Jump to content

அதிர்ந்தது சென்னை மாநகரம். பத்தாயிரம் மக்கள் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரள் போராட்டம் !


Recommended Posts

தமிழ் நாட்டை பொறுத்த வரை இரண்டு மனைவிகள் இருப்பது என்பது சில இடங்களில் சாதாரண விஷயம்

சில அரசியல் வாதிகள் பிரபல கல்வி நிறுவனங்களில் தலைவர்கள் பிரபல வியாபாரிகள் நடிகர்கள் இயக்குனர்கள் என்று ஏன் சில கிராமங்கில் இரண்டு பேரை மணம் முடிப்பது என்பது கிராம வழக்கமாவே இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினரின் கூட்டத்தைப் பார்த்து.... பிரமித்து விட்டேன். நன்றி வேல்முருகன்.

 

 

நீங்கள் இப்படி சிந்திக்கின்றீர்கள்...............
 
இதை முன் நின்று நடத்தியவரின் குடும்ப விடயங்கள் என்ன என்ன என்று யார் யார் ஆராய்ந்து  கொண்டு இருக்கிறானோ?
இவருக்கு முதலிரவு எங்கே நடந்தது. அது சரியா தவறா??
 
என்று வாற வாரம் ஒரு கட்டுரை  வடிக்க வேண்டாமா?? 

 

 

எப்படி, இப்படியெல்லாம்.... சிந்திக்கின்றீர்கள்? :D

 

Link to comment
Share on other sites

1391991_1441892866037017_203175686_n.jpg

 

1383055_1441892816037022_866377164_n.jpg

 

1379757_1441891466037157_1902554697_n.jp

 

1381806_1441891519370485_1143174008_n.jp

 

1382329_1441891616037142_1614095493_n.jp

 

1382299_1441891712703799_167499965_n.jpg

 

(facbook)

Link to comment
Share on other sites

பெரும்திரளாய் திரண்டு தமிழீழ விடுதலை மற்றும் ”இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தாதே” என்கிற கோரிக்கைகளோடு சென்னையில் போராட்டம் நடத்திய ”தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்” தோழர்களுக்கும், தோழர்.வேல்முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நெருக்கடி மிகுந்த காலத்தில், வெகுநாட்களுக்குப் பிறகு தமிழீழக் கோரிக்கைகளுக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது சிறப்பானது.

 

 

திருமுருகன் காந்தி

 

(facebook)

Link to comment
Share on other sites

முயற்சி எடுக்காமல் விடுவதை விட முயற்சித்து தோற்பது மேல். என்னால் தான் போராட முடியவில்லை. போராடுபவர்களுக்கு ஆதரவாவது கொடுக்கலாம். நீண்ட கால போராட்டங்களுக்கு என்றாவது ஒருநாள் பலன் கிடைக்கும். :rolleyes:

 

சரிவை சந்திக்காத விடுதலைப் போராட்டங்கள் இவ்வுலகில் ஏதும் கிடையாது. வீழ்வது தவறல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. அந்த வகையில் இந்தவிதமான போராட்டங்கள் தமிழகத்தில் தமிழீழ உணர்வையும், தமிழ் உணர்வையும் தக்க வைக்க பெரிதும் உதவும் என்பதை நானும் நம்புகிறேன்.

 

விடுதலை உணர்வை தக்கவைக்க வேண்டும் என்கிற உங்களது எண்ணத்துக்கு  எனது பாராட்டுக்கள் துளசி.

 

Link to comment
Share on other sites

இங்கே கருத்தாடல் நிகழ்கிறதா அல்லது எவரையாவது கிசுகிசு பாணியில் சாடுதல் இடம்பெறுகிறதா?

 

உண்மை.  அது தான் இங்கு நடைபெறுகிறது.

Link to comment
Share on other sites

இங்கே கருத்தாடல் நிகழ்கிறதா அல்லது எவரையாவது கிசுகிசு பாணியில் சாடுதல் இடம்பெறுகிறதா?

 

உண்மை.  அது தான் இங்கு நடைபெறுகிறது.

 

சாத்திரியார் தனது ஊடக தொடர்புகளை வைத்து யாழில் எழுதி நன்மதிப்பை பெற்றிருந்தவர். தோழர் தியாகுவின் போராட்டம் மிக மிக அவசியமாகவும் அது சிறு சல்சலப்பை தன்னும் ஏற்படுத்தி மன்மோகன் சிங் கின் மனத்தை மாற்றி பொதுநலவாய மகாநாடு மூலம் மகிந்தா பெற இருக்கும் புதிய அதிகாரங்களில் சில ஓட்டைகளை தன்னும் விழ வைக்காத்தா என்று பலரும் ஏங்கினார்கள். அந்த நேரத்தில் சாத்திரியார் தன் நன் மதிப்பை எல்லாம் விலை கூறி வைத்து கவிஞர் தாமரையின் தனிப்பட்ட பிரச்சனைகளை காட்டும்  வீடியோக்களின் மூலம் தோழர் தியாகுவின் போராட்டத்தை கொச்சை படுத்தினார். அவரின்மீது யாழில் இருந்த  மதிப்பால் பலர் மௌனிகளானார்கள். சில தோழர் தியாகுவின் போராட்டம் தோற்கடிக்கப்படுமா என்று மனத்துக்குள் புளுங்கினார்கள். ஆனால் 14 நாட்களாக நடந்த உண்ணவிரதத்தால் தோழர் தியாகு இறக்கும் விழிம்புக்கு வந்திட்டார் என்றது தமிழகத்தில் எங்கும் புயலுக்கு முந்தைய அமைதியாக மாறியது. மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை நாடி பிடித்து பார்த்ததாகவும், பல தமிழக காங்கிரஸ் எம் பி.களே உண்ணவிரதத்தில் மன்மோகன் சிங் தலையீடு அவசியம் வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிய வருகிறது.  

 

இந்த வெற்றியை கொண்டாடும் கள உறவுகள் சாத்திரியாரும் மற்றும் சிலரும் செய்த எதிர் பிரசாரத்தை உடனேயே தாக்கி மழுங்கடிக்க பண்ணாததையிட்டு தம்மைத்தான் நோகிறார்கள். அப்படி அவர்கள் செய்யாமல் விட்டது சம்பந்தப் பட்டவர்கள் மீது இருந்த மதிப்பால். ஆனால் அதை இப்போ  இங்கே செய்ய விருமபவில்லை. ஏன் எனில் இது வெற்றிக்கான கொண்டாட்ட நேரம். அதனால் வெறுமனே சில புகைதல், காய்தல்களுடன் நிறுத்துகிறார்கள். இனி இனி இப்படியான சேறடிப்புகள் வந்தால் முழுவதாக தாக்குவார்கள். என்வே இப்படியான நமைத்தல்கள் இருக்காது. கள உறவுகள் வெளிப்படையாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

வேல் முருகனுக்கு கூடுற கூட்டத்தை பார்த்தால் ப ம க விற்கு பெரிய இழப்பு போல தான் தெரிகின்றது வேல் முருகன் அந்த கட்சியை விட்டு விலகியது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.