Jump to content

நினைவழியாத்தடங்கள் - தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி.....!


Recommended Posts

நினைவழியாத்தடங்கள் - தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி.....!

 

இத்தலைப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும வாணன் என்ற எழுத்தாளனை நிச்சயம் நினைவு வரும் ஏனெனில் யாழ்களத்தில் தனது போராட்டகால அனுபவங்களை எழுதிக்கொண்டு வந்தவர். திடீரென வாணனின் எழுத்துக்கள் பற்றியும் புலம்பெயர்ந்து வாழும் போராளிகள் பற்றி பலர் போராளிகளை நோகடிக்கும் கருத்துக்களை எழுதியதோடு களத்தைவிட்டு பல போராளிகள் நீங்கிப்போனார்கள். மீண்டும் எழுதும் எண்ணத்தையும் கைவிட்டார்கள். அவர்களில் ஒருவரான வாணன் பால்ராஜ் அண்ணா பற்றி எழுதிய நினைவு இது. வாணணின் எழுத்தை நேசிக்கும் கள உறவுகளுக்காக இங்கு பகிர்கிறேன்.

 

 

தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி.....!
 
balraj+05.jpg
ஈழத்தமிழ்மக்களின் வீரம் செறிந்த ஆயுதவழி விடுதலைப்போராட்ட வரலாறு ’பிரபாகரன்’ என்னும் தனிமனித ஆளுமையைச் சுற்றித்தான் பதியப்படுகின்றது. தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடைய ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த தலைவர், தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக, தியாகமும் தேசப்பற்றுறுதியும் கொண்ட இளைஞர்களை அணிதிரட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தைக் கட்டி வளர்த்தார். தமிழினத்தை ஒரு இரங்குதலுக்குரிய இனமாக அல்லாமல் வலுமிக்க இனமாக மாற்றினார். புதிய வகையான கெரில்லா இராணுவ அத்தியாயத்தை உருவாக்கினார்.

உலகத்தின் பலநாட்டு இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும், நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களையும் கொண்டு நவீனமயப்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தை மட்டுமன்றி, உலகின் நான்காவது வல்லரசான இந்திய இராணுவத்தையும் இலகு, கனரக ஆயுதங்களுடனும் பீரங்கிகளின் துணையுடனும் எதிர்கொண்டு பலவெற்றிகளைப் ஏன் உலகத்தின் ஆதரவின்றி, பல்வேறு தடைகளையும் அழுத்தங்களையும் மீறி தனித்து நின்று, தமது மக்களின் ஆதரவுடன் நீண்டகால ஆயுதவழிப் போராட்டத்தை கொண்டு நடாத்தியதானது தலைவரின் தன்நம்பிக்கையான தலைமைத்துவத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடாகும்.

தலைவர் தமிழ்மக்களின் சுதந்திரம் என்ற ஒரே சிந்தனைப்பாதையில் தடம்புரளாது, விடுதலைப்பாதையில் இருந்த தடைக்கற்களை தகர்த்தெறிந்து, சுபீட்சமான அரசியல் விடுதலை என்ற ஒரே இலக்கை மட்டும் நோக்கி நடந்தார். விடுதலைக்காக தேர்ந்தெடுத்த பாதையின் நியாயத்தன்மையில், தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பல்லாயிரக்காணக்கான தமிழ் இளைஞர்கள் அவர் வழி பின்தொடர்ந்தார்கள். சுதந்திர வேட்கையுடன் இணைந்த அத்தனை இளைஞர்களையும் சிறந்த போராளிகளாக்கினார். அதிலிருந்து பல தளபதிகளையும் போர்வீரர்களையும் பல்துறை ஆற்றலுள்ளவர்களையும் உருவாக்கிரூபவ் மாபெரும் விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பினார்.

விடுதலைப்புலிகள் இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டு  சமாதான உடன்பாட்டிற்கு வந்தது. இது விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளின்  மிகமுக்கியமான அடைவாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின்  இராணுவ வெற்றிகள் என்பது புதிய மூலோபாயத் தாக்குதல்கள், தற்துணிவான தாகக்குதல்கள், கடுமையான உழைப்புகள, அற்பணிப்புகள், தியாகங்கள் என்பவற்றின் அடித்தளத்திலிருந்தே உருவாகியது. விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகள் என்பது சாதாரணமானவையல்ல.

பல சந்தர்ப்பங்களின் எதிரியிடம் இருந்து இராணுவ உபகரணங்கள் கைப்பற்றி அவற்றை வைத்தே சண்டைகளை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் எற்பட்டபோது அதை ஒரு தந்திரோபயாமாக கைக்கொண்டு வெற்றி பெற்றனர். இவ்வாறு பலவகையான இடர்பாடுகளுக்கிடையில் வளர்த்தெடுக்கப்பட்டது தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கமும் அதன் இராணுவ வெற்றிகளும். எனவே விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளும் தந்திரோபாயங்களும் விடுதலைக்காக ஆயுதவழி போராடும் இனங்களிற்கான ‘போரியல் இலக்கணம்’ என்றும் கூறமுடியும்.

உலகவரலாற்றுகளில் பலர் தம்முடைய தனித்துவமான செயற்பாட்டால் தமக்கான தனிமுத்திரையை பதித்துவிடுவார்கள்.  அவர்கள் அந்த வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் பாரிய பங்கையும் வகிப்பார்கள். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் இராணுவ வரலாற்றையோ அன்றி முத்தாய்ப்பான சமர்க்களங்களைப் பற்றி எழுதவேண்டுமாயின் “சமர்க்களங்களின் நாயகன்” ”போர்க்கலை வல்லுனர்” ”போரியலின் குறியீடு” போன்ற சொற்தொடர்களால் விழிக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பெயரின்றி சாத்தியமாகாது. வியக்கத்தக்க இராணுவ வெற்றிகளையும் புதிய மூலோபாயத் தாக்குதல்களையும் மேற்கொண்டு, விடுதலைப்புலிகளின் இராணுவத்தை மரபுவழி இராணுவமாக மாற்றியதுடன் முன்னுதாரணமான தளபதியாக விளங்கிய, 21 ம் நூற்றாண்டின் தன்னிகரில்லாப் போர் வீரனும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ‘என்னையும் விஞ்சிய போராளி’ என வியந்த, நம்பிக்கைக்குரிய போர்த்தளபதிகளில் ஒருவருமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப்பற்றி ஒரு பதிவு செய்வது சாலச்சிறந்தது மட்டுமன்றி தமிழினம் பெருமைப்படவேண்டியதொன்றாகும்.

இந்த இடத்தில் தளபதி பால்ராஜ் அவர்கள் ஏன் சிறப்புப் பெறுகின்றார் என்ற கேள்வி எழுவது நியாயமானது. பால்ராஜ் அவர்கள் கெரில்லா அமைப்பு என்ற நிலையிலிருந்து மரபுவழி இராணுவாக மாற்றமடைந்ததன் நாயகனாக வாழ்ந்தவர். அவர் அறிமுகப்படுத்திய  தாக்குதல் முறைகளினால், மாறுபட்டதாக்குதல் உத்திகளால், போர்க்களத்தின் மத்தியில் நிற்று வழிநடாத்தும் வீரத்தலைமைத்துவத்தால், தற்துணிவாக செயற்பாட்டால், போரிட்டுக் கொண்டே கட்டளையிடும் பண்பால், ஆக்கிரமிப்பாளர்களிற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியதுடன் விடுதலைப்புலிகளின் இராணுவ வரலாற்றில் முதலாவதாக நிகழ்த்தப்பட்ட பல வெற்றித்தாக்குதல்களின் தலைமைத் தளபதியாய் செயற்பட்டமை என்று  பலவற்றை சொல்லமுடியும். இவையே அவரை சிறப்புக்குரிய தளபதியாக முன்னிறுத்திக்காட்டியது.

விடுதலைப்புலிகளின் இராணுவத்தாக்குதலில்களில் முதலாவதாக நடைபெற்ற பல தாக்குதல்களை வழிநடாத்திய வீரத்தளபதியாய் பயணித்த தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றிய  பதிவை முடிந்தளவிற்கு  பதியலாம் என நினைக்கின்றேன்.

தொடரும்.............!

வாணன்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திடீரென வாணனின் எழுத்துக்கள் பற்றியும் புலம்பெயர்ந்து வாழும் போராளிகள் பற்றி பலர் போராளிகளை நோகடிக்கும் கருத்துக்களை எழுதியதோடு களத்தைவிட்டு பல போராளிகள் நீங்கிப்போனார்கள்
இப்படியான் ஒரு குற்றச்சாட்டை யாழ்கள உறுப்பினர்கள் மீது வைப்பது சரியில்லை...தொடர்ந்து போரட்டத்திற்கும்,போராளிகளுக்கும் ஆதரவாகதான் யாழ்களத்தில் பலர் குரல் கொடுத்தார்கள்....
Link to comment
Share on other sites

இப்படியான் ஒரு குற்றச்சாட்டை யாழ்கள உறுப்பினர்கள் மீது வைப்பது சரியில்லை...தொடர்ந்து போரட்டத்திற்கும்,போராளிகளுக்கும் ஆதரவாகதான் யாழ்களத்தில் பலர் குரல் கொடுத்தார்கள்....

ஒருசிலர்தான்.. ஆனால் அந்த ஒருசிலரே போதும்.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசிலர்தான்.. ஆனால் அந்த ஒருசிலரே போதும்.. :o

 

பல கள முனைகளைக் கண்ட போராளிகள் ஒரு சிலரின் கருத்துக்களுக்கு முகம் கொடுக்கமுடியாமல் யாழ் களத்தை விட்டுச் சென்றார்கள் என்பது நம்ப முடியாமல்  இருக்கின்றது.

 

Link to comment
Share on other sites

இப்படியான் ஒரு குற்றச்சாட்டை யாழ்கள உறுப்பினர்கள் மீது வைப்பது சரியில்லை...தொடர்ந்து போரட்டத்திற்கும்,போராளிகளுக்கும் ஆதரவாகதான் யாழ்களத்தில் பலர் குரல் கொடுத்தார்கள்....

 

ஒருசிலர் அல்ல புத்தன் ஒரு குழுமமாக வட்டம் கட்டி தாக்கயதை மறந்துவிட்டீங்களோ ? கடைசிவரை உயிரைக் களத்தில் பணயம் வைத்து போராடியவர்கள் உயிர் தப்பி புலம்பெயர்ந்ததே மாபெரும் துரோகமாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் சந்தேகத்துக்குரியவர்களாககவுமே பார்க்கப்பட்டு களத்தைவிட்டு அவர்களாகவே நீங்கும் அளவு காயத்தை கொடுத்த சிலரின் காயம் தான் யாரையும் திரும்பி வரவிடவில்லை.

பல கள முனைகளைக் கண்ட போராளிகள் ஒரு சிலரின் கருத்துக்களுக்கு முகம் கொடுக்கமுடியாமல் யாழ் களத்தை விட்டுச் சென்றார்கள் என்பது நம்ப முடியாமல்  இருக்கின்றது.

 

 ஈரமும் அதனோடு கூடிய வீரமும் மிக்க வித்தியாசமானவர்கள்  என்றுதான் காலம் எழுதிய கதைகளில் போராளிகள் கதைகளும் வாழ்வும் அமைந்தது. ஆனால் போராளிகள் உடையாத இரும்பு அல்ல. 
 
மாபெரும் வெற்றிகளை தரும் வல்லமை படைத்த உயிராயுதங்களுக்கும் கூட சின்ன ஊசியின் வலி பெரியது. மனிதர்களிலிருந்து தான் போராளிகளும் உருவாகினார்கள். 
 
நம்புவது கடினம் தான் ஆனால் நம்பியே ஆக வேண்டும் ஏனெனில் எல்லாம் நிசம்.
Link to comment
Share on other sites

வாணன் என்ற எழுத்தாளனை எனக்கு பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசிலர் அல்ல புத்தன் ஒரு குழுமமாக வட்டம் கட்டி தாக்கயதை மறந்துவிட்டீங்களோ ? கடைசிவரை உயிரைக் களத்தில் பணயம் வைத்து போராடியவர்கள் உயிர் தப்பி புலம்பெயர்ந்ததே மாபெரும் துரோகமாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் சந்தேகத்துக்குரியவர்களாககவுமே பார்க்கப்பட்டு களத்தைவிட்டு அவர்களாகவே நீங்கும் அளவு காயத்தை கொடுத்த சிலரின் காயம் தான் யாரையும் திரும்பி வரவிடவில்லை.

ஈரமும் அதனோடு கூடிய வீரமும் மிக்க வித்தியாசமானவர்கள் என்றுதான் காலம் எழுதிய கதைகளில் போராளிகள் கதைகளும் வாழ்வும் அமைந்தது. ஆனால் போராளிகள் உடையாத இரும்பு அல்ல.

மாபெரும் வெற்றிகளை தரும் வல்லமை படைத்த உயிராயுதங்களுக்கும் கூட சின்ன ஊசியின் வலி பெரியது. மனிதர்களிலிருந்து தான் போராளிகளும் உருவாகினார்கள்.

நம்புவது கடினம் தான் ஆனால் நம்பியே ஆக வேண்டும் ஏனெனில் எல்லாம் நிசம்.

அக்கா மன்னிக்கவும் நீங்கள் மேலே எழுதிய கருத்தை எழுதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்குது?... 2,3 வருடங்களுக்கு முன்பு இதே யாழிலும்,திண்ணையிலும் ஒரு போராளியை நீங்கள் அவமதிக்கவில்லையா?/ஏளனப்படுத்தவில்லையா?...அதை எல்லாம் மீறி தொடர்ந்து எழுதியது அவரின் தைரியத்தையும்,எழுத முடியாமல் ஓடியது வாணனின் கோழைத்தனத்தையும் காட்டுகிறது.அந்த நேரத்தில் நீங்கள் செய்தது சரி என்டால் இப்ப இவர்கள் செய்கிறதும் சரி தான்...கருத்துக்கள்ம் என்டால் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.