Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனைப் பார்த்து நீ கவிஞனா என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய
கவிதை:

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி... தன்குடும்பம்...
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

நன்றி: தமிழன் வழிகாட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி முகம், இந்தியா கொடி எல்லாத்தையும் விட...

அதில் இருக்கும் தமிழ்தான் பெரும் அழகு. 

மகிழ்ச்சி ❤️ dot

 
Muhilan Sv's photo.

 

Ñîthî Vãñãjãñ's photo.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் !
-------------

புரட்டப் புரட்டப் புதுகருத்து ஊறும் !
திரட்டத் திரட்டத் தித்திக்கும் தேன்தமிழ்,
வாழ்க்கை வழியின் நெறிகாட்டி நம்முடைய
ஊழ்விணையை மாற்றும் உயர்ந்து !

 
கவிஞர் அருணா செல்வம்'s photo.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச்சண்டை ஏற் பட்டது. அப்போது ஒருவன் மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான்.
ஆனால் அறை வாங் கியவன் அதற்கு கோபப் படாமல், அமைதி யாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்” என்று எழுதினான். அதைப் பார்த்த மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை.


அவர்கள் இருவரும் மீண்டும் நடந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். அங்கு சென்று அவர்கள் தண்ணீர் பருகிக்கொண்டிருந்தபோது, அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போல் இருந்தது. அவன் புதைக்குழிக்குள் சிக்கிக் கொண்டான்.


அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்துக்குப் பின் அவனை மேலே தூக்கிவிட்டான். மேலே வந்ததும் அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான்.
பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்த பெரிய கல்லின் மீது “இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்” என்று தட்டித் தட்டி எழுதினான்.
இதைப்பார்த்த நண்ப னுக்கு ஒன்றும் புரிய வில்லை. “உன்னை அறைந்த போது மண லில் எழுதினாய், இப்போது உன்னை காப் பாற்றிய போது கல் லில் எழுதுகிறாய். இதற்கு என்ன அர்த் தம்?” என்று கேட்டான்.


அதற்கு அறை வாங்கிய நண்பன், “யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும்.
அதுவே நமக்கு யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்தது அழியாது” என்று சொன்னான்.....
நல்லவை நிலைக்கட்டும்.தீயவை ஒழியட்டும்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13567345_633067953518518_758361184911060

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீண்ட வார விடுமுறை வாழ்த்துக்களோடு........இன்றைய தினம் தனது 149 ஆவது ஆண்டுக்குள் கால் பதிக்கும் கனேடி மண்ணிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் இந்த மண்ணிற்குள் கால் பதிக்கும் போது எனது தாய் மொழி தமிழைத் தவிர ஆங்கிலத்ததில் அதிக புலமை பெற்றவளாக வரவில்லை...ஆனால் இன்று மற்றவர்களிடம் எதற்கும் மண்ணியிட்டு நிற்காது வாழ்வதற்கு என்னை கல்வியிலும் சரி, மற்றும் விடையங்களிலும் சரி வளர்த்து விட்ட கனேடிய மண்ணிற்கு வாழ்த்துக்களை கூறி நிற்கின்றேன்....எனது தாய் நாட்டில் வாழ்ந்த காலத்தை விட கனேடிய மண்ணில் அதிக காலம் என்றும் சொல்லலாம். 13590440_320241898307256_427954448785333

13516382_320140028317443_561008070222181

1308774288.gif Bonne Fete Du Canada:)

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

நீண்ட வார விடுமுறை வாழ்த்துக்களோடு........இன்றைய தினம் தனது 149 ஆவது ஆண்டுக்குள் கால் பதிக்கும் கனேடி மண்ணிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் இந்த மண்ணிற்குள் கால் பதிக்கும் போது எனது தாய் மொழி தமிழைத் தவிர ஆங்கிலத்ததில் அதிக புலமை பெற்றவளாக வரவில்லை...ஆனால் இன்று மற்றவர்களிடம் எதற்கும் மண்ணியிட்டு நிற்காது வாழ்வதற்கு என்னை கல்வியிலும் சரி, மற்றும் விடையங்களிலும் சரி வளர்த்து விட்ட கனேடிய மண்ணிற்கு வாழ்த்துக்களை கூறி நிற்கின்றேன்....எனது தாய் நாட்டில் வாழ்ந்த காலத்தை விட கனேடிய மண்ணில் அதிக காலம் என்றும் சொல்லலாம். 

கனடாவிற்கு வாழ்த்துக்கள். எனக்குப் பிடித்த நாடுகளில் கனடாவும் ஒன்று.
யாயினியின்....  மகிழ்ச்சியில் நாமும், பங்கு கொள்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்னதாய்
கண்ட கனவுகள்
அனைத்தும்- சிதறிய
முத்துக்களாய்,
ஆங்காங்கே விழுந்து
காணாமல் போய்
விட்டன...

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆறு நேர்மையான பணியாளர்களை வைத்துள்ளேன் எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர்கள் கற்றுக் கொடுதததுதான். அவர்களின் பெயர்கள், ஏன்?எப்படி?எங்கு?எப்போது?என்ன? எவர்?

- ராட்யார்ட் கிப்ளிங்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சொக்கநாதப் புலவர் என்றொரு பழம்புலவர் ஒருவர். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் பாடல்களில் நல்ல நயமும், நய்யாண்டித்தனமும் காணப்படும். அப்படி ஒரு பாடலில் சிவபெருமானை நோக்கி கேட்பது போல் அமைந்த பாடல் ஒன்று.
சிவபெருமானை... தினமும் கல்லால் அடித்தார் ஒருவர் ( சாக்கிய நாயனார் ). அவருக்கு முக்தி தந்தார். அர்ச்சுனன் சிவபெருமானோடு சண்டையிட்டு, தன் காண்டீபம் என்னும் வில்லால் பெருமானை அடித்தான். அதையும் பெருமையாய் ஏற்றுக்கொண்டு, அவன் வேண்டியபடி அவனுக்கு பாசுபதாஸ்திரத்தை கொடுத்தார்.
கண்ணப்பர் நாயனார் தன் கண்ணை இடந்து அப்புவதற்கு அடையாளத்துக்காக , தனது செருப்பணிந்த காலையே சிவலிங்கத்தின் மீது வைத்தார். அதையும் மகிழ்வாய் ஏற்றுக் கொண்டு ககண்ணப்பருக்கு அருள்புரிந்து தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.
மதுரை பாண்டியன், வைகை ஆற்றின் சீற்றத்தை தணிக்க வேண்டி மணலால் கரைகளை எழுப்பப் பணித்தபோது , அப்பணியை செய்யாமல் திருவிளையாடல் செய்து, அப்பாண்டியன் கைப்பிரம்பால் அடி பட்டார் சிவபெருமான்.
பித்தனே, பேயனே என்று சாடிய சுந்தரரை தனது உற்ற நண்பனாக ஆக்கிக் கொண்டார்.
இத்தனையும் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு அருள் புரிந்த பெருமான், போயும் போயும் மன்மதன் தனது கரும்பு வில்லிலிருந்து, மெத்தென்ற மலர்களினால் ஆன அம்புகளை தன் மீது ஏவ முற்படுகையில் , அவனை சினந்து நோக்கி எரித்துச் சாம்பலாக்கினார்.
இது என்ன நியாயம் ? "....என்று கேட்கிறார் சொக்கநாதப்புலவர். நீங்களும் சொல்லுங்கள் இது என்ன நியாயம் என்று? ;-)
அந்தப் பாடல்...
 
செல்லாரும் பொழில் புடைசூழ் புலியூர் அம்பலவாண தேவா உம்மைக்
கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்து சாடும்
எல்லாரும் நல்லவர் என்று எண்ணி அருள் ஈந்தது என்ன விகழ்ச்சி ஒன்றும்
சொல்லாமல் மலரால் விட்டு எறிந்தவனைக் காய்ந்தது என்ன சொல்லுவீரே ".
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கல்லால் ஒருவன் அடிக்க .... கேட்டுப் பாருங்கள் நன்றாக இருக்கும்...!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 4: சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்தில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பல மதங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். 

இந்தியாவை பிரதிநிதியாக ஒருவர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பா கையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசா ன சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், 

வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட் படுத்தா மல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கி னார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பி யது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார்

அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற Datta குடும்பத்தில் உதித்தார்.

நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார். ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திர நாதர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். 

அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது. 

விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமதத்தின் பெருமைகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார்.

நன்றி-இணையம்

 
Vijayakumar Arunagiri's photo.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களால் மட்டும்தான்
==================

தீக்குச்சி இல்லாமலே
தீபங்கள் எரிவதை
பார்த்ததுண்டா?

புலர்வு இல்லாத
மலர்தலை கேட்டதுண்டா?

நெருப்பிற்குத்தான் தெரியும்
எழுந்து ஓடவோ
கொழுந்து விடவோ!

ஆனால் அது
சரித்திரம்
நீரிலே நெருப்பாகிறது!

கையில் பூக்கூடை
சுமந்துகொண்டு
நெஞ்சில் முள் குத்தியவலியுடன்
நடமாடுவது!

பூவரசு இலைபோலும்
பூப்போலும்
கொள்ளையழகு
கொலு வீற்றிருக்கும்
வீரமும் அழகு!

அதனால் என்னவோ
எங்கள் தமிழ்
பெண்கள்
தலையில் சூடிக்கொள்ளாமல்
நெஞ்சில் மூடிக்கொள்கிறார்!

நேற்றய நாளைவிட
இன்று சற்று
அதிகமான பூவாசம்
வண்டுகள் யாவும்
தேன் அருந்தா விரதம்
பூக்களின் மரபால்
ஒரு தோரணை
பூமிக் குயில்களுக்கு!

இது அவர்களால்
மட்டும்தான்
முடியும்!

நினைவுக் கண்ணாடியில்
அஞ்சலி முகம்பார்க்கின்றோம்
இந்த யுகத்தின்
எந்த கிட்லராலும்
கல்லெறிய முடியாது
எங்கள் நீள் நினைவில்
......ஈழநிலவன்

 
ஜெ.ஈழநிலவன் ஜெ.ஈழநிலவன்'s photo.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு 

[  Tuesday,5 July 2016, 07:47:43 ]  audio.png video1.png  
3f94ed33-13e8-4f8e-abac-37a1e75ce71a.jpg

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடும் இடத்தில் இன்று யூலை ஐந்தாம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 அளவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, மிகவும் உணர்வுபூர்வமாக கரும்புலிகள் நாள் நினைவு கூறப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இடத்திலுள்ள சுவரில் கரும்புலிகள் நாள் – 2016 என எழுதப்பட்டு கரும்புலி மில்லரின் உருவப்படம் வைக்கப்பட்டு அவற்றுக்கு முன்னால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கரும்புலிகள் நாள் நினைவுகூறப்பட்டடது.

பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ள இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் வெளியில் பரவியதை அடுத்து, இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நோக்கி அதிக கவனத்தை திருப்பியுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1987 ஆம் ஆண்டு யூலை ஐந்தாம் திகதி யாழ்ப்பாணம் நெல்லியடியில் முதலாவது கரும்புலியான கப்டன் மில்லர் என்றழைக்கப்பட்ட வல்லிபுரம் வசந்தன், இராணுவ டிரக் வண்டி மீது நடத்திய தாக்குதலே தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முதலாவது கரும்புலித் தாக்குதலாக அமைந்துள்ளது.

இதனையடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கரும்புலிகளை கௌரப்படுத்தும் வகையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை கப்டன் மில்லர் உயிர்நீத்த தினமான யூலை ஐந்தாம் திகதியை கரும்புலிகள் தினமாக விடுதலைப் புலிகள் பெரும் எடுப்பில் அனுஷ்டித்து வந்தனர்.

மறுமுனையில் கப்டன் மில்லர் உட்பட கரும்புலிகளை கௌரவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கரும்புலி நினைவுத் தினத்தில் ஸ்ரீலங்கா அரச படையினர் மீது பாரிய தாக்குதல்களை நடாத்தி வந்தனர். 

 

இதனால் ஸ்ரீலங்கா அரச படையினர் யூலை ஐந்தாம் திகதியை முக்கிய தினமாக கருதி உசார் நிலையில் வைக்கப்பட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்வழி நலனொடும்,
பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான்
எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி
வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர்
கள்வனே கொல் ஆம்.
- கம்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
July 6, 2014 · 
 
 
Nila Bharathi's photo.
 
July 6, 2014 · 
 

நடவாத கால்கள்............. 

வேர்க்கால்களை வைத்துக்கொண்டு 
வெட்டவரும்போது 
ஓடாமல் 
மண்ணைபிடித்துக்கொண்டு நிற்கிறதே.........  
என்ற வருத்தத்தில் 
உதிர்ந்து சரிகின்றன 
இலைகளோடு கிளைகளும்..!!!

கவிதாயினி நிலாபாரத

நடவாத கால்கள்............. 

வேர்க்கால்களை வைத்துக்கொண்டு 
வெட்டவரும்போது 
ஓடாமல் 
மண்ணைபிடித்துக்கொண்டு நிற்கிறதே.........  
என்ற வருத்தத்தில் 
உதிர்ந்து சரிகின்றன 
இலைகளோடு கிளைகளும்..!!!

கவிதாயினி நிலாபாரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பத்து பிள்ளைகள் இருந்தால் எவ்வளவு சந்தோசம்...??

 
Sahana Sahana's photo.
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.