Jump to content

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலை எழுதியது!

இது நிமிர்த்தம் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் எனக்கு தெரிந்தவர்கள் யாரையாவது தீக்குளிக்க வைக்க கூட முயற்ச்சி செய்யலாம்.... மற்றது சமாதானம் அண்ணாவின் கொள்கையே எங்கள் கொள்கை...

" எங்களின் தாகம் சமாதானம்"

கொள்கைகள் பற்றுதியுடையவையாகவும். தெளிவுடையவையாவும் இருக்கும்போது அதை ஜனநாயகநாட்டில்வாழும் ஜனங்கள் பன்னாட்டு அரசியலின் அழுத்தங்கள் காரணமாக அதை பின்பற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதனால்தான் தோழர் சமாதானத்தின் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் எழுதிய தலை வன்னி1 போன்றோர் சமாதானபணியை முன்னெடுக்க துணிந்துள்ளார்கள்.

இருப்பினும் தோழர் தலை அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். நாம் உலக நாடுகள் வலியுறுத்தும் சமாதனத்தை வேண்டிநிற்பவர்கள்யாதலால். தீக்குளிப்பது போன்ற பயங்கரவாத செயல்களுக்கு துணைபோக முடியாது. அவ்வாறு தீக்குளிப்பது ஏகபிரதிநித்துவத்துக்கு வழிவகுக்கலாம். அவ்வாறு ஏகபிரதிநித்துவம் கிடைக்கும்போது நாம் ஜனநாயக கோட்பாடுடன் முரண்பட வேண்டியுள்ளது. எனனில் ஏகபிரதிநித்துவமும் ஜனநாயக கோட்பாடும் ஒன்றோடு ஒன்று முரண்படுவவை.

(தீக்குளிக்க கொண்டுபோக தீக்குளிப்பவன் வேதனை தாங்க முடியாமல் ஒரு வேளை திடீரெனெ என்னை கட்டிபிடித்தால்..????

ரிஸ்க்கே இல்லாமல் பிழைப்பு நடத்த எவ்வளவோ வழியிருக்க இது தீக்குளிக்கிறது பர்ம் வெடிக்கிறது என்று என்னை மாட்ட பார்க்கிறிங்களோ??)

Link to comment
Share on other sites

  • Replies 211
  • Created
  • Last Reply

இந்த விடயங்கள் உண்மையில் விடுதலை புலிகளால் வெகுஜன தளத்தில் செய்யப் பட வேண்டிய அல்லது விவாதிக்கப் பட வேண்டியவை. மாறாக இங்கு கதைக்கப் படுவதால் புலிகளுக்கு அறிவுரை கூறுவது போலவே பார்க்கப் படுகிறது. இதனால் சந்தேகங்களும் குதர்க்கங்களும் தான் வளர்கின்றனவே தவிர ஆரோக்கியமாக ஒன்றும் நடப்பதாக இல்லை.

யாழ் களத்தில் உணர்வுபூர்வமான நட்புடனான உங்கள் ஆலோசனையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

..........(தீக்குளிக்க கொண்டுபோக தீக்குளிப்பவன் வேதனை தாங்க முடியாமல் ஒரு வேளை திடீரெனெ என்னை கட்டிபிடித்தால்..????

ரிஸ்க்கே இல்லாமல் பிழைப்பு நடத்த எவ்வளவோ வழியிருக்க இது தீக்குளிக்கிறது பர்ம் வெடிக்கிறது என்று என்னை மாட்ட பார்க்கிறிங்களோ??)

"நேரம் காலம் தெரியாமல் பகிடி விடக்கூடாது" என்று சொல்லிக் கேள்விப்பட்டிருகிறேன், ஆனால் அனுபவமாக அதை தந்த உமக்கு எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

சமாதானம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்க?

யாழ்க்களமே ஒரு வெகுஜனத் தளம் தான் இங்கே வந்து நீங்க கருத்து எழுதினா விளக்கம் சொல்லத் தான் வேணும். ஏலாது போகும் தருணங்களில் இப்படி மாறி மாறி முதுகு சொறின்ச்சு விட்டு கொள்ளுங்கோ, விவாதம் என்றால் சொன்ன கருதுக்கள் பற்றி எழும் கேள்விகளுக்கும் விளக்கம் அழிக்க வேன்டும்.இல்லை வெறும் பிரச்சாரம் தான் உங்கள் நோக்கம் என்றால் அதுக்கு என்று வேற தளங்கள் இருக்கு அங்கு போய் எழுதுங்கோ.ஒருத்தரும் கேள்வி கேக்க மாட்டினம். நீங்கள் பிரச்சினை இல்லாம உங்கட வேலையைச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

சமாதானம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்க?

யாழ்க்களமே ஒரு வெகுஜனத் தளம் தான் இங்கே வந்து நீங்க கருத்து எழுதினா விளக்கம் சொல்லத் தான் வேணும். ஏலாது போகும் தருணங்களில் இப்படி மாறி மாறி முதுகு சொறின்ச்சு விட்டு கொள்ளுங்கோ, விவாதம் என்றால் சொன்ன கருதுக்கள் பற்றி எழும் கேள்விகளுக்கும் விளக்கம் அழிக்க வேன்டும்.இல்லை வெறும் பிரச்சாரம் தான் உங்கள் நோக்கம் என்றால் அதுக்கு என்று வேற தளங்கள் இருக்கு அங்கு போய் எழுதுங்கோ.ஒருத்தரும் கேள்வி கேக்க மாட்டினம். நீங்கள் பிரச்சினை இல்லாம உங்கட வேலையைச் செய்யலாம்.

உமது கேள்விகளுக்கு விரிவான பதில் எழுதுகிறேன். மன்னிக்கவும் வேலை நிமித்தம் உடன் தரமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் நான் நினைக்கின்றேன் நீரும் சமாதானதிற்கு உடந்தையா இருக்கிறீர். தேவையில்லாமல் சமாதானத்தின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஊரோடு பகைச்சு அமிலப்பரீட்சை எடுக்கிறதை பாத்தா கிராம சபை கிடைச்சாலே பெரியகாரியம். விழிப்பு குழுமட்டத்திலான் ஏதாவது நேற்றோ படைகள் திணிக்க போகுது. :idea: :wink: :P

http://www.eelampage.com/?cn=29231

எங்களுக்கு பஞ்சாயத்து ஆட்சிமுறைதான் கிடைக்கும் போலுள்ளது. இப்போதே ஆல மரங்களை கிராமத்திற்கு ஒன்றாக நாட்ட ஆரம்பித்தால் அவை வளர, பஞ்சாயத்து ஆட்சி வந்துசேரும்.

Link to comment
Share on other sites

http://www.eelampage.com/?cn=29231

எங்களுக்கு பஞ்சாயத்து ஆட்சிமுறைதான் கிடைக்கும் போலுள்ளது. இப்போதே ஆல மரங்களை கிராமத்திற்கு ஒன்றாக நாட்ட ஆரம்பித்தால் அவை வளர, பஞ்சாயத்து ஆட்சி வந்துசேரும்.

அப்போ டக்கிளஸ் தான் பஞ்சாயத்து தலைவரா?

மகேஸ்வரி பக்கத்தில இருப்பா கருணா தான் அந்த பையன் வெத்திலை டப்பாவும் அதை தூப்புற டாப்பாவும் தண்ணீச் செம்பும் எடுத்து கொடுக்குற பையானா :P :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

1) அடுத்த கட்ட அரசியல் எண்டால் என்ன,புலிகள் என்ன செய்ய வேண்டும்?இப்போது அதனை அவர்கள் செய்ய வில்லையா? நான் முன்னர் கேட்ட கேள்விகளிவை தான் அதற்கு நீர் தந்த பதிலும் இங்க தான் இருக்கு.எதோ இடைக்காலத் தீர்வு புதிய திருப்பம் என்று எதோ அலம்பினீர்.எல்லாம் புலிகள் செய்தது தான் இதில என்ன புதிசாக்கிடக்கு எண்டு கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.

2) நீர் சொன்னது அமெரிக்காவின் சொற்படி நடவுங்க எண்டு,அமெரிக்கா புலிகள் அரசியல் சமரசங்களைச் செய்ய வேண்டும் என்று தான் இணைத் தலமை நாடுகளின் கடைசிக் கூட்டத்திலும் கேட்கப் பட்டது.அப்படியானல் நீர் என்னதைச் சொல்ல வாறீர், புலிகள் இலக்குகளை மாற்றுவதா போராட்ட வழி முறையை மாற்றுவதா? அப்ப அமெரிக்க சொலுறதைக் கேட்க வேண்டாமா? அது என்ன புதிய வழி முறை ? புலிகள் ஆயுதப் போரட்டத்தை இடை நிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர்.இதை விட நீர் சொல்லும் புதிய வழி முறை என்ன? இந்தக் கேள்விக்கும் நீர் பதில் அழிக்க வில்லை.

3)ஓ நிகழக்கூடும் என்று எதன் அடிப்படையில் எழுதுனுஈர் ,உமது கனவா? நிகழ்தகவு குறைந்த உமது கனவுகள் எதற்கு எமக்கு?

4)பனுமுகத் தன்மையின் கீழ் யார் யார் தமிழர் பிரதி நிதிகள் என்று கேட்ட போது ,தேர்தலில் நின்று தோற்றவர்கள் எல்லோரும் என்று தானே எழுதுனீர், பிறகென்ன நான் திரிகிறன்.உமது வியாக்கினாம் நாளுக்கு நாள் வித்யாசகமாகப் போய்க் கொண்டிருகிறது.இங்கே நீர் எழுதுயவற்றை மற்றவர்களும் படித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

நீர் எழுதும் சொற்களின் பின்னால் இருக்கும் கேள்விகளுக்கு நீர் தான் விளக்கம் எழுத வேண்டும்,ஆகவே மேற்கூறியவற்றிற்கு விளக்கம் எழுதும். நீர் தெளிவா என்ன சொல்லுறீர் என்பதை விளக்கினா நாங்கள் அதற்கு அர்த்தங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

3.) 'உமது கனவுகள் எதற்கு எமக்கு? ' எனும் உம்முடைய குதர்க்கத்துக்கு உமது பாணியில் பதில் எழுதவிரும்பவில்லை. அது எனது தனிப்பட்ட அவதானம். அதைவிட வேறு விளக்கங்கள் தருவது தற்போது தேவை அற்றது.

4.) தமிழ் மக்களின் பிரதிகள் யார் என்ற உமது கேள்வி, இன்றைய தமிழர் அரசியல் சார்ந்த நடைமுறை வெளிப்படையாக கொண்டிருக்கும் அம்சங்களை எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே விடை காணக்கூடியதொன்று. நாம் புலிகளின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் எமது நியாயம் எப்படி எமக்கு சரி என்று படுகிறதோ அதேபோல் அதனை ஏற்றுக்கொள்ளாதவருக்கும் அவரது நியாயம் அவருக்கு சரி எனப்படுவதை அங்கீகரிப்பதுதான் சமூக பன்மைத்துவம்(Socio-diversity). இது பற்றி பலருக்கு விளக்கமில்லாததால் பன்மைத்துவம் தமிழர் அரசியல் அகராதியில் தீண்டத்தகாத சொல்லொன்றின் பொருள்பட கையாளப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்றம் தமிழர் அரசியல் அரங்கில் பன்மைத்துவ கோட்பாடு பற்றி உலக நாடுகளின் கேள்விகளுக்கு முன் விடை தயாரித்து வைத்திருந்த புலிகளின் அரசியல் சாணக்கியம். அது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவையை, காலம் எமக்கு கட்டளையிடக் காத்திராது நாம் கருமம் ஆற்ற முன்வரவெண்டும். தமிழர் தேசிய கூட்டமைப்பு மற்றைய எல்லா தமிழ் அமைப்புகளுடன் ஒரு அரசியல் வேலைத்திட்டத்துக்கு முன்நகர்வதன் மூலம் எமது தேசிய விடுதலைக்கு சுருக்குக் கயிறு எறியத்திரியும் பிராந்திய வல்லரசான இந்திய- தமிழ் தேசிய முறுகல் நிலைக்கு ஒரு முடிவு கட்டலாம். இது உலக வல்லரசான அமெரிக்காவின் இலங்கைசார் அரசியல் இராணுவ அணுகு முறையில் சில மாற்றங்களை தூண்டலாம்.

தமிழர் தரப்பில் உள்ள வித்தியாசங்களை மற்றவர்கள் அங்கீகரித்து ஒரு ஐக்கிய முன்னணி (Unity in Diversity) அமைப்பதே தேசிய தலைமை உடனடியாக செய்ய வேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் துரோகக் கும்பல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்வதே வேலையாகப் போய்விட்டது. என்ன நியாயத்தை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்என்றோ,

Link to comment
Share on other sites

SAMATHAANAM

எழுதியது:

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

மக்கள் பட்டினிச் சாவையும்,படுகொலைகளையும் எதிர் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் முதலில் மக்களின் அவலங்கள் தீர்க்கப் பட வேன்டும்,சிங்கள இராணுவத்தின் போர் நிறுத மீறல்கள் முடிவுக்குக்கொண்டு வந்து போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுல் படுத்தப் பட வேன்டும்.இது தான் சர்வதேசத்தினதும் புலிகளினதும் நிலைப் பாடு.இங்கே இபோது சிறிலங்கா அரசு தான் சர்வதேசத்திடம் முரண் பட்டுக்கொண்டு நிக்கிறது.இந்த நேரத்தில் இடைக்காலத் தீர்வு பற்றிப் பேசுவதால் எந்தப்பயனும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை.புலிகள் ஏற்கனவே இடைக்கால தன்னாட்சி சபைக்கான வரைபை முன் மொழிந்துள்ளனர். நிலமைகள் இவ்வாறு இருக்கும் போது ,ஒஸ்லோ கூட்டறிக்கை பற்றி ஏன் புலிகள் அலட்டிக் கொள்ள வேண்டும்?

SAMATHAANAM

எழுதியது:

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

எம்மில் பலரால் என்று யாரை விழிக்கிறீர்? பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பாக இருக்கும் புலிகளையா? எங்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழர் தேசிய விடுதலைப்போராட்டாத்தின் முன்னணிச் சக்திகள் தான் தீர்மானிக்க முடியும்.பேச்சுவார்த்தை மேசையில் பேசப்படுவன, தனிப்பட்ட சந்திப்புக்களில் பேசப்படுவன,பேசப்படாதவை,,புலன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தின் கருத்தின்படி பன்மைத்துவத்தைப் புலிகள் அரவணைக்க வேண்டுமென்றால், டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி, பரந்தன் ராஜன், சித்தார்த்தன் எல்லோரும் புலிகளுடன் ஒரு குடைக்குள் வரவேண்டும். புலிகள் அவர்களின் குடைக்குள்போவதைவிட அவர்கள் புலிகளின் குடைக்குள் வருவதுதான் தமிழினத்திற்கு நல்லது. இதற்காக அவர்கள் தங்கள் தேசியத்திற்கான துரோகங்களை விட்டுவிட்டு வருவார்கள் என்று ஏன் சமாதானம் பகற்கனவு காண்கின்றது என்று புரியவில்லை.

இலங்கைத் தீவில் பிரிவுபட்ட தேசிய இனங்கள் உள்ளன. பெரும்பான்மையினரான சிங்களவர் சிறுபான்மையினத்தவரை அடக்கியாளவேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேயில்லை என்பதைப் புரியாமல் சமாதானம் இருக்கின்றது போலுள்ளது. சிங்கள இனம் பிற இனங்களை என்றுமே அரவணைக்கப்போவதில்லை. எனவே தமிழ் இனமாகிய எங்கள் சந்ததிகள் இலங்கைத் தீவில் இருக்கவேண்டுமென்றால் தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்வும் உதவமாட்டா. இதைப் புரியாத சமாதானம் தேவையில்லாதது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.