Jump to content

மகிந்த ராஜபக்சவின் ஐநா உரை செப்24க்கு மாற்றம் : வட அமெரிக்க தமிழர்களின் பொங்குதமிழ் நிகழ்வும் மாற்றம் !


Recommended Posts

நியூயோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் 24ம் திகதியே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சபையின் முன் உரத்துக்கோருவதற்குமாக இந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 25ம் நாளன்றே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல் நாளே மாலை உரையாற்றுவதற்கான நேரம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் (நியூயோர்க்) தமிழர்களின் ஒன்றுகூடல் மதியம் 1 மணி முதல் இடம்பெற ஏற்பாடாகி வருகின்றது.

இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனால், முக்கியத்துவம் கொடுத்து இவ் எழுச்சி ஒன்றுகூடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து மக்கள் பங்குபற்றுவதற்கான வழிமுறைகளோடு, கனடாவில் இருந்தும் மக்கள் பங்கெடுப்பதற்கான குறித்த 416-751-TGTE) / (416) 648-3373 /416-830-4305 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட தமிழர் இயக்கங்களை ஒன்றிணைத்த தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழ் மக்கள் நீதிப்பேரணியும் செப்24ம் நாளன்றே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது

(Facebook)

Link to comment
Share on other sites

நியூயோர்க் ஐ.நா.பொதுச்சபை முன் பொங்குதமிழ் எழுச்சியுடன் பெருந்திரளாய் அணி திரள்வோம் - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி

நியூயோர்க் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் முன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் நாள் இடம்பெறவிருக்கின்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில், பெருந்திரளாய் அணி திரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.

சிறிலங்கா அரசினால் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகப் தமிழீழத்தில் போர்க்குரல் எழுப்ப முடியாதிருக்கின்ற நிலையில், எமது தாயக மக்களின் பொங்குதமிழ் முழக்கமாக, புலம்பெயர் தமிழ்மக்களின் குரல் ஐ. நா. முன்றலில் ஒலிக்க பெருந்திரளாக திரண்டு வாருங்கள் என தனது அறைகூவலில் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விரிவான அறிக்கை :

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ம் திகதி நியூயார்க் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கூட்டத்தில் ஈழத்தமிழ் இனத்தின் மீதான இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே இரத்தம் தோய்ந்த கைகளுடன் உரை நிகழ்த்த இருக்கின்றார்.

அக்கொடுங்கோலன் வருகைக்கு எதிர்ப்புக் காட்டுவதுடன் சிறிலங்கா அரசின் தமிழ்ழினத்தின் மீதான இனப்படுகொலையை அனைத்து உலகத்துக்கும் அம்பலப்படுத்த வேண்டும். தமிழருக்கான நீதியினைக் கோரும் வகையில் பெரும் அளவில் திரண்டு எமது எதிர்ப்பினைக் காட்டவேண்டும். இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 'சங்கே முழங்கு' என்பதற்கேற்ப தமிழீழ விடுதலைக்கான சங்கநாதமாக எமது குரல் அங்கு ஒலிக்க வேண்டும். வட அமெரிக்கத் தமிழ் உறவுகள் உணர்வு எழுச்சியோடு, மகிந்தவுக்கு எதிர்ப்புக் காட்டுவதின் மூலம் உலகத்தின் முன்பு ஒரு போர்க் குற்றவாளியாகவும், இன அழிப்பு கொடுங்கோலனாகவும் முன் நிறுத்த முடியும்.

வட அமெரிக்கத் தமிழர்கள் மட்டுமன்றி உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவருமே தமது எதிர்ப்பினைக் காட்டி இன அழிப்புக்கு நீதி கோர வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குறிப்பாக ராஜபக்சேயின் இன அழைப்பினை அம்பலப்படுத்தி, ராஜபக்சேக்கு எதிரான வலுவான குரலினைப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் ஈழத் தமிழருக்கான பரிகார நீதியினை ஐ.நா. பொதுச் சபையின் முன் உறுதியுடன் கோருவதற்காக இந்த எழுச்சி ஓன்று கூடல் அமைய இருகின்றது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பங்கு பற்றுவதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளன. அத்துடன் கனடாவில் இருந்தும் பெருமளவில் மக்கள் பங்குபெற ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளன.

சிறிலங்கா அரசினால் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலைக்கு எதிராகப் தமிழீழத்தில் போர்க் குரல் எழுப்ப முடியாது இருக்கின்ற போதிலும் , எமது தாயக மக்களின் பொங்கு தமிழ் முழக்கமாக, புலம்பெயர் தமிழ் மக்கள் குரல் ஐ. நா. முன்றலில் ஒலிக்க வேண்டும். பெருந்திரளாக திரண்டு வாருங்கள். எமது எதிர்ப்பினைக் காட்டி 'நியூயோர்க் ஐ.நா.பொதுச்சபை முன் பொங்குதமிழ் எழுச்சியுடன் பெருந்திரளாய் அணிதிரள்வோம்.' என்ற வேண்டுகோளினை அன்புரிமையோடு விடுக்கிறேன் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Facebook)

Link to comment
Share on other sites

நியூ யோர்க்கில் மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் வட அமெரிக்க தமிழர்கள் அனைவரும் இணைய வேண்டும். - NCCT அழைப்பு

நியூ யோர்க்கில் ஐ. நா. முன்பாக செப்டம்பர் 24 அன்று நடைபெறும் இனப்படுகொலையாளன் மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அனைத்து தமிழ் அமைப்புக்களும் மற்றும் கனடா, அமெரிக்கா வாழ் அனைத்து தமிழ் அன்புறவுகளும் ஆதரவு நல்கி கலந்து கொண்டு எமது பொது எதிரிக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்க்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை அனைத்து கனடிய அமெரிக்க தமிழ் சமூகத்திடமும் அன்போடு வேண்டிக் கொள்கின்றது.

முள்ளிவாய்க்காலில் எங்கள் இனத்தை மிகக் கொடூரமாக அழித்த கொடிய இனப்படுகொலையாளர்கள் இன்று உலகில் சுதந்திரமாக பசுத்தோல் போர்த்து உலவுவதை உலகத் தமிழினம் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது. இன அழிப்பாளர்களின் போலியான முகத் திரைகளை உரித்து எங்கள் மண்ணில் தொடர்ச்சியான இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்த இத்தகைய எதிர்ப்பு கண்டனப் போராட்டங்களை வலிமைப்படுத்தும் தேவை காலக் கடமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலம் தமிழர்களின் வரலாற்றில் தன் இனம் அழித்த பொது எதிரிக்கு எதிராக போராடும் தளங்களில் ஒன்றாக இணைந்து போராடி மறுபடியும் வீறு கொள்ளவேண்டிய காலமாக வலிமை கொள்ள வேண்டியுள்ளது. உலகத் தமிழர்கள் கையில் எங்கள் இனத்துக்கான போராட்டங்கள் பல்முக வடிவில் பொறுப்போடு ஆற்றவேண்டிய கடனாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன அழிப்பாளருக்கு எதிரான இன விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களை இதய சுத்தியோடு கை கோர்க்க கனடிய தமிழர் தேசிய அவை என்றுமே முன் நிற்கும். அந்த வகையில் இந்த போராட்டத்திலும் எம் இனம் ஒற்றுமையோடு ஒன்றுபட்ட எழுச்சியின் வடிவமாக எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி எமது மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை அம்பலப்படுத்துவோம்.

(Facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.