Jump to content

இபோலா வருகுது ஓடுங்கோ அக்கா ஓடுங்கோ...!! (குட்டிக்கதை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னடி மாலா.. திரும்பவும் வீடு மாறப் போறியே. சமான் சக்கட்டை எல்லாம் கூட்டிக் கட்டி வைச்சிருக்கிறா என்ன சங்கதி. அதுவும் இப்ப கவுன்சில் வீடு எடுக்கிறதும் கஸ்டமான நேரத்தில.....

 

வாங்கோ.. ரேவதி அக்கா. இப்பதான் வந்தனியளோ.

 

ஓமடி. பிள்ளையளை சுவிமிங்கில விட்டிட்டு.. இஞ்சால வந்திட்டு போவம் என்று வந்தால்.. உன்ர வீடு இப்படியாக் கிடக்கு. என்ன வீட்டுக்காரனோட பிரச்சனையே..?!

 

வீட்டுக்காரன்.. பறுவால்லை அக்கா. 1200 பவுன் வாடகை வாங்கிக் கொண்டு.. 200 பவுன் கையில வாங்கிறார். மற்றவை இதே வீட்டுக்கு 1300 பவுன் வாடகையும் கையில 300.. 400 பவுனும் கேக்கினம்.  அந்த வகையில இந்தாள் பறுவாயில்லை....

 

அப்ப என்ன தான் பிரச்சனை உனக்கு. அடிக்கடி வீடு மாறிறதே வேலையாப் போச்சு. என்ன மகளுக்கு கச்மெண்ட் ஏரியா பாத்து வீடு மாறிறியோ..??!

 

மகளுக்கு கச்மெண்ட் ஏரியா பார்க்கல்ல அக்கா. அவளுக்கு இதுக்குள்ளேயே நல்ல கேர்ள்ஸ் ஸ்கூல் கிடைச்சிட்டுது.

 

எப்பயடி.. எனக்குச் சொல்லேல்ல...

 

அது இப்ப கீ ஸ்ரேஜ் 2 சட்ஸ் றிசல்ட் வந்திச்சு எல்லோ. அப்பவே எல்லாம் குடுத்து.. புது ஸ்கூலும் போய் பார்த்திட்டு வந்திட்டாள். அது பிரச்சனை இல்லையக்கா.

 

அப்ப என்ன தான் பிரச்சனையடி....

 

அது வந்து பக்கத்து வீடுகள் இரண்டும்.. காப்பிலியள். அதுகள் தான் பிரச்சனை.

 

என்னடி சொல்லுறா.. காப்பிலியள் என்ன.. கஞ்சா அடிச்சிட்டு கத்துதுகளோ.. இல்ல.. என்ன காங்குகள் வந்து பிரச்சனை குடுக்குதுகளோ.

 

இல்லை அக்கா. அப்படி ஒன்றும் இல்ல. இது.. இந்த பக்கத்து வீட்டுக் காப்பிலிகள்.. கொலிடே அதுஇதெண்டு.. அடிக்கடி.. ஆபிரிக்கா பக்கம் போய் வருகிற கூட்டம். அங்க தான்..இப்ப ஏதோ புது வருத்தம் வந்திருக்காமெல்லோ. இபோலாவோ..எபோலாவோ.. என்னவோ.. எண்டு சொல்லுற தொத்து வருத்தமாம். அதுதான்... யோசிச்சிட்டு.. வீட்டை மாத்துவம் என்று நினைச்சம்.

 

என்னடி.. உனக்கு இப்படி எல்லாத்துக்கும் வீடுமாற வீடு சும்மா கிடைக்குதே.

 

இல்லையக்கா.. இப்ப ஸ்கூல் கொலிடே தானே. இப்போதைக்கு.. அங்கினை தூரத்தில உள்ள சொந்தக்காரர் வீட்டை போய் நின்றிட்டு அப்புறமா வரும் என்று தான்.. முக்கியமானதுகளை கட்டி வைச்சிருக்கிறம்.

 

ஏண்டி.. தெரியாமல் தான்.. கேட்கிறன். இந்த றோட்டில நீங்கள் மட்டுமே இருக்கிறியள். உங்களை மட்டுமே இபோலா வந்து தாக்கப் போகுது..?? ஏதோ ஊரில செல்லடிக்கு பயந்து ஓடிற மாதிரி எல்லோ ஓடுறியள்.

 

சும்மா விசர் கதை கதைக்காதேங்கோக்கா... இபோலா வந்தா ஆள் முடிஞ்சிடுமாம். செல் என்றாலும் அங்கினை பார்த்துப் பதுங்கி தப்பிடலாம். இது.. ஒன்றும் தப்ப ஏலாது.

 

அப்ப உங்க லண்டனுக்க இபோலா வந்திட்டா.. தமிழாக்கள் எனி என்ன ஊருக்கே திரும்பவும் அகதியா ஓடப் போகினம். அங்க தானே காப்பிலியள் இல்லை.. அப்ப அங்க தானோ ஓடனும்.

 

சும்மா பகிடி விடாதேங்கோ அக்கா. யோசிச்சுப் பாருங்க.. உயிரா.. வீராப்பா முக்கியம். சும்மா இருக்கேலாமா ஊரில நாடு கேட்டு சண்டை போட்டு.. அதால இங்கினை ஓடியாந்தம். அது மாதிரி இது இபோலாவோட மல்லுக்கட்ட ஓட வேண்டியதாக் கிடக்குது.

 

ஏண்டி.. நீங்க ஊரில இருக்கேக்க.. கன காலம் வவுனியாவில ஆமிட கட்டுப்பாட்டுக்க பிரச்சனை குறைவான இடத்தில தானே இருந்தனியள். நீங்க எங்க போராடினியள். போராடினம் என்று பொய்க்கதை சொல்லி அசைலம் தானே அடிச்சியள். அப்புறம் என்ன ஓடின கதை கதைக்கிறா...

 

எல்லாரும் தானே அக்கா அப்படி பொய்யள் சொன்னவை. நாங்கள் மட்டுமே. இப்ப அதைவிடுங்க. இபோலாவுக்கு தப்ப.. காப்பிலியள விட்டு தூர ஓடிறது தான் இப்ப ஒரே வழி. மாலா சொன்னாளே.. நான் கேட்கல்லையே என்று நீங்களும் ஒரு நாள் ஓடேக்க நினைப்பியள்.

 

ஏதோ.. செய்யடி. இபோலாட கதையில.. நேரம் போனது தெரியல்ல. பிள்ளையள் சுவிமிங் முடிஞ்சு.. ரெடியாகி இருக்குங்கள். பிக் பண்ண பிந்தினாள்.. கத்துங்கள். அப்ப நான் போயிட்டு வாறன். உன்ர சொந்தக்காரர் வீட்ட போயிட்டு.. திரும்பி வந்த பிறகு போன் பண்ணு என்ன.

 

சரியக்கா. நீங்க போயிட்டு வாங்க. இபோலா கவனம். 

 

இவள் கொலிடேக்கு.. சொந்தக்காரர் வீட்ட போய் நிற்கிறதுக்கு.. இபோலாவும் காப்பிலிகளும் ஒரு சாட்டு... மனசுக்க நினைச்சுக்கொண்டே ரேவதி அக்கா.. காரில் ஏறி.. காரை ஸ்ராட் செய்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இபோலா நோய் தொற்றிய ஒருவரை..... அமெரிக்காவிலும், வேறு ஒரு ஐரோப்பிய நாட்டிலும்.... கண்டறிந்துள்ளதாக இணையத்தில் வாசித்தேன்.

 

நெடுக்ஸ்.... இந்த நோய் எதனால் வருகின்றது? இதன் பாதிப்பு என்ன... போன்றவற்றை,

எமக்கு விரிவாக... அறியத் தாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இபோலா.. குறிப்புக்கள்:

 

9873706.jpg

 

இபோலா என்பது ஒரு வைரஸ் நோய்.

 

இது பழ வெளவால்கள் மூலம் பரப்பப்படுகின்றது.

 

இது மனிதரில் இருந்து மனிதரில்.. பிரதானமாக உடற்திரவ பரிமாற்றங்கள் மூலம் கடத்தப்படுகிறது.

 

இபோலாவால் பாதிக்கப்பட்ட.. இறந்த மனிதரை தொடுவதன் மூலமாகவும் தொற்றுக்கு வாய்ப்புள்ளது.

 

இபோலா தாக்கினால்.. அது உடலக அங்கங்களில் உள்ளக குருதி கசிவு மற்றும் மூளை முண்ணானை பாதிக்கச் செய்து மரணத்தை விளைவிக்கும்.

 

இது தொற்றியதில் இருந்து 2 தொடங்கி 21 நாட்களுக்குள் குணம்குறிகளை வெளிப்படுத்தும். காய்ச்சல்.. வாந்தி.. பசியின்மை.. தலையிடி.. மூட்டுக்களில் தசைகளில் நோவு.. பலவீனம்.. வயிற்றுப்போக்கு.. இரத்தக்கசிவு என்று பல அறிகுறிகள் ஒரு நேர இருக்கலாம்.

 

இதற்கு மருந்து என்று இன்னும் எதுவும் இல்லை. குரங்குகளில் பரீட்சைக்கப்பட்ட மருந்துகளை இப்போது தீவிர நோய் தொற்றாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

 

தொற்றின் ஆரம்பத்தில்.. இந்த நோய் கண்டறியப்பட்டால் அன்றி குணப்படுத்துவது கடினம்.

 

140404150128-01-ebola-in-west-africa-hor

 

தொற்றுள்ளவர்கள் மற்றும் மரணமானவர்கள் மூலமும் தொற்று நிகழலாம் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டே சிகிச்சை அளிக்கப்படுவார்கள் அல்லது இறந்த பின் எரிக்கப்படுவார்கள்.

 

இது நீண்ட காலமாக ஆபிரிக்க நாடுகளில் உள்ள போதும்.. தற்போதைய தொற்று கூடிய அளவு மரணங்களை விளைவித்து வருவதோடு.. குறிப்பாக மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருவோர் மூலம்.. உலகலாவிய அளவுக்கு இது பரவிடுமோ என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

 

8dbde-ebola.jpg

 

இபோலா வைரஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.