Jump to content

சீதா.. அடி கள்ளி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்போடு... கூட்டம் கூடுகிறது... கேள்விகளை தொடுக்கிறார்...

 

(வெள்ளையின ஆங்கிலேய) முகாமையாளர்: உங்கள் பெயர்தான் கோலியாத்தா..?!

 

கோலியாத்: ஆம்.. நானே தான் அது.

 

முகாமையாளர்: உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது எமது நிறுவன ஒழுங்கு விதிக்கமைய பராதூரமாக பார்க்கப்படுகிறது..! அந்த வகையில் தான் இந்த விசாரணைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீங்கள் அண்மையில் அப்படி ஏதாவது குற்றம் செய்ததாக உணர்கிறீர்களா..??!

 

கோலியாத்: நானா. அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே..?!

 

முகாமையாளர்: உங்களுக்கு சீதாவை தெரியுமா..??!

 

கோலியாத்: என்ன அந்த மகாபாரத சீதாவா.. மன்னிக்கனும்.. இராமாயண சீதாவா.... அவாவை தெரியும்.

 

(முகாமையாளர் இந்தப் பதிலைக் கேட்டு முழிக்கிறார். என்ன நம்ம கம்பனில இரண்டு சீதாவா..என்று அவருக்கே ஒரு டவுட்டு வருகுது.)

 

முகாமையாளர்: எந்த சீதாவோ.. எங்கட நிறுவனத்தில் உள்ள சீதாவைத் தெரியுமா...?!

 

கோலியாத்: ஆம்.

 

முகாமையாளர்: எப்ப இருந்து தெரியும்..?!

 

கோலியாத்: இதே நிறுவனத்தில் என்னோட பகுதியில் என்னோடு தான் அவாவும் வேலை செய்கிறா. அதுவும் எனக்கு முன்னாடி நின்று தான் வேலை செய்யுறா. அந்த வகையில் தெரியும்.

 

முகாமையாளர்: நீங்கள் இருவரும் தமிழர்களா..??!

 

கோலியாத்: நான் தமிழ் பேசத் தெரிந்த தமிழன். அவாவுக்கு தமிழ் நல்லா பேச வரும்.

 

முகாமையாளர்: (இவனுக்கு திமிர் அதிகம் போல.. என்று நினைச்சுக் கொண்டே... மீண்டும்...) நீங்கள் இருவரும் நிறுவன வேலை நேரத்தில் தமிழில் பேசிக்கொள்வீர்களா..??!

 

கோலியாத்: அவா சிரிப்பா.. எடி கள்ளி ஏண்டி சிரிக்கிறாய் என்று கேட்பேன்.. அவ்வளவும் தான்.

 

(முகாமையாளர் கடுப்பாகிறார்.. மீண்டும் உச்சசாயலில்.. )

 

முகாமையாளர்: நீங்கள் இருவரும் தமிழில் பேசுவீர்களா.. ஆமா.. இல்லையா என்று பதில் அளிக்கவும்.

 

கோலியாத்: (மனசுக்க: அப்படி தெளிவாகக் கேட்கிறது).. ஆம். பேசுவோம்.

 

முகாமையாளர்: எப்போது நீங்கள் சீதாவை  முதன்முதலில் பார்த்தீர்கள்..?!

 

கோலியாத்: எங்கள் வீட்டுக்கு அருகில் பூங்காவில் பார்த்தேன். அவா அவருடைய சின்ன மகளோடு வந்திருந்தார்.

 

முகாமையாளர்: அவர் ஒரு குடும்பப் பெண் என்று உங்களுக்கு தெரியுமா..?!

 

கோலியாத்: ஆம். ஒரு குழந்தையோடு ஒரு பெண் வந்திருப்பதால்.. அதுவும் தமிழ் பெண் என்பதால்.. அப்படி தான் நினைச்சுக் கொண்டேன்.

 

முகாமையாளர்: மேலும்.. கண்டதும் அவா தமிழ் என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள்.

 

கோலியாத்: சிவப்பு.. ஸ்ரிக்கர் பொட்டு வைச்சிருந்தா. அதோடு தமிழ் பெண் என்பதை முகச்சாயலும் காட்டிக் கொடுத்தது.

 

முகாமையாளர்: சரி அது இருக்கட்டும்.. குழந்தை இருக்கு என்பதற்காக குடும்பப் பெண் என்று எப்படி நினைத்தீர்கள். கண்டு கதைத்தீர்களா..??!

 

கோலியாத்: தமிழர்கள் ஒரு பெண்ணை குழந்தையோடு கண்டால் அப்படித்தான் நினைப்பார்கள். கண்டு கதைக்கவில்லை.. புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்.

 

முகாமையாளர்: அந்தச் சந்திப்பின் பின் சீதாவை பல தடவைகள் நிறுவனத்தில் கண்டுள்ளீர்கள். சந்தித்துள்ளீர்கள். அப்போதெல்லாம் அவரிடம் என்ன பேசினீர்கள்..கேட்டீர்கள்..??!

 

கோலியாத்: என்ன என்னை கண்டால் சிரிக்கிறீங்க.. கதைக்கிறீங்க இல்லையே என்று கேட்டேன்.

 

முகாமையாளர்: அந்தக் கேள்வியின் அர்த்தம் என்ன..??!

 

கோலியார்: சிரிக்கத் தெரிந்த உனக்கு.. உயிரே கதைக்கத் தெரியாதோ என்பது தான்..

 

(முகாமையாளர் பாடலைக் கேட்டுவிட்டு முழிக்கிறார்..)

 

முகாமையாளர்: இதன் உள்ளார்ந்த அர்த்தம்.. தமிழில் என்ன..??!

 

கோலியாத்: தெரியாது.

 

முகாமையாளர்: (கடுப்பாகி) யோவ்.. அப்ப எதுக்கையா அதைப் பாடினே...

 

கோலியாத்: கூலாக.. அவர் என்னைப் பார்த்து அடிக்கடி சிரிப்பார். அதனால் ஜொள்ளுக் கூடி அப்படி பாடினேன்.

 

 

முகாமையாளர்: அடிக்கடி என்றால்...

 

கோலியாத்: என்னை அவர் காணும் போதெல்லாம் சிரிப்பார். நானும் பதிலுக்கு சிரிப்பேன்... அந்த வகையான அடிக்கடி.

 

முகாமையாளர்: இதனை நீங்கள் இருவரும் கண்கால் பேசி.. சிரிப்பால் காதல் செய்தது என்று தமிழில் அர்த்தப்படுத்த முடியுமா..??!

 

கோலியாத்: தெரியாது.

 

முகாமையாளர்: அப்ப எதுக்கையா.. சிரித்துத் தொலைச்சீர்..??! (மனசுக்க.. அதுங்க வேலைக்கு வந்திட்டு.. சம்பளமும் வாங்கிட்டிட்டு.. சிரிக்கிறது.. கண்ணடிக்கிறது.. என்று ஜாலியா இருக்குதுங்க.. சீனிய மனேஜர் அதை விசாரணை பண்ணு என்று.. நம்ம உயிரை வாங்கிறாய்யா.)

 

கோலியாத்: அவா சிரித்தா... பதிலுக்கு.. நானும் சிரித்தேன்.

 

முகாமையாளர்: ஆனால் சீதா பதிவு செய்துள்ள குற்றச்சாட்டில்.. நீங்கள் சிரிப்போடு நின்றுவிடவில்லை அவரை படுக்கைக்கு கூப்பிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளதே..?!

 

கோலியாத்: படுக்கையா.. அப்படின்னா என்ன..??!

 

முகாமையாளர்: பெட்.. என்று அர்த்தம். நீங்கள் சீதாவை பெட்டுக்கு அழைத்தீர்களா..?!

 

கோலியாத்: சீதாவை அந்த இராவணன் பெட்டுக்கு அழைச்சிருக்கலாம். ஐயா முகாமையாளரே நான் அப்படி செய்வேனா. என் மூஞ்சியை பாருங்க சாமி. நான் ஒரு அப்பாவி. குடும்பஸ்தன் வேற. எனக்கு சிரிக்கத் தெரியுமே தவிர.. சிந்திக்க வராது சாமி.

 

முகாமையாளர்: அப்படி என்றால்.. நீங்கள் முன்னர் பாடிய பாடலின் தமிழ் அர்த்தம் என்ன..??! (சிரிக்கத் தெரிந்த உனக்கு.. உயிரே கதைக்கத் தெரியாதோ.. என்று பாடிக்காட்டுகிறார்.)

 

கோலியாத்: (மனசுக்க.. அட வெள்ளைக்காரன்.. இவனும்.. செளந்தராஜன்  விசிறி போல.. நல்லாப் பாட்டு படிக்கிறானே..) அது சும்மா பாட்டு சார். மற்றும்படி ஒன்னுமில்ல. நான் மெசேஜ் வைச்சு ஒன்னும் பாடல்ல சார். நான் அப்பாவி சார். வேலையை புடுங்கிடாதேங்க சார். இந்த வேலைல தான் என் குடும்பம்.. வீடு.. வங்கிக் கணக்கு..பெனிபிட்..எல்லாமே தங்கி இருக்குது.

 

முகாமையாளர்: உயிரே என்று சீதாவை விளித்துப் பாடி இருக்கிறீர்களே அதற்கு என்ன அர்த்தம்..??!

 

கோலியாத்: நான் அவரை பூங்காவில் சந்தித்தது முதல்.. இங்கு வேலைத்தளத்தில்.. தினமும் என்னைப் பார்த்து.. சிரித்து வந்தார் சீதா.  திடீர் என்று ஓர் நாள்.. அவர் சிரிப்பதை குறைக்கவும்.. நிறுத்தவும் ஆரம்பித்தார். அதனால் எழுந்த சோகத்தில்.. அப்படி பாடிட்டேன் சாமி. தப்பா ஒன்னுமே சொல்லேல்ல சாமி.

 

முகாமையாளர்: ஒரு பெண்ணைப் பார்த்து.. அதுவும் குடும்பப் பெண்ணைப் பார்த்து உயிரேன்னு பாடி இருக்கிறீர்களே. அவள் கணவன் அல்லது காதலனுக்கு தானே அந்த உரிமை உள்ளது. தமிழிலும் அப்படித்தானே இருக்கும்..??!

 

கோலியாத்: இல்லை சாமி. தமிழில் அதுக்கு வேறை அர்த்தம். நான் அவருடனான நட்பை மட்டும் உயிராக மதித்தேன் சாமி. அம்புட்டுத்தான்.

 

முகாமையாளர்: இல்லையே. சீதா உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு.. நீங்கள் அவரை இதே நிறுவனத்தில் வேலையிடத்தில் வைச்சு.. வெளியே பெட்டுக்கு அழைத்ததாக கூறியுள்ளாரே..! நீங்கள் அவரை உயிரேன்னு அழைத்தது.. தமிழில் அப்படி அர்த்தப்படுத்துமா..??!

 

கோலியாத்: (மனசுக்க.. ஒரு பாட்டைப் படிக்கப் போய்.. அதுவும் தமிழில் படிக்கப் போய்.. நான் படுறபாடு. பாவி மவ.. சிரிச்சு பேசிட்டு.. மாட்டி விட்டுட்டாளே. நம்ம மனிசி பிள்ளைகளுக்கு இது தெரிஞ்சா நிலைமை என்னாகிறது.)..  இல்லை சாமி. நான் தனுசு மாதிரி எல்லாம்.. உன்னை உயிர் தந்து காப்பாற்றுவேன் என்று இரட்டை அர்த்தத்தில் பாடேல்ல சாமி.

 

முகாமையாளர்: அது யார் தனுசு. அவருக்கும் இதில் கூட்டுப் பங்களிப்பு உள்ளதா..?! அவரும் எமது நிறுவனத்திலா வேலை செய்கிறார்..??!

 

கோலியாத்: (மனசுக்க.. போடா வெள்ளைக்காரப் பயலே. உனக்கு தனுசே யார் என்று தெரியல்ல.. நீ எல்லாம் எங்க தமிழ் சினிமா பார்த்திருப்பே. 3 இலட்சம் தமிழர்கள் இந்த இங்கிலாந்தில இருந்து என்ன பயன்.)...  தனசு.. தமிழ் சினிமா நடிகர் சாமி. அவர் அங்கின சினிமால.. சொன்னதை ரிப்பீட் பண்ணினேன் சாமி. மன்னிச்சுக்கோங்க. அந்த வார்த்தைகளை பின்வாங்கிக் கொள்கிறேன்.

 

முகாமையாளர்: அப்போ எதுக்கு சீதாவை பார்த்து உயிரேன்னு பாடினீர்கள்..??!

 

கோலியாத்: தப்புத்தான் சாமி. எனி அந்த சண்டாளியை பார்த்தால் சிரிக்கவே மாட்டேன் சாமி. மூஞ்சியை உம் என்று வைச்சுக்கிட்டு போயிடுறேன் சாமி. மன்னிச்சு விட்டிடுங்க சாமி. ரெம்ப கொடுமையா இருக்குதுங்க சாமி.

 

முகாமையாளர்: அப்போ சீதா உங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா..?!

 

கோலியாத்: இல்லை சாமி. நான் சீதாவை பார்த்தேன்.. சிரித்தேன்.. பாட்டுப் படித்தேன் என்பது எல்லாம் உண்மை. படுக்கைக்கு அழைத்தேன் என்பது மகா பொய். (மனசுக்க.. இப்ப தானே புரியுது.. ஏன் பொம்பள சிரிப்பை நம்பாதே.. அது ஒரு நச்சுப் பாம்புன்னு சொன்னாங்கன்னு.)

 

முகாமையாளர்: உங்களை இறுதியாக எச்சரிக்கிறேன். எனிமேல்.. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம்..இப்படி பார்த்தேன்.. சிரித்தேன்..பாட்டுப் பாடினேன் என்று சொல்லி ஏதாவது குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது பதிவானால்.. நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதோடு.. பெண்களுக்கு எதிராக செயற்பட்டதாகக் கூறி சட்ட நடவடிக்கைக்கும் ஆளாவீர்கள். இத்தோடு இந்த விசாரணை நிறைவடைகிறது. இதன் தீர்ப்பு உங்களுக்கும் மூத்த முகாமையாளருக்கும்.. பிரதி ஒன்று சீதாவுக்கும் அனுப்பி வைக்கப்படும். நன்றி உங்கள் ஒத்துழைப்புக்கும் வரவுக்கும்.

 

கோலியாத்: (மனசுக்க.. நன்றி ஒன்று தான் இப்ப குறைச்சல்...  எனி மேல்.. நானுன்னு என் வேலைன்னு என்று இருந்திடனும். இந்த தமிழ் சினிமா கீரோத்தனம் எல்லாம்.. இங்கிலாந்து கம்பனிகளில் வைச்சுக்கவே கூடாதுடா சாமி. பட்டது போதும்.) நன்றி சார். அப்ப நான் கிளம்பலாமா.

 

முகாமையாளர்: தாரளாமா. கிளம்பலாமே.

 

கோலியாத்: (மனசுக்க) அடியே சீதா.. வெளில..சிரிச்சுப் பேசிட்டு.. உள்ளுக்க கவுத்திட்டேயேடி. உன்னைப் போய் அடி கள்ளி.. நொள்ளின்னு செல்லம் கொஞ்சினேனே. எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.

 

(இங்கிலாந்தில் தமிழர்கள் வேலை செய்யும்.. ஆங்கிலேயர்கள் நடத்தும் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவியது. இப்படியும் நடக்குது என்பதற்காக.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நடந்த சம்பவத்தைப் பார்த்திருந்தாலும் எதிர்மறையாகத்தான் எழுதுவீர்கள் நெடுக்ஸ். அல்லது ஒரு ஆண் உங்களுக்குச் சொல்லியிருந்தாலும் தன தவறை மூடி மறைத்துத்தான் சொல்லியிருப்பார். அது ஆண்களின் இயல்பு. மற்றப்படி உதுக்குப்போய் யாராவது மேலிடத்தில் சொல்வார்களா???? தனியவே நல்ல திட்டுத் திட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த சம்பவத்தின் சாரம்சத்தை.. உள்ளப்படி தான் சொல்லி இருக்குது. அதில சந்தேகம் தேவையில்லை. எதில எல்லாம் சந்தேக்கிறதே என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு. :lol:

 

மிகுதி வாசகர்கள் தீர்மானிக்க வேண்டியது.

 

சில சமயங்கள் பெண்கள் அளவுக்கு மீறிய சந்தேகப் புத்தியோடு மேன்முறையீடுகளை.. பல்வேறு நோக்கங்களை மையமாக வைத்து.. உ+ம்.. நிறுவனத்தின் அனுதாபத்தை சலுகைகளை எதிர்பாத்தும்.. செய்வதுண்டு. அதனால் தான் நிறுவனங்கள் சரியான விசாரணைகளை முன்னெடுத்து தீர்வுகளை தீர்மானங்களை எடுக்கின்றன..! இப்ப எல்லாம் நிறுவனங்கள்..பெண் என்பதற்கான உடனடியாக அனுதாபம் காட்டுவதில்லை.. சரியான நடைமுறைகளைப் பின்பற்றி தீர்மானங்களை எடுக்கத் தலைப்படுகின்றன. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளபடி சொல்லியிருந்தா சந்தோசம் தான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை  நல்லாயிருக்கு

 

நான் தம்பி நிழலியின் கதை என்று வாசித்தேன்.... :lol:  :D

இருக்குமிடத்தை ரசித்து வாழணும்

சந்தோசமாக எம்மையும்

கூட உள்ளோரையும் வைத்திருக்கணும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட தம்பி அவர்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நடந்த சம்பவத்தைப் பார்த்திருந்தாலும் எதிர்மறையாகத்தான் எழுதுவீர்கள் நெடுக்ஸ். அல்லது ஒரு ஆண் உங்களுக்குச் சொல்லியிருந்தாலும் தன தவறை மூடி மறைத்துத்தான் சொல்லியிருப்பார். அது ஆண்களின் இயல்பு. மற்றப்படி உதுக்குப்போய் யாராவது மேலிடத்தில் சொல்வார்களா???? தனியவே நல்ல திட்டுத் திட்டியிருக்கலாம்.

 

நெடுக் அண்ணா இந்த விடையத்தில் எப்படியோ எனக்கு தெரியாது..ஆனால் அனேகமான ஆண்கள் சக ஆண்கள் செய்தது,செய்வது தப்பு என்று தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட ஆணுக்கு சார்ப்பாகவே நிற்பது பல காலமாக நடக்கும் நாடகம் தானே சுமே அக்கா..எது சரி,பிழை என்பதற்கும் அப்பால் தங்கள் நட்பு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு சக பெண் நட்பையே எதிர்ப்பது இன்றும் நடக்கிறது..சக நட்பின் மேல் உண்மையான அக்கறையா இல்லை பெண்ணிற்காக பேசினால் அந்த நட்பை இளக்க நேரிடும் என்ற ஆதங்கமாக ஒன்றும் புரிவதில்ல...அப்படியான தருணங்களில் எங்களை விலத்தி சென்றவர்களே மேல் என்ற அளவுக்கு மனசு வந்துடும்....ஏன் எனில் அவர்களோ,நாங்களோ தவறு விடும் சந்தர்ப்பத்தில் வெளியில் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தாலும் உள் மனத்தில் தன்னை,தான் சொன்ன பொய்களை நிறையவே நம்பியவள் என்ற களிவிரக்கமாவது இருக்கும்..

Link to comment
Share on other sites

கோலியாத் அவனைக் கண்டதும் சீதா மயங்கினாள், அடிக்கடி சிரித்தாள், கண்சாடை காட்டிணாள். பாவம் அவனுக்கு கோமோன் சுரக்கவில்லை என்பதை அறியாது கோபம் கொண்டாள். போட்டுக் கொடுத்துவிட்டாள். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலியாத் அவனைக் கண்டதும் சீதா மயங்கினாள், அடிக்கடி சிரித்தாள், கண்சாடை காட்டிணாள். பாவம் அவனுக்கு கோமோன் சுரக்கவில்லை என்பதை அறியாது கோபம் கொண்டாள். போட்டுக் கொடுத்துவிட்டாள். :o

 

கோமோன் சுருக்காமலா.. பதிலுச்சு சிரிச்சிருப்பார்..???! தியறி தப்பாச்சே. :lol:

Link to comment
Share on other sites

கனடாவிலும் வேலைதளங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த இழவுக்கு தான் நான் வேலைக்கு போனமா வேலை செஞ்சமா வீட்ட வந்தமா என்டு இருக்கிறன். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
 
Don't sh*t where you eat. 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.