Jump to content

எனது அப்பா எனும் மிருகம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கள் பதிவில் இருந்து நான் கற்றுக் கொண்டது - என் மூன்று பிள்ளைகளோடு இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே நெருக்கமாய், அன்னியோன்யமாய், நண்பனாய் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு இன்று வேலை தலத்தில் இருந்து வீடு போகின்றேன்... (வீட்டில் நான் கொஞ்சம் கண்டிப்பானவன் என்ற தோற்றம் இனி உடைக்கப்படும்)

நன்றி கலந்த தோழமையுடன் ..சசி

 

நண்பனாக  இருக்கணும் என்ற  தங்கள் கருத்தை  ஒத்துக்கொள்கின்றேன்

 

ஆனால் தகப்பன் என்ற தானத்திலிருந்து

தகுந்த நேரத்தில் கண்டிப்பும்

செதுக்குதலும் 

ஒரு தகப்பனது கடமைகள்

 

அதை செய்யாது  விட்டால்

ஒருவர் அல்ல

நாட்டுக்கே தீங்கு செய்ததாக  முடியலாம்..... :(

 

ரகுவின் குடும்ப  சிக்கலுக்கும்

உங்களது முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

கோடியில் ஒரு அப்பாதான் ரகுவின் அப்பா போல் இருக்கமுடியும்

அதற்காக

அதை எடுத்துக்கொண்டு  எல்லோரும்

தமது நல்வழிகளை

பழக்கவழக்கங்களை மாற்றத்தேவையில்லை

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 59
  • Created
  • Last Reply

அன்புள்ள ரகு அண்ணா,

           உங்கள் சிறுபிராயத்தின் கசப்பான நிகழ்வுகள் மனதை உலுக்கி செல்கின்றன. உங்கள் பிள்ளைகளுக்கு நல்லதொரு தந்தையாகவும், சமூகத்திற்கு பக்குவபட்டதொரு மனிதரையும் மாற்றியுள்ளது. நல்ல தந்தையாக மட்டுமின்றி பண்பான கணவனாக நடந்துகொள்ளவும் வேண்டும் என்பதே உங்கள் வலி மிகுந்த வாழ்க்கை பதிவு சொல்லி செல்கிறது. உங்கள் தாயினதும் தம்பியினதும் ஆன்மா உங்கள் வளமான வாழ்க்கைக்கு வழித்துணையாக என்றும் உடனிருக்கும்.... 

Link to comment
Share on other sites

துன்பமாக இருக்கு ரகு நந்தன். எங்கள் அம்மா டிஎஸ்சி படிப்பை விட்டுவிட்டு ஆங்கில ஆசிரியராக உடுவில் மகளிர் கல்லூரியிலும் பின்னர் கொழும்பிலும் பணி செய்தார்.அப்பா 6ம் வகுப்புவரை படித்தவர். கேழ்விஞானமுள்ள பணக்காரர்.. எங்கள் அம்மாவும் அதிகம் படித்ததாலேயமப்பாவிடம் நிறைய அடி வாங்கி இருக்கிறா.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதா, தவறு செய்வது மனித இயல்பு. சிலருக்கு பலவீனங்கள் இருக்கலாம். பல சமயங்களில் அந்த பலவீனங்கள் மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவரின் ஒரு குறைபாடு மாற்றப்படமுடியாத ஒன்று என்றால் அவரின் அந்த குறைபாடை ஏற்றுக்கொண்டு வாழ்வதை தவிர வேறு வழி இல்லை. உங்களுக்கு உங்களது பிள்ளை ஒன்று அங்கவீனமாக பிறந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? உங்களது ஆத்திரத்தையெல்லாம் அந்தப்பிள்ளைமீது கொட்டி இருப்பீர்களா? இல்லாதுபோனால், அதன் குறைபாடுகளை ஏற்று இசைவாக்கம் அடைந்திருப்பீர்களா? எமது பிறப்பை நாம் தீர்மானம் செய்யமுடியாது. அமைவதை ஏற்றுக்கொள்வதைவிட வேறு வழி கிடையாது. நீங்கள் எடுக்கும் மூச்சு, உடல், இரத்தம், வாழ்க்கை எல்லாமே உங்களது பெற்றோர் இட்ட பிச்சை என்பதை மறவாதீர்கள். உங்களது அப்பாவின் ஆசீர்வாதமும், அன்பும் என்றும் உங்களுக்கு இருக்கும்.


நியானி: ஒருமையில் விளித்து எழுதுவது தவிர்க்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி என்றாலும்.... ரகுநாதன் என்ற இளைஞனைப் பார்த்து.....

"நீ, உனது, உனக்கு" என்று ஒருமையில் கூப்பிடுவதை "யாழ்கள விதிகள்" ஏற்க மாட்டாது, என நினைக்கின்றேன்.
கிழவியாக இருந்தாலும், வாயிலிருந்து நல்ல சொல் வர வேண்டும்.
அதனைத்தான்... Modern கிழவிகள்  பின் பற்றுகிறார்கள். :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரகுநாதன்

உங்கள் இளமை காலங்களில் ஏற்பட்ட வலி, என் கண்களை நனைகின்றது. இவ்வளவு இடர்கள் வந்தும், இன்று உயர்ந்து நிற்கும் நீங்கள் நல்ல அப்பாவாக செதுக்க பட்டுள்ளீர்கள். உங்கள் தம்பியின் இழப்பு ஈடு செய்ய ஏலாதது. ஆனால் அவர் மண் மீட்பு போரில் வீரச் சாவடைந்தார் என்ற செய்தி, இப்படி ஒரு தம்பிக்கு அண்ணனாக நீங்கள் இருப்பது உங்களுக்கு பெருமை என்று நினைகின்றேன்.

நடந்தவைகளை பாடமாக எடுத்து மேலும் முன்னேறுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி, அஹஸ்த்தியன், சிறி,

 

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

 

ரகு

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்று தான் இதை வாசித்தேன் ரொம்பவே மனதை கனக்க வைத்துவிட்டது. நிச்சயம் உங்களுடைய வாழ்க்கை இனிமேல் சந்தோசமாகத்தான் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இதை வாசித்தேன் ரொம்பவே மனதை கனக்க வைத்துவிட்டது. நிச்சயம் உங்களுடைய வாழ்க்கை இனிமேல் சந்தோசமாகத்தான் இருக்கும்..

 

 

உங்களின் அக்கறைக்கு நன்றி !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.