Jump to content

vivasaayi

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    51
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

vivasaayi's Achievements

Contributor

Contributor (5/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

4

Reputation

  1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html
  2. சர்வதேச புவி தினமான இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட விழிப்பு நடவடிக்கையின்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் கொழும்பு, காலி முகத்திடலில் கோல்பேஸ் சுற்றுவட்டம் முதல் பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரையிலான பகுதியில் காணப்பட்ட குப்பைகளை சேகரிப்பதை படங்களில் காணலா http://www.vivasaayi.com/2013/04/blog-post_1071.html
  3. தனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில் , 1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம் பெற்றுத் தர வேண்டும். அதற்காக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரமாண்ட அளவில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி சேலம் போஸ் மைதானம் வரை பேரணியும், மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டமும் நடைப்பெறும். இதில் சேலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ - மாணவர்களும் கலந்துக் கொள்ளுவார்கள். தொழிலாளர் பெருமக்களும், மீனவ அமைப்புகளும் பெருமளவு கலந்துக் கொள்ளுவார்கள். நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பில்லை. அதை முன்னிட்டு தமிழகம் முழுக்க நான்கு கட்ட பிரசார பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைப்பெறக் கூடாது என்கிற பிரசாரத்தையும், ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடவும், இலங்கை அகதிகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கவும் போராட்டம் நடைப்பெறும். ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை மீனவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மே 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இறுதியாக மே 19ஆம் தேதி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெறும். இத்தோடு எங்கள் போராட்டம் நின்று விடாது. தொடர் போராட்டமாகவே இருக்கும் என்றார்கள். http://www.vivasaayi.com/2013/04/19_20.html
  4. இறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்த படை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்கள் பிரகாரம் சரணடைந்தவர்களது பெயர்பட்டியல்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையினில் தடுத்து வைத்திருக்கப்படவேண்டியவர்கள் மற்றும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தடுத்து வைக்கப்படவேண்டியவர்கள் தொடர்பான பட்டியலில் நூற்றுக்கும் குறைவானவர்களது பெயர்களே இருந்ததை தான் கண்டிருந்ததாக அப்படை அதிகாரி மேலும் தெரிவித்தார். ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக்கொண்ட பாலச்சந்திரன் சரண் அடைந்திருக்கவில்லையென தெரிவித்த அப்படை அதிகாரி நிராயுதபாணியாக அகப்பட்டுக்கொண்டதாகவே தெரிவித்தார்.எனினும் பாலச்சந்திரன் படுகொலைக்கான ஆலோசனையினை கருணாவே வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட அவ்வதிகாரி அப்போது பெரும்பாலும் கோத்தா அனைத்திற்கும் கருணாவின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட வேண்டியவர்கள் தவிர்த்து ஏனையவர்கள் வேறு பிரிவு படை அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரிவித்த குறித்த படை அதிகாரி அவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் பற்றி கூறமுடியாதிருப்பதாகவும் கூறினார். எனினும் சரணடைந்தவர்களுள் பலர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் ஊடாக படையினரால் கூட்டிச்செல்லப்பட்டு தேவையான தகவல்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாக இருப்பினும் சரண் அடைந்தவர்களது நிலையினை அறிந்தவர்களுள் கருணாவும் ஒருத்தரென சுட்டிக்காட்டிய அவர் மகிந்த கும்பல் ஓரு வேளை போர்குற்றவாளிகளென அறிவிக்கப்படுமிடத்து அவர்களது பலியாடாக கருணாவே நிச்சயமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_692.html
  5. இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளையேனும் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை உரிய முறையில் ஏற்படுத்தாமை போன்ற காரணிகளினால் மீளவும் முரண்பாடுகள் வெடித்த சந்தர்ப்பங்கள் பல வரலாற்றில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இந்த நடவடிக்கை மிகவும் கடினமானது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கையானது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நீண்ட காலமாக உறவுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த முக்கிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரம் மிகவும் அவசியமானது எனவும், ஜனநாயக நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையான அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_9.html
  6. இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை அரசம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பகமான - சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வாயை அடைக்கும் முயற்சியே இது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முன்னாயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், சொத்து இழப்புகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. http://www.vivasaayi.com/2013/04/blog-post_4374.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.