Jump to content

உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தைரியமானவர்களாக வளருங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol: :lol:

அவங்க.. ஒரு ஊகத்தில சொல்லிக்கிறாங்க..! அதை மன்னிக்கலாம். அதுக்கு என்ன சிரிப்பு வேண்டி இருக்குது..! :rolleyes::unsure::)

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமூகத்தில் விழிப்புணர்வின் தேவையை எடுத்துக் காட்டிய குட்டியின் பதிவுக்கு நன்றி. எனக்கு எப்போதுமே ஒரு தீர்வு தான் இதற்கெல்லாம் நினைவுக்கு வரும்: பெண் குழந்தைகளை நன்கு படிப்பிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் படிப்பிக்க வேண்டும். ஆனாலும் பெண் குழந்தைகளை உயர் கல்வி அல்லது நிபுணத்துவக் கல்வி வரை கொண்டு செல்ல வேண்டும். நவீன உலகில் அறிவு தான் துணிவும் ஆயுதமும். அதைக் கொடுத்து விட்டால் பெண்களை யாரும் நடுத்தெருவில் விட முடியாது!

கல்வியால் மட்டும் ஒரு பெண்ணை தைரியமாக்க முடியாது என்பது என் கருத்து...படித்த பெண்களே பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர்,பிரச்சனை நேரத்தில் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர்...படித்திருந்தால் ஒரு பயன் ஒருத்தரை நம்பி இருக்காமல் தன் சொந்தக் காலில் நிற்கக் கூடியதாக இருக்கும்

Link to comment
Share on other sites

எல்லாச் சமூகங்களிலும் இப்படியான பிரச்சனைகள் உள்ளன. இவை பெண்களுக்கு என்றான பிரச்சனைகள் மட்டுமல்ல. ஆண்களுக்கும் இப்படியான பிரச்சனைகள் உள்ளன.

நாங்கள் முன்னர் வாழ்ந்த இடத்தில் ஆற்றைக் கடந்து செல்லும் பெரிய தொங்கு பாலம் உள்ளது. ஒரு மருத்துவர் காரை அதன் அருகில் நிறுத்திவிட்டு.. அந்தப் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்..! இதற்கு குடும்பப் பிரச்சனையே காரணம் என்று செய்திகள் கூறின.

இப்படியான சமூகப் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் சரியான ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டுமே தவிர.. பெற்ற கல்வி அறிவைக் கூட பயன்படுத்த முடியாத அழுத்த சூழலில்.. நல்லா கற்றவர்கள் கூட முட்டாள் தனமான முடிவுகளை எடுத்து தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பதைக் காணவே தான் செய்கிறோம்.

இங்கு ஆணாதிக்கம்.. பெண்ணாதிக்கம் என்று.. கூப்பாடு போட்டு.. புரட்சி வசனம் பேசிக் கிட்டிருந்தா.. இவற்றை தடுத்து நிறுத்துவது என்பது எப்போதுமே சாத்தியமில்லை..! முதலில் இந்தக் கூப்பாடுகளை சமூகத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். இவற்றின் விளைவாக ஆண் - பெண் இயல்பான நெருக்கம் மனதளவில் இல்லாமல் போய்.. ஆண் அடக்குகிறான்.. நான் ஏன் அடங்கனும்.. பெண் அடக்குகிறாள்.. நான் ஏன் அடங்க வேணும் என்று பெண்களும் ஆண்களும் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டப்படும் நிலையில்.. இயல்பான எண்ணங்களும் ஆண் - பெண் இயற்கையான நெருக்கவும் இணைவும் இப்படியான செயற்கையான வாதங்களால் அடிபட்டுப் போக.. குடும்பங்களில் சிக்கல்கள் தோன்றி.. பிரிவினைகள் தோன்றி.. அந்தப் பிரிவினைகளைப் பயன்படுத்தி.. கயவர்களும்.. கயத்திகளும்.. மற்றவர் வாழ்வை சீரழிச்சு.. தங்கள் உடல்.. உளத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள... இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.. தற்கொலை வரை போக தூண்டப்படுகின்றனர்..!

தற்கொலை முடிவுக்கு எவரும்.. உடனடியாக வருவதில்லை. ஒருவரின் விருப்பம்.. அல்லது மனநிலை மாற்றம்.. அல்லது அழுத்தம் நீண்ட நாள் தீர்க்கப்படாதிருப்பின்.. அவர்களே அதிகம் இந்த முடிவுக்கு வருகின்றனர். இந்த மாற்றங்களை அவதானிக்கவும்.. அதற்கேற்ப அப்படியானவர்களோடு.. நல்ல விட்டுக்கொடுப்போடும்.. புரிந்துணர்வோடும்.. நட்போடும்.. அரவணைப்போடும்.. பழகும்.. நிலையே.. அவர்களின் மனநிலையில்.. வாழ்க்கை பற்றிய பிடிப்பை உருவாக்கி வாழத்தூண்டும்..! அல்லது அவர்களுக்கு நல்ல மன நிலை மாற்ற ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் சரியான வேளையில் கிரமமாக வழங்கப்படுதல் வேண்டும்..! இப்படியானவர்களை ஒருபோதும் தனிமைச் சூழலுக்குள் தள்ளவே கூடாது..! பெண்கள் அதிகம் பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பதால்.. அவர்கள் தனிமைப்படும் போது.. அது பிள்ளைகளையும் பாதிக்கும்..!

குறிப்பாக.. அன்பை.. இதய சுத்தியோடு.. உள் நோக்கமின்றி.. நேர்த்தியாக.. எதிர்பார்ப்பில்லாமல்.. வழங்கும் நிலை வந்தால் அன்றி.. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதென்பது.. இயந்திரமயமான.. சுயநலமே.. பணமே... வசதியே.. வாழ்க்கை என்று கருதும் செயற்கைச் சூழலில்... மனித மனப் பிறழ்வுகளும்.. மன அழுத்தங்களும் முடிவின்றித் தொடரும்..! :icon_idea:

எது சரி எது பிழை என்று அறிவதற்கு நிச்சயம் கல்வி அறிவும், வாழ்க்கை அனுபவமும் வேண்டும். பொதுவாக குடும்பத்தில் ஆண்பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுத்து அவரிகளின் படிப்பில் முதலீடு செய்கிறார்கள்... காரணம் தமது மகன் படித்து தம்மைப் பார்ப்பான் என்ற நம்பிக்கையில்... ஆண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பெண்பிள்ளைகளுக்கு இரண்டாம் இடமே கிடக்கிறது. இதனை பல குடும்பங்களில் அவதானித்துள்ளேன், நீங்கள் அவதானித்தது இல்லையா?

நீங்கள் சொல்வது போல் தமிழ்நாட்டில் இப்படியான நிலைமைகள் அதிகமாகவே காண முடியும், காரணம் அங்கும் பெரும் பாலான குடும்பங்களில் ஆண்பிள்ளைகளுக்கே முதலுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த ஆண்பிள்ளைகளைப் படிப்பிக்க பெற்றோர்கள் செலவழித்தும் அவர்களால் பரீட்சையில் சிறப்பான மதிப்பெண்கள் கிடைக்காமல் போனால் அவர்களின் மனநிலையும் பாதிக்கப்படக் கூடும் தானே? பல பெற்றோர்கள் தம்பிள்ளைகளிடம் அளவுக்கு மீறி எதிர்பார்ப்பதாலும் இப்படியான மனவிரக்தி நிலை உருவாகக் கூடும்

மன அழுத்தம் மனிதரிடையே உள்ள நோய் ஒன்று, எனினும் அதனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றே சொல்லலாம்.. புதியதொரு நாட்டில் அறியாத மொழி, அறியாத சூழ்நிலை, யாரிடமும் உதவி கோரமுடியாத நிலை, கணவன் தனக்கு எல்லா விதத்திலும் பக்க பலமாய் இருப்பான் என்ற ஒரு நம்பிக்கையில் அந்தப் பெண் 4 வருடங்கள் இருந்ததால் அவளின் இன்றைய நிலை இது... இங்கே அந்தப் பெண்ணுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை, அதனால் அவளின் மன அழுத்தம் மென்மேலும் அதிகரித்து சாவு ஒன்று தான் தனக்கு விடிவைத் தரும் என்று முடிவெடுத்திருக்கிறாள்.. ஒரு வேளை அவளால் ஆங்கிலம் ஓரளவேனும் பேச முடிந்திருந்தால், குறைந்த பட்சம் 4 வருடங்களுக்குள் அவள் அயலாவருடனோ, அல்லது தனது அவளால் வெளியே தனியாகப் போய் தனது அலுவல்களைப் பார்க்கக் கூடியவளாக இருந்திருந்தால் தனது மொழி பேசும் ஒருத்தியுடனவது நட்பை உருவாக்கி இருப்பாள்... அதன் மூலம் அவள் தனது மனப்பாரத்தை குறைத்திருக்க முனைந்திருக்கலாம்... இங்கே அந்த பெண்ணுக்கு எதுவும் கிடைக்கவில்லை..

இந்தப் பெண்ணைப் போல் மொழி தெரியாமல், இங்குள்ள வாழ்க்கை முறையை சிறிதும் அறியாமல், வெளிநாட்டு மோகத்தில்/ தாம் பிறந்த குடும்பமத்தின் நிலை பார்த்து ஊரில் இருந்து திருமணம் ஆகி இங்கே வரும் பெண்களும் பலர் உள்ளனர்... சீதனத்தைக் கொடுத்து கட்டி வைத்து அனுப்பிவிடுகிறார்கள். அதன் பிறகு எத்தனை பெற்றோர் தமது பிள்ளைகள் உண்மையில் சந்தோசமாக இருகிறார்களா என்று அறிந்து கொள்கிறார்கள்?

வேலைக்குப் போகும் பெண்கள் மாதக் கடைசியில் கிடைக்கும் வெறும் ஊதியத்திக்காகப் போகிறார்கள் என்று நினைகிறீர்களா? வெளியில் போய்வரும் பெண்ணை விட வீட்டில் உள்ள பெண்ணுக்கே அதிக மன உளைச்சல் இருக்க வாய்ப்புள்ளது. அதே போல் தான் ஆண்களுக்கும், ஆனால் பல ஆண்கள் வீட்டினுள் அதிக நேரத்தைச் செலவழிப்பதில்லை..

சமூகம் என்பது வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கிறது, வீட்டில் பிள்ளைகளைப் பகுபடுத்தாது, பெண்பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளுக்கு நிகராகப் படிக்க வைக்கும் போதும், வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றோர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதும், கஸ்ரமான குடும்பச் சூழ்நிலையை எதிர் கொள்ளக் கற்றுக் கொடுக்கும் போதும் பிள்ளைகளின் மனவலிமை, தனம்பிகையும் தைரியமும் தானாகவே உருவாகும்..

நீங்கள் குறிப்பிட்ட உள்நோக்கமின்றி நேர்த்தியான எதிர்பார்ப்பில்லாத அன்பு சிலரிடையே உள்ளது.. பலரிடம் சுயநலம் நிறைந்த, எப்பவும் பணம், வாழ்க்கை வசதி என்று செயற்கைச் சூழலில் தான் அதிகமானோர் வாழும் இந்த சூழலில் சேர்ந்து வாழவேண்டுமென்றால், உண்மையான அன்பிற்கு ஏங்கி ஏங்கியே விசராகி வாழ்க்கையை முடிப்பதை விட, எதையும் முகம் கொடுக்கும் மனத் தைரியம், தன்னம்பிக்கை வேண்டும், அதன் மூலமாவது அவர்களும் இந்த சமூகத்தில் தமது வாழ்கையை வாழட்டுமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்குட்டி

தங்களது எழுத்து பெரும் ஆச்சரித்தை தருகிறது.

பெரும் அனுபவசாலிகளே இவ்வாறு எழுதமுடியாது.

குறிப்பு: நன் இங்கு எனது ஆண்பிள்ளைகள் பற்றியே கனக்க எழுதுவேன். என் பெண் பிள்ளைகள் பற்றிய எனது அனுபவங்களைத்தவிர்த்துவிடுவேன். காரணம் நாம் இன்னும் மாறவோ வளரவோ இல்லை.

வாழ்க்கை அனுபவம் கற்றுத்தந்தது கைமண்ணளவு மட்டுமே விசுகு அண்ணா...

குறிப்பு:

சிறு முயற்சியாவது எடுக்கலாம் இல்லையா? அதுவே ஒரு பெரிய படி என நினைக்கிறன்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒன்று

எனது மகனை படிப்புக்காக மலேசியாவுக்கு 3 மாதம் போக அனுமதித்த நான் எனது மகள் பக்கத்திலுள்ள பெல்யியம் (Belgium) போக மறுத்துவிட்டேன். :(

Link to comment
Share on other sites

குட்டியின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

குடும்ப, சமூக விடயங்களில் எனெக்கென்றொரு கருத்து இருந்தாலும், இங்கு பதியும் கருத்துக்களை அலசி ஆராய்ந்து சில தவறான வழிகளை திருத்தக் கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

சமூகம் என்பது வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கிறது, வீட்டில் பிள்ளைகளைப் பகுபடுத்தாது, பெண்பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளுக்கு நிகராகப் படிக்க வைக்கும் போதும், வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றோர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதும், கஸ்ரமான குடும்பச் சூழ்நிலையை எதிர் கொள்ளக் கற்றுக் கொடுக்கும் போதும் பிள்ளைகளின் மனவலிமை, தனம்பிகையும் தைரியமும் தானாகவே உருவாகும்..

எனது கருத்தும் இதுவே.எமது பெற்றோரின் வளர்ப்பு முறையில் பாகுபாடு உண்டு.இவை எமது சமுதாய கட்டமைப்பால் கூட வந்திருக்கலாம்.அதாவது பெண்களை தனியே வெளியில் போக அனுமதியாமை: வீட்டுக்குள் அடைத்து வைத்து வளர்ப்பார்கள்.வளர்ந்து திருமணமாகியதும் அவர்கள்(பெண்கள்) சொந்தக்காலில் நிற்க முடியாமல் திணறுவார்கள்.இதனை சில ஆண்கள் advantage ஆக எடுத்துக்கொள்வதால் இன்னுமொரு சுயமான ,புத்திசாலித்தனமான முடிவை பெண்களால் எடுக்க முடிவதில்லை.

இத்திரியில் ஒரு சில பெண்களை தவிர ஏனையோர் கருத்து எழுதாதது ஆச்சரியமாக உள்ளது.

குட்டியின் ஆக்கம் இம்மாதத்துக்கான பொற்கிளி விருதை பெற பரிந்துரைக்கிறேன்.

Link to comment
Share on other sites

சரி ஒன்று

எனது மகனை படிப்புக்காக மலேசியாவுக்கு 3 மாதம் போக அனுமதித்த நான் எனது மகள் பக்கத்திலுள்ள பெல்யியம் (Belgium) போக மறுத்துவிட்டேன். :(

:o விசுகு அண்ணா உங்கள் மகளை அனுப்பாமல் விட்டதற்கு காரணம் என்ன? அவவின் மனம் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்காதா? ஏன் ஆணையும் பெண்ணையும் இப்படி பாகுகாட்டி வளக்கவேண்டும்? பெண் பிள்ளைகளையும் பலதும் அறிந்தவர்களாக, தைரியம் உள்ளவர்களாக, தன்நம்பிக்கை கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமல்லவா? அவவின் நண்பிகள் Belgium போய்வந்து அங்கு நடந்தவை பற்றி கதைக்கும் போது உங்கள் மகள் கவலைப்படமாட்டாளா? ஆண்களுக்கொரு நியாயம் பெண்களுக்கொரு நியாயமா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பிள்ளை,பெண் பிள்ளை என்ற வேறுபாடுகளை அனேகமான பெற்றோர் சகோதரங்கள் இப்போதும் சுட்டி காட்டி பெண்களை உணர்வுகளால் நோகடிச்சவண்ணம் தான் இருக்கிறார்கள்.. பெண் பிள்ளைகளை அடக்கி வைப்பது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது..ஆண்களை விட பெண் பிள்ளை கொஞ்சம் கூடுதலாக படிச்சுட்டால் அந்த பெண் வேலைக்கு போக வேணும் தன்ட காலில் நிக்க வேணும் என்று விருப்பபட்டால் எல்லாம் ஏதோ ஒரு காரணி அங்கே தடையாக தான் இருக்கிறது...ஒவ்வொருவரும் பேசும் சொற்களே வாழ்வில் மறக்க முடியாது இருக்கும்..மனம் திறந்து சொல்லுங்கள் எத்தனை வீதமான பெற்றோர் உங்கள் பிள்ளைகளை அவர்களின் விருப்புக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதற்கு அனுமதித்து இருக்கிறீர்கள்..பெற்றோர்களாக இருக்கும் நீங்கள் செய்வததைத் தான்,சொல்வதைத் தான் நாளைக்கு அந்த பிள்ளை திருமணம் செய்து இன்னும் ஒரு வீட்டுக்கு போகும் போதும் அங்கேயும் அனுபவிக்க கூடும்..எல்லாப் பிள்ளைகளும் வாய் திறந்து நீதி,நியாயத்தை கேக்க கூடியவர்களாக இருக்க முடியாது,மாட்டார்கள்..உண்மையாக கேக்கிறன் பெண் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி வளர்க்கும் நீங்கள் எல்லாரும் வெளி நாட்டில் தான் இருக்கிறீர்களா..இல்லை இன்னும் ஊரில் தானா...

Link to comment
Share on other sites

இத்திரியில் ஒரு சில பெண்களை தவிர ஏனையோர் கருத்து எழுதாதது ஆச்சரியமாக உள்ளது.

இப்படியான முக்கியமான பகிர்வுகள் வரும் பொழுது அவர்கள் தள்ளி நின்றே சீரியல் பார்க்கிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான முக்கியமான பகிர்வுகள் வரும் பொழுது அவர்கள் தள்ளி நின்றே சீரியல் பார்க்கிறார்கள். :lol:

அதற்காகத்தான்

இதற்காகவாவது வந்து கருத்து எழுதிய தமிழ் இனிக்கு எனது விருப்பு வாக்கை இட்டேன். :icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

அதற்காகத்தான்

இதற்காகவாவது வந்து கருத்து எழுதிய தமிழ் இனிக்கு எனது விருப்பு வாக்கை இட்டேன். :icon_idea: :icon_idea: :icon_idea:

:) என் கேள்விகளுக்கு பதில் வருமா - வராதா விசுகு அண்ணா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பிள்ளை,பெண் பிள்ளை என்ற வேறுபாடுகளை அனேகமான பெற்றோர் சகோதரங்கள் இப்போதும் சுட்டி காட்டி பெண்களை உணர்வுகளால் நோகடிச்சவண்ணம் தான் இருக்கிறார்கள்.. பெண் பிள்ளைகளை அடக்கி வைப்பது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது..ஆண்களை விட பெண் பிள்ளை கொஞ்சம் கூடுதலாக படிச்சுட்டால் அந்த பெண் வேலைக்கு போக வேணும் தன்ட காலில் நிக்க வேணும் என்று விருப்பபட்டால் எல்லாம் ஏதோ ஒரு காரணி அங்கே தடையாக தான் இருக்கிறது...ஒவ்வொருவரும் பேசும் சொற்களே வாழ்வில் மறக்க முடியாது இருக்கும்..மனம் திறந்து சொல்லுங்கள் எத்தனை வீதமான பெற்றோர் உங்கள் பிள்ளைகளை அவர்களின் விருப்புக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதற்கு அனுமதித்து இருக்கிறீர்கள்..பெற்றோர்களாக இருக்கும் நீங்கள் செய்வததைத் தான்,சொல்வதைத் தான் நாளைக்கு அந்த பிள்ளை திருமணம் செய்து இன்னும் ஒரு வீட்டுக்கு போகும் போதும் அங்கேயும் அனுபவிக்க கூடும்..எல்லாப் பிள்ளைகளும் வாய் திறந்து நீதி,நியாயத்தை கேக்க கூடியவர்களாக இருக்க முடியாது,மாட்டார்கள்..உண்மையாக கேக்கிறன் பெண் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி வளர்க்கும் நீங்கள் எல்லாரும் வெளி நாட்டில் தான் இருக்கிறீர்களா..இல்லை இன்னும் ஊரில் தானா...

ஓ....தங்கச்சிக்கு வெளிநாட்டு வாழ்க்கை..கலாச்சாரம்....டச்சிங்...கிஸ்சிங்...கட்டிங்..லைவ் டெவலப்பிங்.....மூவிங்.....எண்டு சகலதும் புடிச்சுட்டுது போலை......நீங்களும் பெற்றோர் என்ற நிலைக்கு வரும்போது.........சகலதும் தானாக வரும்.

Link to comment
Share on other sites

சரி ஒன்று

எனது மகனை படிப்புக்காக மலேசியாவுக்கு 3 மாதம் போக அனுமதித்த நான் எனது மகள் பக்கத்திலுள்ள பெல்யியம் (Belgium) போக மறுத்துவிட்டேன். :(

எனது கருத்தும் இதுவே.எமது பெற்றோரின் வளர்ப்பு முறையில் பாகுபாடு உண்டு.இவை எமது சமுதாய கட்டமைப்பால் கூட வந்திருக்கலாம்.அதாவது பெண்களை தனியே வெளியில் போக அனுமதியாமை: வீட்டுக்குள் அடைத்து வைத்து வளர்ப்பார்கள்.வளர்ந்து திருமணமாகியதும் அவர்கள்(பெண்கள்) சொந்தக்காலில் நிற்க முடியாமல் திணறுவார்கள்.இதனை சில ஆண்கள் advantage ஆக எடுத்துக்கொள்வதால் இன்னுமொரு சுயமான ,புத்திசாலித்தனமான முடிவை பெண்களால் எடுக்க முடிவதில்லை.

...

பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு கண்டிப்பாக வேண்டும், அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்களா அண்ணா?

பெற்றோராகிய நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது அவர்கள் வயதில் அனுபவத்தில் இளையவர்கள் எப்படி உங்கள் நிலையில் இருந்து யோசிக்க முடியும்? எங்கள் வீட்டிலும் முன்பு புலம் பெயர்ந்திருந்த நாட்டில் தாயாருடன் இருந்த போது இதே சூழ்நிலை இருந்தது... பள்ளியால் எப்போது சுற்றுலா செல்வதென்றாலும் மகன்மாருக்கு உடனே அனுமதி கிடைக்கும், மகள்மாருக்கு அனுமதி மறுக்கப்படும்... சில தடவைகள் கேட்டு மறுக்கப்பட்டதால் அதன் பிறகு தங்கைமார் வீட்டில் அனுமதி கேட்பதையே நிறுத்தி விட்டார்கள்... ஒரு தடவை தங்கப்பனாரிடம் தங்கைகள் சார்பாக இது பற்றி கேட்டதற்கு அவர் எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் அடுத்த வருடம் சுற்றுலாவிற்கு அவர்களுக்குத் தேவையான அறிவுரையும் அளித்து அனுமதி வழங்கினார். 'பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மேல் நம்பிக்கை வைத்து சந்தர்ப்பங்கள் கொடுக்கும் போது தானே பிள்ளைகளுக்கும் அதனை பொறுப்பாக செயல்ப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும்' என்று தாயாருக்குச் சொல்லி இருந்தார். இன்று எனது தங்கைமாரும் படிப்பு, வேலை, சுற்றுலா சம்பந்தமாக பல நாடுகளுக்கு தனியே சென்று வருவார்கள்.. இதை ஏன் இங்கே குறிபிடுகிறேன் என்றால், தமது பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்று பெரிதும் தீர்மானிப்பது பெற்றோர்களே... அதற்காக எது கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்றில்லை, (கட்டுப்பாடு போடவேண்டிய இடத்தில் போடத்தான் வேண்டும்) கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது பிள்ளைகளின் எதிர் காலத்திற்குக் கைகொடுக்கலாம்...

குட்டியின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

குடும்ப, சமூக விடயங்களில் எனெக்கென்றொரு கருத்து இருந்தாலும், இங்கு பதியும் கருத்துக்களை அலசி ஆராய்ந்து சில தவறான வழிகளை திருத்தக் கூடியதாக உள்ளது.

சில தவறான வழிகளைத் திருத்த நினைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தப்பிலி..

ஆண் பிள்ளை,பெண் பிள்ளை என்ற வேறுபாடுகளை அனேகமான பெற்றோர் சகோதரங்கள் இப்போதும் சுட்டி காட்டி பெண்களை உணர்வுகளால் நோகடிச்சவண்ணம் தான் இருக்கிறார்கள்.. பெண் பிள்ளைகளை அடக்கி வைப்பது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது..ஆண்களை விட பெண் பிள்ளை கொஞ்சம் கூடுதலாக படிச்சுட்டால் அந்த பெண் வேலைக்கு போக வேணும் தன்ட காலில் நிக்க வேணும் என்று விருப்பபட்டால் எல்லாம் ஏதோ ஒரு காரணி அங்கே தடையாக தான் இருக்கிறது...ஒவ்வொருவரும் பேசும் சொற்களே வாழ்வில் மறக்க முடியாது இருக்கும்..மனம் திறந்து சொல்லுங்கள் எத்தனை வீதமான பெற்றோர் உங்கள் பிள்ளைகளை அவர்களின் விருப்புக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதற்கு அனுமதித்து இருக்கிறீர்கள்..பெற்றோர்களாக இருக்கும் நீங்கள் செய்வததைத் தான்,சொல்வதைத் தான் நாளைக்கு அந்த பிள்ளை திருமணம் செய்து இன்னும் ஒரு வீட்டுக்கு போகும் போதும் அங்கேயும் அனுபவிக்க கூடும்..எல்லாப் பிள்ளைகளும் வாய் திறந்து நீதி,நியாயத்தை கேக்க கூடியவர்களாக இருக்க முடியாது,மாட்டார்கள்..உண்மையாக கேக்கிறன் பெண் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி வளர்க்கும் நீங்கள் எல்லாரும் வெளி நாட்டில் தான் இருக்கிறீர்களா..இல்லை இன்னும் ஊரில் தானா...

ஊரில் இருக்கும் போது பெற்றோர்கள் பிள்ளைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வளர்த்தார்கள், ஆனால் இங்கே அதே கட்டுப்பாடு இருந்தாலோ/ அளவுக்கு மீறினால் பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழவும், பாதை மாறிப் போகவுமே அதிகவாயப்புக்கள் உள்ளது... அதனால் இன்றைய பெற்றோர் ஒரு தடவைக்கு பலதடவை சிந்தித்துச் செலப்படுவதே சிறந்தது என்பது எனது கருத்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ....தங்கச்சிக்கு வெளிநாட்டு வாழ்க்கை..கலாச்சாரம்....டச்சிங்...கிஸ்சிங்...கட்டிங்..லைவ் டெவலப்பிங்.....மூவிங்.....எண்டு சகலதும் புடிச்சுட்டுது போலை......நீங்களும் பெற்றோர் என்ற நிலைக்கு வரும்போது.........சகலதும் தானாக வரும்.

தாத்தா..... நாங்க பெற்றோர் என்ற நிலைக்கு வராடிக்கும் தினமும் இப்படியான கண்றாவி காட்சிகள் ,கோலங்கள் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் திரிறோம்.பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து கொண்டு வாழ்கிறோம்..நாங்களும் பல் கலாச்சாரப் பிள்ளைகளோடு கூடவே பாடசாலை,கல்லூரி என்று படிச்சனாங்கள் தான்...அதற்காக எல்லாப் பிள்ளைகளும் அப்படிவளி தவறித்தான் போவார்கள் என்றும் இல்லை..குற்றம்  கண்டு பிடிக்கிற ஆக்கள் எப்பவும் கண்டு பிடிச்சு கொண்டே தான் இருப்பீங்கள்.இது ஒன்றும் புதிது இல்லை....பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து நடவுங்கோ..ஆண்,பெண் பேதம் காட்டி வளர்காதீர்கள்..இதை தான் சொல்ல வந்தேன்..எல்லாம் பெற்றோர் வளர்க்கும் முறையைப் பொறுத்தது தான்..

முதலில் நீங்கள்? எந்த நாட்டவராக இருந்தாலும்!!!! கலாச்சாரங்களுக்கும்,நன்நடத்தைகளுக்கும் மதிப்பு கொடுப்பவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்கள்? எந்த நாட்டவராக இருந்தாலும்!!!! கலாச்சாரங்களுக்கும்,நன்நடத்தைகளுக்கும் மதிப்பு கொடுப்பவரா?

நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கு பதில்..ஆம்.ஆம்..ஆம்.இன்று வரைக்கும் எனது பெற்றோரின் சொல் தட்டி நடக்காத ஒரு பிள்ளையாகத் தான் வளர்கிறேன்.உடு புடுவையில் இருந்து எனது தந்தையார் வாங்கிக் தருவதைத் தான் உடுக்கிறேன். தந்தையார் எதை சொல்கிரோ அதை நான் எப்போதும் தட்டி நடந்து கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கு பதில்..ஆம்.ஆம்..ஆம்.இன்று வரைக்கும் எனது பெற்றோரின் சொல் தட்டி நடக்காத ஒரு பிள்ளையாகத் தான் வளர்கிறேன்.உடு புடுவையில் இருந்து எனது தந்தையார் வாங்கிக் தருவதைத் தான் உடுக்கிறேன். தந்தையார் எதை சொல்கிரோ அதை நான் எப்போதும் தட்டி நடந்து கிடையாது.

நல்லவிசயம்....வாழ்த்துக்கள்........ அப்ப ஏன் உங்களைப் போன்றவர்கள் சிறுவயதிலேயே வழிமாறிப்போகின்றார்கள்?பெற்றோர்கள் சரியில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிசயம்....வாழ்த்துக்கள்........ அப்ப ஏன் உங்களைப் போன்றவர்கள் சிறுவயதிலேயே வழிமாறிப்போகின்றார்கள்?பெற்றோர்கள் சரியில்லையா?

தாத்தா என்னை இன்டர்வியூ வைக்க இல்லைத் தானே.....பெற்றோர் சரி இல்லை என்றும் சொன்னேனா..இல்லை எல்லா வீட்ட பிள்ளைகளும் தான் தவறான வளிக்கு போகிறார்களா இல்லையே..இந்தக் கேள்வியை என்னிடம் மட்டும் கேட்டால் போதாது ஐந்து,பத்து பிள்ளைகள் குழுமி இருக்கும் இடத்தில் போய் கேட்டுப் பாருங்கள் பதில்கள் பலவாறு கிடைக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களின் கண்டிப்பும்,கட்டளையும் தங்கள் பிள்ளைகளின் நன்மை கருதியே தவிர வேறொன்றுமில்லை.அதிகம் தெரிந்த பிள்ளைகள் கவனத்திலெடுக்கவும்.

Link to comment
Share on other sites

பெற்றோர்களின் கண்டிப்பும்,கட்டளையும் தங்கள் பிள்ளைகளின் நன்மை கருதியே தவிர வேறொன்றுமில்லை.அதிகம் தெரிந்த பிள்ளைகள் கவனத்திலெடுக்கவும்.

உண்மைதான் கு.சா. அண்ணா... அந்தக் கண்டிப்பும், கட்டுப்பாடுகளும், கட்டளைகளும் ஒரு அளவோடு இருப்பது தான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும்... மாறாக அவை குறைந்தாலோ அல்லது கூடினாலோ தான் பிரச்சனையே உருவாகிறது என நினைக்கிறன்... :)

Link to comment
Share on other sites

யாயினி கூறியதுபோல, வெளிநாடுகளிலும் அதிகம் இப்படித்தான் நடக்கிறது. நாம் எவ்வளவுதான் நல்ல பிள்ளைகளாக இருந்தாலும் இன்றும் எம்மை ஒதுக்கித்தான் வைத்திருக்கிறார்கள். அதேபோல், ஆண்பிள்ளைகள் தவறுவிட்டால் அதனைப் பெரிதுபடுத்துவது மிகவும் குறைவு.

பெற்றோர் இப்படி வளர்ப்பதனால்தான் அதிக பெண்கள் இப்போது திருமணம் முடிக்க விரும்புவதில்லை. அப்படியே செய்தாலும் விரைவில் விவாகரத்தில் போய் முடிகிறது. பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டபின், அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளைத் திருமணம் முடிந்தபின்பு நிறைவேற்ற முயல்கிறார்கள். அப்படி நடக்கும்போது, ஆண்களால் அவர்களோடு ஒத்துப் போக முடிவதில்லை. அப்படியே சில பெண்கள் அடிமையாக வாழ்ந்தாலும் சில காலங்களுக்குப் பின்னர், மனம் வெறுத்து ஒரு வீட்டுக்குள்ளேயே கணவன் மனைவிகள் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் இப்போதைய சந்ததியின் நிலை.

மன்னிக்கவும் கு.சா. உங்கள் கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. பிள்ளைகளின் நன்மை கருதியெனின் ஏன் ஆண்பிள்ளைகளை மட்டும் அதிக கண்டிப்பின்றி வளர்க்கிறார்கள்? பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கு பெற்றோர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். ஒன்றில் மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள் அல்லது மிகவும் சுதந்திரமாக வளர்ப்பார்கள். அதுமட்டுமின்றி, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் சொல்லி வளர்ப்பது மிகவும் குறைவு.

நான் இவ்வாறான பல திரிகளில் ஏற்கனவே எனது கருத்துக்களைக் கூறியிருக்கிறேன். பிள்ளைகளை அதிக கட்டுப்பாடின்றி புரிதல்களோடு வளருங்கள். அவர்களுக்குப் பிரச்சனைகளைச் சொல்லி வளருங்கள். அவர்களுடைய பருவங்களுக்கேற்றவாறு அவர்களுக்குரிய பிரச்சனைகளை அவர்களுடன் விவாதியுங்கள். எதையும் அவர்களுக்கு விளங்கும்வகையில் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் விளங்கிக் கொள்வார்கள். ஆனால் எமது பெற்றேரோ தலைக்கு மேல் வெள்ளம் போன பின்புதான் அதைப் பற்றியே பேசத் தொடங்குவார்கள். இதனால்தான் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் விரிசல்கள் வரக் காரணமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களின் கண்டிப்பும்,கட்டளையும் தங்கள் பிள்ளைகளின் நன்மை கருதியே தவிர வேறொன்றுமில்லை.அதிகம் தெரிந்த பிள்ளைகள் கவனத்திலெடுக்கவும்.

நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் எல்லா வீட்டு பிள்ளைகளும் பெற்றோரின் சொல் கேட்டா நடக்கிறார்கள் இல்லயே...உதாரணத்திற்கு ஆண் பிள்ளைகள் ஓரளவு 15 வயது தாண்டவே தங்கள் கை வரிசையை காட்ட தொடங்கி விடுகிறார்களே..அப்போ என்ன செய்கிறீர்கள் அந்த ஆண் பிள்ளை பிழை விடுகிறது என்பதையும் சேர்த்து வைச்சு பெண்ணைத் தானே வதைக்கிறீங்கள்..இல்லை என்றா சொல்லப் போறீங்கள்..இந்த திரியின் ஆரம்பமே ஒரு பெண்ணிற்கு நேர்ந்துள்ள அவலம் பற்றியது தானே..இது யாரால் ஏற்பட்டுள்ளது..பெற்றோரின் புரிந்துணர்வு அற்ற செயலால் தானே..அந்த சகோதரி தன்னையே அளிக்க முயற்சித்திருப்பது எதனால் தனக்கு எங்குமே தீர்வு கிடைக்க போவதில்லை என்ற காரணத்தினால் தானே..பெற்றோர் அடக்கி,அடக்கி வளர்த்ததால் தான் அந்தப் பிள்ளை வாழ வந்த இடத்திலும் 4 வருசம் கொடுமைகளைத் தாங்கி இருக்கிறது..அது மட்டுமா குழந்தையும் சேர்ந்து தான் அனுபவிச்சு இருக்கு.நான் ஒன்றும் பெண்களை லவ்பேர்ட்ஸ்சாக பறக்க விடுங்கள்,பச்சை குத்த விடுங்கள்,கண்டவர்களோடு எல்லாம் சேர விடுங்கள்,என்று சொல்ல வர இல்லை..அவர்களுக்கு கொஞ்சம் வெளியில் நடக்கும் நல்லது,கெட்டதுகளை சொல்லி வளவுங்கள்..பிள்ளைகள் தாங்களாக ஒரு குற்றத்தை செய்துட்டு வர முன்னர் அதை  தடுக்க பாருங்கள்..இவ்வளவு கட்டி காத்து கடசியில் என்ன செய்வீர்கள் முன் பின் தெரியாத யாருக்கோ தான் மணவறை வரை கொண்டு போய் இந்தா பிடி இவரோடு தான் வாழ வேணும் என்று தான் விடுகிறீங்கள்..மிஞ்சி,மிஞ்சிப் போனால் உங்கள் பாதுகாப்பு எல்லாம் அந்தளவு மட்டும் தான்..ஆனால் அந்தப் பெண் பிள்ளையினது மனதிலோ இல்லை ஆணின் மனதிலோ என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முயற்சித்து இருக்கிறீங்களா..இல்லவே,.இல்லை.ஆண் பிள்ளைக்கோ,பெண் பிள்ளைக்கோ  பிடிச்சது என்ன,பிடிக்காதது என்ன என்று எப்போதாவது கேட்டு அறிந்து இருப்பீங்களா..படிப்பு விசயத்தில் இருந்து எல்லாம் உங்கள் தெரிவுகளாகத் தான் இருக்கும்.இதையும் யாரும் இல்லை என்று மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o விசுகு அண்ணா உங்கள் மகளை அனுப்பாமல் விட்டதற்கு காரணம் என்ன? அவவின் மனம் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்காதா? ஏன் ஆணையும் பெண்ணையும் இப்படி பாகுகாட்டி வளக்கவேண்டும்? பெண் பிள்ளைகளையும் பலதும் அறிந்தவர்களாக, தைரியம் உள்ளவர்களாக, தன்நம்பிக்கை கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமல்லவா? அவவின் நண்பிகள் Belgium போய்வந்து அங்கு நடந்தவை பற்றி கதைக்கும் போது உங்கள் மகள் கவலைப்படமாட்டாளா? ஆண்களுக்கொரு நியாயம் பெண்களுக்கொரு நியாயமா? :(

இது கூடத் தெரியாதா தமிழினி விசுகு அண்ணாவுக்கு தன்ட மகள் மேலே [அவ பிழை விட மாட்டா/தப்பு செய்ய மாட்டா என்ட] நம்பிக்கை இருக்கும் ஆனால் அவருக்கு இந்த சமுதாயத்தில் பயம்...தன்ட மகளை தூரத்திற்கு அனுப்பினால் சமுதாயம் என்ன சொல்லுமோ என்பது தான் முக்கிய காரணமாய் இருக்கும்...ஆண் பிள்ளைகள் எதாவது பிழை விட்டால் அந்தக் குடும்பத்திற்கோ,அந்த ஆண் பிள்ளைக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை ஆனால் இதே பெண் பிள்ளை விட்டால் :( இதையே தான் காலம்,காலமாய் சொல்லி பெண்களை அடக்குகிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.