Jump to content

இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்!


Recommended Posts

சனி, 15 ஜூன் 2013

 

img1130615014_1_1.jpg

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்க்கு வயது 59.

திடீர் மாரடைப்பு காரணமாக அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. அவரது இல்லம் நெசப்பாக்கத்தில் உள்ளது.

அங்குதான் அவரது உடல் உள்ளது. கடைசியாக நாகராஜ சோழன் எம்.எல்.ஏ படத்தை இயக்கினார்.

50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழீழ விடுதலைக்காக உரத்த அளவில் குரல் கொடுத்தவர் அவர்.

இவரது திடீர் மரணத்தினால் திரையுலகம் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இறந்த பின்பு தனது உடலுக்கு புலிக்கொடியை போர்த்தவேண்டும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1306/15/1130615014_1.htm

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தமிழுணர்வாளர்.

 

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தமிழுணர்வாளர்.

 

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

 

புலிக்கொடி போர்க்கப்படணும்....

 
Link to comment
Share on other sites

manivannan.jpg

 

''போராட்டம் இல்லாமல் எதுவும் இல்லை'' என்பதைத் தராகமத்திரமாகக் கொண்டு, கியூபத் தலைவர் பிடல் கஸ்ரோவைப் பின்பற்றும் மணிவண்ணன், ஈழத்தமிழர் உணர்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=16691

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தமிழுணர்வாளர்.

 

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல தமிழுணர்வாளர்.

 

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

 

புலிக்கொடி போர்க்கப்படணும்....

 

 

ஓ.... கடவுளே...

காலையில்... கணனியை திறந்தவுடன், இப்படி ஒரு கெட்ட செய்தியா...

மணிவண்ணன் அண்ணா... உண்மையில், நீங்கள் எங்களிடமிருந்து விடை பெற்று விட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... கடவுளே...

காலையில்... கணனியை திறந்தவுடன், இப்படி ஒரு கெட்ட செய்தியா...

மணிவண்ணன் அண்ணா... உண்மையில், நீங்கள் எங்களிடமிருந்து விடை பெற்று விட்டீர்களா?

காலையில் ஒரு இடி விழுந்தது போல்....... எமக்கு மட்டும் ஏன் ஏன் இவ்வாறு.....எம்மை  நேசிப்போர் அற்ப ஆயுளில்  சிறி........... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு இடி விழுந்தது போல்....... எமக்கு மட்டும் ஏன் ஏன் இவ்வாறு.....எம்மை  நேசிப்போர் அற்ப ஆயுளில்  சிறி........... :(  :(  :(

 

அவரின்... மறைவை நம்ப, மனம் மறுக்கின்றது விசுகு.

கண்களில்... கண்ணீர் நிரம்பி வழிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்... மறைவை நம்ப, மனம் மறுக்கின்றது விசுகு.

கண்களில்... கண்ணீர் நிரம்பி வழிகின்றது.

 

உண்மை

ஒவ்வொரு ஈழத்தமிழனின் நெஞ்சிலும் இருப்பார் அவர்.

காலையில் வந்தவுடன் பார்த்ததிலிருந்து என்   சொந்தஅண்ணனை  இழந்தது போல்... :(  :(  :(  :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுணர்வும், ஈழத் தமிழர்களின் விடிவிற்காக குரல் கொடுத்தவருமான இயக்குநர்/நடிகர் மணிவண்ணனின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

நல்ல தமிழுணர்வாளர்.

 

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

 

புலிக்கொடி போர்க்கப்படணும்....

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவலச்செய்தியை கண்கள் வாசித்தாலும் மனம் நம்பமறுக்கின்றது.....யார்....யாரோ எல்லாம் போகவேண்டிய நேரத்திலும் போகாமலிருக்க இப்படியான நல்ல உள்ளங்கள் பாதியில் நம்மை விட்டு போகின்றார்களே???????வார்த்தைகள் வரவில்லை..
 
கண்ணீர் அஞ்சலி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணிர் அஞ்சலிகளும். அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும் !!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் மாக்ஸ், லெனின் மாவோ ஆகியோரின் வாழ்க்கையைப் படித்தபின்புதான் தமிழ்ச் சினிமா உலகிற்கே வந்தேன். என்னிடம் வாழ்க்கையைத் தவிர இழப்பதற்கு எதுவுமேயில்லை. நான் ஈழத்தில் பிறந்திருந்தால் எனது தேசியத் தலைவரின் கீழ் சேவை செய்து எனதுயிரைத் தியாகம் செய்திருப்பேன். நான் இறந்தால் எனது உடலை புலிக்கொடியில் சுற்றுங்கள், வேறு எந்த சடங்குகளும் இல்லாமல் என்னை அடக்கம் செய்யுங்கள்........................................................"

 

மணிவண்ணன் அண்ணா அவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்த வார்த்தைகள்.

 

உங்களை மறக்கமுடியவில்லை அண்ணா....போய்வாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்
 
15-manivannan321-600.jpg
 
மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார்.
 
மணிவண்ணன் உடலுக்கு புலிக்கொடி மரியாதை பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன். இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது, அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார்.
 
தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர். தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், "நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன்.
 
என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை," என்று கூறினார்.
 
நிறைவேற்றிய சீமான்... அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். இன்று மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த சீமான், அவர் உடலில் புலிக்கொடியைப் போர்த்தினார். நாளை மாலை மணிவண்ணனின் இறுதிச் சடங்கு சென்னை அருகே போரூரில் நடக்கிறது. மணிவண்ணனின் கேகே நகர் வீட்டிலிருந்து புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரை அடக்கம் செய்கிறார்கள்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/06/seeman-comletes-the-last-wish-manivannan-177198.html
Link to comment
Share on other sites

தமிழின உணர்வாளர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகிறார்கள்..! காலையிலே மிக அதிர்ச்சியான செய்தி.. ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.