Jump to content

"காய்....பேய்காய்"இறுதிப்பாகம் (1&2)

Recommended Posts

புத்தன் நீங்கள் ஒரு பேய்காய் தான் .. தொடருங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.

சரக்கு, காய் , மூஸ் , எல்லாம் காதலிகளை குறிக்கும் வட்டார சொற்கள். அவரவர் வாழ்ந்த காலபகுதிக்கு ஏற்ப பெயர்கள் தான் மாறி இருக்கின்றனவே ஒழிய உணர்வுகள் மாறவில்லை.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

"சீ சீ அப்படியிருக்காது"

ஆங்கில டியுசன் முடிய அநேகமாக நான் அவனது றூமூக்கு போவது வழக்கம் .அந்த காயை கொழுவியதின் பின்பு என்னை அவன் ஒதுக்குவது(காய் வெட்டுவது)நன்றாக புரிந்தது. இருந்தும் தொடர்ந்தும் அவனது அறைக்கு சென்று வந்தேன்.

"மச்சான் இன்றைக்கு காய் றூமூக்கு வாரது என்று சொன்னது, நீ டியுசன் முடிய வரவேண்டாம் டாப்பா"

"காய் என்று சொல்லாமல் பெயரை சொல்லலாம் தானே"

"கலியாணம் கட்டினால் கலா என்று அழைப்போம் இப்ப காய் தான்"

"சரி சரி எதோ நடத்து"

வகுப்பு முடிந்தவுடன் எனது வீட்டை போகமல் சற்று தொலைவில் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.உண்மையிலயே கலா இவனது அறைக்கு செல்கிறாள என்று.10 நிமிடங்களின் பின்பு கலா அவன் இருந்த வீட்டின் கேட் அருகே வந்து நின்று இரு புறமும் பார்த்து விட்டு உடனடியாக உள்ளே சென்று விட்டாள்.

இதற்குமேல் கலாவை அவன் மடக்கி போட்டான் என்பதற்கு எந்த சாட்சியும்

தேவையில்லை என்று எண்ணியபடியே வீடு சென்றேன்.

அடுத்த முறை வகுப்புக்கு போக முதல் அவனது றூமூக்கு போக நினைத்து போட்டு தவிர்த்து கொண்டேன்.வர வேண்டாம் என்று சொன்னவனின் இடத்து ஏன் போவான் என்ற கெளரவம் தடுத்தாலும் கணக்கு வகுப்பில் நடந்தை அறிய மனம் துடித்தது.

வகுப்புக்கு முதலே அவனது றூமூக்கு சென்றேன் .உற்சாகமாக வரவேற்றான்.

"எப்படியடாப்பா அன்றைய கணக்கு பாடம் போச்சு.."

"காய் துணிச்சது ஆங்கில டியுசன் முடிய சினேகிதி வீட்டை போறன் என்று பொய் சொல்லி போட்டு வந்திருக்கு ஒரு பெட்டை தனிய றூமுக்குள்ள இருந்தா படிப்பு எங்க வரப்போகுது.காதல்தான் வரும்"

அவள் வருவது தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் சொன்னான் மச்சான் காலை தட்டினேன் பேசாமல் இருந்தாள் .

"நீ சும்மா விடமாட்டியே"

"விசயத்தை முடிச்சிட்டேன்"

"டேய் டேய் பத்திக் கித்தி போகப் போகுது"

"அந்த விசயத்தில நான் உசார் மச்சான்"

"எதோ நடத்துராசா நடத்து உன் காட்டில மழை"

அவன் சொன்ன விடயத்தில் உண்மை இருக்ககூடும் காரணம் இந்த விடயத்தில் அவன் துணிந்து செயல் படக்கூடியவன்.ஏற்கனவே ஒரு பெண்னிடம் அடிவாங்கிய அனுபவமும் உண்டு.

"கலியாணம் கட்டுற யோசனை இருக்கோ அல்லது காய் வெட்டுற பிளானொ?"

"அதை அந்த நேரத்தில் பார்ப்போம்"

"என்னடா இப்படி சொல்லுறாய்"

கலா இந்தியாவுக்கு படிக்க போறாள் மச்சான் என்று ஒரு நாள் சொன்னான்.

இனி எல்லாம் கடிதப்போக்குவரத்துதான்.

இந்தியா போனவுடனே அவள் கடிதம் போட்டிருந்தாள்.இவன் பதில் போடவில்லை .அவள் பல கடிதங்கள் போட்டிருந்தாள் இவன் மறுமொழி போடவேயில்லை.

சில கடிதங்களை அவன் உடைத்தே பார்க்கவில்லை மேசையில் கவனிப்பாரற்று கிடந்தது.

"என்ன மச்சான் பதில் போடவில்லையோ"

"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க"......

முற்றும்..

முக்கிய குறிப்பு:தொடர்கதை எழுதுவதில் புத்தன் தோல்வியை தழுவியதால் இனிமேல் குட்டி கிறுக்கல் மட்டும் தான் புத்தன் கிறுக்குவான் இத்தாள் அறியதருகிரேன்...

மீண்டும் ஒரு கிறுக்கலில் சந்திக்கும் வரை ...கப்டன் ஆர் ஆர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க"

தொடரும் அனுபவத்துடன், மீண்டும் புத்தன்! நன்றிகள்!

இது ஒரு முக்கியமான வசனம், புத்தன்!

எனக்கும் ஒருவர், இப்படிக் கூறித் தனது, கோழைத்தனத்தை, உறுதிப் படுத்தினார்!

இது உண்மையில், காதலல்ல! அந்த வயதில், இரு பாலருக்குமிடையே ஏற்படும், ஒரு விதமான, உடற்கவர்ச்சி போல உள்ளது!

காதலுக்குரிய, அந்த வீரம், இருவரிடமும் இல்லை, என்பதே எனது கருத்து!

அதென்ன கப்டன்?

புத்தனும், இராணுவ ஆட்சிக்கு,அடிபணிந்து விட்டானா? :D

Link to comment
Share on other sites

"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க"......

பரவணிப் புத்தியை காட்டிப்போட்டியளே புத்து :lol: :lol: வாழ்த்துக்கள் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க".....

இப்பிடியான மாப்பிளைமார் கலியாணம் கட்டினபிறகும் சந்தேகத்திலை மனுசிமாருக்கு பின்னாலையே அலையுறதை கண்ணாலை கண்டுருக்கிறன்........நல்லவிசயத்தை சொல்லியிருக்கிறியள்.

Link to comment
Share on other sites

ஆண்கள் பெண்களின் பலகினத்தை பயபடுத்திவிட்டு, அவர்களின் மீதே பழிபோடுவது என்ன நியாயம்?

உங்கள் மனது எப்படியோ அப்படியே பெண்ணும் வாய்ப்பார்கள்

நன்றி உங்கள் பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

டேடிங் இல் கடசியில யாருக்கு பாதிப்பு ??

[size=4]"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க".....[/size]

இது கட்டாயம் ஒரு ஆணுடைய வசனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு பெண்ணிடம் இந்தக் கதைய வாசிக்கச் சொல்லிப்போட்டு கதையில வந்தவளைப்பற்றிக் கேட்டுப் பாருங்கள். அவர்களும் அனேகமாக இப்படித்தான் சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான மாப்பிளைமார் கலியாணம் கட்டினபிறகும் சந்தேகத்திலை மனுசிமாருக்கு பின்னாலையே அலையுறதை கண்ணாலை கண்டுருக்கிறன்........நல்லவிசயத்தை சொல்லியிருக்கிறியள்.

எனது கருத்தும் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் அனுபவத்துடன், மீண்டும் புத்தன்! நன்றிகள்!

இது ஒரு முக்கியமான வசனம், புத்தன்!

எனக்கும் ஒருவர், இப்படிக் கூறித் தனது, கோழைத்தனத்தை, உறுதிப் படுத்தினார்!

இது உண்மையில், காதலல்ல! அந்த வயதில், இரு பாலருக்குமிடையே ஏற்படும், ஒரு விதமான, உடற்கவர்ச்சி போல உள்ளது!

காதலுக்குரிய, அந்த வீரம், இருவரிடமும் இல்லை, என்பதே எனது கருத்து!

அதென்ன கப்டன்?

புத்தனும், இராணுவ ஆட்சிக்கு,அடிபணிந்து விட்டானா? :D

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் புங்கையூரன்...அடுத்த கிறுக்கல் "கப்டன்" ஆர் ஆர்...:D

"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க"......

பரவணிப் புத்தியை காட்டிப்போட்டியளே புத்து :lol: :lol: வாழ்த்துக்கள் :) .

நன்றிகள் கோமகன் ....மண்வாசனை....எங்க போகும்...:D

இப்பிடியான மாப்பிளைமார் கலியாணம் கட்டினபிறகும் சந்தேகத்திலை மனுசிமாருக்கு பின்னாலையே அலையுறதை கண்ணாலை கண்டுருக்கிறன்........நல்லவிசயத்தை சொல்லியிருக்கிறியள்.

நன்றிகள் கு.சா இப்படியான பலரை நானும் கண்டிருக்கிறேன்....

ஆண்கள் பெண்களின் பலகினத்தை பயபடுத்திவிட்டு, அவர்களின் மீதே பழிபோடுவது என்ன நியாயம்?

உங்கள் மனது எப்படியோ அப்படியே பெண்ணும் வாய்ப்பார்கள்

நன்றி உங்கள் பகிர்வுக்கு

நன்றிகள் வந்தியதேவன்.....நேரத்திற்கும் கருத்து பகிர்வுக்கும்

டேடிங் இல் கடசியில யாருக்கு பாதிப்பு ??

இது கட்டாயம் ஒரு ஆணுடைய வசனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு பெண்ணிடம் இந்தக் கதைய வாசிக்கச் சொல்லிப்போட்டு கதையில வந்தவளைப்பற்றிக் கேட்டுப் பாருங்கள். அவர்களும் அனேகமாக இப்படித்தான் சொல்வார்கள்.

நன்றிகள் ஈசன்

எனது கருத்தும் இதுதான்.

நன்றிகள் அப்பு சொந்த கருத்து எங்கே?:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.