Jump to content

மருதண்ணாக்கள் எங்கே போனார்கள்?


Recommended Posts

thenugastory_jpg_1601784h.jpg
படம்: கே.ஜீவன் சின்னப்பா

சின்ன வயது நாட்களில் என்னால் தவிர்க்க முடியாத ஒரு பெயர் மருதண்ணா. அன்றைய நாட்களில் சுவாமிமலையில், இருள் கவியும் வேளைகளில், பலப்பல… புதுப்புது உலகங்களை சிருஷ்டித்தவர் அவர். பின்னாளில் எனக்கு விஷயம் தெரிந்த காலந்தொட்டு எவ்வளவோ புரியாத விஷயங்களை நான் ஓடியோடித் தேடித்தேடிப் படித்தும் பார்த்தும் கற்றுணர்ந்தும் கண்டறிந்தும் இருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் இன்னமும் விடை தெரியாத - இன்னமும் மர்மம் விளங்காத விஷயங்களில் ஒன்று மருதண்ணா சொன்ன 'முறை தெரியாத கதை'.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம். அந்த ராஜாவுக்கு ஒரு இளவரசன் இருந்தானாம். ஒரு நாள் ராஜாவும் இளவரசனும் குதிரை மேலே ஏறிக் காட்டுக்குப் போனார்களாம். ஓர் இடத்தில் குதிரைகளுக்கு முன்பு இரு காலடித் தடங்கள் தெரிந்தனவாம். அந்தக் காலடித் தடங்கள் இரு பெண்களின் காலடித் தடங்கள் என்று யூகித்த ராஜா சொன்னானாம்: ‘பெரிய தடம் அழகான அம்மாவுடையதாக இருக்கலாம். சின்ன தடம் அழகான அவளுடைய மகளுடையதாக இருக்கலாம். நாம் இருவரும் அவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடிப்போம். பெரிய தடத்துக்குச் சொந்தக்காரியை நான் கட்டிக்கொள்கிறேன். சின்ன தடத்துக்குச் சொந்தக்காரியை நீ கட்டிக்கொள்.’ இளவரசனுக்கும் இது சரி எனப் பட்டது. இரண்டு பேருமாகச் சபதம் எடுத்துக்கொண்டு தேடினார்கள், காலடிக்குச் சொந்தக்காரிகளை. சில மணி நேரத்திலேயே கண்டுபிடிக்கவும் செய்தார்கள். ஆனால், ஒரு வேடிக்கை. பெரிய தடங்களுக்குச் சொந்தக்காரி மகளாக இருந்தாளாம். சின்னத் தடங்களுக்குச் சொந்தக்காரி தாயாக இருந்தாளாம். அதற்காக சொன்ன வார்த்தைகளை மாற்றிக்கொள்ள முடியுமா? முடிவெடுத்தபடி மகளை அப்பனும் தாயை மகனும் கட்டிக்கொண்டார்களாம். இதைச் சொல்லிவிட்டு மருதண்ணா கேட்பார்: “இப்போ ஒரு கேள்வி. இந்த இரண்டு தம்பதிக்கும் பிள்ளைகள் பிறந்தால், அந்தப் பிள்ளைகள் ஒருத்தரையொருத்தர் என்ன உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டுக்கொள்ளும்?”

இப்படி எண்ணிறைந்த கதைகள் மருதண்ணாவிடம் உண்டு.

விக்ரமாதித்தன் கதைகள், பரமார்த்த குரு கதைகள், காத்தவராயன் கதை, பேசாமடந்தை கதை, திரைச்சீலை சொல்லும் கதைகள், அவற்றுள் வரும் அண்டரண்ட பட்சிகளின் கதை, ராமாயண - மகாபாரதக் கதைகள்... நீங்கள் கடந்த தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையிலும்கூட இப்படிச் சில கதைகள் ஞாபகத்துக்கு வரும். உங்கள் வாழ்விலும்கூட மருதண்ணாவைப் போன்ற சில கதைசொல்லிகள் இருந்திருப்பார்கள். ஆனால், இப்போது அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்கள் சொன்ன கதைகள் எல்லாம் எங்கே போயின?

இன்றைக்கு உலகம் நவீனமாகிவிட்டது. சகல வசதிகளையும் விரல் நுனி தொடுதிரையில் பெறும் அதி அற்புத உலகமாகிவிட்டது. வகுப்பறையில் உலகப் படத்தில் நாடுகளையும் காடுகளையும் கடல்களையும் காண்பித்த காலம் மாறி, ‘கூகுள் எர்த்’மூலம் உலகத்தின் மாதிரி உருவத்தை உருட்டித் திரட்டி நம் கண் முன் காட்டிவிடுகின்ற உலகம் இது. ஒரு நிமிடத்தில் லட்சக்கணக்கான இணையதளங்களைத் தேடி, வேண்டிய தகவல்களை நம் முன் நிறுத்திக் காட்டுகின்ற வித்தியாசமான உலகம் இது. “இது குதூகலங்களைக் கொண்டாடும் அற்புத உலகம்” என்கிறார் எதிர்காலவியல் அறிஞர் ஆல்வின் டாப்ளர்.

ஆமாம். குதூகலங்களைக் கொண்டாடும் அற்புத உலகம்தான். அதனால்தான், பட்டி விக்ரமாதித்தன் கதையும் மதனகாமராஜன் கதையும் நொண்டி வீரன் கதையும் மதுரை வீரன் கதையும் பெத்தார்னா கதையும் விதுர நீதியும் இன்று தர்க்கத்துக்கு உரியவையாக மாறிவிட்டனவா? அறிவு சார்ந்த கேள்விகளால் இவை தேவையற்றவையாக மாற்றப்பட்டுவிட்டனவா?

உளவியல் அறிஞரான சிக்மண்ட் ஃபிராய்ட் கிரேக்கப் புராணக் கதைகளில் இருந்து ‘ஈடிபஸ்’கதையை வைத்தே மனிதனின் மனச் சிக்கலைக் காண்பித்தார். உலக அளவில் இன்றும் பேசப்படுகின்ற சிண்ட்ரல்லாவின் மனவியலை வர்ணிக்கும் கூறுகள் இன்றைய நவீன மனிதக் கூறுகளைக் காட்டுகின்றன. ஒருவேளை பிராய்ட், எரிக் எரிக்ஸன், ஆட்லர், யுங் போன்ற உளவியல் அறிஞர்கள், மரபார்ந்த நமது இந்தியக் கதை மரபுகளைக் கேட்டிருந்தால் மனித குணங்களை விவரிக்க இப்பாத்திரங்களின் பெயர்களைக்கூட அவர்கள் வைத்திருக்கக்கூடும். ஆனால், நமக்கோ எல்லாம் தேவையற்றவையாக மாறிவிட்டன.

கொடுத்தல், யார் கேட்டாலும் கொடுத்தல், எதைக் கேட்டாலும் கொடுத்தல், கொடுத்தலின் மூலமாகக் கிடைத்த தர்மங்களையெல்லாமும் தாரைவார்த்துக் கொடுத்தல் எனும் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றைக்கு நினைத்துப்பாருங்கள். இந்த நவீன உலகுக்கு கர்ணனின் கொடை ஏன் வேண்டாதது ஆகிவிட்டது என்று யோசித்துப்பாருங்கள். இந்த நவீன உலகம் ஏன் இவ்வளவு இரக்கமற்றுப்போய்விட்டது என்பதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும்.

அண்ணல் காந்தி தன் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசிவந்ததற்குக் காரணம், அவர் லண்டனில் படித்த பாரீஸ்டர் வக்கீல் படிப்பல்ல. தனது இளம்பிராயத்தில் கேட்ட ஹரிச்சந்திர புராணமும் தாய் - தந்தையர்களைக் காத்த சிரவணன் கதையும்தான். சத்ரபதி சிவாஜி வீர மகனாக உருவெடுத்ததற்குக் காரணம், சிறுபருவத்தில் அவருடைய அன்னை சொன்ன கதைகளே.

கதைகள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய படைப்புத் திறனுக்கு உயிர்கொடுக்கின்றன. உங்களுக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போகலாம். கொஞ்சகொஞ்சமாக அறக்கூறுகள் யாவும் அழிந்துவரும் இவ்வுலகில், எல்லாம் அற்றுப்போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில், நிர்க்கதியான சூழலில் பற்றிக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு பற்றுக்கோல் வேண்டும். அதற்காகவேனும் தயவுசெய்து கதைசொல்லிகளைத் தேடுங்கள்!

தேனுகா, மூத்த எழுத்தாளர், கலை விமர்சகர் -

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5184690.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும்.  பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை.  அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அறைவருக்கும் புரியும். 
    • இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த  வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய  பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில்.  கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய அரசாங்கத்தில் மகிந்த பிரதமராகவும் பஸில் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்று மக்களை படுகுழிக்குள் தள்ளினர். கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில முடிவுகளை தட்டிக்கேட்க முடியாது மகிந்த விளங்கினார். ஏனென்றால் அவரது மகன் நாமலுக்கு கோட்டாபய விருப்பிமில்லாமலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கினார். மறுபக்கம் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்கிய பஸில், மகிந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து அனைத்து அமைச்சுக்களையும் ஆட்டி வைத்தது போன்று செயற்பட ஆரம்பித்தார். இறுதியில் அனைவரையும் பதவியிறக்க அவர்களுக்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடும் போராட்டம் செய்து வருகின்றார். தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்விழுந்து விட்டதால் குறைந்தது பிரதமராகவாவது ஆக்கி விட வேண்டும் என்று முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதற்காக கட்சியில் உயர் நிலை பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்க்க முடிவு செய்தார். அதன் படி கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் அதற்கு ஆப்பு வைக்கும் முகமாக மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாமலுக்கு ஜனாதிபதியாவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது’ ஊடகங்களுக்கு கருதுத்து தெரிவித்து விட்டார். இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரசன்னவின் கருத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட பலர் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். இடையில் அரசியலுக்கு வந்த நாமல் ராஜபக்சவை அடுத்த மகிந்தவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மிக முக்கியமாக பஸில் ராஜபக்சவே நாமலை எதிரியாகத்தான் பார்க்கின்றார்.  மகிந்த அரசியலில் இருக்கும் வரை தான் நாமலுக்கு மரியாதை. அவர் ஓய்வு பெற்று விட்டால் கட்சிய. பஸில் ஆக்ரமிப்பார் அல்லது கலைத்து விடுவார். எனவே தள்ளாட்டத்துடன் பாராளுமன்றில் வலம் வருகின்றார் மகிந்த. தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஊடகங்களுக்கு கூறி வருகின்றார்.  பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் நாமல் ராஜபக்ச தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நடை உடை பாவனை மற்றும் தலை அலங்காரம் அனைத்திலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். எந்த உடை அணிந்தாலும் மறக்காமல் சிவப்பு சால்வையை கழுத்தில் போட்டுக்கொள்கின்றார்.  தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்துகின்றார். கம்பஹா மாவட்டம் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரகலய போராட்டத்துக்குப்பின்னர் , மொட்டு கட்சியில் யார் சென்றாலும் மக்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அம்மாவட்டத்தில் மொட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் முழுமூச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. முன்னாள் தேசிய அமைப்பாளர் பஸிலே இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். நாமலின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு போடலாம். மகன் நாமலை அரசியலில் உச்ச இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மகிந்த எடுத்த இறுதி முயற்சியே தேசிய அமைப்பாளர் பதவி. ஆனால் மகிந்த தனது ஆட்சி காலத்தில் தனது புதல்வர்களின் சுகபோக வாழ்வு, ஆடம்பரம், வீண் செலவு போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.  அந்த ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் படங்கள் இப்போது வலம் வந்து நாட்டு மக்களை எரிச்சலில் தள்ளியுள்ளன. எனவே அதற்கு நாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  எல்லாவற்றையும் விட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகும் ரணில் விக்ரமசிங்க இந்த நகர்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மகிந்த தரப்பினரை எதிர்கால அரசியலில் ஊக்குவிக்க விரும்பாதவராகவே உள்ளார். தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள நாமலுக்கு இந்நாட்டின் தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு தலைவராக உருவெடுப்பது சவாலான காரியம் என்றே கூறத் தோன்றுகிறது.  https://www.virakesari.lk/article/180916  
    • தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.   உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடதுசாரி கோட்பாடுகள் என்றும், அக்கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கம்யூனிச நாடுகள் என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன. 'மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் - துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இந்த 'உழைப்பு' இன்று மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது.   உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஒரு பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்' என்று உழைப்பாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ் குரல் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்துக்கு எதிராக பல கிளர்ச்சிகள் தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் பல்லாயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கிறங்கி போராடினர். இப்போரட்டத்தின் 3ஆம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதொரு கலவரத்துக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். இதுவே 1989ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் தினமாக உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ஆம் ஆண்டில் தொழிற்சங்க தலைவரான குணசிங்க தலைமையில் இடம்பெற்றது.  அதன் பின்னரே 1956ஆம் ஆண்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கருதி அன்றைய தினத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பொது விடுமுறையாக அறிவித்தார். 1891ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.ஈ. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருந்ததுடன் இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாகவும் அறியப்படுகிறார். இவ்வாறு உலக வரலாற்றிலும், இலங்கையின் வரலாற்றிலும் தொழிலாளர்கள் தினம்  போற்றுதலுக்குரியதாக அமைந்தாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனைக்குரிய விடயமாகிறது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, அரசியல் நலன் சார்ந்த மே தினத்தில் கூட்டத்தை நோக்கி தேசிய அரசியல் கட்சிகள் அனைத்து போட்டி போட்டுக்கொண்டு தலைநகர் கொழும்பில் இடங்களை ஒதுக்கிக்கொள்ள போராடுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம்  கொழும்பு - மருதானை சந்தியில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு கோரப்பட்ட இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இம்முறை மே தினத்துக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஆதரவாளர்களை கொழும்பு அழைத்து வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் மே தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக உள்ள எப்.ஆர். சேனாநாயக்க வீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணி அந்த இடத்தில் மே தின கூட்டத்தை நடத்தியிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த கோரிக்கைக்கு ஆரம்பத்தில் எவ்விதமான எதிர்ப்புகளும் அதிகாரிகளிடமிருநது வெளியாக வில்லை. ஆனால் இம்முறையும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை தருமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கும் அனுமதி கோரியுள்ளது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை கோரியுள்ளமையினால் இருதரப்புக்குமே குறித்த வீதியை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து  கொழும்பு மாநகர ஆணையாளர், மாற்று இடங்களை பெயரிட்டு அனுப்புமாறு அறிவித்துள்ளார். இவ்வாறு தமது அரசியல் பலத்தை காண்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போடுகின்றதே தவிர, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அல்ல. மேலும், வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமக்குள் செல்வாக்கை வெளிப்படுத்தவும் இந்த அரசியல் கட்சிகள் மே தின மேடைகளை பயன்படுத்துகின்றன. எனவே, முற்றிலும் அரசியல்மயப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினம், மீண்டும் சுதந்திரத்துக்கான போராட்டமாக மாற்றமடைவது அவசியமாகும்.   https://www.virakesari.lk/article/181851
    • பணம் சேர்க்க  வந்து விடுவார்    கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது   ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை   மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ?? 
    • ஆர்.பி.என். இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேசம் எங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்று தான் ஈவிரக்கமற்ற குண்டுத்தாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.     கிறிஸ்தவ மக்கள் அன்று ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரும் வகையில் காலை வேளை   தங்கள் பங்கு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், குண்டுகள் வெடித்துச் சிதறின.  வழிபாட்டிலிருந்த பலரும் அடுத்த கணம் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபகரமாக   மரணித்தனர். முதலில் இந்த சம்பவத்தை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. தேவாலயத்துக்குள் குண்டு வெடிக்குமா? என்று எண்ணிப்பார்க்க ஒரு கணம் மனம் தயங்கியது. ஆனாலும், தற்கொலைதாரிகள் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் எழுப்பியது.  எதற்காக இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன் தேவாலயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் சரியான விடை காண முடியாமல் உள்ளது. நடந்தது என்ன? உயிர்த்த ஞாயிறு தினமான 21 ஏப்ரல் 2019 அன்று நாடு முழுவதும் ஆறு இடங்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் சரியாக காலை 8.45 மணிக்கு ஏக நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.  இதில் மூன்று பிரதான தேவாலயங்களான கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோவில், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மட்டக்களப்பு தேவாலயம் என்பன அடங்கும். மற்றும் கொழும்பில் உள்ள மூன்று சொகுசு நட்சத்திர விடுதிகளான ஷங்க்ரி லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் டிராபிகல் இன் ஆகியவற்றிலேயே குண்டுகள் வெடித்தன.   குறித்த குண்டுவெடிப்பில் குறைந்தது 45 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர். 500 பேரளவில் காயமடைந்தனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள்  இதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மட்டக்களப்பு குண்டுவெடிப்பு இடம்பெற்ற குறித்த தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாட வந்த  குழந்தைகளால் தேவாலயம் நிரம்பி வழிந்திருந்தது. அந்தப் பச்சிளம் குழந்தைகளும் பலியானமை குறிப்பிடத்தக்கது.  தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? தாக்குதல்கள் நடந்த சிறிது நேரத்திலேயே,  உள்ளூர் தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) தான் காரணம் என்று கூறினர். மேலும், அதன் முக்கிய உறுப்பினரான சஹ்ரான் ஹாஷிம், குண்டு தாக்குதல்களின் தலைவனாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்து. பின்னர் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சஹ்ரான் தன்னைத்தானே குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.  நிலைமை இவ்வாறிருக்க, நாட்டில் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்கள் பதில் கூறவேண்டும் என்று குரல்கள் பலமாக ஒலித்தன. அந்த சமயம், ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்தார்.  மேலும், இந்திய அரசாங்கம் குறித்த சம்பவம் தொடர்பில், இலங்கைக்கு உளவுத் தகவல்களை வழங்கி இருந்ததாகவும், இருந்தும் இலங்கை  அதைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் தான் நாட்டில் பல்வேறு ஊகங்கள் வெளிவரத் தொடங்கின. நாட்டில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதைக் காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்ற இவர்களை கூலிப்படையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் துணிந்து எவரையும் விரல் நீட்ட எவருக்கும் திராணி இருக்கவில்லை. ஆயினும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் ஒரு சிறிய கோட்டுக்கு அருகே பெரிய  கோட்டை போட வேண்டிய தேவை  ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஆண்டவன் தீர்ப்பு! இதேவேளை, மக்களின் குருதியால் தேவாலயத்தின் சிலைகளையும் சுவர்களையும் நனைத்து அவர்களின் உயிரை நொடிப்  பொழுதில் குடிக்க காரணமானவர்களை நிச்சயம் ஆண்டவன் தண்டித்தே தீருவான். பாவம் செய்பவர்களுக்கும் சதி செய்பவர்களுக்கும் நிச்சயமாக ஆண்டவன் தீர்ப்பிலிருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வேதனையை கொட்டித்தீர்த்து கண்ணீர் வடித்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்பதே இன்றைய ஒரே நம்பிக்கையாகும். இந்த விதமான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை நினைவுகூரும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் காலை 8. 30 மணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டது. முன்னதாக உரையாற்றிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னைய  அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் உண்மையை தொடர்ந்து மூடி மறைத்து வருவதாக தெரிவித்தார். அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய சிலரைப் பாதுகாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக் கோரி பல கடிதங்கள் அனுப்பிய போதிலும் அவற்றுக்கு  இதுவரை  பதில் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.  தாக்குதல் தொடர்பில் இதுவரை நடந்தது என்ன?  போதுமான புலனாய்வு தகவல்கள் கிட்டியும் முன்னாள் ஜனாதிபதி தாக்குதலை தடுக்க தவறிவிட்டார் என்று மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது  உயர் நீதி மற்றம் குற்றம் சாட்டியது. முன்னாள் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து  குரல் எழுப்பி வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 12க்கும் மேற்பட்ட தடவைகள் விவாதிக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை. எதிர்வரும் காலங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடை பெற்றாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். சரத் வீரசேகர கூறுவது என்ன? முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பது அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  சரத் வீரசேகர குண்டுத்தாக்கல் சூத்திரதாரிகளை ஜே.வி.பி.க்கு தெரியும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கொழும்பில் கடந்த ஞாயிறு   நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், குண்டுத்தாக்குதல் தொடர்பில் தமது ஆட்சியில் நீதியைப்  பெற்றுக்கொடுப்பதாக கூறுகின்றனர். இது வேடிக்கையானது அவர்களின் தேசிய பட்டியல் உறுப்பினராகப் பெயரிடப்பட்டிருந்தவரின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாரியாக  செயல்பட்டவர்கள் மற்றும் அவரது மருமகள் தெமட்டகொட வீட்டில் வைத்து குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார்.  மேலும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக  நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை  பலவீனப்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.   தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எந்த தாமதமும் இல்லை. நீதிமன்ற கட்டமைப்பில் தாமதம் உள்ளது. தாக்குதல்  தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே புதிய தகவல்  தெரிந்தவர்கள் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனடிப்படையில், விசாரணைகள் அடுத்த நூறாண்டுக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் இவர்கள் கூறுவதைப் பார்த்தால் தாக்குதல் தொடர்பில் குறித்து மக்களுக்கு மாத்திரமே தெரியாதுள்ளது.  பாலித ரங்கே என்ன கூறுகிறார்! குறித்த சம்பவம் தொடர்பில் தெரிந்தோ, தெரியாமலோ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற குழுவினருக்காக செயற்பட்டுள்ளார். இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  கோத்தாபய ராஜபக்ஷவை நம்பி தாம் ஏமாந்து போனதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே பாலித ரங்கே பண்டார தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். நம்பிக்கை இழந்தவர்களாக மக்கள் இறுதி முயற்சியாக கத்தோலிக்க திருச்சபை, குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஏதுவாக, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்மொழிவை சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசம் எந்தளவு தூரம் கரிசனை கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. உலகின் பல்வேறு மனித உரிமை மீறல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தெரிந்ததே. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிக்கப் பட்டவர்கள் என எவருக்கும் தாக்குதலின் போதும் அதனைத் தொடர்ந்தும் பதவிக்கு வந்த அரசுகள் உரிய தண்டனை வழங்க முன்வரவில்லை. மாறாக மௌனம் காத்து வந்ததுடன் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிட்டன என்ற விரக்தி ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களின்  மனதில் ஆழமான  வடுவாக உள்ளது. இருந்தும் இறைவனின் தீர்ப்பு கால தாமதமானாலும்  நிச்சயம் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் அவர்கள் உள்ளார்கள்.    https://www.virakesari.lk/article/181975  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.