Jump to content

முதல் காதல் கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் காதல் என்றும் மறக்க முடியாது. 

காதல் கடிதம் நல்லா இருக்கு. தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் காதல் கடிதம் கொடுப்பதற்கு இருக்கும் படபடப்பு அனுபவித்தால்தான் கிடைக்கும்.. பகலவன் படபடப்பாரா தெரியவில்லை! 

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் பகலவன். 

காதல் கதை வாசிக்க வாசிக்க திகட்டாது.  :wub:  காதல் 'வாசிக்கும் போது மட்டும்' எப்பொழுதும் இனிமையானதுதான். :wub:  :)

 

நன்றி கவிதை. இதை நான் எழுதுறதுக்கு பின்னால நிறைய அரசியல் காரணங்களும் இருக்கு என்றால் நீங்கள் நம்பவா போறீங்கள். :lol:

 

பகலவன்.. :D

 

உங்கள் எழுத்து நடையை மிகவும் விரும்பி இரசித்தேன்.. மெல்லிய.. இல்லை.. வல்லிய நகைச்சுவை இழையோடுகிறது.. :D வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..! :)

 

இசை அது நானா எழுதிறதில்லை தானா வருகுது. இணைந்திருங்கள் 

 

ஒளியிலே தெரிவது தேவதையா ? பின்னணியில் பாடியிருக்குமே .

தொடருங்கள் .

 

உண்மையா அர்ஜுன் அண்ணா, அந்த காலத்திலே இந்த பாட்டு வரவில்லை. இல்லை என்றால் நிச்சயமாக அந்த பாட்டு தான் வந்திருக்கும்.

 

அதை விட அதிகமான எழுத்துப் பிழைகள்

 

அக்கா கேட்டால் குறை நெனைக்க மாட்டீங்களே. உங்கட அப்பாவுக்கு பெயர் நெகடிவ் ஆ..?? :icon_idea:  சும்மா பகிடிக்கு தான் கேட்டேன். அடுத்து வரும் பகுதிகளில் கூடிய அளவு எழுத்து பிழைகளை தவிர்க்கிறேன். 

 

பகலவன் கதையை நல்லாய் தான் கொண்டு போறியள், கெதியாய் எழுதுங்கோ

 

ஏன் அலை அக்கா அடுப்பிலே ஏதாவது வைச்சிட்டு வந்தனீங்களே. நீங்களும் சாந்தி அக்காவும் எப்ப பார்த்தாலும் கெதியா எழுதுங்கோ என்றே சொல்லுறீங்கள் . பகிடிக்கு தான்  :lol:

 

திவ்யா .... என்ற கனவோடு..
 
உங்கடை தலைவியை திவ்வியமாய் சந்திச்சியளோ இல்லையோ ??  மனுசனுக்கு விசரைக் கிளப்பாதையுங்கோ  :lol:  :lol: . நல்லாய் கதையைக் கொண்டுபோறியள்  .வகுப்பேற்றப்பட்டுள்ளீர்கள் 100 / 99 :D :D .

 

மிக்க நன்றி ஆசானே ..

 

முதல் காதல் என்றும் மறக்க முடியாது. 

காதல் கடிதம் நல்லா இருக்கு. தொடருங்கோ

 

கறுப்பி, நீங்கள் பொம்பிளை என்று நினைச்சு உங்களுக்கு கடிதம் கொடுப்பம் என்று நினைச்ச காலமும் இருந்தது. குறை நினைகாதேங்கோ  :lol:

 

முதல் காதல் கடிதம் கொடுப்பதற்கு இருக்கும் படபடப்பு அனுபவித்தால்தான் கிடைக்கும்.. பகலவன் படபடப்பாரா தெரியவில்லை! 

 

கிருபன் நீங்களுமா ..??? 

 

தொடருங்கள் அண்ணா. வீட்ட போகத்தான் பூசை தொடங்கப்போகுது :lol:

 

மாயன் கலண்டரை நான் நம்பவில்லை. ஆனால் உங்கள் வாக்கை நம்புகிறேன் தும்பளையான்.  :lol:

 

 

 

Link to comment
Share on other sites

கடசில தனுஷ் மாதிரி திவ்யா திவ்யா திவ்யா திவ்யா என்று ஆகம இருந்தா சரி :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிருபன் நீங்களுமா ..??? 

 

கடிதங்கள் எழுதியது, கொடுத்தது, நண்பர்களுக்காக எழுதியது (தமிழிலும் ஆங்கிலத்திலும்!) , நண்பர்களுக்காகக் கொடுத்தது இப்படி எத்தனையோ அனுபவங்கள் இருக்கு, எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டுள்ளதால் கசியாமல் உள்ளேயே வைத்திருக்கின்றேன்..

Link to comment
Share on other sites

ஒரு பச்சை சுடிதாரில், நான் குட்டி பிள்ளையாருக்கு வைச்ச ரோசாப்பூவை தலைக்கு வைச்சபடி திவ்யா என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். கூட வந்த வெண்ணிலாவும் பாதியிலே நின்றுவிட்டாள். நான் கோயில் சுவர் ஒன்றிலே சாய்ந்தபடி ஒரு தலைராகம் விஜயன் போல கோயில் கூரையை  பார்த்து கொண்டு இருந்தன். 

 

நண்பன் தான் சுரண்டி மச்சான் உன்னட்ட தாண்டா வாறாள்.. என்றான். நான் சீ அப்படி இருக்காது அவளாவது என்னட்ட வராத.... நான் சொல்லி முடிக்கவில்லை எண்ட ரோசாப்பு வாசம்.

 

எண்ட நண்பன் கழண்டிட்டான். அவளோ எனக்கு முன்னால.. 

ஹோம்வொர்க் செய்யாமல் வகுப்பு வாத்திக்கு முன்னால நிக்கறமாதிரி கால் பெருவிரலை மடிச்சு கொண்டு, கையிலே நெட்டி முறிச்சு கொண்டு இருந்தாள். 

உள் காச்சல் ... உள்  காச்சல் என்று ஒண்டு  சொல்லுவாங்கள் கேள்விப்பட்டிருக்கிறீங்களே..

நீங்கள் கேள்விபடாட்டியும் பரவாயில்லை. எனக்கு உள் காய்ச்சலுங்கோ.. வெளியிலே சாதராணமாக இருக்கும் உடம்பு உள்ளுக்குளே 107 ல காயும்.

 

என்ன பேசுறது என்று தெரியவில்லை.

 

என்ன திவ்யா மோதகம் ஏதும் வேணுமே ..?? என்று திக்கு தடுமாறி கேட்ட போது... 

 

அண்ணா ... அண்ணா ...

 

என்ன திவ்யா இப்படி கூப்பிட்டவளோ என்று சந்தோஷபடாதீங்கள். 

 

அது எண்ட தங்கச்சி,  நல்ல கனவையும் குழப்பி, இண்டையான் எண்ட பிளானையும் குழப்பிறத்துக்கு  எண்டே வெளிகிட்டு நிண்டாள்  , திருவெம்பா பாட போறதுக்கு.

எனக்கு வந்த கோவத்துக்கு பிள்ளையாரை தான் மனசுக்குள்ளே தூசனத்தாலே திட்டினேன். ( நீங்களும் எண்ட நிலையிலே இருந்ததால் அப்படி தான் திட்டி இருந்திருப்பீன்கள்)

 

 

நான் பெரிய பாட்டுக்காரன் இல்லை. எனக்கு வேலை சேமக்கலம் அடிக்கிறது.

ஒவ்வொரு பாட்டும் முடியும் போது ஒருத்தன் சங்கு ஊதுவான், ஒருத்தன் மணி அடிப்பான், நான் தோசைகல்லு மாதிரி வட்டமா ஒரு பிளேட் இருக்கும் அதுக்கு பெயர் சேமக்கலம் அதை போட்டு மொங்கு மொங்கு என்று மொங்கிறது .

 

திவ்யா, வெண்ணிலா, எண்ட தங்கச்சி, நாலைஞ்சு கிழடுகள் சேர்ந்து பாட்டை பாடும், நாங்கள் இடைக்கிடை பாடுவம், இல்லை ஆலேலோஎம்பாவாய் என்று கடைசி வரியை மட்டும் பிலத்து  பாடிபோட்டு சேமக்கலத்தை அடிக்கிறது தான்.

 

எண்ட குரல் ஒன்றும் பெரிய பாலசுப்ரமணித்திண்ட குரல் மாதிரி இருக்காது. பச்சை விளாங்காயை உப்போட அல்லது பச்சை மிளகாயோட சாப்பிட்டு போட்டு தண்ணி விடாய்கேக்க ஆலாபனை பாடினால் எப்படி இருக்குமோ அப்படி  தான் இருக்கும் எண்ட குரல்.

 

உண்மையா தான் அண்ணே.. நான் "மண்ணில் இந்த காதல் அன்றி" பாட்டை பாடமாக்கி போட்டு அம்மா, தங்கச்சி, அண்ணா ஒருத்தரும் வீட்ல இல்லாத நேரமாய் பார்த்து கத்தி பாடினேன் பாருங்க, அம்மா அந்த காலத்திலே அறுநூறு ரூபாய் கொடுத்து  வாங்கி கொண்டுவந்த, ஒரு அலுசேசன் குறஸ் நாய் சங்கிலியை அறுத்து கொண்டு ஓடிட்டு. இண்டைக்கு மட்டும் அம்மாக்கு தெரியாது ஏன் நாய் வீட்டை விட்டு ஓடினது என்று. அம்மாவுக்கு நட்டம் 750 ரூபாய். நாய் 600 ரூபாய் சங்கிலி 150 ரூபாய்.

 

திவ்யா கூட்டம் , பாடும்போது நானும் பிலத்து பாடுவேன். அவள் என்னை பார்த்து ஒரு புன் சிரிப்பு ஒன்று சிரிப்பாள் பாருங்கோ, அவள் பாடாமல் சிவபெருமானை பார்த்து அப்படி சிரிச்சாலே போதும் அவர் பள்ளி எழுந்திடுவார் என்று தான் எனக்கு தோணும். 

அம்மா பூவரசந்தடியாலை அடிச்சும், எனக்கு "கூற்றாயினவாறு" தேவாரம் கூட வராத எனக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பா எல்லா பாட்டும் பாடமாக்கினேன் என்றால், அது மாணிக்கவாசகரின் அதிசயங்களில் ஒன்று எண்டு மட்டும் நெனைச்சு போடாதேயுங்கோ. எல்லாம் எண்ட  திவ்யாவுக்காக மட்டும் தான். 

 

ஒன்று இரண்டு வீடுக்காரர் எழும்பி ப்ளைன்ரீ, பால் ரீ போட்டு தருவினம். பாடுற பிள்ளைகளுக்கு தான் முதல்ல குடுப்பினம், எண்ட தங்கச்சி கூட எனக்கு தர முதல் குடிப்பாள், ஆனால் திவ்யா..அவளிண்ட ரீ யை எனக்கு தந்திட்டு அவள் திரும்ப வாங்கி குடிப்பாள். எண்ட நண்பன்கள் காலை சுரண்டுவாங்கள்.  நீங்களே சொல்லுங்க இதுக்கு பெயர் தான் காதலா ..??? பிளீஸ் ஹெல்ப் மீ ....!!!

 

ரீ தாற  விட்டுக்காரர் சில நாட்களில் தரமாட்டினம்,  என்ன பிரச்சனையோ எங்களுக்கு தெரியாது. ஆனால் அந்த வீடுகள் வந்த உடனே பிலத்து பாடுறதும். சங்கை பலமா ஊதுறதும், சேமகலத்தை மொங்கிறதும்  எங்களுக்கு வாடிக்கையா போச்சு.

 

ஒரு மாதிரி திருவெம்பாவும் முடிஞ்சு போச்சு..எப்படா எண்ட காதலை சொல்லுறது.

 

நண்பன் ஒரு ஐடியா சொன்னான். மச்சான் அவள் வேம்படி, நீ சென் ஜோன்ஸ் , போற வழியிலே தானே, பள்ளிக்கூடம் போகும்போது கொடு என்றான்.

 

அதுவே வினையாகும் என்று தெரியாமல் அவளுக்கான என் முதல் காதல் கடிதத்தை எழுத ஆரம்பித்தேன் ..

 

தொடரும் 

 

(எனக்கு ஒரு சின்ன டவுட் கதையை இப்படியே விட்டால் எனக்கு அடிப்பீங்களே ..???)

Link to comment
Share on other sites

சேமக்கலத்தால் மொங்குவோம்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நோ பாஸ் நோ அடிக்கலாம் மாட்டம் கதையை நாங்களே முடிச்சு வைச்சிடுவம் :D

http://m.youtube.com/watch?v=SOtHmqX5AzI

 

 

சேமக்கலத்தால் மொங்குவோம்.. :icon_mrgreen:

 

 

கையில அம்பிட்டாப் பிறகுதான் முடிவு எடுப்போம்  :lol:

 

வேணாம் நான் அழுதிடுவேன். அப்புறம் இந்த இடமெல்லாம் சுத்தம் பண்ணுறது யாரு...??? நாறிடும்  சொல்லிபுட்டேன்  :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

(எனக்கு ஒரு சின்ன டவுட் கதையை இப்படியே விட்டால் எனக்கு அடிப்பீங்களே ..???)

 

விட்டுப்பாருங்கோ பிறகு தெரியும். <_< ஒரு கட்டு அகப்பை உங்கள் துணைவிக்கு இலவச இணைப்பாகவும் அனுப்பி வைப்பதோடு  மேலதிக ஆயுதங்களும் அனுப்பி வைக்கப்படும்.

வேணாம் நான் அழுதிடுவேன். அப்புறம் இந்த இடமெல்லாம் சுத்தம் பண்ணுறது யாரு...??? நாறிடும்  சொல்லிபுட்டேன்  :lol:  :lol:  :lol:

 

பயப்பிடாதையுங்கோ அதை நந்துவும் சுண்டலும் பாத்துக் கொள்ளுவினம். :lol:

Link to comment
Share on other sites

விட்டுப்பாருங்கோ பிறகு தெரியும். <_< ஒரு கட்டு அகப்பை உங்கள் துணைவிக்கு இலவச இணைப்பாகவும் அனுப்பி வைப்பதோடு  மேலதிக ஆயுதங்களும் அனுப்பி வைக்கப்படும்.

 

பயப்பிடாதையுங்கோ அதை நந்துவும் சுண்டலும் பாத்துக் கொள்ளுவினம். :lol:

 

எங்கட அக்காவுக்கு என்னோட ஒரே குறும்புதான் போங்க.  எப்போ அக்கா சாவதேச ஆயுத வினியோகிஸ்தர் ஆகினீங்க.??  :lol:

Link to comment
Share on other sites

எங்கட அக்காவுக்கு என்னோட ஒரே குறும்புதான் போங்க.  எப்போ அக்கா சாவதேச ஆயுத வினியோகிஸ்தர் ஆகினீங்க.??  :lol:

 

நீங்கள் முதல் கடிதம் எழுதிய நேரம் ஆயுத முகவர் ஆகீட்டம். :lol:

Link to comment
Share on other sites

மச்சாளாக, என் துணைவிக்கு பேரழிவு ஆயுதங்களை கொடுக்கும் அதே நேரம், ஒரு அக்காவாக, எனக்கும் தற்காப்பு ஆயுதங்களை வழங்குமாறு, வெடிபொருள் பிரிவு மற்றும் ஆயுத வழங்கல், சேமிப்பு பிரிவு சார்பாக கேட்டு கொள்கிறேன்.  :lol:

Link to comment
Share on other sites

மச்சாளாக, என் துணைவிக்கு பேரழிவு ஆயுதங்களை கொடுக்கும் அதே நேரம், ஒரு அக்காவாக, எனக்கும் தற்காப்பு ஆயுதங்களை வழங்குமாறு, வெடிபொருள் பிரிவு மற்றும் ஆயுத வழங்கல், சேமிப்பு பிரிவு சார்பாக கேட்டு கொள்கிறேன்.  :lol:

 

மச்சாளாக தம்பியின் பாதுகாப்பில் கவனமாகவே அகப்பைகள் அன்பளிப்பு. தம்பியிடம் பெரும் ஆயுததளபாடங்களின் பாவனை கையிருப்பில் உள்ளதனால் தற்காப்புக்காக அக்கா மட்டுமே களத்தில் நிற்பாள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனின் காதல் கதை கேட்பதில் ஒரு கிளுகிளுப்பு இருகுங்கோ தொடருங்கோ

Link to comment
Share on other sites

கருத்துகளை பதிந்த அனைத்து உறவுகளுக்கு நன்றி. உங்கள் ஆதங்கமும் வேகமும் எனக்கு புரிகிறது. என்ன செய்கிறது நேரம் தான் கிடைக்குதில்லை எழுதி முடிக்க.

எனக்கு மட்டும் ஆசை இல்லையா எழுதி முடிக்க வேண்டும் என்று :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எண்ட நண்பன் கழண்டிட்டான். அவளோ எனக்கு முன்னால.. 

ஹோம்வொர்க் செய்யாமல் வகுப்பு வாத்திக்கு முன்னால நிக்கறமாதிரி கால் பெருவிரலை மடிச்சு கொண்டு, கையிலே நெட்டி முறிச்சு கொண்டு இருந்தாள். 

பகலவன், இது கதை போலத் தெரியேல்லை!

 

கால் விரலால, நிலத்தில ஒரு அரை வட்டமும் போட்டிருக்க வேணுமே?

 

மிகவும் நகைச்சுப்வையாக எழுதுகின்றீர்கள்!

 

அல்சேசன் நாய்க்கதை அருமை! நான் பாடியிருந்தால், அது ஓடியிருக்காது!

சேர்ந்து பாடியிருக்கும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து சிரிப்போடு வாசிக்கத் தூண்டுகிறது பகலவன்.

Link to comment
Share on other sites

அந்த காலத்திலேயே காதல் கடிதம் எழுதிறது என்றால் பெரிய கஷ்டம் இல்லை. நாலைஞ்சு சினிமா பாடல்களை உல்டா பண்ணி, ஆட்டோகிராபிலே எழுதி இருக்கும் வசனங்களை சேர்த்து, எழுதினால் போச்சு.

நானும் எழுதினேன்.

ஆருயிர் காதலி திவ்யா,

ஆழ்கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது.
வானத்திலே இருக்கும் நட்சத்திரங்கள் அழிந்தாலும் என் இதயத்தில் உன் காதல் அழியாது.
சுட சுட தேநீர் குடிக்கும்போது வாயிலே சுட்டால் என்னை நினை..

(சீ வெட்கமாக இல்லை உங்களுக்கு அடுத்தவன் காதல் கடித்ததை இப்படி சத்தமாக படிப்பதற்கு)

அது இது என்று எடுத்து விட்டு ஒரு கடிதம் எழுதி என்னுடைய பிரேமதாச புண்ணியத்திலே கிடைச்ச வெள்ளை துணியிலே, தைச்ச பள்ளிகூட உடுப்புக்குள்ளே, ஒளிச்சு வைச்சேன்.

அண்டைக்கு காலமை வழக்கத்துக்கு மாறாக, இரண்டு முறை அரை டிரம் தண்ணியிலே குளிச்சு, (வெட்டின அரை ட்ரம்ல தண்ணி நிரப்பி தான் குளிக்கிறது வழக்கம் ) அமத்தி அமத்தி இனிமேலே பல்லால கடிச்சு இழுத்தால் வரும் என்ற Fair அண்ட் lovely கிரீமை, கத்தியால இரண்டாக வெட்டி, இருந்த கிரீம் எல்லாம் எடுத்து முகத்திலே தடவி எட்டுமணிக்கே, சண்முகத்திண்ட சைக்கிள் கடையிலே வந்து நிண்டேன்.

மஞ்சளும் கறுப்பும் டை கட்டிய யாரை பார்த்தாலும் திவ்யாபோலவே இருந்தது. சத்தியமா அது தான் உண்மை. நீங்களும் நிண்டு பாருங்க நான் சொல்லுறது எவ்வளவு உண்மை என்று தெரியும்.

எங்கேயோ எமாலந்தி கொண்டு இருந்திட்டு திடீர் என்று திரும்பினால் வெண்ணிலாவும், என் திவ்யாவும் சைக்கிளுக்கு காத்தடிச்சு கொண்டு இருந்தாளுகள். அவளவை வெளிக்கிட நானும் விட்டு கலைச்சு கொண்டு, கலட்டி சந்தி, லேடீஸ் காலேஜ் சந்தி, நீராவியடி, நாவலர் சந்தி, என்று அவளுக்கு கிளைமோர் பாதுகாப்பு கொடுக்கிற மாதிரி நான் முதல்ல போய் சந்தியிலே நிண்டும் கடிதத்தை கொடுக்க முடியவில்லை. எப்படியும் வின்சன்ட் தியட்டரடி, அல்லது ஆஸ்பத்திரி பின் ரோடு, ஞானம் ஹோட்டலடியிலே ஆவது கொடுத்துவிட வேண்டும். அவளும் என்னை திரும்பி திரும்பி பார்த்தபடி தான் சைக்கிள் ஓடினாள்.

காத்துக்கு பறக்கும் வெள்ளை சட்டையை ஒரு கையால் அமத்தினபடி, சைக்கிளை ஒரு கையால் ஓடியபடி அவள் பின்னுக்கு திரும்பி பார்க்கும் அழகு இருக்கே, இதுக்கே நான் ஆயிரம் முறை அவளை லவ் பண்ணலாம் என்று தோணும்.

பழைய சயின்ஸ் ஹோலும் தாண்டியாச்சு, சீ ..சரியான தருணம் வாய்க்கலையே.

ஆஸ்பத்திரி மொச்சரி கால்வாய் மணத்துக்குள்ளே, எண்ட தெய்வீகமான காதல் கடிததத்தை கொடுக்க எனக்கு மனசு வரவில்லை.

வேம்படி சந்தியை விட்டால் நான் சென் ஜோன்சுக்கு மற்ற பக்கம் திரும்ப வேண்டும். என்ன ஆனாலும் சரி வேம்படி சந்தியிலே கொடுக்க வேணும் என்று, இதயம் 120 தரம் துடிக்க, எட்டி அவளின் சைக்கிள் காண்டிலை பிடிச்சன். வெண்ணிலா கொஞ்சம் பின்வாங்க நான் பொக்கேட்டுக்குள்ளே இருந்து கடிதத்தை எடுக்க... கறுப்பன் டோய் என்று கூப்பிட்டான்.

யாரிந்த கறுப்பன்..???

வேம்படி சந்தியிலே சிவப்பும் வெள்ளையும் பெயிண்ட் அடிச்ச, அரை ட்ரம்முக்கு மேலே, ஒரு வெள்ளை சொக்சை, கைக்கு மாட்டி கொண்டு,வெள்ளை ஹெல்மட்டையும் போட்டு கொண்டு கத்தரி தோட்டத்து வெருளி மாதிரி (என்ன மாதிரி..வெருளியே தான் ) ஒரு தமிழீழ காவல்துறை அதிகாரி நிற்பானே,அவன்தான் கறுப்பன். (கறுப்பன் எங்கட பட்ட பெயர் தான் அவனுக்கு உண்மையான பெயர் விக்னேஸ்வரனோ.. என்னமோ ).

அவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை...??

கொஞ்சம் பிளாஸ்பேக் போவோமா..

ஒரு ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினம்,எப்படியும் சுண்டுக்குளி பெட்டைகளுக்கு மை அடிச்சே தீருவது என்று, பழைய சிரிஞ்சுகுள்ளேயும், தையல் மெசினுக்கு விடுற சிங்கர் ஒயில் போத்திலுக்குள்ளேயும், ஹீரோ ப்ளூ ink கரைச்சு பள்ளிகூடத்திலே நாங்கள் தாக்குதலுக்கு ரெடி.

எங்கட ப்ரின்சி தனபாலோ ( இப்போ மறைந்து விட்டார் மன்னிக்கவும்), சுண்டுக்குளி பள்ளிக்கூடம் விட்டு 10 நிமிசத்துக்கு பிறகு தான் எங்கட பள்ளிக்கூடம் விடுறமாதிரி,டைம் டேபிள் போட்டு வைச்சிருந்தான். எங்கட ஹெட் மாஸ்டர் அந்தோனிப்பிள்ளையும், தான் தான் டிசிப்ளின் பொறுப்பாளர் என்று திரியும் சந்திரமௌலியும் எங்களை கண்கொத்தி பாம்பாக கண்காணிச்சு கொண்டு இருக்க, எண்ட பிரண்ட் தவேந்திரன் மணியடிக்கிற கணேசுக்கு கதையை கொடுத்து லைபிரரி வாசல்ல மறிச்சு வைக்க,நானும் முரளியும் கடைசி பெல்லை பத்து நிமிசத்துக்கு முதலே அடிச்சு போட்டம்.

கணேசு ஆரடா மணி அடிச்சது ... பேத்தை வண்டியை தள்ளி தள்ளி கொண்டு வருவதற்குள் பெடியள் எல்லாம் புத்தீசல் மாதிரி வகுப்பை விட்டு வெளியிலே ஓடிகொண்டிருந்தாங்கள்.

சரி நாங்களும் வந்திட்டம். சுண்டுக்குளி பெட்டைகளுக்கு கலைச்சு கலைச்சு மையடிச்சம்.நான் எப்படியும் கிப்பி எடுப்புகாரி கதரீனாவுக்கு மை அடிச்சே தீருவது ரக்கா ரோட்டால கலைச்சு கொண்டுவந்து, டெம்பிள் ரோட்டிலே வைச்சு அவளிண்ட கழுத்துக்கு நேராக (உண்மையிலே கொஞ்சம் கீழே தான்..) மையை சிரிஞ்சிலே இருந்து அடிக்க,அவளும் நான் அடிகிறதை பார்த்து குனிய, ICRC மூலையிலே, எங்கட கறுப்பன் கடலை போட்டு கொண்டிருந்த பெண்காவல்துறையின் முன் சட்டை எல்லாம் நீல ink வஞ்சகம் பாராது சீறி அடித்தது. அது தான் எனக்கும் கறுப்பனுக்குமான முதல் சந்திப்பு.

பிறகு என்ன.... கும்கி படத்திலே வாற கொம்பன் ரேஞ்சிலே அவனும், கோயில்யானை மாணிக்கம் ரேஞ்சிலே நானும்.

ஓல்ட் பார்க் காவல் நிலையத்திலே வைச்சு செவ்விளனி பச்சைமட்டை தும்பாக மாறுமட்டும் அடிச்சான். இனிமேலே என் கண்ணிலே மட்டும் மாட்டாதே என்று சொல்லி அனுப்பினான்.


நல்லூர் தீர்த்த திருவிழா.

அது மட்டும் கடற்சாராணனாக, சங்கிலியன் வீதியில் அறிவொளி தனியார் கல்லூரிக்கு முன்னால் , வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் பெட்டைகளுக்கு கலர்ஸ் காட்டி கொண்டிருந்த நான், தீர்த்தத்துக்கு மட்டும் விடுப்பு கேட்டு, கேணியிலே வேட்டி சால்வையுடன் பக்திமானாக தீர்த்தமாடி கொண்டு இருந்தேன்.

வயசு பசங்களுக்கு மட்டும் தெரியும் ஏன் நாங்கள் தீர்த்தாமடுவோம் என்று. கேணியின் படிகரையில் நிற்கும் பெண்களுக்கு தீர்த்த தண்ணியை அள்ளி எத்தி கொண்டு, அவளவையின் வெட்கத்திலும் சிரிப்பிலும் புண்ணியம் தேடி கொண்டு இருந்தோம.

நானும் எண்ட பிரண்டும் ஒரு ஐடியா போட்டோம். கேணிக்கு உள்ளே இறங்காமல் வெளியே நிக்கும் பிகருகளுக்கு சால்வைக்குள்ளே தண்ணியை அள்ளி கொண்டு போய் எத்துவோம் என்று. கடமையில் இருந்த காவல்துறையின் கண்ணிலே மண்ணைத்தூவி கொண்டு,சால்வைக்குள் தீர்த்த தண்ணியை எடுத்து கொண்டு,அழகான பிகர்களை இரண்டு சோடி கண்கள் தேடின (வேற யாரு நானும் என் பிரண்டும் தான்). கிடைச்சுது ஒரு சுப்பர் பிகர். கைகளால் ஒரு எத்து எத்தினோம். அந்த அழகான சேலையில் நனைந்து இன்னும் அழகாக தெரிந்தாள் . முகத்திலே சிரிப்பு மறைந்து கோப கோடுகள். அது கூட அழகாக தான் இருந்தன.

என்னங்க.. என்று யாரையோ கூப்பிட்டாள்.

இரண்டு முரட்டு கரங்கள் எங்கள் கழுத்தை இறுக்கின. மெதுவாக தலையை திருப்பி பார்த்தேன்.

கொ.....ம்.....ப.....ன் ...சீ சீ ..கறுப்பன்.

கறுப்பன் மனுசியா அவள்...

கடலை போட்ட பெட்டைக்கு மை அடிச்சதுக்கே பச்சை மட்டை தும்பானது.

என்ன இந்த முறை முத்திரைச்சந்தி பண்டிகைகால காவல் நிலைய தும்புத்தடி, மாவாக மாறி இருக்கும்.

அதை கூட எண்ட வாயால நீங்க கேட்கணுமா.. அவ்வளவு கல் நெஞ்சமா உங்களுக்கு..



சரி இப்போ நிகழ்காலத்துக்கு வாறன்..

கறுப்பன் என்னையும் அவளையும் மறிச்சு, வேம்படி சந்தி ஓரத்திலே நிக்க சொல்லிவிட்டு அவனின் வீதிகடமைக்கு போய்விட்டான். அண்டைக்கு பள்ளி கூடம் போற எல்லாரும் என்னையும் அவளையும் பார்த்தபடியே சென்றனர்.

வேம்படியில் டிசிப்பிளின் டீச்சர் என்று பெயர் போன எனது சித்தி மிசிஸ் ஜெயபாலன் உட்பட..

தொடரும்




(சில நாகரீகமற்ற வார்த்தைகள் இருந்தால் பெண்கள் என்னை மன்னிக்கவும், அந்த காலத்தில் எனக்கு இருந்த மனநிலையிலேயே இந்த கதையை எழுதி வருகிறேன்)

Link to comment
Share on other sites

எத்தினை பச்சை மட்டையால அடிவாங்கினாலும் விடாத விக்கிரமாதித்தன் மாதிரி... உங்கட விடாமுயற்சி பாராட்டுதலுக்கு உரியது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'காதல்" எப்போது எப்படி உச்சரித்தாலும்.....இனிக்கும்**(அதை உணர்ந்தவர்களுக்கு**:).

 

யாழ்ப்பாணக் கதையிருக்கே....'ஏமலாந்தி,,,,இருக்கிறாளவை....:) இன்னும் இன்னும் எனக்கு ஊர் நினைவுகளை அப்படியே மீட்டுக்கொண்டு வந்துவிட்டது.

 

நல்ல எழுத்தோட்டம். வாசிக்கும் ஆவல் அதிகரிக்கின்றது. ...தொடருங்கள்!..

Link to comment
Share on other sites

பெட்டைக்கு மைதானே அடிச்சியள் :lol: :lol: . இதுக்கு பச்சை மட்டையா :o  :o   ?? அட பெட்டையளுக்கு மையும் அடிக்காட்டி நீங்கள் பெடியானாய் இருந்தும் வேலையில்லை எண்டு தெரியாதோ  :(  :(  ??

 

வாழ்துக்கள் சுழட்டல் மன்னா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.