போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  2,522
 • Joined

 • Last visited

Community Reputation

172 Excellent

1 Follower

About போல்

 • Rank
  Advanced Member
 • Birthday

Profile Information

 • Gender
  Male
 • Interests
  வாசித்தல், இசை, விளையாட்டு, ...

Recent Profile Visitors

1,119 profile views
 1. இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து அவர்கள் பின்வாங்க முடியாது. ஐ.நா. இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன், சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைனை, கடந்த வாரம் ஜெனிவாவுக்குச் சென்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போதே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசா ரணைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையைக் கோரும் பரிந்துரை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இலங்கை அரசு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை பன்னாட்டு நீதிபதிகளின் உள்ளடக்கத்தை ஏற்க மறுப்பது தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹூசைன், "இலங்கை அரசுதான் இணை அனுசரணை வழங்கி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐ.நா. அந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கின்றது. அதிலிருந்து ஐ.நா. ஒருபோதும் பின்வாங்காது" என்று ஆணையாளர் உறுதியளித்தார். http://www.tamilwin.com/special/01/132001?ref=home
 2. வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 28 வருடங்கள் மேல் இருந்தே இந்த வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் எனவே அது தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட விடையம் இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழர்கள் பகுதியில் அத்துமீறிய குடியிருப்பை மேற்கொள்ள அன்றைய ஸ்ரீமாவோ அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. கிழக்கில் சிங்கள மக்களை வேண்டும் என்றே அரசு கொண்டுவந்து குடியேற்றியது. என குற்றம் சாட்டினார். அவ்வாறு குடியேறிய சிங்கள மக்கள் தன்னிடம் கூறும் போது தமிழர்கள் வாழும் பகுதியை உங்களுடையதாக்கி கொள்ளுமாறும் பலாத்காரமாகவே தங்களை கொண்டு வந்து அரசாங்கம் குடியேற்றினார்கள் என தெரிவித்தனர். அதன் பின்னர் அரசாங்கமானது தமக்கு தண்ணீர் வசதியோ, வேறு எந்தவித வசதிகளையோ செய்து தரவில்லை. அரசின் இந்த எண்ணத்தை நிறைவேற்ற தாங்களா கிடைத்தோம் என அவர்கள் கவலையடைந்ததாக தெரிவித்தார். மேலும் இவற்றை எல்லாம் அன்று இருந்த தமிழ் தலைமைகள் தடுக்காதமையே இன்று கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சிங்கள மக்கள் உள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழர்கள் இன்றும் கூட இராணுவத்தினரின் உதவியுடன் அடித்து துரத்தப்படுகின்றார்கள். தற்போது கூட அகதிகளாக சென்று மீண்டும் நாட்டினை வந்தடைந்தவர்களுடைய இடங்கள் சிங்கள மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு “தாங்கள் உங்களுக்கு வேறு இடத்தில் காணிகளை தருகின்றோம்” என்று மத்திய அரசாங்க அலுவலர்கள் கூறுகின்றார்கள், இவ்வாறு எல்லாம் பற்றி பேசினால் எங்களை இனவாதி என முத்திரை குத்துவதாக முதல்வர் குற்றம் சுமத்தினார். http://www.canadamirror.com/canada/78578.html
 3. சிலம்பம் சுற்றும் கனேடிய பிரதமர்: வைரலான காட்சிகள்… கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று உலக தமிழர்களுக்கு தனது முகப்புத்தகத்தில் தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து கூறி அசத்தினார். இதனை தொடர்ந்து தமிழர்களின் ஆதரவு கனேடிய பிரதமருக்கு அதிகரித்ததே செல்கின்றது. தற்போது அவர் சிலம்பம் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டில் கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் சிலம்பு சுற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் சுற்றும் போட்டி நிகழ்வொன்றில் அவர் இன மத மொழி வேறுபாடின்றி கலந்து கொண்டிருந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் தமிழர்களின் பண்டிகைக்கு தமிழில் வாழ்த்துக்களை அவர் தெரிவித்திருந்தமையால், 2015 இல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தினை தற்போது எல்லோரும் முகநூலில் பகிர்ந்து வருகின்றனர். http://www.canadamirror.com/canada/78572.html
 4. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி செயலகம் ஈரான் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த விஜயத்தை திடீரென இரத்து செய்துள்ளார். இதேவேளை, ஈரானிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும் தற்போது இந்த விஜயம் எதற்காக இரத்து செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் இதுவரையும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/131950?ref=home
 5. கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.லியனவல தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சேதமடைந்த சொத்துக்களுக்கு இதுவரை ஆயிரத்து 41 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தத்திற்கு உள்ளான சிலர் இழப்பீட்டுத் தொகை போதாதென்று குறிப்பிட்டமையால் இரண்டு மூன்று தடவை மதிப்பீடுகளை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். http://www.tamilwin.com/community/01/131959?ref=home
 6. போர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழலிலேயே, நல்லிணக்கச் செயலணியின் 11 உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறப் போவதை, நல்லிணக்கச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து உறுதி செய்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங் கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பொறிமுறைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் கருத்து அறிவதற்காக நல்லிணக்கச் செயலணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டது. மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அறிக்கை கையளிப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல தடவைகள் நேரம் கோரப்பட்டன. மூன்று தடவைகள் இறுதி நேரத்தில் அறிக்கை கையளிப்பு இடைநிறுத்தப்பட்டன. டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இறுதித் தடவையாக அறிக்கை கையளிப்பு ஒத்திவைக்கப்பட்ட போது, ஜனவரி 3 ஆம் திகதி அறிக்கை கையளிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அன்றைய தினமும் ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று நல்லிணக்கச் செயலணி அறிவித்திருந்தது. ஜனவரி 3ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ஆனாலும், அறிக்கை திட்டமிட்டபடி அவரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. போர்க்குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு தேசிய அரசின் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது நிலைப்பாட்டை இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் நல்லிணக்கச் செயலணி யின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. http://www.tamilwin.com/politics/01/132000?ref=home
 7. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு - குழு மோதல்கள் இடம்பெற்றன. காது, மூக்கு என்பன இந்த மோதல்களில் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடாநாட்டில் சில வார அமைதியின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமும் - பீதியும் அடைந்துள்ளனர். அச்சுவேலி தெற்கு கரதடி, ஏழாலை வடக்கு, அரியாலை முள்ளிப் பகுதியிலேயே இந்த மோதல்கள் - வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. அச்சுவேலி தெற்கு கரதடியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும், ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும் கடந்த சனிக்கிழமை கைலகலப்பு நடைபெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், அச்சுவேலி தெற்கு கரந்தடிக்குச் சென்று மோதல்களில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் கூறினர். இந்த மோதல்களின்போது, வாள் வெட்டில் காது, மூக்கு, கண் என்பன துண்டாடப்பட்ட நிலையில் இளைஞர்கள் 7 பேர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக உடனடியாகவே அவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அரியாலை முள்ளிப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. இதன்போது வீடுகள் மீது கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த 4 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தப்பிச் சென்று விட்டனர். ஏழாலை வடக்கில் நேற்றுமுன்தினம் 7 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தவர்களை, மூன்று இளைஞர்கள் மறித்துள்ளனர். அவர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். கத்தி, வாள் ஆயுதங்களைக் காண்பித்து அவர்கள் மிரட்டியும் காரில் இருந்தவர்கள் பணம் வழங்கவில்லை. இதனையடுத்து காரில் பயணம் செய்தவர்களைத் தாக்கியுள்ளனர். மயானத்தில் கிரியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தப் பகுதி கிராம அலுவலர் மீதும், மூவர் கொண்ட இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு உடனேயே தகவல் வழங்கிய போதும் இரண்டு மணி நேரத்தின் பின்னரே சம்பவ இடத்துக்கு அவர்கள் வருகை தந்ததாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தினர். யாழ். குடாநாட்டில் சில வாரங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திடீரென மூன்று இடங்களில் வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றமை மக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. http://www.tamilwin.com/community/01/131995?ref=home
 8. பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள்! அ.மயூரன் மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் என்பன முக்கியம் பெறுகின்றன. இவை காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் என்பவற்றினால் வேறுபாடடைகின்றது. மனிதவாழ்வு பண்பாட்டுக்குரியது என்பதால் உயிரியல் நிலையில் நிகழ்வுகள் பண்பாட்டு வயப்படுகின்றன. அந்தவகையில் தமிழர் சடங்குகள் சமூக, பொருளாதார, அரசியல், போரியல்,சமய, தளங்களைச் சார்ந்தும் அமைகின்றன. அந்தவகையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பிற்கு உறுதியாய் இன்றுவரை தொடரும் பண்டிகைகளில் தைப்பொங்கல் முக்கிய இடம் வகிக்கின்றது. தமிழரின் வாழ்வியற்தடத்தில் இன, மத பேதங்களைக்கடந்து தமிழன் என்ற உறுதிப்பாட்டில் ஒற்றுமையடையச் செய்வது பொங்கலே. இப்பொங்கல் பண்டிகையானது இந்து. கிறிஸ்தவ, முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் அற்று தமிழனின் பண்பாட்டியலின் உயிர்ப்பின் தைப்பொங்கல் உறுதியாகவே விளங்குகிறது. தமிழர்களின் வாசல்கள் தோறும் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து அந்த சூரிய தேவனுக்கு தன் நன்றிக்கடனினை செலுத்துகின்றார்கள். ஈழத்ததைப் பொறுத்தவரை 2009 .இற்கு முன்னர் தமிழர் உயிர்ப்பின் உயிர் நாடியாக இப்பொங்கல் விளங்கியது தாம் ஆலயங்களில், வீடுகளில், பொது இடங்களில், களமுனைகளில் என பொங்கிச் சூரியனுக்கு தன் நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர். களமுனைகளில் போராளிகள் தங்களை ஆயத தளபாடங்களை வைத்து சூரியனுக்கு பொங்கி நன்றிக்கடன் செலுத்துகின்றனர். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தில் தமிழர் திருநாள் தனித்துவம் பெற்றது எனில் அது தமிழீழ விடுதலைப்புலிகளையே சாரும். மார்கழி மாத மழை இருளாலும், தை மாதப்பனியாலும் அல்லல்படும் மக்களுக்கு யானிருக்கிறேன் என நாற்றிசையும் தன் ஒளி பரப்பி கிளம்பும் சூரியனுக்கு நன்றிக்கடன் செய்கின்ற நாளாகவும் இது அமைகின்றது. பொங்கலின் பிண்ணி:- தைப்பொங்கற் பண்டிகையின் பின்னணியை நோக்கில் நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியில் தம் உழைப்பிற்கு உதவி செய்து நின்ற அனைத்திற்கும் நன்றிக்கடன் செலுத்தும் ஆனந்தவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இனி இந்தப் பொங்கற் பண்டிகை ஏன் தைமாதத்தில் மட்டும் கொண்டாடப்படுகின்றது என நோக்கில் புவியின் காலநிலைத்தளத்தில் தென்னிந்தியாவும், ஈழமும் ஒரே புவியியல் சார் தன்மைகளுக்கு உட்படுவதால் இங்கே புரட்டாதி முதல் மார்கழி வரை மழைக்காலப்பகுதியாக விளங்குகின்றது. இதன்போது குளங்கள், நீர்நிலைகள் நிறைந்து பயிற்செய்கைக்கு ஏற்ற நீர்ப்பாசனத்தை வழங்குகின்றது. இதனால் விளைநிலங்கள் விளைச்சலுக்கு உள்ளாகி தை மாதத்தில் மழைக்காலம் முடிவடைய தை மாத்தில் அறுவடை செய்கின்றார்கள். இது பொங்கல் நிகழ்விற்குப் பொருத்தமாக அமைகின்றது. அத்துடன் தமிழுக்கு அறநூலான திருக்குறள் தந்தவர் திருவள்ளுவர். ஆதலினால் திருவள்ளுவனி;ன் பெயரிலேயே தமிழர் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டு திருவள்ளுவர் ஆண்டு தை மாதத்தை முதன்மையாகக் கொண்டு மார்கழி மாத்தில் முடிகின்றது. திருவள்ளுவர் காலம் கி.மு 31 என்கின்றனர் இதனாலேதான் எமது நாள்காட்டிகள் திருவள்ளுவர் ஆண்டு எனத் தொடங்குகின்றது. இது தொடங்குகின்ற நாளே தைப்பொங்கல் நாள். இதுவே தமிழனின் புத்தாண்டு தினம் என்கின்றனர். தமிழறிஞர்கள். வரலாற்றுக்காலங்களில் பொங்கல் வரலாற்றுக் காலங்களில் தைத்திருநாளான பொங்கலினை பழந்தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுக்காலங்கள் சான்றாதாரப்படுத்துகின்றன. சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர். என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 22ஆம் பாடல் விளக்கிறது. ‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வருணிக்கின்றார். அத்துடன் சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன. ‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை) ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறந்தொகை) ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு) ‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு) ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை) எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றனர். இது தமிழர் திருநாளை பழந்தமிழன் எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடினான் என்பதனை எடுத்தியம்புகின்றன. அடுத்து கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது ‘மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ என பொங்கலினை குறிப்பிடுகின்றது. மேலும் இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போத்துக்கீசர் பொங்கலின் சிறப்பினை தெளிவு படுத்தியிருக்கின்றனர். அதாவது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போத்துக்கீச அறிஞர் தான் எழுதிய‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் எனும் நூலிலே பொங்கல் உழவர்களின் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறாக தமிழர் திருநாளான பொங்கல் வரலாற்றுக்காலம் முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதனைக் காணலாம் தை மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்பர். அதாவது சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் உத்தராயண காலம் எனவும், ஆவணி முதல் மார்கழி வரை தென் திசையில் சஞ்சரிக்கும் காலம் தெட்சிணாயணம் எனவும் வழங்கப்படும். பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து வடதிசைக்குத் திரும்புவதாக ஒரு ஐதீகம். வான சாஸ்திரத்தின் படியும், சோதிட சாத்திரத்தின் படியும் சூரியன் இம்மாதத்தில் கும்ப லக்கணத்தில் இருந்து மகர லக்கணத்திற்கு வருவதாக்க கூறப்படுகின்றது. இதை மகர சங்கிராந்தி என்பர். இதுவே பொங்கல் தினமாகும். உத்தராயணத்தின் ஆரம்பம் என்கின்ற இந்த வேளையில் சூரியனுக்கு அர்ப்பணம் செய்து வணங்கும் மரபும் இணைந்திருப்பதனால் இத்தமிழர் பண்டிகை சைவ சமய ரீதியிலும் முக்கியம் பெறுகின்றது. தமிழர் புத்தாண்டு மாற்றமடைவதற்கான காரணம் இவ்வாறு சங்க காலத்தில் தை மாதத்திலேயே பொதுவாகப் புத்தாண்டு காலம் இருந்தாலும் அதன் பின்னர் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆரியப்பிராமணியங்களின் வருகையிலிருந்து பிராமணியங்களின் கலாச்சாரம் இந்தியாவில் அடிபரவ அது அப்படியே ஈழத்திலும் மாற்றமமையச் செய்திருந்தன. இந்திய வரலாற்றுக்காலங்களைப் புரட்டிப்பார்த்தால் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் குப்தர் காலமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. அவ்வாறு ஆழப்பட்ட குப்தர் காலத்திலே 2ம் சந்திரகுப்தன் என்பவன் தன்னுடைய பெயரினை விக்கிரமாதித்தன் எனும் பெயரில் மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான். இவன் தன்னுடைய பெயரால் ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறைமையை அறிமுகப்படுத்தினான். இது சோதிடம், வானவியல், ஜாதகம் முதலியவற்றைப் புகுத்தி இவன் மேற்கொண்ட முயற்சியே இன்றைய சமய ஆண்டு முறைமையாகும். இந்த விக்கிரமாதித்தன் உருவாக்கிய விக்கிரமசகம் என்னும் ஆண்டு முறைமையானது சித்திரை முதல் பங்குனி வரையான ஆண்டுச்சழற்சியையும், பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சக்கரத்தையும் வரையறுத்தது. இந்த பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சுழற்சிகளில் எதுவுமே தமிழில் இல்லை. இதுவே இன்று பிராமணியங்களினால் பின்பற்றப்படும் ஆண்டுமுறைமையாகும் இதன்பின்னரே பழந்தமிழன் தைமாதத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டானது சித்திரை மாதத்த்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தினைச் செய்த பெருமை குப்தர்களையே சாரும் குறிப்பாக விக்கிரமாதித்தனை (சந்திரகுப்தன்) சாரும். இதனால் புத்தாண்டு தினம் மாற்றமடைந்திருந்தது. காரணம் பிராமணியங்களின் ஆதிக்கம் சைவ சமயத்தில் மேலோங்கியிருந்தது. இதனால் எமது தமிழ்ப்புத்தாண்டு மதம் சார்பானதாக அமையப்பெற்றது. ஆகவேதான் மறைமலை அடிகள் உட்பட்ட தமிழறிஞர்கள் எமக்கு மத அடிப்படையில் இல்லாது தமிழனின் புத்தாண்டாக அமையக்கூடியவாறு எமக்க ஒரு புத்தாண்டை அமைப்பதற்கு 1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் நடந்த தமிழ் மாநாட்டில் சுவாமி ஞானப்பிரகாசர் உற்பட 500 அறிஞர்கள் கலந்துகொண்டு தமிழருக்கு தனியான புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுவது குறித்து விவாதித்தனர். அதில் எல்லா மதங்களும் தமது மதங்களை வளர்த்தவர்கள் நினைவையே புத்தாண்டாக கொண்டாட தமிழர்கள் மட்டும் மதம் சார்ந்து கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது. ஏனெனில் தமிழர்களில் பலர் பின்பற்றுவது சைவத்தினை இதனால் இதன் தோற்றம் இன்னதென்று கூறமுடியாது. ஆகவே தமிழின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தார்கள் அதில் தொல்காப்பியமே எமது ஆதிநூல் அதற்கு முன்பும் பலநூல்கள் தோற்றம் பெற்றாலும் அவை காலவெள்ளத்தால் அள்ளுண்டு போயின. எனவே தொல்காப்பியமே எமது ஆதிநூல். இதனை இயற்றியவர் பெயர் தெரியாமையால் இவரின் நினைவாகவும் புத்தாண்டு கொண்டாடமுடியாது. ஆகவே தமிழில் தெளிவாகத் தெரியக்கூடியதாக இருப்பது திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவரையே. இவர் கி.மு.31இல் பிறந்தார் என்கின்றனர். இதில் குழப்பங்கள் இருக்கின்றன. திருவள்ளுவர் புத்தருக்கு முற்பட்டவர் என்கின்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் அவர் காளி, விஷ்ணு பற்றித் தனது குறளில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் புத்தர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆகவே அவர் புத்தரிக் காலத்திற்கு முற்பட்டவர் என்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் பகவான் என்றழைப்பது புத்தரையே காரணம் திருவள்ளுவர் காலத்தில் விஷ்ணுவை பகவான் என்று அழைக்கப்படவில்லை. அத்துடன் தாமரை மலரோன் என்றழைப்பதும் புத்தரையே ஆகும். அந்தக்காலத்தின் பின்னர்தான் அது விஷ்ணுவுக்கும், இலக்குமிக்கும் வழங்கப்பட்டன. எனவே கி.மு.31 ஐ திருவள்ளுவரின் ஆண்டாக உறுதிப்படுத்தி தை மாதம் முதல்நாளை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர். இதன்போது கூறிய மறைமலையடிகள் ‘தைப்பொங்கலை சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக்கிழப்பி குழப்பம் விளைவிக்க முயன்றாலும், தைமாதத்தை தமிழரின் புத்தாண்டு என ஏற்க முடியாது எனக்கூறுபவர்களும் இம்மாநாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளை விடுத்தார். அத்துடன் பொங்கல் சமயசார்பு அற்றவிழா. தைமாதமே தரணியாண்ட தமிழர்களின் புத்தாண்டாக மாறவேண்டும’; என மறைமலையடிகள் முழங்கினார். இதை தந்தை ஈ.வெ.ரா பெரியார்அவர்களும், சுவாமி ஞானப்பிரகாசரும் ஏற்றுக்கொண்டனர். தைப்பொங்கலே தமிழர் புத்தாண்டாக மாற்றம் பெற்றது.இவ்விதமே திருவள்ளுவர் ஆண்டு கணிக்கப்பட்டது. மாறாக இது கருணாநிதியின் கண்டுபிடிப்பன்று. இனி இத்தனை சிறப்புக்கொண்ட தைப்பொங்கலை தமிழர் திருநாளாக மாற்றவேண்டும் தைப்பொங்கல் நாளே தனிப்பெரும் பண்டிகை என 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் வாழ்ந்த பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்களே முதன்முதலாக பறைசாற்றியவராவார். இவருக்கு தமிழ்பேசும் நல்லுலகு என்றென்றும் நன்றியுடையதாகின்றது. இவர் தமிழகத்தின் கடற்கரை மீன்பிடிக்கிராமங்களில் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வழிவகுத்தவர். அதனைத் தொடர்ந்து பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் ‘நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு. தரணியாண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு’ என்றும் ‘பத்தன்று நூறன்று பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வின் புத்தாண்டு தை மாதம் முதல் நாள் பொங்கல் நன்நாள்’ என்றார். இவ்வாறு தமிழறிஞர்கள் என்னதான் காத்தினாலும் நாம் கேட்டபாடு இல்லை சரி அதைவிட்டு விடையத்திற்கு வருவோம். தமிழக – ஈழப்பண்பாட்டுப்பரவலிடையே தமிழகப்பண்பாட்டு மரபுகள் ஈழத்தில் பரவியிருந்த போதும் சில அம்சங்கள் இச்சமூக குழுமங்களுக்கு ஏற்றவாறு வடிவம் பெற்றும் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது. தமிழகத்தில் நிலவும் சில வழமைகள் எமது ஈழப்பகுதியில் காணமுடிவதில்லை. ஈழத்தில் தைப்பொங்கல் என்னும் சொல் ஒரு தனித்துவ வழக்காறாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் தைப்பொங்கலின் முதன்நாள் போகிப்பண்டிகை என்ற பெயரில் பழைய பொருட்களை தீயிட்டுக் கொழுத்தி, பீடைகளை அகற்றி கொண்டாடுகின்றார்கள். இந்நிகழ்வு ஈழத்தில் இல்லை என்றே கூறலாம். தமிழகத்திலும்அந்நிகழ்வு காலமாற்றத்தினால் மாறி பழைய பொருட்களுக்குப் பதிலாக ரயர்களைப் போட்டுக்கொழுத்தி இந்நிகழ்வினைக் கொண்டாடுவார்கள். மாட்டுப்பொங்கல் பொங்கலிற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். அன்று உழவர் தொழிலுக்கு முக்கியமாகக் கருதப்படும் மாடுகளை நீராட்டி அலங்கரித்து வழிபாடாற்றல் இந்நிகழ்வின் மரபு. உழவனே உலகிற்கு உயிர் கொடுப்பவன் அவன் இன்றேல் அவனியே இல்லை எனச் சொல்வார்கள். இதை கம்பன் கூட தனது ஏரெழுபது என்னும் நூலில் ‘மேழிபிடிக்கும் கைவேல் வேந்தர்க்கு நோக்குங் கை….’ என்று பாடுகிறான். ‘ஏன் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று வள்ளுவனும் , ‘வரப்புயர நீருயரும்’ என்று ஒளவையும், உழவுத் தொழிலுக்கும் வந்தணை செய்வோம் என பாரதியாரும் போற்றியிருக்கின்றனர். அப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க உழவர் திருநாளாகிய மாட்டுப்பொங்கல் சமூக மாற்றத்தின் நடுவே வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது. இது காலமாற்றத்தின் தன்மையே. வயல்களில் நவீன உழவு இயந்திரங்களின் வருகையும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் பண்பாடுகளின் நுழைவாலும், தம் பணியிழந்த கால்நடைகளுக்கு வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடைபெறுகின்றது. அத்துடன் தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடாய் மட்டுமன்றி தமிழர் பண்பாட்டின் விழுமியங்களை நிலை பெறச் செய்யவும் தமிழகத்தில் பொங்கலன்று நிகழும் ஜல்லிக்கட்டு நிகழ்வு முக்கிய இடம் பெறுகிறது. இது சங்ககாலத்தில் நடைபெற்ற காளையை அடக்கும் ஏறு தழுவுதலின் தொடர்ச்சியாகவே நடைபெறுகின்றது. இதுசங்ககாலத்தில் நடைபெற்ற ஏறதழுவுதலின் பண்பாட்டினைக் கொண்டிருக்காவிட்டாலும் தமிழர் பண்பாட்டினை தொடர்ந்தும் உயிர் பெறச் செய்கின்றது. ஆனால் இது ஈழத்தில் வண்டிற்சவாரிகளாக நடைபெறுகின்றன. வன்னியில் உருத்திரபுரம், வட்டக்கச்சி, விசுவமடு, வவுனிக்குளம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் இந்நாளில் களைகட்டும். நன்றாகச் சவாரி செய்யக்கூடிய மாடுகளை பந்தையப்படுத்தி வண்டியிற் பூட்டி சவாரி செய்வார்கள். இது கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழர் பண்பாடு ஈழத்தில் நடைபெறுவதனைக் காட்டுகின்றது. காணும் பொங்கல் இந்த பொங்கலின் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெறும் காணும் பண்டிகை. ஈழத்தில் இல்லை. இது பெண்களுக்கான விஷேசமான தினமாகும். பொங்கற் பானையில் கட்டிய மஞ்சளினை எடுத்து பெரியவர்களிடம் கொடுத்து நெற்றி மற்றும் தாலியில் மூன்று தடவை ஒற்றிக்கொள்வர். பெரியவர்கள் இல்லாவிடத்தில் கணவனிடம் கொடுத்து ஒற்றிக்கொள்வர். இதன்போது பெண்களுக்கு பிறந்தவீட்டுச்சீதனம் என்று அனுப்புவதும் இந்நாளில் வழமையானது. பிறந்தவீடு செழிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இப்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இது சங்ககாலத்தில் தை நீராடல் என அழைக்கப்பட்டது. இதனைப் பரிபாடல் 11 பாடல் குறிப்பிடும் போது ‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர் தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ தாயருகா நின்று தவத் தைந்நீராடல் நீயுரைத்தி வையை நதி’ மணமாகாத கன்னிப்பெண்கள் தாய்மார் அருகில் நின்று வைகையில் தைந்நீராடி சிறந்த கணவனைப் பெற வேண்டுமென பழந்தமிழர் வேண்டி சிறப்பாக இப்பொங்கல் நாளைக் கொண்டாடினர். ஈழத்தமிழர்களிடையே போகிப்பண்டிகை, காணும் பண்டிகை ஆகியன இல்லை. காரணம் ஈழத்தில் ஒரு தனித்துவமான ஆரியக்கலப்புக்கள் பெரிதும் இல்லாத ஒரு இனக்குழுமம் வாழ்ந்தமையைச் சொல்லலாம். இதனால் ஆரியப்பிராமணியங்களின் கலாச்சாரச்சடங்குகளான இவையிரண்டும் ஈழத்தில் இல்லை. ஆனால் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் காலங்காலமான நம்பிக்கை. இதனால் தான் இது தமிழர்களின் மத்தியில் ஒரு உறுதியை புத்துணர்ச்சியை வளர்க்கும். போரின் விளைவால்புலம்பெயர்ந்து சிதறிச் சிக்கல்தன்மை வாய்ந்து அலைகின்ற சமூகமாக ஈழத்தமிழ்ச்சமூகம் இருந்தாலும் தாம் வாழும் இடங்களில் அதாவது அகதி முகாம்களிலும், வீடிழந்து தற்காலிக குடிசைகளில் வசித்தாலும், தம்மிடையே நீளும் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தைப்பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள். பல குடும்பங்களில் துயரப்பொங்கலாக வரும் ஒவ்வொரு பொங்கலையும் அவர்கள் கொண்டாடுகின்றார்கள். ஏனெனில் தமிழை, தமிழர் பண்பாட்டினை ஆழமாக, ஆத்வாசமாக நேசித்த இனம் பூண்டோடு அழிக்கப்பட்டதனால் தம் குடும்பத்தலைவர்களை, உறவினர்களை இழந்தவர்கள் இப்பொங்கலை துயரப்பொங்கலாக கண்ணீர் பொங்கலாக தமிழர் பண்பாட்டில் பதிவு செய்கின்றார்கள். காலங்காலமாக, கூட்டாய், ஒற்றுமையாய் கொண்டாடிய பொங்கல் இன்று உறவுகளைப் பறிகொடுத்து, அங்கத்தவர்கள் இல்லா பொங்கலாய், முற்றங்கள் இல்லாத பொங்கலாய், வாழ்வின் ஆதாரமான உழைப்புக்களை, வருமானத்தினை எட்டமுடியாத பொங்கலாய், தமது தேசங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது பிறர் முற்றங்களில் பொங்கும் பொங்கலாய், பலர் வாய்விட்டு தமது சோகங்களை சொல்லத்தயங்கும் பொங்கலாக கடந்த 2009 இற்கு பின் வருகின்ற பொங்கல் இடம்பெறுகின்றது இது தமிழர் பண்பாட்டில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. மாற்றத்திற்கு உற்படாத சமூகம் இல்லை என்கின்ற இயற்பியல் விதிக்கமைய எமது ஈழத்தமிழர் சமூக வாழ்வும் மாறியிருக்கிறது. அத்தோடு புலம்பெயர் வாழ்வில் மக்களிடையே பொங்கல் அவ்வவ் நாடுகளிகளின் தன்மைகளுக்கு ஏற்ப்ப வீட்டிற்குள்ளே அமைகின்றது. பெரும்பாலான மக்கள் ஆலயங்களுக்குச் சென்று தம் பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள். அத்துடன் ஈழத்தில் கூட முற்றத்தில் கோலமிட்டு பொங்குகின்ற நிகழ்வும் தொடர் மாடிக்கட்டங்களில் வசிப்போரிடம் இல்லை எனலாம். எது எவ்வாறாக இருந்தாலும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளையே தமிழ்ப் புத்தாண்டு தினமாக, தமிழ்ப்பாரம்பரிய தினமாக பழந்தமிழன் கொண்டாடினான். எனவே தமிழர் சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பின் உறுதியாய் பொங்கல் நிகழ்வு அமைகிறது. http://www.tamilwin.com/lifestyle/01/131759?ref=youmaylike1
 9. ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது? கனடாவில் குருகுலராசா இன்று தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகத் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருவதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பார்க்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தமிழர் கொண்டாடும் வேறெந்த விழாவுக்கும் இத்தகைய தொன்மையும், சிறப்பும் இல்லை என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியதில்லை. செய் நன்றி மறவாமை என்னும் தமிழரது பண்பாட்டுக்கு எடுத்துக் காட்டாக விளக்கும் இந்த விழாவைச் சொந்த நாட்டோடு விட்டுவிடாமல் இந்த நாட்டுக்கும் கொண்டு வந்து போற்றிப் பேணுவது பெருமை தரும் செயலாகும். அந்த வகையிலே உலகிலே வாழும் ஒன்பது கோடி தமிழரோடு இணைந்து நாமும் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வோம். உங்களது அயராத கூட்டு முயற்சியால் கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழலில் இம்முறை பொங்கல் விழாவை கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது. மாநகரம், மாநிலம், மத்திய என மூன்றுமட்ட அரசுகளும் ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபுத் திங்கள் என ஏற்றுக் கொள்ளச் செய்த உங்கள் அனைவருக்கும் தாயக மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெவித்துக் கொள்ளுகின்றேன். ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுதன் மூலம் கனடாவில் வாழும் பல்லின மக்களும் தமிழ் மொழியின் அருமை, பெருமைகளையும் தமிழரது கலைகள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் அறியும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை அறிந்து புளகாங்கிதம் அடைகின்றேன். எமது தாயகம் முப்பது ஆடு காலப் போரிலே பாரிய உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் சந்தித்ததைத் தாங்கள் அறிவீர்கள். இந்த இழப்புகளுக்கு உள்ளாகிச் சொல்லொணாத துன்பத்தை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்பதையும் நான் உங்களுக்கு நான் கூறவேண்டியதில்லை. எமது மக்களை இன்ப,துன்பங்களில் இருந்து மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து வட மாகாண சபை அறிக்கை இட்டுள்ளது இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட கல்வி, சுகாதாரம் பற்றிய அறிக்கைகளின் அடிப்படையில் பன்னாட்டு நிபுணர்கள் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்று அடுத்து வரும் 15 ஆம், 16 ஆம், 17 ஆம் திகதிகளில் சென்டானியல் கல்லூரியிலில் நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த மாநாட்டிலே பங்குகொள்ள வடக்குக் கிழக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் வடக்குக் கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகளாகிய நாமும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களை சேர்ந்தோருமாக 25 பேர்வந்துளோம். அமெரிக்கா, அவுத்திரேலியா, பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருந்தும் 50 இற்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களும் வந்துள்ளனர். இந்த மாநாட்டின் விளைவாக தாயக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்களது துன்பங்கள் நீங்கவும் வழிபிறக்குமென நம்புகிறோம். இந்தமாநாடு வெற்றி பெற மாநாட்டு அமைப்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டு என தாயக மக்கள் சார்பாக வேண்டிக்கொள்ளுகின்றேன். இலங்கையிலே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது? அதிகாரங்கள் பகிரப்படுமா? வடக்குக் கிழக்கு இணைக்கப்படுமா? போன்ற விடயங்களை அறிய நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அரசியல் அமைப்பு வழி காட்டல் குழுவிலே சம்பந்தன் ஐயாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டவல்லுநர் சுமந்திரனும் உறுப்பினர்களாகவிருந்து கடுமையாக உழைத்து வருகின்றனர். அத்துடன்,எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றையெல்லாம் இப்பொழுது விரித்துரைப்பது பொருத்தமானதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அரசியலுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டவரல்ல. தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் இன்று வரை அரசியலில்இருப்பவர். அவர் இலங்கைக் குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா, விஜயதுங்கா, பிரேமதாசா, சந்திரிகா பண்டார நாயக்கா , மகிந்தராசபக்ச முதலியோரோடும் இந்தியப்பிரதமராகப் பணிபுரிந்த இந்திராகாந்தி , இராசீவ் காந்தி , வி பி சிங் , நரசிம்மராவ் , குஜரால், வாஜ்பாய் , மன்மோகன்சிங் முதலியோரோடும் ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண முயன்ற நீண்ட நெடிய பட்டறிவு மிக்கவர். மேலும், அவர் எமது சிக்கலுக்கு நியாயமான நிலைத்து நிற்கக் கூடிய ஒருத்தீர்வை விரைவில் காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/statements/01/131876?ref=morenews
 10. மட்டக்களப்பில் பண்பாட்டு பவனியுடன் நடைபெற்ற மாபெரும் பொங்கல் விழா மட்டக்களப்பு - மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் பிரமாண்டமான முறையில் முதலாவது தடவையாக பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று(15) காலை நடாத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தைப்பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு பக்கபலமாகவுள்ள மாடுகளுக்கான மாட்டுப்பொங்கல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அத்துடன், இன்றைய தினம் ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தின் அருகில் உள்ள சுற்றுவட்டத்தில் இருந்து பொங்கல் பொருட்களை சுமந்த மாட்டு வண்டிகள் பவனி, உழவர் நடனம், கோலாட்டம் மற்றும் இன்னியம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய பண்பாட்டு இசை முழக்கத்துடன் கலாச்சார பவனி இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பவனி மண்டபத்தை அடைந்ததை தொடர்ந்து ஏழு வகையான பொங்களுடன், 17 வகையான பாரம்பரிய பட்சணங்களும் அவ்விடத்திலே தயாரிக்கம் நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் முதன் முதலாக நடைபெறும் இந்த பிரமாண்டமான நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்விற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில், ஏற்பாட்டு குழுவால் பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை முற்றாக தவிர்க்கப்பட்டதோடு, தமிழர் பாரம்பரியங்களை பறைசாற்றும் அலங்காரங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமிய பண்பாட்டு விழுமிங்கள் நகர்ப்புற மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். http://www.tamilwin.com/community/01/131867?ref=home
 11. கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருந்த பகுதிகளில் ஒன்று அங்கோர்ட். அவர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டமான, 9 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் அந்த பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப்பட்ட ஆற்றுப்பகுதி. அங்கோர்வாட்டுக்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலை அமைந்துள்ளது. மரங்கள் அடர்ந்த இந்த காட்டுப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைக்கு முறையான சாலைகள் ஏதும் கிடையாது. வெறும் மண் சாலைகள் மட்டுமே உள்ளன. இந்த மலைப்பகுதியில் சயாம்ரீய ஆறும் அதன் துணை ஆறான ஸ்டங் என்ற சிறு ஆறும் ஓடுகிறது. இதில் ஸ்டங் ஆறு ஓடிவரும் வழியில், தண்ணீருக்கு அடியில் உள்ள மணற்பாறைகளில் வரிசையாக சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட 150 மீட்டர் தூரத்துக்கு ஒரே மாதிரியான அளவில் லிங்கங்கள் செதுக்கப்பட்டு அவற்றுக்கு இடையிடையே சில பெரிய லிங்கங்களும் செதுக்கப்பட்டள்ளன. சதுர வடிவில் ஆவுடையாரும் அதற்கு நடுவில் லிங்கமும் பதிக்கப்பட்டது போல ஒரு சிற்பம் உண்டு. வெறும் சிவலிங்கங்கள் மட்டுமல்லாமல், லட்சுமி, அனந்த சயனன், பிரம்மா, சயன நிலையில் விஷ்ணு, உமா சகித சிவன், ராமர், அனுமான் போன்ற சிற்பங்களும் இந்த ஆற்றுக்குள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தையும் 11 மற்றும் 12 நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த துறவிகளால செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த லிங்கங்களின் வழியே ஓடுகிற ஆறு, பின்னர் ஓர் அருவியாக விழுகிறது. அதை புனித நழுராகக் கருதி மக்கள் நீராடுகிறார்கள். தண்ணீருக்குள் சிற்பங்கள் செதுக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கூறும் காரணம் மேலும் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது. கங்கையைப் போல தண்ணீரைப் புனிதப்படுத்தவே இதுபோன்று தண்ணீருக்குள் சிற்பங்கள் செதுக்கப்பட்டன என்றும் இப்புனிதப்படுத்தப்பட்ட ஆறு நாட்டின் வழியே சென்று வயல்களில் நெல் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டையும் வளப்படுத்துகிறது. அந்த உணவை உண்பதால் நாட்டு மக்களும் புனிதமடைகிறார்கள் என்கின்றனர். http://www.canadamirror.com/canada/78483.html
 12. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். மேலும் குறித்த நிகழ்வு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அத்துடன், அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துடன் முதலமைச்சர் தனது ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். இதேவேளை, முல்லைத்தீவு நகரினை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை சகோதர இரட்டை நகர உடன்படிக்கை கைச்சத்தப்பட்டது. குறித்த சந்திப்பில் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilwin.com/special/01/131864?ref=home
 13. ஏன் இவர் அடுத்த தைப்பொங்கலுக்கு முதல் சிங்கள-பௌத்தர்களை கப்பலில் ஏற்றி அவர்கள் வந்த இடத்திற்கே அனுப்பப்போறாரோ?
 14. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணந்து ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு’ என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial Collegeஇல் 2017 ஜனவரி மாதம் 15ம் 16ம், 17ம் தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது. இம் மூன்று நாட்களும், தமிழர் தாயகத்தின் பொருளாதார, கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புக்களின் நிலை மற்றும் தேவைகள் என்பன வடக்கு கிழக்கு மாகாண அரசுகளின் கல்வி, சுகாதார அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ம்ற்றும் தாயகத்தின் துறைசார் வல்லுனர்களால் முன்வைக்கப்படும், புலம்பெயர் தமிழ் அறிவியலாளர்கள், துறைசார் வல்லுனர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்று, வடக்குக் கிழக்கு மாகாணங்களின் தேவைகளை ஆழமாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளையும் செயல்திட்டங்களையும் முன்மொழிவர். அத்துடன், திட்டங்கள் நிறவேற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு உதவும் வண்ணம் புலம்பெயர் தேசங்களில் உள்ள சர்வதேச அறிவுசார் வல்லுனர்களையும், தொழில் முனைவர்களையும் கொண்ட மீள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுக்களும் அமைக்கப்படும். கனடியத் தமிழர் பேரவை (CTC) ஒழுங்கமைக்கும் இந்த சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு கனடியத் தமிழர் மருத்துவ சங்கம் (CTMA), சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO), தமிழ் மருத்துவ அறிஞர் நிறுவனம்- பிரித்தானியா (MIOT-UK), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா (TNA-Canada), கனடாவின் சில முக்கிய கல்விச்சபைகள் மற்றும் பல தமிழ் அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குகின்றன. இந்த சர்வதேச மாநாட்டிற்கான ஆலோசனைகளை அமெரிக்க தலைநகரான Washington D.C.யில் அமைந்துள்ள துரைசிங்கம் நிறுவனம் (Thuraisingham & Associates) வழங்கி உதவுகிறது. தமிழர் தாயகத்தின் மீளக்கட்டுமானத்திற்கான தேவைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இம்மாநாட்டினைச் சிறப்பாக நடத்தி, அதன்மூலம் வடக்கு கிழக்கு வாழ் நம் மக்களுக்கு உதவுவதற்கு உங்கள் அனைவரினதும் பேராதரவைக் கோரி நிற்கிறோம். மேலதிக விபரங்களை மாநாட்டு இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இணையத்தளம்: www.developnortheast.org http://www.canadamirror.com/canada/78369.html
 15. ஒன்ராறியோ பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று, ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் அம்மையாரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஒன்ராறியோ பிரதமரின் குயீன்ஸ் பார்க் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்று ஒன்ராறியோ பிரதமர் செயலகம் கூறியுள்ளது. ஒன்ராறியோ மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு விரும்புவதாக ஒன்ராறியோ பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. http://www.puthinappalakai.net/2017/01/14/news/20653