Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

குறள் எதுவென்று தெரியாது.

அண்ணளவான மொழிபெயர்ப்பு :

நிலவே, பெண்ணின் முகத்தைப் போல் நீயும் ஒளிர்வாயானால் உன்னை விரும்புபவர்களை நீ பெறுவாய்.

இன்னொன்று புரியவில்லை, இதை ஆறாம் நூற்றாண்டில் எழுதியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர், பிரான்சுக்குப் போய்ப் பழுதாப் போனார் போல!

கடவுச் சீட்டுக்காகக் காலத்தையும் மாத்திப் போட்டார்! :wub:

Link to comment
Share on other sites

.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் கூந்தலுக்கு, மணம் இயற்கையானதா...செயற்கையானதா என வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான விடயங்களில் அதிகவனம் செலுத்தி அந்தரித்த மண்ணில் தோன்றி, பிரஞ்சு மொழி தெரியாமல் தவித்த எமக்கு உதவி, குறள் 1118ஐ மேற்கோள்காட்டி விளக்கமளித்த ஈசன், புங்கை, இணையவன் ஆகியோருக்கு நன்றி . Clapping-small.gif

பிரஞ்சு பேட்டை பண்ணை 'விசு', சொலவடை வேந்தன் 'கோம்ஸ்' பங்களிப்பை காணோம்! Crying-small.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறள் எதுவென்று தெரியாது.

அண்ணளவான மொழிபெயர்ப்பு :

நிலவே, பெண்ணின் முகத்தைப் போல் நீயும் ஒளிர்வாயானால் உன்னை விரும்புபவர்களை நீ பெறுவாய்.

இன்னொன்று புரியவில்லை, இதை ஆறாம் நூற்றாண்டில் எழுதியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மாறி வந்தால் நல்லா இருக்கும்,

பெண்ணே, நிலவை போல் நீ ஓளிர்ந்தால்

நீ விரும்புபவர்களை அடைவாய்

Link to comment
Share on other sites

பெண்ணின் கூந்தலுக்கு, மணம் இயற்கையானதா...செயற்கையானதா என வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான விடயங்களில் அதிகவனம் செலுத்தி .

Clapping-small.gif

நிலவே உன்னை பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது!

என்காதலி சில தினங்களுக்கு முன்தான் எனக்காக இரவில் வந்து காத்திருக்க தொடங்கினாள். நிலவே நான் என் காதலியிடம் போகுமிரவெல்லாம் உன்னையும் பார்க்கிறேன். நீ எப்போதும் இப்படி தனிமையாக வந்திருந்து வாடுகிறாய். அவளிடம் போவதை நான் ஒரு நாள் தனனும் தவறவிட்டால் அவளின் ஊடலின் வெம்மை இரவை பகலாக்கி சுட்டு பொசுக்குகிறதே. நீ, உன்னவன் இதுவரையும் உன்னை வந்து காணமலும், எப்படி இவ்வளவு தண்மையுடன் பொறுமை காக்குகிறாயோ நான் அறியேன். நிலவே உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்டால் அதில் ஒன்றும் தப்பில்லையே? ஒருவேளை உனக்கு இதுவரையில் ஒருவனும் வந்து கிடைக்கவில்லையென்பதா சமாசாரம்?

இதோ கேள்! உன்னை நான் ஒவ்வொரு நாளும் பார்த்துப் பழகிவிட்ட பழக்க நெருக்கத்தால் ஒளிவின்றி என் அனுபவத்தை உன்னிடம் கூறுகிறேன். அன்றொருநாள் நமது ஊர் ஆலயத்தில் தேர்த்திருவிழா. ஆதவன் விண்ணிலிருந்து இந்த மண்ணுலகை பொன்னுலகாக்கிக் கொண்டிருந்தான். இரத்தினங்களாலும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சி்ற்பத்தேர் ஆடி அசைந்து வந்து இருப்பிடம் சேர்ந்தது. முத்துப்பீடத்திலே பொன்னொளித் தோற்றத்திலே இந்த பாரையெல்லாம் கட்டியாளும் பரமேஸ்வரி தேரை விட்டிறங்கினாள். இந்த காட்சிகள் ஆயிரம் காலத்து காவியம் மாதிரி என் உள்ளத்தை கொள்ளை கொண்டன. தேவியை சுமந்து செல்ல காவுதடிக்கு தோளைக்கொடுத்து அடியார் பக்கம் திரும்பி நடந்தேன். பக்கதர்கள் வலம் வந்துகொண்டிருந்த தேவிக்கு மலர்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாழ்த்தி எறிந்த மலர்களில் சில என் தலை மீது சொரிந்து என் நெஞ்சம் மீது தவழ்ந்தோடின. அந்த மலர்களை விட்டெறிந்த கரங்கள் ஒன்றுக்கான ஒருமுகம் மட்டும் என் நெஞ்சம் மீது தவழ்ந்தோடும் மலர்களின் அழகை தொடர்ந்து உற்று நோக்குவதுபோலுணர்ந்து அந்த பக்கம் திரும்பினேன். அப்போதுதான் கண்டேன் நான் இதுவரையில் கண்டவற்றையெல்லாம் ஒரு தூசுக்கு சமானமாக்கிவிட கூடிய காட்சியொன்றை. அங்கே நின்றிருந்தது பகலின் ஆதவனையும் விட பிரகாசமாயும் இரவின் மதியையும் விடத்தண்மையுமான ஒரு முகம். என் கண்களைக்கண்ட அவளோ உடனே தன் முகத்தை கீழே திருப்பிக்கொண்டாள். இன்னொருதடவை அந்த முகத்தை காணக்கிடையாதா என்று அப்போது ஏங்கினேன். ஆனாலும் அன்றே வரித்துக் கொண்டேன் அவளை என் காதலியாக.

அதனால்த்தான் நிலவே உனக்கு மட்டும் நான் ஒரு அறிவுரை சொல்கிறேன். உனக்கு அது உதவுமானால் பெற்றுக்கொள். நிலவே, என் காதலி முகம் மாதிரி நீயும் ஒளிவீசுவாயானால், உன்னையும் ஒருவன் காதலிக்க விரும்பி உன்னிடம் வருவான் இல்லையா? - அப்போது நீ ஒவ்வொருநாளும் உறவு தேடி இங்கே அலைய வேண்டியிருக்காது. இருந்தாலும் யாரென்றாலும் ஒருவன் உனக்கும் வரட்டும். அதுவே என் வாழ்த்துக்கள் உனக்கு!

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி

வன்னியரே! இப்படி அருமையான சந்தர்பங்கள் வாழ்வில் தப்பியோடுவதை என்னால் சகித்து கொள்ள முடியாது. சந்தர்பத்திற்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.