Jump to content

ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)


Recommended Posts

தமிழ் மக்கள் அதுவும் புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும் குரூரமானவர்கள் எனும் உங்களின் கருத்தை நான் ஏற்கவில்லை.. சிலர் குரூரமானவர்கள் என்பதுக்காக அனைவரை ஒரே வரையறைக்குள் கொண்டுவாறது நியாயம் அற்றது... கிட்டத்தட்ட சிங்கள இனவாதம் சொல்லும் அதே கருத்தை தான் நீங்களும் சொல்கிறீர்கள்...

இண்டைக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கை இருக்கும் எழுச்சியை ஏற்படாமல் இருக்க அண்று நீங்கள் தீர்க்க தரிசிகள் எண்டு சொல்லும் ஆக்கள் பாடு பட்டார்கள் எண்டதுதானே உண்மை...

செயற்படுபவர்களை தேடி தேடி காட்டி குடுத்தலும்... வீடு புகுந்து ஆவணங்கள் திருடி காவல்த்துறைக்கு குடுத்தவர்களும் தான் மேற்படி நபர்கள்... இதைத்தான் நீங்கள் தீர்க்க தரிசனம் எண்று சொல்கிறீர்களா...??

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் பேசப்பட முடியாமல் போனதற்கு இந்த புலம்பெயர் சமூகம் மிக முக்கிய காரணம்.

1. வெற்றிச் செய்திகளை மட்டுமே புலம்பெயர் சமூகம் எதிர்பார்த்து இருந்தது.

2. வெற்றிச் செய்திகளின் அடிப்படையிலேயே தனது உதவிகளை தொடர்ந்து வழங்கத் தயாராக இருந்தது

3. தோல்விகளைப் பற்றிப் பேசியவர்களை "துரோகிகள்" என்று தூற்றியது

இன்றைக்கு அப்பாவி மாதிரி நடிக்கின்றது.

இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் மன்னாரின் மடுப்பகுதி பிடிபடாதவரை புலிகள் அழியமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இந்திய இராணுவத்தின் காலத்திற்கு அப்பால் எப்போதுமே புலிகள் வசமிருந்த வவுனிக்குளம் பகுதியை இராணுவம் கைப்பற்றியபோது சகல பகுதிகளும் இழக்கப்படும் என்றுதான் புரிந்தது.

சபேசனுக்கு போரின் போக்கும் முடிவும் நன்றாகத் தெரிந்திருந்தும் கட்டுரைகள் மூலம் தெளிவுபடுத்தி மக்களைச் சோர்வடைய முனையவில்லை என்று இப்போது சொல்லுகின்றார். இதை விமர்சிக்கவேண்டிய தேவை இல்லை.

தற்போதைய நிலையில் முன்னர் நடந்தவற்றிற்கு வியாக்கியானம் கொடுப்பதைவிட, இனி என்ன நடக்கப்போகின்றது என்று ஆய்வுக்கட்டுரைகளை மீண்டும் எழுதுங்கள். மக்களுடைய உற்சாகம்/சோர்வு போன்ற உணர்ச்சிகளுக்குத் தகுந்தமாதிரி ஆய்வுக்கட்டுரைகளைச் சமைக்காமல் தெளிவாகவும் நம்பகத்தன்மையோடும் எழுதினால் நிச்சயம் வரவேற்கப்படும்.

Link to comment
Share on other sites

முன்னொரு காலகட்டத்தில் மேற்கொண்ட முடிவுகளை/கருத்துக்களை இன்னொரு காலகட்டத்தில் விமர்சிப்பது தேவையற்றது.. தேவைகளின் நிமிர்த்தமே கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

சிறீலங்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முழுமூச்சில் ஆதரித்த நாடுகளில் பல இன்று போர்க்குற்றம் எனக் குற்றம் சுமத்துகின்றன. இன்றைய நிலையில், நீங்கள் ஏன் அன்று அவ்வாறு செயற்பட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்க முடியாது. காலகட்டங்களுக்கு ஏற்ப கருத்தியலிலும் மாற்றங்கள் வருவது இயல்புதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னொரு காலகட்டத்தில் மேற்கொண்ட முடிவுகளை/கருத்துக்களை இன்னொரு காலகட்டத்தில் விமர்சிப்பது தேவையற்றது.. தேவைகளின் நிமிர்த்தமே கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

சிறீலங்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முழுமூச்சில் ஆதரித்த நாடுகளில் பல இன்று போர்க்குற்றம் எனக் குற்றம் சுமத்துகின்றன. இன்றைய நிலையில், நீங்கள் ஏன் அன்று அவ்வாறு செயற்பட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்க முடியாது. காலகட்டங்களுக்கு ஏற்ப கருத்தியலிலும் மாற்றங்கள் வருவது இயல்புதான்.

அருமையானதும் தெளிவானதுமான கருத்து :)

புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி .

Link to comment
Share on other sites

சபேசன் இந்த திரியில் புலிகள் மக்களுக்கு அதை தெரிவிக்கவில்லை இதை சொல்லவில்லை என்று கூறும் நீங்கள் இன்னொரு திரியில் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒன்று என்று கூறுகிறீர்கள்

ஏனய்யா இந்த குழப்பம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஓடுகின்ற குதிரையில் பணம் கட்டுகின்ற புலம்பெயர் மக்களின் மனப்பாங்கே இதற்குக் காரணம்.

உண்மைகள் பேசப்பட முடியாமல் போனதற்கு இந்த புலம்பெயர் சமூகம் மிக முக்கிய காரணம்.

1. வெற்றிச் செய்திகளை மட்டுமே புலம்பெயர் சமூகம் எதிர்பார்த்து இருந்தது.

2. வெற்றிச் செய்திகளின் அடிப்படையிலேயே தனது உதவிகளை தொடர்ந்து வழங்கத் தயாராக இருந்தது

3. தோல்விகளைப் பற்றிப் பேசியவர்களை "துரோகிகள்" என்று தூற்றியது

இன்றைக்கு அப்பாவி மாதிரி நடிக்கின்றது.

இந்த விடயத்தைத்தான் இந்தக் கதை பேசுகிறது. சிலர் நினைப்பது போன்று தனிமனிதர்களைப் பற்றி அல்ல.

சபேசன்

2009 தை இறுதியில் இங்கு ஒரு முக்கிய கூட்டம் நடந்தது.

முக்கியமான அதி உயர்பங்காளிகளும் செயற்பாட்டாளர்களும் சில போராளிகளுமே அனுமதிக்கப்பட்ட அந்தத கூட்டத்தில் எல்லாமே தெளிவாக ஒழிவு மறைவு இன்றி எடுத்துரைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தின் இறுதியில் நாங்கள் எமது போராட்டத்தை தங்க வைக்கணும். ஏதோ ஒரு வழியில் தலைவர் அதற்கான திட்டங்களை கொண்டுள்ளார். எனவேவ உங்கள் பங்களிப்பு தொடரணும் என்று நிறுத்தப்பட்டது.

எனக்கு நிலைமை தெரிந்திருந்ததால் நான் பணத்துடனேயே போயிருந்தேன். முதலாவதாக எழுந்து நான் கொடுத்தால் அதுவும் திட்டமிட்டு செய்வதாக வந்துவிடும் என்பதால் காத்திருந்தேன். ஒரு பெண்மணி எழுந்து பெரும் தொகையை கொடுத்தார். அடுத்தது நான். அதற்ககடுத்து எனது நண்பர்கள் வரிசையாக வந்து கொடுத்தபோது I

[size=4]Israël யை உருவாக்க அமெரிக்கா சென்று கையேந்தி அந்தத்தாய் நின்றபோது அள்ளிக்கொடுத்தார்களே அமெரிக்கவாழ் யூதர்கள். அதுவே என் கண்களுக்கு வந்து சென்றது.[/size]

[size=4]எனவே சும்மா புலம்பெயர் சமூகம்பற்றி எழுதாதீர்கள்.[/size]

எதுவும் செய்ய வழியற்று

நாங்கள் இங்கு துடித்தது எவரறிவார்???

Link to comment
Share on other sites

விசுகு,

மீண்டும் நீங்கள் எழுதியதைப் படித்துப் பாருங்கள். அதற்குள்ளேயே நான் சொன்ன கருத்தை வலுப்படுத்தும் விடயம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

ரதி அக்கா சொன்னது போல் சபேசன் அண்ணாவுடன் எழுதி மினக்கடுவதே வேஸ்ட். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

மீண்டும் நீங்கள் எழுதியதைப் படித்துப் பாருங்கள். அதற்குள்ளேயே நான் சொன்ன கருத்தை வலுப்படுத்தும் விடயம் இருக்கிறது.

அதைத்தான் சொல்கின்றேன் சபேசன்

வரலாற்றுக்கடமையை எல்லோரும் செய்தோம் என.

ஆனால் நீங்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டேன் போன்று எழுதுகின்றீர்கள்.

இப்படிப்பாருங்கள்

சிலதுகள் என்னையும் சொல்வதுண்டு.

எல்லாம் முடிந்துவிட்ட நிலையிலும் காசைக்கொண்டே கொடுத்துவிட்டான் இவன் என.

உங்கள் பார்வைப்படி நானும் பார்த்தால்..........???

நானும் உங்களைப்போல் புலம்பிக்கொண்டல்லவா திரிய வேண்டும்...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா சொன்னது போல் சபேசன் அண்ணாவுடன் எழுதி மினக்கடுவதே வேஸ்ட். :lol: :lol: :lol:

நானும் உணர்ந்துகொண்டேன் , அதன்பின் நிறுத்தி விட்டேன் . :)

Link to comment
Share on other sites

நண்பர்களே!

ஒரு அடிப்படையான விடயத்தைப் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் கதை எழுதுகின்ற பொழுது, அந்தக் கதை பல விதங்களில் புரிந்து கொள்ளப்படும். ஆனால் கதை எழுதியவர்தான் தான் அந்தக் கதையை என்ன கருத்தில் எழுதினேன் என்பதை விளங்கப்படுத்த வேண்டும்.

இந்தக் கதையை படிப்பவர்கள் அதை எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதை அறிவதற்காக நான் பொறுத்திருந்தது உண்மைதான். ஆனால் நீங்கள் நினைப்பதுதான் சரி என்று அடம்பிடித்தால் அது எப்படி?

இங்கே இந்தக் கதை சிலரால் அல்லது பலரால் இப்படிப் புரிந்து கொள்ளப்பட்டது

- இந்தக் கதை விடுதலைப் பலிகள் மீது பழி போடுகிறது

- இந்தக் கதை விடுதலைப் புலிகளை விமாசிப்பவர்களை போற்றிப் புகழும்படி கேட்கிறது.

மிக மோசமான தட்டையான புரிதல் இது.

Link to comment
Share on other sites

கதையை எழுதிய நான் இந்தக் கதை சொல்லுகின்ற விடயம் வேறு என்று பலவாறு விளங்கப்படுத்தியும், இல்லை என்று அடம்பிடிக்கிறீர்கள். நான் எழுதிய கதைக்கு நீங்கள் தருகின்ற விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

நான் மீண்டும் என்ன கருத்தை சொல்வதற்கு இந்தக் கதையை எழுதினேன் என்பதை சொல்கிறேன்.

- விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்திற்காய் ஆய்வாளர்கள் ஒரே குரலில் பேசினார்கள்.

- விடுதலைப் புலிகளின் தோல்வியை சொன்னவர்கள் இன்றைக்குப் போற்றிப் புகழப்படுவது இல்லை. அந்த வகையில் வெற்றியை சொன்னவர்களையும் தூற்றுவது தவறு.

கடைசிக் கேள்வி சமூகத்தின் முரணான நிலையை சுட்டிக் காட்டி முடிகிறது.

Link to comment
Share on other sites

நான் இங்கே உண்மையை பேச முடியாத நிலைக்கு விடுதலைப் புலிகளை கொண்டு சென்ற புலம்பெயம் சமூகத்தின் நிலைப்பாடு பற்றியும், முரணான செயற்பாடுகள் பற்றியுமே இந்தக் கதை மூலம் கேள்வி எழுப்புகிறேன்.

விசுகு,

நான் ஏமாந்து போனதாக எங்கும் சொல்லவில்லை. அப்படியான உணர்வும் எனக்கு இல்லை. ஏமாந்து போனது விடுதலைப் புலிகள் மட்டுமே.

நீங்கள் சொன்னது போன்று, முக்கிய பொறுப்பாளர்களும், பணியாளர்களும், போராளிகளும் மட்டும் அனுமதிக்கப்பட்ட கூட்டத்திலேயே ஓரளவு உண்மை நிலை பேசப்பட்டது. அங்கு கூட தலைவர் ஏதாவது செய்வார் என்று நம்பிக்கை கொடுக்கப்பட்டுத்தான் முடிக்கப்பட்டது.

பொதுவான மக்களிடம் உண்மை நிலை சொல்லப்பட முடியவில்லை. முடியாததற்கு காரணம், ஓடுகின்ற குதிரையில் பணம் கட்டும் பொதுவான புலம்பெயர் மக்களின் மனப்பான்மையே கார

இன்றைக்கு அதே சமூகம் போராட்டத்திற்கு எழுத்து மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று வந்தவர்களை தூற்றிக் கொண்டு திரிகிறது. சமூகம் தன்னை சுயகேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்பதை இந்தக் கதையின் மூலம் நான் வைக்கும் கோரிக்கை

இதற்கு மேல் இந்தக் கதை சொல்ல வரும் கருத்தை நான் விளங்கப்படுத்தத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.