றபோது அவளது செயற்பாடுகள் யாவும் மறக்க முடியாதவை. எந்த வேலையையும் எனக்கு தெரியாது என்று இவள் தலையாட்டியதை நாங்கள் காணவில்லை. வீட்டிலிருந்து எல்லாம் தெரிஞ்சு கொண்டே வந்தனாங்கள். இயக்கத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம். எல்லாம் முயற்சியாலைதான் என்று அடிக்கடி கூறுவாள்.
 
அவற்றை நாம் பலாலியில் கண்டோம். அது 1990ம் ஆண்டின் மழைக்காலப் பகுதி. பலாலியின் செம்பாட்டுமண் மழை ஈரத்தில் பிசுபிசுத்தது. கால்கள் சேற்றில் புதைந்தன. சேற்றுக் குழம்புகளின் நடுவே இருந்த அந்தக் காவலரண் அடிக்கடி எதிரியின் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது. ஓயாமல் எறிகணைகள் விழுந்ததால் நிலம் கரியாகிப் போனது. அடிக்கடி அவ்விடத்துக்கு முன்னேற படையினர் முயற்சிப்பதும் நாம் அடித்துத் துரத்துவதும் வழக்கமான ஒரு நிகழ்வாகிப் போனது.
 
இந்வேளையில் முதல் நாள் நடந்த கடுமையான சண்டையில் பதின்னான்கு பேர் காயம் அடைந்தனர். எதிரியின் இலக்கான அந்த இடத்தில் தொடர்ந்தும் எமது குழுவை நிலை நிறுத்துவதற்கு நாம் ஒரு பொறுப்பான ஆளைத் தேடிக் கொண்டிருந்தபோது பாமாவின் செயற்பாடு நம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
 
நான் குறூப்பை கொண்டு போறன். அவள் எழுந்து சொன்னாள். இதுவரையும் பெரிய களங்களைக் கண்டவள் அல்ல அவள். ஆனால் அவளிடம் ஒரு வித்தியாசமான திறமை இருக்கத்தான் செய்தது. அவளுக்குக் கொடுக்கப்பட்ட குழுவைத் திறமையாகச் செயற்படுத்திய விதம் எமக்கு நிறைவைத் தந்தது. அடிக்கடி படையினருக்குத் தலையிடி கொடுப்பதும் பாமாவின் வேலையாக இருந்தது. அந்தக் காலங்களில் பலாலியின் பனைவெளிகளை ஊடறுத்தபடி எதிரியின் தேடொளி இரவைப் பகலாக்கும். மிகமிகக் கிட்டவாக தனது ஒளியைப் பாச்சியபடி இருக்கும்போதெல்லாம் பாமா அதற்கு குறி வைப்பாள் அவளது பிறவுண் குறிதவறியதாக நாங்கள் கேள்விப்படவேயில்லை. பயிற்சி முகாமிலும் சரி சண்டைகளிலும் சரி அவள் நன்றாக குறிபார்த்துச் சுடும் திறமை பெற்றவளாக இருந்தாள்.
 
அப்படி ஒரு இடத்தில் தேடொளி உடைய மறு இடத்தில் எதிரி அதைப் பொருத்த மீண்டும் உடைய வைத்து, உண்மையில் அவர்களைச் சலிப்படையவே செய்துவிட்டாள். அந்த நீண்ட பனைகளில் நிலையெடுத்தபடி இராணுவக் காவலரண்கலைள நோக்கி அடிக்கடி அருள் 89 ஐ அடிப்பாள். அது ஒரு விளையாட்டுப் போலை........ ஆனால் குறி தப்பாத ஒன்றாக அவளுக்கு இருக்கும். இப்படி எத்தனை நிகழ்வுகள் ! பாமாவின் துடிப்பான அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பலாலியின் புழுதி படிந்த செம்பாட்டுமண் சொல்லும் கனத்த காற்று சொல்லும்.
 
பலாலிக்கு பிறகு பெரிய களமாக இவளுக்கு ஆனையிறவுக்களம் அமைந்தபோது அதிலும் தன் திறமைகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஆ.க.வெ நடவடிக்கையில் மகளிர் படையணியின் பக்கம் மும்முரமான சண்டையில் இவள் நின்றாள். கடுமையான மோதல், மழை போல ரவைகள் காதை உரசுவதாக வரும் மயிரிழையில் தப்பித்த எறிகணை வீச்சுக்கள்....... பாமாவின் குழுவிலும் பல பேர் காயம்பட்டுத்தான் போனார்கள். எதிரி பின்வாங்கும் வரை பாமா மட்டும் தனித்து நின்று அடிபட்டதை நினைக்கிறோம். கடைசியாக காலிலே பலத்த காயமடைந்த ஒரு போராளியை அந்தக் கும்மிருடடு நேரத்திலே கண்டுபிடித்து பின்னுக்கு கொண்டு வந்து இவள் மூச்சுவிட்ட போது தனியொருத்தியாக நின்று தடயங்கள் எல்லாவற்றையும் பொறுக்கியபோது.......... ஆனையிறவுச் சண்டையில் இவள் தலையில் காயப்பட்டாள். இவள் தப்பி வருவாள் என்பதில் எங்களுக்கு ஒரு துளியளவு நம்பிக்கையே இருந்தது. ஆனால் பாமாவின் திடமான உடல் அமைப்பும் உறுதியுமே அவளைத் தப்ப வைத்தது. மீண்டும் பழைய நிலைக்கு இயங்கவைத்தது.
 
நிறையக் களங்கண்ட ஒரு போராளியாக, ஒரு குறுமபுக்காரியாக, எல்லோருக்குமே உதவுகின்ற இளகிய மனம் படைத்தவளாக நாம் அவளைக் கண்டோம்.
 
இப்படித்தான் ஒருநாள்
 
அது லெப்.கேணல் ராஜனின் வழிநடத்தலில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி. அதில் இவள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இவளது முகாமுக்கு ஒரு சிறுமியும் சிறுவனும் சாப்பாடு கேட்டு வந்தனர். அப்போது அங்கு உணவேதும் இருக்கவில்லை. இதை அவதானித்த இவள், எல்லோரிடமும் இருக்கும் காசு எல்லாவற்iயும் சேர்க்க ருபா வந்தது. அதை அவளிடம் கொடுக்கச் சென்றபோது, அச்சிறுமியிடம் உங்களது பெயர் என்ன ? என்று கேட்க, அப்பிள்ளை வாய்திக்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவள் ஏன் என்று விசாரித்தாள். வான் குண்டுவீச்சின்போது குண்டுச்சிதறல் தாடைக்குள் தாக்கியதால் வாய்திறக்க முடியாது என்ற விபரத்தை அந்தச் சிறுமி சைகை மூலம் கூற, இவளது கண்கள் குளமாகின.
 
அந்தக் காசைக் கொடுத்து அனுப்பிவிட்டு இந்தச் சின்னப் பிள்ளை என்ன பாவம் செய்தது.? இதுக்கு இவங்களிற்கு முறையான பாடம் படிப்பிக்கவேணும் என்று சொல்லிய போது இவளது குரல் தழுதழுத்தது. அடிக்கடி ”இந்தத் துயர்களெல்லாம் எங்களோட முடிஞ்சிட வேணும். எங்கட சின்னனுகள் அனுபவிக்க கூடாது. அதுகள் மகிழ்ச்சிய தங்கட தாய் தகப்பனோட வாழனும்“ என்று கூறி அவள் கண்கள் கலங்கி தவித்ததை நினைக்கும் போது...........
 
இன்று படைத்துறைக் கல்லுரியில் தொலைத்தொடர்பு பற்றிய வகுப்பு, புதிய வகைகள், புதிய தொழிற்பாடுபாடுகள் நுட்பமாக ஆராய்ந்து விளக்கப்பட்டது. இறுதியாக விரிவுரையாளர் இந்த (ci 25) வோக்கி புதிசு. இதன் தொழிற்பாட்டை நான் உங்களுக்கு சொல்லித்தரமாட்டன். நீங்கள்தான் இதை ஆராய்ந்து கண்டு பிடிக்கவேணும். குறிப்பிட்ட காலம் தருவன் என்று கூறி முடித்த போது பாமா அதோடு முழு மூச்சாய் அதனோடு ஒன்றி அதன் தொழிற்பாட்டை அறிவதில் நேரங்காலம் இல்லாது கண்ணாய் இருந்ததை இப்போது நினைத்தாலும்.................
 
அந்த முயற்சியில் அவள் வெற்றி பெற்றாள். அதன் தொழிற்பாட்டை முதலில் கண்டு பிடித்து விளங்கப்படுத்தினாள். அப்போது எல்லாப் போராளிகள் மத்தியிலும் இவளின் திறமை வெளிப்பட்டது. இவளின் விடாமுயற்சியை நாம் எங்களுக்குள் சொல்லிச் சொல்லி வியந்து போனோம்.
 
சதுரங்கம் விளையாடுவது இவளுக்கு பிடித்தமான ஒரு விளையாட்டு. நுட்பமாகவும் திறமையாகவும் அவன் விளையாடுவது யாவரையும் வியக்கவைக்கும். பார்ப்பவரைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் போல நினைக்கத் தூண்டும். அவளின் இராசாவும் இராணியும் தோற்றதாக வரலாறு இல்லை. அந்தளவுக்கு எதிரே விளையாடுபவரை விழுத்துவதில் குறியாக இருப்பாள். அவளின் இன்னொரு விருப்பமான விளையாட்டு கரப்பந்தாட்டம். மாலை நேரத்தில் அவள் விளையாட வந்துவிட்டாள் என்றால், விளையாட்டுத்திடல் கலகலத்துப்போகும். தள்ளி எட்டி ஓடி ஓடி அடிப்பது அவளுக்கொரு கலையாகத்தான் தெரிந்தது.
 
1992.03.01 இல் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அன்று கடற்புலிகள் மகளிர் அணி தோற்றம் பெற்றது. எங்கள் தலைவரின் கனவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும்படியாக கடற்புலிகளின் வளர்ச்சியில் பாமா வகித்த பங்கு அளப்பரியது.
 
1992ம் ஆண்டின் பிற்பகுதியில் பாமா கடற்புலிகளின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்ப்பதில் அவள் தீவிர அக்கறை செலுத்தினாள். சகபோராளிகளுக்கு அணிநடை பழக்குவதிலிருந்து முக்கியமான கற்கைகள் எடுப்பது வரை எல்லாவற்றிலும் பங்கேற்றாள். தலைமையேற்று நடத்தினாள்.
 
கிளாலில் மக்கள் பாதுகாப்புகாக எம்மால் நடத்தப்படும் பாதுகாப்புப் பணியில் இவளுடன் ஒரு குழு பங்களித்துக் கொண்டிருந்தது. கிளாலிக் கடலில் கொட்டும் பனியிலும், மழையிலும் ஊசியாகக் குத்தும் உப்புக் காற்றின் மத்தியிலும் அவள் விடிய விடிய காத்திருந்த காலங்களை நினைக்கின்றோம். தூரத்ததே புள்ளியாய் விசைப்படகுகள் தெரியும். கடற்பரப்பில் மக்களின் படகுகள் ஆடிச் செல்லும். நெஞ்சு நீரற்று வரண்டு போய் கண்கள் பீதியாய் வழிய துயரப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய கடற் சண்டைகளில் பாமா பங்கேற்றதை நினைக்கிறோம். 'நீ வீட்டில் மிகுந்த பிடிவாதக்காரியாய் இருந்தாயாமே? நினைத்ததைச் செய்து முடித்து நினைத்ததை வாங்கித் தரும்படி அந்தப் பிடிவாதம்தான் கடலிலும் உன்னைச் சாதிக்க வைத்ததோ....
 
வோட்டர் ஜேட்டை ஏன் நீங்கள் எடுக்கவில்லை? என்று பாமாவின் மாமா கேட்ட பொழுது மாமா அதைக் கொண்டு வந்து விட்டுதான் உங்களுடன் கதைப்பேன். என்று கூறினாளாம். இதைக் கண்கலங்கியவாறு மாமா கூறினார். நினைத்ததைச் செய்து முடிக்கும் அந்த இயல்பு பாமாவுடன் கூடப்பிறந்தது. என்பதை நாம் பல நிகழ்வுகளில் கண்டோம்.
 
இத்தகைய நினைத்ததைச் சாதிக்கும் பண்புதான் சாவுவரை கூட அவளை இறுகப்பற்றியிருந்து. பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது. இத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி முக்கிய இடம்பெற்றிருந்தது. இந்தச் சமரில் கடற்புலிகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் நாகதேவன்துறையில் கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஒரு படகுப் பொறுப்பாளராக பாமா அனுப்பப்பட்டாள். சண்டைக்குத் தனது படகைத் தயார் படுத்திக் கொண்டிருந்த பாமா கரையில் நின்ற போராளிகளிடம் ஆளை ஆள் தெரியாத இருளில், நம்பிக்கையபக, இந்தச் சண்டையிலே நாங்கள் வோட்டர் ஜெட் ஒண்டைக் கொண்டு வருவோம். என்று சொல்லிவிட்டுப் போனாள். சொன்னபடி நாகதேவன் படைத்தளத்தை தகர்த்துவிட்டு ஒரு நீருந்து விசைப்படகோடு முகமெல்லாம் சிரிப்பாக வெற்றிப் பூரிப்போடு கரைக்கு வந்தாள்.
 
அதிகாலை திரும்பவும் அவளை வருமாறு தொலைத்தொடர்பு கருவு கூப்பிட்டது. எல்லா ஆயுதங்களுடனும் அவளது படகு ஒரு குருவியைப் போல புறப்பட்டுப் புள்ளியாய்ப் போனது. ஏதோ ஒன்று அவளிடம் வித்தியாசமாகத் தென்பட்டது. வழமைக்கு மாறாக ஏதையோ கூற நினைப்பது போல அவளது கையசைப்பு அந்த இருளில் மங்கலாகத் தெரிந்தது. காற்றைக் கிழித்தபடி ஓயாத ரவைகள். காதை உரசுவதான அவற்றின் சத்தங்கள். அவைகளின் மத்தியில் அவளது படகு தூரத்தே மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கடலலைகள் ஆர்த்தெழுந்து படகை மறைத்தன. நிலவை விழுங்கிய வானத்தில் ஒளிப்பொட்டாய் விளங்கிய நட்சத்திரங்கள். வானம் அமைதியாகத்தான் இருந்தது. கனதியான குண்டுச் சத்தங்கள் கண்ணிமைக்கும் இடைவெளியில் அதற்கும் இடைவிடாத நேர இடைவெளிகளில் ஓசைகள் கேட்டு கொண்டே இருந்தன. பாமா... பாமா வோக்கி கூப்பிட்டது. விரைவாக தொடர் எடுக்க முயன்று தோற்றுப் போய் ......
 
ஒரு ரவை அவளது காலை ஆழமாக பிய்த்துச் சென்றது. பீறிட்ட இரத்தக்குளியலில் பாமா வீழ்ந்த போது........... மீண்டும் மங்கலான குரலில் அவள் கட்டளை பிறப்பித்துக் கொண்டுதான் இருந்தாள். மெல்ல மெல்ல குரல் மங்கி, துடிப்படங்கி....
 
காலிலைதான் காயம் என்று....... பிரச்சனை இல்லை என்ற எங்கள் எல்லலோரினதும் நம்பிக்கைகளை பொய்யாக்கிக் கொண்டு மெல்ல மௌனித்துப் போனாள். அந்தப் பிடிவாதக்காரி உப்புக்கரிக்கும் கடல் நீரேரியில் கலந்து போனாள். கிளாலிக் கடல் உதிரத்தில் தோய்ந்தபடி மீண்டும் மீண்டும் பொங்கியேழுந்தது.
 
ஆயிரமாயிரம் மாவீரர்களோடு எங்கள் பாமா விடுதலையின் பெருநெருப்பாய் சுவாசித்தபடி......
வெற்றியின் வேராய் உறங்கட்டும் அமைத்தியாய்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உண்மை வீரனின் கதை

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி லெப். கேணல் நவநீதன்.

நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடரவேண்டும்; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான்.

பழம்பாசியில் ஒரு சண்டை.

பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது, அவரது பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக இருந்தவன் நவநீதன்.

தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்டினன்ட் கேணல் சந்திரனும் கூட போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது.

அது இந்தியப்படைக் காலம்; இடறுப்படும் இடங்களிலெல்லாம் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்த ஒரு சூழ்நிலை. மிக நெருக்கடியான ஒரு நேரம் ; இடமும் அப்படித்தான் ; மைய இலக்கு வைத்து இந்தியர்கள் படை நடாத்திக்கொண்டிருந்த மனலாற்றின் வேலியோடு – குறைந்தளவு வீரர்களையே கொண்டு நகர்ந்துகொண்டிருந்த எம் அணிக்கு, திசையறி கருவி வழி காட்டிக்கொண்டிருந்தது. தண்ணி முறிப்பு வீதியைக் கடந்து பழம்பாசிக் காட்டுக்குள் இறங்கியபோது – வழமைபோல முதலாவது ஆளாகச் சென்றுகொண்டிருந்த நவநீதன், திடீரென நடை தயங்கி, ‘அலேட் பொசிசனில்’ வைத்திருந்த ‘எம் – 16’ ஐ உயர்த்தி, மூக்கைச் சுழித்துக்கொண்டு திரும்பினான்.

அநேகமான தடவைகளில் இந்தியர்களின் அரவம் காட்டி, எம்மை அரட்டிவிடுகிற அந்த ‘மணம்’ – சற்றுக் கூடுதலாக சுவாசத்தோடு கலந்தது.

காட்டுப் பாதை; இடைக்கிடை நாம் பயன்படுத்துகின்ற தடம் தான் – அவதானித்திருக்கக்கூடிய எதிரி , இரை தேடி வந்திருந்தான். ‘’இந்தியப்படையின் விசேட அதிரடிக் கொமாண்டோக்கள்” – தடயங்களை வைத்து புலிகள் ஊகித்துக்கொண்டனர் . எங்கள் பாதையின் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயமாக எதிரி நிலை எடுத்திருப்பான்; நம்பிக்கை உறுதியாக இருந்தது.

கைவிடமுடியாத பயணம்; தேவை பெரியது . இது ஒருபுறம் போக, ‘அடிக்கப் போகின்றவனுக்குத் திருப்பி அடித்தே ஆகவேண்டும்’ என்ற ஆவேசமும் எழுந்தது. நவநீதனே முனைப்பாக நின்றான்.

தளபதி ஒழுங்கமைத்தார். அணி இரண்டாக்கப்பட்டது. பிரதான குழுவிலிருந்து குறிப்பிட்ட ஒரு தூரத்தில் துணைக்குழு நகரும்.

ஒரு பதுங்கித் தாக்குதலானது பலவகைப்பட்டதாக அமையும் . வலதுபுறமிருந்து வரலாம் ; இடதுபுறமிருந்து வரலாம் ; நேரெதிலிருந்து வரலாம். சில சமயம் , வலது அல்லது இடது புறத்தோடு எதிர்ப்பக்கத்திலிருந்து ‘’L’’ வடிவத்தில் வரலாம் . இவற்றில் எது நடந்தாலும் எதிர்கொள்ளக்கூடியவாறு திட்டமிடப்பட்டது ; பிரதான குழு தாக்குதலைச் சந்திக்க , துணைக்குழு காட்டுக்குள் இறங்கி, வளைத்து , எதிரியை நாரிப்பக்கத்தால் தாக்கவேண்டும் . நவநீதன் தான் கொமாண்டர்.

அணி அசையத்துவங்கியது; வழமைபோல நவநீதன் முன்னுக்கு . அது அவனுக்கே உரிய துணிவு – கத்திக்கொண்டு பரந்த ஒரு காட்டுக் குருவியைத்தவிர நிசப்தம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருந்தது; ‘ மயான அமைதி ‘ யை விடப் பயங்கரமானது ‘வன அமைதி’ . எதிர்பார்க்கும் சண்டை ; எதிர்ப்படப்போகும் நேரத்தை எதிர்கொள்ளத் துணிந்த மனது. அதிகரிக்கும் இதயத் துடிப்போடு கலந்த ஆக்ரோசம் . சுடத் தயாரான துப்பாக்கிகளின் குழல் வாய்கள் நிமிர்த்தி – பாயத்தயாரான புலிகளின் பதுங்கல் நகர்வு. சருகு நெரிபடும் சத்தத்தோடு மட்டும் , அடிமேல் அடிவைத்து அணி நகர்ந்து கொண்டு …….

திடீரென, இயல்பு மாறிப்போயிருந்த காடு ; இயற்கை குலைந்து போயிருந்தது வனம். சூரியனை நோக்கி வளரவேண்டிய மரக்கிளைகள் சில பூமியை நோக்கி இருந்தன . இருக்கக்கூடாத இடங்களில் , சருகுகள் கூடுதலாய்.

சருகுகளின் மறைப்பினூடு மின்னுகின்ற எல்.எம்.ஜி குழல் ; இலை குளைகளின் உருமறைப்பிற்குள் வெட்டிவெட்டி முழிக்கும் கண்கள் ; மெல்ல அசையும் ‘ஹெல்மெட்’டுகள்.

கண்டுகொண்ட நவநீதன் நிதானிக்க , பார்த்துவிட்ட தளபதி சைகை செய்ய, தாசனின் துணைக்குழு காட்டுக்குள் இறங்க – மூர்கத்தனமான சண்டையைத் தொடங்கி வைத்தான் நவநீதன். எட்டித் தொடும் தூரத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளின் குமுறல்; எம்.16 சுடுகுழல் சிவக்க, எதிரிகளின் உச்சந்தலையைக் குறிவைத்தான் அந்த வீரன். இந்தியக் கொமாண்டோக்களின் முன்வரிசை அணியை, பதுங்கிய இடத்திலேயே அவன் படுக்க வைத்தது, பிரமிப்பூட்டுகின்ற வேகம். முதலாவது ஆளைச் சுட்டதிலிருந்து, சண்டையை நடாத்தி, துரத்தித் துரத்தி அடித்து, ஆயுதங்களை எடுத்து முடித்து வைத்து – எல்லாமே அவன்தான்.

‘அதிரடியை முறியடித்து அதிரடித்தல்’ – படையியல் விஞ்ஞானத்தில் இதற்கு ‘ Counter Ambush’ என்று பெயர் . எங்கள் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய சம்பவம்; தளபதி பால்ராஜின் நெறிப்படுத்தலில் செய்வித்து முடித்தவன் நவநீதன்.

ஆனால், தினேசுக்கு இதயத்துக்குப் பக்கத்தில் வெடி கொளுவிக்கொண்டது . பீறிட்டுப் பாய்ந்த இரத்தத்திற்கு சாரத்தைக் கிழித்துக் கட்டுப்போட்டு, தடிமுறித்து ‘ஸ்ரெச்செர் ‘ கட்டித் தூக்க முற்பட்ட போதும், வேதனையின் முனகலோடு தினேஸ் மறுத்துவிட்டான்.

ஆசையோடு தளபதியின் கன்னங்களைத் தடவினான்; கூடவந்த தோழர்களின் நிலைமைகளை விசாரித்தான் ; பெற்றெடுத்த ஆயுதங்களை தொட்டுப்பார்த்துப் பூரித்தான் ; எங்கள் ‘டடி’ முகாமில் – மற்றத் தோழர்களுக்குப் பக்கத்தில்தான் தன்னையும் புதைக்குமாறு வேண்டியவன் முனகி முனகி , மெல்ல அடங்கி எல்லோரையும் பார்த்து விழிகளை மூடியபோது , வெற்றியின் ஆயுதங்களைக்காட்டி அதற்கு வித்தாகிப் போனவனை வழியனுப்பிவைத்துவிட்டு, நவநீதன் இறுகிப்போய் நின்றான்.

வரலாற்றில் பொறிக்கப்பட்ட மாங்குளம் முகாம் தகர்ப்பு –

தமிழீழத்தின் நெஞ்சத்தின்மீது குந்தியிருந்த பக்கத்து நாட்டுப் படைகளைக் குடியெழுப்ப நிகழ்த்தப்பட்ட தாக்குதல் . இரண்டாவது தடவையாகவும் – நிச்சயமாக இறுதியானது எனவும் முடிவு செய்யப்பட்ட சமர்.

முதல்நாள் – நள்ளிரவுக்குச் சற்று முன்னர் ஆரம்பித்த சண்டை , மறுநாள் விடிந்து மதியமாகியும் நடந்து கொண்டிருந்தது . தென்முனை முற்றாகவே எதிரிக்குச் சாதகமான பிரதேசம். அது வயல்வெளி ; அங்கு அவனது கைதான் ஓங்கியது. கூடுதலான இழப்பைச் சந்தித்ததால், எங்கள் தாக்குதலணி காலையிலேயே பின்னால் எடுக்கப்பட்டுவிட்டது. தென்முனை வழியான தாக்குதல் நிறுத்தப்பட்டுவிட்டது .

வடமுனையில் தனது முழுச் சக்தியையும் பிரயோகித்து எதிரி தடுத்து நின்றும் , அவனது அரண்களையும் , மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய புலிகளின் அணி , பிரதான முகாமிற்கு அருகில் , ‘ஹெலி ‘ இறங்கு தளத்தில் – கடும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எதிரி, தனது பலமான அரண் ஒன்றிலிருந்து மூர்க்கத்தனமாக மோதினான் ; தனது முழுப் பலத்தையும் திரட்டிச் சண்டையிட்டான் .

ஏனெனில் , ‘ஹெலி ‘ இறங்கு தளம் யாருடைய கைக்குப் போகின்றதோ அந்தப்பக்கம்தான் வெல்லும். அவனிடம் போய்விட்டால் உதவி எடுத்து புத்துயிர் பெற்றுவிடுவான் . எங்களிடம் வீழ்ந்துவிட்டால் தனித்துவிடப்பட்டுக் குற்றுயிர் ஆகிவிடுவான் . எனவே எதிரி இறுதி முயற்சியாக மோதினான் . உயிர் பிரிகிற நேரத்தில் ஒரு அசுர பலம் வருமாமே , அந்தப் பலம் கொண்டு தாக்கினான்.

சண்டை உக்கிரமடைய அடைய , எங்கள் தாக்குதலணி பலவீனப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் கைவிட முடியாது; ஹெலித்தளத்தை விட்டுச் சற்றுப் பின்னால் வந்தால்கூட, நாங்கள் தோல்வியடைந்ததற்குச் சமம். எதிரி நிலத்தோடு மட்டுமே மோதினான் ; நாங்களோ வானத்தோடும் மோதவேண்டியிருந்தது. நேரம் நீள நீள எங்கள் கை சோர்ந்துகொண்டு போனது. அவனா ? நாங்களா ? என்ற நிலை . சண்டையை நடத்திக்கொண்டிருந்த தளபதி , நிலைமையின் இக்கட்டைப் பிரதான கட்டளையகத்துக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார் . கை விடமுடியாது ; ஏற்கனவே இந்த முகமாய் அளிப்பதற்காக நாங்கள் செலுத்திவிட்ட விலை பெறுமதியானது ; திரும்பவும் ஒருதடவை அற்புதமான உயிர்களைக் கொடுக்க முடியாது . துவங்கியததோடு அடித்துத் துடைத்து முடித்து விடவேண்டும் ; இனி விட இயலாது .

கடைசி வழிமுறை ஒன்றைக் கையாள கட்டளைப்பீடம் முடிவு செய்தது . கைவசம் வைத்திருந்த , தேர்ச்சிபெற்ற வீரர்களைக் கொண்ட மேலதிக தாக்குதலணி ஒன்றை – நுட்பமான ஒரு தந்திரோபாயத்தோடு பிரயோகித்து ஒரு இறுதி எத்தனிப்பைச் செய்வதே அது . அவனா ? நாங்களா ? என்ற எதிர்பார்ப்புக்கு விடை தரப்போகும் அடி ; அந்த வரலாற்றுத் தாக்குதலின் வெற்றியை நிர்ணயிக்கப்போகிற அதிரடி . இதன் முக்கியத்துவம் முக்கியமானது .

ஹெலித்தளத்தில் சண்டையிடும் எதிரியை கிழக்குத் திசை வழியாக மேவி வளைத்து , அவனை வளைத்து பக்கத்தால் நெருங்கி , அறைந்து நொறுக்க வேண்டும் . வான் ஆதிக்கத்தைத் தனது கையில் வைத்திருப்பவனின் கண்களுக்கு மண் தூவி – நிலா ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போரிடுகின்றவனின் பார்வையில் பட்டு விடாமல் – அவனை அண்மிப்பது என்பது , அந்த உச்சி வெயில் பகலில் ஒரு இமாலயக் காரியம் . எதிரியை எதிர்கொள்ளும் நேரம் வரை , தன்னைச் சேதப்பட்டுவிடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அந்த அணிக்கு உண்டு ; தோல்வியைத் தழுவும் நிலையிலிருந்து அந்தத் தாக்குதலை மீட்கவேண்டிய பொறுப்பும் அதற்குத்தான் உண்டு. எனவே, அந்தச் சிக்கலான சூழ்நிலையிலும் சரியான முறையில் நகர்திச்சென்று , சரியான நேரத்தில் – சரியான இடத்தில் – தாக்குதலைத் தொடுத்து , அந்த அணியை வழிநடாத்தக்கூடிய திறமை , அதன் கொமாண்டருக்கு இருக்க வேண்டும் . அணியின் தளபதியாக நகரத் துவங்கியவன் நவநீதன் .

தாக்கிக் கொண்டிருந்த எமதணி தளர்ந்துகொண்டிருந்த வேளை , அனுப்பி வைத்த தளபதி காத்திருந்த நேரம் , என்ன முடிவோ என நாங்கள் ஏங்கி நின்ற பொழுது – மூர்க்கங்கொண்ட புலிகளாய் பாய்ந்தனர் வீரர்கள். ஆக்ரோசமான தாக்குதல் தடைகள் உடைத்து , தானை சிதைந்து , பகைவன் சின்னாபின்னமாகிப்போக – புதிய தெம்புடனும் , புதிய வேகத்துடனும் பிரதான முகாமைக் குறிவைத்தனர் புலிகள்.

எங்கள் கதாநாயகனுக்கு வெடி, இடுப்பு எலும்பை நொறுக்கிச் சென்று விட்டது சன்னம் . காலுக்கு மணல் மூட்டை கட்டித் தொங்கவிட்டு , யாழ்ப்பாணம் மருத்துவமனையில் படுத்திருந்து, ‘’இந்தச் சுமையின் வேதனையைவிட , மாங்குளத்தை வென்றதே மனதுக்கு மகிழ்வு’’ என்றவன் , 7 மாதங்களிற்குப் பிறகு எழுந்து நடக்கத் துவங்கியபோது, இடதுகாலில் ஒரு அங்குலம் கட்டையாகிப்போயிருந்தது.

முல்லைத்தீவில் ஒரு படையெடுப்பு – நவநீதன் அப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்குத் தளபதி ; லெப்டினண்ட் கேணல் நரேசுக்குத் துணையாய் நின்று , நிர்வாக வேலைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தான்.

தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக தளபதி தீபனும், நரேசும் எமது படையணிகளை எடுத்து வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றிருந்தவேளை, ‘சத்பல’ என்று பெயர் சூட்டிக்கொண்டு முல்லைத்தீவிலிருந்து படையெடுத்தான் எதிரி; ஆயிரக்கணக்கான துருப்புக்கள், யுத்த வானூர்திகள் பலம் சேர்க்க பெருமெடுப்பில் முன்னேறத் துவங்கினர்.

ஆனால் காவலரணில் இருந்ததோ சண்டைக்குத் தேர்ச்சி பெறாத போராளிகள். சண்டை செய்யக் கூடியவர்கள் என்று எவருமே இல்லை. இருந்தவர்களைத்தான் பொறுக்கி எடுத்து அனுப்பியாகி விட்டதே. இருப்பவர்கள் சண்டைக்கு அனுபவப்படாதவர்கள்; புதியவர்கள்.

அவர்களை வைத்துக்கொண்டு, எதிரி முகாமின் வாசலிலேயே களத்தைத் திறந்தான் நவநீதன்.

ஒரு முழுநாள் – ‘நவநீதன் சண்டையைச் செய்வித்தான்’ என்பதைவிட, ‘நவநீதன் தான் சண்டை செய்தான்’ என்றுதான் சொல்ல வேண்டும். திரண்டு நகர்ந்த அந்நியச்சேனையை, திறமையுடனும் – துணிவுடனும் தடுத்துத் தாமதப் படுத்தினான் அந்தப் போர்வீரன். மறுநாள் எமது படைப்பிரிவுகள் வந்துசேருகின்றபோது, தந்திரமாகச் சண்டையிட்டு, திரண்டு நகர்ந்த பகைவர்களை அவன் தடுமாற வைத்திருந்தான் . அந்த முதல் நாள் சண்டையில் தங்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக ஸ்ரீலங்கா வானொலி அறிவித்தது .

‘’இனியாவது என்ர பெடியனை வீட்டை விடுவியளே?’’ என்று கேட்காத, கேட்க நினையாத – ‘’எப்ப தம்பி எங்களுக்குச் சுதந்திரம் எடுத்துத் தரப்போறியள்?” என்று மட்டும் மனதாரவே ஆதங்கப்படுகின்ற – ஒரு தமிழன்னையின் மடியில், அந்தப் பூ முகையவிழந்தது. அது – 1969 ஆம் ஆண்டு, நவம்பர் 12 ஆம் நாள். திருலோகநாதன் என்று திருநாமம் சூட்டினார்கள்.

‘’குவா…. குவா….!” சத்தத்தோடு, அந்தக் குழந்தை – தவழ்ந்து, உருண்டு, மண்ணளைந்து, தத்தித் தடுமாறி எழுந்து நடக்கத் துவங்கிய அந்த ஓலைக்குடிசையில், அவனுக்கு முன்னமே ஏழ்மை பிறந்துவிட்டது. நிரந்தரத் தொழில் இல்லை. நிலபுலங்கள் எதுவும் இல்லை. இரண்டு நேரம் சாப்பிடக்கூட வழியில்லை; வறுமை.

கனகராயன்குளம் மகாவித்தியலயத்தில் படித்துக்கொண்டிருந்தவன், 7 ஆம் வகுப்போடு – குடும்பத்தின் ஏழ்மைச் சிலுவைக்குத் தோள் கொடுக்க, வீட்டில் நின்று கொண்டான். இருந்தாற்போல் ஒருநாள் – திடீரென, அப்பா தில்லையம்பலத்தார் மீளாத் துயில் கொண்டுவிட்ட போது, துன்பமும் ஏழ்மையும் சேர்ந்து அழுத்திய பெருஞ்ச்சுமைக்குள் அந்தக் குடும்பம் சிக்குண்டது; வதங்கியது.

இத்தகைய – துயர்படிந்த ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து, அவன் போராட்டத்துக்கு வந்த போது, அவனுக்கு 16 வயது.

தளபதி பசீலனின் அரவணைப்பில் அந்தச் சின்னப் போராளி வளரத் துவங்கினான்.

அவனுக்குப் போர் ஆசானாகி நின்ற, அவனது போராட்ட வாழ்வின் ஆரம்பத்தை வழிப்படுத்தி விட்ட குரு அவர்தான்.

துப்பாக்கிகள் தந்து, சிறந்த வீரர்களுக்கு நிகரானவனாகச் சுடப் பழக்கி, பயிற்சிகள் வழங்கி – அந்தச் சின்ன வயதிலேயே, நவநீதனுக்குள் மாபெரும் வீரத் தன்மைக்கு வித்திட்ட பெருமை, பசீலனையே சாரும்.

தளபதி பசீலனின் மெய்ப்பாதுகாவலனாக, ‘எம் 16′ உடன் கூடத்திரிந்த நாட்கள், அவனுக்குள் ஆழப்பதிந்த நினைவுகள்; அந்தக் காலத்தில் அவர் சொல்லித்தந்த சண்டை முறைகள், மறத்தலற்ற மனப்பாடங்கள்.

நவநீதன் பகைவரைச் சந்தித்த முதற்களம் என்று குறிப்பிடக்கூடியது, முந்திரிகைக்குளம் தாக்குதல்.

மணலாற்றில் சிங்களக் குடியேற்றத்துக்கு விழுந்த பலமான முதல் அடி அது. அந்தப் பெரு வெற்றியைப் பெற்றுத் தந்தவன் பசீலன். அப்போது – ‘கென்ற்’, ‘டொலர்’ பண்ணைகளில் மட்டுமே தொற்றியிருந்த அந்த விசக் கிருமிகள், பல்கிப் பெருகி மணலாற்றில் படரத் துவங்கிய பிரதான அசைவுப் பாதையை, பதவியாவில் இருந்து மேற்குக் கரை நோக்கி காட்டினூடு அமைத்துக்கொண்டிருந்த இராணுவ அணியே தாக்கப்பட்டது.

வியூகம் அமைத்து நின்று, தளபதி பசீலன் தாக்குதலை நடாத்தியபோது அவரது நிழலாக நின்று பொறி கக்கினான் நவநீதன். கொல்லப்பட்ட 20 வரையான படையினரில் சிலரது உடல்களில் அந்தச் சின்ன வீரனது துப்பாக்கிதான் கோலம் போட்டதாம்… சண்டை முடிந்தபோது புலிகள் இயக்கத்தின் ஆயுத இருப்பில் 12, ‘ரி 56’ கள் கூடியிருந்தன; சிங்களக் குடியேற்றத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், திட்டத்தின் அந்தப் பிரதான அசைவுப் பாதை, நிரந்தரமாகவே கைவிடப்பட்டது.

இந்தியப் போர் ஆரம்பித்தபோது – இந்தியப் படையின் ‘புகழ்பெற்ற யாழ்ப்பாணச் சமரில்’, கோப்பாய்ச் சண்டை எமது முல்லைத்தீவு மாவட்டப் படையணியால் எதிர் கொள்ளப்பட்டது. தளபதி பசீலனின் அந்த அணியில் நவநீதனும் களத்தில் நின்றான். இந்தியர்களின் இரண்டு ‘B.M.P’ ராங்க்’குகள் நொருக்கப்பட்டதுடன், அங்குலமும் அசையாமல் தடுத்துநிறுத்தப்பட்ட அந்த நாட்கணக்கான சண்டையில், சொல்லிக்காட்டக் கூடியளவு திறமையுடன் நவநீதன் போரிட்டான்.

கோப்பாயில் சண்டையை முடித்துக்கொண்டு திரும்பிய படையணி, முல்லைத்தீவில் போர் அரங்கைத் திரைநீக்கம் செய்தபோது – துயரம்! கொடுந்துயரம்; முல்லைத்தீவில் ஒரு சண்டைக்களத்தில், மாபெரும் வீரன் பசீலன் வீழ்ந்துபோனான்; முல்லை மண் துடித்தது. அதன் மடியில் பிறந்த குழந்தை அவன்; அந்த மண்ணின் வரலாற்றில் பொறிக்கப்பட்ட தளபதி அவன். நவநீதன் கலங்கினான்; கதறினான்; அவனால் தாங்க முடியவில்லை.

அடிபட்ட நாகமாய் அலையத் துவங்கினர் புலிகள். பதிலடி கொடுக்க பகலிரவாய்த் திரிந்தவர்களிடம் வசமாகச் சிக்கியது ஒரு இந்திய அணி – பசீலனை எம்மிடமிருந்து பிரித்தது இதே அணிதான் என்பது முக்கியமானது – தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால், தளபதி பால்ராஜின் தலைமையில் எம் இரண்டு அணிகள். ஒன்றுக்குக் கொமாண்டர் போர்க்; அடுத்ததுக்கு நவநீதன். மூர்க்கத்தனமான சண்டை. நவநீதனின் நெஞ்சுக்குள் பசீலன் அண்ணாவின் நினைவுகள் கனன்றன. பகைவர்களை நெருப்பெனச் சுட்டெரித்தான் அந்த வீரன். இந்தியரின் முதலாவது குழு தாக்கியழிக்கப்பட்ட பின்னர், மீட்கவந்த அடுத்த குழு தாக்கப்பட்டது. 25 பேரளவில் கொல்லப்பட்ட சண்டையில், கைப்பற்றபட்ட ஆயுதங்கள் இரண்டு எல். எம். ஜிகள்.

இந்தியர்கள் ‘ஒப்பரேசன் செக்மேற்’ றை நடாத்திக்கொண்டிருந்தார்கள்.

பெரும் போர்களைக் கண்ட, உலகின் நான்காவது பெரிய தரைப்படையின் 30,000 துருப்புக்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மையக் கருவைக் கிள்ளியெறிய நகர்த்தப்பட்ட வரலாற்றுச் சமர்; பிரசித்தி பெற்ற மணலாற்றுப் படையெடுப்பு.

குமுழமுனை மலைமுகாம் என்ற இந்தியத் தளம்தான் ‘செக்மெற்’ றின் மையம்: கட்டளைப்பீடம்: உயர் தளபதிகள் தங்கியிருந்து ‘பிரபாகரனைக் கொல்லும்’ போரை நெறிப்படுத்திய தலைமையகம். இந்த முகாமில் ஒரு தாக்குதலைச் செய்வதன்மூலம் , ‘செக்மேற்’ றுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கவும் ,இந்தியரின் கவனத்தைத் திசைதிருப்பவும் திட்டமிடப்பட்டது. ஒரு புலர்வுப் பொழுதில், அந்த முகாமின் தலைவாசலைத் தாக்கினர் புலிகள். மேஜர் கிண்ணிக்குத் துணைக் கொமாண்டராய்ச் சென்று வெற்றியைப் பெற்றுவந்தவன் நவநீதன். எதிர்பாராத மையத்தில் விழுந்த அதிரடி – புலிகள் கொடுத்த நெற்றியடி. இந்தியத் தளபதிகள் குழம்பிப் போயினர். செய்வதறியாது திகைத்தனர். படை நகர்த்து முன்னர், நகர்த்தும் பீடத்தைப் பாதுகாக்கவேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு ‘செக்மேற்’ நிறுத்தப்பட்டது. தங்கள் இலக்கு மீது இந்தியர்கள் கொடுத்த நெருக்கடி தளர்ந்தது. இந்த வெற்றியில் நவநீதனுக்கும் பெரும் பங்குண்டு.

நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும் ; சண்டைகளால் தொடரவேண்டும் ; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும்.

போர்தான் அவனுடைய’ தனிச் சிறப்புக் கலை’ போரில்தான் அவன் ‘துறைசார் வல்லுனன்’. எங்கள் இயக்கத்தின் தலைசிறந்த சண்டை வீரர்கள் என்று தேர்ந்தெடுத்தால், நவநீதன் தவறமாட்டான்.

எதிரிகளை எதிர்கொள்ளும் வேளைகளில், எல்லோரையும் மேவி முன்னால் நின்று – அவனுடைய துப்பாக்கி தீ உமிழும்.

கணப்பொழுதுக்குள் எதிரியின் மூச்சுப்படும் தூரத்துக்கு நெருங்கி, அவன் சுழன்றடித்துச் சுட்டு வீழ்த்தும் லாவகம் – மெய் சிலிர்க்க வைக்கும்.

அவனொரு ‘Quick Gunner’ – ‘மின்னல் வேகத் துப்பாக்கி வீரன்.’ பொருதுகளங்களில், எதிரி காணும்முன் எதிரியைக் கண்டு துப்பாக்கியைப் புயலின் வேகத்தில் இயக்குவான். அந்த வேகத்திலும், குறி பிசகாமல், நிதானமாகக் குறி வைக்கும் வல்லமை, அவனது தனி ஆற்றல்.

அவனது சண்டைகள் பார்ப்பவர்களை வியக்கவைக்கும்; சண்டை தெரிந்தவர்களைக் கூட ஆச்சரியப்படுத்தும்.

சமர்க்களங்களின் நடுவில் சிக்கலான சூழ்நிலைகள் பிறக்கும்போது, மதினுட்பம்வாய்ந்தவிதமாக முடிவெடுத்து – எச்சரிக்கையாகவும், அவதானமாகவும் செயற்பட்டு – இடையூறுகளை வெற்றிகரமாகச் சமாளித்துவிடும் திறமை மிக்கவன் அந்தத் தளபதி.

போர்வீரர்கள் இரண்டு வகையானவர்களாகக் காணப்படுவார்கள். ஒருவகை – குழுச்சண்டை வீரர்கள். அடுத்தவகை – தனிச் சண்டை வீரர்கள். குழுச்சண்டையானது படையாட்கள் எல்லோர்க்கும் பொதுவானது. யுத்தப் பயிற்சி பெற்ற எல்லோருமே செய்யக்கூடியது. ஆனால் தனிச்சண்டை அப்படியானதல்ல; அதற்குத் தனித்தன்மையான நிபுணத்துவம் தேவை. குறிப்பிட்ட சிலர் தான் அதில் வல்லவர்களாக இருப்பார்கள். நவநீதன் ஒரு தனிச்சண்டைக்காரன். நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொண்ட ஒரு சேனையை தனித்து நின்று எதிர்கொள்ளக்கூடிய மனத் துணிவும், புத்திக் கூர்மையும், செயற்திறனும் அவனிடம் உண்டு.

போரன்றி வேறேதும் நினையாத புலிவீரன் அவன். பயிற்சியைப் பற்றியும், வேவைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும், சண்டையைப் பற்றியுமே அவன் பேசிக்கொண்டிருப்பான். தூக்கத்தில் வருகின்ற கனவுகள் கூட அவனுக்குக் கள நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கும்.

எல்லாப் போராளிகளுமே அவனோடு சண்டைக்களத்துக்குப் போக விருப்பப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இயக்கத்தின் உயர் தளபதிகளினதும் அதீத நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளியாக அவன் திகழ்ந்தான். தனது செயல்களாலே அவன் வளர்த்துக்கொண்ட நம்பிக்கை அது. ஆம், செயலால் மட்டும்.

சமர் அரங்கு ஒன்றின் பின் முனையிலிருந்து நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கும் கட்டளைத் தளபதி, சண்டை சிக்கல்படுகின்ற சில சூழ்நிலைகளில், ‘’இந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும்” என நினைக்கின்றாரோ, சண்டையின் முன் முனையில் வழிநடாத்தும் நவநீதன் அப்படியே செய்து முடிப்பான். அந்த அளவுக்கு, போர்பற்றிய அறிவை – ஞானத்தை – அவன் பெற்றிருந்தான்.

கட்டையாகிப்போன காலைப் பற்றி அவன் கருத்தில் எடுப்பதேயில்லை. சண்டைகளில் அவன் முன்னுக்கு ஓடித்திரிந்து தாக்கும் போதும், தாக்குதல்களுக்காக நாங்கள் நீண்ட தூரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் – மனம் சோராமல் உற்சாகத்தோடு நடக்கும் போதும், அவன் தனது மனவுறுதியைக்காட்டுவான்; அது வியப்பைத் தரும்.

நவநீதன் அன்பானவன் . அமைதியானவன் . மென்மையான சுபாவத்தைக் கொண்டவன் .

‘’நவநீதன் பேசிப்போட்டான் ” என்று , யாருமே சொல்லாத அளவு பண்பானவன்.

அவன் அதிகம் கதைக்கமாட்டான் – இடைக்கிடை பகிடி சொல்லுவான் ; மற்றவர்களது மனங்களை நோகவைக்காமல் , எப்போதாவது யாரையும் கிண்டல் செய்வான். அவ்வளவோடு சரி .

நிர்வாக வேலைகளைச் செய்யும்போது வளைந்து கொடுத்து , எல்லோரையும் சமாளித்து , விடயங்களை ஒப்பேற்றிவிடுகிற திறமையைக் கொண்டவன் . எல்லாவகையான மனப்போக்கு உடையவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக நடந்துகொள்ளும் பக்குவம் மிக்கவன் .

எப்போதும் ஒரு அப்பாவித்தனம் அவனது விழிகளில் மிதக்கும் .

எப்போதும் , ஒரு குழந்தைத்தனம் அவனது முகத்தில் குடியிருக்கும் .

எங்கள் நெஞ்சுகளுக்குள் பொந்து அமைத்து வாழ்ந்த மாடப்புறா அவன் .

பகைவர்களுக்கு முன்னால் யுத்த சன்னதனாகி நெருப்பென நிற்கும் அந்த வீரன் , எங்களுக்குள் – பனிநீராய்ப் படர்ந்து குளிர்மையாக வருடுகின்ற நண்பன்.

எவ்வளவு ஆற்றல்கள் அவனுக்குள் குவிந்து கிடந்தன! எத்துனை திறமைகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக அவன் உலா வந்தான்! ஆனாலும் அவன் வெளியில் மிளிராத போர்வீரன்; தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள விரும்பாத விடுதலைப் புலி இலைமறைகாயாக இருந்து, பிரளயங்களைப் படைத்துக்கொண்டிருந்த பிரபாகரனின் பிள்ளை.

இறுதிக்காலத்தில் சண்டைகளுக்குப் பின்னாலேயே அவன் வைத்திருக்கப்பட்டான். ஏற்கனவே ஏராளமான சண்டைகளுக்குள் நின்றவன்; மாங்குளத்தில் வெடி வாங்கி காலைச் சின்னதாக்கிக் கொண்டவன். சண்டைகளில், அவன் பயன்படுவதைவிட, அவன் பட்டறிந்து பெற்றிருக்கும் அனுபவம் மிகுந்த பயன்பாட்டைத் தரும். எனவேதான், இயக்கத்திற்காகவும் அவனுக்காகவும் சமர்களங்களின் பின்முனையிலேயே அவன் வைத்திருக்கப்படுவான். ஆனாலும், பின்னுக்கே நின்று ஒழுங்குகளைச் செய்து கொண்டிருப்பவன், சண்டை வெடித்த அடுத்த நிமிடங்களில் முன்னுக்குப் போய்விடுவான்.

புலோப்பளைச் சண்டையைப் பாருங்கள். அதில் அவனது பங்கு முக்கியமானது; குறிப்பிடத்தக்கது.

பூநகரிக்குப் படையெடுக்க நாங்கள் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த போதுதான், எதிரியானவன் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்தான்.

ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து ஆரவாரமான ஏற்பாடுகளுடன் ‘யாழ்தேவி’ புறப்பட்டவுடனேயே நவநீதனது குழுதான் அங்கு அனுப்பப்பட்டது.

பகைவர் சேனைக்கு வாசலிலேயே வரவேற்புக்கொடுக்க அல்ல; அவர்களின் அசைவுகளை அவதானித்துத் தகவல் சொல்ல மட்டும்.

ஒரு படையெடுப்பை முறியடிக்க முனையும்போது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடயம் போர் வியூகமாகும். எமது படைவீரர்களை சரியானதோர் வியூகமமைத்து நிறுத்திவைக்கும் போதுதான், எதிரிப்படையை அதற்குள் தப்பும் வழியற்றுச் சிக்கவைத்துத் தாக்கி அழிக்க முடியும். அவ்வளவு நேர்த்தியாக வியூகம் அமைக்க வேண்டுமானால், எதிரியின் நகர்வு பற்றி மிகத் துல்லியமான தகவல்கள் தேவை. படையினரின் தொகை என்ன? ஆயுத – படைக்கல வகைகள் என்னென்ன? படையூர்திகள் மற்றும் வசதிகள் எப்படி? என்ன ஒழுங்குமுறையைக் கையாண்டு எதிரி படை நகர்த்துகின்றான்? என்ற தரவுகள் எந்தப் பிசகுமின்றிக் கிடைக்கவேண்டும்.

அவற்றின் அடிப்படையில்தான் – நாம் சிறந்தொரு வியூகத்தை அமைத்து, நம்பிக்கையோடு காத்திருக்க முடியும்.

புலோப்பளையில் இந்தப் பணியைச் செய்து முடித்தவன் நவநீதன். நாங்கள் காவியம் படைத்த அந்தப் பெருஞ்சமரில், வெற்றி வாகை சூடக்கூடியவாறு, நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்தை அமைக்க சரியான தகவல்களைத் தந்தது மட்டுமல்ல – இரவிரவாக நடந்துதிரிந்து சண்டைக்கேற்ற ‘நிலை இடம்’ தேடுவதில் நவநீதன் தளபதிகளுக்கு உதவினான்.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்பும், மீண்டும் முன்னுக்கே சென்று இறுதிவரை எதிரியின் நகர்வுகளைப்பற்றிய தகவல்களைத் தந்துகொண்டிருந்தவனுக்கு, சண்டை துவங்கியவுடன் பின்னுக்கு வந்துவிடுமாறுதான் சொல்லப்பட்டது. ஆனால், உரிய இடத்திற்குள் எதிரியின் படையணி வர, எமது முதலணியோடு களத்தில் இறங்கிச் சமரை ஆரம்பித்தது அவன்தான்.

அடுத்ததுதான் பூநகரிச் சமர் – புலிகள் இயக்கத்தின் போரிடும் சக்தியைப்பற்றி சர்வதேச செய்தி அலைவரிசைகளையெல்லாம் வியந்துரைக்கவைத்த செருக்களம்.

அவலப்பட்ட மக்களுக்குப் பாதை திரிக்கக் கேட்டபோது – அரசியல் பேரம்பேசி அகங்காரம் செய்தோருக்கு உச்சந்தலையடி கொடுத்த போர் அரங்கு.

அந்தக் கூட்டுத்தளத்தின், ‘வில்லடி’ கட்டளை முகாமைத் தாக்கும் பெரும் படையணிக்குள், உப குழுவொன்றுக்கு நவநீதன் தளபதி. ஒதுக்கப்பட்ட ஒரு காவலரண் தொகுதியைத் தாக்கி அழித்தபின், முகாமின் மையத்தைத் தாக்கும் பிரதான படைப்பிரிவுக்குத் துணைக்குழுவாக இறங்கவேண்டுமென்பதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணி.

‘வில்லடி’ முகாம்தான், கூட்டுத்தளத்தின் கட்டளை முகாம். அது மிகப் பலமானது. 91 ஆம் ஆண்டு ஆனையிறவுத்தளத்தை நாம் வெற்றி கொள்ள முற்பட்டபோது அது இருந்ததைப்போல, ஏறக்குறைய அதேயளவு பலத்துடன்தான் இது இருந்தது.

நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் சண்டை ஆரம்பித்தது. விடிந்த போது நவநீதனுக்கான காவலரண் தொகுதி தாக்கியழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கட்டளை முகாமில், ‘ராங்க்’ குகளையும், பெருந்தொகை ஆயுதங்களையும் இழந்த எதிரி, சிறு பகுதியொன்றில் எஞ்சியிருந்தான்.

அர்த்தசாம இருளில் சிதறியோடிப்போன சிப்பாய்களும், விடிந்த பின் கட்டளை முகாமை நோக்கி ஓடிவர, திடீரென எதிரி அசுர பலம் பெற்றான்.

எதிரி, ‘அடுக்குமுறைப் பாதுகாப்பு முறையில்’ (Depth Defence System) ஒன்றன் பின் ஒன்றாக அமைத்திருந்த காவலரண்களைத் தகர்த்தெறிந்துகொண்டு, ‘கனரக மோட்டார் பீரங்கி’ உள்ள தளத்தை நோக்கி முன்னேறிய எமதணி அதனைக் கைப்பற்றும்போது, அணி பெருமளவில் சேதப்பட்டுவிட்டது; பொழுதும் விடிந்துவிட்டது.

அந்த நேரத்திலேயே – துணைக் குழுக்களை அழைத்து பீரங்கிகளை அப்புறப்படுத்த முன்னர் – எதிரி புதுப்பலம் கொண்டு கடுமையாகத் தாக்கத் துவங்கினான்.

பீரங்கித்தளம் வெளியான தரையமைப்பைக் கொண்டது. முற்றாக அவனுக்குச் சாதகமான களம். அத்தோடு, திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்பட்ட சக்திமிக்க அரண்களிலிருந்து எதிரி தாக்கி முன்னேறினான்; விடிந்துவேறுவிட்டது. வானூர்திகள் பார்த்துப் பார்த்துக் குண்டடித்தன. இரவுச் சண்டையிலே மிகுந்தளவில் பலவீனப்பட்டுப்போன எமதணி, இயலுமானவரை போரிட்டது; பீரங்கிகளை விடக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் போரிட்டது. ஆனால், ஏறக்குறைய அது முற்றாகவே சேதப்பட்டு விட்ட நிலையில், பீரங்கிகளை மீட்க முடியாமலே பின்வாங்க நேரிட்டது.

கைப்பற்றப்பட்ட பீரங்கித் தளமும், பீரங்கிகளும் கைவிடப்பட்டன. இப்போது பீரங்கித் தளம் நடுவில். அதன் பின்னால் எதிரிப் படை; முன்னால் புலிகள் படை. பீரங்கிகள் அநாதரவாகக் கிடந்தன – அவனுக்குப் பக்கத்தில், எங்களுக்கு எட்டத்தில்.

திரும்பவும் அவற்றைக் கைப்பற்றியே ஆகவேண்டும். அனால் பகலில்……? அது முற்று முழுதாகவே பகைவனுக்குச் சாதகமான சூழ்நிலை. பெரும் இழப்பைக் கொடுத்து, மிகுந்த சிரமத்துடனேயே நாம் மோதவேண்டியிருக்கும். அப்படியானால் இரவு……? இல்லை: இருளும்வரை காத்திருக்க முடியாது. எதிரி மீண்டும் சுதாகரித்து, முழுப்பலத்தையும் திரட்டி முன்னேறி, பீரங்கிகளைத் திரும்பக் கைப்பற்றிவிடக்கூடும். அதனால், அவனுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாகத் தாக்குதலை நடாத்தவேண்டும்.

இது ஒரு சிக்கல் நிறைந்த கள நிலைமை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நவநீதன் அழைக்கப்பட்டான்; அவன்தான் அதற்கு உரித்தானவன்.

தேர்ந்தெடுத்த வீரர்களைக் கொண்டு உடனடியாக ஒரு தாக்குதலணி தயார் செய்யப்பட்டது. அந்த அணியின் கொமாண்டராகி சண்டையைத் துவக்கினான் தளபதி.

முரட்டுத்தனமான முன்னேற்றம். அது அவனுக்குப் பழக்கப்பட்ட வேகம். ‘பீரங்கிகள்’ – என்ற ஒரே உறுதியுடன் பாய்ந்தனர் புலிகள். நிலைமையைப் புரிந்து கொண்ட எதிரி பலம்கொண்ட மட்டும் மோதினான்; தாக்குதலை முறியடிக்க தன் சக்திக்கு மீறிச் சண்டையிட்டான்.

இருந்தபோதும் – பீரங்கிகளை அடையும்வரை நவநீதன் சண்டையை நடாத்திச் சென்றான்.

எதிரியின் வெறித்தனமான தாக்குதலுக்கு மத்தியிலும் தளத்தைக் கைப்பற்றினர் புலிகள்.

பீரங்கிகள் இரண்டு.

முதலாவதைக் கழற்றி எடுத்துப் பின்னுக்கு அனுப்பிவிட்டபோது – உற்சாகம் பொங்கியது.

நெருப்பு மழைக்குள்ளும் இரண்டாவதைக் களற்றிக் கொண்டிருந்தபோதுதான்….. அந்தத் துயரம் நடந்தது!

எங்கள் கதாநாயகனுக்குப் பக்கத்தில்….. மிக அருகில்….. எதிரி ஏவிய மோட்டார் குண்டொன்று விழுந்து வெடித்தது…… அவனை…..ஓ! அதை எப்படிச் சொல்ல……?

எங்கள் கண்களுக்கு முன்னாலேயே, எங்கள் நெஞ்சினிய நண்பன்….. கை…. கால்…. இடுப்பு….. நெஞ்சு…. முகம்….. எல்லாமே பிய்ந்துபோய்….. தசைகள் தொங்கி….. இறைச்சியாய்…..ஓ! அதை எப்படி விபரிக்க…….

இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்துகொண்டும் எங்கள் நவநீதன் கத்தினான்…. ‘’மோட்டாரை எடுங்கோடா…..”, ‘’மோட்டாரை விடாதேங்கோடா….”

உயிரின் கடைத்துளி சிந்தும் போதும், சத்தமில்லாமல் அவனது வாய் அசைந்துகொண்டேயிருந்தது…. அது ‘’மோட்டாரை விடாதேங்கோடா….” என்ற கட்டளையாகத்தான் இருந்திருக்கும்.

அவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நாங்கள் விடவில்லை.

கொண்டுதான் வந்தோம்!

விடுதலைப்புலிகள் (சித்திரை 1994) இதழிலிருந்து தேசக்காற்று.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்டன்.வாணன்

இயற் பெயர் - சண்முகலிங்கம் மோகனகுமார்

இயக்கப் பெயர் - வாணன்

தாய் மடியில் -

தாயக மடியில் - 24.12.1991

புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில்; துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன்.

அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாகிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று.

சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வின் எல்லைவரை தெளிவான பற்றுறுதியையும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டையும் வழுவாத்தன்மையையும் கொண்டிருக்கும் என்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, நடைமுறை உதாரணமாக அமைகின்றது கப்டன் வாணனின் வாழ்க்கை வரலாறு.

வாணன் அசாத்தியமான துணிச்சல்காரனாக இருந்தாலும் மென்மையானவன். எதையாவது செய்து கொண்டிருக்கும் துடிப்பும் குறும்புத்தனமும் அவனிடம் அதிகம். விளையாட்டு, நாடகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவன். வாணனுடனான இளமைப்பருவத்து நாட்கள் நெஞ்சைவிட்டகலா பதிவுகள் - அம்மாவிற்குத் தெரியாமல் நிகழ்ச்சி பார்க்க சென்று நடு இரவில் திருப்பிவரும்போது, விளாத்திமரத்தைப் பார்த்து அம்மம்மா சொன்ன பேய்க்கதையை நம்பி, உரத்து தேவாரம் பாடிக் கொண்டு வந்தது, வெள்ளத்தில் வாழைக்குத்திகளை ஒன்றாகக் கட்டி |போட்| விட்டு விளையாடியது என அந்த நாட்களின் பசுமையான நினைவுகள் பல. இளமைப்பருவத்து இனிமைகளுடன் பயணித்த காலம்.

எண்பதுகளின் பிற்பகுதியில் உக்கிரமடைந்த தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் கொலை வெறியாட்டங்களும் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் என வாழ்க்கை பதட்டமான கால ஓட்டத்தில் பயணிக்கத் தொடங்கியது. ஈழப்போர் ஒன்றின் இறுதிக்காலப்பகுதி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் தனது இருப்பை அமைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஆரம்பித்த போர், விமானக் குண்டு வீச்சு, ஆங்காங்கே நேரம் காலமின்றி விழுந்து வெடிக்கும் செல் என அசாதாரண சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. வாணனுக்கு அப்போது பதின்நான்கு வயது.

அன்றைய பதற்றமான சூழ்நிலையில், வைத்தியசாலையில் இருந்த அப்பாவின் விடுதியில் பாதுகாப்பின் நிமித்தம் தங்கியிருந்த போது நிகழ்ந்தது அந்தக் கொடூர சம்பவம். அதிலிருந்து மயிரிழையில், பிணங்களுக்குள் பிணமாக தன்னையும் உருமாற்றி ஒரு நாளுக்கு மேல் மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து தப்பியவன். 1987ம் வருடம், தீபாவளி தினத்தில், யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கில் யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவம் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டது. முன்னேறி வந்த இராணுவம், யாழ் வைத்தியசாலை வளாகத்தின் அலுவலகப் பகுதியை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுக் கொண்டு உள்நுழைந்தது.

அப்போது அப்பாவுடன் அலுவலக அறையில் நின்று கொண்டிருந்த வாணன், அந்த சம்பவத்தைப்பற்றி கூறுகையில் “ஆமி சுட்டுக்கொண்டு வந்தபோது நான் வாசல்ல தான் நின்டனான். ஆமி சுட்டதில் எனக்கு முன் நின்றவர்கள் இரண்டு பேரும் வெடிபட்டு எனக்குமேல் விழுந்து விட்டினம். நான் அப்படியே அசைவில்லாமல் அவங்களின் உடலுக்கு கீழ விழுந்து கிடந்தன், ஆமி சுட்டது எனக்குப்படேல, கொஞ்ச நேரத்தில் என்ர காலும் விறைச்சுப் போட்டுது, ஆமி வந்து என்ர காலை தனது சூக்காலால் தட்டிப்பார்த்தான், எனக்கு ஒன்டும் தெரியல, நானும் சத்தம் போடாமல் இருந்திட்டன், அதால நான் இறந்திட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டான், எனக்கு மேல இறந்து விழுந்தவர்கள் பயங்கரப் பாரம் ஒன்டும் செய்ய முடியாததால அப்படியே இருந்தன், அவர்களில் இருந்து வடிந்த இரத்தம் என்ட உடம்பையும் இரத்தமாக்கியிட்டுது அதோடு |பிணங்களுக்கிடையால் ஆமியைப் பார்ப்பன். கிட்ட வரும்போது மூச்சை அடக்கியிருப்பன், அவன் போன பிறகுதான் மூச்செடுப்பன்|. மறுநாள்வரை இப்படித்தான் கழிந்தது. ‘கடைசித்தம்பி காயப்பட்டு தண்ணீர் கேட்க, அப்பா மேசையிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க முற்பட்டபோது, யன்னல்ப்பக்கமிருந்த ஆமிசுட்டு அப்பா செத்ததை பாத்துக்கொண்டிருந்தனான்’.” என்றான்

மேலும் “உங்களை ஆமி கூட்டிக்கொண்டு போனபோது அம்மா எங்கட பெயரைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போனது கேட்டது அதனால உங்களையும் ஆமி சுடப்போறாங்களோ! என்ட பயத்தில எழுப்பேல்லை, பிறகு அப்பகுதியில் ஆமியைக் காணவில்லை, வைத்தியசாலை ஊழியர் ஓராளும் காயப்பட்டு எழும்பாமல் எங்களோடயிருந்தார். நாங்கள் இங்கயிருந்து ஓடுவம் என்று முடிவெடுத்து, நானும் தம்பியையும் தூக்கிக் கொண்டு மதில் ஏறிப்பாய்ந்து நல்லூர் கோயிலுக்கு ஓடினான். அதோட அப்பாவின் சட்டைப் பையில இருந்த அம்புலன்ஸ் சாவியையும் நல்லூர் கோயிலில் நின்ற வைத்திய பொறுப்பதிகாரி நச்சினியாக்கினியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து நடந்ததைக் கூறினேன் என்றான்”. (படுகொலைச் சம்பவத்தை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் - http://eelampakkam.blogspot.com/2011/10/blog-post.html)

இந்தச்சம்பவம் அவனுக்குள் எழுப்பிய கேள்விகள் பல, ஏதும் அறியாத அப்பாவிகள் மீது நடந்தேறிய கோரக் கொலைத்தாண்டவம் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. ஈழத்தமிழர்களின் வரலாற்றைப்பற்றி ஜயாவிடமும் அம்மம்மாவிடமும் கதைப்பான் பல கேள்விகளைக் கேட்பான். எமக்கான விடுதலையின் தேவை, இலங்கைத்தீவின் தமிழர்களின் வரலாறு பற்றி மேலதிகமாக அறிய ஆவல் காட்டினான். தனக்கு ஏற்பட்ட அனுபவம், தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் என இளம் பிராயத்தில் அவனுக்குள் ஏற்படுத்திய விடுதலைத்தீ ‘சுதந்திர தமிழீழம்’ என்ற விடையாகக் கிடைத்தது. தனது குறிப்பேட்டில் “எமது இனம் பெற்ற சுதந்திரம் பெறுமதி வாய்ந்தது. அதை எதிரியிடம் விட்டுவிடலாமா? கூடாது எமது இனத்தின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுவிட இறுதி மூச்சுவரை போராடுவோம்!”என்ற அவனது எழுத்தில் தனது திடத்தைப் பதித்திருந்தான்.

இந்திய இராணுவ காலத்தில் போராளிகளுக்கு உணவு எடுத்துக் கொடுத்தல், இராணுவம் தொடர்பான தகவல்களை வழங்குதல் போன்ற தன்னாலியன்ற பங்களிப்புக்களைச் செய்யத் தொடங்கினான். இவனது செயற்பாடுகளை அறிந்த அம்மா வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கிருந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீண்டும் கடலால் நாட்டுக்கு திரும்பி வந்து வீட்டில் நின்றான்.

ஈழப்போர் இரண்டு தொடங்கியதும் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். ஒருநாள் பயிற்சி முகாமில் எதேச்சையாக ‘மெடிசின்’ கொட்டிலில் அவனைக் கண்டேன். முகாம் அமைக்கும் வேலையின் போது காயம் ஏற்பட்டு, அப்போதுதான் குணமடைந்து வந்திருந்தான். ஒரே பயிற்சி முகாமில் இருவரும் பயிற்சியெடுத்தோம். அவனிடம் “நான் இணைந்திருக்கிறன் தானே நீ போய் வீட்டைப் பார்” என்றேன், மறுத்துவிட்டான். பின்னர் பயிற்சி முடித்து, வேலைத்திட்டங்களுக்காக வேறு இடங்களுக்குச் சென்று விட்டோம்.

தனது பணியினை பலாலி இராணுவமுகாமில் ஆரம்பித்தான், பல சண்டைகளில் பங்குபற்றினான். அவனது சுயமுயற்சியும் சுயதிட்டமிடலும் சிறந்த தலைமைத்துவத்தைக் கொடுத்தது. முக்கியமாக வேவுப்பணிகளில் திறமையாகச் செயற்பட்டான். எதிரிக்குள் வாழ்வதைக்கூட இலகுவான பணியாகச் செய்தான். அவ்வளவு தூரம் அவன் உளரீதியாக உறுதியான மனநிலை உடையவனாக விளங்கினான்.

1993 ம் ஆண்டு ’களத்தில்’ பத்திரிகையில் வந்த விழுதுகள் கட்டுரையில் இருந்து வாணனைப்பற்றி ...

”வாணன் காவலரண்களில் கடமை புரிகிற வேளைகளில் எதிரிப்படையினரின் நிலைமைகளைச் சென்று கண்காணிப்பான். ஆனால் கத்தி விளிம்பில் நடக்கிற இச்செயலின் ஆபத்து, அவனுக்குப் பெரிதாய்ப்பட்டதில்லை - மகிழ்ச்சியைக் கொடுத்து, உற்சாக ஊக்கியாய் இருந்தது.

03-11-1990 அன்று நடாத்தப்பட்ட மாவிட்டபுரம் சிறீலங்காப்படை மினிமுகாம் தாக்குதலுக்கு முன் வேவு பார்க்கும் பணியினை இவன் ஏற்றிருந்தான். மிகச் சாதுரியமாகச் சென்று தகவல்களைத் திரட்டி ஒன்றும் மீதியின்றி தளபதியிடம் பகிர்ந்தான். மேலதிக உறுதிப்பாட்டிற்காக தளபதியினால் அனுப்பப்பட்ட போராளிகளினால் கொண்டுவரப்பட்ட தகவல்களும் இவனுடையதை ஒத்து அச்சொட்டாகவே இருந்தது. வேவுக்கடமைகளிலும் இவன் ஆளுமை மிளிர்ந்தது.

இத்தாக்குதலுக்காக எதிரியின் நிலைகளை நோக்கி இவன், சகபோராளிகள் ஊர்ந்து முன்னேறி நிலையெடுக்கின்றனர். தளபதியின் கட்டளை பிறக்கின்றது. எதிர்பாராத் தாக்குதலில் எதிர்ப்படையினர் நிலைகுலைந்து போயினர். நிதானிப்பதற்குள்ளாகக் குண்டுபட்டு வீழ்கின்றனர். எறிகணைகள், உலங்குவானூர்திகள் உக்கிரம் கொண்டு எமது நிலைகளைத் தாக்குகின்றன. குண்டு வீச்சு விமானங்கள் எமது முன்னேற்றத்தைத் தடுக்கப் பகீரதப்பிராயத்தனம் செய்கின்றன. ஆயினும் இவர்கள் எதிரிப்படையின் நிலைகளை அழித்தனர். மினிமுகாமைக் கைப்பற்றினர். எதிரிப்படையினர் தமது ஆயுதங்களை வீசிவிட்டு, காயமுற்ற தமது சகாக்களைத் தூக்கிச் சுமந்தவாறு ஓட்டமெடுத்தனர். அவற்றையும் கைப்பற்றி எமது நிலைகளை நோக்கி மீள்கையில், எங்கிருந்தோ வந்ததொரு குண்டு! இவன் உடலைப் பதம்பார்க்கின்றது! குருதியாறு நிலத்தை நனைக்கிறது. இதைப்பற்றி அவனது தினக்குறிப்பு வரிகள் குரலிலேயே நெஞ்சுள் ஒலிக்கிறது! ”தமிழா நீ பிறவி எடுத்தாலும் நீ பிறந்த மண்ணுக்காக ஒரு துளி இரத்தத்தைக் கொடுத்துவிட மறந்திடாதே தமிழா....”

மாவிட்டபுரம் மினிமுகாமைத் தகர்த்து வீரசாதனை புரிந்தவர்களில் ஒருவரான இவன், தனது விழுப்புண் ஆறமுன்னே அடுத்த சமர்க்களத்திற் குதித்தான். 19-12-90 அன்று கட்டுவனில் சிறிலங்காப் படையினருடனான கடுஞ்சமர், முன்னேற முயல்கின்றனர் எதிரிப்படையினர், தடுத்து நிறுத்துவதில் இவனது துப்பாக்கியும் சுறுசுறுப்பாய்த் துரிதமாய் இயங்கியது. 05-02-92 அன்று நடந்த தச்சன்காடு மினிமுகாம் தாக்குதலிலும் இவனது பங்கு அளப்பரியது.

சகதோழர்கள் மேல் இவன் காட்டுகிற கரிசனை அபாரம். அவர்களை வழிநடத்துகிற ஆற்றலை அவர்களே புகழ்ந்துரைப்பார்கள். இராணுவம் முன்னேறி வந்த ஒரு தடவை, இவனது குழுவைச் சேர்ந்த ஒருவன் அசட்டையாக எழுந்து நின்று அவதானித்தான். இவன் கண்டிப்பும் அன்பும் கலந்த தொனியிற் சொன்னான், ”எவ்வளவு கஸ்டத்திற்கு மத்தியில் ஒவ்வொரு போராளியையும் அண்ணை உருவாக்கி வைச்சிருக்கிறார். நீ என்னெண்டா சும்மா மண்டையைப் போடுகிறன் எண்டு எழும்பி நிக்கிறாய்!” இந்தச் சிறுவயதிலேயே தலைமைத்துவத்திற்கு விசுவாசமிக்கவனாக, ஒவ்வொரு போராளியினதும் பெறுமதி உணர்வாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தான். பங்குபற்றிய அனைத்துத் தாக்குதலுமே மிக நிதானத்துடனும், திறமையாகவும் செயற்பட்டு தளபதிகளின், பாராட்டுதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிவிட்டான்.”

சிறிது காலத்தில் பகுதி இராணுவப்பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். பொறுப்பெடுத்தபின் தனது பகுதிக்குள்ளால் இராணுவத்தை நகரவிடக்கூடாது என்பதற்காக கடுமையாகப் பாடுபட்டான். எப்போதும் எந்த வேளையிலும் ஒவ்வொரு நிலைக்கும் சென்று போராளிகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் மேல் கரிசனையாக வழிநடாத்தும் ஆற்றல் நல்ல உறவை வளர்த்தது. இராணுவத்தை சும்மாயிருக்க விடக்கூடாது தொடர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருப்பான். ஒருநாள் வாணன் இராணுவத்தி நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் சினைப்பர் வைத்திருப்பவர் வெளியில் சென்றுவிட, அந்த ஆயுதத்தைக் கொண்டு சென்று தானே ஒரு சினைப்பர் போராளியாக பதுங்கியிருந்து இரண்டு இராணுவத்தைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்தான்.

கூடியளவு தனது செயற்பாடுகளை எதிரிக்கும் தனது காவலரணுக்குமிடையில் தான் வைத்திருந்தான். அநேகமான நேரங்களில் எதிரியை அண்டிய பகுதியிலேயே இவனைச் சந்திக்கலாம் என்பது இராணுவப் பொறுப்பாளர்களின் கருத்து. தனது பகுதிக்குள் இராணுவத்தை நகரவிடாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை சிந்தித்து பதுங்கித்தாக்குதல்களை செய்தல், பொறிவெடிகளை வைத்தல் போன்ற பணிகளை தானே முன்நின்று செய்வான். அப்பகுதியில் கிடைக்கும் பழைய செல்கள் மற்றும் இதர வெடிபொருட்களை தேடியெடுத்து அவற்றை எதிரியின் நகர்விற்குச் சாத்தியமான பகுதிகளில் வைப்பான்.

”24-12-91 இது மிகத் தன்நலக்காரத் தினமோ? இத்துணை புகழ் பூத்த எம் வாணனைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதே! பாரிய வெடியோசைகள் வலிகாமம் கிழக்கின் தலையில் வெடிகின்றது. அந்தக் காலை இவ்வாறுதான் தொடங்கிற்று! இப்பிரதேசத்து ஈவினைப் பகுதி மண்ணின் இயல்பான செம்மை எம்மவர் குருதியால் மேலும் சிவப்பேறி... மூவர் விதையாகின்றனர். எதிர்பாராத கந்தக வீச்சில் மாசுற்ற எம்சூழற் காற்று இவர்தம் இறுதி மூச்சால் தூய்மை பெறுகின்றது. இந்த மூவரில் ஒருவன்தான் .. வாணன்.

ஓ.... கேட்கிறது உனது ஆத்ம ராகம். அதுதான் உனது குறிப்பேடு

”வீரத்திற்கு வித்திட்ட தமிழா , கோழைக்குக் குடை பிடிக்கலாமா? கூடாது, எமது இழப்புக்கள் இழப்பு அல்ல, விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே! எமது இலட்சியம் ஒங்குக”

உனது குறிப்பேடு, வெறும் கையேடல்ல. பின்தொடர்ந்து வரும் இளைய வீரர்களுக்காய், தாயக மக்களுக்காய் நீ எழுதி வைத்த மரண சாசனம். அது புனிதம் மிக்கது. ஏனெனில் உனது புகழுடம்பின் சட்டைப் பையிலிருந்து அதை நாம் எடுத்தபோது அதுவும் குருதியில் குளிப்பாட்டப்பட்டிருந்தது.”

வாழ்க்கையின் சில கணங்களின் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அது பாசப்பிரிவின் வேதனை, விடுதலைக்கு உரமான போராளியின் பிரிவின் வேதனை, மனதை பிழந்து விடும் அந்தச் செய்தி வந்தது. அங்கே கிடைத்த பழைய செல்லை எடுத்து பொறிவெடியாக்க முயற்சித்தவேளை வெடித்ததில் வாணனும் அவனுடன் இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது. தம்பி வீரச்சாவு, உணர்வை உலுங்கிய அந்த நிமிடங்கள்.

சிலமாதங்களுக்கு முன் அப்பாவின் திதியில் இருவரும் சந்தித்ததிற்குப் பின் அவனைக் காணவில்லை. வித்துடலும் பார்க்க முடியாதவாறு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்தப்போரில் அநியாயமாக அப்பாவையும் விடுதலைக்கு விதையாக தம்பியையும் இழந்திருக்கின்றோம்.

சுதந்திர தமிழீழத்திற்காகப் புறப்பட்ட அவனது கடமை ஒரு வருடத்தில் நிறைவிற்கு வந்துவிட்டது. விடுதலைக்காக நிறைய சாதிக்கும் கனவுடன் கடுமையாக செயற்பட்ட, சாதிப்பான் என எதிர்பார்க்கப்பட்ட, அவனின் விடுதலைமூச்சு நின்றுவிட்டது. அந்த ஆத்மா தனது கனவின் அடைவுவரை அமைதிகொள்ளாது என்பது நினைவிற்குள் வர மனது கனக்கின்றது. இதுபோன்று பல்லாயிரக்கணக்கானோரின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்து வாழும் எத்தனையோ ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் என்பது சுதந்திர விடுதலை மட்டுமே. விடுதலையை நெஞ்சில் சுமந்து வித்தாகிப்போன வாணனுக்கும் மற்றைய இருவருக்கும்; சிரம் தாழ்த்திய வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி பூட்டோ (வேவுப்புலி)

இயற் பெயர் - கனகரட்ணம் ஸ்டான்லி யூலியன்

இயக்கப் பெயர் - பூட்டோ

தாய் மடியில் - 25.05.1974

தாயக மடியில் - 11.08.2006

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக் கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப் படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான்.

அங்குவந்த முதலாளி "கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?" என ஏசுகின்றார்.

"நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்" எனக் கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.

"அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என அனுமதி கேட்கின்றான்.

அன்னை மௌனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். "நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போகமாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.

உயிராபத்துக்களை உதாசீனம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

"நீ வீட்ட திரும்பிப் போ" எனக் கூறுகின்றார்.

"இல்லை நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்."

எனப் பதிலளிக்கின்றான்.

இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் "ஓம் என்னட்ட சொல்லிப் போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள்.

முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை பூட்டோ எனும் பெயருடன் தொடங்கியது. காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்தமற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது. இவர்களுடைய காட்டுமுகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதி செய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழிநடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக் கொண்டான். இக் காலகட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.

இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப் பட்டான். வேவுத்தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யாக்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி, போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான்.

சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப் படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி, கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப் படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித்தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக் கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற்தாவரம் ஒன்றினால் தாக்கப் பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கிவிட்டது.

"பூட்டோ... பூட்டோ!" என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆகவேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப் பட்டிருந்தான்.

இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப் பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்ய வேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத்தளபதி கட்டளையிட்டார்.

அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்.பி.ஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.

ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்ப்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது.

தொடர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம் என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். 'நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்' எனக் கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்ப சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்".

'நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு' என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பலமாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத்திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான்.

தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக் கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவுவீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவ முகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காவலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிதுநேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கி விட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம்முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகி விட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க, தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித்தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.

பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத்தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக் கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும், இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.

மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நஞ்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கி வந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொருமுறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப் பெற்றுக் கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ஓ.அ.II வெற்றி உறுதிப்படுத்தப் படுகின்றது.

மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசி பெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்து கொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவுத் தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும் போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித்தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்பிடிப் படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாகப் போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்து விடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக் கொண்டான்.

பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.

'கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான்.

பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.

ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதிசெய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச் சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்தவண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனை கூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்தபடியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழற்றி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.S ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான்.

பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத்தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்து கொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டான். உட்சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப் பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசணிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத்தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான்.

தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்து கொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப் பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து.

தொடர்ந்து நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான். அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எதுவென கேட்க, "யாரு கரும்புலி பூட்டோவா?" என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை.

பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.

அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது, உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும் படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்து விடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச் சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப்பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்" என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.

தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனதுசிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும், குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானான். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான்.

மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர்தினம் கொண்டாடப்பட்டது.

ஒரு வேவுப்புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத் திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு உதாரண புருசனை, பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்து விட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.

குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடி காட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: விடுதலைப்புலிகள் மாசி-2007

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த 'புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 'பூட்டோ' என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே. தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார்.

பூட்டோ 'கலையரசன்' என்ற பேரில் கவிதைகள் எழுதினார். சில பாடல்களும் எழுதியிருக்கிறார். சக கரும்புலி வீரன் மேஜர் நிலவனுக்காக இவர் எழுதிய பாடலான 'உணர்வின் வரிகள் வரையும் கோடு' என்ற பாடல் அவற்றுள் முக்கியமானது.

மேஜர் வெற்றியரசன்

இயற் பெயர் - ஆனந் செல்லையா

இயக்கப் பெயர் - வெற்றியரசன்

தாய் மடியில் -

தாயக மடியில் -

மன்னார் பேசாலை என்னும் ஊரில் செல்லையா திரேசம்மா தம்பதிகளின் மூன்றாவது செல்வப் புதல்வனாக பிறந்தான் மேஜர் வெற்றியரசன். இவனிற்குப் பெற்றோர் ஆனந் என்று பெயரிட்டனர். இவன் தனது ஆரம்பக் கல்வியை புனித பற்றிமா மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டு இருக்கும் போது இராணுவ அட்டூழியங்களை நேரில் கண்டதாலும் சில சம்பவங்களால் இடையில் தனது கல்வியை நிறுத்தி 10. 08. 1995 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டான். இவன் ஆரம்ப இராணுவ பயிற்சியை கெனடி-1 இராணுவப் பயிற்சிப் பாசறையில் பெற்றான். பயிற்சி முடிந்து இவர்களின் அணி, சூரியக்கதிர் எதிர் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.

அங்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்து முடித்த பின்னர் ஓயாத அலைகள்-1 சமரிற்கு இவர்களது அணி அனுப்பப்பட்டது. அதில் இவனும் ஒருவனாக நின்று சமராடினான். இவன் முகத்தின் மென்மையான சிரிப்பு யாரையும் சிரித்து மயக்கி விடுவான். இப்படியாக இவனின் வாழ்வும் போய்க்கொண்டிருந்த போது, தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் உருவாக்கம் பெற்ற விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியில் தானும் இணைய வேண்டும் என்று பொறுப்பாளரிடம் கேட்டான். இவனது விருப்பிற்கு அமைய இவனை அப்பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் பொறுப்பாளர். இவனது திறமைக்கு அமைய விசேட ஆயுதம் ஒன்றிற்கான பயிற்சியைப் பெற்றான். அவ்வாயுதத்துடன் சென்று பல களங்கள் கண்டவன். மீண்டும் பொறுப்பாளரிடம் கேட்டு ஆர். பி. எம் உடன் சண்டைக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றான். பின் ஆயுதத்தை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றான். பின் அவ்வாயுதத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் பெற்று ஓயாத அலைகள்-2 சமர்க்களத்தில் திறம்படச் செயற்பட்ட இவனுக்கு தேசியத் தலைவர் பரிசினை வழங்கினார். பின் இவன் ஒரு அணிப் பொறுப்பாளனாக விடப்பட்டான்.

இவன் வீட்டில் சகோதரர்களை எப்படி அரவணைப்பானோ அவ்வாறு தான் தனது போராளிகளையும் அரவணைப்பான். எந் நேரமும் சண்டைக்குப் போக வேண்டும் என்ற துடிதுடிப்போடுதான் செயற்பட்டுக் கொண்டிருப்பான். இவன் விளையாட்டிலும் சிறப்பாகச் செயற்படுவான். பம்பல் அடிப்பதில் இவனிற்கு நிகர் யாரும் இல்லை. இவன் ஊராக்கள் யாரையும் கண்டால் ~ஊரான்| என்று சொல்லி கட்டிப்பிடித்து முத்தமிடுவான்.

இவ்வாறு இருக்கும் போது இவன் காதில் ~மச்சான் நீ சண்டைக்குப் போகப் போகிறாய்| என்ற செய்தி விழுகிறது. இவன் முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் ~உண்மையோடா மச்சான்| என்ற வண்ணம் இருக்க, இவனது பொறுப்பாளர் அழைத்து ~வெற்றி நாளைக்கு வெளிக்கிட வேணும். டீமை ஒழுங்குபடுத்து. ஓம் அண்ணை ஒழுங்குபடுத்திறன்| என்ற வண்ணம் போராளிகளைக் கூப்பிட்டுக் கதைத்தான். பின் இவனது அணியுடன் சமரிற்குப் புறப்பட்டான். வரலாற்றுப்புகழ் மிக்க இத்தாவில் சமரில் முதன் முதலாக இராணுவ ரக் ஒன்றைத் தகர்த்தான். பின்னர் அணிகளை ஒழுங்குபடுத்தி இளங்கீரன் அண்ணையிடம் தெரியப்படுத்தினான். பின் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுத்த வண்ணம் திறமையாகச் செயற்பட்டான். அம் மண் மீட்கப்பட்டது. இவனை நெடுங்கேணி மண் அழைத்தது. அங்கு எல்லையில் ஊடுருவி பதுங்கித் தாக்குதல் நடத்த வந்த இராணுவத்தை எதிர்த்து சமர் செய்யும் போது மார்பில் காயமடைந்தான். காயடைந்த பின்னரும் கூட சளைக்காது சமராடினான். பின் மருத்துவமனைக்கு சென்று மறுநாள் இவன் தமிழீழ மண்ணிற்காய் தான் நேசித்த மக்களிற்காய்வீரச்சாவை அணைத்துக் கொள்கிறான்.

உன் பணி தொடரும் எங்கள் பாதச் சுவடுகள். இனி நீ நிம்மதியாய் உறங்கு.

பிரதியாக்கம்: போராளி பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் - குமாரவேல் இரவீந்திரகுமார்

இயக்கப் பெயர் - ரவி

தாய் மடியில் - 22.10.1964

தாயக மடியில் - 17.03.1994

வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சு10றையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.

அமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த இராணுவத்தின் ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.

மீளவும் 1990ன் நடுப்பகுதியில் இரண்டாம் கட்டம் மாங்குளம் தளங்களைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 இராணுவ நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர்நிலங்களிலும் நின்று முதன்மையாகச் சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மனஉறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து ரவியவர்கள் களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் ச10டுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.

1993ல் ஒப்பறேசன் யாழ் தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாக க் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.

பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசவாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.

எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.

Link to comment
Share on other sites

 
லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்
 
 
இம்ரான்-பாண்டியன் 
யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி
 
பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்)
கொக்குவில் - யாழ்
23.03.1960 - 09.01.1988
(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)
 
இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.
 
எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.
 
சுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.
 
கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.
 
தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.
 
அந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
 
அதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.
 
அவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.
 
கட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான "இம்ரான்-பாண்டியன்" பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.
 
இந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lt_col_kumuthan.gif

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை - அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்தான் குமுதன். இவனுக்குப் பெற்றோர் இட்டபெயர் நாகேஸ்வரன்.

 

lt_col_kumuthan2.jpg

நாகேஸ்வரன்தான் அவர்களிற்கு மூத்த மகன். இவனுக்குப் பின் முன்று தம்பிமாரும், நான்கு தங்கைகளுமாக அன்புடன் வளர்ந்து வந்தான். உடன்பிறப்புக்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவான். நாகேஸ்வரன் தன் தொடக்க கல்வியை யாழ். ஆழியவளை சி.சி.த.க.கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஆறு வரை கற்றான். படிப்பிலே மிகவும் கெட்டிக்காரன். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி கலை நிகழ்விலும் சரி நல்ல கெட்டிக்காரன் தான். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் இவனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பள்ளியில் அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்வான். ஆனால் படிப்பை இடையிலே நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

 

 

 

நாகேஸ்வரனின் குடும்பத்தொழில் கடற்றொழிலாக இருந்தது. இவன் சிறுவயதிலே நன்றாக நீந்துவான். புலிக்குட்டிக்குப் பாய்ச்சலும் மீன்குஞ்சுக்கு நீச்சலும் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்றொரு பழமொழி உண்டு. அதுபோல இவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க யாரேனும் தேவையில்லை தானே. சிறுவயதிலே தந்தையுடன் சேர்ந்து கடலிலே தொழிலுக்குச் செல்வான். சிறுவயதிலே குடும்பப்பாரம் இவனது கையிலே இருந்தது. அதனால், கடற்றொழிலில் அனுபவமுள்ள இளைஞனாக வளர்ந்து வந்தான். தந்தைக்கு உறுதுணையாக இருந்து பொருளாதார வளத்தைப் பெருக்க உழைத்தவன் நாகேஸ்வரன்.

 

நாகேஸ்வரன் கலை ஆர்வம் கொண்ட இளைஞனாக வளர்ந்துவந்தான். தற்காப்புக்கலைகளில் பயிற்சி பெற்று பரிசில்கள் பெற்றிருக்கிறான். மற்றும் விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் உள்ளவன். இவனது பகுதியிலுள்ள செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தில் ஒரு விளையாட்டு வீரன். காற்பந்தாட்டம் ஓட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு சிறப்புப்பரிசுகளைமயும் பெற்றுக்கொண்டான். அத்துடன் கிராமிய கலைவடிவான கூத்து வடிவ நிகழ்வுகளிலும் கலைஞனாக நடித்திருக்கிறான். குறிப்பாக காத்தவராயன் கூத்துநிகழ்வில் காத்தவராயன் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியிலே பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதைவிட கட்டுமரம் வலித்தல், நீச்சல், தலையணை சண்டை அனைத்திலும் பங்குபற்றுவான். நாகேஸ்வரன் மிகுந்த துணிவும், உறுதியும் கொண்ட இளைஞன். தனது முயற்சியால் தனித்து கடற்தொழில் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறான்.

 

இப்படியாக கடற்றொழிலில் இவனது இளமைக்காலம் போய்க் கொண்டிருக்கும் வேளையில் கடலிலே சிறிலங்கா கடற்படையின் வெறித்தாக்குதல்கள் இடம்பெறும். அப்போதெல்லாம் இவன் தனது கட்டுமரத்தை கடலிலே விட்டுவிட்டு நீந்திக்கரை சேருவான். இவ்வாறு பல தடவை கடற்படையிடம் பிடிபடாமல் தப்பிவந்திருக்கிறானெனின் இவன் வீரமுள்ளவன் தான் என்று சொல்லாம்.

 

கடற்கரையோரம் வீடு அமைந்துள்ளதால் கடற்கரையோரங்களிலே இவனது உடன்பிறப்புக்களுடன் நின்று விளையாடுவான். அவர்களுடன் தானும் சிறுபிள்ளையாக மாறி மகிழ்வுடன் விளையாடுவான்.

 

1991ல் வெற்றிலைக்கேணி சிறிலங்கா படைகளால் வல்வளைப்புச் செய்யப்பட்டவேளை மக்கள் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இவனது குடும்பம் செம்பியன்பற்று பகுதியில் இருந்தது. தாயக மண்ணில் சிறிலங்கா படைகளின் வன்செயல்கள் அதிகரித்துக்கொண்டிருந்த காலத்தில் நாகேஸ்வரன் தன்னை உணர்ந்து தாய்நாட்டின் விடுதலைக்கு வலுச்சேர்க்க விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொள்கிறான்.

 

இவன் கடற்புலிப் போராளிகள் அணியிலே இணைந்து கொள்கிறான். தொடக்க, அடிப்படைப்பயிற்சிகளை வேகமான முறையில் எடுத்து முடித்துக்கொண்டான். பயிற்சிப் பாசறையிலே பயிற்சி ஆசிரியர்களோடும் போராளிகளோடும் அன்பாய் பழகினான். பயிற்சி முகாமில் இவனது திறமையால் பரிசுகளையும் பெற்று நல்லதொரு வீரனாக உருவெடுக்கிறான். அங்கே தனது பெயரை குமுதன் என்று மாற்றிக்கொண்டான். குமுதனின் மிடுக்கான தோற்றமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையம் அஞ்சா நெஞ்சமும் இன்னும் நினைவில் நிற்கின்றன.

 

குமுதன் கனரக பயிற்சி முதல் கட்டளை அதிகாரி பயிற்சி வரை பெற்றிருந்தான். ஏற்கனவே கடல் அனுபவமுள்ள குமுதன் கடற்சண்டையிலே சிறந்ததொரு கடற்புலி வீரனென்றால் அதுமிகையாகாது. பல கடற்சண்டைகளிலே போராடிய வீரன். கடற்பயிற்சிகள் யாவும் இனவனுக்கு விருப்பமானவை. தலைவரிடமும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறான். நீச்சல், வேக நீச்சல், கட்டுமரம் வலித்தல், படகு ஓட்டம், வேக ஓட்டம் இப்படி பல விளையாட்டுக்களில் இவன் தனது முத்திரையைப் பதித்துவைத்திருக்கிறான். சிறு வயது முதல் கடல் அன்னையோடு குமுதனுக்கு இருந்த தொடர்பு இக்காலங்களில் அதிகமாக இருந்தது. நீலவரியணிந்த வீரப்புலியாய் நீந்தித்திரிவான் குமுதன்.

 

16-09-2001 அன்று பருத்தித்துறை கடலிலே நடந்த பீரங்கிப்படகுத் தாக்குதலிலும் இவனது பணி முதன்மையாக இருந்தது. கடலிலே நடந்த சமரின்போது எதிரியின் குண்டுபட்டு கடலன்னையின் மடிமீது தலை சாய்ந்தான் லெப்.கேணல் குமுதனாக. தமிழீழ மண்ணிலே உறைந்துவிட்டான்.

 

கடலிலே மீனைப்போல நீந்தித்திரிந்த வரிப்புலி ஒன்று கடல்தாயின் விடிவிற்காய் தன் உயிரை தியாகம் செய்துவிட்டது. இந்த விடுதலை வீரனின் வீர உணர்வுகளை தமிழீழம் என்றமே மறக்காது. மாவீரர்கள் மரணத்தின் பின்பும் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் சிரஞ்சீவிகள்.

 

'மானுட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம், மதம், மொழி கடந்து நேற்றுப்போல் இன்றும் நாளையும் என்றென்றும் எதிலும் உயிர்வாழ்வர்"

 

- போராளி நளாயினி -

 

http://www.veeravengaikal.com/index.php/azhiyachsudarkal/42-ltcolonel-kumuthan-thavarasathurai-nageswaran-uduthurai-jaffna

Link to comment
Share on other sites

 

 

லெப்.கேணல்.சாந்தகுமாரி/ஜெயசுதா
சூசையப்பு மொறாயஸ் ரமணி
மன்னார்
மண்ணின் மடியில் 06.10.2000
 
எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.
 
புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.
 
இம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசங்களை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி கேணல். யாழினி (விதுஸா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.
 
சண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்க, இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று, தானும் சண்டையில் கலந்து கொண்டாh . சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி கேணல் யாழினி அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத்திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற சந்தோசத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார்.
 
இவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் சூசையப்பு தம்பதிகளுக்கு 1972ம் ஆண்டு 7ம் மாதம் 19ம் திகதி மகளாய்ப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் றமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா இராணுவத்தினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக பாசமுடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் என்பவர் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டிலேயே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார்.
 
இவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளி அனுபவமோ படிப்புவாசமோ பெரியளவில் அறியாதவர். ஆனால் அனுபவத்தால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி, ஒவ வொரு காவலரணாகச் சென்று எல்லாப்போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால், அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார்.
 
பயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ் கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி, ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித்தாக்குதல், மின்னல், கஜபார, பலவேகய -02, மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க, தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ்தேவி எதிர் நடவடிக்கையிலும், எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட 'தவளை' நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவைகருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது.
 
1995ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப்போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார்.
 
'இடிமுழக்கம்' என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01,02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப்போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரைகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி, பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும அவ விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை அவதானிப்பதுமாக கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது.
 
சாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர், "என்ன சாந்தகுமாரி? கையில் காயமா?" எனக் கேட்டபடி அருகில் வந்தார்.
 
"ஒன்றும் இல்லையக்கா" என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் "ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்" என்றார் தன் வழமையான சிரிப்புடன.
 
தன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இரவில் வேவுக்கு சென்று எதிரியின் பிரதேசத்துக்கும், எமது பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை அவதானிப்பு இடத்தில் இருந்து அவதானித்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார்.
 
சூரியகதிர் - 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் - 01 நடைபெற்ற காலப்பகுதியில் சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி முல்லைத்தள மீட்பின் பின் அங்குள்ள கண்ணிவெடி, மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01,02,03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பிரதேசம் மீது தாக்குதலை செய்வார். அவ வளவுதான், அலறித்துடித்து எதிரியானவன் எமது பிரதேசம் மீது தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதலோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்வான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்த குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார்.
 
ஒருநாள், அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து, "அப்பாடா! இப்பத்தான் நிம்மதி" என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் அனுபவத்தால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் அனுபவமே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது.
 
இவ் வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத்தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பிரதேசத்திற்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு, கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார்.
 
இவர் சிறந்த துப்பாக்கிச்சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும்.
 
இவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி- பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர், மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக்காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார்.
 
இவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும்.
 
வோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தாh பின் 1999ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப்பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப்பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் "நத்தாருக்கு என்ன விசேடம்" எனக் கேட்க,
"பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து, 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்" என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார்.
 
உலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார்.
 
அந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்த எமது பிரதேசத்துள் நுழைய, இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவா ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி, அங்கிருந்த கட்டளை அதிகாரியோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார்.
 
ஓயாத அலைகள் - 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஆர்வத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச்சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதே கள முனைக்குச் சென்றார்.
 
2000ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு பிரதான பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் நித்திரைக்குச் செல்வார்.
 
ஓயாதஅலைகள் - 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் உக்கிரமாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார்.
 
நாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை, பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன.
 
முதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட, "அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ, இறங்குங்கோ" என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பிரதேசத்தை மீட்கவேண்டும் என்ற ஆக்ரோசத்துடன் முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது.
 
மன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.
 
எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரியின் இழப்பு எம் தேசத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்.
 
எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக்கொண்டிருக்கின்றன.
 
-மகிழ்நிலா-
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maj_thamilmangai.gif

நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி பொறுப்பேற்றிருந்தது.

இந்தியப் படையினரிடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களுடன் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறவுண் எல்.எம்.ஜியுடனும் ஒரு ஆர்.பி.ஜியுடனும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலுமே பேணப்பட்டது.

கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை.

நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.

1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர்கள் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.

என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப்படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு இவரது அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ”ஆகாய கடல் வெளிச்சமர்” பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த டாங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப்பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா) வரும்.

எங்கு டாங்கி இரைந்ததோ, அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது.

களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை.

1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப்பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.

“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”

கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”

“இருபத்திமூண்டு”

அதிர்ச்சி தரும் பதில்.

“எங்கெங்கே அடிச்சீங்கள்?”

“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”

நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்,

“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?”

என்றார்.

இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டு, சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும், “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.

-மலைமகள் -

திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை வடமராட்சி கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

கப்பற் தொடரணியில் சென்ற ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் கப்பல் என்பன கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. ”பபதா” கலத்தின் மீது தனது வெடிமருத்து நிரப்பபட்ட படகினை மோதி அக்கலத்தினை மூழ்கடித்து மேஜர் தமிழ் மங்கை வீரச்சவைத் தழுவிக் கொண்டார்.

ஏழு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கடற்சமரின்போது கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கையுடன் 10 கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

 

http://www.veeravengaikal.com/index.php/blacktigers/11-sea-black-tiger-major-thamilmangai-thurairasa-sathiyavani-poonagary-mannar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப்.கேணல் ஜொனி

இயற் பெயர் - விக்கினேஸ்வரன் விஐயகுமார்

இயக்கப் பெயர் - ஜொனி

தாய் மடியில் - 21.05.1962

தாயக மடியில் - 13.03.1988

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார்.

1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்து}துவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் பன்னிரண்டாம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம்.

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.

லெப்.கேணல் ஜொனியின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் அவர் ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டு ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு இங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் - பிள்ளையான் சந்திரமோகன்

இயக்கப் பெயர் - ஐீவன் / எழிலவன்

தாய் மடியில் - 11.09.1969

தாயக மடியில் - 06.12.2001

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.

கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.

#####

அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.

இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

சிங்கபுர விடுதிப்பகுதி சிங்களச் சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ஆம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத் தளபதி.

இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப் படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் கவச வண்டியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் ரீ55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்ää அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். "எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூள் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.

ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, ஆர்ப்பாட்டமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.

போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாறää சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர் பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பங்கர் வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.

வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்துää பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும்ää சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

87இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90இன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

மூன்றாம் ஈழ யுத்தம் ஆரம்பத்திற்கும் 97இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய அனு கூலஙக்ள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.

அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக் காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக் கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை."

சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.

"ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்."

இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதிää தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்"

அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.

தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.

"ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்."

புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.

"எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்"

இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.

"பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு. நீங்கள் எழும்பலாம்."

இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போலää பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.

#####

ரோட்டில் ஜீவன் கம்பீரமாய் கால்பாவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

"நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழ யுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமே காரணம்.

பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடபினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.

ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திரு நாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் - சின்னத்துரை சுகுமாரன்

இயக்கப் பெயர் - மாறன்

தாய் மடியில் - 23.06.1960

தாயக மடியில் - 26.06.1989

பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீர வரலாறுபடைத்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.

சிறுவயதிலேயே ஒழுக்கமும், இரக்க சுபாவமுடைய இவன். ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரிலேயே முடித்துக் கொண்டு உயர் வகுப்புப் பயில மத்தியமகாவித்தியாலயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அப்பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி கற்கும் பொழுது மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்த மாறன் சக மாணவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொண்டான்.

தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி நயவஞ்சகமாக தமிழின விரோதச்சட்டங்களைப் பிரகடனப்படுத்தி ஓர் இன அழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுகள் இறங்கியிருந்த அக்காலகட்டத்தில், தனது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த மாறன் பல வழிமுறைகளைக் கைக்கொண்டான். கலை நிகழ்ச்சிகளிற்கூடாகவும், கட்டுரை வடிவங்களிலும், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணினான். அத்துடன் சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைக்குட்பட்ட நிலையிலும் தமிழர்கள் மத்தியில் தலைதூக்கிக் கொண்டிருந்த சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கினான்.

சிங்கள இனவாதப் பிடியிலிருந்தும், பிற்போக்குத் தமிழ் தலைமைகளிலிருந்தும் தமிழீழ சமூகம் விடுவிக்கப்பட்டு ஒரு புரட்சிகரத் தலைமையினால் வழிநடத்தப்படும்போதுதான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சமூகஒடுக்குமுறைகளையும் களைந்தெறிய முடியும் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கையை எடுத்துக்கூறிய மாறன் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் தன்னையும் இணைத்துக் கொண்டான்.

கிளிநொச்சி மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளனாக இருந்தபோது மக்கள் மீது அவன் வைத்திருந்த நேசமும், அக்கறையும் அவனை ஒரு சிறந்த போராளியாக மக்கள் மத்தியில் வெளிக்காட்டியது. சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களே மாறனின் கவனத்தை விசேடமாக ஈர்த்தன. அம்மக்களின் நல்வாழ்விற்காக மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கள வெறியர்களின் காடைத்தனங்களால் தமது சொந்தக் கிராமங்களைவிட்டு ஏதிலிகளாகத் துரத்தப்பட்ட தமிழ் மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்களுக்கு சரியான முறையில் மாறன் செயல் வடிவம் கொடுத்தான். மேலும் மக்களுக்கிடையில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை சரியான கோணத்திலிருந்து அணுகி அதனைத் தீர்த்து வைக்க மாறன் கையாளும் அணுகுமுறைகள் மக்கள் மத்தியிலிருந்த அவனது மதிப்பை மேலும் உயர்த்தியது. எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றைத் தீர்த்துவைக்க முற்படுகின்ற பொழுது அப்பிரச்சினைகளின் தோற்றம், அதற்கான காரணங்கள், அக்காரணிகளைத் தோற்றுவிக்கும் சமூகப்பின்னணிஎன்பனவற்றை ஆராய்ந்த பின்பே தீர்ப்புக்களை வழங்குவான்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்கெனப் புறப்பட்டு பிழையான தலைமைகளால் வழி நடாத்தப்பட்டு, திசை மாறி சமூகவிரோத சக்திகளாகிய சில அமைப்புக்களால் மக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகிய வேளையில், அவதானத்துடன் அதேவேளையில் தீர்க்கமுடன் மக்களை அச்சக்திகளிடம் இருந்து காத்தான்.

அமைதிப்படை என்ற போர்வையில் எமது மக்கள் மீது ஆதிக்கத்தினைச் செலுத்த வந்த இந்திய அரசின் வஞ்சக நோக்கத்தை எமது மக்களிற்கும், உலகத்திற்கும் காட்டுவதற்காக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கப் பாடுபட்டான்.

இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான யுத்த காலகட்டத்தில் எமது கருத்துக்களையும், உண்மைச் செய்திகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக எமது இயக்கத்தால் வெளியிடப்படும் 'உணர்வு', 'சுதந்திரப்பறவைகள்' ஆகிய பத்திரிகைகளின் உருவாக்கத்திற்கும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுடைய பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்களை அணி திரட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவதுடன் அவைகளுக்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளான். வவுனியா, கிளிநொச்சி, முல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிராந்தியத்தில் பெண்களுக்கிடையில் அரசியல்ரீதியான விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணி எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் பங்குகொள்ள வைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளான்.

இவ்வாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சரியான முறையில் செயற்படுத்திய வேலைத்திறனும், மக்கள் மீது குறிப்பாக சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்கள் மீது மாறன் காட்டிய நேசமும் அவனை வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளனாக உயர்த்தியது.

26.06.1989 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள பன்றிக்கெய்த குளம் என்னும் இடத்தில் வன்னிப்பிராந்திய அரசியற் பொறுப்பாளர் மேஜர் மாறன் உட்பட லெப். நித்திலா(மகளிர் படைப்பிரிவு), லெப். அருள், சுதன், மகேந்தி, சபா, பொபி, அகிலன், கேசவன், அச்சுதன், நவம், விஜயன், முரளி, ரூபன் ஆகிய 14 விடுதலைப் புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

lt_col_navam.gif

படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியோரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையெனத் முடிவெடுக்கிறான்.

"எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.

lt_col_navam2.jpg

 

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் நாட்டில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை காதலித்த.... வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

விருந்தாளிகளாக வந்தோரால் எதிலியாக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

lt_col_navam1.jpg

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பகுதியில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான்.

 

 

http://www.veeravengaikal.com/index.php/commanders/15-ltcolonel-navamdadi-sellaperumal-arumairasa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற் பெயர் - கந்தையா மனோரஞ்சன்

இயக்கப் பெயர் - மாதவன்

தாய் மடியில் -

தாயக மடியில் -

நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான்.

மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.

பழகிய மனங்களில் இவன் ஒரு அழியாச்சுடர். அல்லது ஞாபகச்சிற்பம்.

தொண்ணுhறுகளின் முன்பாதிக்கால நாட்களில், மாதவன் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக நடுவப்பணியகத்தில் தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அங்கே வரும் கலைஞர்களுடன் பழகுவதிலும் அவர்களுடன் ஒரு போராளியாக உறவாடுவதிலும், கலைகளைப் பயில்வதிலும் முன்மாதிரியாக இருந்தான். எந்நேரமும் இயங்கிக்கொண்டிருப்பது மாதவனின் தனி அடையாளம். எதிலும் எப்போதும் ஓய்வோ, சோர்வோ இல்லாத வேக உழைப்பு இவனுடையது.

மாதவன் இறுக்கமானவன். அதேவேளையில் அமைதியானவன். இளகிய இதயமுடையவன். மாதவன் தன் போராட்டச் செயற்பாடுகளினூடு ஒரு கலைஞனாக நம்மில் பதித்துச் சென்ற அடையாளங்கள் அநேகமுண்டு. 'தாயகக் கனவு' வீடியோப்படத்தில் தன் வாழ்வுடன் இணைந்த பாத்திரமாக போராளிப்பாத்திரமேற்று நடித்திருந்தான். தாயக விடுதலைப் பாடல்களில் 'கரும்புலிகள்' ஒலிநாடாவில் 'தலைகள் குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா' என்ற பாடல் அவனது முதற்பாடலாக அமைந்து, எல்லோர் வாயிலும் அது ஒலித்தது. பின்னர் 'முல்லைப்போர்' இசை நாடாவிலும் அவன் பாடல் எல்லோராலும் வரவேற்கப்பட்டது. 'தேசத்தின் புயல்கள்' பாகம்-1 இசை நாடாவில், தானே எழுதி போராளிக் கலைஞர்களுடன் பாடிய 'கரிகாலன் வளர்க்கின்ற கண்மணிகள்' என்ற பாடல் எங்கும் எல்லோராலும் நன்கு பேசப்பட்டது. இப்படியாக வந்ததற்கும்; இருந்ததற்கும்; சென்றதற்கும் கணிசமான சுவடுகளை விடுதலைப் போராட்டத்தில் பதித்துவிட்டு களத்தில் அவன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.

நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி வெளியே குயிலெனப்பாடி, நதியென ஆடித்திரிந்த அந்த விடுதலைப் பறவையின் நினைவுடன் இந்த மண்ணும் அதன் வரலாறும் இருக்கும்.

காற்றில் எழுதிய பாடலாக, நம் நினைவின் பெரும் பெருக்காக, எங்கள் முற்றங்களில் பூக்கும் மலராக மாதவன் என்றும் கலந்திருப்பான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.