Jump to content

மாவீரர் தினம் 2014 சிறப்பு பதிவுகள்


Recommended Posts

லெப்டினன்ட் கேணல் நிறோஜன்

 

Lep.KenalNirojan-600x337.jpg

கடலில் அவனொரு காவியம் 

கடற்புலிகள் துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் நிறோஜன்

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருந்திருக்கிறன.

கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திரந்து பேசுமானால் இவனைப்பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாக சொல்லியிருக்கும். ஆனால், அவை இப்போது மெளனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும்போது அந்த நீருக்குள்ளும் இந்த நிரோஜனின் கதையிருக்கும்.

1990 இல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992 இல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்தத் தமிழீழக் கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்துகொண்டாலும்  குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்டகால அனுபவமுடையவனைப்போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டு வந்த அந்த தாக்குதல் நடைபெற்றது.

அது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிரோஜனின் கடல்வழி விநியோகம் நடை பெற்றுக்கொண்டிருந்தது.  அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிரோஜன் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த இரவின் இருளில் கடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இப்போது என்ன செய்வதென்றே புரியாத போதிலும் நிரோஜன் நிதானமாக படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதை தெளிவாக அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.  ஒரு டோறாப்படகின் ஆயுதப்பலமும், நிரோஜனின் அந்த சிறிய படகின் ஆயுதபலமும் ஒப்பிட முடியாதது,  ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து, சர்ந்தப்பங்களையும் பயன்படுத்தி சில சிங்களப் படைகளைக் கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரைசேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு ஆரம்பமாய் இருந்த அந்தத் தாக்குதல்தான். அதன்பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்தித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை.

1996ம் ஆண்டு ஐப்பசியில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது. சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்த்திகளும் , கடற்கலங்களும் நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும், சிறிலங்காவின் தரை – கடற்படையினருக்குமிடையே சண்டை மூண்டது. இந்தத் தாக்குதலை திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவல்ல, சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக்கொண்டது. ஆனாலும் அது நிரோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரிமீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடிவரும் அளவிற்கு சிங்களம் துணிந்தமை அவனுக்குச் சினத்தை ஏற்படுத்தியது. அவன் மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். சிங்கம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடிவந்தது. இப்போது சிங்கத்தின் குகையை நோக்கி புலி சென்றுகொண்டிருந்தது.

திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி கட்டளைப் படகில் நிரோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக்கொண்டு முனகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாகப் படகுகளும் – கரும்புலிப்படகுகளும் சென்றுகொண்டிருந்தன. அது திருகோணமலைத் துறைமுகத்தின் வாசல்; அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் சாதகமான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமமைத்துக்கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது.

நிரோஜன் கட்டளைகளை வழங்கிக்கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றி மாற்றிச் சண்டைபிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குவதற்குச் சர்ந்தப்பத்தை எதிர்பார்த்திருந்தவன் இப்போது அந்தக் கரும்புலிப் படகை டோரா ஒன்றின் மீது குறிவைத்து நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல்நீரின்மேல் செயலற்று நின்றது. நிரோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும், நிரோஜன் அந்த டோராவில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அந்தப் படகின் பிரதான சூடுகலனான 20 மி . மிற்றர் கனரக ஆயுதத்தை துரிதமாக கழற்ற முற்பட்டான் நிரோஜன். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது.

நிரோஜன் அந்த ஆயுதத்தைக் கையாண்ட பயிற்சி இல்லாத போதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றிவிட வேகமாக இயக்கினான். அந்தக் கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது. இதே நேரம் மற்றொரு டோறாப்படகு செயலிழந்த டோறாவைக் குறிவைக்க நிரோஜனின் கட்டளைப் படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்க , நிரோஜன் அந்தக் கனமான சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான். அதன் சுமை அவன் உடலை கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதிக கைவிடாது , நீந்திப்படகேறினான். சிங்கத்தை அதன் குகையில் சந்தித்துத் தாக்கிய திருப்தியுடன் புலி தளம் திரும்பிக்கொண்டிருந்தது.

இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத் தளபதி அவன்.

அந்தப்பணியை பொறுப்பெற்றதிலிருந்து தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும் , கடல் மூலமான விநியோகப் பணிகளை மேற்கொள்வதும் தான் அவனது நோக்கமாக இருந்தது.

அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற்குள் கழித்த நாட்கள் தான் அதன் பின் அதிகமாக இருந்தது.

கடலில் விநியோகப் பணியை மேற்கொள்ளும் பொது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் விநியோகப் படகுகளை வழிமறிக்கும். அந்தச் சர்ந்தப்பங்களில் எல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்துவைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிரோஜன்.

இப்படித்தான் ஓர் சர்ந்தப்பத்தில் விநியோகப் பணிகளை மேற்கொண்ட படகுடன் சிங்களக் கடற்படையின் தாக்குதலிற்குள்ளான போது 50  கடல்மைல்களிலிருந்து நிரோஜனின் இரு படகுகள் அந்த கடற்கலத்தை நோக்கி விரைகின்றன.

இடையில் அந்த இரு படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிரோஜன் அந்த கடற் சூழளுக்குகேற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகின்றான். “மயூரன்” படகு நான்கு டோறாக்களை எதிர்கொள்ளத்  “தேன்மொழி” படகு மூன்று டோறாக்களை எதிர்கொள்கிறது.

அங்கே அந்த சிறிய படகுகள் இரண்டுமே அந்த ஏழு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி முன்னேறிக்கொண்டிருந்தன. இறுதியாக அந்த விநியோகப்படகுகளை மீட்டுக்கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள்.

இப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவானபோதும் நிரோஜனின் நிதனமானதும், சாதுரியமானதும், உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது.

இந்த நாட்களில்தான் சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் “யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவத்திற்கு கடல்வழி மூலமான வினியோகமே பலமாக உள்ளது” என்று தெரிவித்தார். இது நிரோஜனின் காதுக்களுக்கு கெட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படியின் கப்பற்தொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பற்தொகுதி முல்லைக் கடற்பரப்பைத் தாண்டிக்கொண்டிருக்கும் போது நிரோஜனின் கட்டளைகளுக்குக் கீழ் கடற்புலிப் படகுகள் களமிறங்கின.

மூன்று சண்டைப்படகுகளும் இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல் நோக்கிச் சென்று அந்தக் கப்பற்தொகுதியை மேவிவந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளில் பலத்தை விட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்கள், நான்கு படகுகளும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும் , பபதா கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்றுகொண்டிருந்தது. எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுதபலமும், கடற்கலங்களின் பலமும் இருந்த போதும் அசாத்தியமான துணிச்சலும், சண்டை வழிநடத்தும் தளபதியின் திட்டமிடலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது.

இப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்குவைத்து பின்தொடர்ந்தன கடற்புலிகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்தபோதும் அவை சண்டை பிடிக்கப் பாய்ந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. நிரோஜன் கட்டளைகளை வழங்க அந்தக் கப்பல்களை நோக்கி படகுகள் நெருங்கிக் சென்றன.  எங்கள் கடற்தளபதியின் வியூக அமைப்பிற்கேற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற்தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடங்கி வைத்தனர். அவை அப்போது தொடர்ந்து சென்றுகொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றதும், எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்ற கடற்புலிகளின் படகுகள்.

Lep.Kenal-Nirojan-600x849.jpg

பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நீண்டதூரம் சென்றுவிட்டதால் முற்றுமுழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட, களத்தில் நின்றபடியே சண்டையை வழிநடத்தினான் நிரோஜன். உயர்ந்து எழுந்துவிழும் அலைகளுக்குள் நிதானமாக் நிற்கமுடியாத படகிற்குள் நின்றுகொண்டும் , சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தான், நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று படகுகளுள் ஒன்றில் நின்றான் நிரோஜன்.

அன்று எதிரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சமரிட்டுக்கொண்டிருந்தான்.

இறுதியாக எதிரியின் சுற்றிலிருந்த பாதுகாப்பு கலங்களை ஊடறுத்து “பபதா” கப்பல்மீதும், “வலம்புரி” கப்பல்மீதும் கரும்புலி படகுகள் மோதிவெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன.  அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் திரும்பின கடற்புலிப் படகுகள்,

இந்தத் தாக்குதல் முடிந்தபின் மீண்டும் விநியோகப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன கடற்புலிப் படகுகள்.  அந்தப் படகுகளை வழிமறித்து டோராப்படகுகள்  தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியதும் கரையிலிருந்து படகுடன் விரைந்தான் நிரோஜன்.

“பிரசினையில்லை நான் கிட்டவந்திட்டன், நீங்கள் வடிவாகச் சண்டைபிடியுங்கோ” தொலைத் தொடர்புக் கருவியில் நிரோஜனின் குரல் ஒலித்ததுமே கடற்கலத்தில் சமர் புரிந்துகொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது.  அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினார்கள்.

நிரோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரப்பை நெருங்கி டோறாப் படகுகளை விநியோகப் படகிலிருந்து பிரித்துத் தாக்குதலை மேற்கொண்டான். ஆரம்பத்தில் எதிரியின் முற்றுகைக்குள் இருந்தன.  எமது படகுகள், இப்போது நிரோஜனின் முற்றுகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள்.

நேரம் கடந்துகொண்டிருக்க சண்டைநிலை எமக்குச் சாதகமாக மாறியது.  டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க அது செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிரோஜனுடன் சேர்ந்து கடல்நடுவே உரத்துக் கூச்சலிட்டனர்.

ஆமாம் அன்று தான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித் தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச் சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது. நிரோஜன் அந்த டோராவை கடலில் கைவிடவில்லை. ஏனைய டோராப்படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிழந்த டோறாவை எங்களது படகில் கட்டி இழுத்துவந்தான். அது இடையில் தானாகவே கடலில் முழக ஆரம்பிக்க அதிலிருந்த இராணுவ உபகரணங்கள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமை மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது.

நிரோஜன் கடற்புலியில் இருந்த ஏழு வருடங்களிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும், நுட்பமான திட்டங்களாலும், நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன்.

கடலில் சண்டை முழும்போது கரையில் நின்று கட்டளை வழங்கும் போது அவர்கள் அவனின் திறமை மீதுகொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.    அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதலகள் நிறைந்து கிடக்கிறது. அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழ்ந்துகொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான்.

இப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெருப்பாகச் சீரும் அந்த நிரோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதுமல்ல.  அவனின் இதயம் மென்மையானது. ஒவ்வொரு சண்டைகளிலும் அவனுடன் படகிலிருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போதும் அவன் ஒவ்வொரு போராளிகள் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது புலப்படும். அப்போது அவனை ஒரு கடற்படைத் தளபதியாகப் பார்க்கமுடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருபதை விட இழந்த தோழர்களின் நினைவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம்.

அவன் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும்போது ஒரு சாதாரண போராளிகளுக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமுக்கு சென்றால் நிட்சயமாக அவனை நீங்கள் பிரித்தறிய முடியாது. போராளிகள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுக்குள் ஒருவனாக அவனும் நிற்பது வழமையானது விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின் போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைக் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது.

தொடர்சியாக இரவுபகலாக பணிகள் நடந்துகொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்க்காக விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை.  அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்துகொண்டான். அவன் அந்தப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக்குதித்தான்.

அவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல, ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்கவேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணப்பட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளி பொறுப்பாளனாக, தொழில் நுட்பக்கல்வி பொறுப்பாளனாக , ஒரு கப்பலின் பிரதான இயந்திரவியலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலித் துணைத்தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டான். ஆனாலும் இந்த இளம்தளபதி சிறிலங்காவின் கடற்படைத் தளபதி ஒருவனைவிட பன்மடங்கு உயர்ந்தவன். ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தை துணையாக்கி தனது நுட்பமான் திட்டமிட்ட தாக்குதல்;இனால் மட்டுமே அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்டையில் அவன் வென்றிருக்கவே முடியாது.

அன்றைய தினம் 07.01.1999 அன்று , விநியோகப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தன கடற்புலிகளின் இருபடகுகள். அவற்றில் ஒன்றில் நிரோஜன் நின்றபடி படகுகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றுகையிடுகின்றன. சண்டைமிக நெருக்கமாக நடந்துகொண்டிருந்தது. மாலை மங்கியபொழுதில் அந்தச் சண்டை ஆரம்பித்தபோதும் விடிசாமம் வரையும் அந்த நான்கு டோறாக்களிடமிருந்தும் தன்படகுகளை பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரிபொருள் தீர்ந்து போக அந்தப் படகை நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக்கொண்டன.  அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை , சர்ந்தப்பத்தை சரிவரபயன்படுத்தி டோறாக்களை ஊடறுத்துப் புகுந்து தனது எரிபொருளின் பாதியை அந்த படகுக்கு வழங்கச் தேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி கரைசேர்ப்பித்தான்.

அதனால் தான் கடற்புலிகள் தளபதி சூசை அவர்கள் அவனைப்பற்றி குறிப்பிடும்போது….

“எந்தச் சிக்கலான சண்டை என்றாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்கிற பொறுப்பை விட்டிடுவேன். ஏனென்றால், என்னைவிட அவன் சிக்கலான சண்டைகளில் கூட தானும் பதட்டப்படாமல், போராளிகளையும் பதட்டமடையாமல் வைத்து சண்டைபிடித்து வெற்றி கொள்வதில் திறமையாவன. இதில் அவனுக்கு நிகர் அவனேதான்” என்றார்.

இந்தத் திறமையான தளபதிதான் 07.10 1999 அன்றும் விநியோகப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விநியோகப் படகுகளை நடுக்கடலில் டோராப்படகுகள் வழிமறித்த போதும் கரையிலிருந்து தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுகளையும் அழைத்துக்கொண்டு கடற்களத்தில் இறங்கினான்.  அன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடுமிருள் கடல்வெளியினையே மறைத்துக்கொண்டிருந்தது.

படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக்குக் குழப்பத்தால் தங்களது பணியை செய்ய மறுத்துக்கொண்டிருந்ததன.  நிரோஜன் தனது நீண்ட கால கடல் அனுபவத்த்தினை மட்டுமே வைத்து படகினை நகர்த்தினான்.

விநியோகப்படகிற்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப்படகுகள் இரண்டுமே இயந்திரக் கோளாறினால் மெது மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது.  அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப்படைக்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கும் எதிராகவும் சண்டை பிடிகவேண்டியதாயிருந்தது.

அவன் எங்களின் விநியோகப்படகுகளை நெருங்குகின்றான். அங்கே எங்களது படகைக் காணவில்லை. அது டோராவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களுக்கு சேதமில்லை. அவை பத்திரமாக ஒரு படகில் இருந்தன அவன் அந்த திருப்தியுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான்.

கடல் இப்போதும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. இருளுக்குள் டோராவின் நிலைகள் அவன் கண்களுக்குள் தெரியவில்லை. விநியோகப்படகு பத்திரமாய் கரை திரும்பிக்கொண்டிருந்தது. இப்போது நிரோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில் செயலற்றுக் கடலில் நின்றுகொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்களை மெளனமாய்க்கிடந்தன. எப்போதும் எந்தச் சண்டையிலும் உதவியை எதிர்பார்க்காதவன் இன்று மட்டும் ….

“என்ற படகுக்குச் சேதம், முடிஞ்சா உதவிசெய்யுங்கோ…. இல்லாட்டி பிரசினையில்லை” அவனின் அந்த வார்த்தைகள் தொலைத்த் தொடர்புக்கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுகள் இரண்டுமே தங்களால் இயன்றமட்டும் வேகமாக முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிரோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தொய்ந்து போனது. கண்களால் வழிந்த கண்ணீர் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழுந்தது.  அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டையிட்டு தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்துகொண்டிருந்த தோழர்களுடன் படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான்.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

lt_pavalan.gif

தமிழீழத்தில் யாழ் மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் தான் இணுவில் என்ற கிராமம் அமைந்துள்ளது. வளங்களால் வனப்புப் பெற்ற இடங்களைக் கொண்டது தானே தமிழீழம். கல்வி, செல்வம் நிறைந்த அந்தக் கிராமம் தலைவரின் காலத்துடன் வீரமும் பெற்றது. எல்லா எழிலும் நிறைந்த கிராமமான இணுவில் தான் பாலகிருஸ்ணன் இராசம்மா இணையருக்கு முதலாவது தவப் புதல்வனாக 16.10.1979 இல் பிறந்தான் தமிழீழ மக்களின் பாவலன். அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலமுரளி. முரளி என்றுதான் எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள். முரளிக்கு இரண்டு தங்கைமார். குழந்தைப் பருவத்தில் தன் தங்கையருடன் இன்பமாக கூடிக்குலவி மகிழ்வுடன் வாழ்ந்தான். தொடக்கக் கல்வியை இணுவில் இந்துக்கல்லூரியில் கற்றான். அவனது மாணவ பருவம் இன்பமயமானதாக இனிதாக கழிந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் சிங்கள இனவாதப் பேய்களின் வல்வளைப்பு நடவடிக்கைகள் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தின. இவனது குடும்பமும் இணுவிலை விட்டு இடம் பெயர்ந்து வன்னிப் பெரு நிலப்பரப்பு நோக்கிச் சென்றது. அங்கு கிளிநொச்சி, ஒலுமடு, முத்தையன் கட்டு என பல இடங்களில் வசித்து வசித்து துயரங்களைச் சுமந்த இவன் குடும்பம் பின்னர் தேறாக்கண்டல் சென்று இருந்தது.

 

அப்போது இவன் மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்றான். படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் திறமைமிக்கவனாகத் திகழ்ந்தான். தனது திறமையால் விளையாட்டு படிப்பு என்று முன்னிலையில் திகழ்ந்த முரளிக்கு, சிங்கள இனவெறியரை அழித்தொழித்து அவர்களின் அக்கிரமப் போக்கிற்கு முடிவு கட்டினால் தான் உறவுகள் சொந்த இடத்தில் சேர்ந்து வாழ முடியும் என்ற சிந்தனை எழ, படிப்பினை இடையில் நிறுத்தி விட்டு தான் கொண்ட முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க தமிழர் சேனைத் தலைவனின் வழித்தடம் பதித்தான். இவனது ஆசைத்தங்கையும் புலியணியில் இணைந்தாள். மனத்திடத்தோடு போராட்ட வாழ்வில் தடம் பதித்த முரளி, தொடக்கப் பயிற்சியிலேயே திறமை மிக்க மாணவனாகத் திகழ்ந்தான். பயிற்சியை திறமையாக முடித்தவன்பால் ஈர்க்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் இவனை லெப்.கேணல் விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணிக்கு அனுப்பி வைத்தனர். சென்றவன் கவச எதிர்ப்பு சிறப்புப் பயிற்சியை மிகவும் ஆர்வத்தோடு, உடலை வருத்தி, உளத்தை நெகிழ்த்தி எதிரியின் கவசத்திற்கு எதிராகப் போராட வேண்டுமென உத்வேகம் கொண்டவன் சிறப்புறச் செய்து நின்றான். பயிற்சிகளை சிறப்புறச் செய்த வீரப்புலி இவனுக்கு, சண்டைக்குச் செல்ல அனுமதி தளபதியால் கிடைக்கப்பெற்றது. பெருமகிழ்ச்சியுடன் சண்டைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த வேளை, இவனது ஆசைத்தங்கை வீரச்சாவடைந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு கிடைத்தது. இதயத்தை இடியாய் தாக்கிய அந்தச் செய்தியை கேட்டவன் மனதைத் தேற்றியவனாய், தன் அன்புத் தங்கையின் வித்துடல் விதைப்பு நிகழ்வை முடித்துவிட்டு, அவள் கல்லறையில் சபதமெடுத்தவனாய் உறுதியுடன் தனது தோழர்கள் நின்ற களமுனைக்கு விரைந்தான். அங்கு எதிரியுடனான மோதலிற்காய் காத்திருந்த வேளை, தளபதியால் அவன் நின்ற அணி முகாமுக்கு வரவழைக்கப்பட்டது. பயிற்சிக்காகவே அந்த அணி வரவழைக்கப்பட்டது. களத்தில் இருந்து பின்னிலைக்கு வந்தது சண்டை சண்டை என நின்ற அவனுக்குப் பெருமிழப்பாக அமைய, சிறப்புப் பயிற்சிக்கான திருப்பம் தானே என சுதாகரித்துக் கொண்டு, பெரும் கடினம் நிறைந்த பயிற்சியை முடித்துக் கொண்டான் பாவலன்.

 

சிறப்புப் பயிற்சியை முடித்துக் கொண்டு பாவலன் இருக்க, தமிழர் காவலன் எங்கள் தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடலில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தரையிறக்கம் இடம் பெற்றது. கடலிலே பல மோதல்களை எதிர்கொண்டு பெரியதொரு எதிர்சமருக்கு மத்தியில் தான் அந்தக் குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றது. பெரிய சமர்களை எதிர் கொண்டே பாவலனின் அணியும் குடாரப்பில் தரையிறங்கியது. இலட்சிய நெருப்பை நெஞ்சிலே சுமந்த வண்ணம் யாழ்ப்பாண மண்ணிலே தடம்பதித்த பெருமையுடன் எதிரிமலைகளை எதிர்கொண்ட வண்ணம், இரவோடு இரவாக பல திசைகளில் விடுதலைப் புலியணிகள் நகர்ந்தன. எதிரி கதை முடிக்க ஏறு நடை போட்ட பாவலனின் அணி, வடமராட்சி கிழக்கு நாகர்கோயிலை மூடிநின்ற எதிரியை பந்தாட விரைந்து சென்று காப்பு நிலைகளை அமைத்துக் கொண்டது. பின்னர் அதில் இருந்து இவன் அணி நீரேரி ஊடாக இத்தாவிலுக்கு நகர்த்தப்பட்டது.

 

அவர்கள் சென்ற அந்த இத்தாவில் மண்ணும் இரக்கம் அற்ற எதிரியால் சல்லடை போடப்பட்டிருந்தது. குண்டு மழையால் குளித்து, அனலாகச் சிவந்து கொண்டிருந்தது. தேசம் எரிவது கண்ட இவனது நெஞ்சிலும் இலட்சிய நெருப்பு பிரமாண்டமாகப் பற்றி எரிந்தது. தரையிறக்கத்திற்கு தரை, தண்ணி என்று கொடுத்த இடர்களைச் சுமந்த வண்ணம் விரைந்த இவனும் அணிகளும் குண்டு மழை நடுவே, குருதிக்கடல் இடையிலும் வந்த பகை முடிக்க, மாற்றான் கவசம் உடைக்க தீக்குளித்த வண்ணம் 10. 04. 2000 அன்று களத்தில் இறங்கி வீரத்துடன் விளையாடினர்.

 

வீர விளையாட்டுப் புரிந்த விடுதலைப் புலியணிகளின் தீரம் கண்டு எதிரி மலைத்தான். எதிரி ஏவிய எறிகணை ஒன்று எங்கள் பாவலன் அருகில் விழுந்தது. விழுந்த எறிகணை விறலுடன் எழுந்த வீரன் வலக்கரத்தைப் பறித்தது. குண்டு மழையால் குளித்த இத்தாவில் மண்ணில் பாவலனின் குருதி பட்டுச் சிலிர்த்தது. காயம்பட்ட பாவலன் மருத்துவ மனைக்குச் சென்று காயத்தை மாற்றிக் கொண்டு, மீண்டும் களம் செல்வேன் என எண்ணியிருந்த வேளை, பொறுப்பாளர் அவர்கள் பாவலனுக்கு “இனி சண்டை பிடித்தது காணும்” என்று கூறி வேறு பணி கொடுத்தார்.

 

கொடுத்த பணியைச் சிரமேற் கொண்ட பாவலன் திறமையாகச் செய்தான். அப் பணியையும். தான் கொண்ட இலட்சியத்தை இறுதி மூச்சாகக் கொண்ட அவன் தன் பணியை செம்மையாகச் செய்து வந்தவேளை அன்று வழமை போல கதிரவன் கண்விழித்து ஒளிபரப்ப, தன் பணியில் ஈடுபட்டிருந்தான். அந்த வேளை இயற்கையின் கொடூரத்தால் பாவலன் இறுதி மூச்சடங்கி லெப். பாவலனானான்.

 

மண்ணுக்காய் மரணித்த பாவலனே! 

உன் மூச்சும் பேச்சும் அடங்கியதே ஒழியஇலட்சியம் வீச்சுப் பெற்றுள்ளது.

மண்ணுக்காய் மரணித்த மாவீரப் பாவலனே!

உன்னுயிர் மூச்சும் விடுதலையுணர்வுகளும் அழிந்து விடப் போவதில்லை. 

லெப். பாவலனாய் மண்மடியில் படுத்துறங்கும் பால முரளி, தமிழ் விழிகள் பார்த்திருக்க

உன் தோழர்கள்இலட்சியத்தை சுமந்த வண்ணம் இங்கு. 

காலம் ஒன்று பதில் சொல்லும்மாவீரா! உன் கனவு நனவாகும்.

 

இளஞ்செல்வம்

 

http://www.veeravengaikal.com/index.php/azhiyachsudarkal/34-lt-bavalan-balakrishnan-balamurali-inuvil-jaffna

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lt_col_akbar.gif

வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டு மல்லவா? அவன் எங்கே போய்விட்டான்?

 

lt_col_akbar3.jpg

அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய படைகள் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் துயரப்படுத்தின. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். வண்டியில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை கொடுமைப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது.

 

பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறிய சிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண் டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான்.

 

அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது ஓயாத அலைகள் - 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் அமர்த்தப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத் தளத்தை இழக்க விரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்து தரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கே நடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்த போது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் - 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான்.

 lt_col_akbar5.jpg

முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக 'சத்ஜெய' என்ற பெயரில் கிளிநொச்சியை வல்வளைப்பு படை நடவடிக்கையை தொடங்கியது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலி வீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகளுடன் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த அக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான்.

 

உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்து கணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தன. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான்.

 

ஏ - 9 சாலையைப் பிடித்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில வல்வளைப்பிற்கு அப்போதைய சிறிலங்காவின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் 'ஜயசிக்குறு' படை நடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாமெனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப் படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும் பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான்.

 

போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடினபயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப் போராளிகளையும் ஊக்கப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித் தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான்.

 

lt_col_akbar4.jpg

பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக் கொள்வான். ஒருமுறை நண்பகல்வேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக் காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது கவனமின்றிச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எந்தவேளையிலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்திய பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறைகூறவுமில்லை. தங்ககத்திற்குப்போய் விளக்குமாறினை எடுத்துக் கொண்டுவந்து தானே கிணற்றடியைச் தூமைப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக் கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் தூய்மைப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு இசையவில்லை. அன்றைய நாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே தூய்மைப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை.

 

அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒரு போதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வு காணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது.

 

நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு மே திங்கள் 13ம் நாள். புத்தபிரான் முன் சூளுரை எடுத்துக்கொண்டு வன்னி மீது 'ஜயசிக்குறு' என்ற பெயரில் பாரிய படை நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடை போட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தான். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய் சந்தித்தது. எதிரி ஒவ்வொரு அடி நிலத்தையும் வல்வளைப்புச் செய்ய அதிகவிலை கொடுத்தான்.

 

25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கி நின்று சண்டை பிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை அன்பாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்த போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரி மீதான அவனின் சினம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை மேலாளரான அக்பர் களத்திலே தான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாள்ளி வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் கவனத்திற்கொள்ளாது டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். இறம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு படைக்காவியையும் அழித்து இரு டாங்கி களைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப் படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான்.

 

இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் நேர்த்தியான செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக் கொடுத்தான்.

 

10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை கடுமையாய் நடந்தது. எதிரியை நெருங்கி மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் நாட்டின்மீது மேற்கொள்ளும் வல்வளைப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச் சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு படைக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்த பின்னரே அக்பர் தளம் திரும்பினான்.

 

அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் வாய்ப்புக் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள்.

 

19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மூலப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்து கொண்டு விழித்துக்கொண்ட எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழி நடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித் தலைவர்களும் போராளிகளும் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலை நிறுத்தினர்.

 

இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப் படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலை நடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான்.

 

ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல் வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித் தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல் தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர்.

 

அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ - 9 பிரதான சாலையை அண்மித்திருந்தான். முன்னேறிய டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப். கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலிகொண்ட சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது.

 

இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்த நிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக விடுதலைக்காய் கொடுத்து ஆறு டாங்கி களை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப் படையின் பலத்தை விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது.

 

இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் 'அல்பா - 1'. களத்திலே 'அல்பா - 1' வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் 'அல்பா - 1' இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எந்தவேளையிலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளி களின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்த இடத்திற்கு நெருங்கிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகர விடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும் வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான்.

 

ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது.

 

விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு 'தீச்சுவாலை' என்ற பாரிய இராணுவ நடவடிக் ஷகையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. 'ஜயசிக்குறு' களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் படைக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டு மொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை இல்லாநிலைக்கு கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படி எண்ணி இந்த விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிழை இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியை வைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப் போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான்.

 

அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல புதுமையான ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் சிறப்புப் பணிப்பின் பேரில் சென்று பணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒரு தளபதியாய் இருந்தபோதும் ஒரு இயல்பான போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான சொற்களைப் பயன்டுத்தி உரையாடுவதும், புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள்.

 

இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத் தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத் துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான்.

 

இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத் தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான்.

 

அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த தூயவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எந்த வேளையிலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்து முடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்ல மாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் படையச் சொத்து.

 

இத்தனை செயற்திறன் மிக்க வீரன் எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னேற்பாட்டுபோது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளை நொருக்கினார்கள். ''தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து'' அக்பர் இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான்.

 

கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, ''அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடை சேர்ந்து எல்லாரும் உழைத்தால் விரைவில் விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே'' என்று கூறி விட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும்.

 

ச.புரட்சிமாறன்

 

 

http://www.veeravengaikal.com/index.php/battlefieldheroes/25-ltcolonel-akbharvaluthi-veerabathiran-perinbarasa-kathiraveli-batticaloa

Link to comment
Share on other sites

கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்

தக்க நேரத்தில்… அறிவரசன் ! Bt-Cap-Arivarasan-723x1024.jpg

ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப,; 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.

இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது.

இந்த நிலைக் கிளாலிக் கரையில், நின்று அவதானித்த அறிவரசன் புரிந்து கொண்டான். எந்தக் கட்டளையும் இன்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். ”அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்” அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவனை உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண் பட்டு சரியாக நிமிந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண் பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன்.

சந்தர்ப்பதை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இந்நிலையில் கிளாலியில் வற்றிய பகுதியில் நின்ற தனது கரும்புலிப் படகை தன்னந்தனியாகத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று, ” நான் இடிக்கட்டா ” எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு எந்தத் தொலைத் தொடர்பு கருவியும் இன்றி கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் மூன்று நீருந்து விசைப்படகுகள் – நான்கு கூவக் கிறாப் என்பன அந்த இடத்தில் இருக்கவே இல்லை.

 

 

Bt-Cap-Arivarasan-2.jpg

Link to comment
Share on other sites

மேஜர் வேணுதாஸ்

உலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணிஅணியாகத்திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும்.

Maj-Venoothas.jpgதமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளைப்பதிவுசெய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்….

இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ்

பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பு வாதிகளின் நிலப்பறிப்பு நடவடிக்கையினால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களின் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழர்பெரும்பான்மையாக வாழும் நிலைமை இன்றுள்ளது. ஆங்கிலேயர்களால் இலங்கைத் தீவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் உண்மையில் சிங்களவர்களுக்குத்தான் கிடைக்கப்பெற்றது. தமிழர்கள் அன்றிலிருந்து சிங்களஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.

1972 ம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் உருவாக்கமும் தமிழ் மாணவர்களுக்குகெதிரான கல்வியில் தரப்படுத்தல் சட்டமும் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கத்திற்கு அடிகோலியது .1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசுகளின் நிலப்பறிப்பு மொழிச்சிதைப்பு என்பவற்றால் தமிழ் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மட்டக்களப்பு நகரத்தில் 05 . 11 .1952 அன்று பிறந்த மேஜர் வேணுதாஸ் உயர் கல்வி மாணவராக இருந்தகாலத்தில் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டம் தமிழ் மாணவர்களை மிகவும் பாதித்தது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மாணவர் பேரவை ஈடுபட்டது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 1972 ல் உருவாக்கப்பட்ட புதிய அரசியிலமைப்பின் மே 22 குடியரசு தினக்கொண்டாட்டங்களையும் தமிழ் மாணவர் பேரவை உட்பட முழுத் தமிழர்களும் புறக்கணித்தனர். இப்போராட்டங்களில் மாணவராக மேஜர் வேணுதாஸ் மற்றும் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் மாவீரர் லெப்.பரமதேவா போன்றவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் மூலம் மேஜர் வேணுதாஸ் தமிழ் மக்களின் விடுதலை சார்ந்த அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்தார். அன்றுதொடக்கம் இவர் வீரச்சாவடைய மட்டும் இவருடைய பணி தமிழ்மக்களின் விடுதலையையொட்டியதாகவே இருந்தது.

பள்ளிக்கூட நாட்களில் மாணவ தலைவனாகவும் இல்லத்தலைவனாகவும் பின்பு தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் இவர் செயற்பட்டத்தை இன்று எண்ணிப்பார்க்கின்றபோது இவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என எண்;ணத்தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்புத் தமிழ்மக்களுக்கு அரசியலில் ஒரு உண்மை உணர்வுமிக்க தலைவனும் கிடைத்திருப்பார். அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது மக்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை கடந்தகாலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் விடுதலையில் எவ்வித சுயநலப்போக்குமில்லாத விடுதலை அமைப்பையும். அதன் தலைமையையும் ஏற்றுக்கொண்டு எமது தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தீவிர ஆதரவாளராக இருந்து பின்பு உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் . தமிழ்மக்களின் விடுதலையில் தீவிரமாக இளைஞர்கள் செயல்பட ஆரம்பித்தகாலத்தில் உருவாக்கம்பெற்ற தமிழ் இளைஞர் பேரவையில் தீவிர செயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார்.

இவருடன் இணைந்து செயல்பட்டவர்களில் லெப். பரமதேவா, லெப். சரவணபவான் போன்றவர்களையும் குறிப்பிடமுடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மட்டக்களப்பில் செயல்படத்தொடங்கியவேளையில் வேணுதாஸ் அவர்களின் ஒத்துளைப்பு அவர்களுக்கு பூரணமாகக்கிடைத்தன. மட்டக்களப்பு நகரில் போராளிகள் தங்குவதற்கு மறைவிடத்தை ஒழுக்கு படுத்தியதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சிப் பாசறைக்கு மட்டக்களப்பிலிருந்து போராளிகளை அனுப்புவதற்கு குறிப்பிடத்தக்கவர்களை இணைத்து விட்டதிலிருந்து இவருடையபணி ஆரம்பமானது. இவரைப்போன்றவர்களைத்தான் மட்டக்களப்பில் நீண்டகால தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று நாம் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு மறைவிடத்தில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர் ஒருவரையும் ஒழுக்கு படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் இயக்கத்தின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார்.

உள்ளுராட்சித் திணைக்களத்தில் எழுதுனராகப் பணியாற்றிய வேணுதாஸ் சட்டம் பயின்று சட்டவாளரானார். இவருடைய மனைவி ஜமுனாதேவி அரச வங்கியொன்றில் பணியாற்றினார் அவருக்கும் குடும்பத்துக்கும் வசதியான வாழ்வு கிடைத்தும் தமிழ் மக்கள் விடுதலை பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் தீவிரமாக அவருடைய எண்ணங்கள் இருந்ததால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அப்போதைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் தேவையான சந்தர்ப்பத்தில் ஆலோசகராகவும் செயல்பட்டதனால் இவர்களின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கம் பெற்றது.

இந்தியப்படையின் வருகையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான அவர்களின் போரும் தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. தமிழ் மக்கள் தங்களுடைய தேசியவீரர்களான தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கெதிரான இந்தியப்படையின்போர் நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்போராட்டத்திற்கான ஆதரவையும் ஆலோசனையையும் வேணுதாஸ் அவர்கள் வழங்கி வந்தார் இதனால் வேணுதாஸ் அவர்களின் வீட்டுக்குச் சென்ற இந்தியப் படையினர் அவரை மிகவும் கடுமையாகத் தாக்கினர். அகிம்சைப் போராட்டத்தின் பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்ற காந்தி பிறந்த மண்ணிலிருந்து தமிழீழ மண்ணுக்கு வந்திருந்த இந்தியப்படையினர் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பதற்கு தவறியதால் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவினார்.

தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சைப் போராட்டத்தில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த லெப். கேணல் திலீபன் அவர்களைத்தொடர்ந்து தமிழ்க் குடும்பபெண்ணான அன்னை பூபதி அவர்களின் தற்கொடைச்சாவு அப்போதைய இந்திய அரசின் உண்மையான எண்ணங்களை தமிழீழ மக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தன. இக்காலகட்டத்தில் வேணுதாஸ் அவர்கள் மீண்டும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரகசியமானமுறையில் கொலை செய்வதற்குமுயற்சித்த போது அங்கிருந்து தப்பினர். ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1990 ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்ட வேணுதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தொழிற்சங்க சம்மேளனச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் 1990 ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார். இக் கூட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மற்றும் மட்டக்களப்பு நகரின் மாவட்டத்தின்நாலாபுறமிருந்து மக்கள் திரண்டு வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்த பிரமாண்டமான கூட்டஒழுங்குகளிலும் இவருடைய பணி குறிப்பிடத்தக்களவு இருந்தன.

மேஜர் வேணுதாஸ்

வரலாறு காணத மக்கள் கூட்டம் மட்டக்களப்பு நகரில் கூடியதும்இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகின்றோம்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் வேணுதாஸ் போராளிகளுடன் இணைந்து மயிலவட்டுவான் பிரதேசத்துக்குள் சென்று அங்கு மக்களுடனும் போராளிகளுடனும் தங்கியிருந்தார். இந்த வேளையில்தான் அவருடைய வாழ்க்கையில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சின்ன ஊறணி தொடக்கம் ஓட்டமாவடி வரையிலான மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராம்மக்கள் எல்லாம் தங்களுடைய இருப்பிடங்களைவிட்டு வயலப்பிரதேசங்களில் வாழ்ந்தநேரம் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒரே இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கும் பாதுகாப்பற்ற பயணம் நிலவிய நேரம் ஜமுனாஅவர்கள் வவுணதீவு பாதைவழியாக மிதிவண்டியிலும் வயல்வரம்புகளில் நடந்தும் நரிபுல்தோட்டத்துக்கு வந்தடைந்தார். பின்பு பன்குடாவெளி வருவதற்காக தோணி மூலம் குறுக்கே ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியை கடந்து சிரமமான ஒரு பயணத்தின் மூலம் தனது கணவரைச் சந்தித்து பின்பு பிள்ளைகள் தனியாக உறவினர்களுடன் இருப்பதால் அவசரமாக செல்வதற்காக 23.12 . 1990 அன்று காலையில் செங்கலடி வழியாக சிலருடன் பயணித்தபோது இராணுவத்தினரின் துப்பாக்கி தாக்குதல் இவர்களை நோக்கி இடம்பெற்றதையும் அதற்கு பிறகு இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலையில் ஆரையம்பதியை சேர்ந்த றம்போ என்றழைக்கப்பட்ட போராளி பிரசாத்துடன் சென்ற குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தேடியபோது செங்கலடி வைத்தியசாலை வளவு கிணற்றினுள் அணிந்திருந்த நகைகள் அபகரிக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்ட நிலையில் முதுகில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்துடன் கண்டெடுத்த அவரின் உடலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குளிருந்த பன்குடாவெளிக்கு கொண்டுவந்தனர். சிங்கள இராணுவத்தினர் மாத்திரமே தங்கியிருந்த செங்கலடியில் இவ்வாறு சென்றுவருவது என்பது மிகவும் பயங்கரமான செயலாக இருந்தும் பிரசாத் அவர்களின் துணிவு அதனை சாதித்தது.

சம்பவம் நிகழ்ந்த அன்றிரவு முழவதும் வேணுதாஸ் நித்திரையின்றி ஜமுனா அவர்களைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தார் . எனது வீட்டில் எல்லா விடயங்களையும் கவனித்துக்கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் . நான் அரசியல் தமிழ் மக்களின் விடுதலை என்று வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டபோதும் ஜமுனா எந்தவித விமர்சனமு மில்லாமல் எனது செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட நல்லுள்ளம் கொண்ட ஒரு குடும்ப பெண்ணாக இருந்தார் என்று மிகவும் கவலையடைந்து கொண்டிருந்தார். இச் சம்பவம் அவருடைய கவலையை மேலும் விரிவடைய வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அர்ப்பணிப்புகள் எல்லோருடைய மனதிலும் அழியாத நினைவுகளை ஏற்படுத்தினாலும் தாயும் தந்தையுமின்றி பெண் பிள்ளைகள் வாழும் நிலை எமது பண்பாட்டைப் பொறுத்தவரை தாக்கமானதொன்றுதான். என்றாலும் இவர்களுடைய உறவினர்கள் அதையும் தாங்கிக் கொண்டார்கள்.

மட்டக்களப்பு நகரத்தில் தங்கியிருந்த இவர்களுடைய 7 வயதிலும் 4 வயதிலும் உள்ள பெண்குழந்தைகளால் தாயின் இறந்த உடலை பார்க்க முடியவில்லை. தந்தையின் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் வேணுதாஸ் அவர்களின் அர்ப்பணிப்பு அமைந்திருந்தது. இவருடன் சட்டக்கல்லூரியில் பயின்ற நண்பன் ஒருவர் வெளிநாட்டிலிருந்து இவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனைவியை இழந்த நீ பிள்ளைகளுக்காக வெளிநாடு வருவது பற்றி முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட கருத்தையிட்டு வேணுதாஸ் அவர்கள் கூறியவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இந்த விடுதலைப் போராட்டத்தில் எனது குழந்தைகள் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்நிலையிற்தான் எனது மனைவியையும் நான் இழந்திருக்கின்றேன். இனிமேல் நான் ஏன் வெளிநாடு செல்லவேண்டும் எனது மனைவி இறந்ததுபோல் இந்தமண்ணில் மக்களுடன் வாழ்ந்து மடியவே நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு நீண்டகாலமாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயல்பட்ட வேணுதாஸ் தான் நேசித்த மண்ணிலேயே தன்னை அர்ப்பணித்தார். மனைவியைப் பிரிந்தபோதும் இரண்டு பிள்ளைகள் இருந்தும் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முழுநேரமாக இணைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று இனப்பற்று மொழிப்பற்று இனத்திற்கான விடுதலை வேட்கை என்பன வேணுதாஸ் அவர்களையும் ஒரு மாவீரராக வரலாற்றில் பதிவு செய்தது. தாயும் தந்தையுமின்றி எதிர்காலத்தில் வாழப்போகும் அவருடைய இருபெண்பிள்ளைகளைப்பற்றியும் நாம் எண்ணிப்பார்க்கின்றபோது இவ்வாறான அர்பணிப்புக்களும் எமது மண்ணில் நிகழ்ந்துள்ளது என்பதை எமது மக்கள் அறிந்துகொள்ளுவதற்கு இப்பதிவு உதவும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

மயிலவட்டுவான் என்கின்ற அழகிய எழில் கொஞ்சும் சிற்றூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட வட்டத்தில் அமைந்திருந்ததால் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் சந்திப்பு இடமாகவும் அது விளங்கியது. ஆறும் வயலும் சூழ்ந்த இவ்வூரில் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்த்துவந்தன. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இவ்வூரை என்றும் எம்மால் மறக்கமுடியாது. இங்கு நாம் அநேகமான போராளிகளுடன் உறவாடி வாழ்ந்திருக்கின்றோம். களுவாஞ்சிக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த கப்டன் முத்துசாமி என்பவருடன் இவ்வூர்மக்கள் ஒட்டி. உறவாடியதையும் இச்சந்தப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

11 . 12 . 1991 ம் ஆண்டு அது ஒரு காலைப்பொழுது மயிலவட்டுவானில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினருடான சந்திப்பு ஒன்றுக்காக மாவட்ட அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் சத்துருக்கன் அவர்களுக்கான மொழிபெயர்ப்புச்செய்வதற்காக மேஜர் வேணுதாஸ் அவர்களும் புகைப்படப்பிடிப்புப் போராளி 2 வது லெப். ராஜா சத்துருக்கன் அவர்களின் உதவியாளர் வீர வேங்கை பிரசாந் ஆகியோர் காத்திருந்தனர்.

எப்போதும் மயிலவட்டுவானில் காலைவேளைகளில்; சன நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஏனெனில் பட்டிகளிலிருந்து பால்கொண்டு வருபவர்கள் வயலுக்குச் செல்பவர்கள் என எல்லோரும் அப்போதுதான் இவ்வழியாக வருவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தனர். சில நாட்களுக்கு முன் சந்தனமடு குடாவட்டை போன்ற வயல் வட்டங்களில் சிங்கள இராணுவத்தினரின் நடவடிக்கையினால் மக்களின் குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தை பார்வையிடுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரை அழைத்துக்கொண்டுசென்ற சில நிமிடங்களின் பின்பு வெடிச்சத்தங்கள் கேட்டன. சிவத்தப்பாலத்திற்கு அருகாமையில் பதுங்கியிருந்த சிங்கள இராணுவத்தினர் திடீரென தாக்கியதில் நான்கு பேரும்வீரச்சாவைத் தழுவியதாக எமக்குச் செய்திகிடைத்தது . சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரின் வாகனம் திரும்ப மயில வட்டுவானுக்கு வந்து சேர்ந்தது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னுமிடத்தைச் சேர்ந்த மட்டு அம்பாறை மாவட்டத்தின் முதல் பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட கப்டன் சத்துருக்கன் மட்டக்களப்பு நகரில் மக்களுக்கெல்லாம் அறிமுகமான சட்டத்தரணி வேணுதாஸ் இருதயபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜா பன்குடாவெளி என்னும் ஊரைச் சேர்ந்த பிரசாந் ஆகியோருடைய வீரச்சாவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் நாளிதழில் மேஜர் வேணுதாஸ் அவர்கள் பற்றிய கட்டுரையைப்பார்த்த பின்புதான் எமது தேசியத் தலைவர் அவர்கள் வேணுதாஸ் அவர்களின் வீரச்சாவினை அறிந்துகொண்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட போராளிகளை அழைத்து வேணுதாஸ் அவர்களைப் பற்றி எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டுகூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். வேணுதாஸ் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி நான் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் பயணத்தின் பாதைகள் வேறாக இருந்தபோதும் இறுதியில் சரியானபாதையை தெரிவுசெய்து எம்முடன் இணைந்துகொண்டார். இவரைப் பற்றியும் இவருடையவாழ்வு பற்றியும் போராளிகளாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். என்று கூறியதோடு தாயையும் தந்தையையும் இழந்த இந்த பிள்ளைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்தார். இச்சந்தப்பத்தில் இன்னோர் கருத்தையும் குறிப்பிட்டார். ¨போராட்டத்தின் விளைவினால் பெற்றோரை இழக்கின்ற பிள்ளைகள் என்றும் அனாதைகள் இல்லை. நான் இருக்கும் வரை இவர்கள் எல்லோரும் நன்றாகப் பராமரிக்கப் படுவார்கள்¨. இதிலிருந்து தேசியத் தலைவர் அவர்களின் தொலை நோக்குப்பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு முன் வரவேண்டும்.

இவ்வாறு இலக்குத் தவறாத தமிழீழ தாய் நாட்டின்விடுதலைக்கானா இலட்சியப்பயணத்தில் வேணுதாஸ் அவர்களும் இணைந்துகொண்டார். இவர் காலத்தில் வாழ்ந்த எமது நெஞ்சினில் இவருடைய நினைவுகளும் என்றும் நிலைத்துநிற்கும்.

– எழுகதிர்.

Link to comment
Share on other sites

ennankal.jpg
எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.

சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

சதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.

தனது மனவுலக் ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.

மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

பூரண அரசியற் தெளிவும் விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.

எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.

விடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.

சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் சுதந்திர சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.

மக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது

இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.

பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.

ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.

மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்கும் பொதுவானது.

எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்

இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.

இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.

கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போரட்ட வடிவம்.

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

தொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட-கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.

கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் து}ண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உணட்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அதற்குத் தலைமைதாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.

திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.

நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.

அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.

இராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.

நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்.

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான புரட்கரமான படைப்புக்களை சிருஷ்டிக்க வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும்.

விடுதலைப் போரட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை. விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.

சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும்.

போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
 

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.

thalavar2.jpg

எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.

எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞாகளும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.

சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.

புவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக் கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப் பகுதியை நிரந்தரமாக் நிலை நிறுத்திதக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பபோல கல்வியும் எமது போராட்த்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.

உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.

பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.

பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.

நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.