Jump to content

விடை கொடு விடை கொடு மண்ணே


Recommended Posts

அமெரிக்காவினால் கொல்லப் பட்ட சே கு வேராவை அதே அமெரிக்காவே கதாநாயகனாக்கி படமாக்கியும். சேயின் படம் பொறித்த ரீ சேட்டில் தொடங்கி தொப்பி சுருட்டு கவானா கிளப் என்கிற இரவு விடுதி வரை துறந்து பெரும் பணம் சம்பாதித்ததுபோல் இலங்கையரசும் பணம் சம்பாதிக்கின்றது. அது மட்டுமல்ல எம்மை பயமுறுத்திய புலியை சுட்டு கொன்று அதன் தோலை உரித்து பாடம் பண்ணி பார்வைக்காக தொங்க விட்டிருக்கிறோம் பார்த்து படமெடுத்து போங்கள் இனி வரும் காலங்களிலும் யாராவது எம்மை எதிர்த்தால் இப்படித்தான் நடக்கும் என்கிற உளவியல் யுத்தமும் நடக்கிறது அதுதான் அவர்களது தேவை. எமது இனத்திறகாக போராடிய எம்மினத்தவர்களை கொலை செய்து அதனையே காட்சி பெருளாக்கி அதைனையே வியாபாரமாக்கி அங்கு எம்மவரையே கவர்ந்திழுத்து அதிலும் எம்மவரை படமெடுத்து பெருமுச்சு விட்டு விடவைத்து மனம் கனக்க வைத்து பணம் கறந்து வழியனுப்பும் சிங்களத்தை நாங்கள் இன்னமும் மோட்டு சிங்களவன் என்று திட்டியபடி.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் போகக் குடுப்பினை இல்லாதவை அடுத்த வருடம் போய் இன்னமும் நல்ல படங்களையும் கதைகளையும் எழுதுங்கள். கட்டாயம் வாசிப்போம்.

தேசியம், தமிழீழம், போராளிகள், முன்னாள் போராளிகள் அவர்களின் அவலங்கள் எல்லாவற்றிலும் நானும் என்னுடைய அபிப்பிராயங்களும்தான் முக்கியம்! இல்லாவிட்டால் எனக்கும் பொழுது போகாதுதானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு அங்கு ஆச்சரியம் தரும் விடயம் என்னவென்றால் பாக்கிஸ்தான் இந்தியா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் எம்இன மாணவிகள் சிலரும் தலைநகரில் வாழும் இளம் பெண்கள் சிலரும் விடுமுறை நாட்களில் அங்குவந்து அப் பெண்களை வழிநடத்துபவர்களாக செயற்பட்ட நிலையை அறிந்து எம் இனம் இன்னும் எம் வலிமையை இழந்து விடவில்லை என்று எண்ணத்தோன்றியது.

ஓ....ஓ....இவர்கள்தான் ஆசியா யோதிக்களோ?

இன்று புலம் பெயந்த மக்கள் தனிப்பட்ட முறையிலும்,அமைப்புக்கள் என்ற முறையிலும் உதவிகள் செய்கின்றார்கள் அதை பற்றி ஒருத்தரும் இங்கு(யாழில் )எழுதுவதில்லை ஏன்?

Link to comment
Share on other sites

ஓ....ஓ....இவர்கள்தான் ஆசியா யோதிக்களோ?

இன்று புலம் பெயந்த மக்கள் தனிப்பட்ட முறையிலும்,அமைப்புக்கள் என்ற முறையிலும் உதவிகள் செய்கின்றார்கள் அதை பற்றி ஒருத்தரும் இங்கு(யாழில் )எழுதுவதில்லை ஏன்?

அதைப் பற்றிச் சொல்லச் சொல்லி சிங்களவன் சொல்லவில்லை. சொல்லிக்கொடுப்பதைத்தானே இங்கு சொல்ல முடியும். இல்லாவிட்டால் அடுத்த வருசம் ஹொலிடேவுக்குப் போகமுடியாதெல்லோ?

Link to comment
Share on other sites

கண்மணி அக்காவின் பயணக்கட்டுரை வாசித்தேன்.நல்லதொரு பதிவு.பதிவுக்கு நன்றி.சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயமாக சென்று பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

இங்கு காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்டுள்ள பல கருத்துக்களையும் பார்க்கும்போது யாழ்ப்பக்கம் வந்து எதையாவது எழுதவேண்டுமா என வருகின்ற கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இல்லாமல் போகின்றது. இங்குள்ள பலர் போல் பெருமைக்காகவும், புகழுக்காகவும் எழுதும் ஒருவர் அல்ல கண்மணி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தளவில் இங்கு காணப்படும் படங்கள் எவையும் கொண்டாட்ட மனநிலையில் எடுக்கப்பட்டவையாக தெரியவில்லை...கண்மணி அக்காவால் மிகவும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கு...மேலும் ஒருவர் என்ன நிலையில் என்ன திட்டங்களுடன் போயிருந்தார் என்று அறியாமல் மேலோட்டமாக கருத்தாடக்கூடாது..கொலிடேக்கு இலங்கை செல்வது,படம்போடுவது தவறானதொன்று..விவாதிக்கப் படவேண்டியது...ஆனால் தன்னலம் கருதாமல் பணி நிமித்தம் சென்ற சகோதரிகளை கொலிடேக்குபோனதாக சொல்லி இழிவுபடுத்துவது வேதனையான விடயம்....கொலிடேக்குப் போவவர்களைப் பற்றி பொதுத்திரி ஒன்றின் கீழ் விவாதிப்பதே ஏற்பானது..இந்தத்திரியின் கீழ் எழுதுவது தன்னலம் கருதாமல் சேவையாற்றும் அந்த சகோதரிகளை குறிவைத்து மேற்கொள்ளும் தாகுதலாக இருக்கிறது....இது அவர்களை மிகுந்த மன உழைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாக்கும் ...உறவுகள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்...நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், சுபேஸ்....

நீங்கள், யாழ்களத்தின் ந‌ம்பிக்கை நட்சத்திரங்கள் என்று... உள்மனம் கூறுகின்றதது.

மோகன் அண்ணா, ஆரம்பித்த யாழ்களத்தையும்... போக்குவரத்தின் பொற்கிளி(ழி)யையையும்...

நீங்கள் தான்.... பொறுப்பெடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கம்....ஊர் நிலவரங்களோடு தொடர்பு பட்டு இருப்பதனாலயே பலரும் கருத்துக்களை முன் வைப்பதற்கு காரணம்.....யாரும் இங்கு கண்மணி அக்கா ஊர் போனது பற்றி தப்பாக எழுத இல்லையே..தப்பு சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை...எல்லாருக்கும் இருக்கும் சுதந்திரம் தான் அக்காவுக்கும் இருக்கு..அவர் நினைத்திருந்தால் அங்குள்ள உண்மை நிலவரங்கள எழுதாமலே விட்டு இருக்கலாம் அல்லவா.....ஆகவே யாரும் யாரையும் குறை சொல்ல வர இல்லை...இது எனது நிலைப்பாடு..

Link to comment
Share on other sites

கலைஞன், சுபேஸ்....

நீங்கள், யாழ்களத்தின் ந‌ம்பிக்கை நட்சத்திரங்கள் என்று... உள்மனம் கூறுகின்றதது.

மோகன் அண்ணா, ஆரம்பித்த யாழ்களத்தையும்... போக்குவரத்தின் பொற்கிளி(ழி)யையையும்...

நீங்கள் தான்.... பொறுப்பெடுக்க வேணும்.

அது தானே கலைஞன் மற்றும் சுபேஷ் போன்ற எழுத்தாற்றல் சொல்லாற்றல் நிறைந்த அடுத்த தலை முறைதான் யாழின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கலைஞன் அண்ணா அவர்களின் பங்களிப்பு யாழில் இன்னும் கூட வேண்டும் நேரம் இல்லை என்று சொல்லாமல் நேரத்தை யாழுக்காக ஒதுக்கிங்கள்

Link to comment
Share on other sites

எங்கட சனம் நன்றிக் கடன் செய்யுறத்துக்குப் போறதுக்கும் விமர்சனமா? நாங்கள் 1984, 85 களில நாட்டை வீட்டு வெளிக்கிட்டம், கிட்டத்தட்ட 30 வரியம் போய் பார்த்து. உவங்கள் உந்தப் புலியளைச் சொல்லித் தானே அகதி அடிச்சம், பிள்ளைகளைப் பார்க்க அம்மா, அப்பாவைக் கூப்பிட்டம்., அவையளைச் சாட்டிப் பிச்சைக் காசு எடுத்தம், பிறகு இப்ப பென்சன், ,அது மட்டுமே இலங்கையில் இருந்தால் பிள்ளையள் யூனிவேசிட்டிக்குப் போயிருக்குங்களோ சா...... எட்டிப் பார்த்திருக்குங்களோ தெரியாது, அப்ப எப்பிடி நாங்கள் பின்னைப் புளுகுறது , யார் பெத்த பிள்ளையளோ அதுகள் உப்பி இருந்தவடியால் தானே இண்ண்டைக்கு நாங்கள் இந்த மாதிரி. என்னண்டாலும் இந்தப் பாளாய் போந மனம் குறுகுறுக்குதே. நிம்மதிக்காகப் போய் அந்தச் செல்லவங்களுக்கு ஒரு நன்றி (மனதில் நான் இடங்கள் பார்க்கவெல்லோ போறம்,. நல்லாய் தான் அவையளுக்கு நன்றி) சொல்ல விடமாட்டுதுகளே சிலதுகள் இங்கே!

(கண்மணியக்கா இது உங்களுக்கல்ல!!!பொதுவாக எங்கட டமிழ்களின் நிலை)

Link to comment
Share on other sites

பதிவையும் ,அனுபவத்தையும் இணைத்த காவலூர் கண்மணி அக்கா அவர்களிற்கு நன்றிகள் ....................ஆனால் இந்த சுவாரசியமான் அனுபவம் இப்படி அரசியலாய் மாறி பல முகங்களை காட்டியதை நினைக்கும் போது.............தெளிவாய் பலது தெரிகிறது .........மீண்டும் நன்றிகள் அக்கா ...............உங்களிடம் தெளிந்த பார்வையும் ,நிறைந்த உறுதியும் தெரிகிறது ...........இந்த களத்தில் தொடர்ந்து இருங்கள் .............யாழிற்கு நீங்கள் தேவை

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இது 2012ல் நான் தாயகம் சென்று வந்து என் மனஉணர்வுகளை வெளிப்படுத்திய ஆக்கம். இந்த வருடமும் நான் தாயகம் சென்று மல்லாவி மத்திய கல்லூரியில் புத்தக வெளியீடும் செய்து இன்னும் பல அனுபவங்களுடன் திரும்பினேன். ஆனாலும் என் மன உணர்வுகளை இங்கு வெளிப்படுத்த முடியாமல் சிலரின் காழ்ப்புணர்வுகளும் எதையும் அரசியல் மயமாக்கும் பார்வைகளும் என்னை எழுதவிடாமல் தடுத்து விட்டது. எம் உணர்வுகளை எழுதி ஏன் சிலபேரின் நிம்மதியை குலைக்கவேண்டும். அமைதியாக இருந்து விட்டால் அனைவருக்ககம் நிம்மதி. என் ஆக்கத்தை இன்றைய தெரிவாக தெரிவுசெய்த இணையப் பொறுப்பாளர் நியானிக்கும் என் ஆக்கத்தை வாசித்து என் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கருத்தெழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.