Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலத்து கோலங்கள்.

GClZqTVX0AANBtv?format=jpg&name=small

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

421977446_7053631391396329_5481418738748

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

425486324_241709425646525_48875160529546

மரத்தாருக்கு மரியாதை......!   🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

407375791_361916413175533_63498458222893

  · அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு. குடியுரிமை உள்ளபடியால்தான் அவரால் இலங்கை கடவுச்சீட்டு பெற முடிந்தது.
இலங்கை கடவுச்சீட்டு இருந்தபடியால்தான் அவரால் இந்திய விசா பெற்று விமானம் மூலம் இந்தியா சென்று சரிகமப நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது.
இதை உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் சத்யராஜ் அவர்கள் அசானிக்கு மட்டுமல்ல இலங்கையில் மலையக தமிழர் எவருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார்.
உண்மை என்னவெனில் இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை.
அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையில் மலையக தமிழர் விரும்பிய கல்வி கற்க முடியும். அரச வேலை பெற முடியும். அவர்கள் அமைச்சராகவும் கவர்னராகவும் இருக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் உரிய புள்ளி எடுத்தாலும் மருத்துவ கல்வி கற்க முடியாது. அரச வேலை பெற முடியாது. அமைச்சராகவோ கவர்னராகவோ வர முடியாது.
இலங்கை அரசுக்கு மனசாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும்.
ஆச்சரியம் என்னவெனில் மலையக தமிழருக்கு குடியுரிமை உண்டு என்பது சத்யராஜ்க்கு தெரியவில்லை என்பதைவிட அந்த நிகழ்வில் பங்குபற்றிய யாருக்குமே தெரியவில்லையா என்பதுதான்.
இதுகூடப் பரவாயில்லை. 1984ல் மதுரை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் என்னிடம் இலங்கையில் இருந்து பஸ்சில் வந்தீர்களா அல்லது ரயிலில் வந்தீர்களா என கேட்டார்.
அவருக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதுகூட தெரியவில்லை.
இது உண்மையில் அவர்கள் தவுறு இல்லை. இத்தனை நாளாக நாம் இன்னும் எமது பிரச்சனைகளை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கவில்லை என்பது எமது தவறே.....!
  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  · 
மாணவர்களின் ஆளுமை விருத்தியில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி..!!
முதலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
அங்கு கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரும் பேறு என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டு என்னுடைய சில சிந்தனைகள் அவதானிப்புகளை இங்கு பகிர்கின்றேன்.
மாணவர் ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் திருப்தி அடைவதற்கு வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதனை வழங்குகின்றது இந்த கல்லூரி சமூகம். ஆம் மென்திறன் எனும் மேன்மைத் திறனே அது.
வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மனிதரும் சரித்திரம் படைக்க முடியும்.
பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறன் எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த வெற்றியாளன் உருவாகிறான்.
மென்திறன் என்பது ஒரு மனிதனிடம் உள்ள தனிப்பட்ட பழக்க வழக்க அடிப்படையிலான திறமை அல்லது ஆற்றலாகும்; சுயமாக வளர்த்துக்கொள்ளும் ஒன்று. இது மாணவர்களிடத்தில் வளர்த்தெடுப்பதில் பாடசாலைகளில் பெரும் பங்காற்றுகிறது. அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதில் முதல் நிலையில் நிற்கின்றது.
மென்திறன்கள் எனப்படுபவை வேலையில் மேலே மேலே முன்னேற உதவுகின்றன. அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களே அறிந்து கொள்ளவும் அவற்றை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகின்றன. வேலைத்தளங்களில் அவர்களது வாடிக்கையாளரோடும் அவர்களது சக ஊழியர்களோடும் அவர்களுக்கு நட்பு ரீதியிலான உறவு ஏற்படவும் இதனால் பணியிலும் , தனிப்பட்ட வாழ்விலும் சாதனைகள் புரியவும் இவை வழிவகுக்கின்றன. வேலை அல்லது தொழில் என்பது வெறும் பணம் மட்டுமல்ல நமது உணர்வோடு தொடர்புடையது என்பதை இவை தான் அடையாளம் காட்டுகின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வின் வெற்றியில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் மென்திறன்களை பாடசாலை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுப்பவை எவை ??ஆம் அதற்காக உருவாக்கப்பட்டது தான் இணை பாடவிதான செயற்பாடுகள். இவற்றை வளர்த்தெடுப்பதில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி எந்த அடிப்படையில் முன்னுக்கு நிற்கின்றது.
மாணவர் ஆளுமையை விருத்தி செய்வதற்காக செயற்படுகின்ற கழகங்கள் சிலவற்றை பட்டியல் படுத்தியிருக்கிறேன்
இந்து இளைஞர் கழகம்
தமிழ் மன்றம்
ஆங்கில மன்றம்
ஆங்கில இலக்கிய மன்றம்
கலை மாணவர் மன்றம்
விஞ்ஞான மன்றம் - இடைநிலை
விஞ்ஞான மன்றம் - உயர்தரம்
வர்த்தக மாணவர் மன்றம்
சாரணர் இயக்கம்
இன்ரறகட் கழகம்
சேவைக் கழகம்
பரியோவான் முதலுதவிப்படை
செஞ்சிலுவைச் சங்கம்
தமிழ் விவாத மன்றம்
சிறுவர் செயற்பாட்டுக் கழகம்
கவின் கலை மாணவர் மன்றம்
நாடக மன்றம்
மாணவர் ஆவண உதவி மன்றம்
இருமொழிக் கல்வி மாணவர் மன்றம்
கணித விஞ்ஞான மன்றம்
விவசாயக் கழகம்
மாணவர்தேசிய படையணி
ஒளிப்படக் கலைக் கழகம்
உளவியல் மேம்பாட்டுக் கழகம்
இயற்கை வலுவூட்டல் கழகம்
உற்பத்தித்திறன் கழகம்
ICT கழகம்
ஆய்விற்கும் அபிவிருத்திக்குமான கழகம்
மாணவர் பாராளு மன்றம்
தெப்பம் கழகம்
சதுரங்கக் கழகம்
மேசைப்பந்தாட்டக்கழகம்
பூப்பந்தாட்டக் கழகம்
பளுதூக்கும் கழகம்
மெய்வல்லுநர் கழகம்
கரம் கழகம்
கூடைப்பந்தாட்டச் சங்கம்
சமூக விஞ்ஞான மாணவர் மன்றம்
சுற்றாடல் கழகம்
உதைபந்தாட்ட கழகம்
நீச்சல் கழகம்
ஆக்க இலக்கிய கழகம்
எல்லே கழகம்
நுண்ணறிவுக் கழகம்
பாரம்பரிய விளையாட்டு கழகம்
மரபுரிமைக் கழகம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் அங்குள்ள ஏதாவது ஒரு கழகத்தில் அங்கத்தவராக இணைந்து செயல்படும் போது அம் மாணவன் பெற்றுக் கொள்ளக்கூடிய மென் திறன்கள் எவை..!!
👉Time Management -: Stress management, Organization, Prioritizing, Planning Goal setting.
👉Communication -: Verbal communication Written communication, Presentation, Constructive feedback, Active listening
👉Adaptability-: Self-management
Optimism,Calmness,Analysis Self-motivation.
👉problem-solving: Analysis
Logical reasoning, Observation Brainstorming, Decision making
👉Teamwork are: Conflict management and resolution, Collaboration, Coordination
Idea exchange, Mediation
👉Creative skills: Imagination, Mind-mapping, Innovation, Experimentation
Questioning
👉Leadership :- Management skills,Authenticity,Mentorship, Generosity
Cultural intelligence
👉Interpersonal Skills :- Empathy,Humor,
Networking, Tolerance, Diplomacy
👉work ethics -: Responsibility, Discipline
Dependability, Commitment, Professionalism
👉Attention to detail -: Scheduling,
Introspection, Acuity, Questioning
Critical observation
இவற்றை புத்தகங்கள் தந்திடுமா..??
இவைமட்டுமல்ல எத்தனை கருத்தமர்வுகள் எத்தனை வழிகாட்டல் செயலமர்வுகள் எத்தனை மகிழ்வூட்டல் கருத்தமர்வுகள் எத்தனை சமூக நலன்புரிச் செயற்பாடுகள் எத்தனை விளையாட்டுகள் எத்தனை பெரு விளையாட்டுகள் எத்தனை தமிழ்மொழித்தின பங்குபற்றுகைகள் எத்தனை ஆங்கில மொழித்தின பங்குபற்றுகைகள், எத்தனை தேசிய மட்ட பங்குபற்றுகைகள் எத்தனை சர்வதேச மட்ட பங்குபற்றுகைகள் அவையாவும் சொல்லில் அடங்காதவை..!!
இப்பங்குபற்றுகைகளினூடாக மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவு, திறன், மனப்பாங்கு எத்தகையதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
இவைகளை ஏன் வேறு பொருளாதார பலம் வாய்ந்த பாடசாலைகளால் செய்ய முடியவில்லை..???
ஏன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் செயற்பாடுகளை பிராந்தியப் பாடசாலைகள் முன்மாதிரியாக கொள்ளக் கூடாது..??
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பொருளாதார வசதியினாலேயே அவர்களால் அவ்வாறு செய்ய முடிகின்றது. மாறாக கிராமப்புற பாடசாலைகளில் இவை எந்தளவுக்கு சாத்தியம் என்று கேட்டால் சாத்தியப்பட வைக்கத்தானே அதிகாரத்தை வழங்கி தலைமைத்துவத்தை ஒப்படைத்திருக்கின்றார்கள்.
நல்லவற்றை பாராட்டுவோம்.
நன்றி
S.J.Aathy
B.A SPL in psychology, PGDE
SLTS - Child psychology and care
Voir la traduction
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் புகையிலைக் குடில்......!

430081148_452268423799644_13511424520419

புகையிலைக் குடில் புகையிலை உலர்த்த பயன்படுகின்றது
அநேகமாக யாழ்ப்பாணத்தின் கிராமப் புறங்களில் காணப்படுகிறது தற்போது வழக்கத்தில் இல்லை என நினைக்கின்றேன் விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களில் இருக்கலாம்
தோட்டத்தில் வெட்டிய புகையிலையை கட்டுக்கட்டாக கட்டி காய விடுவார்கள்
பின்பு புகையிலை கிடங்கில் மூன்று நாட்களுக்கு போட்டு கறுப்பு பழுப்பு நிறம் வர அதை எடுத்து இத்தகைய குடிலில் ஐந்து ஐந்தாகக் கட்டி கட்டித் தூங்கவிட்டு கீழே தேங்காய் கோம்பை
வைத்து பண்ணாடை கற்புரம் மூலம் நெருப்பூட்டி புகையூட்டுவார்கள்
வாசலுக்கு உரச் சாக்கு ஈரச்சாக்கு போடுவார்கள் அந்த சீசனில் ஊரே புகையிலை மணம் தான் உலர்த்தி எடுத்த புகையிலை பாடம் பாடமாக அடுக்கப்பட்டு பின்பு தரகர் மூலம் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும்.....!  
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

பூமி வெப்பமாகி கொண்டு வருவதற்கான சான்று.  😂 🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

431263465_820229940148920_11522818792957

மேலே இருக்கும் படத்துக்கும் இதுக்கும் விட்டகுறை தொட்ட குறை இருக்கும் போல.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

பூமி வெப்பமாகி கொண்டு வருவதற்கான சான்று.  😂 🤣

2020 இல் எடுத்த படமெங்கே?

தடை செய்து விட்டார்களோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2024 at 21:54, ஈழப்பிரியன் said:

2020 இல் எடுத்த படமெங்கே?

தடை செய்து விட்டார்களோ?

அப்படி ஒன்று இருந்தால் போடமாட்டார்களா ........ சும்மா யோசிக்காமல் அவசரப் படுகிறதே வேலையாய்ப் போச்சு........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அப்படி ஒன்று இருந்தால் போடமாட்டார்களா ........ சும்மா யோசிக்காமல் அவசரப் படுகிறதே வேலையாய்ப் போச்சு........!  😂

காட்டினா கிழுகிழுப்பு இருக்காது.

மறைக்கும் போது தான் கிழுகிழுப்பு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

AMIS DES ARBRES  · 
Rejoindre
 
Suggestions  · Krimou Elbombardi  ·   · 
Cet Arbre situé en Afrique du Sud connu sous le nom d'arbre de vie, est vieux de 1500 ans.
Les braconniers du bois ne l'ont pas vu😎😎

432779345_1543321659856973_5655161059566

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.