Jump to content

சென்னை - சிங்காரமா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக அற்புதமான புகைப்படக்கலை, இந்தப்படங்களை பிடித்தது நீங்களா? பில்டர்களின் துணையுடனா இப்புகைப்படங்களைப்பிடித்தீர்கள் குறிப்பாக சூரிய கதிர்கள் ஆதிக்கம் செலுத்தும் நீல வானம் சாத்தியமே இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக அற்புதமான புகைப்படக்கலை, இந்தப்படங்களை பிடித்தது நீங்களா? பில்டர்களின் துணையுடனா இப்புகைப்படங்களைப்பிடித்தீர்கள் குறிப்பாக சூரிய கதிர்கள் ஆதிக்கம் செலுத்தும் நீல வானம் சாத்தியமே இல்லை.

 

ஹி..ஹி! அப்படி சொல்லிக்கொள்ள ஆசைதான்.. ஆனால் படம் பிடித்தது நானல்ல..

புகைப்படங்களை ரசிக்கும் ஆர்வத்தால் இணையத்தில் உலாவும்போது இப்படி படங்கள் கிட்டும், சுட்டு கணணியில் சேமித்துகொள்வேன்.. பின்னாளில் உங்களை மாதிரி ரசிப்பதுண்டு.. இந்த படங்களை உற்று கவனித்தால் போட்டோஷாப் மென்பொருளின் மெருகூட்டல் நன்றாக விளங்கும்.

கருத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி வசீ.

 

Link to comment
Share on other sites

  • 7 months later...

ஐயோ! சாமி! போதும்டா சென்னை வாழ்க்கை

சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கியுள்ள, திருமணம் ஆகாத இளைஞர்கள் முதல் குடும்பங்கள் வரை, நகரில் இருந்து வெளியேறி, சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். சென்னை நகரில் வாடகை அதிகம் என்பதால், பலர் புறநகர்களிலும், வாடகை குறைவான பகுதிகளிலும் வசிக்கின்றனர். குறிப்பாக, திருவொற்றியூர், வில்லிவாக்கம், வேளச்சேரியின் ஒரு பகுதி, தாம்பரம் ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.

சமீபத்திய மழை வெள்ளம், அவர்களை மனதளவிலும், பொருளாதார ரீதியிலும்
அதிகளவில் மிரட்டி இருக்கிறது. வீட்டு உபயோக பொருட்கள் பெருமளவு சேதம் அடைந்து
உள்ளன. விளைவாக, இந்த பகுதிகளில் வாடகைக்கு குடியிருப்போர் அங்கிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளனர். வாய்ப்பு உள்ளோர், வெளியேற துவங்கி உள்ளனர்.

திருவொற்றியூரில்...:திருவொற்றியூரில் வசிப்போர், கடந்த 20 ஆண்டுகளாக இந்த பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை அவர்களில் கணிசமானோர் அந்த பகுதியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.அங்கு தங்கியுள்ள இளைஞர்கள், தங்கள் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, திருவொற்றியூரில் வசிக்கும் ஆர்.சுரேஷ், 23, கூறியதாவது:

இருசக்கர வாகனம் தயாரிக்கும், தனியார் நிறுவனத்தில், ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறேன். இங்கு வாடகை அதிகமாக உள்ளது. திருமணமாகாத இளைஞர்களின் நிலை பரிதாபம்தான். முன் அனுபவத்திற்காக, சொற்ப வருமானத்தில், குடும்பத்தை பிரிந்து, இங்கு தங்கி பணிபுரிந்தேன். சமீபத்தில் பெய்த மழையால், ஐந்து நாட்களாக, பணிக்கு செல்லவில்லை. இதனால், சம்பளம் பிடிக்கப்பட்டு, வாடகை கொடுக்க முடியாமல், திணறி வருகிறேன்.
சென்னை என்றால் தார் சாலை, அடிப்படை வசதி இருக்கும் என, நினைத்தேன். ஆனால், மழையால் சென்னையின் முகம் மாறியது. இந்த பகுதியை சுற்றியுள்ள மழைநீரால், அடுத்த தெருவிற்கு கூட, செல்ல முடியவில்லை. மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சாலைகளில் தேங்கி கிடக்கிறது. பள்ளம் இருப்பது தெரியாமல், விழுந்து எழ வேண்டியுள்ளது. அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. சென்னையை விட்டு, சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

வேளச்சேரியில்...:கனமழையால், வேளச்சேரி, தரமணி, மடுவாங்கரை, ஆதம்பாக்கம், நிலமங்கை நகர் பகுதிகளில், ௨,௦௦௦க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. முக்கிய பொருட்களை உயரமான இடங்களில் வைத்துவிட்டு, உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கினர். தெருக்களில் நீர் வற்றியதை அறிந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பினர். வீட்டில் தேங்கிய நீரை வெளியேற்ற, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, வீட்டை சுத்தம் செய்கின்றனர்.

இந்த நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட, வேளச்சேரி, நிலமங்கை நகர், மடுவாங்கரை பகுதிகளில், வாடகைக்கு குடியிருந்தோரில் பலர், வீட்டை காலி செய்ய முடிவு செய்துஉள்ளனர்.
அதனால், பல வீடுகளில், 'வீடு வாடகைக்கு' பலகைகள் தொங்கவிடப்பட்டு உள்ளன. ஆனால், குத்தகை முறையில் குடியிருந்தோருக்கு, பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், சில மாதங்கள் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத, மடுவாங்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: மனைவி, ஆறு மாத குழந்தையுடன் தரைத் தளத்தில், 6,500 ரூபாய் வாடகையில் குடியிருக்கிறேன். வீட்டு உரிமையாளர் முதல் மாடியில் உள்ளார். அவரிடம், 'மாற்று ஏற்பாடு ஏதாவது செய்யுங்கள்' என, கேட்டபோது, 'இரண்டு நாள் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிவிட்டு வாருங்கள்; தெருவில் நீர் வற்றிய பின் சொல்கிறோம், வாருங்கள்' என, மனசாட்சி இல்லாமல் கூறினார். திரும்பி வந்து, சுத்தம் செய்ய 4,500 ரூபாய் செலவு செய்திருக்கிறேன். வீட்டை காலி செய்வதாக கூறிவிட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தரைத் தளத்துடன் இரண்டு மாடி வீடு கட்டியோரில் பெரும்பாலோர், தரை மற்றும் முதல் மாடியை வாடகைக்கு விட்டு, இரண்டாவது மாடியில் வசிக்கின்றனர்.
தரைத் தளத்தில் குடியிருந்த பலர், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர். வீட்டில் புகுந்த நீரை வெளியேற்றும் பணியை, வாடகைதாரர்களிடம் விட்டுவிட்டதால், வீட்டு உரிமையாளர்கள் மீது வாடகைதாரர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர். வீட்டை காலி செய்ய, அதுவும் பிரதான காரணம், என, பாதிக்கப்பட்டோர் கூறினர்.

வில்லிவாக்கத்தில்...வில்லிவாக்கம் சிட்கோ நகரில், சில பகுதிகளில் இன்னும் மழை வெள்ளம் வடியவில்லை. வடிந்த இடங்களிலும், வீடுகளை சுத்தம் செய்து குடியேறுவதில், பொருளாதார சிக்கல் உட்பட பல சிக்கல்கள் நிலவுகின்றன.பல இடங்களில் வாடகைக்கு வசித்தோர், வீடுகளை காலி செய்து சென்று விட்டதாக, வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம்பரத்தில்...:தாம்பரம் அதன் சுற்றுவட்டாரங்களில் வாடகைக்கு வசிப்போரை, இந்த மழை வெள்ளம் ரொம்பவே மிரட்டி இருக்கிறது. ஆண்டுதோறும் இதுபோல மழை வந்தால் தங்களால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். அதனால், வாடகை வீடுகளில் இருந்து காலி செய்து, தங்கள் சொந்த ஊர் உள்ள தென்மாவட்டங்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

எங்கள் பகுதியை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட தாழ்வான நகர் பகுதிகள் உள்ளன. குறைந்த வாடகை என்பதால், இங்கு வந்தோம். ஆனால், மார்பளவு மழைநீரில், வாய் பேச முடியாத என் மனைவி, குழந்தையை வைத்துக்கொண்டு, மிகவும் கஷ்டப்படுகிறேன். மழைநீர் சூழ்ந்ததால், அருகில் உள்ள கடையின் வாசலில், குடும்பத்துடன் படுத்துள்ளேன். வேறு வீடு மாறலாம் என்றாலும், 10 ஆயிரம் ரூபாய் வரை, முன்தொகை கேட்கின்றனர்.

மு.முகமது அலி, ராஜாஜி நகர், திருவொற்றியூர்

வாடகை வீட்டில், நான்கு ஆண்டுகளாக வசிக்கிறேன். இதுபோன்ற வெள்ளத்தை, இதற்கு முன் பார்த்ததில்லை. வீட்டில் ஐந்து அடி வரை, நீர் தேங்கியுள்ளது. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், 'டிவி' என, அனைத்தும் நாசமாகின. துணிகள் அடித்து சென்றன. ஆண்டுதோறும், இந்த பிரச்னை இருக்கும். நான் கொடுத்த முன்பணம், உடனே கிடைக்குமா என, தெரியவில்லை. அதற்காக காத்திருக்கிறேன். கிடைத்ததும், இங்கிருந்து காலி செய்துவிடுவேன்.

எஸ்.தங்கராஜ், 30 பி.டி.சி., குடியிருப்பு, வரதராஜபுரம், முடிச்சூர்

http://www.dinamalar.com/district_detail.asp?id=1391915

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கூவம் பற்றி யாரோ கேட்டிருந்தார்களே. இன்னும் நீங்கள் துப்பறியவில்லையா ?? இந்தப் படத்தில் ஓடும் ஆறு எது ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கூவம் பற்றி யாரோ கேட்டிருந்தார்களே. இன்னும் நீங்கள் துப்பறியவில்லையா ?? இந்தப் படத்தில் ஓடும் ஆறு எது ??

கூவம் என்ன பாவம் செய்த்தது? துப்பறிந்து அறிக்கை கொடுக்க? கூவத்தை சுயநல விசமிகள் சீரழித்துள்ளனர்.. அந்த படங்கள், காணொளிகள் நிறைய இருக்கின்றன.. நேரம் கிட்டும்பொழுது போடுறேன்..(எனக்கு அலுவலகத்திற்கு 5 நாட்கள் விடுமுறை, சற்று ஓய்வாக யாழ்களம் பக்கம் வந்தேனம்மா..)

மேலே நான் இணைத்தது, அடையாறு நதியின் மீது கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மழையுடனாவது கூவம் சுத்தமாகி இருக்காதா என்ற ஒரு நப்பாசையில் தான் கேட்பது அண்ணா   Happy smiley face Stock Vector - 21315984

பிறகு விடுமுறையைக் கான்சல் செய்துவிட்டு வேலைக்குப் போய்விடாதீர்கள். இனி நான் கேட்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவம் நறுமணம் வீசுது , நகரம் நாறிப் போச்சு , சென்னை ஏரியா இப்ப ஒரே ஏரியாக் கிடக்கு ....!

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

வட சென்னை, எண்ணூர் கழிமுகம் தாண்டிய பகுதி..

 

 26264301932_2d841d4cb2_b.jpg

25751849214_3935d7b2d6_b.jpg

26290473621_e6485b2957_b.jpg

26264310342_7718708fcf_b.jpg

 

ஒரு காலத்தில் நாற்றம் பிடித்த இக்குளம், சுத்திகரிக்கப்பட்ட பின் 'சேத்துப்பட்டு ஏரி'யாக படகு சவாரி..

 

27437472143_38c4afd527_b.jpg

28051449735_2b6a6f44a4_b.jpg

25426456924_3ba77008ba_b.jpg

25938565392_d9391c0736_b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10552386_330474207116093_685896945818542

பழைய  சென்னை மத்திய ரயில் நிலையம்.

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen gehen spazieren und im Freien

1970´களில்  Mount Road-Blacker’s Road crossing. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

1961´ல் சென்னை கொத்தவால் சாவடியின் தோற்றம். 

#####

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel und im Freien

1970´களில் ஜெமினி பிரிட்ஜ் கட்டப்பட்டு கொண்டு இருந்தபோது எடுத்த படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

1953´ல் TRAM வண்டிகள் சென்னையில் நிறுத்தப்பட்டு விட்டன. 
அண்ணா சாலை தி ஹிந்து அலுவலகம் முன்பு, கிரிகெட் ஸ்கோர் கேட்க காத்திருக்கும் கூட்டம். 1953 க்கு முந்திய படம்,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

1973´ல் கல்லூரி மாணவர்கள், பேருந்தில் பயணம் செய்யும் காட்சி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.