Jump to content

''புலிப்பார்வை'' பாலச்சந்திரனின் கதை திரைப்படமாகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 

பாலச்சந்திரன் கதையை 'புலிப்பார்வை' என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்கிறார்.

100 சிறுவர்களை நேர்காணல் நடத்தி பாலச்சந்திரன் போன்ற தோற்றம் கொண்ட சிறுவனை கண்டுபிடித்து நடிக்க வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்டப் போரில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படம் வெளியிட்ட செனல் 4 தொலைக்காட்சி பின்னர் பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டு பிஸ்கட் உண்ணும் காட்சி அடங்கிய ஆதாரத்துடன் மற்றுமொரு ஆவணப்படத்தையும் வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்தால் சிறீலங்காவுக்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டது. சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற கோஷம் மிக வலுவாக எழுப்பப்பட்டது.

 

 

 

http://www.sankathi24.com/news/37527/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கண்ணீரும் சென்நீருமாக இருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை உங்கள் கற்பனை கதைகளால் கேவலப்படுத்தி விடாதீர்கள்.
 
 உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து  உபத்திரம் செய்யாதிருங்கள். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேந்தர் மூவீஸ் என்பது, கல்வித்துறையில் கால்பதித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்விக்கடைவிரித்து காசுபார்த்துக் கொழுப்பெடுத்த கல்வி வியாபார நிறுவனம். இதுவே புதிய தலைமுறை எனும் நாட்டாமைத் தொலைக்காட்சியினை நடாத்துகின்றது. இப்போது காசுபார்ப்பதற்கு பாலச்சந்திரன் கதையினைச் சூட்டோடு சூடாகத் தூக்கியுள்ளது.

 

தனிமனிதர்களது வரலாறு அன்றேல் அவர்களது வாழ்க்கைபற்றி ஆவணப்படுத்துவதற்க்கு பல்வேறுபட்ட அதாரங்களைத் தேடல் மற்றும் திரிவுபடாது செய்தியைப் பொதுவெளியில் கொண்டுவருதல் இவற்றிற்கெல்லாம் நீண்ட காத்திருப்பும் கடின உழைப்பும் உண்மையின்மீதான நம்பிக்கையும் தேவை. எக்கருத்தும் தவறாகவோ உண்மைக்கும் புறம்பாகவோ திரிவுபடுத்திவிடக்கூடாது.

 

அண்ணர், கவிஞர் ஜெயபாலன் அவர்கள் இவ்விடையத்தில் கவனமெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு, இப்படத்தைத் தயாரிப்பதற்கு உகந்தகாலம் இதுவல்ல என்பதை அறிவுறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் பெரும் போர்கள் எல்லாம்.. சினிமா வடிவில் தான் இன்றும் நிலைத்துள்ளன. அந்தச் சோகங்களை கண் முன்னால் கொண்டு வருகின்றன.

 

பாலச்சந்திரன் வரலாற்றை திரைப்படமாக்குதல் வரவேற்கத்தக்கது. ஆனால்.. வரலாற்றை திரிபின்றி காட்ட வேண்டும் என்ற கடப்பாட்டை தயாரிப்பவர்களுக்கு உணர வைப்பது கடமை.அண்ணன் சீமான் போன்ற தமிழக திரை உலகத்தினர் இதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தி.. வரலாற்றுத் திரிபின்றி.. இத்திரைப்படத்தை உருவாக்க முயற்சிப்பதே நல்லது.

 

வரலாற்றித் திரிபின்றி வரும் ஒரு படம்... இந்திய சென்சார் போட்டை தாண்டி வருமா என்பது வேற கதை..! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.