Jump to content

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4318
  • Joined

  • Days Won

    10

Everything posted by வாலி

  1. உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு. அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!
  2. செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சி 6% வாக்குகளைத் தாண்டாது. இம்முறை களம்வேறு. அதிமுகவின் வாக்குகள் இம்முறை பெரும்பாலும் மீள ஒருங்கிணைக்கப்படும். அதனால் கடந்த முறை போல அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் கிடைக்காது. அத்துடன் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்காது. பாககவும் கணிசமான வாக்குகளைப் பெறும்!
  3. தெரியும் தானே பரசூட்டில வந்து இறங்கின ஆக்கள் இப்ப கதறக் கதற அடிவாங்கிக்கொண்டு பங்கர்களுக்க ஒளிச்சுத் திரியினை. இரானின் வருத்தத்துக்கு நிச்சயம் மருந்து கிடைக்கும்!
  4. என்னெண்டாலும் ஈரான்காரன் மோடனுகளுள்ள கொஞ்சம் புத்திசாலிதான் உந்த மத்தாப்பூக்களை புட்டினுக்கு வித்து காசாக்கிப் போட்டானுகள்!😂
  5. இஸ்ரேலை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது! வேண்டுமென்றால் கனவு காணலாம். நிச்சயமாக யூதர்கள் ஜெருசலேமில் தமது தேவாலயத்தை கட்டுவார்கள்!
  6. மெய்யே! முந்தி இப்பிடி ஓடித் திரிஞ்ச ஆமைகள் எல்லாம் இப்ப என்ன செய்யுதுகள்? இல்லாட்டி எங்கினைக்குள்ள நிக்குதுகள்?😂
  7. பொது வேட்பாளர் என்பது விசர்வேலை. அதுக்கு முதலில் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் வரவேண்டும். அப்படி நடக்கச் சாத்தியமே இல்லை. அப்படி ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அது சிங்களத் தரப்புக்கு சாதகமாகவே அமையும். நிறுதபட்ட வேட்பாளர் தமிழர் தாயகப்பகுதியில் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறவேண்டியிருக்கும். அவ்வாறு நடக்காதுபோயின் சிங்களத் தரப்பு வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என பிரசாரம் செய்ய ஏதுவாக இருக்கும். தனிப்பட தமது எதிர்கால அரசியல் நன்மைகளுக்காக சில அரசியல்வதிகள் தமிழர் நலன்களை அடகுவைக்க முயல்கின்றனர் என நினைக்கத் தோன்றுகின்றது. நாடாளுமன்றக் கதிரைகளே அவர்கள் குறிக்கோள். மறுபுறம் இந்த தேர்தலைப் புறக்கணிக்கும்மாறு எவரும் கோருவார்களாயின் அவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறந்துவிட்டு கோரவேண்டும். தமிழ் மக்கள் சுயமாக தமது வாக்குகளை அளிக்க அறிவுறுத்தப்படவேண்டும். சுயமாக தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அலது தேர்தலைப் புறக்கணிக்கலாம். தமிழ் அரசியல் கட்சிகளைவிட மக்களுக்குத் தெளிவான அரசியல் நிலைப்பாடு உண்டு.
  8. அப்ப கனபேருக்கு இன்னும் கள்ளக் காதலன் சான்ஸ் இரிக்கி!😂
  9. இந்திய கடற்கொள்ளையரின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட ஈழத்து மீனவர்களுக்காக ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் செந்தமிழன் அண்ணன் சீமான் குரல்கொடுப்பாரா?!👀
  10. கோசான், நான் உங்களை லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக வரவேற்கின்றேன். 👏 (R. விஜியின் தாக்குதலுக்குப் பயந்துவிட்டீர்கள் போலுள்ளதே. 😂)
  11. இந்த டொல்பின்கள் புண்ணியம் பெற்றவை. இப்ப இந்திய நாட்டின் கடற்கொள்ளையர்களின் கைகளில் அகப்பட்டிருந்தால் நிலமை வேறு. வாழ்த்துக்கள் அருமைத்துரை சம்மட்டி டீம்! 👏
  12. தமிழர் தரப்பு இவரை ஆதரிக்கலாம். எப்படியோ ரணில், மகிந்த வகையறாக்கள் வருவதை விட இவர் வந்தால் ஏதும் மாற்றம் நிகழலாம். வந்தால் வரவு இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிவிடப் போகின்றது!
  13. திராவிடத்தையும் பெரியாரிசத்தையும் போட்டு குழப்புகின்றார்கள் என நினைக்கின்றேன். ட்ரவிடியன்ஸ் எல்லோரும் பெரியாரிஸ்டுகள் அல்ல. பெரியாரிஸ்டுகளாக எங்கள்ண்ட ப்ராமின்ஸ் கூட இருக்கின்றார்கள்!
  14. மாற்றம் வேண்டுமென மக்கள் நினைத்தால் எந்தப் பெரிய பலங்கொண்ட அரசுகளையும் வீழ்த்தமுடியும் என்று நம்புகின்றேன். எடுத்துக்காட்டாக கனடாவை எடுத்துக்கொண்டால் 3 முறை வென்ற ஸ்டிபன் கார்ப்பரின் பழமைவாதக் கட்சியை தாராளவாதக் கட்சியால் வெல்ல முடிந்திருக்கின்றது, தற்போது ஆட்சியில் உள்ள ஜஸ்டின் ரூடோ இனி வெல்லமுடியாத நிலை. மக்கள் நினைத்தால் ஆட்சி மாற்றம் நடக்கும். தற்போது கூட இந்தியாவின் வடமாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் உண்டு. இந்தமுறையும் பாஜக கூட்டணியே வெல்லும். இண்டியா கூட்டணி கனவு காணலாம், ஆனால் நடக்காது.
  15. உண்மையில் இந்திய அரசியலில் தேர்தலுக்கு முன்னைய கூட்டணி என்ற நிலை அகற்றப்படல் வேண்டும். ஒரு கட்சி சார்பில் நின்று வெற்றிபெற்ற பின் கூட்டுச் சேரலாம். உதாரணமாக திமுக கூட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் தற்போதைய நிலையில் ஒரு சீட்டுக்கூட வெல்லமுடியாது, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவன் கடும் போட்டியைச் சந்திக்க நேரும். அதே நேரம் நாம் தமிழர் போன்ற வளர்சியடைந்து வரும் கட்சிகள்கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஒரிரு சீட்டுக்களை வெல்லலாம். இந்த தேர்தலுக்கு முன்னைய கூட்டு என்பது புதிய கட்சிகளை வளரவிடாது. இது மக்களாட்சியில் நிராகரிக்கப்பட்ட கட்சிகளையும் வேட்பாளர்களையும் மீண்டும் நிலைநிறுத்துகின்றது.
  16. ஏனய்யா செந்தமிழன் சீமான் அண்ணா மேல் இந்த முனிவு? பொதுவாக எல்லாத் தமிழ்ப் பெற்றோரினதும் அவா என்னவெனில் தம் பிள்ளைகள் இங்லிஷ் படித்து அமெரிக்கன் ஸ்டைலில் பேசவேண்டும் என்பதே! செந்தமிழன் முதல்வரானால் இதற்கான ஆவனசெய்வதில் என்ன தவறு இருக்கப்போகின்றது?! அதற்கான முதற்படியாகவே தன் மகன் மாவீரனை இங்லிஷ் மீடியத்தில் படிக்கவைத்துள்ளார் செந்தமிழன் அண்ணா.
  17. எழுதுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் எழுதாமல் கடந்து செல்கின்றேன். ஏலவே நான் பலவருடங்களுக்கு முன்னர் சொன்னபடி தமிழ்நாட்டை எமது entertainment க்கு உரிய தளமாகவே பயன்படுத்தவேண்டும். அதனை விடுத்து உணர்வு அடிப்படையில் அணுகுவதெல்லாம் சுத்த வேஸ்டு. ராமேஸ்வரம் அமைந்திருக்கும் இடத்தில் கேரளம் அமைந்திருந்து கேரளத்தை உணர்வு அடிப்படையில் அமைந்திருந்தால் இன்று எமது நிலைவேறு! தமிழ்நாட்டின் எந்தக் கட்சிம் நாம் தமிழர் அடங்கலாக எமக்கு எதையுமே புடுங்கப்போவதில்லை. எடுத்துக் காட்டாக தமிழக மீன்கொள்ளையர்களின் மீன்கொள்லையை செந்தமிழன் அண்ணன் சீமான் ஆதரிக்கின்றார். இந்தக் கடற்கொள்ளையினால் எமது கண்டமேடைகள் மலட்டுக் கண்டமேடைகளாக மாறும் அபாயம் குறிந்த்து அண்ணன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாக்கு வங்கி அரசியல் அதை அறியவிடாது. திராவிடம் என்பது சென்னை மாகாணமாக இருந்தபோது ஏற்புடையதாக இருந்தபோதும் இன்று தமிழர்களை ஏமாற்றும் ஒரு சொற்றொடராகவே இருக்கின்றது. தமிழ்நாட்டினை விடுத்து ஏனைய தென்னக மாநிலங்களில் திராவிடம் பேசினால் செருப்பால் அடிப்பார்கள். சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்களாக சன் டீவி குழுமம் இருப்பது நல்லதொரு எடுத்துக்காட்டு. தமிழ் உணர்வுடன் தன்னை தமிழனாக உணரும் எவனும் தமிழனே. ஆனால் திராவிட முகமூடியில் உடல் இங்கே உயிர் அங்கே என்று வாழ்வது கயமை. இன்னும் நிறைய இருக்கு…….
  18. கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  19. வைகோவின் வாரிசு அரசியலால் கொல்லப்பட்ட கணேசமூர்த்திக்கு அஞ்சலிகள். இதனை முன்னுதாரணமாக வைத்து செந்தமிழன் சீமான் அண்ணா எந்தக் காலத்திலும் வாரிசு மற்றும் குடும்ப அரசியல் செய்யக்கூடாது.
  20. இப்ப செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கு?
  21. பயங்கரவாதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதி புட்டினுக்கே பயங்கரவாதத்துக்கான மேற்படிப்பை அய்சிஸ் பயங்கரவாதிகள் காட்டியிருக்கின்றார்கள். பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இனியாவது புட்டின் பயங்கரவாதத்தை விட்டுவிலகி நல்லவழிக்கு வரவேண்டும்.
  22. தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் டெபாசிட் வாங்காத அளவில் தோற்றுப் போவார். கோவையில் அண்ணாமலையும் நீலகிரியில் எல். முருகனும் திமுகவுடன் நேரடியாக மோதுகின்றனர். (பாஜகவில் இருப்பதால் டெபாசிட் இல்லாமல் போவது குறித்து பிரச்சினை இல்லை) கோவையில் கணபதி ராஜ்குமாரும் நீலகிரியில் ஆ. ராசாவும் இலகுவாக வெற்றிபெறுவார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.