Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43054
  • Joined

  • Days Won

    438

Everything posted by குமாரசாமி

  1. நீங்கள் உங்கடை சோகத்த சொல்ல எனக்கு நடந்த சோகமும் ஞாபத்துக்கு வருது......அல்வாயன் நாலைஞ்சு வருசத்துக்கு முதல் ஊரிலை இருக்கிற ஒருத்தர் எனக்கு ரெலிபோன் அடிச்சு கேட்டார் என்ர மோன் ஏல் முடிச்சிட்டான் உங்கை கார் கொம்பனியள்ள வேலை எடுக்கலாமோ எண்டு.....?🤣 ஆரிட்ட சொல்லி அழ....😎 நொந்து நூடில்ஸ் ஆன உங்கள் கதையுடன் கூடிய கவிதை மிக அழகு. 👍🏼
  2. அரபு நாடுகளிலும் கல்லால் எறிந்து தான் தண்டனை வழங்குகின்றார்கள்? பாலியல் குற்றங்கள் குறைந்ததா? 😎
  3. என்ன விசுகர் நல்லாய்த்தான் குழம்பீட்டியள் போல கிடக்கு 🤣 முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்னர் இந்திய ராஜதந்திரிகள்( மேனன்ஸ் அன்ட் நாயர்ஸ்) ஐரோப்பா,அமெரிக்கா என பறந்து பறந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வாயை மூடியது ஞாபகமில்லையா? நாங்கள் வீடு வாங்கும் போது அக்கம் பக்கம் நல்ல ஏரியா பார்த்து வீடு வாங்குகின்றோம் அல்லவா? அந்த ஏரியா சரியில்லா விட்டால் அந்தப்பக்கம் தலை வைத்து பார்க்கவே மாட்டோம். எம் இனத்தின் தலையெழுத்து கிந்தியா அயல்நாடு.என்ன செய்வது? விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் காலத்தை கடத்துவது ஈழத்தமிழரின் நிலை.
  4. இப்படியான காம அகோரம் கொண்டவர்களுக்கு வரும் காலத்தில் பாலியல் உணர்ச்சியே வரக்கூடாத அளவிற்கு நாடி நரம்புகளை அறுத்து விட வேண்டும். இப்படியான தண்டனைகளை 100 பேருக்கு கொடுக்க நாடே திருந்திவிடும்.
  5. உலகில் வாழும் உயிரினங்களில் இயற்கையின் நியதிக்கு எதிர்மறையான முடிவுகளை எடுக்க தெரிந்த இனம் மனித இனம் மட்டுமே. 🤣
  6. மணி(யம்)வீடு ——————— வந்து வரைபடம் கீறி வடிவாய்க் கட்டிய வசதியான வீடு ஹோலின் நடுவே குசினி குசினிக்கடுத்து குளியலறை பேசிய படியே பெரியறை எங்கோ சின்னறையானது நீரும் நெருப்பும் மேலும் கீழும் பாரும் இது பழுதாகலாம் யாருமொரு சாத்திரி பார்த்தால் பறவாயில்லை பக்கத்து வீட்டவர் பலமுறை சொன்னார் மூன்று கோடி முழுதாய் முடிந்ததாம் கடைசிமகன் பிரான்சும் கனடா மகளும் கடைமணியத்தார்க்கு கட்டிக்கொடுத்த வீடு குடிபூரல் என்று குடும்பத்தோடு வந்து கூத்தும் கும்மாளம் ஆறறை மேலே ஐந்தறை கீழே வேறறையிரண்டு வெளியில் போறறையெல்லாம் போக்கிடம் தொடுப்பு விளக்குகள் பற்றி விளக்கவே வேண்டாம் ஏறினால் எரியும் இறங்கினால் அணையும் கூறினால் என்ன? குழப்படி வீடு மாதங்கள் மூன்றாய் மகனும் மகளும் கீதங்கள் போட்டு கிடாயையும் போட்டு விருந்துகள் வைத்து மகிழ்ந்தது வீடு கழிந்தன நாட்கள் கடனைக்கட்ட கனடாவும் பிரான்சும் பறந்தன மீண்டும் விளக்குமில்லை விழாவுமில்லை மனையில் மணியம் தனியாய்ப்போனார் கூட்டித்துடைக்க ஆளில்லாமல் கூடைக்கதிரை ஒன்றுக்குள்ளே குசினி லைற்றின் சுவிச்சைத் தேடி களைத்து மனிசன் சோர்ந்து போனார் மூன்று கோடி முடிந்த வீடு முனிவீடாய் மாறிப் போச்சு மணியத்தாரின் தனிமைப்பரப்பு அறைகள் கணக்கில் அகலமாய்ப் போச்சு மணியம் உணர்ந்தார் Money யில் இல்லை மகிழ்ச்சியென்று. வாட்ஸ் அப்பில் வந்தது.
  7. சாதி வேரோடு அறுத்தெறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வேள்ளாளர் மட்டும் தான் சாதி பாக்கினமோ எண்டு நான் கேட்டால் நீங்கள் என்னை முழுசி பாக்கக்கூடாது. இனவாதம்,மதவாதம்,மொழிவாதம்,பிரதேசவாதம்,ஊர்வாதம் என்பது போல் சாதிவாதமும் ஒரு வகையானது.
  8. இது அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கும் பொருந்துமா சார்? 😎 ஐ மீன் பழிவாங்குவது, வன்முறை...... 😂
  9. சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடிச் சொல்லுதே நம் காதல் வாழ்கவே சொல்லாது சோலைக்கிளி சொல்லைக் கடந்த காதல் இது கண் மூலம் காதல் பேசுதே...❤️
  10. இப்ப தொடக்கம் அடுக்கெடுத்தால் தானே கடைசியிலை அரிச்சந்திரன் வேசம் பொருந்தி வரும். 🤣
  11. அவுஸ்ரேலியா , கனடா ,ஜேர்மனி , பிரான்ஸ் , பெரிய பிரித்தானியா போன்ற சுகபோக , மனித உரிமைகளுக்கு பொங்கியெழும் மேற்குலக நாடுகள் தான் இலங்கையில் நடந்த / நடந்து கொண்டிருக்கும் அழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டும் காணாமலும் இருக்கின்றன. அவற்றை விவாதிக்க வக்கில்லாமல்..... ரஷ்ய/ நேட்டோ அரசியலுக்குள் வந்து தம் சுக போக வாழ்க்கைக்காக குத்தி முறிவதன் நோக்கங்களும் யாவருக்கும் புரிந்ததே. நான் ஜேர்மனியின் ஒரு கட்சி சார்ந்து கருத்துக்களை பகிர்கின்றேன். அவ்வளவுதான்.
  12. கிட்டத்தட்ட ஜேர்மனிய செய்தி தளங்களை பார்க்கும் போது எவ்வளவு வேகமோ அதே வேகத்தில் யாழ்களமும் இயங்குவதை இன்று முதல் தடவையாக பார்க்கின்றேன். மகிழ்ச்சி.👍🏼 மோகன் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🏼 தமிழால் இணைவோம்.❤️
  13. கனடா மற்றும் ஜேர்மனியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என தெரியுமா? அந்தந்த கட்சிகளின் கொள்கைகள் என்னவென்று தெரியுமா? சரி கனடா வேண்டாம். ஜேர்மனியில் உள்ள கட்சிகளின் கொள்கைகள் என்ன?
  14. ஆதாரம் இருந்தால் தானே குடுக்கிறது😁. ஆனால் மேற்குகின் நடவடிக்கைகளினால்த்தான் இந்த உலக அமைதி கெட்டது எண்டதுக்கு கண்ணுக்கு முன்னே நிறைய ஆதாரங்கள் இருக்கு 😎
  15. இதென்ன கோதாரி புதுக்கதையாய் கிடக்கு? புட்டினாலை உலக அமைதி கெட்டதா? எப்பிடியெண்டு ஒருக்கால் சொல்லுங்கோ...😂 சாத்தனார் நித்திரைப்பாயால எழும்பி வந்து கதைக்கிறார் எண்டு நினைக்கிறன்...🤣
  16. இந்த செய்தியை வாசிக்கேக்கை யாழ்ப்பாணத்தானை நினைச்சு பெருமைப்படுறன்.புழகாங்கிதம் அடையுறன்.💪🏽 யாழ்ப்பாணத்தானுக்கு...... ஒரு நதியுமில்லை.... ஒரு ஆறுமில்லை... ஒரு குடிநீர் தேக்கமுமில்லை... உள்ள இடமெல்லால் உப்பு நீர் ஏரிகள்.... கிணறுகள் கூட உப்புத்தண்ணி கிணறுகள்... ஒழுங்கான மழைகூட இல்லை..... ஆனாலும்..... செல்வச்செழிப்பான மண் யாழ்ப்பாணத்து மண். தெய்வத்தின் கொடை அது.😍
  17. இருமல் நேரங்களிலையும் சரிஞ்சு படுத்து பாருங்கோ சிலருக்கு பயனளிக்கும். 😀
  18. இந்த மருந்து, மாயங்கள், மந்திரங்கள் ரஷ்யாவில் மட்டும்தானா? அல்லது நம் கண்கள் பார்க்க மறுக்கின்றனவா? என்னைப் பொறுத்தவரைக்கும் ஐரோப்பாவில் சில நாடுகளை தவிர உலகில் உள்ள மற்ற நாடுகளில் எல்லாவற்றிலும் பயங்கர சுத்துமாத்து தேர்தல் தான் 😛
  19. என்ரை சொந்த அனுபவம் என்னனெண்டால் ஒரு பக்கம் சரிஞ்சு படுத்தால் குறட்டை விடுறது குறைவாக இருக்கும்....😷
  20. எந்த விளையாட்டு எண்டாலும் ஆம்பிளையள் விளையாடேக்க இருக்கிற கிக் கேள்ஸ் விளையாடேக்க இருக்கிறேல்லை. பெரிய மீடியாக்களும் முக்கியத்துவம் குடுக்கிறேல்ல.🤣 இல்லையோ ஓமோ? 😎
  21. உங்கள் எழுத்துகளின் ரசிகன் நான். என்னமோ தெரியவில்லை இந்த முறை ஆற அமர இருந்து முழுவதுமாக வாசிக்க முடியவில்லை😒. வெவ்வேறு மன உளைச்சல்கள் இருப்பதால் சந்தர்ப்பம் வரும் போது வாசித்து என் கருத்துக்களை சொல்கின்றேன்.
  22. அமெரிக்காவில் தேர்தல் வருகின்றதல்லவா.....மிதக்கும் துறை முகம் என்ன பறக்கும் துறைமுகமே உருவாக்குவார்கள். 😂
  23. ஊர்களில் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கினாலும்.... சம்பந்தப்பட்டவர்களுக்குள் பழிக்கு பழி எனும் இன்னொரு நடவடிக்கை என்று உள்ளது. அது 20,30 வருடங்கள் காத்திருந்தும் பழிக்குப்பழி நிறைவேற்றப்பட்டே தீரும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.