மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  5,848
 • Joined

 • Last visited

 • Days Won

  23

மெசொபொத்தேமியா சுமேரியர் last won the day on November 24 2015

மெசொபொத்தேமியா சுமேரியர் had the most liked content!

Community Reputation

1,382 நட்சத்திரம்

About மெசொபொத்தேமியா சுமேரியர்

 • Rank
  Advanced Member
 • Birthday April 4

Contact Methods

 • Website URL
  http://poongkaadu.blogspot.fr/

Profile Information

 • Gender
  Female
 • Location
  மெசொப்பொத்தேமியா
 • Interests
  எதைச் சொல்லுறது

Recent Profile Visitors

4,225 profile views
 1. நல்லாச் சிரியுங்கோ சிரியுங்கோ வாங்கப்பு ......வாங்கோ அப்பிடியா நினைக்கிறீங்கள் ...... எல்லாத்தையும் விடக் கொடுமை என்ன தெரியுமே. மனிசன் புதிசா வாங்கின சீலையைக் கட்டு எண்டு ஒற்றைக் காலில நிக்குது. சொல்லவும் முடியாமல் கட்டவும் முடியாமல் பாவம் ..... சுமே.
 2. இன்னும் மனிசனுக்குத் தெரியாது. தெரிஞ்சா ஒவ்வொருநாளும் உதைச் சொல்லியே சுப்பிரபாதம் நடக்கும். நல்ல காலம் நீங்கள் சொன்னது.அல்லாட்டிச் சனம் என்னை நம்பாது. நல்லாய் இருங்கப்பு
 3. சேலையையே மாற்றிவிட்டார்கள் இப்பிடி எல்லாம் நடப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறியளோ அண்ணா? அவர்கள் சேலையை எப்படி மடிப்பார்கள் என்று தெரியும் தானே அண்ணா. நாம் ஒருமுறை விரித்தால் குலைந்துவிடும். மீண்டும் அந்தப் பெட்டியில்வைக்க முடியாது என்பது ஒன்று. அங்கிருந்து வந்ததன் பின்னர் அம்மா அப்பா இருவரும் அடுத்தடுத்து இறந்ததில் எந்த சில நிகழ்வுகளுக்கும் செல்லவில்லை. ஐயோ பாவம்.
 4. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்தபோது நிறையச் சேலைகளை வாங்கி வந்தேன். ஏற்கனவே நிறையச் சேலைகள் இருந்தாலும் பெண்களின் சேலை ஆசை நீங்கள் எல்லாம் அறிந்தது தானே. முதல் நாள் ஒரு இருபதினாயிரம் ரூபாய்களுக்கு சாதாரண சேலைகளும் பிள்ளைகளுக்கான ஆடைகளும் வாங்கியதில் கடையில் வேலைசெய்வோர் சகஜமாகக் கதைத்துச் சிரித்து எனக்கு ஐந்து வீதக் கழிவும் தந்தார்கள். அடுத்தநாளும் பட்டுச் சேலைகள் வாங்கவேண்டி இருந்ததில் நானும் மாமியும் போத்தீசுக்குச் சென்றோம். மாமி என்றால் என்னிலும் ஐந்து வயது பெரியவர் தான். இந்தியாவில் இருபது ஆண்டுகள் இருக்கிறார். ஆனால் அவர் பெரிதாக சேலைகள் வாங்குவதோ உடுத்துவதோ கூடக் கிடையாது. அதனால் அவருக்குச் சேலைகள் பற்றியோ வேறு கடைகள் பற்றியோ எதுவும் தெரியாதவர். ஆனாலும் நான் அவர் வீட்டில் தங்கி இருந்ததால் வேறு வழியின்றி அவரைக் கூட்டிக்கொண்டே கடைக்குச் செல்லவேண்டியதாகிவிட்டது. முதல் நாள் பழக்கத்தில் அடுத்த நாள் கடைக்குப் போனதும் ராஜ மரியாதை. ஒரு மணிநேரம் அவர்களும் சலிக்காமல் சேலைகளை எடுத்துப் போட ஒருவாறு அதில் இரண்டு சேலைகள் ஒவ்வொன்றும் 15,500 இந்தியன் ரூபாய்கள் பெறுமதியானவை. அவற்றைத் தெரிவு செய்தேன். பணத்தைச் செலுத்தி முடிய எமக்கு சேலை காட்டியவருள் ஒருவர் "அம்மா! சேலைக்கு இலவசமாக் குஞ்சம் தைத்துத் தருகிறோம். ஒரு அரைமணி நேரம் பொறுக்க முடியுமா "என்றார். நான் மாமியைப் பார்க்க குடன் தைத்துத் தரட்டும் என்றார். சரி அரைமணி நேரம் தானே என்று கொடுத்துவிட்டுப் பக்கத்தில் இருந்த சரவணபவனுக்குப் போய் நெய் முறுகல் ஒன்று சாப்பிட்டுவிட்டு திரும்பிவந்து சேலையைப் பெற்றுக்கொண்டோம். அவர்கள் தந்த உடன் பெட்டியின் மூடியைத் திறந்து நான் கொடுத்த சேலைகள் தானா என்று பார்க்க எல்லாம் சரியாக இருக்க, அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தோம். உனக்கு சந்தேகம். ஏன் அவங்களுக்கு முன்னால பெட்டியைத் திறந்து பாத்தனி எண்டு மாமி கேட்க, பாக்காமல் எப்பிடி வாங்கிறது என்று கூறி மாமியின் வாயை அடைத்துவிட்டு வீடு வந்து நாடு வந்து இரண்டு ஆண்டுகள் ஆச்சு. இந்த இரண்டு ஆண்டுகளில் தெரிந்த சொந்தங்கள் வீட்டில் திருமணம் நடைபெறவில்லை. நடைபெற்ற சில நிகழ்வுகளுக்கு இருந்த பழைய பட்டுச் சேலைகளைக் கட்டிவிட்டு இன்னும் இரண்டு வாரங்களில் என் ஒன்றுவிட்ட சகோதரனின் மகளுக்கு நடக்க இருக்கும் திருமணத்துக்குக் கட்டவேண்டும் என எண்ணியபடி சட்டையைத் தைப்பதற்காக இரண்டு சேலைகளையும் எடுத்து விரித்தால்...... நெஞ்சு படபடப்பு இன்னும் தான் போகேல்லை. நான் எடுத்த சேலைகளின் நிறத்தில் இந்தியப் பணத்துக்கு 3000 ரூபாய் கூடப் பெறாத சேலைகள் என் முன்னால் பல் இளித்தபடி. என்ன செய்வது கோபப்பட்டும் ஒண்டும் செய்ய முடியாது. ஆனாலும் உப்படியான வேலைகளை சும்மாவும் விடக்கூடாது என எண்ணி போத்தீசின் இணையத்தளத்துக்குச் சென்று அதிலிருந்த மின்னஞ்சலுக்கு விபரத்தை எழுதினேன். ஆனாலும் மூன்று நாட்களாகியும் எந்தப் பதிலும் இல்லை. பணம் கூடப் பெரிதில்லை ஆசையாக வாங்கிய சேலையை இப்படி ஏமாற்றி விட்டார்களே என்றுதான் கோபம் வருகிறது.
 5. நவீனன் நீங்கள் தந்த லிங்கில் இந்தச்சிறுமி பற்றி எதையும் காணவில்லையே.
 6. பண்பாட்டு நிகழ்வைத் தடை செய்ய இவர்கள் யார்? மாணவர்கள் தொடர்ந்து கடைசிவரை போராட்டத்தைத் தொடர்வார்களா? என்ற கேள்வி உண்டு என்றாலும் தாங்களாகவே ஒன்றிணைந்தமைக்கு வாழ்த்துக்களும் ஆதரவும்.
 7. இந்தப் பாடசாலை அதிபருக்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதில் இதுவரை இல்லை.
 8. வேண்டுமானால் அங்கிருக்கும் யாழ் உறவுகள் இச் செய்தி உண்மையா என விசாரிக்கலாம். அதன்பின் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கான உதவியைச் செய்யலாம். அவர்களின் படத்தைப்போட்டு செய்தியை சும்மா வெளியிட்டிருக்கலாம். செய்தியை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்வது தவறு. யாராவது செய்தி உண்மையா என்று அறிந்து கூறினால் பள்ளியில் சேர்க்கும் வேலையை நான் செய்யறேன். ஜீவன் சிவா அல்லது முனிவர் ஜீ உதவலாமே சரியான விடயத்தை அறிய.
 9. அறுவது தாண்டீற்றுதா ? அப்ப இனிப் பரவாயில்லை யாயினி வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். - இது நான் சொல்லவில்லை. பாட்டிவைத்தியத்தில் இருந்து வெட்டி ஒட்டியது. கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள். சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள். காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும். மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது. மேற்கூறியவை இலகுவாகக் கிடைக்கும் பொருட்கள். இவற்றைக் கொண்டு முயன்று பார்க்கலாம். முக்கியமாக வைட்டமின் D குளிகையை ஒரு ஒருநாளுக்கு ஒன்று கட்டாயம் எடுங்கள். இது நாமே கடைகளில் வாங்க முடியும். இங்கு வைத்தியர்கள் எலும்புத் தேய்மானத்துக்கு இதனையே பரிந்துரைக்கின்றனர்.
 10. இந்தக் கதைகளை எல்லாம் யார் எழுதியது ???
 11. ம் தொடருங்கள்